மயிலிட்டியில் அம்மனை தரிசிக்க 27 ஆண்டுகள் தவமிருந்த மக்கள் கண்ட காட்சி.. 8 hours ago

மயிலிட்டியில் அம்மனை தரிசிக்க 27 ஆண்டுகள் தவமிருந்த மக்கள் கண்ட காட்சி

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலப்பரப்பும் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்தை 27 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தை சுத்தம் செய்து விளக்கேற்றி பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கண்ணீருடனும் மக்கள் பரபரப்பாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

1990ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி பலாலியில் போர் வெடித்ததை அடுத்து, மயிலிட்டிப் பகுதியில் இருந்த மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர்.

27 வருடங்களின் பின் இன்று தமது சொந்த இடத்துக்கு திரும்பியுள்ள மக்கள் மயிலிட்டி அம்மன் ஆலயத்தின் தற்போதைய நிலையை பார்த்து மிகவும் கவலையடைந்திருந்தனர்.

கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் ஆலயத்தின் கூரைகள், மூலஸ்தானம், பலிபீடங்கள், சுவர்கள், தேர்கள், ஆலய சிலைகள் என அனைத்தும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/150848

 


27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி! மகிழ்ச்சியில் யாழ். மக்கள்

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட மயிலிட்டி துறை வடக்கு ஜே.251 கிராமசேவகர் பிரிவில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் போன்றவை விடுவிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகனிடம் இன்று காலை உத்தியோகபூர்வமான கையளித்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/150835?ref=rightsidebar

 

Be the first to comment

Leave a Reply