பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாணத்துக்கு வருகை!

பிரித்தானியா  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாணத்துக்கு வருகை!

இலங்கையில் தேசிய நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சணைகளான காணாமல்போனோர் விடயம் , நில விடுவிப்பு , மீள்குடியேற்றம் , கைதிகள் விடுதலை இன்றி நல்லிணக்கத்திற்கான கதவு திறவாது என மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன்  பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்  எடுத்துரைத்தார்.

பிரித்தானியாவில் இருந்து நால்வர் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு நாள் பயணமாக தேசிய நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் குடாநாட்டிற்கு வந்திருந்தனர். அவ்வாறு வந்தவர்கள் நேற்றுக் காலையில் மாவட்டச் செயலக ஊழியர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின்போது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் யுத்தத்திற்குப் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பிரித்தானியாவின் அனுபவத்தை இலங்கைக்கு வழங்கும் நோக்கத்திலேயே மேற்படி பயணம் அமைந்துள்ளது. இதற்காக எம்மிடம் உள்ள அனுபவத்தினை இலங்கைக்கு வழங்கும் சமயம் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கான பணியில் ஈடுபடும் அரச ஊழியர்களிற்கு அந்த மக்களின் குறைகள், தேவைகள் தொடர்பில் முழுமையாக தெரிந்திருந்திருக்கும்.

எனவே அந்த வகையில் இந்த மக்களிற்கு நல்லிணக்கம் ஏற்பட ஆற்றவேண்டிய பங்காக எதனை இங்கே நிறைவேற்றவேண்டியுள்ளது. எனவும் அவைதொடர்பான விபரங்களையும் கேட்டறிந்தனர். இவற்றிற்குப் பதிலளிக்கும்போதே மாவட்ட அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கையில் தேசிய நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சணைகளான காணாமல்போனோர் விடயம் , நில விடுவிப்பு , மீள்குடியேற்றம் , கைதிகள் விடுதலை இன்றி நல்லிணக்கத்திற்கான கதவு திறவாது . என்றே இப்பகுதி மக்கள் திடமாக நம்புகின்றனர். குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமல்போன நிலையில் அவர்களிற்கு என்ன நடந்த்து என்றே தெரியாது கண்ணீர் விடும் தாயார்களிடம் நாம் எவ்வாறு நல்லிணக்கம் பேசுவது . அதேபோன்று இன்றுவரை இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவில்லை.

அவ்வாறு விடுவிக்கப்படாத நிலங்களின் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றியும் நாலாபுறத்தில் சிதறி வாழ்கின்றனர். அதேபோல் கைதிகள் விடுதலை என்பனவே இன்று அதிக பேசுபொருளாகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் உள்ளிட்டவர்களிற்கான போதிய வாழ்வாதார வசதிகளையும் ஏற்படுத்தும் சந்தர்ப்பத்திலேயே நல்லிணக்கம் உருவாகும் என நம்பலாம். என தரவுகளுடன் எடுத்துரைத்தார். -101-

Be the first to comment

Leave a Reply