முல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம்

முல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம்

போர் ஓய்ந்­தும்­கூட அது விட்­டுச் சென்­றுள்ள பிரச்­சி­னை­கள் இன்­ன­மும் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன. ஆனால் எப்­போ­தும் இந்த நாடு ‘இலங்கை சன­நா­யக சோச­லி­சக் குடி­ய­ரசு’ என்றே தொடர்ந்­தும் சொல்­லப்­ப­டு­கின்­றது. நடந்த போர், அடக்கு முறை­யா­ளர்­க­ளுக்­கும் நியா­யம் கேட்ட சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் இடை­யி­லா­னது.

எனினும் சிங்­கள, தமி­ழர்­கள் போரில் நேர­டி­யா­கச் சம்­பந்­தப்­பட்­டார்­கள். அந்த இரண்டு தரப்­புக்­க­ளும் போரின் இழப்­புக்­க­ளால் பாதிக்­கப்­பட்­டன. ஆனா­லும் இறு­தி­யாக, போரின் முடி­வில் அதிக இழப்­பு­கள் அதில் பின்­ன­டைவு கண்­ட­வர்­க­ளையே சாரும் என்ற பெரும்­பான்மை யதார்த்­தப்­பாட்­டில் அந்­தப் பாதிப்பு தமி­ழர்­க­ளுக்கே ஏற்­பட்­டது.

அது வர­லாற்று அவ­லம். ஆனால் நடந்து முடிந்த அந்­தப் போரின் பாதிப்­புக்­கள் என்­பவை ஆளா­ளுக்கு மாறு­பட்ட அள­வு­க­ளில் கிடைத்­த­தாக நோக்க முடி­யாது. அது ஏற்­ப­டுத்­திய பாதிப்பு சம பரம்­ப­லை­யு­டை­யது. சிங்­க­ள­வர்­க­ளுக்கு இவ்­வ­ளவு, தமி­ழர்­க­ளுக்கு இவ்­வ­ளவு, முஸ்­லிம்­க­ளுக்கு அவ்­வ­ளவு… என்று எப்­படி அதன் தொகையை, நிறையை, அளவை மதிப்­பிடமுடி­யும்…?

நடந்து முடிந்த போர் வடக்­குக் கிழக்­கையே தள­மா­கக் கொண்­டி­ருந்­தது. அதி­லும் வடக்கே அதன் நிலை­யான தள­மாக நெடுங்­கா­லம் நீடித்­தது. அந்த வகை­யில் போரால் அப்­ப­கு­தியை வாழ்­வி­ட­மா­கக் கொண்ட மக்­களே அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­னர்.

குறித்த பகு­தி­க­ளில் வாழ்ந்­த­வர்­கள் தமிழ், முஸ்­லிம் மக்­களே. அவர்­கள் தமது பூர்­வீக நிலங்­களை விட்டு இடம்­பெ­ய­ரும் நிலை ஏற்­பட்­டது. உண­வின்மை, உடமை, – சொத்­தி­ழப்­புக்­கள், உயி­ரி­ழப்­புக்­கள் எனப் போர் அவர்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்த கொடு­மை­கள் எண்­ணி­ல­டங்­கா­தவை.

வடக்­குக் கிழக்­குப் பகு­தி­க­ளில் வாழந்­தி­ருந்த தமிழ் – முஸ்­லிம் மக்­கள் தாரா­ள­மா­கவே போரின் பாதிப்­புக்­களை அனு­ப­வித்­தி­ருந்­த­னர். அதனை அள­விட்­டுத் தரா­த­ரப் படுத்­திக்­கொள்­வது சாத்­தி­ய­மற்­றது. அத்­து­டன் போரால் பாதிக்­கப்­பட்­டுள்ள அனைத்து மக்­க­ளுக்­கும் வழங்­கும் பாதிப்பு நிவா­ர­ணங்­க­ளும்­கூட பார­பட்­ச­மற்­றி­ருக்­கவே வேண்­டும். வேறு­பாடு காட்­டு­த­ல் முறை­யற்­றது. ஆனால் முல்­லைத்­தீவு -– கூழா­மு­றிப்­புச் சம்­ப­வம் இதற்கு எதிர் மறை­யா­னது.

கூழா­மு­றிப்­புச் சம்­ப­வம்
கடந்த வாரத்­தில் முல்­லைத்­தீ­வில் ‘முகப்­புத்­த­கப் போரா­ளி­க­ளால்’ ஒன்­றி­ணைக்­கப்­பட்ட போராட்­டம் ஒன்று மக்­கள் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­தது. அது அந்­தப் பகு­தி­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் காட­ழிப்­புக்கு எதி­ரா­னது. அவர்­க­ளின் முகப்­புத்­த­கச் செய்­தி­கள், ‘‘177 ஏக்­கர்­கள் அள­வு­டைய தேக்­கங் காடு­களை அழித்து அவ்­வி­டத்­தில் முஸ்­லிம் மக்­க­ளைக் குடி­ய­மர்த்­தும் செயற்­றிட்­டத்­தின் ஆரம்­பமே இந்­தக் காட­ழிப்பு’’ என்­ற­ன. முள்­ளி­ய­வளை – ஒட்­டு­சுட்­டான் வீதிக்­கும், நெடுங்­கேணி – புளி­யங்­கு­ளம் வீதிக்­கும் இடைப்­பட்ட கூழா­மு­றிப்பு எனும் பகு­தி­யி­லுள்ள தேங்­கங்­கா­டு­கள் அவ­சர அவ­ச­ர­மாக அழிக்­கப்­பட்டு அந்­தப் பகு­தி­யில் முஸ்­லிம் மக்­களைக் குடி­ய­மர்த்துவ­தற்­கான முன்­னா­யத்­தங்­கள் நிகழ்­வ­தைக் கண்­டித்து அதற்­கெ­தி­ரா­கவே அந்­தப் போராட்­டம் நடந்­தி­ருக்­கின்­றது. அந்­தப் போராட்­டம் இரண்டு அணு­கு­மு­றை­க­ளைக் கொண்­டி­ருந்­தது. ஒன்று அது காட­ழிப்­புக்கு எதி­ரா­னது. இரண்­டா­வது இனப்­ப­ரம்­ப­லைச் சீர்குலைக்­கும் வித­மாக அவ்­வி­டத்­தில் முஸ்­லிம்­க­ளைக் குடி­ய­மர்த்­து­வ­தற்கு எதி­ரா­னது.
அது பாதிக்­கப்­பட்ட மக்­களை முன்­னிறுத்தி அல்­லது சாட்­டா­கக் கொண்டு அர­சி­யல் உயர்­மட்­டங்­க­ளால் முன்­னெ­டுக்­கப்ப­டும் செயல் என்­றும் விமர்­ச­னங்­கள் எழுந்­தன.

முஸ்­லிம்­கள் முன்­னர் 
வாழ்ந்த நிலம் அது
முல்­லைத்­தீவு -– கூழா­மு­றிப்­பில், இப்­போது காடு அழிக்­கப்­பட்ட பகு­தி­யில் 25 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் கிட்­டத்­தட்ட ஆயிரத்து 400 முஸ்­லிம் குடி­கள் வாழ்ந்­தி­ருக்­கின்­றன என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அவர்­கள் போர் கார­ண­மாக அவ்­வி­டத்தை விட்­ட­கன்று வேறு இடங்­க­ளில் தமது வாழ்வை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­ற­னர்,இ ப்­போது 25வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு அந்­தக் குடி­கள் பல்­கிப் பெருகி விட்­டன, போர் ஓய்ந்து மீள­வும் தமது வாழ்­வி­டத்­தில் குடி­ய­மர அவர்­கள் முனை­கின்­ற­னர்.

அ தற்­கா­கவே முன்பு அவ்­வி­டத்­தில் தாம் வாழ்ந்த நிலப்­ப­ரப்­புக்கு மேல­தி­க­மான நிலம் அவர்­க­ளுக்கு இப்­போது தேவைப்­ப­டு­கின்­றது என்பது அவர்கள் தரப்பில் சொல்லப்படும் நியாயங்கள் அந்­தக் குடி­கள் முன்­பி­ருந்து நிரந்­த­ர­மா­கவே அவ்­வி­டத்­தில் வாழ்க்கை நடாத்தி வந்­தி­ருந்­தால், அதன்­வழி மெல்ல மெல்ல ஏற்­ப­டும் அவர்­க­ளின் பெருக்­கம் ஒரு பெரிய விட­ய­மா­கி ­யி­ருக்­காது. ஆனால் இன்­றைக்கோ திடீ­ரென்று அதி­க­ளவு இடத்­தைத் தமது இருப்­புக்­காக அவர்­கள் ஒதுக்­கும்­போது அது ஒரு பெரிய விட­ய­மா­கி­யி­ருக்­கின்­றது.

அத்­து­டன் அந்­தப்­ப­கு­தி­யில் பெரு­ம­ள­வில் தேக்­கங்­கா­டு­கள் அழிக்­கப்­ப­டு­வ­து­வும் இந்­தப் பிரச்­சி­னை­ யைக் கவ­னிக்க வைக்­கின்­றது. முல்­லைத்­தீவு மாவட்ட இனப்­ப­ரம்­ப­லில் வருங்­கா­லத்­தில் மாற்­றம் ஏற்­ப­டும் எனும் விட­யத்­தை­யும் இதன்­ப­டியே வைத்து நோக்கவேண்­டும். ஆனால், போரால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம் மக்­க­ளுக்­கு­ரிய காணி­கள் என்ற தோற்­றத்­துக்­குள் பெரும் அர­சி­யல் பின்­ன­ணி­யில் அவ­சர அவ­ச­ர­மாக இந்­தச் சம்­ப­வம் முஸ்­லிம்­க­ ளுக்­கா­கக் கூழா­மு­றிப்­பில் நிகழ்ந்­தே­று­ வ­து­தான் பார­தூ­ர­மான விட­யம்.

கார­ணம், போரால் பாதிக்­கப்­பட்ட இன்­னும் பல முஸ்­லிம் மக்­க­ளும் ஏரா­ளம் தமிழ் மக்­க­ளும் இன்­று­வ­ரைத் தமது இருப்­பி­டங்­க­ளுக்­கா­கப் போரா­டிக் கொண்­டு­தான் இருக்­கின்­றார்­கள். அவர்­க­ளி­டம் காட்­டப்­ப­டாத அன்­பும் அக்­க­றை­யும் அர­சி­யல் தலை­மை­க­ளால் கூழா­மு­றிப்பு விவ­கா­ரத்­தில் எப்­ப­டிச் சடு­தி­யா­கக் காட்ட முடி­கின்­றது…?

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் பலர் 
இருக்க இவர்­க­ளில் 
ஏன் அவ­சர அக்­கறை…?
போரால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் ஏரா­ள­மா­ன­வர்­கள் இருக்க, அவர்­களை எல்­லாம் விடுத்து அவ­சர அவ­ச­ர­மா­கக் கூழா­மு­றிப்­புப் பகு­தி­யில் முஸ்­லிம் மக்­க­ளுக்­குக் காணி ஒதுக்­கு­வ­தில் பின்­ன­ணி­யில் இருந்து செயல்­ப­டும் அர­சி­யல் உற்று நோக்க வேண்­டி­யதே. இது­வரை கால­மும் போரால் பாதிக்­கப்­பட்ட எத்­த­னையோ ஆயி­ரம் மக்­கள் தமது இழப்­பு­க­ளுக்­கு­ரிய இழப்­பீ­டு­கள் கிடைக்­கா­மல் தவிக்­கின்­ற­னர்.

அதற்­கா­கக் கள­மி­றங்­கிப் போரா­டிக் கொண்­டு­மி­ருக்­கின்­ற­னர். ஆனால் இதை­யெல்­லாம் கவ­னிக்­காத அல்­லது இதற்­கெல்­லாம் செவி­சாய்க்­காத, உதவி புரி­யாத அரச அதி­கா­ரி­கள், அமைச்­சர்­கள் சிலர் குறித்த மக்­களை மாத்­தி­ரம் முதன்­மைப்­ப­டுத்­து­வ­தும் அந்த மக்­க­ளுக்­கு­ரி­ய­தைப் பெற்­றுக் கொடுப்­ப­தற்கு மாத்­தி­ரம் முன்­னிற்­ப­து­வும் முன்­னுக்­குப் பின் முர­ணா­கவே இருக்­கின்­றது. பல­ இ­டங்­க­ளி­லும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நிவா­ரண ஒழுங்­கு­க­ளுக்­கு­ரிய ஆரம்ப முயற்­சி­கள்­கூட மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இந்த நிலை­யில் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்ற போர்­வைக்­குள், மற்­ற­வர்­க­ளு­டன் பார­பட்­சப்­ப­டுத்­தியே பார்க்­கப்­ப­டு­கின்­றது குறித்த பிரச்­சினை.

பெரும் அர­சி­யல் பின்­ன­ணி­யு­டன் நிக­ழும் இதில் அந்த அர­சி­யல்­வா­தி­க­ளும் அதி­கா­ரி­க­ளும் தமக்­கும் ஆதா­யம் தேட விளை­கின்­ற­னரா…?

காணிக்­கா­க­வும் இருக்க நிலம் இன்­றி­யும் உடை­மை­கள் இழந்­தும் ஏரா­ள­மா­னோர் குரல் எழுப்­பிக் கொண்­டி­ருக்க சத்­த­மில்­லாத இவர்­க­ளுக்கு ஏன் அவ­ச­ர­மாக இருப்­பி­டம்…?

சரி… போர் பாதித்­த­வர்­க­ளுக்கு நிவா­ர­ணம் என்­றால் இவர்­க­ளுக்கு ஏன் இவ்­வ­ளவு முன்­னு­ரிமை…?

இந்­தக் கேள்­வி­க­ளைப் போலவே குறித்த பிரச்சினையை ஒட்டி இன முரண்­பாட் டைக் கிள்­ளி­வி­டும் பல செயற்­பா­டு­கள் மேற்­கு­றித்த அர­சி­யல்­வா­தி­க­ளா­லும் உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளா­லும் மேற்­கொள்­ளப்­ப­டுகிறது என்று அந்­தப் பகுதி மக்­கள் கவலை வெளி­யி­டு­கின்­ற­னர்.

இலங்கை என்­பது ஒரு நாடு. அந்த நாட்­டில் உள்ள சிங்­கள, தமிழ், முஸ்­லிம் மக்­கள் சம­மான அர­சி­யல் உரி­மை­க­ளுக்கு உரித்­து­டை­ய­வர்­கள். இலங்கை அரசு இதன் பின்­னால் உள்ள சதியை வேரோடு களைந்து, பொது நீதி­யில் இயங்க ஆவண செய்யவேண்­டும்.

கொ. செ. வேலாயுதபிள்ளை

About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply