சிவாகம நூல்களின்படி சிவன் கோயிலில் பார்பனன் பூஜை செய்வது தவறு! ஏன் நீதி மன்றம் கணக்கில் கொள்ளவில்லை?

சிவாகம நூல்களின்படி சிவன் கோயிலில் பார்பனன் பூஜை செய்வது தவறு! ஏன் நீதி மன்றம் கணக்கில் கொள்ளவில்லை?

 2006-தமிழ அரசு கொண்டுவந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை, நேரடியாக செல்லாது என்று சொல்லாமல் சிவாகம நூல்களில் சொன்னபடி தான் கோயில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படலாம் என்று ஒரு வழவழா கொழகொழா தீர்ப்பை வழங்கினார்கள்.

அந்த வழக்கை அரசுக்கு எதிராக வழக்காடியவர்கள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம்.

இந்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சிவாகம நூல்கள் என்று சொல்வது  பன்னிரு திருமுறை உட்பட சுமார் 80 நூல்கள்

அந்த பன்னிரு திருமுறை நூல்களில் ஒன்றான திருமந்திரம் என்பது பத்தாம் திருமுறை ஆகும், அது ஒன்பது தந்திரங்கள்(பிரிவுகள்) மொத்தம் 3000 பாடல்களை கொண்டது.
திருமூலர் எழுதிய இந்நூலின்
இரண்டாம் தந்திரம் –
19.ஆம் பகுதி திருக்கோயிற் குற்றம்,
பாடல் எண் : 5 பின் வருமாறு சொல்கிறது,
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே!
என்று சொல்கிறது. அதன் பொருள்,
பிறப்பால் `பார்ப்பான்` என்பவன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உண்டாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.
அப்படிஎன்றால் சிவாகம நூல்களில் சொன்னபடி பார்த்தால் சிவன் கோயிலில் பார்பனன் பூஜை செய்வது தவறு.
இதை ஏன் நீதி மன்றம் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*