Political Column 2009 (4)

ஜெயலலிதாவின் உண்ணாநோன்பு முதல்வர் கருணாநிதியை தேர்தல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது

நக்கீரன்

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் மார்ச்சு 9 இல் நடந்த உண்ணாநோன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது.

இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) நீங்கலாக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் காங்கிரசு கட்சி கூட இலங்கைத் தமிழர்களது உரிமைகளுக்காகப் போராடுகிறது என தமிழக காங்கிரஸ்தலைவர் டி.வீ. தங்கபாலு வெட்கமில்லாமல் அறிக்கை விட்டிருக்கிறார்.

ஆனால் இராசபக்சே அரசுக்கு உதவும் மத்திய அரசின் கொள்கை சரியானது என்று மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திமிரோடு பேசியிருந்தது தெரிந்ததே. “போர் நிறுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் எந்தக் கோரிக்கையையும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஆயுதங்கள் வைத்திருக்கும் எந்தப் பிரிவினரோடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களாட்சி அரசு பேச முடியாது. அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சிங்கள இராணுவத்திடம் சரணடைய வேண்டும். அதன்பின்னர்தான் பேச்சுவார்த்தை” என இராசபக்சேயை மிஞ்சும் வண்ணம் வன்னியில் இடம்பெறும் தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தியும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் அமைச்சர் சிதம்பரம் பேசியிருந்தார். வி. புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் அதன் பின்னர்தான் அவர்களோடு பேசுங்கள் என சிங்கள அரசுக்கு வேண்டுகோள் விடுப்போம் என்பதன் பொருள் என்ன? கிளிகளின் சிறகுகள் ஒட்ட வெட்டப்பட்ட பின்னர்தான் அதற்கு விடுதலையாம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் திமிர்ப் பேச்சுக்கள் தமிழின உணர்வாளர்களின் உள்ளங்களில் கோபத் தீயை மூட்டியுள்ளது.

“இந்தியாவுக்கு வி.புலிகள் மீது அனுதாபம் இல்லை. ஆனால் வடக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு கருதி ஸ்ரீலங்கா அரசு வி.புலிகள் போர் நிறுத்தம் செய்வதாகச் சொல்வதை ஏற்க வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னார். ஆயுதங்களை கீழே போடவேண்டும் என்ற அவரது முன்னைய நிபந்தனை சொல்லப்பட வில்லை. பிரணாப் முகர்ஜி மனதாரச் சொன்னாரோ ஒப்புக்குச் சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் சிங்கள அரசு அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டது!

(Kolkata, March 01: External Affairs Minister Pranab Mukherjee on Sunday said India had no sympathy for the LTTE, but stressed that for the safety and well-being of the civilians in the north, the Sri Lanka government should accept the Tigers’ ceasefire offer. (Zeenews.com)  

பெப்ரவரி 17ஆம் நாள் எம்ஜிஆர் பிறந்த நாள். அன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா ஸ்ரீpலங்கா இராணுவம், விமானப் படை குண்டு வீச்சில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றிக் குறிப்பிடும் போது “இலங்கையில் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள இராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள், இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால், இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு இராணுவத்திற்கு முன்னால் கேடயமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். போரென்றால், அப்பாவி மக்களும் பலியாகத்தான் செய்வார்கள்; அதைத் தவிர்க்க முடியாது” என்று சொன்னார். ஜெயலலிதாவின் இந்தப் பதில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. இந்தப் பின்னணியில்தான் இப்போது இலங்கைத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உண்ணாநோன்புப் போராட்டம் நடத்தியுள்ளார் ஜெயலலிதா.

உண்ணாநோன்பின் இறுதியில் பேசிய ஜெயலலிதா இலங்கையில் வாழும் தமிழர்களும் சிங்களர்களும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

(1) விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்று இலங்கை அரசு கூறலாம். ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, விடுதலைப்புலிகள் மீது மட்டும் நடத்தப்படும் தாக்குதல் அல்ல, பெரும்பாலான அப்பாவித் தமிழர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் இது என்பது தெளிவாகிறது.

(2) இதில் உள்ள முக்கியமான சாராம்சம் என்னவென்றால், இந்திய ஆயுதங்களும் தோட்டாக்களும் வெடிமருந்துகளும், அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன்று பயன்படுத்தப்படுகின்றன.

( 3) இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

(4) சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

(5) இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

(6) இலங்கையில் நம்முடைய தமிழ் சகோதர சகோதரிகளும் குழந்தைகளும் கொல்லப்படுவதைக் கண்டு தமிழக மக்கள் மிகுந்த வேதனையடைந்து இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசும், மாநில திமுக அரசும் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை என்ற பரவலான கருத்து தமிழக மக்களிடையே நிலவுகிறது.

(7) மத்திய அரசும், மாநில அரசும் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்திருந்தால் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் வெற்று அறிக்கைகளைத் தான் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

(8) ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்கக் காரணமான, ஏற்கெனவே திசை மாறிப்போன ஆயுதம் ஏந்தியப் போராட்டத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இவை இரண்டையும் ஒன்று சேர்த்து இந்தப் பிரச்னையை குழப்ப முயற்சி செய்கிறார் கருணாநிதி.

ஜெயலலிதா இலங்கையின் வட- கிழக்கில் வாழும் மக்களை தமிழீழத் தமிழர்கள் என அழைக்க மறுக்கிறார். அவர்களை இலங்கைத் தமிழர் எனத் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். சாதாரணமாக தமிழீழச் சிக்கல் பற்றிப் பேசும்போதெல்லாம் தமிழீழ விடுதலைப்-புலிகளைச் சகட்டு மேனிக்குத் தாக்கும் ஜெயலலிதா இந்த முறை அடக்கி வாசித்துள்ளார். தமிழினப்படுகொலை செய்யும் இராசபக்சேயைப் பெயர் சொல்லிக் கண்டிக்கவில்லை.

ஜெயலலிதாவின் பேச்சும் அவர் நாள்தோறும் முதல்வர் கருணாநிதியைச் சாடி விடுக்கும் அறிக்கைகளும் அவரது மனமாற்றத்தைக் வெளிக்காட்டுகிறதா? அல்லது தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக வீசும் அலை காரணமாக தேர்தலில் அதிமுக தோற்றுவிடும் என்ற பயத்தைக் காட்டுகிறதா? அல்லது பல ஊடகங்கள் நடத்திய கருத்துகணிப்பில் சில தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எதிராக தமிழக மக்கள் கடுமையான கோபத்தில் அல்லது அதிருப்தியில் உள்ளனர் என்ற யதார்த்தம் காரணமாகவா? இவை பற்றிய ஆராய்ச்சியில் நாம் இறங்கவில்லை. அது தேவையும் இல்லை.

காலம் கடந்தாவது ஜெயலலிதாவுக்கு ஞானம் பிறந்துள்ளதை வரவேற்கிறோம். “போரென்றால், அப்பாவி மக்களும் பலியாகத்தான் செய்வார்கள்; அதைத் தவிர்க்க முடியாது, வி.புலிகள் மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள், வி.புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம், இந்தியா இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது” என்றெல்லாம் மனம் போனபோக்கில் அவர் பேசியதை எல்லாம் மறந்து மன்னித்து விட அணியமாக இருக்கிறோம். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தடைசெய்யப்பட்ட வி.புலிகளை ஆதரித்தும் பேசிய வைகோ, கண்ணப்பன், இயக்குநர் சீமான், இயக்குநர் பாராதிராசா, இயக்குநர் செல்வமணி, இயக்குநர் பசீர் போன்றோரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஜெயலலிதா விட்ட அறிக்கைகளையும் மறந்துவிடுவோம்.

ஆனால் அவர் இன்னமும் தமிழீழ விடுதலைப் பேராட்டம் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் தெளிவு இல்லாமல் இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இப்போது கூட மக்கள் வேறு வி.புலிகள் வேறு என்ற மனநிலையிலேயே ஜெயலலிதா இருக்கிறார். 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முக்கிய தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற குடை அமைப்பில் ஒன்றாகிய செய்தி அவருக்குத் தெரியாமல் இருக்கிறது. 2001 இல் நடந்த தேர்தலில் 15 தொகுதிகளை ததேகூ கைப்பற்றியது. 2004 இல் நடந்த தேர்தலில் 22 இடங்களில் வெற்றிபெற்றது.

ததேகூ. யில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி) (‘Suresh faction’ of the Eelam People Revolutionary Liberation Front) இடம் பெற்றுள்ளன.

முதலாவதாக, இந்த நான்கு கட்சிகளும் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை அய்யத்துக்கு இடமின்றி முன்மொழிந்துள்ளன. மேலும் இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வி.புலிகள் ஆகுதியாக்கிய தற்கொடையை போற்றியிருப்பதோடு அதுவே வி.புலிகளுக்குப் பின்னால் அணி திரள்வதற்கு முக்கிய காரணி என எடுத்துக் சொல்லியிருந்தன.

இரண்டாவதாக, இந்தத் தமிழ்க் கட்சிகள் எந்த அய்யப்பாட்டுக்கும் இடமின்றி தமிழ் மக்களின் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதெனக் கூட்டாக முடிவெடுத்தன.

அக்கட்சிகளுக்கு இடையே எழுதப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டில் “தேர்தலுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் சார்பாக ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு இடம்பெறும் பேச்சு வார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே ஈடுபடுவார்கள்” என வலியுறுத்தப் பட்டது. இந்த உடன்பாடு வி.புலிகள் பற்றி தமிழ் மக்கள் கொண்டுள்ள உணர்வுகளையும் உணர்ச்சிவேகத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டின. அது மட்டும் அல்லாது ஆயுதப் போராட்டம் மற்றும் தன்னாட்சிக் கோட்பாடு பற்றி தமிழ் மக்களின் உணர்வுகளையும் தமிழீழ தேசியக் கோட்பாட்டின் ஆழத்தையும் அறிவதற்கு அனைத்துலக சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பாகவம் அமைந்தது. ததேகூ. இல் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த காலத்தில் வி.புலிகளுக்கு எதிராகவும் ஏன் அவர்களோடு மோதியும் வந்தன. மேலும் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசின் அரசியல் மற்றும் இராணுவ முயற்சிகளுக்கும் உடந்தையாகவும் இருந்தன.

ஸ்ரீலங்கா அரசு அனைத்துலக சமூகத்திற்கு இந்தக் குழுக்களையே தமிழ்மக்;களின் “மாற்றுத் தலைமை” எனக் காட்டுவதற்கு பலமுறை முயற்சி செய்து வந்தது. அதனால் இந்தக் குழுக்கள் சிலவற்றிற்குத் தங்களைப்பற்றிய ஒருவித பெருமித உணர்வு மயக்கம் உண்டாக வழிவகுத்ததும் உண்டு. ஆனால் வி.புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ விரிவாக்கம் (ஓயாத அலைகள் 3 இன் வெற்றி எடுத்துக் காட்டியதுபோல) மற்றும் அன்றைய சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அரசின் சிங்கள மேலாண்மைக் கோட்பாடு தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. விடுதலைப் போராட்டம் வெற்றிபெறும் அத்தோடு ஸ்ரீலங்காவின் அரசியல் கட்டுமானத்தையும் முற்றாகத் புறந்தள்ளிவிடலாம் என்ற ஒரு புதிய நம்பிக்கை தமிழ் மக்கள் மனதில் பிறந்தது. தமிழ் நாடாளுமன்ற அரசியலை ஏற்றுக் கொண்ட ;இந்தக் கட்சிகளுக்கு இடையே எழுதப்பட்ட உடன்பாடு அந்த யதார்த்தை ஏற்றுக் கொண்டதை எதிரொலித்தது.

இப்போதுள்ள அரசியல் யாப்பின் கீழ் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என ஜெயலலிதா பேசியிருக்கிறார். இது தவறான கருத்தாகும். இப்போதுள்ள யாப்பு ஒற்றையாட்சி யாப்பு. அதன் கீழ் அதிகாரப் பரவல் (னநஎழடரவழைழக pழறநச) சாத்தியமாக இருக்கலாம் ஆனால் அதிகாரப் பகிர்வு (sharing of power) இல்லை. ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதுள்ள அரசியல் யாப்பின் கீழ் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிறார். இதுவம் சாத்தியமில்லை. ஒற்றையாட்சி யாப்பின் கீழ் பெரும்பான்மை சிங்களவர்கள் கையில்தான் ஆட்சி அதிகாரம் நிரந்தரமாக இருக்கும். தமிழர்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என்றால் கனடாவில் நடைமுறையில் இருக்கும் இணைப்பாட்சி யாப்புப் போன்ற யாப்பு எழுதப்பட வேண்டும். கனடாவில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், மொழிகள், பண்பாடு இருக்கின்றன என்பது தெரிந்ததே.

வி.புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தான் எதிர்ப்பதாக ஜெயலலிதா சொல்கிறார். இதைத்தான் முதல்வர் கருணாநிதியும் சொல்கிறார். “எனக்கு வன்முறை பிடிக்காது” என்கிறார். தமிழக அரசியல் வரலாற்றை இராசீவ் காந்திக்கு முன் (1991) இராசீவ் காந்திக்குப் பின் எனப் பிரித்து இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர் வி.புலிகளுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டோம் என்கிறார். இதில் அய்யா சரி, அம்மா சரி ஒரே நேர்க்கோட்டில் நிற்கிறார்கள். இது வரலாறு பற்றிய இருவரதும் அறியாமையைக் காட்டுகிறது.

அன்றைய அமெரிக்கா சரி, இன்றைய கிழக்கு திமோர் சரி ஆயுதப் போராட்டம் மூலமே தங்கள் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டன. கொவோவும் அந்த வழியிலேயே 2008 இல் சுதந்திர நாடாகியது. அகிம்சைப் போராட்டம் தோற்ற பின்னரே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள். அவர்களுக்கு மறைந்த இந்திரா காந்தியும் முதல்வர் எம்ஜிஆரும் பணமும் பயிற்சியும் ஆயுதமும் கொடுத்து ஆதரித்தார்கள்.

போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது வழக்கம் என்று பேசிய ஜெயலலிதா இப்போது அதனைக் கண்டிக்கிறார். இது ஒரு முன்னேற்றம். அது போலவே அவர் வி.புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் ஆதரிப்பதாகச் சொல்ல வேண்டும். ப சிதம்பரம்தான் பாவம். மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் திமிரோடு பேசியபோது காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகள் இலங்கையில் நடக்கும் போர் பற்றி ஒரே கொள்கையோடு இருப்பதாக சொன்னார். இப்போது அதிமுக அந்தப் பட்டியலில் இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சியை விட திமுகவுக்குத்தான் தேர்தல் களத்தில் அதிகளவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பாமக மற்றும் தேமுதிக இரண்டும் எந்த அணியோடு கூட்டு வைத்துக் கொள்வது என்பதையிட்டு இன்னும் (வியாழன் வரை) முடிவெடுக்கவில்லை. திமுகவுக்கு எதிரான கூட்டணியில் பாமக சேர்ந்து தேமுதிக தனித்துப் போட்டியிட முன்வந்தால் திமுகவுக்கு எஞ்சியுள்ள காங்கிரஸ்தான் தஞ்சமாக இருக்கும்.

இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர்மணி, மதிமுக கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத்து ஆகியோர் இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் – ஓர் ஆண்டு பிணையில் வரமுடியாத சட்டத்தின் கீழ் – கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருப்பது திமுகவின் மீது தமிழக மக்களின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தக் கைதுகள் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகள் என்றே மக்கள் நம்புகிறார்கள்.

தமிழக முதல்வரது இந்த தமிழின எதிர்ப்புத் தொடர்ந்தால் வரும் தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான அலை திமுக வையும் அடித்துச் செல்லும் வாய்ப்பு நிறையவே உண்டு. (Ulagaththamizhar – March 13, 2009)


விடுதலையை வீச்சாக்குவோம் விடியலை நமதாக்குவோம்!

நக்கீரன்

அண்மைக் காலமாக உலகளாவிய தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும் வன்னியில் அரங்கேறும் மனிதப் படுகொலைகளைக் கண்டித்தும் மனித அவலங்களை அம்பலப்படுத்தியும் புலம்பெயர் தமிழ்மக்கள் தெருவில் இறங்கி முன் எப்பொழுதும் இல்லாதவாறு தீவிரமாகப் போராடி வருகிறார்கள்.

புலம் பெயர் தமிழ்மக்கள் போன்று – ஏன் அதைவிட ஆவேசமாக – தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகளும் தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு வடிவங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆளும் கட்சியான திமுக இலங்கைத் தமிழர் நலம் காக்கும் பேரவை என்ற குடை அமைப்பின் கீழ் பல போராட்டங்களை நடத்தி வருகிறது. அதில் திராவிடர் கழகமும் இடம் பெற்றுள்ளது. இவற்றைவிட நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, நடிகர் சரத்குமார் தலைமையிலான இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் அவ்வப் போது போராட்டங்களை நடத்தி வருகின்றன. எதிர்பார்த்தவாறே போராட்டத்தில் இருந்து அதிமுகவும் காங்கிரஸ் கட்சி இரண்டுமே ஒதுங்கியுள்ளன.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒன்றுக்கு மூன்று தீர்மானங்கள், ஏழு தமிழ் உணாவாளர்களின் உயிர்க் கொடை ஆகியன இந்திய மத்திய அரசை அசைத்தாகத் தெரியவில்லை. ஆனால் இந்திய மத்திய அரசின் முக மூடியைக் கிழித்தெறிய அவை உதவியிருக்கின்றன.

இலங்கையின் இனச் சிக்கலுக்கு ஒற்றை ஆட்சியின் கீழ் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதன் மூலம் தீர்வு காணப்படும் என்று விடாக்கண்டனாக மகிந்தா இராபக்ஷ தொடர்ந்து சொல்லி வருகிறார். இதன் காரணமாகவே அனைத்துக் கட்சிக் குழு முன்வைத்த ஆலோசனைகளை புறம்தள்ளிவிட்டு 13 ஆவது சட்டத்திற்கு இசைய அல்லது உட்பட் ஒரு தீர்வை முன்வைக்குமாறு மகிந்தா இராசபக்ஷ அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவரைக் கேட்டுள்ளார்.

1987 இல் இலங்கை இந்திய உடன்பாட்டை வன்மையாக எதிர்த்த சுதந்திரக் கட்சி இப்பொழுது ஆட்சிக்கு வந்தபின் அதே 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தத் துடிக்கிறது. மகிந்த இராசபக்ஷ இனச் சிக்கலுக்கு 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ்த்தான் தீர்வு என்று சொல்வதற்கு அவருக்கு யார் முண்டு கொடுத்தார்கள்? யார் தீபதூபம் காட்டினார்கள்? என்பதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.

கடந்த பெப்ரவரி 18 ஆம் நாள் கீழ்ச்சபையில் (லோக்சபாவில்) இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை (“THE SITUATION IN SRI LANKA”)  இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்தார். அப்பொது அவர் அடுக்கடுக்காக வி.புலிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை வீசினார்.

“இலங்கைச் சிக்கலுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டுத் தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு நடை முறைப்படுத்தப்படவும் அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.”

இவற்றோடு அவர் நிறுத்தவில்லை பழைய குருடி கதவைத் திறவடி என்ற பாணியில்”போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது”என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து கீழவை பல தடவை ஒத்திவைக்கப்பட்டது.

“இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது சட்டத் திருத்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும்.

வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் வாய்ப்பு இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும் மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை” என்றார் பிரணாப் முகர்ஜி. இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஒருவார்த்தைகூட அமைச்சர் கூறவில்லை.

பிரணாப் முகர்ஜியின் அறிக்கைக்கு இரண்டுநாள் முந்தி சென்னை மாங்கொல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசிய பேச்சு பிரணாப் முகர்ஜி படித்த அறிக்கையை ஒத்திருந்தது. அவரும் வி.புலிகள் தமிழ்த் தலைவர்களை கொன்று ஒரு சர்வாதிகார அரசை நிறுவ முயற்சித்தார்கள் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

எனவே 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ்த்தான் தீர்வு என மகிந்த இராசபக்ஷ சொல்வதற்கு இந்தியாவே காரணம் ஆகும். வி.புலிகளுக்கு எதிரான போரை இந்தியாவே பின்னால் இருந்து நடத்துகிறது என்ற குற்றச்சாட்டு இப்போது எண்பிக்கப்பட்டு விட்டது. எமது மண்ணில் தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல இந்தியா தான் என்பது தெளிவாகிவிட்டது. இதன் காரணமாகவே இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களதும் கட்சிகளதும் உணர்வை மதிக்க மறுக்கிறது.

எங்களது கெட்ட காலம் இலங்கைச் சிக்கலில் தமிழகத் தலைவர்கள் ஒரே குடையின் கீழ் நின்று போராட மறுக்கிறார்கள். ஆதரிப்பவர்களும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என  வெவ்வேறு குடையின் கீழ் பிரிந்து நின்று போராடுகின்றன. இது இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டின் குரலை எளிதாக உதாசீனப்படுத்த வழி வகுத்துள்ளது.

தமிழீழ மக்களது சிக்கலை களத்துக்கு வெளியே தீர்த்து வைக்கக் கூடிய நாடுகள் இரண்டுதான் உள்ளன. ஒன்று இந்தியா மற்றது அமெரிக்கா. இந்த இரண்டு நாடுகளுமே சிங்கள அரசின் மீது இரதாசதந்திர, இராணுவ, பொருளாதார அழுத்தத்தை உறைப்பாகக் கொடுக்க முடியும். தமிழ்நாட்டு மக்களே இந்தியாவுக்கு அழுத்தத்தைத் கொடுக்க முடியும்..

எனவே புலம்பெயர் மக்களின் கவனம் இந்த இரண்டு நாடுகளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். புலத்தில் காணப்படும் மனித வளத்தை, பொருள் வளத்தை, கால வளத்தை பலமுனைகளில் சிதறடிக்காமல் அவை ஒருமுகப்படுத்தப் படவேண்டும்.

இன்று எந்த நாட்டைப் பார்த்தாலும் வி.புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஸ்ரீலங்கா அரசோடு பேசவேண்டும் என்கிறார்கள். விலக்குப் பிடிக்கப் போன நோர்வே நாடு கூட வி.புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சிங்கள அரசோடு பேச வேண்டும் என்கிறது. இப்படி இவர்கள் கேட்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று வி.புலிகள் தமது ஆளுகைக்குள் வைத்திருந்த நிலப்பரப்பின் பெரும் பகுதியை இழந்துவிட்டார்கள். இரண்டு தமிழீழ மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை புலத்தில் பின்தள்ளப்பட்டுவிட்டமை.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளில்; நடைபெற்ற போராட்டங்களின் போது குறைந்த பட்சம் தேசியக் கொடியையும் தேசியத் தலைவர் அவர்களது படத்தையும் தூக்கிப் பிடித்தார்கள். ஆனால் கனடாவிலோ தேசியக் கொடி பிடிப்பதையே ஒரு மிதவாதத் தலைமை தடைசெய்துவிட்டது. காரணம் கேட்டால் புலிக்கொடியைப் பிடித்தால் இங்குள்ள செய்தித்தாள்கள் அதனைப் பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்தி பரப்புரை செய்யும் என்கிறார்கள். கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை விரும்பவில்லை என்கிறார்கள். புலிக்கொடி பறந்தால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுக்கிறார்கள் என்கிறார்கள்.

தேசியக் கொடி என்பது எமது இனத்தின் அடையாளம். புலிச் கொடி மூவேந்தர்களில் சோழர்களது கொடி. முதலாம் கரிகாலன் காலத்துக்கு முன்பிருந்தே இருந்துவரும் கொடி. இடைக்காலச் சோழ மன்னர்களான முதலாம் இராராசன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் வங்கக் கடலிலும் இந்துப் பெருங்கடலிலும் வலம் வந்த கடற்படைக் கப்பல்களினல் பட்டொளி வீசிப் பறந்த கொடி. எனவே இந்தக் கொடி என்பது எங்களது தேசியத்தின் முக்கிய அடையாளமாகும்.

செய்தியாளர்களுக்குப் பிடிக்காது, நாடாள்வோருக்குப் பிடிக்காது என்பது கோழைத்தனமாகும். அப்படிச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. பேச்சுரிமையும், கருத்துச் சுதந்திரமும் கூட்டம் கூடும் சுதந்திரமும் கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் கனடிய யாப்பில் வரையப்பட்டுள்ள அடிப்படைச் சுதந்திரங்களாகும். அதன் இரண்டாவது விதி பி;ன்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

2. Everyone has the following fundamental freedoms:

(a) freedom of conscience and religion;

 (b) freedom of thought, belief, opinion and expression, including freedom of the press and other media of communication;

(c) freedom of peaceful assembly; and

(d) freedom of association.  

2. ஒவ்வொருவருக்கும் பின்வரும் அடிப்படை சுதந்திரங்கள் இருக்கின்றன.

(அ) மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரம்,

(ஆ) ஊடக சுதந்திரம் மற்றும் தொடர்தொலைவு ஊடக சுதந்திரம் உட்பட்ட எண்ணச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரம்,

(இ) அமைதியாகக் கூடும் சுதந்திரம்,

(ஈ) சங்கம் வைக்கும் சுதந்திரம்.

எனவே தமிழீழ மக்களது தேசியக் கொடியைப் பிடிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் மறுக்க முடியாது. அப்படிச் செய்வது அரசியல் யாப்பை மீறுவதாகும். உலகில் யாராவது கோழியைக் கேட்டுவிட்டா அதைப் பிடித்து கறியாக்குகிறார்கள?

இனப்படுகொலையைக் கண்டிக்கும் அதே சமயம் எமது அடிப்படைக் கோரிக்கைகளையும் கனடா உட்பட மேற்குலக நாடுகளின் முன் வைக்க வேண்டும்.

1) தமிழர்களது தாயகக் கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

2) தமிழர்களது தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை அங்கீகரிக்கப் படவேண்டும்.

3) தமிழர்களது ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

4) ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்படும் ஆயுத, தளபாட உதவி, பயிற்சி, புலனாய்வு, கண்காணிப்பு,

நிதியுதவி நிறுத்தப் படவேண்டும்.

5) ஸ்ரீலங்கா மீது பொருளாதார தடைகள் போடப்பட வேண்டும்.

வோஷிங்டனில் வெள்ளை மாளிகை முன் கடந்த 20 ஆம் நாள் நடத்தப்பட்ட பேரணியில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் பெரிய பொருட்செலவில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களால் (Thamils Against Genocide) நடத்தப்பட்ட இப் பேரணியில் ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியக் கொடிகளைக் கீழே போடுங்கள் என்று எற்பாட்டாளர்களால் சொல்லப்பட்டது. ஆனால் மக்கள் செவிசாய்க்கவில்லை. புலிக் கொடிகளை கைகளில் ஏந்திய வண்ணம் மைதானத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

அந்தப் பக்கம் சிங்களவர்கள் சிங்கக் கொடியோடு நின்ற போத தமிழர்கள் ஏன் இந்தப் பக்கம் நின்று கொண்டு தமது தேசியக் கொடியான புலிக் கொடியைப் பிடிக்கக் கூடாது? ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது விளங்கவில்லை. புலிக் கொடி நமது தேசிய அடையாளத்தைக் காட்டும் சின்னமாகும்.

இப்படி – புலிகள் வேறு மக்கள் வேறு – எனச் சிலர் பிரித்துப் பார்ப்பதாலேயே உலக நாடுகள் வி.புலிகளைப் பார்த்து ஆயுதங்களைக் கீழே போடுங்கள் எனச் சொல்லத் தொடங்கியுள்ளார்கள். இவ்வளவிற்கும் அமெரிக்காவில் வி.புலிகளுக்குத் தடையே ஒழிய புலிக் கொடிக்குத் தடையில்லை!

இப்போது எமது அரசியல் போராட்டத்தின் மையம் நிலத்திலிருந்து புலத்துக்கு மாறியுள்ளது. அரசியல் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு, வரலாற்றுக் கடமை புலம்பெயர் தமிழர்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.

மேற்குலக நாடுகளில் எமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் சுதந்திரங்களைப் பயன்படுத்தி எமது விடுதலையை வீச்சாக்குவோம் விடியலை நமதாக்குவோம்! (முழக்கம் – பெப்ரவரி 27,2009)


வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில்

நக்கீரன்

இந்தியாவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது. சந்திமுனையில் அல்ல. இந்திய நாடாளுமன்றத்தில். வாய்மொழியாக அல்ல எழுத்தில்.

கடந்த பெப்ரவரி 18 ஆம் நாள் கீழ்ச்சபையில் (லோக்சபாவில்) இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை (“THE SITUATION IN SRI LANKA”)  இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்தார். அப்பொது அவர் அடுக்கடுக்காக வி.புலிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை வீசினார்.

“இலங்கைச் சிக்கலுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு அமல்படுத்தப்படவும் அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.”

இவற்றோடு அவர் நிறுத்தவில்லை பழைய குருடி கதவைத் திறவடி என்ற பாணியில் “

போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை கீழவை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது சட்டத் திருத்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும்.

வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் வாய்ப்பு இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும் மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை.” பிரணாப் முகர்ஜி. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஒருவார்த்தைகூட அமைச்சர் கூறவில்லை.

வன்னிமக்கள் கொத்துக் கொத்தாக வகை தொகை இல்லாது சிங்களப் படைகள் வான்வழியாகக் குண்டு போட்டும் எறிகணைகள் வீசியும் கொல்லப்படுவது பற்றி பிரணாப் முகர்ஜி மூச்சே விடவில்லை. முன்பு கொழும்பு சென்று திரும்பி வந்து செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்மக்களது பாதுகாப்புக்கு இராசபக்ஷ உறுதிமொழி தந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிரணாப் முகர்ஜியின் அறிக்கைக்கு இரண்டுநாள் முந்தி சென்னை மாங்கொல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசிய பேச்சை ஒத்திருந்தது கவனிக்கத்துக்கது. அவரும் வி.புலிகள் தமிழ்த் தலைவர்களை கொன்று ஒரு சர்வாதிகார அரசை நிறுவ முயற்சித்தார்கள் எனக் குற்றம்சாட்டியிருந்தார். அவர் கொடுத்த பட்டியலில் இயற்கைச் சாவைச் தழுவி வி.புலிகளால் நாட்டுப்பற்றாளர் என மேன்மைப் படுத்தப்பட்ட மு.சிவசிதம்பரம் இருந்தார். அது மட்டுமல்ல தனது இயக்கத்தினராலேயே சுட்டுக் கொலைசெய்யப்பட்ட உமாமகேஸ்வரன் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இலங்கைத் தீவில் பெரும்பான்மை பவுத்த சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தேசியமான தமிழர்களுக்கும் இடையில் மோதல்களும் முரண்பாடுகளும் ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்ற காலந்தொட்டே இருந்து வருகிறது. அதில் இந்தியா தமிழர் சார்பான கொள்கையைப் பிடித்து வருகிறது என்ற எண்ணம் தமிழ்மக்களிடையே இருந்து வந்தது. குறிப்பாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அந்த எண்ணம் வலுப்பெற்றது.

ஆனால் அவருக்குப் பின் பிரதமராக வந்த இராசீவ் காந்தி தன்னிச்சையாக இலங்கை – இந்திய உடன்பாட்டினை செய்து கொண்டார். “இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மாநிலங்களுக்குரிய அதிகாரங்களுக்கு மேலான அதிகாரங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்” என்று உடன்பாட்டில் கையெழுத்துவிட்டு தில்லி திரும்பும் வழியில் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

ஆனால் அந்த உடன்பாட்டின் கீழ் 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் உருவாகிய வட-கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் “உட்கார எனக்கு நாற்காலி கூட இல்லை” எனச் சொல்லித் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தைச் செய்தார். அதன் பின் அவர் கடந்த 19 ஆண்டுகளாக இராஜஸ்தானில் அரசியல் வனவாசம் செய்து கொண்டிருக்கிறார்.

வரதராசப்பெருமாள் ஏறி விழுந்த குதிரையில்தான் இப்போது பிரணாப் முகர்ஜி தமிழ்மக்களை ஏறிவிழச் சொல்கிறார். தமிழீழ மக்களது அரசியல் தலைவிதியை எழுத வேண்டியவர்கள் எமது மக்களே. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

சென்ற ஆண்டு இலங்கை- இந்திய உடன்பாட்டிற்கு மாறாக கிழக்கு மாகாணத்தைப் பிரித்து அங்கு ஆயுத முனையில் ஒரு தேர்தலை நடத்தி ஒரு பொம்மை முதலமைச்சரை மகிந்த இராசபக்ஷ நாற்காலியில் உட்கார வைத்தார். அவரும் இப்போது வரதராசப்பெருமாள் மாதிரி புலம்பத் தொடங்கியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் பேச்சைக் கேட்ட பாமக மற்றும் மதிமுக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து பிரணாப் பேச்சு நிறைவு தரவில்லை என்று கூறி தங்கள் எதிர்ப்பைப் தெரிவித்தனர். இந்தியா தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டு முழக்கம் இட்டனர்.

அவர்களை அமருமாறு அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தனியாக முன்னறிவித்தல் தருமாறு கூறினார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பாமக, மதிமுக கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் இட்டதால் கீழவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது மீண்டும் பாமக மற்றும் மதிமுக கட்சி உறுப்பினர்கள் செய்தித்தாள்களில் வந்திருந்த செய்திகளை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் மீண்டும் எதிர்த்து முழக்கம் இட்டார்கள். இதனால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பில் கலந்து கொள்ளாது பேசா மடந்தையாக இருந்து விட்டார்கள்.

தில்லியில் முகாமிட்டுள்ள பாமக நிறுவனர் இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இந்திய காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார். செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 17, 2009) சோனியா காந்தியைச் சந்தித்துவிட்டு அந்தச் சந்திப்பு திருப்தி தருவதாகச் சொன்னர். ஆனால் அடுத்த நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விட்டு அவரது பதில் திருப்தி தரவில்லை என தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

இது காலவரை இந்தியா இனச்சிக்கலுக்கு இராணுவத் தீர்வு தீர்வாகாது. இருதரப்பும் பேசி ஒரு நியாயமான அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்றுதான் இந்தியா சொல்லி வந்தது.

இப்போது வி.புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது சட்டத் திருத்தம் முழு அளவில் நடைமுறைப்;படுத்த வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதன் மூலம் இனச் சிக்கலுக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும் என இந்தியா சொல்கிறது. இப்போதுதான் அரிதாரம் பூசாத இந்திய அரசின் உண்மை முகம் தெரிகிறது.

சிங்கள சமூகத்துக்கு என்ன அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது தெரியவில்லை. முழு ஆட்சி அதிகாரமே அவர்களது பிடியில் உள்ளது. ஆட்சித்தலைவர், பிரதமர், பிரதம நீதியாளர், மாகாண ஆளுநர்கள், படைத்தளபதிகள் எல்லாமே சிங்களவர்கள்.

இராசீவ் காந்திதான் இலங்கை – இந்திய உடன்பாட்டின் சூத்திரதாரி. அதன் கீழ் கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்துவது காங்கிரசின் கடமை என சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் போன்றோர் நினைக்கிறார்கள். அதுதான் பல சகாப்தங்கள் பேசாப் பொருளாக இருந்த 13 ஆவது சட்ட திருத்தம் இப்போது பேசப்படும் பொருளாக இந்தியா மாற்றப் பார்க்கிறது.

இன்னொன்றை இங்கு கவனிக்க வேண்டும். 1987 இல் இலங்கை இந்திய உடன்பாட்டை வன்மையாக எதிர்த்த சுதந்திரக் கட்சி இப்பொழுது ஆட்சிக்கு வந்தபின் அதே 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது? மகிந்த இராசபக்ஷ பதவிக்கு வந்த காலம் தொட்டு இனச் சிக்கலுக்கு 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ்த்தான் தீர்வு என்று விடாக்கண்டனாகச் சொல்லி வந்தார். அப்படிச் சொல்வதற்கு அவருக்கு யார் முண்டு கொடுத்தார்கள் – யார் தீபதூபம் காட்டினார்கள் – என்பதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.

பகற்கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக இந்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு ஆலோசகர், எம்.கே. நாராயணன, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோருக்கு உண்டு.

13 ஆவது சட்ட திருத்தச் சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த மிதவாதத் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட திருத்தமாகவும். அந்தத் திருத்தத்தின் கீழ் 1989 இல் மாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது. அந்தச் சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்தத்தான் இந்தியா இப்போது ஒற்றைக் காலில் நிற்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மிதவாதத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை இருபது ஆண்டுகள் கழித்து நடைமுறைப் படுத்த இந்தியா எத்தனிப்பது அறிவீனமாகும். அது வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறிய கதை போன்றது. இந்த 20 ஆண்டு காலத்தில் விடுதலைக்குத் தமிழ் மக்கள் கொடுத்த விலை – பலி கொடுத்த உயிர்கள் – சிந்திய குருதி – மிக மிக அதிகமாகும்.

பதின் மூன்றாவது சட்ட திருத்தம் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடைய கருத்து முக்கியமானது.

“இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் திட்டமொன்றை முன்வைக்கவேண்டுமென்ற அனைத்துலக அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் ஆட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஷ முன்வைத்திருக்கும் தீர்வுத்திட்ட யோசனையே 13 ஆவது திருத்தச் சட்டமூலம். எனினும் அனைத்துலக வலியுறுத்தலுக்கு அமைய தீர்வுத்திட்டமொன்றை உடனடியாக அவரால் முன்வைக்க இயலாது. ஏனெனில், சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படைச் சிக்கலைத் தீர்க்கும் விதத்தில் அவர் செயற்படவில்லை. தேசப்பற்றுள்ள கட்சிகளாலேயே அவர் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.

13 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நடைமுறைப் படுத்துவதற்கான காலம் கடந்துவிட்டது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தியாவுக்கு 13 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நன்கு தெரியும். எனினும் 13 ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் வரலாறு பற்றிப் பலருக்குத் தெரியாது. 1986 ஆம் ஆண்டு நட்வார் சிங் இலங்கைக்கு வந்தபோது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. அவை குறித்து நேர்மையான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த நேரம் கோரிக்கை விடுத்தது. எனினும் அதனைக் கணக்கில் கொள்ளாது அப்பொழுது ஆட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன முற்றிலும் மாறுபட்ட திட்டமொன்றை முன்வைத்தார். இதற்கு இந்தியாவின் ஆதரவு இருக்கவில்லை. எனினும் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் தொடக்க கட்டப் பணிகளில் பங்கெடுத்திருக்கவில்லை.

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களிலேயே 13 ஆவது திருத்தச் சட்டமூலம் அமுல்படுத்தப்படவேண்டும். அதுபற்றிக் கவனம் எடுக்காத நிலையில் இது இவ்வாறு சாத்தியப்படும்? கடந்த 18 ஆண்டுகளாக எந்தவொரு ஆட்சித்தலைவராலும் தற்போதைய ஆட்சித்தலைவர் பிரமராக இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளப்படாத சட்டமூலம் தற்பொழுது மாத்திரம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படப்போகிறது? வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நடைமுறைப் படுத்தப்படுவது சட்டத்துக்கு முரணானது.”

செக்கென்றும் சிவலிங்கம் என்ற பாகுபாடின்றி ஆளுவோர் காலை நக்கிப் பிழைக்கும் அரசியல்வாதியே 13 ஆவது திருத்த சட்டம் பற்றி ஆட்சித்தலைவர் மகிந்தாவிடம் (23.1.2008) கூறியிருப்பது கவனத்துக்குரியது. “வெட்டுக் காயப் புண்ணாகச் சிங்களவர் தமிழர் சிக்கல் இருந்த காலத்தில் 13-ஆவது திருத்தம் ஆறுதல் மருந்தாக இருந்திருக்கலாம். இப்பொழுதோ நோய்முற்றி, புற்றுநோய் போலத் தெரியும் நிலை வந்த பின் அந்த மருந்து எதற்கும் பயன்படாது” என்கிறார்.

முன்னாள் ஆட்சித்தலைவர் சந்திரிகா குமாரதுங்கா 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் இனச் சிக்கலுக்கு தீர்வு காணமுடியாது என்று சொல்லியிருக்கிறார். அதன் காரணமாகவே புதிய யாப்பின் வரைவை 1994 இல் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அதனை அன்றைய அய்க்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவர் இரணில் விக்கிரமசிங்காவும் அந்த யாப்பின் படிகளை நாடாளுமன்றத்துக்குள்ளேயே எரித்து அதனை சாகடித்தார்கள் என்பது வேறு கதை.

கடந்த காலத்தில் இராசீவ் விட்ட வரலாற்றுத் தவறை மீண்டும் செய்ய இந்தியா எத்தனிக்கிறது.

இன்னும் இரண்டொரு மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மத்தியில் கூட்டணி ஆட்சிதான் மீண்டும் வரப்போகிறது. தேர்தலில் சென்னை தொடக்கம் கன்னியாகுமரி வரை 2,000 கிமீ நீளம் மனிதசங்கிலிப் போராட்டம் நடத்திய தமிழக மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தங்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழீழ மக்களுக்கு ஆதரவான அரசை ஆட்சியில் அமர்த்த வேண்டும். அப்போது தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வழி பிறக்கும். (உலகத்தமிழர் – பெப்ரவரி 20,2009)


தெய்வத்தின் காட்டிக் கொடுப்புத் தொடர்கிறது!

நக்கீரன்

வன்னியில் இடம்பெற்று வரும் இனப் படுகொலை உலகின் பல திசைகளில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

சனவரி 26 முதல் பெப்ரவரி 2 ஆம் நாள் வரை வன்னியில் 733 அப்பாவி பொதுமக்கள் சிங்கள இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலுக்கும் வான்வழிக் குண்டு வீச்சுக்கும் பலியாகியுள்ளனர். 2615 பேர் காயப்பட்டுள்ளனர். பெப்ரவரி 3 தொடக்கம் இன்றுவரை நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு வலையத்தில் வைத்துக் கொல்லப்படுகிறார்கள். புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை மீது பெப்ரவரி 6 ஆம் நாள் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் அங்கிருந்த 61 நோயாளிகள் கொல்லப்பட்டார்கள்.

வன்னியில் படுகாயப் பட்டோர்களில் 610 பேரை செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் கொண்டு போகப்பட்டுள்ளனர். முதல் தடவை 250 பேரும் இரண்டாவது தடவை 360 பேரும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கை, கால்களை இழந்தவர்கள் ஆவர்.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு முக்கியமானது என்பதை சிறிலங்காவுக்கு ஏற்கனவே இந்தியா எடுத்துக் கூறியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்கிறார். ஆனால் வன்னியில் தொடர்ந்து மக்கள் வகைதொகை இன்றிக் கொல்லப்படுகிறார்கள்.

வன்னியில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதிகளை வெளியேறுமாறு சிங்கள அரசு கட்டளை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அரச அதிபர்கள் வெளியேறி விட்டார்கள்.

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களையும் சிங்கள அரசு வெளியேறுமாறு கட்டளை இட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் வெளியேறவில்லை என வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. செஞ்சிலுவையை வன்னிப் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றுவது ஜெனிவா மரபுகளை மீறும் செயலாகும். ஆனால் சிங்கள அரசு ஜெனிவா மரபுகளை மதிக்கும் மனநிலையில் இல்லை என்பது தெரிந்ததே.

கடந்த பெப்ரவரி 4 ஆம் நாள் வன்னியில் அரங்கேறும் இனப்படுகொலை பற்றி கனடிய நாடாளுமன்றத்தில் 5 மணித்தியாலம் விவாதம் நடந்தது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி வன்னியில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசினார்கள். இந்த விவாதம் நடத்தக் கோரி மக்களாட்சிக் கட்சித் தலைவர் யக் லேயிட்டன் தீர்மானம் கொண்டு வந்திருந்தார்.

ஆனால் அடுத்தநாள் வெளியுறவு அமைச்சர் டேவிட் கனன் (டுயறசநnஉந ஊயnழெn) வெளியிட்ட அறிக்கை எமாற்றத்தை அளித்துள்ளது. இணைத் தலைமை நாடுகளது அறிக்கையை வரவேற்று அதனை வழிமொழிந்த அமைச்சர் வி.புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சிங்கள அரசுடன் பேச வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

இலங்கை இனச்சிக்கலில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கனடா நாட்டு வெளியுறவு அமைச்சர் லோரன்ஸ் கனன் பிரணாப் முகர்ஜியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வி.புலிகளை தடை செய்து விட்டு தமிழ்மக்களைக் காப்பாற்றுமாறு கேட்டு இந்தியாவிடம் முறையிடுவது கனடாவின் கபடத்தனத்தைக் காட்டுகிறது. வி..புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதை சாட்டாக வைத்துக்கொண்டுதான் சிறிலங்கா இனனவாத அரசு தமிழர்களுக்கு எதிரான போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனச் சித்திரித்து முன்னெடுக்கிறது. எனவே இந்தியாவிடம் கனடா முறையிடுவது களவெடுத்த கள்ளனிடம் பொருள் களவு போய்விட்டது என்று முறையிடுவது போன்றது.

கனடா மட்டுமல்ல வன்னியில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையிட்டு அய்யன்னா, பிரித்தானியா, அமெரிக்கா, கிழக்கு தீமோர், அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளன. ஆனால் சிறிலங்கா அவற்றைக் காதில் போடுவதாக இல்லை.

பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் அனுப்பிய சிறப்புத் தூதர் டெஸ் பிரவுண் (னுநள டீசழறநெஇ ஆ.P.) அவர்களின் வருகையை சிறிலங்காவின் அமைச்சரவை நிராகரித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் சிறிலங்கா அமெரிக்காவின் எதிரி நாடான இரானோடு அரசியல் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

யாரைப் பார்த்தாலும் வி.புலிகள் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சிங்கள அரசோடு பேச வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள்.

தமிழர் – சிங்களவர் இருதரப்புக்கும் இடையில் விலக்குப் பிடிக்க வந்த நோர்வே நாடும் இணைத் தலைமை நாடுகளோடு சேர்ந்து வி.புலிகள் தங்கள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்று சொல்கிறது! இது உலகின் எப்பாகத்திலும் இடம்பெறாத அதிசயமாகும். இதன் மூலம் நோர்வே தொடக்க முதலே அமெரிக்க நாட்டின் ஒரு எடுபிடி என்பதை எண்பித்துள்ளது!

வன்னியில் இடம்பெறும் மனித அவலம் இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் படித்த உரையில் ‘இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போரை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தைகளை உடனே தொடங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த உரையில் –

‘இராணுவ அடிப்படையிலான சண்டைகளால் இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள மக்களின் வேதனைகள் எங்களுக்கு மிகுந்த மனக்கவலையை அளித்துவருகின்றன. இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். இராணுவம் தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள்பட்ட அரசியல் அடிப்படையிலான பேச்சுகள் மூலமே இனப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்பதுதான் இந்திய அரசின் நிலை’ எனக் கூறினார்.

பிரதிபா பாட்டில் உரை ஆற்றிக்கொண்டிருந்த போது மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த வேண்டும் சிறிலங்காவிற்கு இந்தியா இராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது என இடைமறித்து முழக்கம் எழுப்பினார்கள். அதே நேரம் இந்தக் கட்சித் தொண்டர்கள் தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

ஆக இந்தியாவும் இணைத்தலைமை நாடுகள் பாடிய பல்லவிக்கு அனுபல்லவி பாடியுள்ளது.

இந்தியா கடந்த பல ஆண்டுகளாக ஒரே பாட்டைத் திரும்பத் திரும்பப் பாடிவருகிறது. அது என்னவென்றால் இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு தீர்வாகாது. தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை நிறைவு செய்யக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் எனக் கூறிவருகிறது. அண்மைக்காலமாக தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா முன்வைக்க வேண்டும் என்பதற்குப் பதில் சகல சமூகங்களதும் (சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள்) வேட்கைகளை நிறைவு செய்யக் கூடிய ஒன்றுபட்ட நாட்டில் அரசியல் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என இந்தியா கூறிவருகிறது.

சிங்களவர்களது வேட்கை என்னவென்பது புரியவில்லை. பெரும்பான்மை சிங்களவர்களது ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆட்சித்தலைவர், பிரதமர், பெரும்பான்மை அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்கள், நீதியாளர்கள், அரச பணியாளர்கள், படையினர், காவல்துறையினர் என அங்கிங்கு இன்னாதபடி சிங்களவர்களே கோலோச்சுகிறார்கள். சிங்களமொழிக்கு அரசமொழி தகைமை சிறிலங்கா குடியரசின் யாப்பில் எழுதப்பட்டுள்ளது. அது போலவே பவுத்த மதத்திற்கும் சிறிலங்கா குடியரசின் யாப்பில் முன்னிடம் (யுசவiஉடந 9 (உhயிவநச ஐஐ) ழக வாந உரசசநவெ ளுசடுயமெயஉழளெவவைரவழைn pசழஅரடபயவநன in 1978 ளயலள ‘வுhந சுநிரடிடiஉ ழக ளுசடுயமெய ளாயடட பiஎந வழ டீரனனாளைஅ வாந கழசநஅழளவ pடயஉந யனெ யஉஉழசனiபெடல வை ளாயடட டிந வாந னரவல ழக வாந ளுவயவந வழ pசழவநஉவ யனெ கழளவநச வாந டீரனனாய ளுயளயயெ..’) கொடுக்கப்பட்டுள்ளது. மகிந்த இராபச்சே எந்த ஒளிவு மறைவுமின்றி சிறிலங்காவில் நடைபெறும் ஆட்சி தன்னைத் தெரிந்தெடுத்த பவுத்த – சிங்கள மக்களது ஆட்சி என மார்தட்டுகிறார்.

இந்த அழகில் இந்தியா எதிரும் புதிருமாக உள்ள சிங்களவர் – தமிழர் வேட்கையை நிறைவு செய்யக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றுபட்ட இலங்கையில் சாத்தியமா? அதிலும் அரசியல் யாப்பு 13 ஆவது திருத்தத்தின் கீழ் சாத்தியமா? மிதவாதத் தமிழ்த் தலைவர்களே 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்துள்ளார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் தமிழ்மக்களுக்கு எதிரான போருக்கு இந்தியாவே ஒல்லும் வகையிலும் ஆயுத தளபாட உதவிகள், பயிற்சி, நிபுணத்துவம், புலனாய்வு, கண்காணிப்பு என சிறிலங்காவிற்கு உதவி வருகிறது. அண்மையில் கூட இலங்கை சென்று திரும்பிய இந்திய வெளியுறவு அமைச்சர் வி.புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் ஆனால் பொதுமக்கள் காப்பாற்றப்படுவார்கள் என மகிந்தா இராசபச்சே தன்னிடம் உறுதிமொழி கூறியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதனைப் பார்க்கும் போது இந்தியா நாய்களோடு வேட்டையாடிக் கொண்டு முயலோடும் ஓடுவதாக பாசாங்கு செய்கிறது!

ஆனால் மகிந்த இராசபக்சாவோ ‘விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரண் அடைந்தால் மட்டுமே அவர்களுக்கு எதிரான போரை நிறுத்துவோம். அவர்களுடைய நிபந்தனைகள் எதையும் ஏற்கமாட்டோம். இன்னும் சொற்ப நாட்களில் வி.புலிகளின் கடைசித் தளமான புதுக்குடியிருப்பையும் பிடித்துவிடுவோம். இது இனச் சிக்கலே அல்ல பயங்கரவாத அமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான போர். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் உலகுக்கே நாம் எடுத்துக்காட்டாக உள்ளோம்’ என மார்தட்டுகிறார்.

தமிழ்நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பை தணிக்கவும் முதல்வர் கருணாநிதிக்கு முண்டு கொடுக்கவுமே ‘இராணுவ அடிப்படையிலான சண்டைகளால் இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள மக்களின் வேதனைகள் எங்களுக்கு மிகுந்த மனக்கவலையை அளித்துவருகின்றன’ என இந்தியா நீலிக் கண்ணீர் வடிக்கிறது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தவாறே பிரதிபா பாட்டில் ஆற்றிய உரை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகிழ்ச்சி தண்ணீரில் மூழ்கப் போகிறவன் துரும்பைப் பிடித்து கரையேற நினைப்பது போன்றது. பிரதிபா பட்டில் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ‘இரு தரப்பும் தங்களது தாக்குதலை ஒரே சமயத்தில் நிறுத்தி விட்டால், பேச்சுவார்த்தை சாத்தியமாகும். இலங்கை அரசு தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். அதேசமயம், விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கைவிட்டு விட்டு அரசுடன் பேச முன்வர வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது உரையில நஞ்சு கலந்து இருப்பதை முதல்வர் கருணாநிதி கவனிக்க மறுக்கிறார். தமிழீழ மக்களின் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில் அதனை இழுத்தடிக்க செயல் குழு, பொதுக் குழு, உயர்நிலைக் குழு என குழுக்களை கூட்டிக் கொண்டே இருக்கிறார்.

அதன் காரணமாகவே கீரைக் கடைக்கு எதிர்கடை போல் முதல்வர் கருணாநிதி இலங்கை மக்கள் பாதுகாப்பு இயக்கத்துக்குப் போட்டியாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை துவக்கியுள்ளார். தமிழ்மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்மக்கள் ஒரே அணியில் அணி திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்துக் கொண்டே இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளார். இது ஒற்றுமையைக் குலைக்கவே உதவும் என்பது வெள்ளிடமலை. இதையே தமிழின எதிரிகளின் விருப்பமாகவும் இருக்கிறது. இந்து இராம் திமுக உருவாக்கிய அமைப்பைப் பாராட்டி தலையங்கம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தமிழின உணர்வு தலைதூக்கும் போது அதனைத் தணிக்க மிதவாதத் தலைவர்களை தட்டிக் கொடுப்பதை இந்து இராம் ஒரு கோட்பாடாக வைத்திருக்கிறார். ஆக முதல்வர் கருணாநிதியின் காட்டிக் கொடுப்பு தொடர்கிறது!

வி.புலிகள் ஆயுதங்களைக் கைவிடமாட்டார்கள் என்பதை அரசியலில் அ, ஆ படித்த மாணவனைக் கேட்டாலே சொல்லிவிடுவான். இது இந்தியாவுக்கு நன்கு தெரியும். தெரியாது என்று சொல்ல முடியாது. இந்தியா ஆயுதமுனையில் கேட்ட போதே ஆயுதங்களைக் கீழே போட மறுத்தவர்கள் வி.புலிகள்.

வி.புலிகள் ஆயுதங்களைக் கீழே போட மாட்டார்கள் என்ற துணிச்சலில்தான் இந்தியா, கனடா போன்ற நாடுகள் வி.புலிகளைப் பார்த்து நம்பிக்கையோடு ஆயுதங்களைக் கீழே போடுமாறு கேட்கின்றன போல் தெரிகிறது. (உலகத்தமிழர் – பெப்ரவரி 13, 2009)


காக்கும் தெய்வம் காட்டிக் கொடுத்துவிட்டது!

நக்கீரன்

சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன்.

இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ் உணர்வாளர் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நீங்கலாக ஏனைய இரண்டு தீர்மானங்களின் முக்கிய பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

1) இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத்தரவும் – அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும் – மக்களாட்சி முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும் ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பின் பெயரால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பரப்புரை கருவிகளைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப்பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.

2) முதற்கட்டமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் தன்னாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் இந்தச் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை மக்கள் மன்றத்தில் விளக்கி ஆதரவு திரட்டி வலிமை சேர்த்திட தமிழகம் முழுவதும் மாவட்டத்தலை நகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பரப்புரை விளக்கப் பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் வருகிற 7 ஆம் நாள் சென்னையிலும் 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்துவதென்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் மூலம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சியை இழக்கத் தயாரில்லை என்பதையும் காங்கிரஸ் கட்சியோடான கூட்டணி தொடரும் என்பதையும் சொல்லிவிட்டார்.

மேலும் முதல்வர் கருணாநிதி தனக்கும் மத்திய அரசுக்கும் பகை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது, நாங்கள் வெளியேறி விடுவோம் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள். திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மார் தட்டியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி பழைய குருடி கதவைத் திறவடி என்ற பழமொழிக்கொப்ப 1984 இல் தொடங்கிய தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organisation (TESO)  போன்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.

1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கும் இப்போது தொடங்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது. தமிழீழ ஆதரவாளர் அமைப்பு தமிழீழத் தனியரசு அமைவதை ஆதரித்ததோடு இந்தியா ஸ்ரீலங்காவில் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழீழம் என்ற சொற்பதம் தீண்டப்படாத சொல்லாகக் கருதப்பட்டு அது நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் “தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் தன்னாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் இதை விளக்கி பொதுக்கூட்டம், பேரணி நடத்தும் என்பது தான் தீர்மானம்.

இதன் மூலம் தமி;ழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இறுதித் தீர்மானம் உட்பட 3 தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்ட போர் நிறுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் கைகழுவிவிட்டு விட்டார்.

போர் நிறுத்தம் பற்றிச் செயற்குழு தீர்மானத்திலே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சியும், முழுமையான அதிகார பகிர்வு கலந்த அரசியல் தீர்வும் உருவாக்க, செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தீர்மானம் கூறுகிறது.

தமிழீழ மக்கள் வாழும் வட- கிழக்குப் பகுதி தமிழீழம் என்பது மறைக்கப்பட்டுவிட்டது. இது தற்செயலான நீக்கம் அல்ல. இந்திய காங்கிரஸ் அரசின் கொள்கைக்கும் நிலைப்பாட்டுக்கும் இசையச் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தமிழீழ விடுதலைக்கு ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சகோதர யுத்தம் செய்த காரணத்தாலேயே ஆயுதப் போராட்டம் பலவீனம் அடைந்தது என்ற கருத்தை எழுதும் போதும் பேசும் போதும் முன்வைக்கிறார்.

“1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்களாலும், அவரது தளபதியாக விளங்கிய நாவலர் அமிர்தலிங்கம் அவர்களாலும் பிரகடனப்படுத்தப்பட்டதும், வலியுறுத்தப்பட்டதும், தாய்த் தமிழகம் போன்ற பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் ஒருமித்த ஆதரவைத் தேடிப் பெற்றதுமான “தமிழ் ஈழம்” அமைப்பதற்கான குரல், வலிமை அடைந்து – அந்தக் குறிக்கோளின் வெற்றிக்காக பல போராளிக் குழுக்கள் அமைந்து, அத்தனை போராளிகளும் ஒன்றாக இருந்து சிங்கள அரசை எதிர்த்து சில காலம் – பின்னர் அவை தனித்தனியாகப் பிரிந்து சகோதரயுத்தங்கள் நடத்தி பலவீனப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இப்படி முதல்வர் சொல்வதில் இருந்து அவர் இறந்த காலத்திலியே இன்னமும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இவர் குறிப்பிடும் சகோதர யுத்தம் என்பது அவரது நட்புக்கும் அரவணைப்புக்கும் உரிய ரெலோவின் தலைவர் சபாரத்தினத்தைக் குறிக்கும். முதல்வர் எழுதிய பாலைவன ரோசாக்கள் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாத்திரத்துக்கு (சத்தியராஜ்) அந்தப் பெயரை கலைஞர் வைத்திருந்தார்.

அவர் குறிப்பிடும் சகோதர யுத்தத்துக்குக் காரணம் இந்திய உளவு நிறுவனமான றோ என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார். வி.புலிகளின் வளர்ச்சியை விரும்பாத றோ அதனை அழிக்க ரெலோ அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கியதன் காரணமாகவே சகோதர யுத்தம் வெடித்தது.

றோ மீதுள்ள நம்பிக்கையைச் சோதிக்கவே அதன் பணிப்பின் பேரிலேயே ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிலங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் இருவரையும் கொலை செய்தது. கொலை செய்து விட்டு பழியை வி. புலிகள் மீது சுமத்தியது.

“இலங்கை தமிழர் நலத்துக்காக 50 ஆண்டு காலமாகப் போராடி, சிறை சென்று, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்து, அதற்கும் மேலாக தமிழக ஆட்சியையே இரு முறை இழந்து வீண் பழிச் சொற்களைச் சுமந்து, இப்போது 5 ஆவது முறையாக பொறுப்பேற்று மக்களுக்கான சாதனை சரித்திரத்தையே படைத்து வருகிற ஆட்சியை சாய்த்து விட சதித்திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்” எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக ஆட்சியை இரண்டுமுறை இழந்ததாக ஒரு பல்லவியை தமிழக முதல்வர் கருணாநிதி நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார். ஆனால் அது உண்மையல்ல. முதன்முறை ஊழல் குற்றச்சாட்டிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1991 இல் திமுக ஆட்சியை கவிழ்த்து விட்டு தேர்தலைச் சந்திக்க விரும்பிய இராசீவ் காந்தி தலைமையிலான இந்திய காங்கிரஸ் பிரதமர் சந்திரசேகரருக்கு கொடுத்த நெருக்கடியால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் சந்திரசேகரருக்கு வழங்கிக் கொண்டிருந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்ட போது அவரது ஆட்சியும் கவிழ்ந்தது. இதுதான் நடந்த உண்மை.

இதே போல் 50 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் நலத்துக்காக திமுக போராடி வந்தது என்பதும் உண்மையல்ல.

முதல்வர் கருணாநிதியே கிமு, கிபி என்பது போல வி.புலிகளோடான திமுகவின் உறவை இராசீவ் காந்திக்கு முன் இராசீவ் காந்திக்குப் பின் எனப் பிரித்து 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வி.புலிகளுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது அவர்களுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். முதல்வர் கொடுத்துள்ள ஆண்டுவாரியான – 16.5.1985 முதல் – திமுகவின் சாதனைப் பட்டியலில் 1995 நொவெம்பர் மாதம் 30 ஆம் நாள் முழு அடைப்பு என்ற பதிவுக்குப் பின்னர் எந்தப் பதிவும் பதியப்படவில்லை. உண்மையும் அதுதான்.

திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றிக் கருத்துச் சொன்ன மருத்துவர் இராமதாஸ் நிவாரண நிதி திரட்டுகிறோம் என்று சொல்லி தொடக்க முதலே இலங்கைத் தமிழர் சிக்கலையே முதல்வர் கருணாநிதி திசை திருப்பி விட்டார் என்றும் போர் நிறுத்தம் தொடர்ர்பான கோரிக்கைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏதோ இராசபச்சே கட்சித் தீர்மானத்தைப் போல உள்ளது. அது திருப்தி தரவில்லை, ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தமிழ் இனம் இலங்கையில் அழிகிறது, மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்று கடந்த சனவரி மாதம் 23 ஆம் நாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு அவர் சொன்ன விளக்கத்தில் “கேட்டுக் கேட்டுப் பலன் கிடைக்காததால் இந்த தீர்மானத்தை முன்மொழிவதாக” சொல்லி இருந்தார். உடனே இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அமைதியை நிலவச் செய்யவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டால் தி..கவின் அடுத்த நடவடிக்கையாக செயற்குழு அல்லது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்போம் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். தற்போது அவரது இறுதி வேண்டுகோள் ஒன்றுமே இல்லாமல் போனதால் திமுக.வின் செயற்குழு கூடி தீர்மானம் போட்டிக்கிறது. இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பதன் மூலம் இலங்கை தமிழர் சிக்கலில் திமுக அரை நூற்றாண்டிற்குப் பின்நோக்கி போயிருக்கிறது” என்று மருத்துவர் இராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்தத் தெய்வம் தங்களைக் காக்கும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்களோ அந்தத் தெய்வம் கை விட்டதும் அல்லாமல் காட்டியும் கொடுத்துவிட்டது. இவ்வளவு எளிதாக – எந்தவெட்கமோ துக்கமே இன்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை காற்றில் பறக்கவிட தமிழக முதல்வர் நினைத்தது எதைக் காட்டுகிறது?

அவர் தொடக்க முதல் உள்ளத் தூய்மையோடு தமிழீழ மக்கள் பற்றிய சிக்கலைக் கையில் எடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. முதல்வர் கால் சறுக்குவார், வாக்குத் தவறுவார் என்று சிலர் முன்கூட்டியே எதிர்கூறல் சொன்னார்கள். வைகோ தமிழக முதல்வர் நாடகம் ஆடுகிறார் இது வெறும் கண்துடைப்பு என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டார். அப்போது வைகோ மீது நாம் வருத்தப்பட்டோம். ஆனால் இப்போது அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது.

தனது கடைசிக் காலத்தில் ஏதோ தமிழீழத்தமிழர்களுக்கு உதவி செய்துவிட்டு நல்ல பெயரோடும் புகழோடும் கண்ணைமூடுவார் என்று நாம் எதிர்பார்த்தோம். அந்த எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது. இனி அவர் மீது படிந்து விட்ட வரலாற்றுக் கறையை உலகத்தில் உள்ள அத்தனை சோப் போட்டுக் கழுவினாலும் போக்க முடியாது.

சிறிலங்காவில் சிங்கள இனவாத ஆட்சித்தலைவர் தொடங்கி சாதாரண சிங்கள அரசியல்வாதிவரை முதல்வர் கருணாநிதிக்குச் பாமாலை பாடி புகழ்மாலை சூட்டுகிறார்கள். பசில் இராசபக்சே தமிழ்நாட்டின் வாயை மூடச் செய்துவிட்டார் என எழுதுகிறார்கள். முதல்வர் கருணாநிதியின் வாலை ஒட்ட வெட்டிவிட்டதாக பவுத்த தேரர்கள் அறிக்கை விடுகிறார்கள். கருணாநிதியின் சரணாகதி சிங்கள இராசதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்று சிங்கள – ஆங்கில ஊடகங்கள் கொக்கரிக்கிறன. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று சிங்கள – புவத்த இனவெறியன் மகிந்த இராசபக்சே இலங்கை வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுகிறான்.

இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பால் தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பினரும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் தானியங்கி ஓட்டுநர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் பல்வேறு சட்டவாதிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7,200 பேர் கைது செய்து சிறையில் டைக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேலை நிறுத்தம் சட்டத்துக்கு மாறனாது – உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறானது – என முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. உச்ச நீதிமன்றமே தமிழர்கள் தங்கள் தமிழ் உணர்வைக் காட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது முதல்வர் கருணாநிதியின் முகத்தில் கரி பூசி விட்டது.

வேலை நிறுத்தம் வெற்றிபெற மாணவர்களே கடுமையாக உழைத்துள்ளார்கள். அறுபதுகளில் இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களே போர்க்கொடி தூக்கினார்கள். இப்போது மீண்டும் அவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். அதனைப் பார்த்து வெருண்டுபோன தமிழக அரசு கல்லூரிகளை மூடிவிட்டது.

தமிழ் உணர்வாளர் முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் அலைமோதிய மக்கள் கூட்டம் அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சாவோலையில் “என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” எனக் கேட்டுக் கொண்டார். அவரது ஆசை நிறைவேறிவருகிறது.

தமிழக முதல்வர் தனது ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியை நம்பி இருககிறார். காங்கிரஸ் திமுகவை நம்பி இருக்கிறது. ஆனால் மக்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணியை புறந்தள்ளப் போகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புதிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. (உலகத்தமிழர் – பெப்ரவரி 06,2009)


பதவி சுகமா? அல்லது இனமானமா?

நக்கீரன்

காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் புகழ் பெற்ற கோயில். அங்கே வீற்றிருக்கும் பெருமாள் ஒவ்வொரு நாளும் வீதி உலா வருவார். அப்போது பக்தர்கள் உரத்த குரலில் “காஞ்சி வரதப்பா! காஞ்சி வரதப்பா!” என உரத்த குரலில் முழக்கம் எழுப்புவார்கள். இப்படி பக்தர்கள் முழக்கம் எழுப்பும் போது கோயிலுக்கு வெளியே பசியால் வாடிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் காதில் அது “கஞ்சி வரதப்பா! கஞ்சி வரதப்பா!” என விழுமாம்!

இந்தப் பிச்சைக்காரர்கள் போலவே இந்திய அரசின் வெளியுறவு செயலர் அண்மையில் ஸ்ரீலங்கா சென்ற போது தமிழ்நாடு சட்டமன்றமும் தமிழக முதல்வரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அங்கே போர் நிறுத்தம் ஏற்பட்டு சிங்களப் படைகள் தங்கள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள் என தமிழ்மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஆனால் அங்கே சென்று மகிந்தா இராசபக்சேயுடன் பேச்சு வார்த்தை நடத்திய சிவசங்கர் மேனன் இந்திய – ஸ்ரீலங்கா உறவு முன் எப்பொழுதம் இல்லாதவாறு நெருக்கமாகவும் நட்பாகவும் இருப்பதாக செய்தியாளர்களிடம் சொன்னார். போர் நிறுத்தம் பற்றிக் கேட்ட போது அது தனக்குத் தரப்பட்ட பொறுப்புக்கு அப்பாற்பட்டது எனக் கையை விரித்து விட்டார். சென்னை வழியாக தில்லி திரும்பிய சிவசங்கர் மேனன் அண்ணா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு பின்னர் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.

அதன் பின்னர் நீண்ட நாட்களாக இதோ போகிறார் அதோ போகிறார் எனச் சொல்லிக் கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியுடன் பேசிவிட்டு ஸ்ரீலங்கா சென்ற போது மீண்டும் தமிழ்மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இயற்கையாகவே எழுந்தது. ஆனால் போன மச்சான் வெறும் கையோடு திரும்பி வந்தார். அலரிமாளிகையில் மகிந்தா இராசபக்சே கொடுத்த விருந்தை உண்டு படைத்தளபதி சரத் பொன்சேகா சிங்களப் படையின் வீரதீர பிரதாபங்களைப் பற்றிப் போட்டுக்காட்டிய ஒளிப்படங்களைப் பார்த்து புழகாங்கிதம் அடைந்து தில்லி திரும்பினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரணாப் முகர்ஜி இந்திய – ஸ்ரீலங்கா உறவு பலமாக இருப்பதாகவும் வன்னியில் சிக்கியுள்ள தமிழ்மக்களது பாதுகாப்புக்கு மகிந்தா இராசபக்ச உறுதி அளித்துள்ளதாகவும் அந்த மக்களுக்கான இந்தியா மனிதாபிமான உதவி வழங்கும் எனவும் தெரிவித்தார். ஆனால் போர் நிறுத்தம் பற்றியோ வி.புலிகளோடு பேச்சுவார்த்தை பற்றியோ அமைச்சர் வாயே திறக்கவில்லை. இது எதிர்பார்த்ததுதான். தில்லியில் இருந்து ஸ்ரீலங்கா புறப்படு முன்னர் பிரணாப் முகர்ஜி வி.புலிகளுக்கு இந்தியா கருணை காட்டமாட்டாது எனச் சொல்லியிருந்தார். திரும்பி வந்தும் அதே கருத்தினை மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்.

வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்படி மொட்டையாகப் பேசுவார் என்றோ எகத்தளமாக நடந்து கொள்வார் என்றோ தமிழக முதல்வர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதன் காரணமாக பெப்ரவரி 15 இல் திமுக வின் செயல்குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற காலக் கெடுவை மாற்றி இப்போது பெப்ரவரி 3 இல் திமுக செயல்குழு கூடும் என திமுக வின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சியின்; ஆட்சியல்ல. பல கட்சிகளை உள்ளடக்கிய சனநாயக முற்போக்கு கூட்டணியே (Democratic Progressive Alliance) அங்கு பதவியில் இருக்கிறது. 2004 இல் நடந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் திமுக தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதனால் மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 12 அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் திமுக 20 உறுப்பினர்களையும் பாமக 6 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

ஒரு குறைந்தபட்ச நிகழ்சி நிரலின் கீழ்த்தான் மத்திய அரசு ஆட்சி செய்கிறது. அந்த குறைந்தபட்ச நிகழ்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு பிரணாப் முகர்ஜி தலைமையிலான ஒரு குழு இயங்குகிறது. அதில் திமுக சார்பாக கப்பல் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் என இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

சனநாயக முற்போக்கு கூட்டணியின் குறைந்த பட்ட நிகழ்சிநிரலில் தமிழீழ தமிழ்மக்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஒன்றுபட்ட ஸ்ரீலங்காவில் தமிழ்மக்களினதும் சிறுபான்மை மதத்தவரினதும் நியாயமான வேட்கைகளையும் நிறைவு செய்யும் வண்ணம் ஸ்ரீலங்காவில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சனநாயக முற்போக்கு கூட்டணி ஆதரவு நல்கும்.”

The UPA will support peace talks in Sri Lanka that fulfil the legitimate aspirations of Tamils and religious minorities within the territorial integrity and solidarity of Sri Lanka.” (UPA’s Common Minimum Programme) 

ஆனால் நடைமுறையில் இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தையில் இருந்து ஒதுங்கியே இருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கிய மகிந்த இராசபக்சா அந்தப் பேச்சு வார்த்தைக்கு அடிகோலிய போர் நிறுத்த உடன்பாட்டை கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் கிழித்தெறிந்த போது இந்தியா அதுபற்றி மூச்சே விடவில்லை. அதுமட்டுமல்ல அதன்பின்னர் மகிந்த இராசபச்சே தமிழீழத்தின் மீது மேற்கொண்ட படையெடுப்பிற்கு இந்தியா ஒல்லும் வகையிலும் ஆதரவு நல்கியது. ஆயுததளபாடங்கள், போர்க்கப்பல்கள், இராடார்கள், தொழில்நுட்பாளர்கள், புலனாய்வு, கண்காணிப்பு, பாகிஸ்தானிடம் இருந்த ஆயுதங்கள் வாங்க கடனுதவி வழங்கியது.

எனவே தமிழீழ மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் போது வி.புலிகளுக்கு இந்தியா கருணை காட்டாது என்று சொல்லிக் கொண்டு அந்த மக்களின் இனப்படுகொலைக்கு இந்திய மத்திய அரசு துணை போவது மிகப் பெரிய இரண்டகமாகும். மேலும் தமிழக சட்டமன்றம் ஒன்றொக்கு மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றியும் அவை பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது மத்திய அரசு நடந்து கொள்வது தமிழக முதல்வரை அவமானப் படுத்தியதோடு அவரை ஒரு இக்கட்டான அரசியல் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தமி;ழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமை தாங்கும் வி.புலிகளையும் மனம், மொழி இரண்டினாலும் முக்காலமும் ஆதரிக்கும் வைகோ தலைமையிலான மதிமுக, மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பாமக, தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள், தா.பாண்டியன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பழ நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்ம் ஆகியன “தமிழர் பாதுகாப்புப் பேரவை” என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கியுள்ளார்கள். முதல் நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் உண்ணா நோன்பு இருக்க முடிவு செய்துள்ளார்கள்.

அண்மைக்காலமாக 1983 ஆம் ஆண்டளவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக வீசிய அலைக்கு ஒப்ப ஒரு ஆதரவு அலை தமிழகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. இந்திய மத்திய அரசு ஏதாவது செய்யும் என்ற அரைகுறை நம்பிக்கையை வைத்திருந்தவர்களும் இப்போது ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவ – மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசைக் கண்டித்தும் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும் ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள்; வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆங்காங்கே உண்ணா நோன்புப் போராட்டம் நடத்துகிறார்கள். தியாகராயர் கல்லூரி மாணவர்கள், நியூ கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மன்றோ சிலை முன்பு சாலை மறியல் செய்தனர். பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதே போல் கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், ஈரோடு, வேலூர், தஞ்சை மாணவ – மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவ – மாணவிகள் குதித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றக் கோரி கும்பகோணத்தில் நேற்று சட்டவாதிகள் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். . மயிலாடுதுறையில் இருந்து நெல்லை சென்று கொண்டு இருந்த பயணிகள் தொடர்வண்டியை அவர்கள் மறித்தனர். இதையொட்டி, 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சில மாணவர்கள் இராசபகசாவின்; உருவப்பொம்மையை எரிப்பதற்காக எடுத்து வந்தனர். காவல்துறை அந்த உருவபொம்மையைப் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். ஆனால் சட்டக்கல்லூரிக்கு நேற்று திடீர் என விடுமுறை விடப்பட்டு அது மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் வெளியிட்டு இருந்தார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வளாகத்தில் சட்டவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென நீதிமன்ற வளாகம் அருகே சிலர் சோனியா காந்தியின் கொடும்பாவியை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மக்களின் கோபம் இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவி மீதும் பாய்ந்திருப்தை .இந்தப் போராட்டம் காட்டுகிறது. இது ஒரு முக்கிய திருப்பமாகும்.

அண்மையில் வைகோ தலைமையிலானன மதிமுக ஆட்சியாளர்களின் அலுவலகம் முன்பு நாடுதழுவிய போராட்டம் நடத்தியது.

மதுரை சட்டக் கல்லூரியில் நேற்று 20 மாணவர்கள் கூடித் தேசியக் கொடியை அகற்றி விட்டு கருப்புக் கொடியை ஏற்ற முயன்றனர். முதல்வர் ராதாகிருஷ்ணன் நாயர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வர் சின்னப்பா தலைமையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கபப்ட்டது. கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் வலுத்து வரும் மாணவர் போராட்டம் காரணமாக பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மாணவர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருவதால் தமிழகத்தில் ஒரு பதட்ட நிலை உருவாகியுள்ளது.

இதன் உச்சகட்டமாக தமிழ் உணர்வாளர் முத்துக்குமார் இன்று தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்தச் செய்தி தமிழகத்தைக் கொதிநிலைக்குத் தள்ளியுள்ளது. அவரது சாவை விட அவர் தன் கைப்பட எழுதிவைத்துச் சென்றுள்ள அவரது சாவுப் பட்டயம்தான் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முத்துக்குமார் வீசியுள்ளார். இந்த சாவுப் பட்டயத்தை ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களும் படித்து மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.

முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தை நாம் விரும்பாவிட்டாலும் அதன் பின்னால் உள்ள தமிழின உணர்வை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அது சொல்லும் செய்தியை மறந்துவிடக் கூடாது. 1965 ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முத்துக்குமாரைப் போலப் பலர் தீக்குளித்தனர்.

எப்பக்கம் வந்திடும் இந்தி எத்தனை பட்டாளம் அது கூட்டி வரும் என 1965 இல் எழுப்பிய முழக்கந்தான் 1967 இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியதற்கு வழிகோலியது. இதனை நிச்சயம் தமிழக முதல்வர் அசை போட்டுப் பார்ப்பார் என நம்புகிறோம்.

தமிழீழ விடுதலை போராட்டம் பற்றியும் தமிழீழத்தில் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் செய்யாத சனநாயக முற்போக்குக் கூட்டணியிலும் அதன் ஆட்சியிலும் தொடர வேண்டுமா? இல்லையா? என்ற முடிவை தமிழக முதல்வர் எடுக்கும் காலம் இன்று கனிந்துள்ளது.

திமுக சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டால் மத்திய அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்துவிடும். அதனால் அது கவிழும் வாய்ப்பு எழும். அத்தோடு தமிழகத்தில் அந்தக் கூட்டணி காணாமல் போய்விடும். அதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இல்லையேல் அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டி நேரிடும்.

இதே சமயம் திமுகவுக்கு சட்ட மன்றத்தில் வழங்கும் ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ளலாம். அப்படி விலக்கிக் கொண்டாலும் திமுக ஆட்சி கவிழும் வாய்ப்புக் குறைவாகவே இருக்கும். காரணம் பாமக கட்சியின் நிறுவனர் திமுக அரசுக்கு கொடுக்கும் ஆதரவு தொடரும் எனக் கூறியுள்ளார்.

எங்கே தான் தனித்துப் போக நேரிடுமோ என்ற அச்சம் காரணமாகமே மாங்கொல்லைப் பொதுக் கூட்டமும் (ஒக்தோபர் 06) அதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டமும் (ஒக்தோபர் 14) மனிதசங்கிலிப் போராட்டமும் (ஒக்தோபர் 24) இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இறுதித் தீர்மானம் உட்பட மூன்று தீர்மானங்களை முதல்வர் சட்டசபையில் முன்மொழிந்தார். மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை தில்லி சென்று நேரிலும் வற்புறுத்தினார். ஆனால் அவரது முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்துவிட்டன.

தமிழீழ மக்கள் தொடர்பாக மட்டுமல்ல திமுகவின் நட்சத்திரத் திட்டமான சேது கால்வாய்த் திட்டத்தையும் இராமருக்குப் பயந்து மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. ஆறமாதத்தில் சேது கால்வாய்த்திட்டம் முற்றுப் பெறும் என்று அமைச்சர் டி.ஆர். பாலு சென்ற ஆகஸ்டில் மார் தட்டினார். அந்த ஆறுமாதம் இப்போது முடிவடைந்து விட்டது.

இன்று தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார். இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது. (Ulagathamilar January 29,2009)


அமெரிக்காவின் புதிய ஆட்சித்தலைவர் ஒபாமா மாற்றத்தைக் கொண்டு வருவாரா?

அமெரிக்க நாட்டின் வரலாற்றில் சனவரி 20 ஆம் நாள் ஒரு பொன்நாள் என்பதில் எந்த அய்யமும் இல்லை.

ஒரு கறுப்பர் – கென்யா நாட்டு கறுப்பு ஆபிரிக்க தந்தைக்கும் வெள்ளை அமெரிக்க தாயக்கும் பிறந்த பராக் குசேன் ஓபாமா “அமெரிக்காவில் எதுவும் சாத்தியம்’ என்பதை எண்பிப்பது போல உலக வல்லரசான அமெரிக்காவின் 44 ஆவது ஆட்சித்தவைராகப் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் 47 அகவை நிரம்பிய ஒபாமா சாதனை படைத்துள்ளார். பதவி ஏற்பு விழாவை கண்டு களிக்க இலிங்கன் சதுக்கத்தில் இருபது இலட்சம் மக்கள் கடும் குளிரிலும் குழுமியிருந்தார்கள். அவர்களுக்காக வாஷிங்டன் நகரம் முழுவதும் 5 ஆயிரம் நகரும் கழிப்பிட வாகன வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஒரு நாட்டின் இளவரசருக்கு முடிசூட்டு விழா எப்படி நடக்குமோ அதே பாணியில் ஒபாமாவின் பதவியேற்புச் சடங்கு 150 மில்லியன் டொலர்கள் செலவில் நடந்துள்ளது. பத்தாயிரம் காவல்துறையினர், 32>000 படையினர், ஆயிரக்கணக்கான உளவுப் படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ஒபாமா அமர்ந்திருந்த இடம் குண்டு துளைக்காத கண்ணாடியால் சூழப்பட்டிருந்தது. ஒபாமாவும் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தார். வாஷிங்டன் நகரம் மீது அத்துமீறிப் பறக்கும் விமானங்களை சுட்டுத்தள்ள 10 போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப் பட்டிருந்தன.

பதவியேற்பு விழாவுக்கு மொத்தம் 150 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது. இதில் 40 விழுக்காடு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவாகும். பதவியேற்பு நிகழ்ச்சியை உலகம் முழுவதிலும் உள்ள. 100 கோடிக்கும் மேலானவர்கள் கண்டு களித்தனர்.

உலகுக்கே தலைவர் என்ற பெருமையுடன் ஒபாமா வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளார். இந்த மாளிகைக்குள் குடியேறும் முதல் கருப்பர் ஒபாமா தான். 132 அறை 35 குறியலறை கொண்ட இந்த வெள்ளை மாளிகையை வியர்வை சிந்திக் கட்டியவர்கள் கறுப்பு இன அடிமைகள் ஆவர்.

அமெரிக்காவின் ஆட்சித்தலைவராக பராக் ஒபாமா பதவி ஏற்றிருப்பது கறுப்பர்களின் மனிதவுரிமைகளுக்கு அயராது பாடுபட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட மாட்டின் லூதர் கிங் அவர்களது கனவை மெய்ப்பித்துள்ளது. 1963 இல் “எனக்கொரு கனவு உண்டு’ (I have a dream)  என்று மார்ட்டின் லூதர் கிங் இலிங்கன் சதுக்கத்தில் இருந்து தான் தெரிவித்திருந்தார்.

ஒபாமாவின் தெரிவு அமெரிக்காவின் 22 மில்லியன் கறுப்பர்களுக்கு ஒரு புதிய உயர்வினைத் தேடிக் கொடுத்துள்ளது. அமெரிக்காவில் கறுப்பு இனத்தவருக்கு 1960 ஆம் ஆண்டுவரை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையே இருக்கவில்லை.

ஒபாமாவுக்கு நீண்ட கால அரசியல் வரலாறு கிடையாது. கடந்த 2004, நொவெம்பர் மாதத்தில்தான் இலினோய் (Illinois) மாநிலத்திலிருந்து அமெரிக்க மேலவை (Senate)  உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் இலினோய் மாநில மேலவை உறுப்பினராக 1997 – 2004 வரை இருந்தி;ருக்கிறார். 2004 ஆம் ஆண்டு அமெரிக்க கீழவை (House of Repsentatives)  உறுப்பினர் பதவிக்குப் போட்டி போட்டபோது அதில் அவர் வெற்றி பெறவில்லை. 2004 இல் நடந்த மக்களாட்சிக் கட்சியின் மநாட்டில் பராக் ஒபாமா ஆற்றிய உணர்ச்சிகரமான உரைதான் அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி என்பதை அமெரிக்காவுக்கு இனம் காட்டியது.

ஒபாமாவின் தந்தை ஒபாமா ஒரு முஸ்லிம். தாய் (Ann Dunham) ஒரு கிறித்தவர். இருவரும் 1961 இல் திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து திருமண முறிவு இடம்பெற்றது. அதன் பின்ன ஒபாமாவின் தாய் ஹவாயில் படித்துக் கொண்டிருந்த ஒரு இந்தோனிசிய நாட்டவரை (Lolo Soetoro) மறுமணம் செய்து கொண்டார். ஒபாமா பத்து அகவை வரை இந்தோனிசியாவில் படித்தார். அதன் பின் ஹவாய் திரும்பி அவரது தாய்வழிப் பாட்டி – பாட்டன் (Madelyn and Stanley Armour Dunham) ஆகியோரால் வளர்க்கப்பட்டார். ஒபாமா தனது தந்தையை ஒரு முறைதான் பார்த்திருக்கிறார். தந்தை 1981 இல் ஒரு ஊர்தி விபத்தில் இறந்து போனார்.

எனவே அமெரிக்காவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எந்தத் தலைவர்களையும் விட இனம்> மதk;> நாடு கடந்த கோணத்தில் பார்க்கும் பரந்த பார்வை ஓபாமாவிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது. இருபது மணித்துளிகள் நீடித்த தனது பதவி ஏற்புரையில் “ கிறிஸ்தவர்> முஸ்லிம்கள்> யூதர்கள்> இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா” என ஆணித்தரமாகச் சொன்னார். ஒரு வெள்ளை ஆட்சித்தலைவர் இப்படிக் கூறியிருக்க முடியாது.

பராக் ஓபாமா ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். யோர்ஜ் புஷ்ஷின் மடத்தனமான ஆளுகையின் காரணமாக அமெரிக்கா இரண்டாவது உலகப் போரின் பின் வரலாறு காணாத பொருளாதார சரிவுக்குள் அமிழ்ந்துள்ளது. பொருளாதார தேக்கம் காரணமாக 2.7 மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ளார்கள். டிசெம்பர் மாதத்தில் மட்டும் வேலை இழந்தோர் தொகை 524>000 ஆகும். வேலையில்லாதோர் விழுக்காடு 7.2 ஆக உள்ளது. இந்த விழுக்காடு விரைவில் 9 ஆக உயரக் கூடுமாம். புதிய ஆட்சித்தலைவர் 3 மில்லியன் வேலை வாய்ப்பை உருவாக்கப் போவதாக உறுதி கூறியிருக்கிறார். அது பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2008 இல் வரவு – செலவுத் திட்டத்தில் 500 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது போன்ற பற்றாக்குறை அமெரிக்காவின் பொதுக் கடனை (Public Debt) 6.7 திரில்லியனாக (1000 பில்லியன் ஒரு திரில்லியன்) உயர்த்தியுள்ளது. இது மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. சீனாவுக்கு மட்டும் ஒரு திரில்லியன் கடன் கொடுக்க வேண்டியுள்ளது.

அமெரிக்கா முகம் கொடுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கு இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் யோர்ஜ் புஷ் மேற்கொண்ட படையெடுப்புக்களே காரணமாகும். இராக்கில் மட்டும் அமெரிக்கா கடந்த 6 ஆண்டுகளில் 500 பில்லியன் டொலர்களை கரியாக்கியுள்ளது. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு அமெரிக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் இலவச மருத்துவ வசதி செய்து கொடுத்திருக்கலாம். பள்ளி தொடக்கம் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இலவச கல்வி வசதியை நல்கியிருக்கலாம்.

பொருளாதார தேக்கத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்க காங்கிரஸ் 825 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இதற்கு மேலாக ஒபாமா 300 பில்லியன் பெறுமதியான வரிக் குறைப்பை மத்தியதர குடும்பங்களுக்கு அளிக்கப் போவதாகச் சொல்கிறார்.

பராக் ஒபாமா தனது ஏற்புரையில் தனது ஆட்சியின் கோட்பாடுகளை கோடுகாட்டியிருந்தார்.

“நாம் இன்று முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் அறைகூவல்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல அறைகூவல்கள் உள்ளன. அவற்றை எளிதாகவோ அல்லது குறைந்ததொரு காலப்பகுதிக்குள்ளோ தீர்க்க முடியாது. எனினும் இவற்றை அமெரிக்காவால் சந்திக்க முடியும்.

அமெரிக்கா இன்று பெரும் நெருக்கடிக்கள் ஆழ்ந்துள்ளது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். எமது தேசம் வன்முறைக்கும் வெறுப்புக்கும் எதிரான போரில் ஈடுபட்டுள்ளது. சிலரது அவா மற்றும் பொறுப்பற்ற நடத்தை காரணமாகவும் எமது பொருளாதாரம் பலவீனப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல தேசத்தை ஒரு புதிய யுகத்துக்கு இட்டுச் செல்ல வில்லங்கமான முடிவுகளைக் கூட்டாக எடுக்கத் தவறிவிட்டோம். வீடுகள் பறிபோயுள்ளன. வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. வணிகங்கள் முடப்பட்டுள்ளன. எமது உடல்நல பராமரிப்புச் செலவு மிகவும் ஒறுப்பானது. எமது பள்ளிக்கூடங்கள் தோல்வி அடைந்துள்ளன.

இன்றைய நாளில் மோதலுக்கும் வேற்றுமைக்கும் பதிலாக ஒற்றுமையையும் அச்சத்திற்குப் பதில் நம்பிக்கையையும் தேர்ந்தெடுத்துள்ளோம். அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப நாம் எம்மை அணியம் செய்ய வேண்டும். இன்றைய நாளில் நாம் எங்களுக்குள் இருக்கும் அற்ப மனத்தாங்கல்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் எமது அரசியலை நெரிக்கும் தேய்ந்து போன பழைய சித்தாந்தங்களையும் ஒழிக்க முடிவுசெய்துள்ளோம்.

பணக்காரர்களுக்கு மட்டும் தான் ஒரு நாடு என்றால் அது மேலும் வளர்ச்சி பெறமுடியாது. அந்த வளர்ச்சியின் பலனை எல்லோருக்கும் கொடுத்தால் தான் நாம் முழு வெற்றி பெற முடியும்.

எமது பயணமானது குறுகிய பாதைகளையோ அல்லது குறுகிய தூரத்தையோ கொண்டதல்ல. அது கடினமானதும் துன்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. சிலர் மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதேநேரம் பலர் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்குகின்றனர்.

எமது இலட்சியங்களை விட அமெரிக்கா மிகவும் பெரியது, சிறந்ததொரு வாழ்க்கைக்காக ஆண்கள், பெண்கள் என ஒவ்வொரு அமெரிக்கர்களும் தங்களது கடினமான உழைப்பை நாட்டுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் நாம் தொடர்ந்தும் செழிப்புள்ளவர்களாகவும் இந்த உலகில் பலமிக்க நாடாகவும் திகழலாம்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை நாம் அனைவரும் துணிவுடன் எதிர் கொள்ள வேண்டும். புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது மட்டுமன்றி அபிவிருத்திக்கான அடித்தளத்தையும் இடவேண்டும்.

ஞாயிறையும் காற்றையும் மண்ணையும் எமது ஊர்தி;களுக்கான எரிபொருட்களாக்கி எமது தொழிற்சாலைகளை இயங்கச்செய்ய வேண்டும். எதிர்காலத்தில் தேவைகளுக்கேற்ப எமது பாடசாலைகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் மாற்ற வேண்டும். இவற்றையெல்லாம் எம்மால் செய்ய முடியுமென்பதுடன் இவற்றையெல்லாம் செய்யவும் வேண்டும்.

அமெரிக்கக் குடிமக்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் கடமைகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொருவருக்கும் பொறுப்புணர்வு தேவை. பயங்கரவாதத்தை வீழ்த்தி, புதிய வரலாற்றை உருவாக்குவோம்.

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப்படுவர். ஈராக் நாடு ஈராக் மக்களளிடமே ஒப்படைக்கப்படும். ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதி உருவாக்கப்படும்.

முஸ்லிம் உலகைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் முன்னேற்றகரமான உறவைப் பேண விரும்புகின்றோம்.

அதேவேளை, உலகில் பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபடுவோருக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுமென்பதை அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அமெரிக்காவில் அனைத்துச் சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லீம்களை அமெரிக்கா விரோதியாகப் பார்க்கவில்லை. ஒற்றுமையாகப் பாடுபட்டு அதில் வெற்றி கண்டு அமெரிக்காவின் புகழுக்கும் பெருமைக்கும் மேலும் வலுச் சேர்ப்போம்.

எங்களது படை வலிமை மட்டும் எங்களைக் காப்பாற்றாது. அது மட்டுமல்ல எமது படை வலிமை நாம் விரும்பியது போல் செய்வதற்கு உரிமையையும் தந்துவிடாது.

எல்லா சமூக நோய்களுக்கும் மேற்கு நாடுகள் மீது குற்றம் சுமத்தும் அல்லது உலக அளவில் மோதல்களை விதைக்கும் உலகத் தலைவர்களுக்கு நான் சொல்லக் கூடியது “மக்கள் நீங்கள் எதை அழிக்கப் போகிறீர்கள் என்பதை அல்ல எதைக் கட்டியெழுப்பப் போகிறீர்கள் என்பதை வைத்துத்ததான் உங்ளை எடைபோடுவார்கள்.”

முஸ்லிம் உலகத்துக்கு ஒன்று சொல்ல விரும்புகிறோம். உங்களோடு ஒருவாக்கொருவரது நலன் மற்றும் ஒருவர்க்கொருவரது மதிப்பின் அடைப்படையில் ஒரு புதிய அணுகுமுறையை கைக்கொள்ள விரும்புகிறோம். (“To the Musim world world, a new way forward based on mutual intererest and mutual respect”)

நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும் அமைதியுடனும் நமது வெற்றிகளைப் படைப்போம். அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.

ஒபாமாவின் பேச்சில் துணிச்சலும் தெளிவான கொள்கைகளையும் காண முடிகிறது. “நாம் சந்திக்கும் சவால்கள் உண்மையானவை. கடுமையானவை. இவற்றுக்குத் தீர்வு காண முடியும். அது நம்மால் முடியும். பணக்காரர்களுக்கு மட்டும் தான் ஒரு நாடு என்றால் அது மேலும் வளர்ச்சி பெறமுடியாது. அந்த வளர்ச்சி பலனை எல்லோருக்கும் கொடுத்தால் தான் நாம் முழு வெற்றி பெற முடியும்’ என்று ஒபாமா கூறிய போது முன்னாள் அதிபர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

ஒபாமாவின் பேச்சு எல்லாம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் நடைமுறையில் எந்தளவுதூரம் அதனை நடைமுறைப்படுத்துவார் என்பது அய்யத்தோடு பார்க்கப்படுகிறது.

மும்பை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்த ஒபாமா காசா தாக்குதலைக் கண்டிக்கவில்லை. காசா மீது இஸ்ரேல் ஒரு முழு அளவிலான படையெடுப்பை மேற்கொண்ட போது ஒபாமா வாயே திறக்கவில்லை. இதனால் அரபு நாட்டு மக்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. காசா தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

பதவியேற்ற முதல்நாளே ஒபாமா அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். கவுந்தமானா சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு எதிரான இராணுவ நீதிமன்றங்களின் விசாரணையை 120 நாட்களுக்கு பிற்போடும் படி உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆண்டுக்குள் அந்த முகாமை மூடிவிடுடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தனது ஆட்சி வெளிப்படையாக இருக்கும் – இருக்க வேண்டும் என வெள்ளைமாளிகை பணியாளர்களுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளார்.

“சட்டத்தின் ஆட்சியையும் மனிதனது உரிமைகளையும் நிலைநாட்டுவோம்.” என்று கொடுத்த வாக்குறுதிகளுக்கு இணங்க சாதாரண நீதிமன்றங்களில் பொதுவான சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப் பட்டோர் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு நீதி வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

இராக்கில் இருந்து படைகளை 16 மாதங்களில் திருப்பி அழைக்க முடிவு செய்துள்ள ஒபாமா அந்தப் படைகளை ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுகளுக்கு எதிரான போருக்கு அனுப்ப இருக்கிறார். இதனால் அமெரிக்கா ஒரு படுகுழியில் இருந்து வெளியேறி இன்னொரு படுகுழிக்குள் விழப் போகிறது. புஷ் விட்ட அதே பிழையை ஒபாமாமும் விடப்போகிறார் போல் தெரிகிறது.

இராக், ஆப்பானிஸ்தான் மீது அமெரிக்கா மேற்கொண்ட போர் காரணமாகவே இன்று அது பொருளாதார தேக்கத்துக்குள் சிக்கித் தவிக்கிறது. அதன் மக்களாட்சிக் கோப்பாடுகளும் மனிதவுரிமைகளும் படிமமும் கந்தறுந்து போயுள்ளன.

“நாங்கள் பாதுகாப்புக்கும் எங்களது கொள்கைக்கும் இடையில் தேர்வு இருக்கிறது என்பதை நிராகரிக்கிறோம்” எனச் சொல்லும் ஒபாமா தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அமெரிக்கா பயங்கரவாதம் எனச் சித்தரிப்பதை கைவிடுமா? அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையிலும் பயங்கரவாதம் என்ற வரைவிலக்கணத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர ஒபாமாவால் முடியுமா? வெளியுறவுச் செயலர் ஹிலாரி ஹிலின்டனால் முடியுமா?

அமெரிக்காவின் பயங்கரவாத வரைவிலக்கணத்தைப் பயன்படுத்தித்தான் சிங்கள – பவுத்த வெறிபிடித்த சிறிலங்கா அரசு ஒரு முழு அளவிலான இனப்படுகொலையை தமிழீழத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை ஒபாமா புரிந்து கொள்ள வேண்டும். இந்த இனப்படுகொலைக்கு அமெரிக்கா ஆயுதங்கள், கப்பல்கள் பயிற்சி, உளவு, புலனாய்வு, நிதி கொடுத்து உதவுகிறது.

“கடவுள் எல்லோரையும் சமமாகவே படைத்துள்ளார். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ எல்லோருக்கும் வாய்ப்பும் உரித்தும் இருக்கிறது” எனச் சூளுரைக்கும் ஒபாமா அந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை தமிழீழத் தமிழர்களுக்கும் பெற்றுத் தரக் கடமைப் பட்டுள்ளார். (Ulagathamilar – January 20,2009)


 

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply