புதன், ஜனவரி 20, 2010 17:57 | நிருபர் கயல்விழி

ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல! பாரிசில் இருந்து சி. பாலச்சந்திரன் ('ஈழநாடு' பத்திரிகை)

 

அந்த நாட்டு மனிதர்கள் கூடியிருந்த அந்த மைதானத்தில் அந்த அவதார மனிதருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அந்த மனிதர் சிலுவையில் அறையப்பட்டு, மரணம் அடையும்வரை தொங்க விடப்பட்டார். அவரது விலாவில் ஈட்டியால் குத்தி இறப்பை உறுதி செய்துகொண்ட பின்னர், அவரது உடலை குகை ஒன்றினுள் வைத்து, பாறையால் மூடிவிட்டார்கள். அந்த நாட்டு அரசு அவரது மரணத்தை அறிவித்தது. அந்தக் காலத்தில், தொலைக்காட்சி வசதியோ, கணனி வசதியோ இருந்திருந்தால் அந்தக் கொடூரமான காட்சி உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்டிருக்கும்.
 
 தேவகுமாரனின் மரணத்தை அவரை விசுவசித்தவர்கள் நம்பவில்லை. அவர் மீண்டும் வருவார் என்று நம்பினார்கள். அவர் மீண்டு வந்தார் என்று அவரது சீடர்கள் உறுதிபடக் கூறினார்கள். அவரது போதனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்று பரப்பினார்கள். 2010 வருடங்கள் ஆகியும் அந்த மரணத்தை நிராகரித்த மக்களால் அவரது புனிதம் நிலை நிறுத்தப்பட்டது. இன்றவரை அவரது போதனைகள் வேதமாகப் பல கோடி மக்களை நெறிப்படுத்துகின்றது. இது புராணக் கதையல்ல. நிகழ்ந்தும் முடியாத வரலாறு.
 
 கடந்த வருடம் அதே போன்று ஒரு படுகொலை அறிவிக்கப்பட்டது. அதனை யாரும் நேரடியாகப் பார்க்கவில்லை. கொலையாளிகளால் ஒரு மரணித்த உடலம் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது. அந்தக் காட்சிகள் கணனிக் காணொளி மூலமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. அந்தக் காட்சிகளின் உண்மைத் தன்மை கேள்விக்குரியதாக உள்ளதாக அறிவுசார் கருத்துக்கள் எழுந்தன. முதல் நாள் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் காண்பிக்கப்பட்டது. அவரை விசுவசித்த மக்கள் அந்தக் காட்சிகளை நம்ப மறுத்து நிராகரித்தார்கள். அவரது உடலம் எரியூட்டப்பட்டு, கடலில் வீசப்பட்டது என்ற கொலையாளிகளின் வார்த்தைகளையும் நம்ப மறுத்தார்கள். அவர் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. அவரது சிந்தனையும் இலட்சியமும் உலகம்வாழ் தமிழர்களின் உணர்வுகளை மேம்படுத்தியது. அவரது இலட்சியத்தை நெஞ்சில் நெருப்பாக்கிக்கொண்டு புதிய பல போர்க் களங்களில் புகுந்து போராடுகிறார்கள்.
 
 ஆம், தமிழீழத் தேசியத் தலைவர் குறித்த எதிரிகளின் அந்தப் பரப்புரைகளால் தமிழர்களின் எழுச்சி எந்த விதத்திலும் குறைந்து செல்லவில்லை. தங்கள் சூரியத் தேவனுக்கு மரணம் என்பது கிடையாது என்றே தமிழர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையோடு தங்களிடம் தலைவர் சுமத்தியுள்ள பணியினைத் தொடருகிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்களது பலம். அந்த நம்பிக்கையே அவர்களது வாழ்தலின் சுவாசம். அந்த நம்பிக்கையே அவர்களது எதிர்கால வெளிச்சம். தேவகுமாரன் உயிரோடு இருப்பதாக உலகம் நம்புவது போல், தேசியத் தலைவர் அவர்களும் ஒரு நாள் வருவார் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.
 
 இத்தனை பேரழிவு யுத்தத்தை நடாத்தி, தமிழீழ மண்ணைத் தமிழர்களின் புதைகுழிகளாக மாற்றிய எதிரிகள் விட்டு விடுவார்களா? சிங்களத்தில் சொல்வதைத் தமிழர்கள் ஏற்க மறுப்பதால் அதனைத் தமிழில் சொல்லவும் ஏற்பாடுகள் செய்தார்கள். தமிழில் சொல்லியும் தமிழர்கள் அதை ஏற்க மறுத்தே விட்டார்கள். ஆனாலும் பாலூற்றிக் கதை முடிக்கப் புறப்பட்டவர்கள் அதனை விட்டு விடுவதாக இல்லை. தலைவர் குறித்த நம்பிக்கை தமிழர்களிடம் இருக்கும்வரை தமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், முள்ளிவாய்க்கால் பேரவலம் முடியும்வரை முகம் காட்ட மறுத்தவர்கள் மீண்டும்... மீண்டும்... அதே வசனங்களோடு அரங்கிற்கு வரத் தவிக்கிறார்கள். அதற்காகத் தமிழ் மக்களை இரு துருவப்படுத்தும் முயற்சியிலும் சளைக்காமல் ஈடுபடுகிறார்கள்.
 
 தற்போது அவர்களுக்கான அரங்கமாகவே 'நாடு கடந்த தமிழீழ அரசு' உருவாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ், பாரிஸ் புறநகரான சார்சேலில் நடைபெற்ற 'நாடு கடந்த தமிழீழ அரசு' அரங்கத்தில் இடம்பெற்ற உரையாடல்களும் இதையே உணர்த்தியது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இறந்துவிட்டார் என்று நிரூபிக்கும் முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவராக கே.பி. அவர்களே நியமிக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே 'நாடு கடந்த தமிழீழ அரசு' உருவாக்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய புலம்பெயர் கட்டமைப்புக்களும் விமர்சனப்படுத்தப்பட்டது. மக்கள் பேரவைகளும் அவர்களது விமர்சனங்களிலிருந்து தப்பவில்லை.
 
 திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் மிகப் பெரிய தமிழீழ உணர்வாளர். தேசியத் தலைவர் அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். தமிழீழ மீட்பிற்கான அவரது முயற்சியும், பணியும் புனிதமானது என நாம் நம்புகின்றோம். ஆனாலும், அவரது பக்கத்தில் அமர முற்படுபவர்களது செயற்பாடுகள் அவரையும் தாழ்தும் அபாயங்கள் கொண்டதாகவே உள்ளன. தேசியத் தலைவர் அவர்களுக்குப் பாலூற்றிக் கதை முடிக்க முயற்சிப்பது, வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு வரலாற்று அவமானம் எனப் பிரகடனப்படுத்துவது, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களை விமர்சிப்பது, மக்கள் பேரவைகள்மீது அவதூறான தாக்குதல்களைக் தொடுப்பது என்று அவரது அணியிலிருந்து சகதிகள் மட்டுமே வெளிவந்துகொண்டுள்ளன. மிகப் பெரிய தேசியக் கடமையினை நிறைவேற்றத் துடிக்கும் திரு உருத்திரகுமார் அவர்கள் காலம் தாழ்த்தாது இத்தகைய சேறடிப்புக்களை தடுத்து நிறுத்தாதுவிட்டால், அவரது முயற்சியே அதில் மூழ்கடிக்கப்பட்டுவிடும்.
 
 முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்புப் பேரவலம் நடாத்தி முடிக்கப்பட்டு எட்டு மாதங்களாகிவிட்ட நிலையில், தமிழீழ மக்கள் அசைவியக்கமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அபாயகரமான தளத்தில் நின்றுகொண்டு தம்மால் முடிந்த நகர்வுகளைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. ஆக்கபூர்வமாக இயங்கக் கூடிய நிலையில்  பலமாக உள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே. ஈழத் தமிழர்களின் எதிர்காலத்துக்கான போராடும் பொறுப்பும் தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தமிழர்களிடமே கையளிக்கப்பட்டது. அந்தப் பலத்தைச் சிதைப்பதற்கு முயலும் எவரையும் தமிழீழ மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
 
 புலம்பெயர் தேசங்களில் உருவாகும் தமிழீழ அரசியல் சார்ந்த எந்த அமைப்பும் தனித்த பாதையில் பயணிக்க முடியாது. இது எமது இன விடுதலை சார்ந்த போராட்டம். இதில் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமே இல்லை. புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவு படுத்தி இரு துருவப்படுத்தி இலாபம் பார்ப்பதற்கு யாரும் முற்றபட முடியாது. அதற்கான அங்கீகாரத்தை புலம்பெயர் தமிழினம் வழங்கும் என்ற கற்பனாவாதம் செல்லுபடியாகாது.
 
 ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல!
(பரிஸ் ஈழநாடு)

 

 

 


 

யனவரி 21, 2010

 

கனடா

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துககுப்  பேராதரவு  அளித்து வரலாறு படையுங்கள்!  

 

நோர்வே, பிரான்ஸ், கனடா நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது வெற்றிகரமாக  மீள் வாக்குக் கணிப்பு எடுத்ததைத் தொடர்ந்து சுவிசில் எதிர்வரும் 23, 24,  ஜெர்மனியில்  24,   நெதர்லாந்தில்  24, பிரித்தானியாவில் 30 ஆம் நாள் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

தமிழீழ மக்களது அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மிக முக்கிய  திருப்பு முனையாகும். 1972 ஆம் ஆண்டுவரை அய்க்கிய இலங்கையில் இணைப்பாட்சி முறைமைக்கு தந்தை செல்வநாயகம் தலைமையில்  போராடி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, அய்க்கிய இலங்கையில் ஒற்றை ஆட்சி முறைமைக்கு ஆதரவாக ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் செயற்பட்டு வந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், செயமூர்த்தி தொண்டமானின் தலைமையில் இயங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பைத் தோற்றுவித்து வட்டுக்கோட்டையில் 1976 ஆம் ஆண்டு மே 14 இல் நடைபெற்ற அதன் முதல் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் "ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய,  சமய சார்பற்ற, சமவுடமைத்  தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ் தேசிய இனத்தின் இருப்பைப்  பாதுகாப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது  என இந்த மாநாடு தீர்மானிக்கிறது." 

 

(This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.)

 

தமிழ் இறைமை (Tamil Sovereignty) தமிழ்த் தேசியம் (Tamil Nationhood) அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணம் செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty) இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயாட்சி  உரிமைக் கோட்பாட்டையும்  (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின் எப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான வினைத்திறன் ஒன்றின் தேவையை விட்டுவைக்காதவாறு நுண்மாண் நுழைபுலத்தோடு (Perspicacity)  இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

 

1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில்  வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்மக்களிடம் ஆணை கேட்டு 23 மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 18  தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. .

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு பேராதரவு அளித்து வரலாறு படையுங்கள் என சுவிஸ், ஜெர்மன், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியாவில்  வாழும் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

-30-

 

  

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது 1976 மே மாதம் திகதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக கைக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அதாவது

 

"1976 மே மாதம் 14ம் திகதியன்று வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் மங்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளாரென இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

 

மேலும் 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ்மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத்தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம் மொழி வாழ்வுடமை பொருளாதார வாழ்க்கை தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது........ ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமயசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வறிவித்தல் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது."

 

உண்மையான பிரச்சனை யாதெனப்பார்த்தோமானால் தமிழ் மக்களது ஜனநாயக முடிவுகள் அரசபயங்கரவாதத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 இன் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாகப் பார்போமானால் - தமிழர் ஓர் தேசிய இனம் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் அவர்களது பூர்வீகத்தாயகம் அவர்கட்கு அவர்களது உரிமைகளை நிர்ணயிக்கும் உரிமையுண்டு. இலங்கை சுதந்திரம் அடைந்தபின் தமிழ்பேசும் மக்களின் உரிமைகான போராட்டங்களில் முதலாவது முப்பது வருடங்கள் அகிம்சை வழியிலும் அதைத்தொடர்ந்து அடுத்த முப்பது வருடங்கள் ஆயுதப்போராட்டத்திலும் ஈடுபட்டு பல வெற்றிகளை யுத்தத்தில் கண்டாலும் ஆயுதப்போராட்டம் பின்னடைவில் முடிவுற்றது. இந்நிலையில் தமிழ்பேசும் மக்கள் அவர்களின் வரலாற்றில் மிகப்பெரியதோர் வெற்றிடத்தில் விடப்பட்டுள்ளனர்.

 

இச்சுழ்நிலையில் தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தையும் அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்கவேண்டிய கடமையும் அவர்களது உரிமைகட்காக ஜனநாயக முறையிலான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பும் உரிமையும் கடப்பாடும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியற்தலைவர்களையும் தமிழ் அறிஞர்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் சார்ந்ததாகவே இருக்கின்றது. தற்போதைய நிலையில் தமிழ்க்கூட்டமைப்பைத்தவிர்ந்த ஏனைய தமிழ்கட்சிகள் யாவும் ஆளும் கூட்டாட்சியான மகிந்த அரசாங்கத்தோடு இணைந்தே தமது அரசியலை நடாத்துகின்றனர். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஆயுதப்போர் பின்னடைவு கண்டநிலையில் தமிழ்பேசும் மக்களது நிலமை மிக மோசமான நிலையிலேயுள்ளது.

 

இந்நிலையில் தமிழ்மக்களது நிலமை இலங்கை முழுவதுமே வாய்திறக்க முடியாத அளவிற்கு அராஜக ஆட்சியாகவுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மக்கள் தமது உரிமைகள் சம்மந்தமாக குரல் எழுப்பமுடியாத அளவிற்கு ஓர் சாட்சிகள் அற்ற போர் நடந்து முடிந்துள்ளது. மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சனைகளான அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை காட்டமுடியவில்லை. போர் வெற்றிக்களிப்பில் சிங்கள மக்களை மிதக்க விடுவதிலேயே தொடர்ந்தும் இவ்வரசாங்கம் அரசியல் தீர்வுக்கான செயல்முறைகட்கு அம்மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் எவ்விதமான முயற்சியும் எடுக்கும் என்று நம்புவதற்கில்லை. ஆனால் அரசுசார்பாக இருக்கும் தமிழ்கட்சிகளும் அதன் ஆதரவாளர்களான சில புலம்பெயர்தமிழர்களும் மகிந்தாவின் ஆளும்கட்சிகளுக்கு நோகாமல் அவர்களோடு இணைந்து அவர்கள் தருவதை வாங்குவோம் அதுதான் "யதார்த்தம்" என்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில் புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள் என்ன செய்யலாம்?

 

இராஜதந்திர முறையிலான போராட்டம்( Diplomatic War)

 

(இதை எமது மூனறாவது கட்டப்போராட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் பலவிதமான போராட்ட முறைகள் இருக்கலாம். அதன் ஒரு கட்டமான போராட்ட நடவடிக்கைதான் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் பேசும் மக்களால் நடாத்தப்படவுள்ள 1976 மே மாதம் 14ம் திகதி முடிவெடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த(ஈழம்) தமிழ்பேசும் மக்களுக்கான அரசு ஒன்றை நிறுவுவதற்கான ஆணையை தாம் மீண்டும் ஜனநாயக முறையில் பெற்றுக்கொள்ள அறைகூவல் விடுவதாகவே இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்தவுள்ளோம்.

 

தமிழரது நிலம் திட்டமிட்டு சிங்களமயமாகிறது.

 

ஈழப்பகுதிகளிலே தமிழ்பேசும் மக்கள் திறந்த்வெளிச்சிறைச் சாலையில் வாழ்வது போலவே வாழ்கின்றனர். வடகிழக்கு இராணுவ மயமக்கப்பட்டுள்ளது. இங்கு இராணுவ ஆட்சியில் பல இடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இவ்விடங்கள் தமிழ் மக்களது பூர்வீக குடியிருப்பு நிலங்களாகும். இவை நிரந்தர உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதால் அங்கு வாழ்ந்த மக்கள் அகதிமுகாம்களில் 1995ம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். இக்காலகட்டத்தில் ஆங்காங்கே புத்தவிகாரைகள் வரத்தொடங்கிவிட்டன, தெருக்கள் வீதிகள் சிங்களப் பெயராக மாற்றம் பெற்றுவிட்டன, நடந்த முடிந்த போரினால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பு முகாம்களில் முட்கம்பிகளுக்கு நடுவே இராணுவக் காவலில் வைக்கப்ட்டுள்ளனர்.

 

இவர்களது நிலங்கள் பல இடங்களிள் ‘உயர்பாதுகாப்பு வலயமாக' கொண்டு வரப்பட்டுள்ளதால் இம்மக்கள் தமது நிலங்களுக்கு திரும்பப் போகவே முடியாத நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதோடு இப்படி அரசு திட்டமிட்டு இவற்றைச்செய்வதால் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் தொடற்சி துணடிக்கப்படுகிறது. இடையே இராணுவக் காவலுடன் சிங்களவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதரமாக இருந்த வன்னி நிலம் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாணம் 33 விழுக்காடு மேல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தால் பறிபோய்விட்ட நிலையில் வடமாகாணம் அரச பயங்கர வாதத்தால் முற்றுகையிடபட்ட நிலையில் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களை சிந்திக்க வேண்டுகிறோம்.

 

தமிழ் மக்களது இறைமையை மீளப்பெறும் போராட்டம்

 

உலகு இலங்கையை ஓர் ஜனநாயக நாடு என்று கூறுகின்றது. ஆனால் 60 வருடங்களுக்கு மேலாக ஓர் இனப்பிரச்சினை இருப்பதை ‘உள்நாட்டுப்பிரச்சினை' என மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. 1956ம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு பாராளுமன்றத்தேர்தலிலும் தமிழ்பேசும் மக்கள் சமஷ்டி முறையை ஆதரித்து வாக்களித்து வந்தனர். ஆனால் சிங்கள இனவாத அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதன் பின்னரே வட்டுக்கோட்டைத தீர்மானமும் அதனைத் தொடர்ந்து நடந்த 1977 பொதுத்தேர்தலும் அதில் மக்கள் அமோகமாக தனிநாட்டுக்காக வாக்களித்ததுமாகும். எனவே மக்கள் தமது கருத்தை மிகத்தேளிவாகவே கூறியிருந்தனர்.

 

ஆயுதப்போராட்டத்தாலும் அரசு எதையும் செய்யாத போதும் இலங்கையில் ஓர் இனப்பிரச்சினை இருக்கின்றது அங்கு அத்தமிழ்த் தேசிய இனத்துக்குரிய அரசியல் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற உண்மை உலகிற்கு நன்கு தெரியவந்துள்ளது. இப்போது இதை உணர்ந்த உலக நாடுகள் தமிழ்பேசும் மக்களுக்கு ஓர் ஜனநாயக முறையிலான அவர்கள் ஏற்கக் கூடியதான ஓர் தீர்வை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. அண்மையில் UN,UK,USA,EU மற்றும் இந்தியா போன்றன இப்படியான அறிக்கைகள் விட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். விடுதலைபுலிகளின் பாதையில் பல பிழைகள் இருக்கலாம்.

 

ஆனால் அவர்களின் அடிப்படைப்போராட்டத்தின் பின்னணியில் ஓர் நியாயம் இருந்தது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய அரசியல் அந்தஸ்து இந்நாட்டில் வழங்கப்படவில்லை என்ற உண்மை இருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் எவ்வித அரசியல் அந்தஸ்துக்களும் கிடைக்காவிட்டாலும் உலகிற்கு இலங்கையில் ஜனநாயகம் என்ற போர்வையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாத அராஜக ஆட்சி நடைபெறுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இலங்கையில் அமைதி திரும்பவேண்டுமானால் தமிழர் பிரச்சினை அவர்களது ஜனநாயக அபிலாஷைகளுக்கேற்ப தீர்க்கப்படவேண்டும். மகிந்த அரசு தாம் இந்த இன மோதலில் விடுதலைப்புலிகளை வென்றுவிட்டதால் தமிழர்களை அடக்கி ஆளலாம் என முடிவுகட்டிவிட்டார்கள்.

 

முல்லைத்தீவில் முள்ளிவாய்காலில் விடுதலைபுலிப் போராளிகளையும் 50'000 மக்களையும் புதைத்தது போல் தமிழர்களது உரிமைப் போராட்டத்தையும் புதைத்துவிட்டடோம் என மகிந்த ‘இந்து' பத்திரிகைக்கு கூறியிருந்ததையும் அவரது அமைச்சர்கள் இதேபோல் கூறிவருவதையும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் ஜனநாயகம் எப்போதோ புதைக்கப்பட்டுவிட்டது. மகிந்த ஆட்சியில் இலங்கையில் இரண்டு விதமான மக்களே வாழமுடியும். முதலாவது சிங்கள-பவத்த  அரசை ஏற்று அதை மதித்து நடப்பவர்கள்.  அவர்களே நாட்டுப்பற்றாளர்கள். இரண்டாவது- அதை எதிர்பவர்கள. இவர்கள் நாட்டின் துரோகிகளாகக் கணிக்கப்படுகின்றார்கள் என மகிந்த பல மேடைகளில் பேசி வருவதைப் பார்க்கின்றோம். இப்படியான இனவாதப் பேச்சு இலங்கையில் தமிழ்பேசும் மக்களை முற்றாக அழிக்கும் திட்டத்தில் உருவானதாகும். மகிந்த அரசின் நடவடிக்கைகளை கவனித்தீர்களானால் இதை நீங்கள் நன்கு ஊகிக்க முடியும். எனவே எம் அன்பான மக்களே சிந்தியுங்கள்.

 

இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு போராட்டத்தின் அவசியம்.

 

இலங்கை அரசின் அராஜக நடவடிக்கைகட்கு எதிராகவும் அவர்களது இரகசியத்திட்டங்கட் எதிராகவும். புலம் பெயர் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து தொடர்பாக போராடவேண்டும். வன்னியில் நடந்த போரை நிறுத்தக் கோரி உலகளாவிய புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடாத்தினார்கள். பிரிட்டனில் 73 நாட்களாக பாராளமன்ற முன்றலில் தொடர்ந்த மறியல் போராட்டங்கள் உண்ணாவிரதம் நடாத்தினோம். அவற்றால் ஒரளவு அனுதாபம் ஏற்ப்பட்டாலும் போர் முடியும் வரை, எந்த ஒரு நாடும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. அவர்கள் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே பார்த்தனர்.

 

இந்நிலையில், இந்த வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டும் எமது போர் பயங்கரவாதப் போர் அல்ல. எமது சுயநிர்ணய உரிமைக்கான போர். மக்கள் அதற்காக பலதடவை வாக்களித்துள்ளனர். அதை திரும்பவும் நினைவூட்ட முனைவதுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கை என்று கூறிவைக்கவேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வழி எதுவுமே இல்லை. அங்கே 1948ம் ஆண்டில் இருந்து ஓர் அராஜக ஆட்சியே நடை பெறுகின்றது. இதை மாற்றவேண்டுமானால் புலம் பெயர் தமிழர்களால் தொடர்ந்து தொடர்பாக பலவிதமான போராட்டங்களும் நடாத்தப்படவேண்டும். அதில் முக்கியமானதொன்றுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு. இதன் மூலம் எமது இழந்த உரிமைகளைப் பெறும் உரிமைப்போராட்டத்தை தொடர முடியும்.

 

உண்மை நிலையை உலகிற்கு உணர்துதல்

 

எமது ஜனநாயக நிலையை உலகிற்கு உணர்த்த இப்பொது வாக்குக்கணிப்பு அவசியமாகும். அதோடு இது ஈழவரின் உண்மையான அரசியல் நிலமையை உலகறியச் செய்யும். மேலும் இலங்கையிலும் வட-கிழக்கில் அவர்களது உரிமையை நிர்ணயிக அங்கும் ஓர் பொதுமக்கள் வாக்குக்கணிப்பு நடாத்தப்படவேண்டு மென்று இலங்கை அரசை நிர்பந்திக்க முடியும். உலகில் பொது மக்கள் வாக்குக்கணிப்பு மூலம் பல இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்க முடியுமானால் தமிழ்பேசும் மக்களால் ஏன் முடியாது. இன்று இலங்கையில் தமிழ்பேசும் மக்களுகு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை உலகம் உணரத்தொடங்கியுள்ளது. ஆதை மேலும் வலுப்படுத்தவே புலம்பெயர் தமிழர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே இப்பொதுமக்கள் வாக்குக்கணிப்பாகும்.

 

ஒன்றுபட்டு போராடுவதின் அவசியம்

 

எமது நடவடிக்கை காலத்தின் கட்டாயமாகும. ஆகவே அன்பான பொது மக்களே கருத்துவேறுபாடுகள் (Ideology) பிரதேசவாதம் கட்சி வாதங்கள் சமயவாதங்கள் மற்றும் குரோதங்களை மறந்து ஈழவர் பிரச்சினைகள் தீர சகல புலம்பெயர் தமிழ்பேசும் மக்களும் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை தடுக்கும் முயற்சிகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன என்பதனை அனைத்து தமிழ்கட்சிகளின் தலைவர்களும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பார்களாக. முன்பு பல தமிழ் அமைப்புகள் பொது எதிரியான சிறீலங்காவின் அரசுக்கு எதிராக வேலை செய்தார்கள்.

 

இப்போது இப்பொது எதிரியுடன் சிலர் இணைந்து தமிழ் பேசும் மக்களின் நலனுக்கு எதிராக வேலைசெய்கின்றார்கள். இந்நிலையை அவர்கள் மீளாய்வு செய்யுமாறு தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் யாவும் தாம்பெரிது நீ சிறிது என்று பாகுபாடு காட்டாது இவ்வட்டுக்கோட்டடைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களாக.தமிழ்மக்கள் கையேந்திப்பிழைப்பவர்கள் அல்லர். அவர்கள் தன்மானத்தோடு தமது தாயகத்தில் ஓர் தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையோடு வாழவிரும்புகின்றார்கள்.

அவர்களது எண்ணம் ஈடேற இப்பொழுது மக்கள் வாக்குக்கணிப்பு ஓர் பங்கை வகிக்க வேண்டும். இதை வெற்றியளிக்கச் செய்வீர்களாக. ஆகவே பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்களே! நாமும், நமது உற்றார் உறவினர்களும், எமது சொந்த பந்தங்களினதும், ஈழ உறவுகளினதும் இறைமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், பூர்வீக நிலத்தில் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்காகவும் வரப்போகும் வரப்போகும் தை மாதம் 30ம் திகதி நடக்கவிருக்கும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எமது பெரும்பான்மைத் தீர்வை உலகுக்கு உணர்த்த வேண்டும்.இதுவே ஈழத்தில் வாழும் உங்கள் உறவுகளுக்காக நாங்கள் செய்யும் ஒப்பற்ற கடமையும், உதவியுமாகும்.

தமிழ் தேசிய சபை
 

www.vkr1976.org.uk

ஸ்ரீரஞ்சன்: 07841 522514
இரகுநாதி: 07807 108318
பரமகுமரன்: 07958 507010


 

 

சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம்.

 

30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில்இ 1976 ஆம் ஆண்டு மே மாதம் தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். சுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர்க்கமுடியாதது என்பது மாத்திரமல்ல ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் ஒரே ஒரு மக்களாணை பெற்ற தீர்மானமும் இதுதான்.

 

இத் தீர்மானத்தின் அரசியல் முக்கியத்துவம் என்ன?

 

தமிழ் இறைமை (Tamil Sovereignty)  தமிழ்த் தேசியம் (Tamil Nationhood)  அதன் அரசியல் இலக்கு (Indepenendent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணஞ்செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty)  இன அழிப்புக்குட்பட்ட (Genocide)  ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும்  (Right to Self-Determination)  ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும் பின்னெப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான திறமை ஒன்றின் தேவைக்கான இடைவெளியை விட்டுவைக்காத அளவு மதிநுட்பத்துடனும் தந்தை செல்வா அவர்களினால் இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

தந்தை செல்வா அவர்களே நேரடியாக இத்தீர்மானத்தை இதன் ஒவ்வொரு சொல்லையும் பகுப்பாய்வுசெய்து இயற்றினார் என்றுயு து றுடைளழn எனும் அரசியல் வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கென்றே சிறப்பான முக்கியத்துவம் என்ன?

 

இதன் சிறப்பு என்னவென்றால்இ அடுத்தவருடம்இ அதாவது 1977ம் ஆண்டுஇ இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது பெருவாரியான வாக்குக்கள் மூலம் இத் தீர்மானத்திற்கு மக்களாணை வழங்கியமை. இதுவே தமிழீழத் தனியரசுக்காக இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாக்களித்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையாக விளங்குகிறது. இதனால் தான் இதை நாம் இன்று மீளவும் ஜனநாயகமும் கருத்துச்சுதந்திரமும் வாழும் ஏனைய நாடுகளில் எடுத்தாளமுடிகிறது.

 

1977 இற்குப் பின்னர் தமிழீழம் குறித்த மக்களாணையை இலங்கைத் தீவில் ஜனநாயக முறையில் முன்வைக்கமுடியாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் (1979 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) கொண்டுவரப்பட்டது மட்டுமல்ல சிறிலங்காவின் அரசியல் யாப்பிலே 6ம் திருத்தம் என்ற திருத்தத்தையும் 1983 இல் கொண்டுவந்து தனிநாட்டுக்கோட்பாட்டை - அதாவது இந்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையை - யாப்புரீதியாகவே சிறிலங்கா அரசு மறுதலித்துவிட்டது.

 

இதனால் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான தமது மக்களாணையை மீளவும் ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முடியாத நிலையே தாயகத்தில் தொடர்கிறது. இன்றுவரை இந்த 77ம் ஆண்டு மக்களாணையே இலங்கைத் தீவிலுள்ள ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதலாவதாக மட்டுமல்ல இறுதியாகவும் தமிழீழத் தனியரசுக்காக வெளிப்படுத்தக்கூடியதாகவிருந்த மக்களாணையாகும்.

 

1977ம் ஆண்டுத் தேர்தல் வேறு எந்த வகையில் முக்கியமாகிறது?

 

இந்த 77ம் ஆண்டுத் தேர்தலேஇ தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை, இறுதியாக, இராணுவக் கெடுபிடிகள், பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் இல்லாத நிலையில் சுதந்திரமான முறையில் நடந்த இறுதித் தேர்தலாகும். இது 1972 ம் கொண்டுவரப்பட்ட சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சிக் குடியரசு யாப்பு அமைக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தீவில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தல்.

 

இதனால் இத் தேர்தலிலேயே வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் யாப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக் கிட்டுகிறதுஇ ஏனென்றால் தமிழீழ மக்கள் சுதந்திர நாட்டிற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அளித்த மக்களாணை தனது வரைபில் 1972ம் ஆண்டு யாப்பை தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதென்றும்இ சட்டவிரோதமானதென்றும் அதைத் தமிழர்கள் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த வகையில் இன்று வரையுள்ள சிறிலங்காவின் யாப்பை தமிழர்கள் நிராகரித்தமைக்கான சட்டபூர்வமான ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தலுக்கான முக்கியத்துவமும் 77ம் ஆண்டின் தேர்தலுக்கு உண்டு.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு மேலதிக சிறப்பம்சங்கள் வேறு ஏதும் உண்டா?

 

ஒன்றிரண்டல்ல பல உண்டு.

 

தமிழீழத் தனியரசு அமைக்கப்படவேண்டியதற்கான அரசியல்இ வரலாற்று நியதிகளையும்இ மனிதாபிமான நியாயப்பாடுகளையும் அமைக்கப்படவேண்டிய தமிழீழ அரசின் பிரஜாவுரிமை அதன் மத சார்பற்றஇ சாதி வேறுபாடற்ற தன்மைகள் போன்ற பல அடிப்படை விவகாரங்களை ஒரு சில பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் நுட்பமாகவும் இந்தத் தீர்மானம் தொகுத்திருக்கிறது. அதுமட்டுமல்லஇ தமிழீழத்தின் ஒரு பிராந்தியத்தை வேறொரு பிராந்தியமோ அல்லது ஒரு சமய அல்லது சமூகக் குழுவினரை இன்னொரு குழுவினரோ மேலாதிக்கம் செய்யாதிருக்கும் வகையில் ஜனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ அரசு அமையவேண்டும் என்றும் இத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இவற்றுக்கப்பால்இ உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்குத் தமிழீழத் தாயகத்தின் மீதான உரிமையைக் கூட இந்தத் தீர்மானம் நிறுவுகின்றது.இத் தீர்மானத்துக்கு 77இல் கிடைத்த மக்களாணையை அடிப்படையாகக் கொண்டே பின்னாட்களில் தொடர்ந்த தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது (கிளிநொச்சியில் 2002 சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டில் தேசியத் தலைவர் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

 

(அளப்பரிய தியாகங்களைப் புரிந்துஇ தமிழீழ அரசு அமைக்கப்படும் வரை அஞ்சாது போராடுவதற்கான வேண்டுகோளை பொதுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் அனைவருக்கும்இ குறிப்பாக இளைஞர்களுக்கும்இ இந்தத் தீர்மானம் அறைகூவலாக விடுத்திருந்தது. தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயற்திட்டமொன்றை வகுக்குமாறு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இந்தத் தீர்மானம் பணித்திருந்தது. தமிழீழம் சமதர்ம அரசாக இருக்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கூறுகிறது. (இது அன்றைய பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திற்குரிய உலக ஒழுங்கைக் கருத்திற்கொண்டு பார்க்கப்படவேண்டியது.)

 

தந்தை செல்வா மறைந்த பின்னர் (மீளவும்) உருவான தலைமை தமக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை செயற்படுத்தவில்லை. தமிழீழத்திற்கான அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதற்கு வடக்குஇ கிழக்கில் தெரிவான பிரதிநிகள் செயலாற்றவில்லை. இதனால் இளையோர் வெறுப்படைந்தனர். ‘கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்' என்பது போன்றவாசகங்களை தெருச் சுவர்களில் எழுதி தமது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை மீதான தமது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள். இதைத்தொடர்ந்து இராணுவரீதியாக தமிழ் இளையோர் அந்த மக்களாணைக்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றனர். இதுவே ஆயுதப்போராட்டம் தீவிரமடைவதற்கான அரசியல் அடிப்படையைக் காட்டுகிறது.

 

இன அழிப்பின் ஆழத்தை இன்று கூட தெளிவாக எம்மவர் எடுத்தியம்பும் ஆற்றலை வளர்த்துக்கொண்டிராத அல்லது வளர்த்துக்கொள்ள ‘விரும்பாத‘ ஒரு சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றே சிங்களப் பெருந்தேசியவாதிகளின் நுட்பமான பண்பாட்டு இன அழிப்பு (Cultural Genocide) மற்றும் திட்டமிட்ட தாயக மண்பறிப்பு (ஊழடழnளையவழைn)போன்றவற்றை விடுதலைக்கான தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக எடுத்தியம்பியிருக்கிறது. சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழர்களைப் பொறுத்தவரை சட்டவிரோதமானது என்பதையும் அது தமிழர்களை ஆக்கிரமித்து அடிமைத் தேசிய இனமாக்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டு காலனித்துவ சக்திகளுக்குப்பின் சிங்களப் பெருந்தேசியவாதத்தை ஓர் புதிய ஆக்கிரமிப்புச்சக்தியாக இத் தீர்மானம் இனம் காண்கிறது.

 

இந்த வகையில் இத் தீர்மானத்தின் அரசியற் கனதியானது 34 வருடங்களுக்கு முன்பே எந்த அளவு ஆழமானதாயிருந்ததென்பது இன்றைய இன அழிப்புப் போரொன்றின் (ஈழப்போர்-4) முடிவில் உலக மனச் சாட்சியின் கதவுகளைத் தட்டும் புலம் பெயர் தமிழர்களால் மீள உறுதிசெய்து காட்டப்படவேண்டியதாகிறது.

 

ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரலாற்றுப் பக்கங்களில் குறிப்பிடப்படுவதற்கான ஒரு வெறும் ‘பழைய மைல்கல்' நிகழ்வு மட்டும் அல்லஇ தொடர்ந்து வந்த அளப்பரிய அர்ப்பணிப்புகளாலும் எதிரி மட்டுமன்றி பலவேறுபட்ட சக்திகளின் அநீதியான அணுகுமுறைகளாலெல்லாம் எல்லை மீறிக் கனதிப் படுத்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான மக்கள் ஆணை.

 

வட்டுக்கோட்டையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் நந்திக்கடலில் நடந்த சமருடன் முடிவடைந்துவிட்டதாக இராசபக்சே  அரசு தனது 18 மே 2009 ‘வெற்றிப்பிரகடனத்தில்' முழங்கியது. இது எந்த அளவுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் னநாயக அரசியல் தார்ப்பரியத்துக்கு சிறிலங்கா அரசு அச்சம் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் (இன்னும் பல முக்கியமான கேள்விகள் உள்ளன)

 

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி 34 ஆண்டுகள் கடந்து விட்டது. இதற்குப் பிறகு எத்தனையோ நல்லது கெட்டது எல்லாம் நடந்து முடிந்து நாங்கள் நன்றாக களைத்துப்போன நிலையில் இருக்கின்றோம். இதை ஏன் இப்போது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்? முதலில் இருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டுமா?

 

Ψ சர்வதேச சக்திகள் பலவும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடலாம் என்று நினைக்கின்றன. இந்த நிலையில் எமது தீர்க்கமான முடிவை ஜனநாயக ரீதியில் எடுத்துரைப்பது அவசியம்.

 

Ψ முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் ஸ்ரீலங்காவின் உந்துதலில் சில நாடுகள் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேசியக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு எந்தவிதமான தீர்வையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதற்கும் இடமுண்டு. Pழளவ உழகெடiஉவ என்றும் Pழளவ டுவுவுநு என்றும் தற்போதைய நிலையை இவர்கள் வர்ணிக்க முயல்கின்ற போதும்இ ஈழத்தமிழர்களாகிய எமது உண்மை நிலை Pழளவ ளுசi டுயமெயn என்பதை வர்ணிக்க வேண்டும்.

 

Ψ மேற்குலக நாடுகளின் அரசியல் பண்பாட்டைப் பின்பற்றி மக்கள் ஆணையை முறைக்குமுறை மீள் உறுதி செய்வதுஇ எமது கோரிக்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.

 

Ψ இலங்கைத் தீவின் அரசியலில்இ பரிட்சயம் இல்லாத தற்போதைய இளைய சமுதாயத்தினர்க்கு எமது தேசிய நிலைப்பாடுக் குறித்த ஒரு அரசியல்இ சரித்திர அறிவை வளர்க்க இம்முயற்சி உதவும்.

 

Ψ ஒரு பாரிய இனவழிப்பிற்கு பின்னரும் எமது தேசிய இலக்கை திசை திருப்ப முயலும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய முயற்சி ஒரு எச்சரிக்கையாக அமையும்.

 

Ψ 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மக்களாணைக்குப் பின்இ பல தசாப்தங்கள் கடந்த நிலையில்இ குறிப்பாக 1959ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் ஜனநாயக ரீதியாக தமது தமிழீழத்திற்கான ஆணையை கருத்துச் சுதந்திரம் உள்ள நாடுகளில் தற்போதுதான் முதன்முறையாக இதற்காக வாக்களிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

 

Ψ பிறசக்திகளின் நிர்பந்தங்களின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பின்னால் உருவாக்கப்பட்ட முன்னெடுப்புகள் (திம்பு முதல் ஒஸ்லோ வரை) சுயநிர்ணய உரிமைஇ உள்ளக சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை மாத்திரமே கருத்தில் கொண்டவை. தற்போதுஇ தமிழீழம் மாத்திரமே எமது குறிக்கோள் என்பதை மீளவும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

 

முள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதுகூடஇ எதுவும் செய்யாது மௌனமாக இருந்த சர்வதேசம்இ இந்த வாக்கெடுப்பின்மூலம் மட்டும் திரும்பிப் பார்க்கும் என்று நினைக்கின்றீர்களா?

 

சர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சாக்கு போக்கு சொல்ல இனிமேல் வாய்ப்பில்லை. ஸ்ரீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறல்இ போர்க்குற்றம்இ இன அழிப்பு புரிந்ததாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. ஐ.நாஇ மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கொசோவோ மக்கள் போல ஈழத் தமிழர்களும் தனிநாடுதான் ஒரே தீர்வு என்று கேட்கும் உரிமை மேலும் வலுப்பட்டுள்ளது.

 

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்பதுபோலஇ இத்தருணத்தை தமிழ் மக்கள் தக்க முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அண்மையில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று முடிந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாகவும் இன அழிப்புக் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பிரான்ஸ் நாடு இன அழிப்பிற்கு எதிரான நீதிமன்றம் அமைக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானம், மக்கள் அவை, நாடுகடந்த அரசாங்கம் என்று மூன்று வேலைத்திட்டங்கள் எல்லாம் ஒன்றா அல்லது வெவ் வேறா?

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள அரசியல் கோட்பாடுகள்தான் எல்லாவற்றிர்க்குமே அடிப்படை. இது ஒரு தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் சனநாயக செயற்பாடேயொழிய, கட்டமைப்பு அல்ல. மக்களவை இந்த தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் இயங்கப்போகும் நாடு தழுவிய மக்கள் கட்டமைப்பு.

 

நாடு கடந்த அரசாங்கம் என்று குறிப்பிடப்படுவது தேச எல்லைகள் தாண்டி அமைகின்ற ஒரு மக்கள் கட்டமைப்பு.

 

இவையிரண்டும் தமக்கே உரிய முறையில் நிலைக்குத்தாகவும் சமாந்திரமாகவும் தமிழீழம் என்ற ஒரே இலக்குக்காக தமக்குள் முரண்பாடின்றி ஒன்றித்தோ அல்லது ஒன்றினைந்தோ செயற்பட வேண்டியவை.

 

இவையிரண்டிற்கும் தனித்தனியேயான செயற்தளங்கள் உண்டு. இவ்விரு செயற்தளங்களிலும் தீவிரமாக எமது கொள்கையை முன்னெடுக்க வேண்டும்.
 

 

 


 

ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது “தமிழீழம்” என்ற கொள்கையும் “பிரபாகரன்” என்ற நாமமுமே!

 

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே “சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு” என்பதாகும்.

 

மக்களின் ஆணையை வென்றெடுக்க தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து அளப்பரிய தியாகங்களினூடாக போராட்டத்தை செவ்வனே வழிநடத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலையின் மறு உருவம். தனியரசு என்ற மக்களின் அரசியல் ஆணையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் செம்மையாகயும் குறிக்கோளில் இருந்து வழுவாதும் பாரிய அரசியல், இராணுவ சவால்களை எதிர்கொண்டும் செயற்பட்டவர் தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற சொல்லுக்கு பிரபாகரன் என்ற பெயரை பிரதியீடாக சொல்லுமளவிற்கு விடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டப் பாதைக்கூடாக நகர்த்திய பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. எனவே தமிழீழம் என்ற கொள்கையும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழ்மக்களை எப்போதும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் என்பதில் மறுகருத்து இருக்க முடியாது.

 

கட்டுரையின் நோக்கத்திற்காக சற்று பின்நோக்கிச் சென்று வரலாற்றை சுருக்கமாக மீளப் பார்ப்போம். 1949ம் ஆண்டு தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக்கட்சியினால் “சமஷ்டி” முறைமைக்குள் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிந்தைய காலங்களில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்க்க பல ஒப்பந்தங்கள் சிங்கள அரசாங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்டாலும் அவை சிங்கள அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன அல்லது கிழித்தெறியப்பட்டன.

 

மேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல்பரி அரசியல் யாப்பின் 29வது அரசியல் சட்டத்தின் சிறுபிரிவான “சிறுபான்மை இனங்களிற்கு பாதகமான முடிவு எடுக்கப்படாது” என்ற சிறுபாதுகாப்புச்சரத்தும் 1972ம் ஆண்டு அவ் அரசியல் யாப்பை சிங்களப்பேரினவாதம் தூக்கியெறிந்த போது முடிவிற்கு வந்தது. அதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட 1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் முக்கிய அரசியல் சரத்துக்களான - இலங்கை என்ற பெயர் சிறிலங்கா என்று பெயர் மாற்றப்பட்டதுடன், சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு, சிங்களம் மட்டும் ஆட்சிமொழி, கல்வியில் தரப்படுத்தல் போன்ற அரசியல்யாப்புச் சரத்துக்கள் சிறுபான்மையினங்களின் தேசியக்கோட்பாடு மற்றும் அரசியல் சாசன உரிமைகள் தொடர்பில் எந்தவித பாதுகாப்பையும் வழங்கவில்லை. இச்சம்பவம் இனவிடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை தமிழ்மக்களிற்கு உணர்த்தி நின்றது.

 

எனவே தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் தமக்கான அரசியல் உரிமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட தீர்மானமே “சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு” அமைப்பது என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடைவதற்கான ஆரம்ப செயல் திட்டங்களான “அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி தமிழ்த்தேசத்திற்கான அரசியல் யாப்பை உருவாக்குதல்” மற்றும் “தனியரசு நோக்கிய சாத்வீக போராட்டங்களை நடத்துதல்” என எடுக்கப்பட்ட தீர்மானங்களும், அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாக நடைமுறைப்படுத்தாமல் தட்டிக்கழித்து காலங்கடத்தினர். அத்தீர்மானத்தை நோக்கிய முனைப்பை தீவிரப்படுத்தாமல் அன்றைய தமிழ்த்தலைவர்கள் தங்களின் சுயநல அரசியல் இருப்பிற்காக தனியரசுத் தீர்மானத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர்.

 

மேலும் தனியரசே தமிழ்மக்களிற்கான அரசியல் அடைவு என்பது பெரும்பான்மை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை ஆகும். அதை அடைவதற்காக சாத்வீக வழியில் போராடுவோம் என்று கூறிவிட்டு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், தங்களின் அரசியல் இருப்பிற்காகவே செயன்முறையற்ற வழியில் நடந்தனர். அந்நிலையில் தமிழ்மக்களின் அரசியல் ஆணையை நிறைவேற்ற பல விடுதலை இயக்கங்கள் உருவாகி செயற்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சரியான பாதையில் தமிழ்மக்களின் போராட்டத்தை நடாத்திச்சென்றது என்று கூறுவது பொருத்தமானது. அதற்கான தலைமையை வழங்கிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்திலேயே ஆயுதப்போராட்டம் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒருமுனைப்பில் இலக்கு நோக்கி நகர்ந்தது. விடுதலைப்போருக்காக வீரத்துடன் போராடி 30,000 க்கும் மேற்பட்ட போராளிகள் அளப்பரிய தியாகங்களை செய்து மண்ணுக்காக விதைகுழிக்குள் உறங்குகின்றனர்.

 

குறிப்பாக “நாம் இரந்து கேட்கும் சமூகமாக இருக்கும் வரை எமது அரசியல் உரிமைப்போராட்ட நியாயம் யாருக்கும் எடுபடாது எனவே ஆயுதப்போராட்டத்தை முனைப்புப்படுத்தும் போது சிங்களப்பேரினவாதிகளும, சர்வதேச நாடுகளும், எமக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார்கள்? அப்போது மக்களின் அரசியல் பிரச்சனையை முன்வைப்போம்” என்ற தலைவர்

 

அவர்களின் சிந்தனைக்கான பெறுபேறுகள் இலங்ககைக்குள்ளிருந்தும் சர்வதேச மட்டங்களிலிருந்தும் கிடைத்தது. ஆனால் அத்தீர்வுத்திட்டங்கள் தமிழ்மக்களின் அரசியல்

 

அபிலாசையை அடையக்கூடியதாக இருக்காமல் அரைகுறைத்தீர்வை நோக்கியதாகவும் ஆயுதப்போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் சதிக்குமான காலமாக கடந்தகால பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதே அன்றி! நிரந்தர அரசியல் தீர்விற்கானதாக இருக்கவில்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் நேரடி, மறைமுக உதவியுடன் பின்னடைவு அடைந்த நிலையில் தற்போதைய காலகட்டமானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு கடினமான காலமாக இருக்கின்றது. என்றாலும, தமிழ்மக்களின் போராட்ட நியாயங்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் விடயமாகவும் தமிழ்மக்களின் மனங்களின் விடுதலையின் அவசியத்தை மேலும் வலுப்படுத்தி நிற்கின்றது. எனவே தமிழ்மக்களிற்கான தற்போதைய அரசியல் தலைமைகள் காத்திரமான பங்கை வழங்கி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி மக்களை நகர்த்த வேண்டியது அவர்களுக்குரிய முதற்கடமை.

 

முக்கியமாக பெரும்பான்மை தமிழ்மக்களின் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பதில் தமிழ்மக்களிற்கு மாற்றுக்கருத்து என்றுமிருக்க முடியாது. அதற்காகவே 30,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்தினுடாகவே தமிழ்மக்களின் விடுதலைக்கோரிக்கையின் நியாயங்கள் வலுப்பெற்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்பான எந்தத் தீர்மானங்களும் கருத்துக்களும் தமிழ்மக்களின் அரசியல் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்ற கோட்பாட்டை கைவிடாமல் அந்த இலக்கை அடையக்கூடிய வகையிலேயே தீர்வுத்திட்டங்களாக இருந்தாலும் அரசியல் நகர்வுகளாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.

 

தற்போது அரசியல் களத்தில் இருப்பவர்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நோக்கி நகரக்கூடியதான தீர்மானங்களையும், அரசியல் நகர்வையும், சரிவர எடுத்து அடுத்த சந்ததியினருக்கு, விடுதலைத் தீர்மானத்தை சிறிதும் மாறாமல் பெற்றுக்கொடுப்பதோ அன்றி பொறுப்புக்கொடுப்பதாகவோ இருக்கலாமேயன்றி அந்த கொள்கை நிலையிலிருந்து கீழிறங்கி அல்லது சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பது சாத்தியமில்லை என்ற கருத்துக்களை விதைப்பதோ அல்ல. தனியரசு என்ற அரசியல் தீர்மானத்தின் சொந்தக்காரர்கள் மக்கள் மட்டுமே. ஏனெனில் 37 வருட போராட்ட காலத்தில் விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களும் மற்றும் சொல்லொணா துயரங்களைத் தாங்கிய மக்களும் மற்றும் வலுவையும், பலத்தையும் சேர்த்த புலம்பெயர் மக்களும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் அளப்பரிய தியாகங்களையும் உழைப்பையும் வழங்கிய நேரடிப்பங்காளர்கள் (ஒரு வகையில் போராளிகள் என்றும் சொல்லலாம்). இன்றும் அவர்கள் தமிழ்மக்களின் அரசியல் இலக்கு தொடர்பில் மாறுபாடில்லாத கருத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றனர்.

 

தாயகத்தில் நடைமுறை அரசு ஒன்றை நிறுவி, 19 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடாத்தி வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் இயங்குதளத்தில் செயற்பட முடியாத தற்சமயத்தில் தனது பிரதேசத்திற்கு வெளியே மக்களின் அரசியல் கோட்பாட்டை நிலைநிறுத்தியும் வலியுறுத்தியும் மக்களை ஒருங்கிணைத்தும் செயற்பாடுகளை

 

முன்னெடுக்கும் ஒரு நோக்கத்துடன் விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்டு அமைக்கப்படுவதற்கான எண்ணக்கரு நிலையில் இருப்பது “நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்” ஆகும். இவ் அரசாங்கமானது தமிழ்மக்களின் அரசியல் கோட்பாட்டை எந்த மாற்றமுமின்றி கடைப்பிடிக்கும் என தமிழ் மக்கள் எதிர்பாக்கின்றனர்.

அவர்களினது தற்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத்தனியரசு என்ற தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பானது, கோட்பாட்டிற்கான ஆதரவை மீளவலுப்படுத்தி நிற்கின்றது. மேலும் தற்போதைய இளம் சந்ததிக்கு முன்னோர்களின் அரசியல் விடுதலை எண்ணம், ஏக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் அரசியல் விடுதலைக் கோட்பாட்டின் மீதான உறுதிப்பாட்டையும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றது..

தமிழ்மக்களின் தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் இறைமையுள்ள தனியரசு என்ற அரசியல் கோட்பாட்டை இலக்காக வைத்து தங்களின் அரசியல் சாணக்கியத்தால் அடையக்கூடிய அரசியல் தீர்வுகளை அடைய வேண்டுமே தவிர அடிப்படைக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து செயற்படுவார்களானால் அது தமிழ்மக்களிற்கு இழைக்கும் மிகப்பெரும் அரசியல் தவறாகும். அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட அரசியல் வரலாற்றில் அம்மக்கள் கடந்தகாலங்களில் ஏமாற்றப்பட்ட சம்பவங்களை நேரடியாகவும் முழுமையாகவும் அறிந்தவர் தமிழ் மக்களின் தேசியத்தை பின்பற்றியிருக்கும் மூத்த அரசியல் தலைவரான திரு சம்பந்தர் அவர்கள். அடிப்படைக் கொள்கையிலிருந்து வழுவாது அதை அடையக்கூடிய சரியான பாதையில் மெதுவாக நகர்த்துவதே அவரின் அரசியல் முதிர்சியின் அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

 

தளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் இணை அமைப்புக்களும் சரியான முறையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான் செயற்பாடுகளை ஒன்றிணைந்து, ஒருமுகப்பட்டு, கருத்து பேதங்களை விடுத்து, சிறப்பாக செயற்பட வேண்டும் என தமிழ்ச்சமூகம் எதிர்பார்க்கின்றது. முக்கியமாக இவ் இரு தளத்திலுள்ள இரு அமைப்புகளும் சரியான தொடர்பாடலுடன் சரியான திட்டங்களை வகுத்து இரு தண்டவாளங்களில் செல்லும் ஒரு புகைவண்டியைப்போல தமிழ்மக்களின் அரசியல் விடுதலை இலட்சியத்தை நகர்த்தவேண்டும்.

 

தற்போதைய சூழலைப்பொறுத்தவரையில் தலைவர் சுதுமலைப்பிரகடனத்தில் தெரிவித்ததைப் போன்று “போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறாது” என்ற தத்துவ வரிகளிற்கு அமைவாக தற்போதைய பின்னடைவு நிலையிலிருந்து மீண்டு எழும் காலம் வரும் வரை, சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் சூழல்களை வெல்ல ஜனநாயக, அரசியல், ராஜதந்திர வழிகளினூடாக தமிழர்களின் இலட்சியம் நோக்கிய பயணத்தை தொடரவேண்டும்.

 

இது தலைமுறைக்கான போராட்டம். இளம் தலைமுறைக்கு விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்து விதைக்கப்பட்டு, அரசியல் கருத்தூட்டல் செய்யப்பட வேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அடுத்த தலைமுறைகளிற்கு போராட்ட உணர்வுகள் மருவாது பாதுகாக்க வேண்டும். அதேவேளை ஒன்றுபட்டிருக்கும் அவர்களது உணர்வுகளும் ஆதரவும் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு தேசவிடுதலை நோக்கி பயன்படுத்தப்பட வேண்டும்.

 

இஸ்ரேலிய மக்கள் தமது தாயகவிடுதலையை வென்றெடுக்க புலம்பெயர் தேசங்களில் இருந்த ய+தர்களை ஒன்றிணைத்து போராடி வென்ற சம்பவத்தை கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற விடுதலை வரலாற்றைப்போல, தமிழ்மக்களின் விடுதலைக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து “ஈழவிடுதலை நோக்கிய பயணம்” அவசியமாகும் காலம் வரலாம் என கருதாமலும் இருந்து விட முடியாது. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விடுதலைக்காக தியாகம் செய்யக்கூடிய மக்கள் சமூகத்தை கட்டி வளர்த்தெடுப்பது இப்பணிகளை முன்னெடுப்போரின் முதன்மையான கடமையாகும்.

 

“இறைமையுள்ள தனியரசு” என்ற கொள்கையும், அதை அடைவதற்காக தன்நம்பிக்கை தந்து விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவர் பிரபாகரன் என்ற நாமமும், எப்போதும் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டிவைத்து வழிநடத்தும் என்பதுடன் தமிழ்மக்களை ஒன்றிணைக்கும் சக்தியும் இருக்கின்றது. அதன் வழி தொடர்ந்து நம்பிக்கையுடனும் தியாக உணர்வுடன் செயற்படுவதே விடுதலையை வென்றெடுக்க அவசியமானதாகும்

                                                                                                         தமிழ் ப்ரியன் K.சுரேஷ்

 

 

 


 

 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன?

சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம்.

30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில், 1976 ஆம் ஆண்டு மே மாதம், தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

சுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர்க்கமுடியாதது என்பது மாத்திரமல்ல ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் ஒரே ஒரு மக்களாணை பெற்ற தீர்மானமும் இதுதான்.

இத் தீர்மானத்தின் அரசியல் முக்கியத்துவம் என்ன?

தமிழ் இறைமை (Tamil Sovereignty)) , தமிழ்த் தேசியம் (Tamil Nationhood), அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணஞ்செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty), இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின்னெப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான திறமை ஒன்றின் தேவைக்கான இடைவெளியை விட்டுவைக்காத அளவு மதிநுட்பத்துடனும், தந்தை செல்வா அவர்களினால் இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை செல்வா அவர்களே நேரடியாக இத்தீர்மானத்தை இதன் ஒவ்வொரு சொல்லையும் பகுப்பாய்வுசெய்து இயற்றினார் என்று A J Wilson எனும் அரசியல் வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கென்றே சிறப்பான முக்கியத்துவம் என்ன?

இதன் சிறப்பு என்னவென்றால், அடுத்தவருடம், அதாவது 1977ம் ஆண்டு, இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது பெருவாரியான வாக்குக்கள் மூலம் இத் தீர்மானத்திற்கு மக்களாணை வழங்கியமை. இதுவே தமிழீழத் தனியரசுக்காக இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாக்களித்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையாக விளங்குகிறது.

இதனால் தான் இதை நாம் இன்று மீளவும் ஜனநாயகமும் கருத்துச்சுதந்திரமும் வாழும் ஏனைய நாடுகளில் எடுத்தாளமுடிகிறது.

1977 இற்குப் பின்னர் தமிழீழம் குறித்த மக்களாணையை இலங்கைத் தீவில் ஜனநாயக முறையில் முன்வைக்கமுடியாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் (1979 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) கொண்டுவரப்பட்டது மட்டுமல்ல சிறிலங்காவின் அரசியல் யாப்பிலே 6ம் திருத்தம் என்ற திருத்தத்தையும் 1983 இல் கொண்டுவந்து தனிநாட்டுக்கோட்பாட்டை - அதாவது இந்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையை - யாப்புரீதியாகவே சிறிலங்கா அரசு மறுதலித்துவிட்டது.

இதனால் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான தமது மக்களாணையை மீளவும் ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முடியாத நிலையே தாயகத்தில் தொடர்கிறது.

இன்றுவரை இந்த 77ம் ஆண்டு மக்களாணையே இலங்கைத் தீவிலுள்ள ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதலாவதாக மட்டுமல்ல இறுதியாகவும் தமிழீழத் தனியரசுக்காக வெளிப்படுத்தக்கூடியதாகவிருந்த மக்களாணையாகும்.

1977ம் ஆண்டுத் தேர்தல் வேறு எந்த வகையில் முக்கியமாகிறது?


இந்த 77ம் ஆண்டுத் தேர்தலே, தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை, இறுதியாக, இராணுவக் கெடுபிடிகள், பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் இல்லாத நிலையில் சுதந்திரமான முறையில் நடந்த இறுதித் தேர்தலாகும்.

இது 1972ம் கொண்டுவரப்பட்ட சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சிக் குடியரசு யாப்பு அமைக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தீவில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தல்.

இதனால் இத் தேர்தலிலேயே வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் யாப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது, ஏனென்றால் தமிழீழ மக்கள் சுதந்திர நாட்டிற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அளித்த மக்களாணை தனது வரைபில் 1972ம் ஆண்டு யாப்பை தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதென்றும், சட்டவிரோதமானதென்றும் அதைத் தமிழர்கள் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த வகையில் இன்று வரையுள்ள சிறிலங்காவின் யாப்பை தமிழர்கள் நிராகரித்தமைக்கான சட்டப+ர்வமான ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தலுக்கான முக்கியத்துவமும் 77ம் ஆண்டின் தேர்தலுக்கு உண்டு.


வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு மேலதிக சிறப்பம்சங்கள் வேறு ஏதும் உண்டா?

ஒன்றிரண்டல்ல, பல உண்டு.

தமிழீழத் தனியரசு அமைக்கப்படவேண்டியதற்கான அரசியல், வரலாற்று நியதிகளையும், மனிதாபிமான நியாயப்பாடுகளையும் அமைக்கப்படவேண்டிய தமிழீழ அரசின் பிரஜாவுரிமை அதன் மத சார்பற்ற, சாதி வேறுபாடற்ற தன்மைகள் போன்ற பல அடிப்படை விவகாரங்களை ஒரு சில பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் நுட்பமாகவும் இந்தத் தீர்மானம் தொகுத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, தமிழீழத்தின் ஒரு பிராந்தியத்தை வேறொரு பிராந்தியமோ அல்லது ஒரு சமய அல்லது சமூகக் குழுவினரை இன்னொரு குழுவினரோ மேலாதிக்கம் செய்யாதிருக்கும் வகையில் ஜனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ அரசு அமையவேண்டும் என்றும் இத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கப்பால், உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்குத் தமிழீழத் தாயகத்தின் மீதான உரிமையைக் கூட இந்தத் தீர்மானம் நிறுவுகின்றது.

இத் தீர்மானத்துக்கு 77இல் கிடைத்த மக்களாணையை அடிப்படையாகக் கொண்டே பின்னாட்களில் தொடர்ந்த தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது (கிளிநொச்சியில் 2002 சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டில் தேசியத் தலைவர் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.)

அளப்பரிய தியாகங்களைப் புரிந்து, தமிழீழ அரசு அமைக்கப்படும் வரை அஞ்சாது போராடுவதற்கான வேண்டுகோளை பொதுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், இந்தத் தீர்மானம் அறைகூவலாக விடுத்திருந்தது.

தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயற்திட்டமொன்றை வகுக்குமாறு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இந்தத் தீர்மானம் பணித்திருந்தது.

தமிழீழம் சமதர்ம அரசாக இருக்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கூறுகிறது. (இது அன்றைய பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திற்குரிய உலக ஒழுங்கைக் கருத்திற்கொண்டு பார்க்கப்படவேண்டியது.)

தந்தை செல்வா மறைந்த பின்னர் (மீளவும்) உருவான தலைமை தமக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை செயற்படுத்தவில்லை. தமிழீழத்திற்கான அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதற்கு வடக்கு, கிழக்கில் தெரிவான பிரதிநிகள் செயலாற்றவில்லை. இதனால் இளையோர் வெறுப்படைந்தனர். ‘கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்’  என்பது போன்ற வாசகங்களை தெருச் சுவர்களில் எழுதி தமது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை மீதான தமது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து இராணுவரீதியாக தமிழ் இளையோர் அந்த மக்களாணைக்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றனர். இதுவே ஆயுதப்போராட்டம் தீவிரமடைவதற்கான அரசியல் அடிப்படையைக் காட்டுகிறது.

இன அழிப்பின் ஆழத்தை இன்று கூட தெளிவாக எம்மவர் எடுத்தியம்பும் ஆற்றலை வளர்த்துக்கொண்டிராத அல்லது வளர்த்துக்கொள்ள ‘விரும்பாத‘ ஒரு சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றே சிங்களப் பெருந்தேசியவாதிகளின் நுட்பமான  பண்பாட்டு இன அழிப்பு போன்றவற்றை விடுதலைக்கான தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக எடுத்தியம்பியிருக்கிறது.

சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழர்களைப் பொறுத்தவரை சட்டவிரோதமானது என்பதையும் அது தமிழர்களை ஆக்கிரமித்து அடிமைத் தேசிய இனமாக்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டு காலனித்துவ சக்திகளுக்குப்பின் சிங்களப் பெருந்தேசியவாதத்தை ஓர் புதிய ஆக்கிரமிப்புச்சக்தியாக இத் தீர்மானம் இனம் காண்கிறது.

இந்த வகையில் இத் தீர்மானத்தின் அரசியற் கனதியானது 34 வருடங்களுக்கு முன்பே எந்த அளவு ஆழமானதாயிருந்ததென்பது இன்றைய இன அழிப்புப் போரொன்றின் (ஈழப்போர்-4) முடிவில் உலக மனச் சாட்சியின் கதவுகளைத் தட்டும் புலம் பெயர் தமிழர்களால் மீள உறுதிசெய்து காட்டப்படவேண்டியதாகிறது.

ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரலாற்றுப் பக்கங்களில் குறிப்பிடப்படுவதற்கான ஒரு வெறும் ‘பழைய மைல்கல்’ நிகழ்வு மட்டும் அல்ல, தொடர்ந்து வந்த அளப்பரிய அர்ப்பணிப்புகளாலும் எதிரி மட்டுமன்றி பலவேறுபட்ட சக்திகளின் அநீதியான அணுகுமுறைகளாலெல்லாம் எல்லை மீறிக் கனதிப் படுத்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான மக்கள் ஆணை.

வட்டுக்கோட்டையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் நந்திக்கடலில் நடந்த சமருடன் முடிவடைந்துவிட்டதாக ராஜபக்ச அரசு தனது 18 மே 2009 ‘வெற்றிப்பிரகடனத்தில்’ முழங்கியது. இது எந்த அளவுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஜனநாயக அரசியல் தார்ப்பரியத்துக்கு சிறிலங்கா அரசு அச்சம் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் (இன்னும் பல முக்கியமான கேள்விகள் உள்ளன)

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி 34 வருடங்கள் கடந்து விட்டது. இதற்கு பிறகு எத்தனையோ நல்லது கெட்டது எல்லாம் நடந்து முடிந்து நாங்கள் நன்றாக களைத்துப்போன நிலையில் இருக்கின்றோம். இதை ஏன் இப்போது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்? முதலில் இருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டுமா?


    சர்வதேச சக்திகள் பலவும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடலாம் என்று நினைக்கின்றன. இந்த நிலையில் எமது தீர்க்கமான முடிவை ஜனநாயக ரீதியில் எடுத்துரைப்பது அவசியம்.

    முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் ஸ்ரீலங்காவின் உந்துதலில் சில நாடுகள் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேசியக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு எந்தவிதமான தீர்வையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதற்கும் இடமுண்டு. Post conflict என்றும் Post LTTE என்றும் தற்போதைய நிலையை இவர்கள் வர்ணிக்க முயல்கின்ற போதும், ஈழத்தமிழர்களாகிய எமது உண்மை நிலை Post Sri Lankanஎன்பதை வர்ணிக்க வேண்டும்.

    மேற்குலக நாடுகளின் அரசியல் பண்பாட்டைப் பின்பற்றி மக்கள் ஆணையை முறைக்குமுறை மீள் உறுதி செய்வது, எமது கோரிக்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.

    இலங்கைத் தீவின் அரசியலில், பரிட்சயம் இல்லாத தற்போதைய இளைய சமுதாயத்தினர்க்கு எமது தேசிய நிலைப்பாடுக் குறித்த ஒரு அரசியல், சரித்திர அறிவை வளர்க்க இம்முயற்சி உதவும்.

    ஒரு பாரிய இனவழிப்பிற்கு பின்னரும் எமது தேசிய இலக்கை திசை திருப்ப முயலும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய முயற்சி ஒரு எச்சரிக்கையாக அமையும்.

    1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மக்களாணைக்குப் பின், பல தசாப்தங்கள் கடந்த நிலையில், குறிப்பாக 1959ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் ஜனநாயக ரீதியாக தமது தமிழீழத்திற்கான ஆணையை கருத்துச் சுதந்திரம் உள்ள நாடுகளில் தற்போதுதான் முதன்முறையாக இதற்காக வாக்களிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

    பிறசக்திகளின் நிர்பந்தங்களின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பின்னால் உருவாக்கப்பட்ட முன்னெடுப்புகள் (திம்பு முதல் ஒஸ்லோ வரை) சுயநிர்ணய உரிமை, உள்ளக சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை மாத்திரமே கருத்தில் கொண்டவை. தற்போது, தமிழீழம் மாத்திரமே எமது குறிக்கோள் என்பதை மீளவும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

முள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதுகூட, எதுவும் செய்யாது மௌனமாக இருந்த சர்வதேசம், இந்த வாக்கெடுப்பின்மூலம் மட்டும் திரும்பிப் பார்க்கும் என்று நினைக்கின்றீர்களா?

சர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சாக்கு போக்கு சொல்ல இனிமேல் வாய்ப்பில்லை. ஸ்ரீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு புரிந்ததாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. ஐ.நா, மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கொசோவோ மக்கள் போல ஈழத் தமிழர்களும் தனிநாடுதான் ஒரே தீர்வு என்று கேட்கும் உரிமை மேலும் வலுப்பட்டுள்ளது. “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்பதுபோல, இத்தருணத்தை தமிழ் மக்கள் தக்க முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அண்மையில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று முடிந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாகவும் இன அழிப்புக் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பிரான்ஸ் நாடு இன அழிப்பிற்கு எதிரான நீதிமன்றம் அமைக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், மக்கள் அவை, நாடுகடந்த அரசாங்கம் என்று மூன்று வேலைத்திட்டங்கள் எல்லாம் ஒன்றா அல்லது வெவ்வேறா?


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள அரசியல் கோட்பாடுகள்தான் எல்லாவற்றிர்க்குமே அடிப்படை. இது ஒரு தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் ஜனநாயக செயற்பாடேயொழிய, கட்டமைப்பு அல்ல. மக்களவை இந்த தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் இயங்கப்போகும் நாடு தழுவிய மக்கள் கட்டமைப்பு. நாடு கடந்த அரசாங்கம் என்று குறிப்பிடப்படுவது தேச எல்லைகள் தாண்டி அமைகின்ற ஒரு மக்கள் கட்டமைப்பு. இவையிரண்டும் தமக்கே உரிய முறையில் நிலைக்குத்தாகவும் சமாந்திரமாகவும் தமிழீழம் என்ற ஒரே இலக்குக்காக தமக்குள் முரண்பாடின்றி ஒன்றித்தோ அல்லது ஒன்றினைந்தோ செயற்பட வேண்டியவை. இவையிரண்டிற்கும் தனித்தனியேயான செயற்தளங்கள் உண்டு. இவ்விரு செயற்தளங்களிலும் தீவிரமாக எமது கொள்கையை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது புலம்பெயர் சூழலில் முழு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் மீள உறுதிப்படுத்தப்படுகிறதா?


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூல அடிப்படையான மக்களாணைப் பெற்ற சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்பதை மீள் உறுதிப்படுத்துவதே இவ்வாக்கெடுப்பின் குறிக்கோளாகும்.
 

 


 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று வெகுமானம்!

நக்கீரன்

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இந்த உண்மையை நோர்வே, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் எண்பித்துள்ளார்கள். விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானப் பற்றிய வாக்குக் கணிப்பு
(Referendum)  நடைபெற இருக்கிறது.
(
இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக விழும் வாக்குகளைவிட அதன்பின்னால் உள்ள மக்களது வேட்கையும் துடிப்பும் முக்கியமானது. தேர்தல் நாளன்று அந்தளவு தூரம் ஆர்வம் கரை புரண்டோடியது. எண்பது அகவை தாண்டிய பாட்டன் பாட்டி ஆகியோரைக் பேரப்பிள்ளைகள் கைத்தாங்கலாகப் பிடித்து வந்து வாக்களிக்க வைத்தார்கள்!

கனடாவில் நடந்த தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மக்கள் அந்த வாக்குச் சாவடியில் கண்ட காட்சி அவர்களைப் மலைக்க வைத்தது. ஒரு சாவடியில் 50 க்கும் மேலான தேர்தல் அலுவலகர்கள், தொண்டர்கள் பணியாற்றினார்கள். நாடுமுழுதும் 2,000 தொண்டர்கள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

ஒரு பொதுத் தேர்தலைவிட மிகவும் சுறு சுறுப்பாகவும் விறு விறுப்பாகவும் இந்த வாக்கெடுப்பு நடந்தது. பொதுத்தேர்தலில் வழக்கமாக ஒரு சாவடியில் 400 வாக்குகளே நாள் முழுதும் விழும். ஆனால் இந்த வாக்களிப்பு நிலையங்களில் ஒரு மணித்தியாலத்துக்கு 600 வாக்குகள் போடப்பட்டன. இதைப் பார்த்து இந்தத் தேர்தலை நடத்திய
ES&S என்ற நிறுவனம் வியப்புத் தெரிவித்தது.

ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத சில அரைவேக்காடுகள் அல்லது சிங்கள அரசின் கைக்கூலிகள் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று அவமானம்” என்று ஊர் பேர் தெரியாத ஒருவரோ பலரோ “புதினப்பார்வை” என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு ஒரு அரசியல் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

“கீரைக் கடைக்கு எதிர்க்கடை வேண்டாமா?” “வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் வாழ்வின் வெகுமானம்” என்ற பாட்டு எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அல்லவா? அதற்கு எதிர்ப்பாட்டுத்தான் இந்த “அவமானம்” என்ற எதுகை!

வெகுமானத்துக்கு அவமானம் எதுகை. வட்டுக்கோட்டைக்கு எதுகை வேண்டாமா? “ஒட்டுமொத்தத்தில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்கெடுப்பு என்பது -
கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது” என்ற இமாலயக் கண்டுபிடிப்பு!

இந்தக் கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசே கொடுக்கலாம். குடியரசு என்ற நூலை எழுதிய பிளாட்டோ கூட இதனைக் கண்டு பிடித்திருக்க முடியாது!

“இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது. இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன” என்பது இன்னொரு கண்டு பிடிப்பு. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். குழப்பம் இவர்களுக்குத்தான்!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்றுப் பின்னணியைச் சொல்லிவிட்டு “இவ்வளவு அழிவுக்கும் பின்பு - 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது - அவ்வளவு தியாகங்களையும் அவமதிப்பது போன்றது 30 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தந்துவிட்ட அந்த அரசியல் ஆணையைச் சிறுமைப்படுத்துவது போன்றத' என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற தோரணையில் புதினப் பார்வை இருக்கிறது.

இதில் எங்கே இருக்கிறது சிறுமை? ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க தீர்மானத்தை மீள் வாசிப்பது எப்படிச் சிறுமையாகும்? 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது 1977 இல் 18 அகவை அடைந்தவர்கள்தான் வாக்களித்திருப்பார்கள். அதாவது 1949 ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள்தான் வாக்களித்து இருக்க முடியும். அதன் பின் பிறந்தவர்களுக்கு – ஒரு தலைமுறைக்கும் மேலானவர்களுக்கு - அந்த வாய்ப்பில்லை. எனவே இப்போது நடைபெறும் மீள் வாக்களிப்பு அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது. இது மக்களாட்சி முறைமைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நாடாளுமன்றத்துக்கு ஏன் அய்ந்து அல்லது ஆண்டுக்கொருமுறை தேர்தல் நடைபெறுகிறது? ஏன் இருபது முப்பது ஆண்டுகளுக்கொருமுறை தேர்தல் வைக்கவில்லை? மக்கள் ஆணை அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும். அதே போன்றுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நியாயப்படுத்த மீள் வாக்கெடுப்பும் மக்கள் 1977 இல் கொடுத்த ஆணையைப்
(Remandating the political  validity of the present  fundamentals of Vaddukkoddai Resolution)  புதுப்பித்தலும் ஆகும்.

தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப் படுத்துபவர்கள் தாங்கள் மற்றவர்களை விட மேலான தேசியவாதிகள் என நடித்துக் கொண்டு அந்தத் திருப்பணியைச் செய்கிறார்கள். அதாவது போப்பாண்டவரை விடத் தான் தீவிரமான கத்தோலிக்கன் என்று சொல்பவன் கதையை ஒத்தது. அதைத்தான் புதினப்பார்வை செய்துள்ளது! இதோ இன்னொரு பார்வை:

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீது இப்போது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது - அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட 'தமிழீழம்' என்ற இலட்சியத்திற்காகப் போராடிய - விடுதலைப் புலிகளை எமது ஏக பிரதிநிதிகள் என்று கூறி உலக வீதிகளில் இறங்கி நாம் நடத்திய போராட்டங்கள் எல்லாவற்றையும் நாமே கொச்சைப்படுத்துவது போன்றது.”

கொச்சைப்படுத்துவது நாம் அல்ல. இந்த அரசியல் கட்டுரையை எழுதியுள்ள புதினப்பார்வை. அது சரி. நாமே கொச்சைப்படுத்துவது போன்றது என்று சொன்னால் போதுமா? அதற்கான காரண காரியங்களைச் சொல்ல வேண்டாமா? அடுத்த வரியில்தான் புதினப்பார்வை எவ்வளவு ஞானசூனியம் என்பதைச் சொல்லிவிடுகிறது.

“2009 மே மாதத்திற்கு முன்னால் இந்த மீள்வாக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது வேறு கதை.” அட பாபமே! அது வேறு கதை அல்ல! அதுதான் கதை! நோர்வே நாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு மே 10 ஆம் நாள் நடந்தது. அதற்கான பணிகள் அதற்கு மூன்று மாதங்கள் முன்னால் தொடங்கி விட்டன. ஏனைய நாடுகளில் கள நிலை காரணமாக வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது. அதுதான் உண்மை.

மீண்டும் “விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இலக்கான 'தமிழீழம்' எனப்படுவது தான் தமிழ் மக்களின் அரசியல் அவாவும் கூட என்பதை இந்த உலகிற்கு வலியுறுத்த அது உதவியிருக்கலாம். அத்தோடு - விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர் 'தமிழீழம்' எனப்படுவது ஒர் அரசியலற்ற கோட்பாடு அல்ல அது ஆயுத ஆளுமைக்கு முன்னானது போன்றவற்றை இந்த உலகிற்கு நிரூபிப்பதற்கும் துணை புரிந்திருக்கலாம். அந்த வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கூட அழிவிலிருந்து காப்பாற்றி - தமிழர்களுக்கான தலைமையையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவியிருக்கலாம்” என மனம் போன போக்கில் எந்த அடிப்படையும் இல்லாது புதினப்பார்வை புலம்புகிறது. இது ஒரு பாமரத்தன்மையான மதிப்பீடாகும்.

உலக நாடுகளுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றித் தெரியாதா? அவ்வளவு அறிவிலிகளா அவை?

உண்மை என்னவென்றால் 11ஃ9 க்குப் பின்னர் உலகம் ஆயுதப் போராட்டங்களை பயங்கரவாதமாகவே பார்த்தது. நல்ல பயங்கரவாதி கெட்ட பயங்கரவாதி என்ற வேறுபாடு உலக ஒழுங்கில் இல்லாமல் போய்விட்டது.

கொசோவோ ஆயுதப் போராட்டம் மட்டும் விதி விலக்கு. பூகோளகேந்திர நலம் காரணமாக - அய்ரோப்பாவில் அல் கெய்தா தீவிரவாதிகள் கால்பதித்துவிடுவார்களோ என்ற பயம் காரணமாக - கொசோவோ முஸ்லிம்களுக்கு தனிநாடொன்றை மேற்குலகம் பிரித்துக் கொடுத்தது.

இதோ புதினப் பார்வையின் மற்றுமொரு குருட்டுப் பார்வை. அதிசய கண்டுபிடிப்பு.

“இன்னொரு பக்கத்தில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான இந்த மீள் வாக்கெடுப்பை - நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியுடன் சிலர் குழப்பப் பார்க்கின்றார்கள். 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள் வாக்கெடுப்பு எனப்படுவது 'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைக்கும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் என்றும் கற்பிதம் செய்யப்படுகின்றது. ஆனால் - உண்மையில், சில தனிப்பட்ட ஆட்கள் இந்த இரண்டு முயற்சிகளிலும் தொடர் பட்டுள்ளார்கள் என்பதைத் தவிர - நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கும் முயற்சிக்கும் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்குப் பதிவுக்கும் கோட்பாட்டு ரீதியான எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.”

அறியாமையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு வீட்டின் வரைபடம். நாடுகடந்த தமிழீழ அரசு என்பது அதன் கட்டுமானம். அது மக்கள் ஆட்சிநெறிகளுக்கு அமைவாக உருவாக்கப்படும் அடையாள
(symbolic)  அரசு. அதன் ஓரே குறிக்கோள் புலம்பெயர் தமிழர்கள் சார்பாக ஒரே குரலில் அனைத்துலக அரசியல், இராசதந்திர மட்டத்தில் பேச முடியும். அந்த அரசில் அமைச்சர் அவை இருக்கும் ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இருக்க மாட்டார். மத்திய வங்கி இருக்காது. வரி விதிப்பு இருக்காது.

நாடுகடந்த அரசு என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவை கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசு
(Transnational Government of Tamil Eelam) தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

தமது தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. ஸ்ரீலங்கா அரசு சட்ட அடிப்படையான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலை ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகின்றது.”

வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழ அரசு மட்டுமல்ல நாடளாவிய மக்கள் அவையும் இவற்றோடு தொடர்புள்ள ஒரு கட்டுமானந்தான்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தலைமைச் செயலகம்

செப்தெம்பர் 9, 2009 இல் வெளியிட்ட ஊடக அறிக்கை தெளிவு படுத்துகிறது.

“மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற சனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.”

இப்போதாவது “நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கும் முயற்சிக்கும் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்குப் பதிவுக்கும் “கோட்பாட்டு” அடிப்படையில் தொடர்பு இருப்பதை ஞானக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் ஊனக் கண்ணால் பார்த்தாவது புதினப்பார்வை புரிந்து கொள்ளுமா?

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மையக் கோட்பாடு எது என்பது பற்றியும் புதினப்பார்வைக்குப் புரியவில்லை.

யானை பார்த்த குருடர்கள் போல் “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைகளான - தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் ஒட்டுமொத்தமான வடிவமாகவே 'தமிழீழம்' என்ற கருத்துரு பிறப்பெடுத்தது" எனப் புதினப்பார்வை திரிபுவாதம் பேசுகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருப்பொருள் “ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயசார்பற்ற தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் தவிர்க்க முடியாததாகி விட்டது” என்பதுதான்.

 

(This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.)

 

கொலனித்துவ நாடுகளிடம் போர்க்களத்தில் இழந்த சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழ அரசை மீள் கட்டியெழுப்பி மீள் உருவாக்க வேண்டும் என்பதே வட்டுக்கோட்டைத் தீர்மனத்தின் அடிநாதம்!

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய ஒரு விளக்கமான கட்டுரையைப் பேராசிரியர் ஆ.க. மனோகரன் இன்போ தமிழ் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதனை உலகத்தமிழர் ஒருமுறைக்கு இருமறை மறுபதிப்புச் செய்துள்ளது. கட்டுரை முடிவில் புலம்பெயர் நாடுகளில் மக்கள் வாக்கெடுப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் பதினெட்டை அவர் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார்.

புதினப்பார்வைக்குக் கண் தெரிந்து ஆனால் கருத்துப் புரியவில்லை என்றால் அந்தக் கட்டுரையை ஒரு முறைக்குப் பலமுறை படித்துப் பார்த்துப் பயன் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
(உலகத்தமிழர் - டிசெம்பர் 25, 2009)

 

  

வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்பதுதான் என்ன? 

சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம்.

30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில், 1976 ஆம் ஆண்டு மே மாதம், தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். சுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர்க்கமுடியாதது என்பது மாத்திரமல்ல ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் ஒரே ஒரு மக்களாணை பெற்ற தீர்மானமும் இதுதான்.

இத் தீர்மானத்தின் அரசியல் முக்கியத்துவம் என்ன?

தமிழ் இறைமை (Tamil Sovereignty) தமிழ்த் தேசியம் (Tamil Nationhood) அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணஞ் செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty) இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும்  (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின்னெப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான திறமை ஒன்றின் தேவைக்கான இடைவெளியை விட்டுவைக்காத அளவு மதிநுட்பத்துடனும், தந்தை செல்வா அவர்களினால் இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தை செல்வா அவர்களே நேரடியாக இத்தீர்மானத்தை இதன் ஒவ்வொரு சொல்லையும் பகுப்பாய்வுசெய்து இயற்றினார் என்ற  A J. Wilson எனும் அரசியல் வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கென்றே சிறப்பான முக்கியத்துவம் என்ன?

இதன் சிறப்பு என்னவென்றால், அடுத்தவருடம், அதாவது 1977ம் ஆண்டு, இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது பெருவாரியான வாக்குக்கள் மூலம் இத் தீர்மானத்திற்கு மக்களாணை வழங்கியமை. இதுவே தமிழீழத் தனியரசுக்காக இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாக்களித்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையாக விளங்குகிறது. இதனால் தான் இதை நாம் இன்று மீளவும் ஜனநாயகமும் கருத்துச்சுதந்திரமும் வாழும் ஏனைய நாடுகளில் எடுத்தாளமுடிகிறது.

1977 இற்குப் பின்னர் தமிழீழம் குறித்த மக்களாணையை இலங்கைத் தீவில் ஜனநாயக முறையில் முன்வைக்கமுடியாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் (1979 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) கொண்டுவரப்பட்டது மட்டுமல்ல சிறிலங்காவின் அரசியல் யாப்பிலே 6ம் திருத்தம் என்ற திருத்தத்தையும் 1983 இல் கொண்டுவந்து தனிநாட்டுக்கோட்பாட்டை - அதாவது இந்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையை - யாப்புரீதியாகவே சிறிலங்கா அரசு மறுதலித்துவிட்டது.

இதனால் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான தமது மக்களாணையை மீளவும் ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முடியாத நிலையே தாயகத்தில் தொடர்கிறது. இன்றுவரை இந்த 77 ஆம் ஆண்டு மக்களாணையே இலங்கைத் தீவிலுள்ள ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதலாவதாக மட்டுமல்ல இறுதியாகவும் தமிழீழத் தனியரசுக்காக வெளிப்படுத்தக்கூடியதாகவிருந்த மக்களாணையாகும்.

1977ம் ஆண்டுத் தேர்தல் வேறு எந்த வகையில் முக்கியமாகிறது?

இந்த 77ம் ஆண்டுத் தேர்தலே, தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை, இறுதியாக, இராணுவக் கெடுபிடிகள், பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் இல்லாத நிலையில் சுதந்திரமான முறையில் நடந்த இறுதித் தேர்தலாகும். இது 1972ம் கொண்டுவரப்பட்ட சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சிக் குடியரசு யாப்பு அமைக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தீவில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தல்.

இதனால் இத் தேர்தலிலேயே வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் யாப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது, ஏனென்றால் தமிழீழ மக்கள் சுதந்திர நாட்டிற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அளித்த மக்களாணை தனது வரைபில் 1972ம் ஆண்டு யாப்பை தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதென்றும், சட்டவிரோதமானதென்றும் அதைத் தமிழர்கள் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த வகையில் இன்று வரையுள்ள சிறிலங்காவின் யாப்பை தமிழர்கள் நிராகரித்தமைக்கான சட்டபூர்வமான ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தலுக்கான முக்கியத்துவமும் 77ம் ஆண்டின் தேர்தலுக்கு உண்டு.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு மேலதிக சிறப்பம்சங்கள் வேறு ஏதும் உண்டா?

ஒன்றிரண்டல்ல, பல உண்டு.

தமிழீழத் தனியரசு அமைக்கப்படவேண்டியதற்கான அரசியல், வரலாற்று நியதிகளையும், மனிதாபிமான நியாயப்பாடுகளையும் அமைக்கப்படவேண்டிய தமிழீழ அரசின் பிரஜாவுரிமை அதன் மத சார்பற்ற, சாதி வேறுபாடற்ற தன்மைகள் போன்ற பல அடிப்படை விவகாரங்களை ஒரு சில பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் நுட்பமாகவும் இந்தத் தீர்மானம் தொகுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழீழத்தின் ஒரு பிராந்தியத்தை வேறொரு பிராந்தியமோ அல்லது ஒரு சமய அல்லது சமூகக் குழுவினரை இன்னொரு குழுவினரோ மேலாதிக்கம் செய்யாதிருக்கும் வகையில் ஜனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ அரசு அமையவேண்டும் என்றும் இத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கப்பால், உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்குத் தமிழீழத் தாயகத்தின் மீதான உரிமையைக் கூட இந்தத் தீர்மானம் நிறுவுகின்றது.இத் தீர்மானத்துக்கு 77இல் கிடைத்த மக்களாணையை அடிப்படையாகக் கொண்டே பின்னாட்களில் தொடர்ந்த தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது (கிளிநொச்சியில் 2002 சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டில் தேசியத் தலைவர் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

(அளப்பரிய தியாகங்களைப் புரிந்து, தமிழீழ அரசு அமைக்கப்படும் வரை அஞ்சாது போராடுவதற்கான வேண்டுகோளை பொதுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், இந்தத் தீர்மானம் அறைகூவலாக விடுத்திருந்தது. தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயற்திட்டமொன்றை வகுக்குமாறு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இந்தத் தீர்மானம் பணித்திருந்தது. தமிழீழம் சமதர்ம அரசாக இருக்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கூறுகிறது. (இது அன்றைய பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திற்குரிய உலக ஒழுங்கைக் கருத்திற்கொண்டு பார்க்கப்படவேண்டியது.)

தந்தை செல்வா மறைந்த பின்னர் (மீளவும்) உருவான தலைமை தமக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை செயற்படுத்தவில்லை. தமிழீழத்திற்கான அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதற்கு வடக்கு, கிழக்கில் தெரிவான பிரதிநிகள் செயலாற்றவில்லை. இதனால் இளையோர் வெறுப்படைந்தனர். ‘கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்' என்பது போன்ற வாசகங்களை தெருச் சுவர்களில் எழுதி தமது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை மீதான தமது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள். இதைத்தொடர்ந்து இராணுவரீதியாக தமிழ் இளையோர் அந்த மக்களாணைக்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றனர். இதுவே ஆயுதப்போராட்டம் தீவிரமடைவதற்கான அரசியல் அடிப்படையைக் காட்டுகிறது.

இன அழிப்பின் ஆழத்தை இன்று கூட தெளிவாக எம்மவர் எடுத்தியம்பும் ஆற்றலை வளர்த்துக்கொண்டிராத அல்லது வளர்த்துக்கொள்ள ‘விரும்பாத‘ ஒரு சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றே சிங்களப் பெருந்தேசியவாதிகளின் நுட்பமான பண்பாட்டு இன அழிப்பு (Cultural Genocide) மற்றும் திட்டமிட்ட தாயக மண்பறிப்பு (Colonisation)போன்றவற்றை விடுதலைக்கான தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக எடுத்தியம்பியிருக்கிறது. சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழர்களைப் பொறுத்தவரை சட்டவிரோதமானது என்பதையும் அது தமிழர்களை ஆக்கிரமித்து அடிமைத் தேசிய இனமாக்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டு காலனித்துவ சக்திகளுக்குப்பின் சிங்களப் பெருந்தேசியவாதத்தை ஓர் புதிய ஆக்கிரமிப்புச்சக்தியாக இத் தீர்மானம் இனம் காண்கிறது.

இந்த வகையில் இத் தீர்மானத்தின் அரசியற் கனதியானது 34 வருடங்களுக்கு முன்பே எந்த அளவு ஆழமானதாயிருந்ததென்பது இன்றைய இன அழிப்புப் போரொன்றின் (ஈழப்போர்-4) முடிவில் உலக மனச் சாட்சியின் கதவுகளைத் தட்டும் புலம் பெயர் தமிழர்களால் மீள உறுதிசெய்து காட்டப்படவேண்டியதாகிறது.

ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரலாற்றுப் பக்கங்களில் குறிப்பிடப்படுவதற்கான ஒரு வெறும் ‘பழைய மைல்கல்' நிகழ்வு மட்டும் அல்ல, தொடர்ந்து வந்த அளப்பரிய அர்ப்பணிப்புகளாலும் எதிரி மட்டுமன்றி பலவேறுபட்ட சக்திகளின் அநீதியான அணுகுமுறைகளாலெல்லாம் எல்லை மீறிக் கனதிப் படுத்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான மக்கள் ஆணை.

வட்டுக்கோட்டையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் நந்திக்கடலில் நடந்த சமருடன் முடிவடைந்துவிட்டதாக ராஜபக்ச அரசு தனது 18 மே 2009 ‘வெற்றிப்பிரகடனத்தில்' முழங்கியது. இது எந்த அளவுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஜனநாயக அரசியல் தார்ப்பரியத்துக்கு சிறிலங்கா அரசு அச்சம் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் (இன்னும் பல முக்கியமான கேள்விகள் உள்ளன)

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி 34 வருடங்கள் கடந்து விட்டது. இதற்கு பிறகு எத்தனையோ நல்லது கெட்டது எல்லாம் நடந்து முடிந்து நாங்கள் நன்றாக களைத்துப்போன நிலையில் இருக்கின்றோம். இதை ஏன் இப்போது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்? முதலில் இருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டுமா?

Ψ சர்வதேச சக்திகள் பலவும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடலாம் என்று நினைக்கின்றன. இந்த நிலையில் எமது தீர்க்கமான முடிவை ஜனநாயக ரீதியில் எடுத்துரைப்பது அவசியம்.

Ψ முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் ஸ்ரீலங்காவின் உந்துதலில் சில நாடுகள் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேசியக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு எந்தவிதமான தீர்வையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதற்கும் இடமுண்டு. Pழளவ உழகெடiஉவ என்றும் Pழளவ டுவுவுநு என்றும் தற்போதைய நிலையை இவர்கள் வர்ணிக்க முயல்கின்ற போதும், ஈழத்தமிழர்களாகிய எமது உண்மை நிலை Pழளவ ளுசi டுயமெயn என்பதை வர்ணிக்க வேண்டும்.

Ψ மேற்குலக நாடுகளின் அரசியல் பண்பாட்டைப் பின்பற்றி மக்கள் ஆணையை முறைக்குமுறை மீள் உறுதி செய்வது, எமது கோரிக்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.

Ψ இலங்கைத் தீவின் அரசியலில், பரிட்சயம் இல்லாத தற்போதைய இளைய சமுதாயத்தினர்க்கு எமது தேசிய நிலைப்பாடுக் குறித்த ஒரு அரசியல், சரித்திர அறிவை வளர்க்க இம்முயற்சி உதவும்.

Ψ ஒரு பாரிய இனவழிப்பிற்கு பின்னரும் எமது தேசிய இலக்கை திசை திருப்ப முயலும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய முயற்சி ஒரு எச்சரிக்கையாக அமையும்.

Ψ 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மக்களாணைக்குப் பின், பல தசாப்தங்கள் கடந்த நிலையில், குறிப்பாக 1959ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் ஜனநாயக ரீதியாக தமது தமிழீழத்திற்கான ஆணையை கருத்துச் சுதந்திரம் உள்ள நாடுகளில் தற்போதுதான் முதன்முறையாக இதற்காக வாக்களிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

Ψ பிறசக்திகளின் நிர்பந்தங்களின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பின்னால் உருவாக்கப்பட்ட முன்னெடுப்புகள் (திம்பு முதல் ஒஸ்லோ வரை) சுயநிர்ணய உரிமை, உள்ளக சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை மாத்திரமே கருத்தில் கொண்டவை. தற்போது, தமிழீழம் மாத்திரமே எமது குறிக்கோள் என்பதை மீளவும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

முள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதுகூட, எதுவும் செய்யாது மௌனமாக இருந்த சர்வதேசம், இந்த வாக்கெடுப்பின்மூலம் மட்டும் திரும்பிப் பார்க்கும் என்று நினைக்கின்றீர்களா?

சர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சாக்கு போக்கு சொல்ல இனிமேல் வாய்ப்பில்லை. ஸ்ரீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு புரிந்ததாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. ஐ.நா, மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கொசோவோ மக்கள் போல ஈழத் தமிழர்களும் தனிநாடுதான் ஒரே தீர்வு என்று கேட்கும் உரிமை மேலும் வலுப்பட்டுள்ளது.

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்பதுபோல, இத்தருணத்தை தமிழ் மக்கள் தக்க முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அண்மையில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று முடிந்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு சிறீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாகவும் இன அழிப்புக் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பிரான்ஸ் நாடு இன அழிப்பிற்கு எதிரான நீதிமன்றம் அமைக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

 

 

 

 

 

 

வட்டுக்கோட்டைத் தீர்மானம், மக்கள் அவை, நாடுகடந்த அரசாங்கம் என்று மூன்று வேலைத்திட்டங்கள் எல்லாம் ஒன்றா அல்லது வெவ் வேறா?

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள அரசியல் கோட்பாடுகள்தான் எல்லாவற்றிர்க்குமே அடிப்படை. இது ஒரு தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் ஜனநாயக செயற்பாடேயொழிய, கட்டமைப்பு அல்ல. மக்களவை இந்த தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் இயங்கப்போகும் நாடு தழுவிய மக்கள் கட்டமைப்பு.

 

நாடு கடந்த அரசாங்கம் என்று குறிப்பிடப்படுவது தேச எல்லைகள் தாண்டி அமைகின்ற ஒரு மக்கள் கட்டமைப்பு.

 

இவையிரண்டும் தமக்கே உரிய முறையில் நிலைக்குத்தாகவும் சமாந்திரமாகவும் தமிழீழம் என்ற ஒரே இலக்குக்காக தமக்குள் முரண்பாடின்றி ஒன்றித்தோ அல்லது ஒன்றினைந்தோ செயற்பட வேண்டியவை.

 

இவையிரண்டிற்கும் தனித்தனியேயான செயற்தளங்கள் உண்டு. இவ்விரு செயற்தளங்களிலும் தீவிரமாக எமது கொள்கையை முன்னெடுக்க வேண்டும்.

 

தற்போது புலம்பெயர் சூழலில் முழு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் மீள உறுதிப்படுத்தப்படுகிறதா?

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூல அடிப்படையான மக்களாணைப் பெற்ற சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்பதை மீள் உறுதிப்படுத்துவதே இவ்வாக்கெடுப்பின் குறிக்கோளாகும்.

 
 

தனி ஈழம் அமைய கனடா தமிழர்கள் 99.8% பேர் ஆதரவு

 

திங்கள்கிழமை, டிசம்பர் 21, 2009, 11:07[IST]

 

டொரான்டோ: இலங்கையில் தமிழர்களுக்கு என தனி நாடு அமைய வேண்டும் என கனடாவில் வசிக்கும் தமிழர்கள் ஒருமனதாக வாக்களித்திருக்கிறார்கள்.

இலங்கையில் தனி ஈழ நாடு அமைவதை தமிழர்களே விரும்பவில்லை என்பது போன்ற பிரச்சாரங்கள் இந்தியா உட்பட பல இடங்களில் பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளன.

இந்நிலையில் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் இதுதொடர்பான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு இந்த தேர்தலை முறைப்படி நடத்தியுள்ளது.

டொரான்டோ, மான்ட்ரியல், ஒட்டோவா, கார்ன்வால், ஒன்ட், வான்கூவர், எட்மான்டன் உள்ளிட்ட கனடாவின் 31 மையங்களில் 2,000 தன்னார்வலர்களைக் கொண்டு இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச பிரபலமான வட அமெரிக்காவைச் சேர்ந்த இஎஸ் அண்ட் எஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தொழில்முறைப்படி இந்த ஓட்டெடுப்பு பணிகள் நடந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை ஓட்டெடுப்பு நடந்தது. 50 முதல் 65 சதவீதம் வரை வாக்காளர்கள் திரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து கனடாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள் வாக்காளர்களாக கருதப்பட்டனர்.

கனடா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் தமிழர்களோடு, சிங்களவர்களும் அடக்கம். இதில் 48 ஆயிரத்து 583 பேர் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்துள்ளனர். ஓட்டளித்தவர் ஒவ்வொருவரின் முழு தகவலும் ஆவணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஓட்டளித்தவர்கள் ஒருமனதாக தனி ஈழத்திற்கு ஆதரவளித்துள்ளது ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்கும் என கருதப்படுகிறது. கனடா மட்டுமல்லாது நார்வே, பிரான்ஸ் ஆகிய இடங்களிலும் தனி ஈழத்திற்கு ஆதரவு முழுமையாக இருப்பதாக இந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஓட்டெடுப்பு முடிவு குறித்து கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் தர்ஷிகா செல்வசிவம் டொரான்டோவில் நிருபர்களிடம் கூறியதாவது:

கனடாவில் நாம் அனுபவி்த்துக் கொண்டிருக்கும் அடிப்படையான சுதந்திரம் மற்றும் உரிமைகள் இலங்கையில் கிடையாது. குறிப்பாக அங்குள்ள தமிழர்களுக்கு கிடையாது.

இந்த நிலைமையை உலகுக்கு ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தமிழர்களுக்கும் எதிராகவும், மீடியாக்களுக்கு எதிராகவும் இலங்கை அரசு நடத்தியுள்ள மனித உரிமை மீறல்களை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று விரும்புகிறோம்.

மேலும், இலங்கையில் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வாக தனி நாடு அமைப்பதே சிறந்ததாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கனடாவில் வாழும் தமிழர்களின் கருத்து என்னவென்பதை துல்லியமாக அறிவதற்காக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கனடா முழுக்க இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் பதிவான ஓட்டுகள் 48,583. இதில் 48 ஆயிரத்து 481 பேர் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு அமைவதை ஆதரித்துள்ளார்கள்.

85 பேர் தனி ஈழம் தேவையில்லை என ஓட்டளித்துள்ளனர். 17 ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த ஓட்டெடுப்பில் அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டனர் என்று அவர் கூறினார்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வரவேற்பு:

இந்த வாக்கெடுப்பு குறித்து கனடா படைப்பாளிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 99.82 விழுக்காடு கனடிய தமிழர்கள் வாக்களித்து வரலாறு படைத்துள்ளார்கள்.

சிங்கள – பவுத்த பேரினவாத அரசு தாயகத்தில் அகதிகள் முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் பசி, பட்டினியோடு வாடும் எமது உறவுகளைத் தொடர்ந்து ராணுவப் பிடிக்குள் வைத்திருக்கவும் வன்னி மண்ணில் படைத் தளங்களை உருவாக்கி 100,000 சிங்கள ராணுவத்தினரைக் குடியேற்றவும் திருகோணமலையில் மேம்பாடு என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடவும் எடுக்கப்படும் பின்னணியில் இந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.

வழக்கமாக ஒரு அரசு மட்டும் செய்யக் கூடிய பணியைக் கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு வியக்கத்தக்க விதத்தில் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தத் தேர்தலை மக்களாட்சி நெறிமுறைமைகளுக்கு இசைவாகவும் வெளிப்படையாகவும் அதே சமயம் இரகசியமாகவும் நடத்தி முடித்த இஎஸ் அன்ட் எஸ் என்ற தொழில்சார் கணிப்பு நிறுவனத்துக்கும் எமது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் வெற்றிகரமாக நடந்தேற வேண்டும் என வாழ்த்திய தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் நிறுவனர் சீமான் போன்றோருக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

நாங்கள்தான் “கனடிய தமிழர்களின் ஒன்றுபட்ட குரல்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்தத் தேர்தலை மதில்மேல் இருந்து வேடிக்கை பார்த்த கனடிய தமிழ்க் காங்கிரசுக்கும் எமது பாராட்டுதல்கள்.

பொதுவாக கனடாவில் நடைபெறும் மத்திய, மாகாண, உள்ளுர் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்களது எண்ணிக்கை 50 – 60 சதவீதத்தைத் தாண்டுவதில்லை. இந்த வாக்குக் கணிப்பில் வாக்களித்த தமிழர்களின் சதவீதம் குறைந்தது 60 என வைத்துக் கொண்டால் மொத்த வாக்காளர் தொகை 80,972 ஆகவே இருக்கும்.

ஒரு வீட்டில் இருக்கும் 5 பேரில் 3 பேர் 18 வயதுக்கும் மேலானவர்கள் என்று வைத்துக் கொண்டால் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,953 மட்டுமே. எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த எண்ணிக்கையின் எல்லை 1,75,000 என்பதே எமது இந்தப் பொழுது நிலைப்பாடாகும்.

எது எவ்வாறிருப்பினும் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கையையும் வாக்காளர்களின் எண்ணிக்கையையும் சரியாகக் கணக்கெடுக்கும் முயற்சியை கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்.

அப்படியான முயற்சி கனடிய பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு 2010 இல் நடக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல், மக்கள் அவைத் தேர்தல் ஆகியவற்றுக்கும் பயன்படும் என நம்புகிறோம்.

 

 


 

டிசெம்பர் 20, 2009


ரொரன்றோ


வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு கனடிய தமிழர்கள் 99.82 விழுக்காடு ஓம் எனத் தீர்ப்பு!
 

வ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயசார்பற்ற தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் தவிர்க்க முடியாததாகி விட்டது என உலகுக்கு முழங்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது நாடளாவிய கனடிய தமிழர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்குக் கணிப்பில் 48,583 (99.82 விழுக்காடு) வாக்காளர்கள் ஓம் என்றும் 85 வாக்குகள் (0.18) இல்லை என்றும் வாக்களித்துள்ளார்கள். பதினேழு வாக்குகள் செல்லுபடியாகாதென முடிவு செய்யப்பட்டது.

 

வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 99.82 விழுக்காடு கனடிய தமிழர்கள் வாக்களித்து வரலாறு படைத்துள்ளார்கள்.


கனடிய தமிழர்களின் தீர்ப்பு சிங்கள – பவுத்த பேரினவாத அரசு தாயகத்தில் ஏதிலி முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் பசி, பட்டினியோடு வாடும் எமது உறவுகளைத் தொடர்ந்து இராணுவப் பிடிக்குள் வைத்திருக்கவும் வன்னி மண்ணில் படைத் தளங்களை உருவாக்கி 100,000 சிங்கள இராணவத்தினரைக் குடியேற்றவும் திருகோணமலையில் மேம்பாடு என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடவும் எடுக்கப்படும் பின்னணியில் இந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.

 

வழக்கமாக ஒரு அரசு மட்டும் செய்யக் கூடிய பணியைக் கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு (Coalition for Tamil Elections Canada) வியக்கத்தக்க விதத்தில் செய்து சாதனை படைத்துள்ளது.

 

இந்தத் தேர்தலில் கடந்த இரண்டு மாதமாகப் பனியிலும் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி வாக்காளர் பற்றிய தரவுகளை எறுப்பு போல் சுறுசுறுப்பாகத் திரட்டிய ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.

 

தேர்தல் நாளன்று விறு விறுப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்திக் காட்டிய செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், தேர்தல் அலுவலர்கள் அனைவரையும் மனதாரப் பராட்டுகிறோம். குறிப்பாக இளைய சமூகத்தினருக்கு எமது பாராட்டுதல்கள்.

 

தேர்தல் நாளன்று போக்குவரத்து வசதியற்ற வாக்காளர்களை மெச்சத்தக்க விதத்தில் தங்கள் சொந்த வண்டிகளில் ஏற்றி இறக்கிய தொண்டர்களை உளமாரப் பாராட்டுகிறோம்.

 

இந்தத் தேர்தலை மக்களாட்சி நெறிமுறைமைகளுக்கு இசைவாகவும் வெளிப்படையாகவும் அதே சமயம் இரகசியமாகவும் நடத்தி முடித்த ES&S என்ற தொழில்சார் கணிப்பு நிறுவனத்துக்கு எமது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தேர்தல் வெற்றிகரமாக நடந்தேற வேண்டும் என வாழ்த்திய தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் நிறுவனர் சீமான் போன்றோருக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

 

இந்தத் தேர்தல் பற்றிய செய்திகளை வெளியிட்டும் ஒலி, ஒளிபரப்புச் செய்த CBC, City Pulse 24, Globe and Mail, Inside Toronto, The Christian Science Monitor போன்ற கனடிய நீரோட்ட ஊடகங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தேர்தல் பற்றிப் பரப்புரை செய்த தமிழ் ஊடகங்களுக்கு எமது பாராட்டுதல்கள். குறிப்பாக கனடிய தமிழ் வானொலி, தமிழ் ஸ்ரார் வானொலி, அனைத்துலக வானொலி, கீதவாணி, தமிழ்த் தொலைக்காட்சி, இணையதளங்கள் போன்ற ஊடகங்களுக்கு எமது பாராட்டுதல்கள்.

 

அவ்வப்போது வசதிக்கேற்ப புலிவேடம் போட்டு இப்போது அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு ஊரில் மழைபெய்தால் இங்கு குடை பிடிக்கிறார்கள் என வழக்கம் போல் நொட்டை சொல்வதையே தொழிலாகக் கொண்ட வானொலிக்கும் எமது “பாராட்டுதல்கள் மழைபெய்தால்தானே எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்!

 

அதே சமயம் தேர்தலை முற்றாக ஒதுக்கிய ஊடகங்களைத் தேசியத்தை நேசிக்கும் எமது உறவுகள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும் என அழைப்பு விடுகிறோம்.

 

நாங்கள்தான் “கனடிய தமிழர்களின் ஒன்றுபட்ட குரல்" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்தத் தேர்தலை மதில்மேல் இருந்து வேடிக்கை பார்த்த கனடிய தமிழ்க் காங்கிரசுக்கும் எமது பாராட்டுதல்கள். இப்படி வேடிக்கை பார்த்ததன் மூலம் தாங்கள் யார் என்பதைத் தங்களை அறியாமலே கனடிய மக்களுக்கு இனம் காட்டிக்கொண்டு விட்டார்கள். இனிமேலாவது இப்படிச் சுயவிளம்பரம் செய்து மகிழ்வதை நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம்.

 

மொத்தம் கிடைத்த வாக்குகள் 50,000 தாண்டவில்லையே என்பது சிலருக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது என்பது உண்மையே. இதற்கு முக்கிய காரணம் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை