ஏழுமலை வேங்கடவனின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஏழுமலை வேங்கடவனின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, கற்பூரம் பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவார்கள். தினமும் காலை- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டுமாம்.Image result for Tirupati Venkateswara

* பெருமாளுக்கு உரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் முதலான வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானிடம் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்துதான் சாத்தமுடியும். சூரிய சடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரசோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் குறித்த தகவல்கள், கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கை யாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலில் பல திருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.Image result for Nallur temple

நல்லூர் கோயில் கொடியேறி திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் மற்றும் கோயில் நிருவாகம் கற்பூரச் சட்டி எரிக்கிறது. அதிலிருந்து கரிய புகைமண்டலம் மேலே எழுகிறது. இதனால் சூழல் மாசடைகிறது. மனிதர்களுக்கு ஆஸ்மா போன்ற நோய்கள் வருகின்றன. ஆஸ்மா போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

கற்பூரம்: தென் கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவு மற்றும் கிழக்கு ஆசியாவின் டைவான் தீவிலும் உள்ள அடர்ந்த காடுகளில் வளர்ந்திடும் சின்னமோமம் கேம்ஃபோரா என்ற மரத்தின் கட்டைகளில் இருந்து தயாரிக்கப் படுகிறது.

கற்பூரம் டெர்பீனாய்ட் என்று அழைக்கப்படும் ஒரு இரசாயனப் பொருள். இது கரி, நீர்-வாயு, பிராணவாயு இவைஸ் சேர்ந்த ஒன்று. உடல் நலத்துக்கு தீங்கானது.

Be the first to comment

Leave a Reply