தலை நிமிர்வோம்!

தலை நிமிர்வோம்!

யாழ்ப்பாணம் வந்­தி­ருந்த சிங்­கப்­பூர் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஸ்­ணன் யாழ்ப்­பா­ணத்­த­வர்­களே மறந்­தி­ருந்த அவர்­க­ளின் பெரு­மை­கள் பல­வற்றை மீட்­டுப் பார்த்­தி­ருக்­கி­றார்.

அத்­தோடு ஈழத் தமி­ழர்­க­ளுக்கு உறைக்­கும் விதத்­தில், நீங்­கள் இந்த உல­கத்­தின் மற்­றைய பாகங்­க­ளுக்­கெல்­லாம் உழைத்­துக் கொடுத்­தது போதும், இனி­யா­வது உங்­க­ளுக்­காக உழைக்­கப் பாருங்­கள் என்று குத்­திக்­காட்­டி­விட்­டும் போயி­ருக்­கி­றார்.

இலங்­கை­யின் அர­சி­யல் பொரு­ளா­தா­ரத்­தில் அடிக்­கடி உச்­ச­ரிக்­கப்­ப­டும் ஒரு சொற்­றொ­டர், ‘‘ஒரு காலத்­தில் இலங்­கை­யைப் போன்று வள­ர­வேண்­டும் என்று சொல்­லிக் கொண்­ டிருந்­தது சிங்­கப்­பூர், இன்றோ சிங்­கப்­பூ­ரைப் போன்று வளர ­வேண்­டும் என்று சொல்­லும் நிலை­யில் நாம் இருக்­கின்­றோம்’’ என்­ப­து­தான்.

கொழும்­பில் இருந்­த­படி போருக்­குத் தலைமை­ யேற்று ஒரு குரு­திச் சக­தியை இலங்­கை­யில் உரு­வாக்­கிய சகல தலைவர்களும் ஏதா­வது ஒரு சந்­தர்ப்­பத்­தில் இத­னைக் கூறித்­தான் இருக்­கி­றார்­கள்.

அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஸ்­ணன் கூறி­யது முற்­றி­லும் சரி­யா­னது. ஒரு காலத்­தில் தெற்­கா­சி­யா­வி­லேயே அதி­கம் படித்த சமூ­க­மா­கத் தமிழ் இனம்­தான் இருந்­தது.

இலங்­கை­யைப் பார்த்து சிங்­கப்­பூர் வளர்ந்­தது மட்­டு­மல்ல, அந்த நாட்­டைக் கட்டி வளர்ப்­ப­தற்­கான அடித்­த­ளத்தை இட்ட ­வர்­க­ளில் தமி­ழர்­க­ளுக்­கும் மிகக் கணி­ச­மான பங்கு இருக்­கி­றது என்று ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் அமைச்­சர் விவி­யன். அதி­லும் குறிப்­பா­கக் கல்வி, மருத்­து­வம், வீதிக் கட்­ட­மைப்பு என்­ப­வற்­றின் பிதா­ம­கர்­கள் தமி­ழர்­கள்­தான் என்ற உண்­மை­யை­யும் அவர் போட்­டு­டைத்­தி­ருக்­கி­றார்.

இங்­கி­ருந்து சென்ற தமி­ழர்­கள் பலரே சிங்­கப்­பூரை இந்­த­ அள­வுக்கு வளர்த்­தெ­டுத்­தார்­கள் என்­றால், தம்மை அர­வ­ணைத்­துச் செல்­லும் ஒரு அரசு கொழும்­பில் இருந்­தி­ருந்­தால் இலங்­கை­யை­யும் அவர்­கள் எவ்­வ­ளவு தூரத்துக்கு வளர்த்­து­விட்­டி­ருப்­பார்­கள் என்ற சிந்­தனை, விவி­ய­னின் பேச்­சைக் கேட்­ட­தும் ஒரு கணம் மின்­சா­ர­மா­கத் தாக்­கு­கின்­றது.

சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்ல 19ஆம் நூற்­றாண்­டு­க­ளில் மலே­சியா உள்­ளிட்ட பல நாடு­ளி­லும் நிர்­வா­கத்­தில் சிறந்து விளங்­கி­ய­ வர்­கள் தமி­ழர்­களே. கல்­வியே இனி­வ­ரும் காலத்­தில் பலம் என்று உல­கம் மாறி வந்த காலத்­தில் அத­னோடு ஒத்­தி­சைந்து ஓடி தம்­மை­யும் தாம் சென்ற இடங்­க­ளை­யும் வளர்த்­த­வர்­கள் தமி­ழர்­கள்.

துர­தி­ஷ்­ட­வ­ச­மா­கத் தமி­ழ­னின் அந்த அறி­வும், அத­னால் அவ­னுக்­குக் கிடைத்த அதி­கா­ர­முமே இலங்­கை­யில் அவன் மேல் வெறுப்­பும் இனத்­து­வே­ச­மும் மேலோங்­கக் கார­ண­மா­கி­யது என்­ப­தும், அத­னால் இலங்கை கெட்­டுக் குட்­டிச் சுவ­ரா­கிப் போனது என்­ப­தும் மறக்க முடி­யாத, மறக்­கப்­ப­டக்­கூ­டாத தனிக் கதை.

தமி­ழர்­க­ளின் பலம் என்ன என்­ப­தை­யும், அதனை நாம் பயன்­ப­டுத்­தா­ம­லேயே காலத்தை வீண­டிக்­கின்­றோம் என்­ப­தை­யும் எமக்கு நாசுக்­கா­கக் குத்­திக்­காட்­டி­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார் அமைச்­சர் விவி­யன்.

அவர் தெளி­வா­கக் குறிப்­பி­டுகி ­றார், ‘‘உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா ­கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் இனி­மே­லா­வது உங்­களை மேம்­ப­டுத்­த­வும் யாழ்ப்­பா­ணத்தை மேம்­ப­டுத்­த­வும் பயன்­ப­டட்­டும்.

அதற்கு நீங்­கள் தகு­தி­யா­ன­வர்­கள், பொருத்­த­மான­ வர்­கள். அதற்­காக நீங்­கள் நீண்ட காலம் காத்­தி­ருந்­தும் விட்­டீர்­கள். எனவே இனி­யா­வது உங்­கள் அறி­வை­யும் திற­மை­யை­யும் உங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்’’ என்­கி­றார்.

போரில் இருந்து மீண்டு வரும் ஒரு சமூ­கத்­திற்கு உந்து சக்­தி­ய­ளிக்­கக்­கூ­டிய ஒரு உரை அது. தனது பெரு­மையை, திற­மையை மறந்­தி­ருந்த, தூக்­கத்­தில் ஆழ்ந்­தி­ருந்த சமூ­கத்தைத் தட்­டி­யெ­ழுப்­பும் உரை அது. விவி­யன் அழ­கா­கச் சொன்­னார், நாங்­கள் இப்­போது செய்­வது உங்­கள் மூத்­தோர்­கள் செய்த ­வற்­றுக்­கான கைமாறு; இது வெறும் உத­வியோ தொண்­டுப் பணியோ அல்­ல­வென்று.

அந்த மூத்­தோ­ரின் மூச்­சுக் காற்­றி­லி­ருந்து பலம் பெற்று எழுந்து, நாம் இழந்­து­விட்ட பெரு­மை­க­ளை­யும் திற­மை­க­ளை­யும், திரும்­பப் பெற­வேண்­டும். அனைத்­துத் தமி­ழர்­க­ளும் ஒன்­றி­ணைந்து இப்­போது செய்­ய­வேண்­டி­யது அது­தான். அது­வே­தான் இந்த உல­கின் முன்­னாள் தமி­ழ­னைத் தலை­நி­மிர்ந்து நிற்க வைக்­கும்.

உதயன் தலையங்கம்

 

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply