தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!  

குரு – சீடன்

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!  

திருமகள்

சீடன் – முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்ட
கண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை…
பரவாயில்லை..புலத்துத் தெருக்களில் தேர் இழு!

உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல் கைவிட்டது
பன்னாட்டுக் குரங்குகள் மட்டுமல்ல – உன்
அப்பனும் ஆத்தையும் அழுது கும்பிட்ட சாமிகளும்தான்!

ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரைத் தேற்றாமல்விட்ட
தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!

இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை – கவனம்
அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து……………..

குரு – என்ன புதுக் கவிதை ஒன்றை அவிட்டுவிடுகிறாய்? உனக்கு புதுக் கவிதை கைவரும் என்பது
எனக்குத் தெரியாதே? இது யாருடைய கவிதை?

சீடன் – கவிதை எழுதியது யார் என்ற ஆராய்ச்சி வேண்டாம். கவிதையில் உள்ள கருத்தைக் கவனியுங்கள்! தங்கத்தேர், வெள்ளித்தேர் இழுத்தால் பாவம் தொலைந்து பணம், பதவிகள் பாய்ந்து தேடி ஓடி வரும் என்கிறார்கள். பக்தி என்ற பெயரால் நாக்கில் துளையிட்டு வேல் குத்துகிறார்கள். முதுகிலே கொக்கி போட்டு தேர் இழுக்கிறார்கள்.  பறவைக் காவடி என்ற பேரில் பத்துப் பதினைந்து கொக்கிகளை முதுகில் மாட்டி அந்தரத்தில் தொங்குகிறார்கள். இதுவெல்லாம் கற்கால மனிதனின் மூட நம்பிக்கைகள் என சிவவாக்கியார் என்ற சித்தர் பாடி வைத்திருக்கிறார்.

ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

ஊரிலே வாழும் பெரிய மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை இழுக்கிறீர்கள். ஒரு சிறிய உருவத்திற்கு இவ்வளவு பெரிய தேரா? நூற்றுக்கணக்கான மக்கள் உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி இருப்பது அறிவுடையமையாகுமா? இதனால் எவ்வளவு பொருள் விரயம்? எவ்வளவு நேரம் வீணாகிறது?

குரு – எத்தனை சித்தர்கள் எதைப் பாடி என்ன? ஆண்டுக்கு ஆண்டு கோயில்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. தேர், தீர்த்தத் திருவிழாக்களுக்கும் பஞ்சமில்லை! பொருளாதார தேக்கத்தினால் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. ஆனால் கோயில்கள் அப்படியில்லை. பக்தி வணிகம் ஓகோ என்று நடக்கிறது.

சீடன் – சரியாகச் சொன்னீர்கள். மழைக்கு முளைக்கிற காளான்கள் போல் ரொறன்ரோவில் எக்கச்சக்கமான கோயில்கள் கடந்த இருபது ஆண்டு காலத்தில் முளைத்துவிட்டன! எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டதாம். ஒவ்வொரு கோயிலிலும் தேர்த் திருவிழா மட்டுமல்ல. சப்பரத் திருவிழா, வேட்டைத் திருவிழா,  மாம்பழத் திருவிழா…………… இப்படி ஏகப்பட்ட  திருவிழாக்கள். ஒவ்வொரு திருவிழாவுக்கும் குறைந்தது மூவாயிரம் டொலர்கள் செலவாகும்! இதைவிட கோடி நாம அருச்சனை, விளக்குப் பூசை என்று பணம் கறந்து விடுகிறார்கள்!  ஆதி பராசக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, அம்பாள், முருகன், வினை தீர்க்கும் வினாயகர் இவர்களைத்  தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும்  பாவம் தொலையும் அருள் கிடைக்கும் என இங்குள்ள செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில்  அட்டகாசமான விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்!

குரு – இதை ஆங்கிலத்தில் Multi-level Marketing என்பார்கள்!

சீடன் – எங்கடை மக்கள் வன்னியில் பட்டினியால் வாடும் போது இங்கே கல்லுக்கும் செம்புக்கும் பால்,  மோர்,  நெய்,  தயிர், இளநீர் அபிசேகம் செய்வது அநியாயம். யாகம் செய்யும் பிராமணர்கள் அதில் விலையுயர்ந்த பட்டுச் சேலைகளை ஆகுதி கொடுக்கிறார்களாம். நரகத்தில் விழாமல் சொர்க்கலோகத்தில் சேர வேண்டுமாயின் வேள்விகளை, யாகங்களை நடத்துங்கள், பருப்பில் ஊற்றவேண்டிய நெய்யை நெருப்பில் ஊற்றுங்கள், வயிற்றில் போடவேண்டிய நவதானியங்களை நெருப்பில  போடுங்கள் என்கின்றனர். சொர்க்கத்தில் இரம்பை உண்டு, மேனகை உண்டு, ஊர்வசி உண்டு, திலோத்தமை எல்லாம் உண்டு அவர்களோடு சல்லாபித்திருக்கலாம் என ஏமாற்றுகின்றனர்.

குரு – ஏனாம்? கட்டச் சீலை இல்லை என்று மக்கள் கதறும் போது பட்டுச் சேலைகளை நெருப்பில் எரிக்லாமா? இது பெரிய அநியாயமாக இருக்கிறதே?

சீடன் – பட்டுச் சேலைகளை நெருப்பில் போட்டால் இந்திரன் மனைவி இந்திராணி மகிழ்ச்சி அடைந்து கேட்டவரம் அத்தனையும் தருவாளாம்.  யாகத்தின் போது பல திரவியங்கள் யாகத்தீயில் இடப்படுகின்றன. அவற்றினால் உண்டாகும் புகை மனித  உடலின் பல நோய்களை தீர்க்கவல்லனவாம்! ஆரியர்கள் தங்கள் வருவாய் கருதி  இப்படியான மூடநம்பிக்கைகளை தமிழர்கள்  தலையில் கட்டிவிட்டுள்ளார்கள். மூளையில்லாத தமிழர்கள் அதனை நம்பி தங்களது பொருளை வீணாக்குகிறார்கள்! கல்லைக் கடவுளாக்கி, சாணத்தைச் சாமியாக்கி குரங்கையும  நாயையும் எலியையும் தமிழர்கள் கும்பிட வைத்து விட்டார்கள்!

குரு – எந்த இந்திரனைச் சொல்கிறாய்? கௌதம முனிவரை போலவே தன்னை உருமாற்றி அகலியைக் கெடுத்த இந்திரனா? அதற்குப் பரிசாக உடல் முழுதும் ஆயிரம் யோனி பெறக்கடவை என்று கவுதம முனிவர் சபித்த இந்திரனா?

சீடன் – இதில் என்ன அய்யம் குருவே!  அவனேதான். அது போகட்டும். செல்வம் வேண்டுமா? உடல் நலம் வேண்டுமா? கிரக தோசம் நீங்க  வேண்டுமா? பிள்ளைப் பாக்கியம் வேண்டுமா?  வணிகத்தில் சிறப்படைய வேண்டுமா?  தானிய விருத்தியா? உலகில் எதுவானாலும் அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம் திருவிழா, யாகங்கள் மூலம் எம்மால் பெற்றுத் தரமுடியும்.  எமகண்டம், இராகுகாலம், கரிநாள், தேய்பிறை பார்த்து நன்னாளில் நல்ல நேரத்தில் திருமணத்தை செய்தால் துன்பம், துயரம் ஏதும் அண்டா. வந்த வினையும் விலகிப்போம்  என பிராமணர்கள் புளுகுவதை தமிழர்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.

தெய்வாதீனம் ஜகத் சர்வம்Photo de தமிழும் சித்தர்களும் Thamil.Siththars.
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை
எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும். (இருக்கு வேதம்  – 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)

குரு – பிராமணர்கள் தமிழர்களை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்வதை விட  தமிழர்கள் அவர்களிடம் ஏமாந்து போனார்கள்  எனச் சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்?

சீடன் – நீங்கள் சொல்வது உண்மை குருவே! காசி, இராமேசுவரம் போனால் முக்தி கிடைக்கும்.  கங்கையில் நீராடினால் செய்த பாவம், சொல்லிய பொய், செய்த  பித்தலாட்டம், நடத்திய கொலை,  கொள்ளை, வஞ்சகம், சூது எல்லாமே விலகிப் போய்விடும் என்கிறார்கள்.   சபரிமலையில் மகரஜோதி தானாகத் தெரிகிறது தரிசித்து முக்தி அடையுங்கள் என்கிறார்கள்.  மகரஜோதியில் மின்னிடும் பொன்னம்பல மேட்டிற்கு ஏன்  மின்சார விளக்குகள் என்று பக்தர்கள் யாரும் கேட்பதில்லை!

குரு – தமிழ்ச் சித்தர்களும் உருவ வணக்கத்தையும் கோயில் வழிபாட்டையும் கண்டித்தும் பயன் இல்லை போல் தெரிகிறது?

சீடன் – ஆமாம் குருவே! தமிழர்கள் அவற்றைக் காதில் போடவில்லை.  திருமூலர்  தொட்டு  பட்டினத்தார் வரையிலும் சிவவாக்கியர் தொட்டு பத்திரகிரியார் வரையிலும சாதி, சமயம் மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக சாடியுள்ளனர். சிவவாக்கியர்  என்ற சித்தர்  “சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?” என்று சாத்திரங்களின் பொய்த்தன்மையையும் அது மனிதனின் வாழ்விற்கு தேவையற்றது எனவும் பாடியிருக்கிறார். மேலும்  “கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே! ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே” என்று வழிபாட்டு முறையையே சாடுகிறார். பூசைமுறைகளில் எந்த உண்மையும் இல்லை என்பதை  “பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்/ பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்” என்று எள்ளி நகையாடுகிறார்.

குரு – சரி தமிழர் முன்னேறுவதற்கு வழிதான் என்ன? அதைச் சொல்லு?

சீடன் – தமிழர் முன்னேற  வேண்டும் என்றால்  முதலில் புத்தியைத் தீட்ட வேண்டும்.  மெய்ப்பொருளை ஆராய்ந்து பார்க்கும் துணிவு வேண்டும்.  ஆராய்ச்சியின் முடிவை ஏற்கும் நாணயம் வேண்டும்.  பலருக்கு அறிவு இருக்கிறது.  ஆராயும் ஆற்றல் இருக்கிறது. உண்மை அறியும் ஆற்றலும் இருக்கிறது. இல்லாதது துணிவும் நாணயமும் தான்.   இதைக் கற்பிக்க  தமிழர்களுக்கு மதம் இல்லை, கல்வி இல்லை, கலை இல்லை.

சித்தர்கள் வேத மறுப்பு, வேதியர் எதிர்ப்பு இரண்டையும் கையில் எடுத்துவர்கள். மேலும் வெற்றுச் சடங்குகளை சாடியவர்கள்.  ஆனால் சித்தர்களை பித்தர்கள் என சைவர்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள்.

குரு –  நீ சொல்வது உண்மை. அதே நேரம் சித்தர்கள் இறை மறுப்பாளர்கள் இல்லை!

சீடன் – நீங்கள் சொல்வது உண்மை. சித்தர்கள் உருவ வணக்கத்தையும் சடங்குகளையும் ஒப்பவில்லை. நாதன் எங்கேயும் இல்லை. உன்னுள் இருக்கிறான் என்றனர். திருமூலர் இப்படிச் சொல்கிறார்.

கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். .

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’

என்பது திருமூலர் அருட்பாடல்.

அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை ‘க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்’ என்கிறது ஆகமச் சொற்றொடர்.

அந்த ஆதி பராசக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. எந்த மனிதனுக்கும் மூன்று வித கடன்கள் உள்ளன அவையாவன தங்களுடைய மூதாதையர்களுக்கு செலுத்த வேண்டிய பித்ரு கடன்இ ரிஷிகளுக்கு செலுத்த வேண்டிய ரிஷி கடன்இ மூன்றாவது தேவர்களுக்கு செலுத்த வேண்டிய தேவ கடன்இ

″எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே″ – தாயுமானவர்

எனத் தாயுமானவர் இறைவனை வேண்டுகிறார். ″அன்பின் வழியது உயிர் நிலை″ என்றார் திருவள்ளுவர். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவதையும் இரக்கம் காட்டுவதையும் சைவர்கள் வாழ்க்கைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிந்தனை, பேச்சு, செயல் என்பவற்றினால் அன்பு வெளிப்படும்போதுதான் சிவ தரிசனம் செய்வதாக அமைகின்றது. அப்போது தான் சர்வம் சிவமயம் என்பது உணரப்படுகிறது.

″யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி″ என்து திருமூலர் திருமந்திரம். கடவுள் எம்மீது கருணை கூர்ந்து ஈய்ந்த பொருளை நாம் மட்டும் அனுபவிக்கக்கூடாது. பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதலே முறையாகும்.

பசித்து வந்தவர்களுக்கும்ää உதவி வேண்டியவர்களுக்கும் அவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும். நலிந்தோர்க்கு உதவுதல், அநாதைகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், நோயாளர், வயோதிபர், குழந்தைகள் என்போர்க்கு உதவுவது புண்ணியங்களாகும். தன்னல மறுப்புää பிறர்துயர் துடைத்தல் என்பவற்றைச் சைவ நெறி மிக உயர்வாகப் போற்றுகிறது. அவை அன்பின் செயற்பாடுகளாக விளங்குகின்றன. அன்பே சொரூபமாய் விளங்குவன யாவும் வணக்கத்திற்குரியவை. அந்த வகையில் கடவுள், தாய், தந்தை, பெரியோர், குரு ஆகியோர் வணக்கத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். அன்பே சிவம், சிவபெருமானைச் சகல சீவ தயாபரன் என்றும், கருணாமூர்த்தி என்றும், அன்பினில் விளைந்த ஆரமுது என்றும் நூல்கள் சிறப்பிக்கின்றன. அன்பு நெறியை மேற்கொள்வதன்மூலம் மனிதர், சிறந்த நிலையை எய்துவதுடன், மேலும் வளர்ச்சிபெற்று அருள், கருணை கைவரப்பெறும் போது தெய்வீக வாழ்வு அடையப்பெறுகின்றனர்.

இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை.
பக்கத்துச் சுரிதார் பார்வைபட
இன்னும் செய்! பார்த்து இளி!!

முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன்
உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும்
காயவில்லை…பரவாயில்லை..புலத்துத் தெருக்களில் தேர் இழு!
உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல்
கைவிட்டது சர்வதேசத்தக் குரங்குகள் மட்டுமல்ல – உன்
அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்
ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட
தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!
இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை – கவனம்
அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து – வழியில்
சிங்களவன் வந்தால் தலையை குனி – அவன்
துப்பினாலும் துப்புவான்…
உன் பக்கத்துவளவில் வந்திறங்கிச்
சிங்களவர் பந்தல்நாட்டுகிறார் – அதனாலென்ன
நீ இங்கு தேருக்குவரும் பெருமக்களுக்கு
பந்தலிட்டு மோர் ஊற்றி உவகையுறு!
உன் பரம்பரைப் பூமியை லாலாதேசத்து
குரங்குகள் தலைமுறை கூறுபோடுது – பார்த்துக்கொண்டே
நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து
வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்
நல்ல களப்பணிதான்,போ இன்னும் செய்.
உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை
போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply