சோதிடமும் அறிவியலும்

சோதிடமும் அறிவியலும்
இந்த  அண்டம் (Universe) காலம் (Time) வெளி (Space) என்ற இரண்டிலும் உள்ள ஒளி, பருப்பொருள், ஆற்றல் இவற்றால் ஆனது.
பால் வீதி (Milky Way) என்று அழைக்கப்படும் அண்டத்தில் எமது பால் வெளி மண்டலத்தைப் போல் 10,000 – 20,000 கோடி பால்மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு பால்மண்டலத்திலும் 50,000 கோடி நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. அதில் எமது பால்மண்டலத்தில் (Galaxy) காணப்படும் 100 – 10,000 கோடி விண்மீன்களில் (stars) எமது ஞாயிறும் ஒன்றாகும். ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு விநாடியில் 300,000 கிமீ அல்லது 186,000 மைல் வேகத்தில் ஒரு ஆண்டு பயணிக்கும் தொலைவாகும்.Universe2
எமது ஞாயிறு, பால்மண்டலத்தின் நடுவில் இருந்து 30,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஒரு ஓரத்தில் இருக்கிறது. புவியில் இருந்து ஞாயிறு 93 மில்லியன்  (9.3 கோடி) கல் தொலைவில் இருக்கிறது. இருந்தும் அது அடுத்த கிட்டடி விண்மீனோடு ஒப்பிடும்போது 270,000 மடங்கு அணித்தாக உள்ளது.
இந்த அண்டம் 1,500 கோடி (15 பில்லியன்) ஆண்டுகளுக்கு முன்னர் அடர்த்தியான திரவ வடிவில் இருந்தது என நம்பப்படுகிறது. அப்போது நீரியம் மற்றும் கீலியத்தைவிட வேறொன்றும் இருக்கவில்லை. விண்மீன்களோ கோள்களோ இருக்கவில்லை. அண்டத்தின் அகவை பத்துக் கோடி ஆண்டு இருக்கும்போது விண்மீன்கள் நீரியத்தில் இருந்து தோன்றி இருக்கலாம்.
இப்படித்தான் எமது ஞாயிறு விண்மீன் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கலாம். ஞாயிறு தோன்றுவதற்கு முன்னரும் பின்னரும் பல விண் மீன்கள் தோன்றின.                                                                                                                                                                                             ஞாயிறு குடும்பம்Solarsystem3
தோராயமாக 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரு வெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது. அதன் விளைவாக அண்டம் படைக்கப்பட்டது. அதன் பிறப்பு விண்வெளி மற்றும் காலம் (Space and Time)  மற்றும் திடப்பொருள் (matter) ஆற்றல் (energy) உருவானது.
அண்டம் பிறந்து ஒரு இலட்சத்தில் ஒரு வினாடியில் அண்டம் விரியத் தொடங்கியது. அதன் செறிவும் வெப்பமும் குறையத் தொடங்கியது. ஈர்ப்பு விசை தோன்றியது. திடப்பொருள் தோன்றியது. அணுக்கள் தோன்றியது. அப்போது அண்டத்தின் அளவு ஒரு பூசணிக் காயின் பருமந்தான். குவார்க்ஸ் (quarks) ஒருங்கிணைத்து புறோதொன்ஸ் (Protons) மற்றும் நியூட்றொன்ஸ் (Nuetrons)  ஆக மாறியது. எல்லா அணுக்களின் கரு புறோட்டன்ஸ் மற்றும் நியூட்றன்ஸ் ஆல் ஆனது.
பெரு வெடிப்புக்குப் பின்னர் 10,000 ஆண்டுகள் கழிந்து கதிரியக்க காலகட்டம் தொடங்கியது. பேரளவு ஆற்றல் ஒளி, எகஸ் றே, வானொலி அலைகள் மற்றும் ஊதாப்பூ அலைகள் ஆக இருந்தது. அண்டம் விரிந்த போது இந்தக் கதிர் அலைகளும் விரிந்தும் செறிவு குறைந்தும் காணப்பட்டன.பெரு வெடிப்புக்கு 300,000 ஆண்டுகள் கழிந்து திடப்பொருளின் காலகட்டம் தொடங்கியது. சராசரி வெப்பம் 5,000 பாகையாக இருந்தது. திடப்பொருளில் இருந்த ஆற்றலும் கதிரில் இருந்த ஆற்றலும் சரி சமமாக இருந்தன.
பெருவெடிப்புக்குப் பின்னர் 300,000 ஆண்டுகள் கழித்து நட்சத்திரங்களும் நட்சத்திர மண்டலங்களும் தோன்றின
500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் எமது ஞாயிறு மண்டலம் உருவானது. ஞாயிறு நாம் பால் வெளி மண்டலம் என அழைக்கும் நட்சத்திர மண்டலத்தின் வாயு முகில்களினால் உருவானது.
380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினம் தோன்றியது. உலகம் குளிர்ந்து வளி (காற்று) மண்டலம் உருவானது. நுண்ணிய கலங்கள் தோன்றின. அவை தாவரமாகவோ விலஙகாகவோ இருக்கவில்லை.
700,000,000 ஆண்டுகளுக்கு முன்னர் விலங்குகள் தோன்றின. பெரும்;பாலும் தட்டையான புழுக்கள், ஜெலி மீன்வகை மற்றும் சாதாளை தோன்றின.
எமது ஞாயிறு குடும்பம் (Solar system) ஞாயிறு, கோள்கள், சிறுகோள்கள், நிலாக்கள், வால்வெள்ளிகள், விண்கற்கள் (meteoroids) மற்றும் பாறைகள், வாயுக்களைக் கொண்டது. ஞாயிறைத் தொலை அடிப்படையில் சுற்றிவரும் கோள்கள் புதன், வெள்ளி, புவி (பூமி) செவ்வாய், வியாழன், சனி, யுறேனியஸ், நெப்தியூன், புளுட்டோ (குள்ளக் கோள்) என்பன.
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் பாறை மற்றும் உலோகத்தினால் ஆன சிறு கோள்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஞாயிறை கிட்டத்தட்ட ஒரு வட்ட வடிவில் சமாந்திர மட்டத்தில் சுற்றிவருகின்றன.
புதன், வெள்ளி, புவி, செவ்வாய் கோள்கள் பாறைகளினால் ஆனவை. இவறில் புவிக்கு மட்டும் நிலா என்னும் துணைக் கோள் இருக்கிறது.
வியாழன், சனி, யுறேனியஸ், மற்றும் புளுட்டோ வாயுவினால் ஆனவை. இவற்றுக்கு பல துணை நிலாக்கள் இருக்கின்றன. இவை அடர்த்தியில் குறைந்தவை. சனிக் கோளை தண்ணீரில் மிதக்கவிட்டால் அது அதில் மூழ்கிவிடும்.
சோதிட சாத்திரம் ஒரு குழந்தையின் சாதகத்தைக் கணிக்கும் போது நாம் வாழும் புவி, யுறேனியஸ், நெப்தியூன், புளுட்டோ ஆகியவற்றை கணக்கில் எடுப்பதில்லை. காரணம் புவி ஒரு கோள் என்பது சோதிடர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. யுறேனியஸ், நெப்தியூன், புளுட்டோ ஆகிய கோள்கள் வெகு தொலைவில் இருப்பதால் அவை பழங்கால மனிதர்களது ஊனக் கண்ணுக்குத் தெரியவில்லை. ரிஷிகளின் ஞானக் கண்ணுக்கும் தெரியவில்லை.
புவியோடு ஒப்பிடும் போது ஏனைய கோள்களின் பருமன்
ஞாயிறு                              – புவியை விட 109 மடங்கு பெரிது
புதன்                                   – புவியைவிட அரைவாசி
வெள்ளி                              – புவியை ஒத்த பருமன்
செவ்வாய்                          – புவியைவிட அரைவாசி பருமன்
வியாழன்                           – புவியைவிட 11 மடங்கு பெரிது
சனி                                    – புவியைவிட 9 மடங்கு பெரிது
யூரேனுசு                           – புவியைவிட 4 மடங்கு பெரிது
நெப்தியூன்                       – புவியைவிட 4 மடங்குக்கு கொஞ்சம் சிறிது
                                        இராசிகளின் காலம், தொலைவு, உருவம்
இராசி
திகதி
பாகை
உருவம்
மேடம்
ஏப்ரில் 19 – மே 13
25
ஆடு
இடபம்
மே 14 – யூன் 19
37
எருது
மிதுனம்
யூன் 20 – யூலை 20
31
ஆண் – பெண்
கடகம்
யூலை 21 – ஓகஸ்ட் 09
20
நண்டு
சிம்மம்
ஓகஸ்ட் 10 – செப்தெம்பர் 15
37
சிங்கம்
கன்னி
செப்தெம்பர் 16 – ஒக்தோபர் 30
45
பெண்
துலாம்
ஒக்தோபர் 31 – நொவெம்பர் 22
23
தராசு
விருச்சிகம்
நொவெம்பர் 23 – நொவெம்பர் 29
07
தேள்
பாம்பாட்டி
நொவெம்பர் 30 – டிசெம்பர் 17
18
பாம்பாட்டி
தனு
டிசெம்பர் 18 – யனவரி 18
32
வில்
மகரம்
யனவரி 19 – பெப்ரவரி15
28
கடல்குதிரை
கும்பம்
பெப்ரவரி 16 – மார்ச்சு 11
24
குடம்
மீனம்
மார்ச்சு 12 – ஏப்ரில் 18
38
இரட்டை மீன்
ஒரு நாள் என்பது ஒரு கோள் தனது அச்சில் தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலமாகும். கோள்கள் வௌ;வேறு வேகத்தில் தங்களைத் தாங்களே சுற்றுகின்றன. புவியில் 24 மணித்தியாலம் கொண்டது ஒரு நாள். ஏனைய கோள்களின் நாள்களை இந்த வரைபடம் காட்டுகிறது. வெள்ளியில் ஒரு நாள் என்பது புவியின் 243 நாள்களுக்கு சமமானது. இது அதன் ஆண்டைவிட (224.7 நாள்கள்) நீளமானது. அதே சமயம் வியாழன் தன்னைத்தானே விரைவாகச் சுற்றுவதால் அதன் நாள் 9.8 மணிகளே!
வெள்ளியில ஒரு நாள் புவியின் 243 நாள்களுக்கு சமமானது. காரணம் புதன் அதன் அச்சில் தன்னைத்தானே இடமிருந்து வலாமாகச் சுற்றும் வேகம் மணிக்கு 1,600 மைல். உண்மையில் அதன் ஒரு நாள் ஒரு ஆண்டைவிட அதிகமானது. அதன் ஆண்டு 224.7 நாள்களைக் கொண்டது. குறைந்த நாளைக் கொண்ட கோள் வியாழன் ஆகும். அதன் ஒரு நாள் புவியின் 9.8 மணித்தியாலங்களுக்கு சமமானது.
கோள்கள் தங்களது பாதையில் ஞாயிறைச் சுற்றிவரும் வேகத்தை இந்த வரைபடம் காட்டுகிறது.
இராசி சக்கரம்
இராசி சக்கரம்
சோதிட சாத்திரம் கோள்கள் புவியைச் சுற்றி வருகிறது என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டது. இந்தக் கோட்பாட்டை அரிஸ்தோட்டல், தொலமி போன்றவர்கள் முன்வைத்தார்கள். ஆனால இந்தக் கோட்பாடு தவறானது என்பதை முதன் முதலில் நிறுவியவர் கோபெர்னிக்கஸ் என்ற வானியலாளர் ஆவார். அவர் கோள்கள் புவியை அல்ல புவி உட்பட எல்லாக் கோள்களும் ஞாயிறைச் சுற்றிவருகின்றன என்பதை எண்பித்தார். சோதிட சாத்திரத்தின் புவி மையக் கோட்பாடு பிழை என்பதால் அதன் நம்பகத்தன்மை சிதைந்துவிட்டது. அடிப்படைக் கோட்பாடு பிழை என்பதால் அதன் முடிவுகளும் பிழை என்பது வெள்ளிடமலை.
திரையில் நீங்கள் அரிஸ்தோட்டல் அவர்களின் புவி மையக் கோட்பாட்டில் கோள்களின் இருக்கைகளையும் கோபெர்னிக்கஸ் அவர்களின் ஞாயிறு மையக் கோட்பாட்டில் கோள்களின் இருக்கைகளையும் காணலாம். முன்னதில் புவி நடுவில் இருக்கிறது. பின்னதில் புவி ஞாயிறில் இருந்து மூன்றாவது இடத்தில் – செவ்வாய் கோளுக்கும் வெள்ளிக் கோளுக்கும் இடையில் காணப்படுகிறது.
அரிஸ்தோட்டலின் அண்டம்
கோபெர்னிக்கன் ஞாயிறு மைய அண்டம்
வெப்ஸ்டரின் ஆங்கில அகராதி சோதிடம் ஒரு போலி அறிவியல் ( (pseudo-science) எனச் சொல்கிறது. அதற்கான காரணங்கள் பின்வருமாறு.
(1) சோதிடர்களுக்கு புவி ஒரு கோள் என்பதோ அது ஞாயிறைச் சுற்றி வருகிறது என்பதோ தெரிந்திருக்கவில்லை. நிலா புவியின் துணைக் கோள் அது புவியைச் சுற்றி வருகிறது என்பதும் தெரிந்திருக்கவில்லை.
(2) சாதகக் கணிப்பில் புவி முற்றாக விடுபட்டுப் போய்விட்டது. ஆனால் சோதிடம் அதன் துணைக் கோளான நிலாவுக்கு முக்கிய இடத்தைக் கொடுத்துள்ளது.
(3) சோதிடர்களுக்கு கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை பற்றியோ அவை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பது பற்றியோ தெரிந்திருக்கவில்லை.
(4) யூறேனியஸ், நெப்தியூன், புளுட்டோ பற்றி அவர்கள் தெரிந்திருக்கவில்லை. கோள்கள் மனிதர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பது உண்மையானால் இந்தக் கோள்களும் சாதகக் கணிப்பில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.
(5) மொத்த கோள்கள் எத்தனை என்பதிலும் சோதிடர்களிடம் கருத்து ஒற்றுமை இல்லை.
(6) கோள்களையும் இராசிகளையும் ஆண் – பெண்- அலி, நட்பு – பகை, உச்சம் – நீச்சம் – சமம், பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர், நீர், நெருப்பு, எனப் பிரிப்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.Corpenicus
மனம் போன போக்கில் இப்படிப் பிரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக ஒற்றை எண் இராசிகள் ஆண் என்றும் இரட்மை எண் இராசிகள் பெண் என்றும் விதிக்கட்டின்ற பிரிக்கப்பட்டுள்ளது.
சாத்திரமானாலும் சடங்கானாலும் எங்கும் வருணவேறுபாடு சோதிட சாத்திரம் எழுதியவர்களால் திட்டமிட்டுப் புகுத்தப் பட்டுள்ளது. இந்த வருண வேறுபாடே சாதி வேறுபாட்டுக்கு அடிகோலியது.
 Corpernican  Helio Centric Universe                                                                                           Aristotte’s Universe

Universearistottel

கிரகங்களின் வருணம்
வருணம்
கிரகம்  
இராசி
இராசி எண்
பிராமணன்
குரு, சுக்கிரன்
கடகம், விருச்சிகம், மீனம்
4,8,12
சத்திரியன்
சூரியன், செவ்வாய்
மேடம், சிம்மம், தனுசு
1,5,9
வைசிகன்
சந்திரன், புதன்
இடபம், கன்னி, மகரம்
2,6,10
சூத்திரன்
சனி
மிதுனம், துலாம், கும்பம்
3,7,11
ஒரு குழந்தை பிறக்கும் போது கோள்களும் நட்சத்திரங்களும் அந்தக் குழந்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என்று சோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்தத் தாக்கம் எது, எதனால், எப்படி என்பதை சோதிடர்கள் சொல்ல மறுக்கிறார்கள். பருப்பொருள் போலவே இயற்கையில் நால் வகை அடிப்படை விசை மட்டுமே விண்வெளியில் இருந்து கிடைக்கின்றன. அவையாவன வன்விசை (strong nuclear force) மின்காந்த விசை (electromagnetic force) மென் விசை ( weak nuclear force) ஈர்ப்பு விசை ( gravitational  force) என்பனவாகும். இவற்றுக்கு மேலாக தெய்வீக ஆற்றல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதி மனிதன் விண்ணில் ஞாயிறு செல்லும் பாதையை (இராசி வட்டத்தை) அண்ணாந்து பார்த்த போது சில விண்மீன் தொகுதிகள் அல்லது கூட்டங்கள் அவனது கண்களுக்கு மேடம் (ஆடு) இடபம் (எருது) மிதுனம் (ஆண் பெண் உருவம்) கடகம் (நண்டு) சிம்மம் (சிங்கம்) கன்னி (பெண்) துலாம் ( தராசு) விருச்சிகம் (நட்டுவக்காலி) தனுசு (வில்) மகரம் (கடற்குதிரை) கும்பம் (குடம்) மீனம் (இரட்டைமீன்) போன்று காட்சியளித்தன. எனவே இராசி என்பது வான வீதியில் மனிதன் தன் ஊனக் கண்ணால் பார்த்த விண்மீன் தொகுதிகளுக்கு அவன் கொடுத்த கற்பனை உருவாகும். கிரேக்கமொழியில் ணுழனயைஉ என்ற சொல்லுக்கு விலங்குகள் என்பது பொருளாகும்.
Astrologer Solareclipseவிருச்சிக இராசி ஒரு நட்டுவக்காலி வடிவில் காட்சிஅளிப்பதை இங்கே திரையில் பார்க்கிறீர்கள். இந்த இராசிக்கு நட்டுவக்காலி என்ற பெயர் கொடுப்பதை மன்னிக்கலாம். ஆனால் அதன் குணாதிசயங்களை விருச்சிக இராசியில் பிறந்தவர்களுக்கு மாட்டேற்றி இருக்கும் முட்டாள்தனத்தை மன்னிக்க முடியாது.
இதனால்தான் இந்தியர்களது கண்ணுக்கு இடபமாகவும் விருச்சிகமாகவும் (நட்டுவக்காலி) தோன்றிய இராசிகள் சீனர்களது கண்ணுக்கு முறையே எலியாகவும் பாம்பாகவும் தோன்றியிருக்கிறது!
இராசிகள் கற்பனை செய்து பார்க்க முடியாத தொலைவில் இருக்கின்றன. அவை மனிதர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பது உண்மையல்ல. அது அறிவியல் அடிப்படை இல்லாத வெறும் ஊகமே.
                                                                      ஞாயிறில் இருந்து இராசிகளின் தொலைவு 
 
இராசி 
Sign
Star
ஒளி ஆண்டுகள் 
ஞாயிறு
மிதுனம்
Gemini  
Pollux
33.7
ஞாயிறு
மிதுனம்
Gemini  
Castor
51.6
ஞாயிறு
இடபம்
Taurus
Aldbaran
65.2
ஞாயிறு
சிம்மம்
Leo
Regulus
77.6
ஞாயிறு
கன்னி
Virgo
Spica
263
ஞாயிறு
இடபம்
Taurus
Pleiades
385
ஞாயிறு
விருச்சிகம்
Scorpius
Antares
604
ஞாயிறு
மிருகசீரிடம்
Orion
Rigel
777
இராசிகள் எவ்வாறு நட்சத்திரங்களின் கூட்டமோ அவ்வாறே 27 நட்சத்திரங்களும் ஒன்று தொடக்கம் நூறு வரையிலான எண்ணிக்கை கொண்ட நட்சத்திரக் கூட்டமே.
  நட்சத்திரம்
 பாகை மணித்துளிகள்
பாகை மணித்துளிகள் 
வடிவம்
நட்சத்திரங்களின் எண்ணிக்கை 
அதிபதி
1 அசுவனி
0-0
13-20
குதிரை முகம்
3
கேது
2 பரணி
13-20
26-40
யோனி
3
வெள்ளி
3கார்த்திகை
26-40
40-0
வளைவு
6
சூரியன்
4 ரோகிணி
40-0
53-20
வண்டில்
5
சந்திரன்
5 மிருகசீரிடம்
53-20
66-40
மானின் முகம்
3
செவ்வாய்
6திருவாதிரை
66-40
80-0
 ரத்தினம்
1
ராகு
7 புணர்பூசம்
80-0
93-20
வீடு
4
வியாழன்
8 பூசம்
93-20
106-40
அம்பு
3
சனி
9 ஆயிலியம்
106-40
120-0
வட்டம்
5
புதன்
10மகம்
120-0
133-20
மனை
5
கேது
11 பூரம்
133-20
146-40
உயர்ந்த இருக்கை
2
 வெள்ளி
12 உத்தரம்
146-40
160-0
சிறிய தொட்டில்
2
சூரியன்
13அத்தம்
160-0
173-20
ஐக
1
சந்திரன்
14 சித்திரை
173-20
186-40
முத்து
1
செவ்வாய்
15 சுவாதி
186-40
200-0
பவளம்
1
ராகு
16 விசாகம்
200-0
213-2
வாசற்படி
4
வியாழன்
17 அனுபவம்
213-20
226-40
சுருக்கு
4
சனி
18 கேட்டை
226-40
240-0
வட்டமான தோடு
4
புதன்
19 மூலம்
240-0
253-20
சிங்கத்தின் வால்
3
கேது
20 பூராடம்
253-20
266-40
யானையின்தும்பிக்கை
11
வெள்ளி
21 உத்தராடம்
266-40
280-0
உயர்ந்த இருக்கை
2
சூரியன்
22 திருவோணம்
280-0
293-20
வானூர்தி
3
சந்திரன்
23 அவிட்டம்
293-20
306-40
மிருதங்கம்
4
செவ்வாய்
24 சதயம்
306-40
320-0
நீள்வட்டம்
100
ராகு
25 பூரட்டாதி
320-0
333-20
உயர்ந்த இருக்கை
2
வியாழன்
26 உத்தரட்டாதி
333-20
346-40
இரட்டையர்
2
சனி
27 ரேவதி
346-40
360-0
முரசு
32
புதன்
இந்த நட்சத்திர மண்டலங்கள் சில தனி நட்சத்திரங்கன் ஆகும். எடுத்துக்காட்டாக சித்திரை, சுவாதி, ஆதிரை நட்சத்திரங்கள் தனித் தனியானவை. அவை முறையே முத்து (pearl) நீலக்கல் (sapphire) துளசிமணி (bead) போன்ற சாயல் உடையன. பெரும்பாலான விண்மீன்கள் 3,4,5,6 எண்ணிக்கையுடைய நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்றுடன் விதிக்கட்டுப்பாடின்றி (arbitrary) தொடுப்பதன் மூலம் உருவாக்கப் பட்டவையாகும். கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் என்பதால் அது 6 விண்மீன்கள் கொண்டவை என்பது சொல்லாமலே விளங்கும். சதய நட்சத்திரம் மட்டும் 100 விண்மீன்கள் கொண்டது. இருபத்தேழு நட்சத்திர மண்டலத்திலும் மொத்தம் 192 விண்மீன்கள் மட்டுமே இருக்கின்றன. கார்த்திகை விண்மீன்.அண்மையில் இந்த விண்மீன் தொகுதிகள் (நட்சத்திர மண்டலங்கள்) பல்லாயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கின்றன. சில விண்மீன்கள் கண்ணுக்கு அருகருகே காணப்பட்டாலும் அவற்றுக்கு இடையில் பல்லாயிரம் ஒளி ஆண்டு இடைவெளி இருக்கின்றது.ஒரு குழந்தை பிறந்த நேரம் எது என்பதில் சோதிடர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. ஒரு குழந்தை கருவில் உற்பத்தியான நாளா? கால் அல்லது தலை நிலத்தில் (இன்று கட்டிலில்) பட்ட நேரமா? தொப்புள் கொடி அறுத்த நேரமா? குவா குவா என்று குழந்தை அழுத நேரமா? அல்லது குழந்தை முதல் முதல் மூச்சுவிட்ட நேரமா? இதில் எது?ஒரு மருத்தவமனையில் இரண்டொரு வினாடி வேறுபாட்டில் பிறந்த இரட்டைக் குழந்தைகளது வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அப்படி எங்காவது இருக்கிறதா? எமது அனுபவம் என்னவென்றால் அவர்கள் வௌ;வேறு தொழில் பார்க்கிறார்கள். வௌ்ிவேறு நேரத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள். வெவ்வேறு  நேரத்தில் இறக்கிறார்கள்.சோதிடம் கிரங்களை மித்துரு (நட்பு) சத்துரு (பகை) நடுநிலை, வர்ணம், பால் எனப் பிரித்துள்ளது. இதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. மனம் போன போக்கில் செய்துள்ளார்கள்.
கிரகம்
மித்துரு
சத்துரு
நடுநிலை
வர்ணம் (சாதி)
பால்
சூரியன்
சந்திரன், அங்காரகன்,குரு
சுக்கிரன், சனி,ராகு
புதன்
சத்திரியன்
ஆண்
இராகு
சுக்கிரன்
சூரியன்
?
?
ஆண்
குரு
சூரியன், சந்திரன்,அங்காரகன்
புதன், குரு
சனி
பிராமணன்
அலி
புதன்
சூரியன்,சுக்கிரன்
சந்திரன்
அங்காரகன்,குருசனி
வைசிகன்
ஆண்
அங்காரகன்
சூரியன்,சந்திரன், குரு
புதன்
புதன், சனி
சத்திரியன்
?
கேது
சூரியன், குரு
சந்திரன்
?
?
?
சனி
புதன், சுக்கிரன்
சூரியன், சந்திரன், அங்காகரன்
குரு
சூத்திரன்
அலி
சந்திரன்
சூரியன்,புதன்,குரு
சனி,இராகு,  கேது
அங்காரகன்,குருசனி, சுக்கிரன்
வைசிகன்
பெண்
சுக்கிரன்
புதன், சனி,இராகு
சூரியன், சந்திரன்
அங்காரகன், குரு
பிராமணன்
பெண்
சூரிய கிரகணம்
நிலா 29 நாள்கள் 12 மணித்தியாலம் 44 வினாடிக்கு ஒருமுறை புவியை சுற்றிவருகிறது. அப்படிச் சுற்றிவரும்போது புவியின் பாதையும் நிலாவின் பாதையும் இரண்டு இடத்தில் ஒன்றை ஒன்று வெட்டுகின்றன. ஞாயிறுக்கும் புவிக்கும் இடையில் ஒரு நேர்க் கோட்டில் நிலா வரும்போது புவியை நோக்கிய நிலாவின் முகம் தெரிவதில்லை. இதனை நாம் அமவாசை எனக் கூறுகிறோம். அப்போது நிலாவின் நிழல் பூமியில் படிகிறது. அதனால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணம் எப்போதும் அமவாசை அன்றே ஏற்படுகிறது.
மறுபுறம் புவி, ஞாயிறுக்கும் நிலாவுக்கும் இடையில் வரும்போது புவியின் நிழல் நிலா மீது படிகிறது. அப்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நிலா மறைப்பு (சந்திர கிரகணம்) எப்படி ஏற்படுகிறது என்பது உங்களுக்குத தெரியும். நிலாவுக்கும் ஞாயிறுக்கும் இடையில் புவி ஒரே நேர்க் கோட்டில் வரும்போது புவியின் நிழல் நிலா மீது விழுந்து அதனை மறைக்கிறது.
முழு நிலாவின் போதுதான் நிலா மறைப்பு ஏற்படுகிறது. அப்போதுதான் அது ஞாயிறுக்கு நேர் எதிரே (180 பாகை) நிற்கிறது. முழு நிலா மறைப்பு நூறு மணித்துளி நீடிக்கலாம்.முழு நிலாவின் போது நிலா மறைப்பு ஏற்படுவது போல் புது நிலாவின் போது ஞாயிறு மறைப்பு (சூரிய கிரகணம்) ஏற்படுகிறது.
பார்க்கப் போனால் ஒவ்வொரு மாதமும் நிலாமறைப்பு ஏற்பட வேண்டும். ஆனால், புவியைப் போலவே நிலாவும் தனது அச்சில் 5 பாகை  சரிந்து இருப்பதால் அவை ஒரே நேர்க் கோட்டில் எப்போதும் வருவதில்லை. பொதுவாக ஆண்டில் 3 நிலா மறைப்புக்கள் இடம்பெறுகின்றன. இதிலிருந்து கிரகணம் கேது என்ற பாம்பு சந்திரனை அல்லது ஞாயிறைக் கவ்வுவதால் ஏற்படுகிறது என்பது பாட்டிக் கதையாகும். அது மட்டுமல்ல கிரகண காலத்தில் சமைக்கக் கூடாது அப்படி அந்தக் காலத்தில் சமைத்துச் சாப்பிட்டால் உணவு நஞ்சாகிவிடும் என்பது கட்டுக்கதையாகும்.
இந்தப் படத்தில் இருப்பவர் யார் என அடையாளம் தெரிகிறதா? இவர் பெயர் லூசி. உண்மைப் பெயர் அல்ல. 32 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் வாழ்ந்தவர். அங்கு 1974 கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை வைத்து இந்தப் படம் கணினியின் உதவியுடன் வரையப்பட்டது.
The Sun and The Moon
Our solar system consists of one star (the Sun), eight planets and all their moons, three dwarf planets, and several thousand small solar system objects-asteroids, comets, trans-Neptunian objects, and other small bodies. The Sun’s age was calculated in 1989 to be 4.5 billion years old, less than the 4.7 billion years previously believed. It was formed from a cloud of hydrogen mixed with small amounts of other substances that had been produced in the bodies of other stars before the Sun was born. This was the parent cloud of the solar system. The dense, hot gas at the center of the cloud gave rise to the Sun; the outer regions of the
cloud-cooler and less dense-gave birth to the planets.
The Sun
The diameter of our closest star, the Sun, is 1,392,000 kilometres. The Sun is thought to be 4.5 billion years old. The Sun is a medium-sized star known as a yellow dwarf. It is a star in the Milky Way galaxy and the temperature in its core is estimated to be over 15,000,000 degrees Celsius.
In the Sun’s core, hydrogen is being fused to form helium. The energy created by this process radiates up to the visible boundary of the Sun and then off into space. It radiates into space in the form of heat and light.
Because the Sun is so massive, it exerts a powerful gravitational pull on everything in our solar system. It is because of the Sun’s gravitational pull that Earth orbits the Sun in the manner that it does.
The Sun has several layers: the core, the radiation zone, the convection zone, and the photosphere (which is the surface of the Sun). In addition, there are two layers of gas above the photosphere called the chromosphere and the corona.
Events that occur on the Sun include sunspots, solar flares, solar wind, and solar prominences. Sunspots are magnetic storms on the photosphere that appear as dark areas. Sunspots regularly appear and disappear in eleven-year cycles. Solar flares are spectacular discharges of magnetic energy from the corona. These discharges send streams of protons and electrons outward into space. Solar flares can interrupt the communications network here on Earth. Solar winds are the result of gas expansion in the corona. This expansion leads to ion formation. These ions are hurled outward from the corona at over 500 kilometres per second. Solar prominences are storms of gas which erupt from the surface in the form of columns which either shoot outward into space or twist and loop back to the Sun’s surface.
The Sun gives off many kinds of radiation other than light and heat. It also emits radio waves, ultraviolet rays, and X-rays. The Earth’s atmosphere protects us from the harmful effects of the ultraviolet rays and the X-rays.
The Sun does rotate, but because it is a large gaseous sphere, not all parts rotate at the same speed. This is known as a differential rotation.
The Moon
The Moon travels around the Earth in an oval orbit at 36,800 kilometres per hour. The Moon does not have an atmosphere, so temperatures range from -184 degrees Celsius during its night to 214 degrees Celsius during its day except at the poles where the temperature is a constant -96 degrees Celsius.
The Moon is actually a little lopsided due to the lunar crust being thicker on one side than the other. When you look at the Moon, you will see dark and light areas. The dark areas are young plains called maria and are composed of basalt. The basalt flowed in and flooded the area created by a huge impact with an asteroid or comet. The light areas are the highlands, which are mountains that were uplifted as a result of impacts. The lunar surface is covered by a fine-grained soil called “regolith” which results from the constant bombardment of the lunar rocks by small meteorites.
Scientists theorise that the Moon was the result of a collision between the Earth and an object the size of Mars. One theory states that the debris from the impact was hurtled into space where, due to gravity, it combined. This resulted in the formation of the Moon.
The gravitational pull of the Moon on the Earth affects the ocean tides on Earth. The closer the Moon is to Earth, the greater the effect. The time between high tides is about 12

 

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply