இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு

12-05-2017 13:23:00

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு

குறித்த சந்திப்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Be the first to comment

Leave a Reply