முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 614 ஏக்கர் நிலத்துக்கு   அனுமதிப் பத்மிரம் வழங்கச் சம்மதம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 614 ஏக்கர் நிலத்துக்கு   அனுமதிப் பத்மிரம் வழங்கச் சம்மதம்

தயாளன்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்பங்களின் 614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணி­ மற்றும் 800 ஏக்கர் வயல்நிலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினருடனான கலந்துரையாடல் நவம்பர் 9ம் திகதி இடம்பெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்பங்களின் 614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணிப் பிணக்­கு­கள் தீர்க்­கப்­பட வேண்­டும். பெரும்­பான்மை மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் காணி­கள் மீண்­டும் தமக்கே வழங்க வேண்டும் என நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.Image result for முல்லைத்தீவு மாவட்டம்

இது தொடர்பில் மகாவலி இராஜாங்க அமைச்சர் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 614 ஏக்கருக்கும் தீர்வாக அனுமதிப் பத்மிரம் வழங்க சம்மதம் வழங்கியதோடு 835 ஏக்கர் தொடர்பில் தீர்வையெட்டும் வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலாளர் உள்ளிட்ட சகலதரப்பும் அமைச்சர் தலமையில் கலந்துரையாடலுற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த கலந்துரையாடல் நீண்ட காலமாக தடைப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 9ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்.

கொக்­கி­ளாய் கிழக்கு, கொக்­கி­ளாய் மேற்கு, கரு­நாட்­டுக்­கேணி, கொக்­குத்­தொ­டு­வாய் தெற்கு மற்­றும் கொக்­குத்­தொ­டு­வாய் மத்தி ஆகிய கிராம அலு­வ­லர் பிரி­வி­லுள்ள மக்­க­ளுக்குச் சொந்­த­மான எரிஞ்­ச­காடு, குஞ்­சுக்­கால் வெளி, வெள்­ளைக் கல்­லடி போன்ற மானா­வரி வயல்­வெ­ளி­க­ளும், அடை­ய­க­றுத்­தான், தொண்­ட­கண்­ட­கு­ளம், பூம­டு­கண்­டல், உந்­த­ரா­யன்­கு­ளம், ஆமை­யான்­கு­ளம், கூமா­வ­டி­கண்­டல் வெளி போன்ற நீர்ப்­பா­சன வயல் வெளி­க­ளும் 1952 மற்­றும் 1980ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்தால் குறித்த மக்­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­தி­ரம் வழங்­கப்­பட்ட வயல் காணி­க­ளா­கும். அதன்­பின்பு 1984ஆம் ஆண்டு ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­யால் அனைத்து மக்­க­ளும் இடம்­பெ­யர்ந்­த­னர்.

இந்­த­வே­ளை­யில் 1988.04.15 மற்­றும் 2007. 03.09 ஆம் திக­திய வர்த்­த­மா­னிப் பிர­சு­ரத்­தில் குறித்த பிர­தே­சம் ‘மகா­வலி ‘‘ஸி’’ வல­யம் என பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது குறிப்­பி­ டத்­தக்­கது. இடப்­பெ­யர்­வின் பின் மீண்­டும் 2011ஆம் ஆண்டு தமது பிர­தே­சங்­க­ளில் மக்­கள் மீள் குடி­ய­மர்ந் துள்­ள­னர்.

எனி­னும் இவ்­வா­றான தொடர்ச்­சி­யான இடப்­பெ­யர்­வின் கார­ண­மாக குறித்த மக்­க­ளி­டம் இருந்த அனைத்து ஆவ­ணங்­க­ளும் தொலைக்­கப்­பட்­டுள்­ளன.Image result for முல்லைத்தீவு மாவட்டம்

ஆனால் தற்­பொ­ழுது 614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணி­க­ளுக்­கச் சொந்­த­மான 164 குடும்­பங்­க­ளுக்கு 2013/01 சுற்று நிரு­பத்­துக்­க­மைய தொலைந்த உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­க­ளுக்­குப் பதி­லாக புதிய உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­டா­துள்­ளன.

ஆயன்­கு­ளம், முந்­தி­ரி­கைக்­கு­ளம், மறிச்­சுக்­கட்­டுக்­கு­ளம் போன்ற குளங்­க­ளின் கீழுள்ள 225 தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 835 ஏக்­கர் நீர்ப்­பா­சன வயல்­கா­ணி­கள் இந்­தப்­பி­ர­தே­சங்­க­ளில் குடி­ய­மர்த்­தப்­பட்ட சிங்­கள மக்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. முன்­னர் வழங்­கப்­பட்ட இந்­தக் காணி­க­ளுக்­குச் சொந்­த­மான தமிழ்­மக்­கள் தமது வாழ்­வா­தா­ரத்­துக்­கான காணி­களை இழந்த நிலை­யில் மிக­வும் வறு­மைக்­கோட்­டின் கீழ் வாழ்­கின்­றார்­கள்.

எனவே 2013/01 சுற்­று­நி­ரு­பத்­துக்­க­மை­ வாக உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­டாத 164 குடும்­பங்­க­ளின் 614 ஏக்­கர் மானா­வாரி வயல்­கா­ணி­க­ளுக்­கான உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

தற்­போது சிங்­கள மக்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்ள 225 குடும்­பங்­க ­ளின் 835 ஏக்­கர் நீர்ப்­பா­சன வயல்­கா­ணி­கள் மீள­வும் முன்­னர் வழங்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு வழங்கப்பட முடியாது எனவும் அதற்குப் பதிலாளக அதிகார சபையின் கீழ் உள்ள மாற்றுக்காணிகளே வழங்க முடியும் என வெலிஓயாவில் உள்ள மகாவலி அதிகார சபைநின் இணைப்பு அலுவலக அதிகாரி அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 

Be the first to comment

Leave a Reply