தமிழனை முதலில் மூளையுள்ள தமிழனாக மாற்ற வேண்டும்

நக்கீரன்

மிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற போராட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இதையொட்டி
10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அவற்றை தமிழக அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமைதியான முறையில் போராடி வருகிறது.

இந்தப் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் மருத்துவர் ந. சேதுராமன் தமிழ் தேசிய இயக்க தலைவர் திரு.பழ. நெடுமாறன் ஆகியோர் தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள்.

ஆலய வழிபாட்டு மொழியாகத் தமிழ் ஆட்சி மொழியாகத் தமிழ்இ பயிற்று மொழியாகத் தமிழ் நீதிமன்ற மொழியாகத் தமிழ் திருமண விழாக்களில் தமிழ் இசை அரங்குகளில் தமிழிசை அங்காடிப் பெயர்ப் பலகைகளில் தமிழ் திரைப்படப் பெயர்களில் தமிழ் ஆகியவை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகளாகும்.

தமிழர் செய்து கொள்ளும் திருமணத்தை ஏன் புரியாத வடமொழியில் செய்ய வேண்டும்? ஏன் தமிழில் திருமணத்தை நடத்தக் கூடாது? கோயில்களில் வட மொழியில் ஏன் அர்ச்சனை செய்ய வேண்டும்? ஙஅர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் சொற்றமிழில் பாடுகங என இறைவன் கேட்டிருக்கிறாரே தமிழிசை இருக்க புரியாத தெலுங்கு இசை ஏன்? தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழில் ஏன் இருக்கக் கூடாது?

இந்தப் 10 அம்சக் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போராடி வந்தாலும் அவற்றை வணிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தலை விதி ஒவ்வொன்றுக்கும் ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமா? அதற்கோர் போராட்டம்.

தமிழ்வழியில் கல்வி இருக்க வேண்டுமா? அதற்கோர் போராட்டம்.

இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டுமா? அதற்கோர் போராட்டம்.

ஆல் இந்தியா ரேடியோ என்பதை அகில இந்திய வானொலி என்று அழைக்க வேண்டுமா? அதற்கோர் போராட்டம்.

தமிழ்நாடடு இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டுமா? அதற்கோர் போராட்டம்.

இப்படி எடுத்ததெற்கு எல்லாம் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த அவலம் வேறு எங்காவது உண்டா?

கர்நாடகத்தில் கன்னட மொழியைப் பாதுகாக்க இயக்கம் இல்லை. ஆந்திராவில் தெலுங்கு மொழியைப் பாதுகாக்க இயக்கம் இல்லை. கேரளத்தில் மலையாள மொழியைப் பாதுகாக்க இயக்கம் இல்லை.

ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே தமிழைப் பாதுகாக்க இயக்கம் தேவைப்படுகிறது.

இசைத்துறையை எடுத்துக் கொண்டால் ஆந்திராவில் தெலுங்கில் தான் இசைக்கச்சேரி நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் கன்னட பாடல்கள்தான் பாடப் படுகிறது.

கேரளாவில் மலையாள பாடல்கள்தான் பாடப் படுகிறது.

தமிழ் நாட்டில் மட்டும் தமிழிசைக்குப் பதில் கர்நாடக இசை கோலோச்சுகிறது.

இதில் வியப்பு என்னவென்றால் கர்நாடக சங்கீதம் பாடுகிறவனுக்கும் தெலுங்கு தெரியாது. கேட்கிறவனுக்கும் தெலுங்கு தெரியாது. சபாக்களை நடத்துகிறவனுக்கும் தெலுங்கு தெரியாது.

ஆனால் அந்த கீர்த்தனைகளைத்தான் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். எல்லாத் தகுதியும் கொண்ட தமிழ் கீர்த்தனைகளைவிட்டுவிட்டு புரியாத மொழி கீர்த்தனைகளை பாடுகின்ற அவல நிலை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.

இப்படிச் சொல்வது நானல்ல. சென்னையில் நடந்த முத்தமிழ்ப் பேரவை 29 ஆம் ஆண்டு இசைவிழாவில் தி.மு.க தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசியது.

தமிழ்ப் பாhதுகாப்பு இயக்கம் பத்துக் கோரிக்கைகள் குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் மார்ச் 22 முதல் மார்ச் 26 வரை தமிழ் தேசிய ஊர்திப் பயணம் மேற்கொள்வதுடன்இ நிறைவாக திருச்சியில் மூன்றாவது மொழிப்போர் அறிவிப்பு மாநாடு நடத்த இருக்கிறது.

இந்த மூன்றாவது மொழிப்போர் அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, தமிழீழம், அய்ரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தமிழறிஞர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ் தேசிய ஊர்தி பரப்புரை நடைபெற உள்ளது. மார்ச் 22 ஆம் நாள் திருமாவளவன் நாகையிலிருந்தும் மருத்துவர் இராமதாஸ் சென்னையிலிருந்தும் நெடுமாறன் கோவையிலிருந்தும் மருத்துவர் சேதுராமன் கன்னியாகுமரியிலிருந்தும் புறப்பட்டு வழிநெடுக ஊர்திப் பரப்புரை செய்ய உள்ளார்கள்.

தமிழ்நாட்டை 1967 இல் இருந்து திராவிட இயக்கக் கட்சிகளே மாறி மாறி 38 ஆண்டுகள் ஆட்சி செய்து வருகின்றன.

கலைஞர் கருணாநிதி மட்டும் நான்கு முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

அப்படி இருந்தும் 2005 ஆம் ஆண்டில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் ஒன்று தேவைப்படுவது இந்தக் கட்சிகளின் இயலாமையையும் தலைவர்களின் கையாலாகத் தன்மையையும் எடுத்துக் காட்டுவதாக  உள்ளது.

அறிஞர் அண்ணா ஒருவருக்கே தமிழ் மொழி மீதும் தமிழினத்தின் மீதும் உண்மையான பற்று இருந்தது. 1967இல் தேர்தலில் வென்று வந்து ஆட்சி அமைத்ததும் முதல் வேலையாக அந்நாள் மட்டும் மதறாஸ் ஸ்ரேட் என்று அழைக்கப்பட்டு வந்ததை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தார்.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் 10 அம்சக் கோரிக்கையை வைத்தாலும் தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்ற கோரிக்கைதான் சகல மட்டத்திலும் மூர்க்கத்தனமான எதிர்ப்பைப் தோற்றுவித்துள்ளது. சிலரது உண்மைத் தோற்றத்தைப் பார்க்கவும் உதவியுள்ளது.
நடிகர் கமலகாசன் தனது படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்.

அதனைத் தமிழில் மாற்றுமாறு கேட்டபோது நான் பாதி தமிழ் பாதி ஆங்கிலப் பெயர்தான் வைப்பேன். படத்தின் கதையை பார்த்தால் நான் பெயர் வைத்ததற்கான காரணம் தெரியும்ங என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சண்டியன் படப் பெயரை விருமாண்டி என மாற்றியதை அவர் வசதியாக மறந்து இப்படிச் சொல்லி இருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா என்ற இயக்குநர் தனது படத்திற்கு பி.எப். என்று பெயர் வைத்துவிட்டு அப்படித்தான் வைப்பேன் நானும் தமிழன்தான் பி.எப் என்றால் பெஸ்ட் பிரண்ட் என்று பொருள், படத்தின் பெயர் பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது என்று வீராப்பாக செவ்வி கொடுத்திருக்கிறார்.

மும்பை எக்ஸ்பிரஸ், பெஸ்ட் பிரண்ட் என்ற ஆங்கிலப் பெயர்களை மாற்றி தமிழ் பெயர் வைக்காவிட்டால் அப்படங்களைத் தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம். அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக மருத்துவர் இராமதாஸ்இ திருமாவளவன் அறிவித்துள்ளனர்.

இந்த மொழிப் போரில் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும் களத்தில் இறங்கியுள்ளார்.

ஙதமிழ் திரைப்படங்களைத் தடுத்தால் சும்மா இருக்க மாட்டேன் என்று இராமதாஸ் திருமாவளவனுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை செய்து காட்டமான நீண்ட அறிக்கை ஒன்றை சனவரி 30 அன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலிலுந்து அதிமுக ஆட்சியை விரட்டி அடிப்போம் என மருத்துவர் இராமதாஸ் ஒரு கூட்டத்தில் கூறியதுதான் ஜெயலலிதாவின் கோபத்தை கிளறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஜெயலலிதா தனக்கே உரித்தான சாக்கடை நடையில் மருத்துவர் இராமதாஸ் தொல். திருமாவளவன் இருவரும் தமிழ் பாதுகாப்பு என்ற பெயரில் போராட்டம் நடத்தும் போலி போராட்டவாதிகள் என்ற அர்ச்சனை செய்து இருக்கிறார்.

அவரது அறிக்கையில் இருந்து முக்கிய பகுதிகள்:

தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது அப்படி ஆங்கில பெயர் வைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின நிறுவனர் டாக்டர் ராமதாஸ்இ விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இரண்டு திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்தப் படங்களை தமிழகத்தில் எங்குமே திரையிட முடியாது திரையிட விடமாட்டோம் என்று அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை தங்கள் படத்துக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தப் பெயரைத்தான் வைக்கவேண்டும் என்பதற்கோ இந்தப் பெயரை வைக்கக் கூடாது என்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை.

மேலும், ஆங்கிலத்தில் பெயர் வைக்கக்கூடாது என்பதற்கு எந்த விதமான சட்டமும் கிடையாது. தங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இவர்கள திடீர் தமிழ் அபிமானிகளாக ஆகியிருக்கிறார்கள் இவர்களுடைய போராட்டம் வேடிக்கையானது.

இத்தனை காலம் இல்லாத தமிழுணர்வு இவர்களுக்கு திடீரென்று பொங்கிப் புறப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம்? அப்பட்டமான சுயநலம்தானே காரணம்? இந்த திடீர்த் தமிழ் அபிமானிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

வடமொழி பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கிற ராமதாஸ் தனது பெயரை தூய தமிழில் மாற்றிக்கொள்வாரா?

மாட்டார் ஊருக்குத்தானே உபதேசம் தமிழ் மக்களிடையே எழுச்சியை வளர்க்கும் வகையில் இவர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து தமிழ் தேசிய வாகனப் பயணம் தொடங்க இருப்பதாகவும் அந்தப் பயணம் திருச்சியில் முடிவடைய இருப்பதாகவும்இ அன்று இரவு திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் வளர்ச்சிக்காக விழிப்புணர்வு பயணம் தாராளமாக மேற்கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் திரைப்படத் துறைக்கு எதிராக வன் முறையைத் தூண்ட நினைத்தால் அதை அனுமதிக்க முடியாது. அதனை இந்த அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறை தனது கடமையைச் செய்யும். சொல்லுக்கும்இ செயலுக்கும் தொடர்பே இல்லாத இவர்கள் நடத்தும் எந்த போராட்டமும் மக்களிடத்தில் எடுபடாது.

தமிழக அரசு, பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறது. இதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு. பேரறிஞர் அண்ணா அவர்களின் கோட்பாடு ஆங்கிலத்திற்கு எதிரானது அல்ல. ஆனால்இ தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டம் ஆங்கில எதிர்ப்புப் போராட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தேவையற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின கொள்கைக்கு முரணானது.

நாய்க்கு எங்கே கல்லடி பட்டாலும் காலைத்தான் தூக்கும். அது போல தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்துக்கும் தி.முக தலைவர் கருணாநிதிக்கும் தொடர்பு இல்லாவிட்டாலும் அவரையும் வலிய வம்புச் சண்டைக்கு ஜெயலலிதா இழுத்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் குடும்பத்துக்குச் சொந்தமான தொலைக் காட்சிக்கு ஆங்கிலத்தில் சன்ரிவி என்றுதான் பெயர் வைத்திருக்கிறார் என்று கிண்டலாகப் பேசியுள்ளார்.

பொதுவாக ஜெயலலிதா எதைச் சொன்னாலும் அதற்கு மறுத்தான் அடிக்கும் கலைஞர் கருணாநிதி சன்ரிவி பற்றி எதையும் சொல்லாமல் மவுனம் அனுட்டித்துள்ளார். எதையாவதை சொல்லி நியாயப்படுத்தப் போனால் தடியைக் கொடுத்து அடி வாங்க நேரிடம் என்பது பழுத்த அரசியல்வாதியான அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஜெயலலிதா தனது சொத்தை வாதத்துக்கு வலிமை சேர்க்க அறிஞர் அண்ணாவைச் சாட்சிக்கு அழைத்துள்ளார். கோயில், குளம், தேர், தீர்த்தம் என்று அலைந்து திரியும் இந்து அடிப்படைவாதியான ஜெயலலிதாவுக்கு பகுத்தறிவாதியான அண்ணாவின் பெயரைச் சொல்ல எந்த அருகதையும் இல்லை.

அண்ணாவின் பெயரைக் கொண்ட திராவிடக் கட்சிக்கு அவர் தலைமை தாங்குவது ஒரு வரலாற்றுச் சறுக்கல் திராவிட என்ற பெயர் பெரியார் வைத்ததே அதில் பார்ப்பான் பாப்பாத்தி நுழையக் கூடாது என்பதற்காகத்தான்.

ஜெயலலிதா ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் தேவையற்றதுஇ பேரறிஞர் அண்ணா அவர்களின கொள்கைக்கு முரணானது என்று சொல்வது வடித்தெடுத்த முட்டாள்தனம்.

அண்ணாவின் இருமொழிக் கொள்கை திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை அனுமதிக்கிறது என்பது குதர்க்க வாதம். அது சாத்தான் வேதாகமத்தை மேற்கோள் காட்டுவது போன்றது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது அவர் தமிழ் மண்ணுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் கனவை நனவாக்கும் வண்ணம் 18-7-67 அன்று சட்டசபையில் அனைவரும் ஒரு குரலில் தமிழ் வாழ்க என்று முழங்க Madras State  என்ற பெயரை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய அரசியல் சட்ட ஒப்புதல் கேட்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அவரது இரு மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் தமிழும் வெளியுலகத் தொடர்புக்கு ஆங்கிலமும் பயன்படுத்தப் படவேண்டும் என்பதாகும். தமிழ்நாட்டில் தமிழோடு ஆங்கிலமும் இருக்கலாம் என்பதல்ல.

திரைப்படங்களுக்குப் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதைத் தடுக்கச் சட்டம் இல்லையென்றால் ஆட்சியில் உள்ள ஜெயலலிதா அதற்கான சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதுதான் முறை. அதுதான் வழி.

அதை விடுத்து ஆணவத்தோடு தமிழ் உணர்வாளர்கள் மீது பாய்வது அவரது அரசியல் ஞானசூனியத்தைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்ட உதவும்.

அண்மையில் ஜெயலலிதா திடீரென்று 1983 ஆம் ஆண்டிலும் பின்னர் 1984 ஆம் ஆண்டிலும் பிறப்பிக்கப்பட்ட இரண்டு அரசாணைகளை சுட்டிக்காட்டிஇ அந்த அரசாணைகளின்படி தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதி வைக்கப்பட வேண்டும் பிற மொழிகளிலும் பெயர்களை எழுதிவைக்க விரும்பினால் தமிழுக்கு அதிக இடம் ஒதுக்கப்பட வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆணைக்கு காரணம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கப் போராட்டம்தான். அதை ஜெயலலிதா ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை.  உண்மையில் ஜெயலலிதா சுட்டிக் காட்டிய அரசாணைகள் இரண்டும் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அவரால் பிறப்பிக்கப்பட்டவை.

அவ்வாறு அரசாணை பிறப்பித்தபோது திரைப்படங்களுக்கு இப்படித்தான பெயர்வைக்க வேண்டும் என்று சொல்லவோ அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைக்கக்கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை என்று இன்றைக்கு முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருப்பதைப்போல அன்றைக்கு எம்.ஜி.ஆர் அரசாணை பிறப்பித்தபோது யாரும் கேள்வி எழுப்பவில்லை.

நாங்கள் இப்படித்தான் எழுதி வைப்போம் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுவோம் என்று யாரும் சொல்லவில்லை. குதர்க்க வாதங்கள் பேசவில்லை.
தமிழ் இயக்கத் தலைவர்களை இன்று முதலமைச்சர் எள்ளி நகையாடுவதைப் போல எம்.ஜி.ஆரை திடீர் தமிழ் அபிமானி என்றோஇ ஙஙதமிழ் உணர்வு பொங்கிப் புறப்பட்டு விட்டது என்றோஞ ஙஅப்பட்டமான சுயநலம் என்றோங யாரும் கேலி பேசவில்லை.

அன்று எம்.ஜி.ஆர் எந்த உணர்வுடன் அந்த ஆணைகளைப் பிறப்பித்தாரோ அதே உணர்வுடன்தான் திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற ஆணையை ஜெயலலிதா பிறப்பிக்க வேண்டும்.

தமிழ்ப் படங்களுக்கு பெயர் வைக்கப்படுவது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை தயாரிப்பாளர் சங்கமும் பிலிம்சேம்பரும் வரவேற்றுள்ளன.

தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன் தமிழக முதல்வர் தமிழ் திரைப்படங்களுக்கு இந்த மொழியில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்கக்கூடாது என்று கூறியிருப்பதை வரவேற்பதாகக் தெரிவித்துள்ளார்.

பிலிம்சேம்பர் தலைவர் சுதர்சன் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஙதமிழ் பாதுகாப்பு என்ற பெயரில் திரையுலகுக்கு யாரும் தொந்தரவு கொடுக்க நினைத்தால் அதை அனுமதிக்க மாட்டேன என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அதற்காக தமிழ் திரையுலகமும் பிலிம் சேம்பரும் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பிலிம்சேம்பர் அளித்த மனு மீது தக்க நடவடிக்கை எடுத்ததற்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறோம்ங எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் நான்தான்ங என்று கனவு கண்டு கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் அவர்களும் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை ஆதரித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் அடிக்கடி கூறும் ஙவீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்ங என்ற வீர வசனத்துக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை அதுவும் நடிப்புத்தானா?
கொஞ்சம் தமிழ் உணர்வு இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டுருந்த சத்யராஜ் பெட்டிப் பாம்பாக வாய் மூடி மவுனம் சாதிக்கிறார். தமிழ் பாதுகாப்பு இயக்கத்துக்கு வாழ்த்து சொல்லி நன்கொடையாக ஐயாயிரம் ரூபாய் அளித்தவர் சத்யராஜ். தமிழுக்கு ஆதரவாக ஏகத்துக்கும் உணர்ச்சிவசப்பட்டு பேசியவர். இப்போது தான் ஒரு நல்ல நடிகன் என்பதை எண்பித்து விட்டார்.

பாரதிராசாவின் அழைப்பில் நடந்த இயக்குநர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா கட்சி உறுப்பினர் எஸ்.வி.சேகர் எதிர்பார்த்ததுபோலவே ஙசினிமா என்பது கோடிக் கணக்காக பணம் போட்டு சளைம எடுத்து நடத்துகிற தொழில் வெளியிலிருந்து மிரட்டுகிற அயகயை கும்பல் உள்ளே நுழைய நாம் இடம் தரக்டாதுங என்று ஆவேசமாக வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தை அயகயை கும்பல் என்று வர்ணித்திருப்பது அவரது பார்ப்பனப் புத்தியையே காட்டுகிறது.
அடுத்துப் பேசிய வி.சேகர் தமிழில்தான் தலைப்புகள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு இயக்குநர்களுக்கு என்று பொறுப்பு இருக்கிறது என்றும் பேசினார்.

இயக்குநர்களில் பெரும்பாலோர் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதற்கு எதிராக இருப்பதைக் கண்டு கொண்ட இயக்குநர் பாரதிராசா ஙநாம் எந்த மண்ணில் வாழ்கிறோமோ.. எந்த காற்றை சுவாசிக்கிறோமோ.. அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்ங என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

இந்தத் தமிழ் எதிர்ப்புப் போக்குக்கு என்ன காரணம் என்று ஊன்றிச் சிந்தித்துப் பார்த்தால் தமிழ்த் திரைப்பட உலகம் தமிழர் அல்லாதார் கையில் பெரும்பாலும் சிக்குண்டு இருப்பதே விடையாகக் கிடைக்கும்.

திரைப்படத்துறையில் உள்ள இயக்குநர்கள் நடிகர்கள் இசையமைப்பாளர்கள் பாடலாசிரியர்கள் தயாரிப்பாளர்களுக்கு தமிழ் இனப் பற்றும் தமிழ் மொழிப்பற்றும் மிகக் குறைவு. அல்லது முற்றாக இல்லை.

இவர்களிடம் மண்டிக் கிடக்கும் ஆங்கில மோகத்தின் ஆழ நீளத்தைப் பார்க்க வேண்டும் என்றால் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களைப் பார்த்தாலே புரிந்துவிடும்.

விதிவிலக்காக இயக்குநர்கள் தங்கப்பச்சான் வேலு பிரபாகரன் புகழேந்தி பாடலாசிரியர் அறிவுமதி போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே உள்ளார்கள்.

தமிழ்த் திரையுலகம் இன்று தமிழ்க் கலாசாரச் சீரழிவில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது. காமமும் வன்முறையும் திரைப்படங்களில் கோலோச்சுகிறது.

இரட்டைப் பொருள் தரும் பாடல்கள்இ உரையாடல்கள் ஆங்கிலம் தமிழ் கலந்த தமிங்கிலப் பாடல்கள் தாராளமாக இடம் பெறுகின்றன.

கதாநாயகி அரைகுறை ஆடையில் கதாநாயகனோடு கட்டிப் புரள்வதும் பொக்குள் தெரிய நடனம் ஆடும் காட்சிகள் இல்லாத படங்களே கிடையாது.
குடியைக் கெடுக்கக் கூடிய குடிக்கும் காட்சிகளும் புகைக்கும் காட்சிகளும் திரைப் படங்களில் தவறாமல் இடம் பெறுகின்றன.

கதாநாயகன் ஒவ்வொருவராக வரும் வில்லனையும் அவனது பத்துப் பதினைந்து அடியாட்களையும் தனியே அடித்துச் சாய்க்கிறார். ஆகாயத்தில் பாய்ந்து அடிக்கிறார்.

இவற்றைப் பார்க்கும் போது தமிழ்நாட்டுத் தமிழனைத் திருத்தவே முடியாது போல் படுகிறது.

தனக்குப் பிடித்த நடிகர் நடிகைக்கு கோயில் கட்டுகிறான்.

ஊர் தோறும் நடிகர்களுக்கு சங்கங்கள் வைக்கிறான்.

நடிகர்களது பிறந்த நாள் விழாக்களை ஊர்க் கோயில் தேர்த் திருவிழாபோல் கொண்டாடி மகிழ்கிறான்.

படப்பெட்டிக்கு பூசை செய்து யானை அல்லது குதிரையின் முதுகில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருகிறான்.

தமிழ்நாட்டுத் தமிழன் தனக்குப் பிடித்த நடிகர் நடித்த படம் வெளிவராவிட்டால் பூச்சி மருந்து குடித்து உயிரை விடுகிறான்.

நடிகன் நடிகைக்கு உடம்புக்கு ஆகாதென்றால் அவர்கள் நலமடைய தலையை மொட்டை அடிப்பேன் என்று கோயில்களுக்கு நேர்த்தி வைக்கிறான்

சாப்பிட வழியில்லாவிட்டாலும் தனது அபிமான நடிகர் நடித்த படத்தை ஒருமுறைக்கு பத்துமுறை காசு கொடுத்துப் பார்க்கிறான். அது பார்க்க முடியாத குப்பைப் படமென்றாலும் அவன் கவலைப் படுவதில்லை.

நடிகர்கள் இது போன்ற பாமரத் தமிழனின் அறியாமையையும் முட்டாள்தனத்தையும் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நடிகர்கள் கோடிக் கணக்காக உழைக்கும் பணத்தில் தையல் இயந்திரம் பாடப் புத்தகங்கள் என சில ஆயிரத்தை கிள்ளித் தெளித்து தங்களைப் பெரிய கொடை வள்ளல்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டுப் புலவர் செல்வக் கலைவாணன் என்பவர் அண்மையில் அருமையான பாடல் ஒன்றைப் புனைந்துள்ளார். பாடலின் தலைப்பு மூளையுள்ள தமிழன் தமிழ்ப் பற்றைத் தமிழர்கள் பெயரில் தழுவச் செய்ய வேண்டும் என்பது திரைப்படத்துப் பெயர்களுக்கும் பொருந்தும். அந்தப் பாடல் இது.

நன்மாறன் நெடுஞ்செழியன் குமணன்
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி மன்னர் மன்னன்
அன்பழகன் அறிவழகன் கண்ணன் வேலன்
அழகரசன் இளங்கோவன் கீரன் என்றே
இன்சுவையாய் இவைபோல பெயர்கள் உண்டு
இன்று ரமேஷ் சுரேஷ் கார்த்திக் ஆகின்றாரே
தென்னவனின் வழிவந்த என்னவர்க்குத்
தமிழ்ப் பற்றை அவர் பெயரில் தழுவச் செய்வோம்
தன்மான உணர்வென்பார் கவரி மானின்
தோன்றலாக மானுடத்தைப் பெற்றேன் என்பார்

பொன்நகையில் செம்புதன்னை கலத்தல் போல
பரூக்களிடை நச்சுமரம் விளைதல் போல
என்.மாறன் எம்.எஸ்.கே பொன்னன் என்றே
ஆங்கிலத்தில் கலப்படம்தான் செய்கின்றாரே
முன்னெழுத்தைத் தமிழெழுத்தால் எழுதச் செய்யும்
மூளையுள்ள தமிழனுடன் நட்புக் கொள்வோம்.

சினிமா மாயையிலும் மோகத்திலும் மூழ்கிக் கிடக்கும் தமிழ் நாட்டுத் தமிழனை மூளையுள்ள தமிழனாக முதலில் மாற்ற வேண்டும். அதே போல் உலகத் தமிழனை மூளையுள்ள தமிழனாக மாற்ற வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகு எங்கும் எதிலும் வானம் அளந்த அனைத்தும் அளந்திடும் எங்கள் தமிழ்மொழி தன்மணம் வீசி இசைகொண்டு வாழும் தமிழனும் உயர்வான். (முற்றும்)


தமிழ்தான் தமிழருக்கு முகவரி

அக்னிப்புத்திரன்

மல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் என்ற எனது கட்டுரையைப் படித்து விட்டு ஏராளமான மின்னஞ்சல்கள் குவிந்து விட்டன. போற்றியும் தூற்றியும் எண்ணற்ற கருத்துக் குவியல்கள்.

அனைவருக்கும் தனித் தனியே பதில் எழுத விருப்பமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுதுவதை விட ஒட்டு மொத்தமாக எனது கருத்தை மீண்டும் வலியுறுத்தி ஒரு கட்டுரையாகப் படைப்பதே சிறந்தது என்று கருதி மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

முதலில் பாராட்டியும் ஆதரித்தும் எனது கருத்தை ஏற்றும் மின்னஞ்சல் அனுப்பிய அனைத்து நல்ல தமிழ் உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.

அடுத்ததாக வன்மையாகவும் மென்மையாகவும் புழுதி வாரித் தூற்றியும் அவதூறாகவும் மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் என் நன்றி ஏனென்றால் அவர்களுக்காகத்தானே மீண்டும் இந்தக் கட்டுரை.

சரி இவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளின் பட்டியல் இதோ்

1) திருமாவளவன் ஏன் மேற்கத்திய உடை அணிந்து கொள்கிறார்?

2) டாக்டர் இராமதாஸ் அவர்களின் பெயருக்கு முன்னால் உள்ள டாக்டர் ஆங்கிலம்தானே? அவரின் மகன் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில்தானே பேசுகிறார்?

3) உங்கள் பெயர் (அடியேன்தான் . அக்னிப்புத்திரன்) தூய தமிழ்ப் பெயரா?

4) தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்களின் வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கிறார்களா இல்லை தமிழ் வழியிலாவது படிக்கிறார்களா?

(5) நீங்கள் ஏன் யாகூ மெயில் பயன்படுத்துகிறீர்கள் அது ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதானே? (உண்மையாக சத்தியமாக நம்புங்கள் இப்படியும் ஒருவர் கேட்டு எழுதியிருந்தார்)

(6)  சினிமா வியாபாரம் அதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்? தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?

(7) கமல் தனது படங்களுக்கு எப்போதும் தமிழில்தான் பெயர் வைப்பார் இந்த ஒரு முறை மட்டும் ஆங்கிலத்தில் வைத்தால் என்ன தப்பு? (நல்லவேளை சூரியா படத் தலைப்புக்கான பி.எப்பை யாரும் ஆதரித்து எழுதவில்லை அந்த வகையல் கொஞ்சம் ஆறுதல்தான்)

(8) ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் நம்மால் பேச முடியுமா.?

(9) தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரீகம் அடைந்திருக்கின்றான் இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்து கொள்ளத் தெரியாமல் கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான் (கவனிக்கவும் வேட்டிக் கூட இல்லை . தமிழன் கோவணத்துடன் திரிவானாம்)

(10)  சன் டிவி மற்றும் கே டிவி பெயர்களை மாற்றி தமிழில் பெயர் வைக்க ஏன் வலியுறுத்தவில்லை? (சினிமா வியாபாரம் என்று கேட்டவர்தான் இந்தக் கேள்வியையும் கேட்டு இருந்தார் சினிமா இவர் கண்களுக்கு வியாபாரமாகத் தெரிகிறது தனியார் தொலைக்காட்சிகள் அப்படித் தெரியவில்லை . என்ன செய்வது?)
ஆக கேள்விகள் பல வடிவங்களில் வந்தாலும் இவர்களின் உள் மனதின் ஆசை ஒன்றுதான் அது தமிழ் தழைக்கக் கூடாது செழிக்கக் கூடாது வளரக் கூடாது அதை வாழ விடக் கூடாது அதற்காகத்தான் இத்தனை உருட்டுப் புரட்டுவாதங்கள்.

இந்த சந்தடிச் சாக்கில் மும்பையில் இருந்து ஒருவர் இந்தியையும் தமிழகத்தில் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார் (இவர் மும்பைக்குப் பிழைக்கச் சென்றபோது இந்தி தெரியாமல் மிகவும் திண்டாடினாராம் இவர் மும்பை போய் இந்தி பேச தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்தி கற்றுத் தர வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் (நல்ல காலம் கொரியாவில் இருந்து ஒரு மின்னஞ்சலும் வரவில்லை இல்லாவிட்டால் கொரியன் மொழியைத் தமிழ்நாட்டில் கற்பிக்க கேட்டு அவர் எழுதியிருப்பார் அந்த வகையில் நாம் தப்பித்தோம்)

தமிழுக்கு வெளிப் பகையை விட உட் பகைதான் எப்போதும் அதிகம் அது இம்முறையும் வெளிப்பட்டு இருக்கிறது தமிழ்ச் சமூகம்  தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் அதை மீட்ப்பிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகின்றது.

ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் கூறவில்லை இந்தியா போன்ற நாடுகளில் பல மொழிகள் இனங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பது மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் நாங்கள் கூறுவது எல்லாம் இடம் பொருள் ஏவல் அறிந்து எதை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டுமோ அதை அங்கு அப்போது பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகின்றோம்.

ஒருவருக்குப் பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒருவனுக்கு அவன் தாய் மொழி மிகவும் அவசியம் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்தலாம் ஆங்கிலப் படங்கள் எடுத்து ஆங்கில் பெயர் வைக்கட்டும் யார் தடுத்தார்கள் இவர்களை? பாலிவுட் படம் எடுத்து இந்தியில் பெயர் வைக்கட்டும் ஹாலிவுட் படம் எடுத்து ஆங்கிலத்தில் பெயர் வைக்கட்டுமே யார் இவர்களின் கையைப் பிடித்து இழுத்தது?

தமிழ் மொழியில் படத்தைத் தயாரித்து விட்டு ஏன் ஆங்கில மொழியில் பெயர் வைக்க வேண்டும்? தமிழ் தெரிந்தவர்களுக்குத்தானே அப்படம்? இல்லை அமெரிக்கர்களுக்கா அப்படம்? ஒரு வாதத்திற்குக் கேட்கின்றேன் ஆங்கிலப் படம் எடுத்து அதற்குத் தமிழில் பெயர் வைப்பார்களா?

தமிழைப் பயன்படுத்துங்கள் என்று கூறினால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாதே அது தேவையில்லை என்று பொருள் இல்லை நாங்கள் யாரும் எந்த மொழிக்கும் விரோதியில்லை எந்த மொழியும் அவரவர்களுக்குச் சிறப்புடையதுதான் உலகின் பழமையும் பெருமையும் வாய்ந்த செந்தமிழ் மொழி சிதைக்கப்படுவதையும் சீர்குலைக்கப்படுவதையும்தான் தடுக்க முற்படுகின்றோம் சிறப்புடைய தாய் மொழியைப் புறக்கணித்து விட்டு மற்றொன்றைப் போற்றாதே என்றுதான் கூறுகின்றோம்.
தமிழில் திரைப்படத்தின் பெயரை வைத்து விட்டால் மட்டும் தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் கூறவில்லை சக்தி வாய்ந்த அதே சமயம் மக்களின் உள்ளத்தைக் கவரும் ஊடகமாகத் திரைப்படம் விளங்குவதால் அதில் கவனம் செலுத்தப்படுகின்றது படிப்படியாகத்தான் முயல வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட தயாப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் படங்களின் தலைப்புகளில் முப்பத்தி ஐந்து பெயர்கள் ஆங்கிலப் பெயர்கள்தான் என்று தட்ஸ்தமிழ்.காம் இணையத்ததளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்படி எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றால் ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ப் பெயரையே எங்கும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் எனவேதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் திரைப்படத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கமல் அல்லது ஆபாச இயக்குனர் சூரியா என்ற சிலருக்கு மட்டுமல்ல இந்த வேண்டுகோள் அனைவருக்கும் பொதுவாக விடுக்கப்படும் வேண்டுகோள் இது ஆங்கில மோகம் அதிகரித்து தமிழைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தமிழன் தள்ளப்படுவதைத் தவிர்க்க எடுக்கப்படும் இந்த முயற்சி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே ஆங்கிலப் பெயர்கள் வைத்த (சன் தொலைக்காட்சி கே தொலைக்காட்சி) எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்களைத் தற்போது மாற்றுவது என்பது குதிரைக் கொம்பு. அவர்களாகவே முன்வந்து விரும்பி பெயரை மாற்றினால் மெத்த மகிழ்ச்சியே எனவேதான் இனிமேலாவது தமிழைப் பயன்படுத்தித் தமிழில் பெயர் வையுங்கள் என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகின்றது.

சினிமா ஒரு வியாபாரம் என்கிறீர்கள் எல்லாமே வியாபாரம்தான். அதில் ஒரு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றோம். மேற்கத்திய நாகரீகத்தின் விளைவால் ஏற்கனவே கலாச்சாரச் சீரழிவு மின்னல் வேகத்தில் பரவுகின்றது. மொழியைச் சிதைத்தால் பண்பாடு சிதையும். ஒரு மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து விடும் என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலைக் கலாச்சாரப் புயல் வேகத் தாக்கத்தாலும் நம்மவர்களின் அடிமை மோகத்தாலும் தமிழைத் தமிழரே புறக்கணிக்கும் நிலை தற்சமயம் தமிழ் மொழிக்குப் பேராபத்தை உருவாக்கியுள்ளது. தமிழுக்கும் தமிழின் பெருமைக்கும் தமிழனிடமே யாசித்து நிற்கும் அவல நிலைக்கு நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் ஆங்கில ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம்தான் இப்போது என் நினைவுக்கு வருகின்றது. அந்த வசனம் இதுதான்:

வீரபாண்டிய கட்டபொம்மன்(கடும் கர்ஜனையுடன்) - இந் நாட்டில் பிறந்த எவனும் யாருக்கும் எங்களைக் காட்டி கொடுக்க மாட்டான்

ஜாக்சன் துரை - ம்ம்ம் (ஏளனத்துடன் எட்டப்பனை மனதில் நினைத்துக் கொண்டு) அப்படிக் காட்டிக் கொடுப்பவர்கள் .. யார்?

வீரபாண்டிய கட்டபொம்மன் (சீறும் எரிமலையாக) - இந் நாட்டின் அசல் வித்தாக இருக்க மாட்டான்.

இவ் வசனம் நாட்டிற்கும் பொருந்தும் மொழிக்கும் பொருந்தும். தாய் மொழியாம் தமிழைப் போற்று என்றால் ஏன் இத்தனைக் கோபம் ஆத்திரம் எரிச்சல் எல்லாம் ஒரு சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகின்றன? ஏன் விதண்டாவாதம் செய்கின்றீர்கள்?

தமிழ் படித்தால் அடிமையாகத்தான் வாழ வேண்டும் நாகரீகம் தெயாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று மடத்தனத்துடன் தமிழனே பேசும் அறியாமை நிலைக்குத் தமிழன் தள்ளப்பட்டுள்ள இழிநிலையை நினைத்தால் மகாகவி பாரதி கூறுவது போல நெஞ்சு பொறுக்குதில்லையே.

தமிழ் பேசு தமிழ் படி என்றால் மற்ற மொழிகளைப் பேசாதே மற்ற மொழிகளைப் படிக்காதே என்று ஏன் பொருள் எடுத்துக் கொள்கின்றீர்கள்? நம் செந்தமிழ்க் கவி பாரதி பல மொழிகள் தெரிந்த பன்மொழிப் புலவர்தான் விருப்பம் உள்ளவர்கள் சுய முயற்சியாக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளட்டும் ஆனால் அதை அவர்கள் மற்றவர்களிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.

நம் தாய் மொழியை நாம் இகழ்ந்தால் எதிர்கால சந்ததியினரின் நிலை படு கேவலமாக இருக்கும் மொழியை இழந்தவன் தன் விழியை இழந்தவனாவான் தாய் மொழி வாயிலாக கலை கலாச்சாரம் மற்றும் அற நெறிக் கருத்துக்கள் இளம் உள்ளங்களுக்கு வழங்கும்போது எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் nநிஞ்சத்தில் நன்கு ஆழமாகப் பதியும் தன் தாய் மொழியை இழந்தவன் விழி இழந்த குருடனுக்கு ஒப்பாவான் இந்த மொழிக் குருடர்களின் கருத்தைப் பாருங்கள் சினிமா இல்லாவிட்டால் இன்றைய தமிழனுக்கு உலக நாகரீகம் தெரியாதாம் இவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே என்னால் முடியும்.

உலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த ஒரு உன்னத நாகரீகத்துக்குச் சொந்தக்காரன் தமிழன் முடிந்தால் தமிழக வரலாறு அதன் பண்பாடு பற்றிய நூல்களை வாங்கிப் படிக்கவும். உங்கள் விருப்பப்படி ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்றால் The language problem of Tamilnadu.. Author:Devaneyapavanar   என்ற நூலை வாங்கிப் படிக்கவும்.

ஈராயிரமாண்டுகளாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் நாகரீக வரலாறும் கொண்டது நம் தமிழ் மொழி. தமிழ் மக்களின் நாகரீகம் பண்பாடும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால் மிக்க சிறந்த அரசியல் பொருளாதார நாகரீகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உன்னத தத்துவத்தை உலகுக்கு வழங்கிய தமிழனிடமா நாகரீகம் இல்லை? ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரீக வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்.

உங்கள் சினிமாவைப் பார்த்துத்தான் நாகரிகம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழனுக்கு இல்லை. எல்லாத் திரைப்படங்களையும் குறை கூறவில்லை ஒரு சில தற்கால சினிமா காட்டும் கேடு கெட்ட எந்த நாகரீகமும் நமக்குத் தேவையில்லை.

தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஆங்கிலோ சாக்சன் காலத்தில் அது வெறும் இரு நூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது பிற்காலத்தில் பிற மொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி.

ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு கருத்து வளத்துடன் உயர் தனி செம்மொழியாக விளங்கியது எண்ணற்ற எடுத்துக்காட்டுக்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம் சொன்னால் சொல்லி மாளாது எழுதினால் ஏடு கொள்ளாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தமிழனுக்குத் தமிழ்தான் முகவரி.

- mf;dpg;Gj;jpud; (agniputhiran@yahoo.com)கொண்டாட ஒரு தினம்

மு. பாலகுமார்

அன்னையர் தினம் மகளிர் தினம் உழைப்பாளர் தினம் போன்றவை பெருமைக்குரிய தினங்களாக ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் நமது நாட்டில் காதலர் தினம் கூட பலரது கவனத்தை ஈர்த்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். அவ்வகையில் பலராலும் அறியப்படாமல் இருக்கும் பிப்ரவரி 21-ஆம் தேதி யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடிப்படையில் மொழி பண்பாடு வேற்றுமைகளை மதித்துப் போற்றுவதையும் தாய்மொழிக் கல்வியை வளர்ப்பதையும் மேலும் பன்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு 2000-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1999 ஆம் ஆண்டு நடந்த யுனெஸ்கோவின் பொதுக் கருத்தரங்கின் 30வது அமர்வில் பங்களாதேஷ் அரசின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 21 ஆம் தேதியைத் தாய்மொழி தினமாகக் கொண்டாடுவதென முடிவெடுக்கப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தானையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் வங்காளி மொழியைத் தேசிய மொழியாக பாகிஸ்தான் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) 1952 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21-ஆம் தேதியன்று நடந்த மொழிப் போராட்டத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவாகவும் அவர்களின் மொழிப்பற்றைப் போற்றும் வகையிலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்த பங்களாதேஷ் அரசின் வேண்டுதலை ஏற்று இந்தத் தினத்தைத் தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அங்கீகரித்திருக்கிறது.

மொழிகள் அனைத்தும் வாழும் வரலாற்றுச் சின்னங்கள் என்பதால் அவை போற்றப்பட வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் உயர்வு தாழ்வின்றிச் சமமாகக் கருதப்பட வேண்டும் என்பது யுனெஸ்கோவின் கொள்கைகளாகும். தாய்மொழி உரிய இடத்தைப் பெறாமல் இருப்பது அந்தப் பண்பாட்டுக்கு எதிரானது என்பதாலேயே தாய்மொழியைத் தொடர்பு மொழியாக ஆட்சி மொழியாக கல்வி மொழியாக நீதி மொழியாக அந்தந்த மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இந்தத் தினத்தின் வாயிலாக யுனெஸ்கோ வலியுறுத்துகிறது. ஒரு மொழியை வழக்கொழியாமல் காப்பதற்கான முயற்சிகளையும் அறிவுறுத்தல்களையும் அந்த மக்களின் பாரம்பரிய மரபுகளான இசை நடனம் கலை அறிவு மருத்துவம் போன்றன மறைந்து விடாமல் நிலைபெறச் செய்வதையும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு யுனெஸ்கோ செயல்பட்டு வருகிறது.

பயன்பாடு இல்லாத மொழி காலப்போக்கில் வழக்கொழிந்து விடும் என்பது நடைமுறை. கடந்த 300 ஆண்டுகளில் குறிப்பாக அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் பல மொழிகள் அழிந்து விட்டன. இன்று உலகில் பேசப்படும் சுமார் 6000 மொழிகளில் பாதி மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளன என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. குறைந்தபட்சம் 30 விழுக்காடு மாணவர்கள் தங்கள் தாய்மொழியைப் படிக்க முன்வராவிட்டால் அந்த மொழி காலப்போக்கில் வழக்கொழிந்து விடும் என்பது மொழியியலறிஞர்களின் கருதுகோளாகும்.

ஒரு மொழியின் வளர்ச்சிக்கு வெறும் மேடைப் பேச்சுகளும் போராட்டங்களும் மட்டும் போதாது. அதற்கு மொழியின் மீதான முனைப்பும் ஈடுபாடும் கொண்ட பலரும் தேவைப்படுகிறார்கள். தாய்மொழி வளர்ச்சிக்கு மூலதனம் மொழிப்பற்று மொழிப்பற்றுக்கு முதன்மையானது மொழியின் மீதான நம்பிக்கை நம் மொழி நமது வாழ்க்கை உயர்வுக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை அதற்கு நம் மொழிக்குப் போதிய திறம் இருக்கிறது என்ற முழுமையான நம்பிக்கை பெரிதும் இன்றியமையாததாகும். அந்த நம்பிக்கையைத் தோற்றுவிப்பதற்கான வழிவகைகளையும் முயற்சிகளையும் அரசு அமைப்புகளும் தன்னார்வ அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டுவது இன்றியமையாததாகும். மேலும் ஒரு மொழியின் வளம் அதன் பயன்பாட்டால் கணிக்கப்படுகிறது.

இன்றைய கால கட்டத்தில் தாய்மொழியின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது என்பது கண்கூடு. அரசு மட்டுமே அதைத் தனித்துச் செய்துவிட முடியாது. மொழிப் பயன்பாட்டை உயர்த்துவதும் விரிவாக்குவதும் நமது எல்லோரின் கடமையாகும். இதற்காக அனைத்துத் தரப்பு மக்களின் அயராத ஈடுபாடும் உழைப்பும் பெரிதும் தேவைப்படுகிறது. தாய்மொழிக் கல்விக்குத் தலைமையிடம் பிறமொழிக் கல்விக்குத் தகுந்த இடம் என்பதே இன்றைய காலத் தேவையாகும். நாம் உலக மாந்தர்களாக உருவாக தாய்மொழியையும் கற்க வேண்டும். பிற மொழிகளையும் கற்க வேண்டும். இதுவே தாய்மொழி தினம் விடுக்கும் செய்தியாகும்.
தமிழ்ப் படத்துக்கு ஆங்கிலப் பெயர் அண்ணாவின் கொள்கையா?

சுப. வீரபாண்டியன்

தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது தொடர்பான வாதங்கள் கொதி நிலையை எட்டியுள்ளது. தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பிறகு அது இன்னொரு புதிய இடத்தைத் தொட்டுள்ளது.

முதலமைச்சரின் அறிக்கை ஆங்கிலத்தில் பெயர் வைப்பது அண்ணாவின் இரு மொழிக் கொள்கைக்கு ஏற்றதே என்று கூறுகிறது.

அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அண்ணாவின் மொழிக் கொள்கையை இவ்வளவு மலினப் படுத்தலாமா இப்படிக் கொச்சைப் படுத்தலாமா என்று கேட்க வேண்டியுள்ளது.

அண்ணாவின் மொழிக் கொள்கை என்ன என்பதை தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தமிழன் மறுமலர்ச்சி மாணவருக்கு அண்ணா அறிஞர் அண்ணாவின் சொற் பொழிவுகள் முதலான அவருடைய பல நூல்கள் நமக்கு விளக்குகின்றன. முன்னாள் துணைவேந்தர் அ. இராமசாமியின் அண்ணாவின் மொழிக் கொள்கை முனைவர் சக்கரவர்த்தியின் அண்ணாவின் விடுதலைச் சிந்தனைகள் ஆகிய ஆய்வேடுகளில் அவரது மொழிக் கொள்கை மிகத் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.

எந்த நூலிலும் எந்த ஆய் வேட்டிலும் தமிழ்த் திரைப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதற்கு அண்ணாவின் கொள்கை ஆதரவு தெவிப்பதாக நம் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

ஆனால் அண்ணா உறுப்பினராக இருந்த அதே நாடாளுமன்ற மேலவையில் இன்று உறுப்பினராக இருக்கும் பன்மொழிப் புலவரான எஸ்.எஸ் சந்திரன் சைக்கிள் என்னும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் சொல்லே இல்லை என்பது போல அறிக்கை விட்டிருக்கிறார்.

இதே சைக்கிள் குறித்த அண்ணா எழுதியுள்ள வரிகள் இப்போது நம் நினைவுக்கு வருகின்றன.

பிறமொழியில் இருக்கும் எந்தச் சொல்லையும் தமிழாக்கி அதாவது ஆங்கிலச் சொல்லையோ சமசுகிருதச் சொல்லையோ அப்படியே தமிழில் உச்சரிக்காமல் அச்சொற்களை எல்லாம் தமிழில் ஆக்கிக் கொள்ள வேண்டும் எடுத்துக்காட்டாக சைக்கிள் என்னும் ஆங்கிலச் சொல்லை ஈருருளி என்றும் பிரத்யட்சம் என்ற சமசுகிருதச் சொல்லை கண்கூடு என்றும் வழங்கலாமஞ என்கின்றார் அண்ணா. (மாணவர்க்கு அண்ணா)

அண்ணாவிற்கு முன்பு துவிச் சக்கர வண்டி என்றும் அவர் காலத்தில் ஈருருளி என்றும் அறியப்பட்ட சைக்கிள் இன்று மிக எளிமையாய் மிதிவண்டி ஆகி உள்ளதை நாம் அறிவோம். அதை அறிந்து கொள்ள எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களுக்கு நேரமோ நிதானமோ இல்லாமல் போயிருக்கலாம்.

அது குறித்து நாம் கவலைப் படவில்லை. ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஜெயலலிதாவிற்கும் நேரம் இல்லாமல் போகலாமா?

அறிஞர் அண்ணாவின் மொழிக்கொள்கை பற்றி அறிய ஆயிரம் புத்தகங்களைப் படிக்க வேண்டியதில்லை.

1963 மே 2 ஆம் நாள் ந்திய நாடாளுமன்ற மேலவையிலும் 1968 சனவரி 23ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்திலும் அவர் ஆற்றியுள்ள இரண்டு உரைகளை மட்டுமே படித்தால் போதுமானது. அதிலும் குறிப்பாக 23.01.68 அன்று இருமொழிக் கொள்கையை முன் மொழிந்து ஒருநாள் முழுவதும் சட்டமன்றத்தில் அவர் நிகழ்த்தியுள்ள உரைகளும் வாதங்களும் மொழி பற்றிய அவருடைய உள்ளக் கிடக்கையை நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டும்.

மும்மொழித் திட்டத்திற்கு மாற்றாக இரு மொழிக் கொள்கையை அன்று அவர் முன்மொழிந்தார்.

இரண்டே இரண்டு நோக்கங்களுக்காகத்தான் தமிழுடன் ஆங்கிலம் சேர்ந்த இரு மொழிக் கொள்கையை அவர் கொண்டு வருகின்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கும் இந்தியாவின் பிற மாநிலங்களோடும் மத்திய அரசோடும் உலக நாடுகளோடும் தொடர்பு கொள்வதற்கும் ஆங்கிலம் தேவை என்பதே அண்ணாவின் கருத்து.

மற்றப்படி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே அண்ணாவின் மொழிக்கொள்கை என்பதை ஜெயலலிதா மட்டுமல்லாமல் சரத்குமார் நெப்போலியன் போன்ற திமுக நடிகர்களும் தெரிந்து கொள்வது நல்லது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் கொள்கை இன்று எங்கே தமிழ் எதிலே தமிழ்? என்று கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டது உண்மைதான் தமிழ்வழிக் கல்வியை அண்ணா ஆதரித்தார். அனால் ன்று ஆங்கிலப் பள்ளிகளே கள்ளிச் செடிகளாய் மண்டிக் கிடக்கின்றன.

வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் கூடுதலாகத் திராவிட யக்கங்களின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆனால் இதற்கெல்லாம் அண்ணாவைப் பொறுப்பாக்க முடியாது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே அவரது மொழிக் கொள்கை என்பதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன.

நானும் தி.மு.கழகமும் ஆங்கிலத்திடம் பெரும் பற்றுக் கொண்டிருப்பதாக எண்ண வேண்டாம் என்று கூறும் அண்ணா நான் ஆங்கிலத்திற்காக வாதாடுகிறேன் ஆங்கிலத்திற்காகப் பேசுகிறேன் என்றால் என்னுடைய தாய்மொழியை விட ஆங்கிலத் திற்கு உயர்ந்த இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அது மிகவும் வசதியான கருவி என்பதாலும் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகளோடும் தொடர்பு கொள்வதற்கு அது உதவும் என்பதாலும்தான் என்று எந்தக் குழப்பத்திற்கும் இட மில்லாமல் தன் மொழிக் கொள்கையை விளக்குகின்றார்.

கல்வி மொழியாக வழிபாட்டு மொழியாக நீதிமன்ற மொழியாக எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று பலமுறை அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.

இருமொழிக் கொள்கையை முன்மொழிந்த அதே நாள் சட்டமன்றத்தில் தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும் பாட மொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும் நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் அய்ந்தாண்டுக் காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது என்ற தீர்மானத்தை அவர் முன்வைக்கின்றார்.

நீதிமன்றங்களில் தமிழில் வாதாடமுடியுமா என்று வினா எழுந்தபோது தமிழில்தானே வாதாடினாள் கண்ணகி அவள் கூறிய வாதங்களை ஆங்கில மொழியால் அல்ல வேறு எந்த மொழியாலும் அளிக்க முடியாது என்று உறுதிபடக் கூறியவர் அண்ணா.

தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வினானவுக்கு நம்டைய ஊனோடும் உயிரோடும் இரண்டறக் கலந்துவிட்ட தமிழ்மொழிக்கு உரிய ஏற்றத்தைத் தருவோம். தமிழ்மொழி அதற்குரிய இடத்தை அடையும் வரை ஓயமாட்டோம் என்பதே (அண்ணாவும் அழகு தமிழும்) அண்ணாவின் விடையாக இருந்தது.

இந்திக்கு மாற்றாக ஆங்கிலம் என்பதுதான் அண்ணாவின் கோக்கையே அன்றி தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் என்பது ஒரு நாளும் இல்லை.

எனவே திரைப்படத் துறையினன் ஆங்கில மோகத்துக்கும் ஜெயலலிதாவின் ஆங்கில ஆதரவுக்கும் தமிழின உணர்வை இம் மண்ணில் விதைத்த தலைவர்களுள் ஒருவரான அண்ணாவைப் பலியாக்கிட வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்.

தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? என்று கேட்கும் குஷ்பு போன்ற சுத்தத் தமிழச்சிகள் நாளை தமிழை உயர்த்திப் பிடிக்க அண்ணா யார்? என்றும் கேட்கக் கூடும்.

அதனை ஆதரித்து ஜெயலலிதாவும் நன்றி தெரிவித்து சரத்குமாரும் அறிக்கை விடவும் கூடும்.

அண்ணாவின் தொடர்தான் நம் நினைவுக்கு வருகின்றது.. ஏ.. தாழ்ந்த தமிழகமே (நன்றி- தென்செய்தி)


 

தமிழர் உலகம்  திணிக்கும்  கிரந்தத் தமிழ்! 

காஞ்சி மடத்தின்  இரமண சர்மா கணினித் துறைக்கும் அச்சுத்துறைக்கும் உரிய தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து நீட்டித்த தமிழ் என்று உருவாக்க அமெரிக்க ஒருஙகுகுறி சேர்த்தியத்திற்கு ஓர் முன் மொழிவு  27.10.2010 இல் கொடுத்தார். அதனையும் ஒருஙகுகுறி கிரந்தத்தில் தமிழின் சிறப்பெழுத்துகள் ஐந்தையும் சேர்க்க வேண்டும் என்று நா.கணேசன்  06-08-2009-இலேயே கொடுத்திருந்த முன்மொழிவையும் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளும் தமிழ் அறிஞர்களும் எதிர்த்துப் போராடித் தடுத்துள்ளனர். அவ்வளவு தமிழ் முயற்சிகளையும் சிதைக்கும் வகையிலும், தமிழ் மொழியின் நெடுங்கணக்கையும் பெருமையையும் சீர்குலைக்கும் வகையில்  தமிழர் உலகம்  என்ற இருமாத இதழ் எழுதி வருகிறது. 

தமிழர் உலகம் இதழின் ஆசிரியர் தமிழ்ப் புகழேந்தி தம் பெயரைத்   தமிழ் புகழேந்தி என்று எழுதித் தமிழுக்குக் கேடு செய்து வருவதுடன் தமிழ் மொழிக்குக் கேடான பல கருத்துகளை எழுதி வருகிறார்.

"எழுத்தெனப்படுப,
 அகர முதல்
னகர இறுவாய் முப்பஃதென்ப

என்பார்  தொல்காப்பியர்.  தமிழின் அடிப்படை ஒலிகளாகிய இவற்றைப் பிற்கால மொழியியலாளர்கள் ஒலியன்கள் என்பர். புகழேந்தி தமிழின் அடிப்படை ஒலிகளுடன் கிரந்த எழுத்துகளாகிய ஸ, ஜ இரண்டையும் சேர்த்து இவற்றுக்கான உயிர்மெய் எழுத்துகள் 36-ஐயும் இணைத்து நெடுங்கணக்கு அட்டவணையை வெளியிட்டுள்ளார். 

கல்வெட்டு அறிஞர் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் இவர் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் ஸ,ஜ என்ற இரண்டு எழுத்துகளும் உள்ளன என்று படம் காட்டியுள்ளார். இவற்றைத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்று அவர் குறித்துள்ளார். இந்தியா முழுதும் வழங்கி வந்த பழந்தமிழ் எழுத்து முறையைதமிழ் பிராமி என்று கூறுவது அவர்கள் வழக்கம். பழந்தமிழைத் திராவிடம் அல்லது தொல் திராவிடம் என்று பொதுவாக்கிக் கூறுவதும் அவர்கள் வழக்கம். மேலும் பிரித்தாளும் வகையில் தென்னகத் தமிழைத் தமிழ்பிராமி என்றும், வடவர் தமிழை வட பிராமி என்றும் கூறுவர்.

சங்கக் காலக் கல்வெட்டுகளாக நமக்குக் கிடைப்பன சமணர் குகைகளில் வெட்டப்பெற்றுள்ள சிலவே. கி.மு 3-ஆம் நூற்றாண்டளவில் தமிழகம் போந்த சமணர்கள் பாலி,பிராகிருதம் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்கள் வெட்டிய கல்வெட்டுகளில் பிறமொழியாளராகிய  அவர்களது ஒலி எழுத்துகள் இரண்டு கலந்திருக்கலாம்.  இன்றைக்கும் வடவர்  (சேட்டுகள்  முதலியோர்) பேசும் தமிழில் வடவொலிகள் கலந்து ( நிம்பள்கி, ஷொல்ரான்,   .. .. ..) பேசுகிறார்கள் அல்லவா? இரண்டு எழுத்துகளும் வேறு ஒலியாகவும் இருக்கலாம் புகழேந்தி  தாம் கண்டுபிடித்ததாகக் கூறும் பின்வந்த ஓர் கல்வெட்டில் கோ விசைய சீ பருமர் .. .. . . என்று தமிழ் எழுத்துகளே வந்துள்ளன. சங்கக் காலக் கல்வெட்டுக்களை வேண்டுமென்றே பிராகிருதமாகவும் சமற்கிருதமாகவும் படித்துக் காட்டுவோர் உள்ளனர். 

சங்கக் கால இலக்கியங்களிலோ, சமண புத்த மத இலக்கியங்களிலோ இவ்விரண்டு வட ஒலி எழுத்துகளும் இல்லை. இவை கிரந்த எழுத்துகளும் இல்லை. கிரந்த எழுத்துகள் கி.பி. 3- ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தோன்றின. கி.பி. 15-ஆம் நூற்றாண்டிற்குப்பின்  தோன்றிய சில மணிப்பிரவாள நூல்களில் கிரந்த எழுத்துகள் கலந்து எழுதினர் பரிதிமாற்கலைஞர் கூறுவது போல் இவ்வாபாச நடை  வெற்றி பெறாதொழிந்தது.  அதனை உயிர்ப்பித்துத் தமிழுக்குக் கேடு செய்ய வேண்டும் என்று சிலர் இடைவிடாது முயன்று வருகிறார்கள் இவர்கள் ஆரியமே உயர்ந்தது, தமிழ் அதற்குத் தாழ்ந்தது என்னும் கருத்தினர். 

வழக்குத் தமிழில் ஸ, ஜ, ஷ, ஹ,க்ஷ், ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள்  முன்னரே கலந்துள்ளன இவற்றை நீக்கித் தமிழ் எழுத்துகளை மட்டுமே வழங்க நன்னூல் ஆசிரியரும் வழிகாட்டினார் அவற்றை நீக்கி வடசொற்களை வழங்குவதை விட இனிய நல்ல தமிழ்ச் சொற்களை மட்டுமே தமிழர்கள் வழங்க வேண்டும் என்று மறைமலை அடிகள், தமிழ்வேள் உமாமகேசுவரனார், பாவாணர்,   பெருஞ்சித்திரனார், இலக்குவனார், வ.சுப. மணிக்கம் முதலியோர் பெருமுயற்சி செய்து வெற்றி பெற்றனர். இது பொறாத ஆரிய மேலாண்மைக் கருத்தினர்,  தமிழில் மீண்டும் கிரந்தத்தைப் புகுத்திப் பிறமொழிக்கலப்பால் தமிழைக் கெடுக்க எண்ணுகின்றனர். மொழிஞாயிறு பாவாணர் கூறிய மேழம் முதலிய தமிழாக்கங்கள் சமற்கிருதமாம்.  சித்திரை, வைகாசி முதலியனவே தமிழ் என்று இவ்விதழின் அலுவலகத்தில் வேலை பார்க்கின்ற இராம் குமார் எழுதி இவ்விதழில் வந்துள்ளது! தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பது போல் தொடங்கி குறை செய்வதும் பிழை செயவதும் தாய்க்குச் செய்யும் கொடுமை ஆகும். 

கிரந்தம் என்பது எழுத்தில்லா மொழியாகிய சமற்கிருதத்தைத் தமிழ் எழுத்தால் எழுத முற்பட்டபோது தோன்றியதாகும். கிரந்தத்தில் தமிழ் எழுத்துகளும், தமிழில் இல்லாத வருக்க ஒலிகளுக்கான குறியீடுகளும் உள்ளன. வருக்க ஒலி இல்லாததால், தமிழ் ஒரு குறையுடைய மொழி இக்குறை போக்க இவ்வொலிகளைத் தரும் கிரந்த எழுத்துகளைத் தமிழில் புகுத்த வேண்டும் என்று இரமண சர்மா கூறினார் தமிழின் குறை போக்கத் தாம் தமிழ்த் தொண்டு செய்யப் புறப்பட்டிருப்பதாகப் புகழேந்தி கூறுகிறார்.

சீதைக்கு மிகப் பெரிய குறை, இடுப்பு சின்னதாக இருக்கிறது, என் இடுப்பைப் போல் உரல் போல் இல்லை! என்று சூர்ப்பநகை கூறினாளாம். அதே போல் தமிழைக் குறை கூறித், தமிழின் இடுப்பை (எழுத்தை)ப் பெரிதாக்குவதாகக் கூறி, இடுப்பொடிக்கத்  தமிழ் எதிரிகள் சிலர் முற்படுகிறார்கள். இரண்டகர்களும் இச்செயல்களுக்குத் துணை போகிறார்கள். அறிவிலிகள் சிலரும், தமிழ் வளர்ச்சிக்கு ஏதேனும்  செய்ய வேண்டும் என்ற எண்ணிக்கொண்டு, பக்கத்து வீட்டில் உள்ள பொதுக்கைக் குழந்தை போல் குண்டாக வேண்டும் என்று, நல்ல வலிவும் பொலிவும் உள்ள நம் வீட்டுக்குழந்தை வாயில் ஒரு படி அரிசியையும் ஓர் ஆழாக்கு மதுவையும் கரண்டிக் காம்பைக் கொண்டு குத்திக் குத்தித் திணிப்பது போல், பிற மொழி எழுத்துக்களைக் குறிப்பாகக் கிரந்த எழுத்துகளைத் திணிக்கப் ல வகைகளில்  முயன்று வருகிறார்கள். 

மக்களுக்கு நன்மைகள் செய்யவும் தொண்டு செய்யவும் வருவதாகக் கூறி, மக்களுக்குரிய வளங்களைக் கொள்ளையடிக்கும் அரசியல் இழிஞர்களைப்போலே, தமிழுக்குத் தொண்டு செய்வதாகக் கூறிக்கொண்டு இவர்கள் புறப்பட்டிருப்பதுதான் மாபெரும் கொடுமை.  தமிழில்  எண்களே இல்லை. அதாவது எண்களைக் குறிக்க எழுத்துருவங்கள் இல்லை. தமிழ் எண்கள் என்று கூறப்படுபவை (க, உ , . . )  எல்லாம் கிரந்த எண்கள் என்று கூறியுள்ளார் புகழேந்தி! ஆம்! இவர்தான் தமிழ்ப் புகழேந்தி!   தமிழர் உலகம் இதழின் ஆசிரியர்!