சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 4 பேர் பணி நீக்கம்!

சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 4 பேர் பணி நீக்கம்!

பந்த நல்லூர் பசுபதிஸ்வரர் கோவிலில் இருந்து 6 உலேக சிலைகள் காணாமல் போனது தொடர்பாக செயல் அலுவலர் மற்றும் அர்ச்சகர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே அமைந்துள்ள பந்தநல்லூர் பசுபதிஸ்வரர் ஆலயம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது. இவ்வாலயத்தில் ஏராளமான உலோக சிலைகள் உள்ளது. இந்த கோவிலில் அருகாமை ஊர்களில் உள்ள கோவில் சிலைகளும் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 6 ஐம்பொன் சிலைகளை காணவில்லை என வெங்கட்ராமன் என்பவர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்!

இதன் அடிப்படையில் கடந்த ஜீன் மாதம் 24-ம்தேதி வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவிலின் செயல் அலுவலர் காமராஜ், கோவில் ஊழியர் ராஜா மற்றும் அர்ச்சகர் உள்ளிட்ட 4 பேர் இந்து சமய அறநிலைய துறையினரால் பணிஇடைநீக்கம் செய்யபட்டுள்ளனர்.  மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினறும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/2/8/2017/4-suspended-including-priest-regarding-statue-missing-case

About editor 1087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist

Be the first to comment

Leave a Reply