அரசியல் கைதிகளுக்கு  அச்சுறுத்தல் எனில் சாட்சிகளிற்கு  பாதுகாப்பை வழங்கி வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டும்!

 சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் எனில் அவர்களுக்கு  பாதுகாப்பை வழங்கி வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டும்!

சுமந்திரன் கோரிக்கை சட்டமா அதிபரால் நிராகரிப்பு! 

போராட்டத்துக்கு தேசியக் கூட்டமைப்பும்  ஆதரவு! 

அனுராதபுரம் சிறையில்  உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல் கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளுக்கு  அச்சுறுத்தல் எனில் அவர்களுக்கு  பாதுகாப்பை வழங்கியேனும் வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டுமே அன்றி அனுராதபுர நீதிமன்றிற்கு  மாற்றுவது தீர்வாகாது என்பதனை சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.ஆ.சுமந்திரன்  தெரிவித்தார்.

இது தொடர்பில் நானாளுமன்ற உறுப்பினர் மேலும்  தெரிவிக்கையில்,

அனுராதபுரம் சிறையில்  3 அரசியல் கைதிகள் தொடர்ந்தும் 11 நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகள் கோருவது உடனடி விடுதலையல்ல . தமக்கான வழக்கினை தமக்கு புரியும் மொழி பாவனையில் உள்ளதும்  தம்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிகழ்ததாகக் கூறப்படும்  பிரதேசத்திற்கான நீதிமன்றில் குறித்த வழக்கினை நடாத்துமாறே கோருகின்றனர் என்பதனை சுட்டிக்காட்டினேன்.

இருப்பினும் இதற்கு சட்டமா அதிபர் சாதகமான பதிலினை வழங்கவில்லை. மாறாக  வழக்குக்கான  சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதனால் அவ்வாறு மேற்கொள்ள முடியாது என்றே பதிலளித்தார். இதற்கு மாற்று  யோசனையாக அச்சுறுத்தல் எனில் சாட்சிகளிற்கு  பாதுகாப்பை வழங்கி வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டும், மாறாக அனுராதபுரம் நீதிமன்றிற்கு  மாற்றுவது தீர்வாகாது என்தனையும் தெரிவித்தேன்.

இவற்றிற்கான சாதகமான பதில் கிடைக்காதமையினால் இன்றைய தினம் இக் கைதிகளிற்காக இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றது என்றார்.

About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply