31 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை

31 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை

நீண்ட காலமாக இலங்கைச் சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இரண்டு கட்டங்களாக பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் கட்டமாக 31 தமிழ்க் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மகசின் சிறையிலிருந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட கைதிகளை பிணையில் விடுதலை செய்ய உரிய பரிந்துரைகள் சட்டத்துறையிடம் இருந்து இன்னும் வரவில்லை என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை 24ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிணையில் விடுதலைக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்குச் சென்ற தமிழ்க் கைதிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழ்க் கைதி ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது,
தமிழ்க் கைதி ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது,

எனினும் பின்னர் சட்டமா அதிபர் அலுவலகம் அவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

jail-005 1

இந்நிலையில் தமிழ்க் கைதிகள் குறித்தும் பயங்கரவாத சட்டம் குறித்தும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் செனட்டர் லீ ரெகினன் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தனது பேச்சில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து கவலை தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் சுதந்திரத்தையும், அடிப்படை குடியுரிமைகளையும் மீறியதாகும். இச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்த தனது கருத்துக்களை லீ ரெகினன் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளது முக்கியமானது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் லீ ரெகினன் பேசியதை மேலும் கேட்க:

Be the first to comment

Leave a Reply