Land takeover: SC refuses to give ruling
Chandani Kirinde
The Supreme Court has decided not to make a determination on a bill intended to amend the Town and Country Planning Ordinance on the grounds that it has been placed on the Order Paper of Parliament without complying with the constitutional requirement that it be first referred to the Provincial Councils (PCs) for their views.
Speaker Chamal Rajapaksa announced the Supreme Court decision to Parliament yesterday on the amendment bill which would enable the Government to acquire lands for economic, social, historical, environmental and religious purposes within municipal and urban areas.
The three-member bench headed by Chief Justice Shirani Bandaranayaka said there was no submission made by the Deputy Solicitor General to Court that the bill under reference had been referred to the Provincial Councils by the President as stipulated in Article 154 (G) (3) of the Constitution.
The Court said the bill was about a matter set out in the Provincial Council list and shall not become law unless it had been referred by the President to every PC. “As the bill has been placed in the Order Paper of Parliament without the compliance with the said provision in the Constitution, the court would not make any determination at this stage on the other grounds on which it was challenged,” the court said.
The provisions of the bill are to promote and regulate a system of integrated planning and development for securing proper infrastructure. It enables the authorities concerned to declare land areas as conservation areas, protected areas, architectural and historical areas and sacred areas.
The court said the bill dealt with integrated planning in relation to the economic, social, historic, environmental, physical and religious aspects of land and noted that land is a subject on the Provincial Council List with PCs being given rights in or over land, land tenure, transfer, alienation, use and improvement.
The Court determined that since such procedure has not been complied with as regards this bill, it should not become law unless it was referred by the President to every PC as per the constitutional requirement. The bench also comprised Justices K. Sripavan and Chandra Ekanayaka
வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது
அரசியல்
தற்கொலைக்குச்
சமமானது!
நக்கீரன்
தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள
தமிழ் சிவில் சமூகம் என்ற அலங்காரப் பெயரில் ஒரு
விண்ணப்பம் வெளிவந்துள்ளது. அதில் பல பெயர்கள்
காணப்படுகின்றன.
பெரும்பான்மையினர்
வண.
பிதாக்கள் மற்றும் வைத்திய கலாநிதிகளது
பெயர்களாகும்.
எது
எப்படியோ
தமிழ் மக்களது அரசியல் தீர்வு பற்றி இந்த தமிழ்
சிவில் சமூகம் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கது.
ஆனால் நாம்
அறிந்தவரையில் இந்த விண்ணப்பத்தில் உள்ள பெயர்கள்
தட்டச்சுச் செய்யப்பட்டுள்ளன.
அதில் யாரும் கையெழுத்து இடவில்லை. தொழிற்சங்கம்
சார்பான கையொப்பகாரர்கள் இபிடிபி கட்சியின் ஆதரவு
தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள். இன்னும் ஒரு
தொகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு
வேண்டியவர்கள்.
குறிப்பாக முதல்
பெயர்
மன்னார் மறைவட்ட பேராயர் இராயப்பு யோசேப்
ஒப்பீட்டளவில் ஏனைய கத்தோலிக்க பேராயர்களைவிட
தமிழ்மக்களது உரிமைகளுக்கு அவ்வப்போது குரல்
கொடுத்து வந்தவர்.
அதே சமயம் போர் முடிந்த பின்னர் ஆட்சித்தலைவர்
மகிந்த இராசபக்சே அவர்களை பல தடவை அலரிமாளிகையில்
சந்தித்து தேநீர் அருந்தி அளவளாவி வருபவர்.
ஆகவே இந்த விண்ணப்பத்தை படிப்பவர்களுக்கு அதன் பின்னால்
வேறு வேறு கைகள்
இருப்பது தெள்ளெனப் புலனாகும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி
உண்டு. "The voice is Jacob's voice, but
the hands are the hands of Esau."
(Genesis
27:22).
அதாவது "குரல் யாக்கோப்பினுடையது ஆனால் கைகள் ஏசுவினது.''
இந்தப் பழமொழி இந்த விண்ணப்பத்துக்கு முற்றிலும்
பொருத்தமாக உள்ளது.
இது கஜேந்திரகுமாரின் மறுவாசிப்பு
(1) "புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட்
23
மற்றும்
24 திகதிகளில்
இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன
நாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ்
கட்சி மகாநாட்டில்
'தேசியம்' 'சுயநிர்ணயம்'
என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய
தீர்மானமொன்றில் ததேகூ சார்பில் பங்குபற்றிய அதன்
தொடக்க கால கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட
மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை
ஏற்படுத்தியது. கருத்தொருமிப்பு ஏற்படாததால்
கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும்
ஏற்புடைத்தன்று" என்பது சாட்சாத் திருவாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அவர்களுடைய குரல். அவரது மறுவாசிப்பு.
கடந்த
தேர்தலில்
தமிழ்க் காங்கிரசை மக்களிடம் விலைப்படுத்த
முடியாது என்று தெரிந்து கொண்ட கஜேந்திரகுமார்
தமிழ் மக்கள் தேசிய முன்னணி என்றவொரு
காளான் கட்சியை அவசர அவசரமாக உருவாக்கினார்.
அந்தக் கட்சி
சார்பில்
தேர்தலில் குதித்த அவரும் அவரது கட்சி
வேட்பாளர்களும் கட்டுக்காசை இழந்தார்கள்.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கைத்
தமிழ்க்
காங்கிரஸ் கட்சி 6,363
வாக்குகளை மட்டும்
(6.28
விழுக்காடு) பெற்று 4
ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. திருகோணமலையில்
அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 1,181 மட்டுமே.
வேட்பாளர்கள் கிடைக்காததால் மட்டக்களப்பு,
வன்னி,
முல்லைத்தீவு தேர்தல் மாவட்டங்களில் அந்தக் கட்சி
போட்டியிடாமல் வெற்றிகரமாகப் பின்வாங்கி விட்டது.
இப்போது தமிழ்மக்கள் முன்னணியும்
செல்லாக்காசாகப் போய்விட்டதால் தமிழ் சிவில் சமூகம் என்ற
முகமூடியை அணிந்து கொண்டு கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் வெளிக்கிட்டுள்ளார்.
கொக்கு தலையில் வெண்ணெய் வைத்த கதை
2.
பேராயர் இராயப்பு யோசேப் தலைமையிலான இந்த சிவில் சமூகம்
ஒரு விசித்திரமான,
வேடிக்கையான,
நகைப்புக்கிடமான வாதம் ஒன்றை முன்வைத்துள்ளது.
மாகாண
சபைத் தேர்தல் தொடர்பாக எதிர்வரும்
2012
இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல்
நடைபெறவிருப்பதாகவும் அதனை
ததேகூ
சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும்
என்பதில் தமக்கு அய்யமில்லை என்றும்
ஆனால் அதனையே அரசும் விரும்புகின்றது என்பதில் உள்ள
சூட்சுமத்தை விளங்கிக்
கொள்ளவேண்டும் என்றும் ததேகூ யை
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவைத்து
அத்தேர்தலில அது வெற்றி பெறுவதையும்
விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம்
பூடகமானதல்ல என்றும் மாகாண சபை முறைமையினை
தழிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக்
கொண்டுவிட்டதாகப்பிரச்சாரம் செய்வதற்காகவே அரசு
இதனை முயற்சிக்கின்றது என்ற பெரிய அரசியல்
கண்டுபிடிப்பை இந்த சிவில் சமூகம்
கண்டுபிடித்துள்ளது. கொக்கைப் பிடிக்க அதன்
தலையில் வெண்ணெய் வைத்து அது வெய்யிலுக்கு உருகி
கண்ணை மறைக்கும் போது அபக்கென்று பிடிக்கலாம்
என்று சொன்ன புத்திசாலியின் யோசனைக்கும் இந்த
சிவில் சமூகத்தின் யோசனைக்கும் வேற்றுமையே
கிடையாது! அப்படிப் பார்க்கப் போனால்
1983 இயற்றப்பட்ட
6
ஆவது சட்ட திருத்தத்திற்கும்
1987
இல் இயற்றப்பட்ட
13
ஆவது சட்ட திருத்தத்திற்கும் பின்னரும் நாடாளுமன்ற
தேர்தலில் ததேகூ பங்குபற்றியது
சிறீலங்காவின் ஒற்றையாட்சி யாப்பை
ஒப்புக்கொண்டதற்குச் சமமாகும்!
உண்மையில் சிங்கள அரசுக்கு வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ யை வெற்றிபெற வைப்பதுதான்
விருப்பம் என்றால் எதற்காக அந்த சபைக்கான தேர்தலை
தள்ளி வைத்துக் கொண்டுபோகிறது?
தேர்தலை உடனடியாக வைத்து தமிழர்கள் 13 ஆவது சட்ட
திருத்தத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று
பரப்புரை செய்யலாமே?
உண்மை என்னவென்றால் சிங்கள அரசுக்கு அப்படியான
எண்ணம் இல்லை. அப்படி நினைப்பது குழந்தைப்பிள்ளைத்
தனமானது.
மகிந்த இராசபக்சே
தேர்தலை தள்ளிப் போடுவதற்குக் காரணம் இன்னும் சில
"அபிவிருத்தித் திட்டங்களை"
செய்து முடித்துவிட்டு அதன் அடிப்படையில் தேர்தல்
பரப்புரை செய்து வட மாகாண சபையைக்
கைப்பற்றலாம் என
மகிந்த இராசபக்சே
கணக்குப் போடுகிறார்.
அதுதான் உண்மை.
2012
இல் தேர்தல் இல்லை என்று மகிந்த இராசபக்சே
நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது அதனை உறுதி
செய்கிறது.
வெளியார் தலையீடு
இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பது
பகற்கனவு
3. இந்த தமிழ் சிவிலியன் சமூகம்
தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத உள்ளடக்காத எந்த
ஒரு அரசியல் தீர்விலும் பலன் இல்லை என்றும் மாறாக
இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வுமட்டுமே
நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத்
தருவதோடு இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து
நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்
என்றும் வெளியார் தலையீட்டுக்கான தேவையையும்
இல்லாமல் செய்யும் என்றும் சொல்கிறது. விடிய விடிய
இராமர் கதை விடிந்த பின் இராமருக்கு சீதை என்ன
முறை என்று ஒருவன் கேட்டானாம்.
13 ஆவது சட்ட திருத்தத்தில் சொல்லப்பட்ட காணி,
காவல்துறை அதிகாரங்களையோ,
வட - கிழக்கு இணைப்பையோ தர மறுக்கும் அரசு எப்படி
"இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து
நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்?" ஒரு அரசியல் தீர்வுக்குச்
சம்மதிக்கும்?
அதுவும்
"வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல்?"
இன்று எமக்குள்ள பலங்களில் பன்னாட்டு சமூகத்தின்
ஆதரவுதான் முக்கியமானது. பன்னாட்டு சமூகத்தின்
அழுத்தம் காரணமாகவே மகிந்த இராபக்சேயின் அரசு
பேச்சு வார்த்தையில் வேண்டா வெறுப்போடு கலந்து
கொள்கிறது.
நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வாருங்கள்
இல்லையென்றால் பேச்சுவார்த்தை இல்லை எனத் திமிரோடு
வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மிரட்டியது
நினைவிருக்கலாம்.
ஆனால் அதன்பின்னரும் பேச்சுவார்த்தை தொடருகிறது
என்றால் அதற்கு "வெளியார் தலையீடு" தான் காரணம்.
வெளியார் தலையீடு
இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பது
பகற்கனவு. சிங்கள அரசைப் பொறுத்தளவில் போரில் வெற்றி பெற்று விட்டதால்
இனச் சிக்கல் இன்று இல்லை,
எல்லோரும்
"லங்கா மாதாவின் புத்திரர்கள்" "அதிகாரப் பரவலாக்கலும் தேவையில்லை" என்பதுதான் அதன்
நிலைப்பாடு.
தீர்மானங்கள்,
ஆணை என்பது வேறு
நடைமுறை அரசியல் என்பது வேறு
4. தமிழ் சிவில் சமூகம்
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல்
தீர்வுதொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு
பெரும் தடைக்கல்லாக அமையும் என்றும்
மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை
ததேகூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது
நீண்டஅரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து
விடும் என்றும் .........அதேபோல் இன்னுமொரு
தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான்
ததேகூ
தமிழ் மக்களின் வேட்கைகளை அரசுக்கும் உலகுக்கும்
அறிவிக்க வேண்டுமென்றுமில்லை என்ற
கண்டுபிடிப்புக்களை தனது விண்ணப்பத்தில்
அடுக்குகிறது.
அப்படிப் பார்த்தால்
வட்டுக்கோட்டை மாநாட்டில் வடக்கு கிழக்கு தமிழர்
தாயகம்,
தேசியம்,
சுய நிர்ணய உரிமை என்பவற்றை அடிநாதமாகக் கொண்ட பூரண
சுதந்திரமும் தன்னாட்சியும் கொண்ட சோசலிச
தமிழீழத்தை அமைப்போம்
என்ற தீர்மானத்தின் அடிப்படையில்
1977
இல் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டு மக்களிடம்
ஆணை பெறப்பட்ட பின்னர் ஏன் தவிகூ,
ததேகூ தொடர்ந்து தேர்தலில் பங்குபற்றியது?
"தமிழ் மக்களின்
ஆணையைப் பெற இன்னுமொரு தேர்தல் அவசியமில்லை"
என்று ஏன் சொல்லவில்லை?
காரணம் தீர்மானங்கள்,
ஆணை என்பது வேறு. நடைமுறை அரசியல்
என்பது வேறு.
தேர்தலைப் புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்கு
சமமானது
5.
"அரசு இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின்
தேர்தலில் ததேகூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது.
மாறாக தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச
சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத்
தடுக்க நாம் வேறுமாற்று உபாயங்கள் தொடர்பில்
சிந்திக்கலாம். இவை தொடர்பில் ததேகூ. மக்களோடு
கலந்தாலோசிக்க வேண்டும்" என்று தமிழ் சிவில்
சமூகம் சொல்கிறது. இந்த யோசனையை இதற்கு முன்
எங்கேயோ கேட்ட மாதிரி - அதாவது யாக்கோப்பின் குரல்
- படுகிறதே?
ஆமாம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில்
போட்டியிட வக்கற்ற தமிழ்க் காங்கிரஸ் அல்லது அதன்
முகமூடி தமதேமு இப்படித்தான் "சீ சீ அந்தப் பழம்
புளிக்கும்" என்று தேர்தல் காலத்தில் தேர்தலைப்
புறக்கணிக்குமாறு
அறிக்கை விட்டது.
ஒரு மக்களாட்சி முறைமை உள்ள நாட்டில் தேர்தலைப்
புறக்கணிப்பது என்பது அரசியல் தற்கொலைக்குச்
சமமானது. வண பிதாக்களுக்கும் வைத்திய
கலாநிதிகளுக்கும் அரசியல் வரலாறு
தெரியாதிருந்திருக்கலாம். இதை எழுதிய அரசியல்வாதி
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமா
அரசியல் வரலாறு தெரியாது?
1931 இல் நடந்த சட்டசபைத் தேர்தலை அன்றைய யாழ்ப்பாண
இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்ததால் 50
உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் சிங்களவர்களது
வாக்குப் பலம் அதிகரித்தது. அதன் காரணமாக
முழுவதும் சிங்களவர்களைக் கொண்ட அமைச்சர் அவை
(Board of Ministers)
உருவாகியது.
புறக்கணிப்புக்குச் சொல்லப்பட்ட காரணம் டொமினியன்
தகைமை வேண்டாம் இலங்கைக்கு - இந்தியாவில் இந்திய
காங்கிரஸ் கேட்டது போல -
பூரண சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைதான்.
இந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடிய
எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கான மயில் ஆடக்
கண்டிருந்த வான்கோழி தானும் தனது பொல்லாச் சிறகை
விரித்தாடிய கதைக்கு ஒப்பிட்டார்.
1994
இல் வரலாறு மீண்டும் திரும்பியது.
வி.புலிகள் தேர்தலைப் புறக்கணித்ததால் டக்லஸ்
தேவானந்தாவின் இபிடிபி
10,744
(0.14)
வாக்குளைப் பெற்று
9
இடங்களில் "வெற்றி" பெற்றது!
இந்த
10,744
வாக்குகளில் இபிடிபி யின் கட்டுப்பாட்டில் இருந்த
தீவுப்பகுதியில்
9,944
வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தல் புறக்கணிப்பே
இபிடிபி யின் அரசியல் வருகைக்கு கால்கோள் இட்டதோடு
மட்டுமின்றி இன்றைய துரோக அரசியலுக்கும்
வழிவகுத்தளது. இதனை வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து
கொள்வார்கள்.
தேர்தல் புறக்கணிப்பு தேவானந்தாவுக்கு மகிடம்
சூட்டவோ?
6. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் சிவில் சமூகம்
வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்க ஆலோசனை சொல்வது டக்லஸ் தேவானந்தாவுக்கு மகிடம்
சூட்டத்தான்
என்ற அய்யம் எழுகிறது.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலும்
(2010)
தமிழ்க்
காங்கிரஸ் கட்சி தேசியத்துக்கு ஆதரவான வாக்குகளைப்
பிரித்ததால் இபிடிபி கட்சிக்கு ஒரு இருக்கையை
தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தது. ததேகூ கேட்காவிட்டால் மாகாண சபையைக் கைப்பற்றுவதற்கு வேறு
மாற்று உபாயங்களைப் பற்றித் தமிழ் சிவில் சமூகம்
சிந்திக்கப் போகிறதாம்.
என்ன அந்த உபாயம் - சாணக்கியம் - என்பதைச் சொல்ல
வேண்டியதுதானே?
அந்த உபாயம்
வணபிதாக்களையும் வைத்திய கலாநிதிகளையும்
சுயேட்சைகளாகத் தேர்தலில் நிறுத்துவதா?
அப்படியென்றால் தமிழ் சிவில் சமூகத்துக்கு
ஆட்டோடுதான் கோபம் குட்டிகளோடு இல்லை என்றாகிறது?
அதாவது ததேகூ ஓடு மட்டும் கோபம் மற்றவர்களோடு
இல்லை!
ததேகூ யை மக்கள் தேர்தலில் வாக்களித்து நாடாளுமன்றம்
அனுப்பி இருக்கிறார்கள்.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை ததேகூ மனம்,
மொழி,
வாக்கு ஆகிய மூன்றோடும் நிறைவேற்ற வேண்டும்.
அதில் அவர்கள் தவறு இழைத்தால் மக்கள் அடுத்த
தேர்தலில் ததேகூ யை நிச்சயம் தண்டிப்பார்கள்.
தமிழ் சிவில் சமூகம் என்ற போர்வையில் ததேகூ க்கு
எதிராகக் குறுக்குச் சால் ஓட்டுவது அல்லது
கால்தடம் போட்டு விழுத்த எத்தனிப்பது அறம் அல்ல.
தமிழ் சிவில் சமூகம் யார் எதிரி யார் நண்பன் என்பதைத்
தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரலாற்றில் முன் எப்பொழுதம் இல்லாத ஒரு சிங்கள - பவுத்த
வெறிபிடித்த - போர் வெற்றியில் மிதப்பாக இருக்கும்
– ஓர்
அரசின்
அரசியல்,
இராணுவ,
இராசதந்திரம்
ஆகியவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்
ததேகூ இருக்கிறது.
திரு இரா சம்பந்தர் கிழக்கை சிங்கள மயப்படுத்த
60
ஆண்டுகள் எடுத்தது ஆனால் வடக்கை சிங்கள மயப்படுத்த
10- 20
ஆண்டுகள் போதும்
என்று கனடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்
போது குறிப்பிட்டிருந்தார்.
வட - கிழக்கு வரலாற்றில் இல்லாதவாறு இராணுவ மயப்படுத்தப்
பட்டுள்ளது. முழத்துக்கு ஒரு இராணுவம் மட்டுமல்ல
ஊருக்கு ஒரு இராணுவ தளங்மும் நிறுவப்படுகிறது.
திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வடக்கில்
அசுர வேகத்தில் நடைபெறுகிறது.
இதன் மூலம் தமிழர்களது தாயகக் கோட்பாட்டை உடைத்து
எறிவதே சிங்கள அரசின் இலக்காகும்.
நிலம் பறிபோனால் சுயநிர்ணயம் என்ற பேச்சுக்கே
இடமில்லாது போய்விடும்.
எனவே இன்றைய உலக ஒழுங்கு,
புவிசார் அரசியல், பொருளாதார நலங்கள் போன்றவற்றின் யதார்த்தங்களைப்
புரிந்து கொண்டு ததேகூ கைகளைப் பலப்படுத்த
எல்லோரும் முன்வர வேண்டும்.
ததேகூ ஆலோசனை சொல்வதென்றால் அது ஆக்க பூர்வமான
உருப்படியான ஆலோசனை ஆக இருக்க வேண்டும்.
ததேகூ யைப் பொறுத்தளவில் தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு
தமிழினத்தின் அடிப்படைக் கோரிக்கைகளான தமிழ்த்
தேசியம்,
தாயகம்,
தன்னாட்சியுரிமை எவற்றையும் விட்டுக்
கொடுக்காமல்தான் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
எமக்குப்
பணியாரம்தான் தேவையே ஒழிய சிலு சிலுப்பு அல்ல
என்பதை நினைவில் கொள்வது நல்லது.
திருவள்ளுவர் வினை வலி,
தன் வலி,
துணை வலி, மாற்றான் வலி
என்பனவற்றைத் தூக்கிச் செயல் செய்ய வேண்டும்
என்றார். பின்னாளில் மாவோ “நண்பன்
யார்?
எதிரி யார்?”
என்று வகுத்துக் கொண்ட பின்
“களமிறங்கு”
என்று சொன்னதை மனதில் இருத்திக் கவனமாகவும் நிதானமாகவும் பயணிப்போம்.
Kugathasan
This petition
touches on more than one subject. It touches
on the
followingL
(1)
TNA has failed to endorse the resolution moved
at the Delhi meeting regarding Thamil people’s
right to self-detrmination and nation status;
(2)
Prolonging the talks despite government refusal
to accept the core principles (a)amalgamation of
Northeast (b) police and land powers to P.C.
(c) vest land powers in
PC.
(3)
TNA
should NOT contest PC elections, but at the
same time think about ways of preventing anti-
Thamil and pro-government elements.
(4)
That
TNA will take decision in accordance with the
wishes of those who sacrificed their lives for
the cause of liberation.
I think some of us
should meet to formulate a response.
Thangavelu
01.வடக்கு
கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தல்
02.மாகாணத்திற்கு
சட்டம்,
ஒழுங்கு,
பொலிஸ் அதிகாரம்
03.அரச
காணிகளை மாகாண அரசுக்கு உரித்தாக்குதல்
He is the TNA
spokesman so he is the proper person to respond
your question
---------- Forwarded
message ----------
From: Perampalam Kanapathippillai <kana47@gmail.com>
Date: 2011/12/13
Subject:
இது உண்மையானால் உறவுகளே உங்கள் கருத்தென்ன?
To: Thamilar <naamtamilar@googlegroups.com>
அன்பு உறவுகளே!
கீழ்க்காணும் மனுவில் தாயகத்தில் உள்ள
புத்திசீவிகள் பலரின் பெயர்கள் மாத்திரம்
எழுதப்பட்டுள்ளது.( கையொப்பம் இல்லை) இது உண்மையா
அல்லது பொய்யா என்பதைச் சம்பந்தப்பட்ட
புத்திசீவிகளும்,
தமிழர் தேசியக்கூட்ட மைப்புந்தான்
உறுதிப்படுத்தவேண்டும்.
இது உண்மையானால் உறவுகளே உங்கள் கருத்தென்ன?
அன்புடன்
கணபதி
வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின்
அதில்த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது -
தமிழ் சிவில் சமூகம்
[
செவ்வாய்க்கிழமை,
13
டிசெம்பர்
2011, 09:26.33 PM GMT ]
Error! Filename not specified.
nine parliamentary seats with just 10,744 votes
(0.14%), of which 9,944 votes came from the EPDP
controlled Jafna islands.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில்
சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம்
என்றதலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்மதகுருமார்
பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள்
சட்டத்தரணிகள்மருத்துவர்கள் மாணவர்கள் உட்பட பலர்
இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேற்படி அறிக்கை தமிழ் சிவில்
சமூகத்தின்பிரதிநிதிகளால் தமிழ்
தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை
சேனாதிராஜாவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கை மற்றும் கையெழுத்திட்டவர்கள்
விபரம்பின்வருமாறு:-
தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும்
அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற
அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது
நாடாளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு
கொண்டு வர விரும்புகின்றோம்:
1.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு
தொடர்பிலானது:
அ) பல சுற்றுத் பேச்சுவார்த்தைகளின்
பின்னர்பேச்சுவார்த்தைகளின் போது பேச்சளவில்
முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல்
தென்பட்டபோதிலும் அரசாங்கத்திடமிருந்து மூன்று
முக்கிய விடயங்கள் தொடர்பில் எமுத்து
வடிவில்விளக்கம் கிடைக்கப் பெறும் வரை அடுத்த
சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதியைநிர்ணயிக்கப்
போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த
04
ஓகஸ்ட்
2011
அன்று
நீங்கள்எடுத்திருந்தீர்கள். உங்களது அறிக்கையில்
அது வரையிலான பேச்சுவார்த்தைகளை
'ஏமாற்றும்'தன்மையானவை
–‘deceitful
process’
என வர்ணித்திருந்தீர்கள். இந்நிலைப்பாட்டை த. தே.
கூ.எடுத்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில்
வரவேற்பைப்பெற்றது என்பது சிவில் சமூகத்தினர்என்ற
வகையில் நாம் அறிந்துள்ளோம்.
இது இவ்வாறிருக்க
14
செப்டம்பர்
2011
அன்று திடீரெனபேச்சுவார்த்தைகள் மீள
ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு தங்களிடமிருந்து
வந்த போது நாம்பெருவியப்படைந்தோம்.
பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளும் உங்களது
இந்தத்தீர்மானமானது தங்களது ஓகஸ்ட்
4
திகதியிட்ட அறிக்கையை முற்றிலும்
அர்த்தமற்றதாக்கியசெயற்பாடாகவே நாம்
கருதுகின்றோம்.
குறிப்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்
தொடர்நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் -
அரசாங்கத்துக்கெதிரான சர்வதேச அழுத்தம்அதிகரித்து
வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் -
பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளசம்மதம்
தெரிவித்த தங்கள் முடிவானது அரசாங்கத்தைக்
காப்பாற்றும் விதத்தில் அமைந்துவிட்டதாக நியாயமான
விமர்சனம் ஒன்று
முன்வைக்கப்படுகின்றது. இதற்கான விளக்கத்தை
தமிழ்மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது
தார்மீகக் கடமையாகும்.
அண்மையில் டிசம்பர்
1
அன்று நடைபெற்றபேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு த.தே.கூ
பெயர்களைப் பிரேரிக்கத்தவறியமையால் பேச்சில்
விரிசல் நிலை அடைந்திருப்பதாகத்
தெரிவிக்கப்பட்டது. ஆனால்தொடர்ந்து
பேச்சுவார்தைகள் டிசம்பர்
6
அன்று இடம்பெற்றன. வடக்குக் கிழக்கு இணைப்புபொலிஸ்
மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம்
தமது
நிலைப்பாட்டில்விடாப்பிடியாக நிற்பதாகக்
கூறப்படுகின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின்
தொடர்ந்து பேசுவதில்அர்த்தமில்லை. பேச்சுக்களில்
உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பிலான
விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க
வேண்டியதுதங்களது கடமையாகும்.
ஆ) புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட்
23
மற்றும்
24
திகதிகளில்இந்திய காங்கிரஸ் உறுப்பினர்
சுதர்சனநாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட
பல்-தமிழ் கட்சி மகாநாட்டில்'தேசியம்''சுயநிர்ணயம்'
என்ற வார்த்தைப் பிரயோகங்கள்
உள்ளடங்கியதீர்மானமொன்றில் ததேகூ சார்பில்
பங்குபற்றிய அதன் தொடக்க கால கட்சிகளின்
உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப்
பெரும்
ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தொருமிப்பு
ஏற்படாததால்கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த
வகையிலும் ஏற்புடைத்தன்று.
ஆ) புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட்
23
மற்றும்
24
திகதிகளில்இந்திய காங்கிரஸ் உறுப்பினர்
சுதர்சனநாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட
பல்-தமிழ் கட்சி மகாநாட்டில்'தேசியம்''சுயநிர்ணயம்'
என்ற வார்த்தைப் பிரயோகங்கள்
உள்ளடங்கியதீர்மானமொன்றில் த.தே.கூ சார்பில்
பங்குபற்றிய அதன் ஆரம்பகால அங்கத்துவ
கட்சிகளின்உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை
எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த வார்த்தைப் பிரயோகங்கள்
உள்ளடக்கப்படுவதைஎதிர்த்த தமிழர் விடுதலைக்
கூட்டணி மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள்
த.தே.கூ வில் அண்மைக்காலத்தில் தம்மை இணைத்துக்
கொண்டவர்கள். (இந்த வார்த்தைப்
பிரயோகங்களைஎதிர்த்த மற்றைய இரு உதிரிக் கட்சிகள்
ஈ.பி.ஆர்.எல்.எஃப். (பத்மநாபா அணியும்
ஈ.என்.டி.எல்.எஃப்பும்.). மேற்சொன்ன தமிழர்
விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட்
ஆகியகட்சிகளை அண்மைக்காலத்தில் உள்வாங்கி கடந்த
உள்ளூராட்சித் தேர்தல்களில்நீங்கள் போட்டியிட்டமை
யாவரும் அறிந்தது.
த.தே.கூ வின் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள்
செயற்படுமிடத்து அவர்கள் த.தே.கூ. வின் அடிப்படை
அரசியற்கோட்பாடுகளுக்கு உட்பட வேண்டியகடப்பாட்டை
அவர்களுக்கு நீங்கள் இடித்துரைத்திருக்க வேண்டும்
அல்லது அவர்களதுநிலைப்பாட்டுக்கான விளக்கத்தை
கேட்டிருக்கவேண்டும். த.தே.கூ அவ்வாறான
வலியுறுத்தலை மேற்கொள்ளாமல் போனதை அல்லது
அவர்களின் விளக்கத்தை கோராதுவிட்டதை
அவர்களது கொள்கைநிலைப்பாட்டை நீங்களும் - த.தே.கூ.
- ஒப்புக் கொள்வதான சமிக்ஞையாகவே கருத
வேண்டியுள்ளது.இலக்கற்ற ஒற்றுமை என்பதில்
அர்த்தமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான
ஒற்றுமைஎன்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை
செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்கவேண்டும். அதனை
அழிப்பதற்கான ஒற்றுமையில் பயனேதுமில்லை.
இ)த.தே.கூ. வினது அரசியல் தீர்வு தொடர்பான
நிலைப்பாடு தொடர்பாக
அரசாங்கத்தோடுபேச்சுவார்த்தைகளில்
கலந்துகொள்கின்றவர்களும் கட்சியின் பிரதான சர்வதேச
தொடர்பாளர்களுமாகிய சம்பந்தன் அவர்களும்
சுமந்திரன் அவர்களும் செய்து வருகின்ற பொது
வெளிப்படுத்தல்கள் கட்சியின் அடிப்படைக்
கொள்கைகளிலிருந்து முரண்படுவதை நாம் அவதானித்து
வருகின்றோம்;.
தீர்வு'தேசியம்'
'சுயநிர்ணயம்'
என்றஅடிப்படைகளிலன்றி தமிழர்கள் சிறுபான்மையினர்
சம உரிமைகள் தேவை என்ற அடிப்படையிலேயே
முன்வைக்கப்படுவதாக மீளவும் மீளவும்
தெரிவிக்கப்படுகின்றது. (உதாரணமாக:சுமந்திரனினால்
26
ஏப்பிரல் அன்று வழங்கப்பட்ட அமரர் எஸ். ஜே. வி.
செல்வநாயகம்நினைவுப் பேருரை சம்பந்தனின்
04ஒக்டோபர்
2011
திகதியிட்ட கல்முனை மாநகரசபைத் தேர்தலை ஒட்டிய
அறிக்கை
போன்றவை)
சிறுபான்மையினங்கள் கோரி நிற்பது மொழி மற்றும்
கலாசார உரிமைகளையே. தம்மை ஒரு தேசமாகக் கருதுகின்ற
மக்களைக்கொண்ட ஒரு தேசிய இனத்துக்கேதன்னாட்சி
உரிமைகளை தமக்கிருக்கும் சுயநிர்ணயத்திற்கான
உரிமையின் அடிப்படையில் கேட்கும் உரிமை உள்ளது.
தமிழர்களாகிய நாம் எம்மை ஒரு தேசமாகக்கருதியே
எமக்குரித்தான சுயநிர்ணயத்திற்கான உரிமையின்
அடிப்படையில் சுயாட்சியை
கோருகின்றோம்.
அதே போன்று சமவுரிமைகளைக் கேட்பதானது
சுயாட்சியைக்கேட்பதாகாது. சட்டத்தின் ஆட்சியும்
(Rule
of Law)
நல்லாட்சியும்
(Good
Governance)
பூர்த்தி
செய்யப்படும் ஒரு நாட்டில்
சகலரதும்
'சமவுரிமைகள்'
பாதுகாக்கப்படும். தமிழர்களது பிரச்சனைகள் வெறுமனே
சட்டத்தின்
ஆட்சியை உறுதி செய்வதினூடாக தீர்க்கப்பட
முடியாதவை. சுயாட்சியைப் பெற்றுக்
கொள்வதினூடாகவே
எமது அரசியற்
பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.
தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின்
செயற்பாடுகளினால்ஏற்பட்ட பட்டறிவின் பயனாகவே எமது
முன்னைய தலைவர்களும் மக்களும் ஈற்றில்
1976இலும்
1977இலும்
தமிழ்த்தேசம் சுயநிர்ணய உரிமை சுயாட்சி என்ற
அரசியல் கோட்பாடுகளை தமது அரசியல்
அபிலாஷைகளாகக்கொள்ளும் நிலைப்பாட்டை வந்தடைந்தனர்.
பின்னர் வந்த எமது
30
வருட வாழ்வும் அரசியல் வரலாறும் இந்த
அடிப்படையிலேயே இயங்கியது.
இப்போது ஒருசிலருக்கு ஏற்புடையதாக இல்லை
என்பதற்காக இந்த அடிப்படைகளை விட்டுவிட்டோ
அல்லது
மறைத்தோ எமது அரசியல் பயணத்தை நாம்
தொடரமுடியாது.
தேசியம் சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம்
தனிநாட்டைக்
கோருவதாகப் பொருள் கொள்ள வேண்டிய
அவசியமில்லை. இந்த அபிலாஷைகளைப்
பூர்த்திசெய்வதற்குரிய நிறுவன ரீதியான ஏற்பாடுகள்
தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை மேசையில்
பேசித்
தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் தேசியம்
சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு
நாம் செல்லத் தவறுவோமாயின் நாம் உண்மையான
சுயாட்சியைப்
பெற்றுக் கொள்ளமுடியாததாகிவிடும். இந்த
அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத உள்ளடக்காத எந்த ஒரு
அரசியல்தீர்விலும் பிரயோசனம் இல்லை. மாறாக இந்த
அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வுமட்டுமே
நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத்
தருவதோடு
இத்தீவின்இனங்களுக்கிடையில் நீடித்து
நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்
வெளியார்
தலையீட்டுக்கான
தேவையையும் இல்லாமல் செய்யும்.
தமிழர் ஒரு தேசிய இனம் தமிழர் ஒரு தேசம் எமக்குசுய
நிர்ணய உரிமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாட்டை
நாம் எடுத்தமையில் எந்தத் தவறும் இல்லை என்ற
மனவுறுதி உங்களிடத்தில் எப்போதும் வெளிப்பட
வேண்டும்.
இத்தகைய மனவுறுதி உள்ளவர்கள் தான்
தமிழர் சார்பில் பேச வேண்டும். பேச முடியும்.
தனியே இவற்றை கோஷங்களாக முன்வைப்பதனூடாக நாம் இந்த
இலக்கை அடைந்து கொள்ள முடியாது என்பது
உண்மையே. அரசியல் உபாயங்கள்மிகவும் அவசியம். ஆனால்
அரசியல் உபாயங்களுக்காக எமது இந்த அரசியல்
அடிப்படைகளை அபிலாஷைகளை விட்டுக் கொடுத்துவிட
முடியாது. இவை பேரம் பேசும் பொருட்களல்ல.
விட்டுக்கொடுப்போமெனின் எதற்காக நாம்அரசியல்
செய்கின்றோம் என்ற கேள்விக்கு மக்களுக்கு விடைகூற
வேண்டியிருக்கும்.
2.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக
எதிர்வரும்
2012
இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல்நடைபெறவிருப்பதாக
அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது.
இத்தேர்தலை த.தே.கூ
சந்திக்குமானால் அதில் அமோக
வெற்றி பெறும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை.
ஆனால்
இதனையே அரசாங்கமும் விரும்புகின்றது என்பதில்
உள்ள
சூட்சுமத்தை
விளங்கிக் கொள்ளவேண்டும்.
இலங்கையின் அரசியல்
யாப்பின் ஓரங்கமான 13ஆம்
திருத்தத்தின்
நடைமுறைவடிவத்திற்கப்பால் எவற்றையுமே தீர்வு
தொடர்பில் கருத்தில் கொள்ள விரும்பாதஅரசாங்கம்
13ஆம்
திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்ற தேர்தல்
விஞ்ஞாபனத்தின்அடிப்படையில் மக்களிடமிருந்து ஆணை
பெற்ற த.தே.கூ வை மாகாண சபைத் தேர்தலில்
போட்டியிடவைத்து அத்தேர்தலில அது
வெற்றி
பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான
உள்நோக்கம்
பூடகமானதல்ல. மாகாண சபை முறைமையினை
தழிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக்
கொண்டு
விட்டதாகப்பிரச்சாரம் செய்வதற்காகவே
அரசாங்கம் இதனை முயற்சிக்கின்றது.
அமெரிக்க இந்திய அரசாங்கங்களும்
13
ஆவது திருத்தத்தை
தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக
ஏற்றுக் கொள்ளுமாறு
வலியுறுத்துவதிலிருந்து
இவ்வரையறைக்கப்பால்
செல்லுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதைச்
சுட்டுவதாக
கருதமுடியும். ஆகவே மாகாண
ஆட்சியைக்கைப்பற்றிய பின்னர் இன்னும் மேலதிகமாக
கேட்டு வாங்கலாம் என்ற உபாயம் ஆபத்தானது.
13 ஆவதுதிருத்தம்
என்ற வரையறைக்குள்ளிருந்து
ஓர் எல்லைக்கப்பால் பிரயாணிக்க முடியாது என்பதை
சட்டஅறிஞர்கள் பலரை உங்கள் மத்தியில்
வைத்திருக்கின்ற உங்களுக்கு நாங்கள்
சொல்லவேண்டியதில்லை.
கட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக்
கொள்ளலாம்என்ற சிந்தனையும் மேற்சொன்ன
காரணங்களுக்காக சாத்தியப்படாது.
13ஆவது
திருத்தத்தை அல்லதுஅது தொடர்பில் மேற்கொள்ளப்படும்
சில திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஓரு
தீர்வுப்பொதியை இடைக் காலத் தீர்வாகக் கருதவும்
முடியாது. மக்களுடைய அன்றாடப்
பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வுகளைத் தர முடியாத
இவ்வகை இடைக்காலத்
தீர்வுகளால் எந்தப் பயனும் இல்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக பிரிந்த
வடக்குக்கிழக்கில் த. தே. கூ போட்டியிடுவதனால்
ஏற்படக்கூடிய அரசியல் அபத்தத்தையும் மனதில்கொள்ள
வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது
ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்படமுடியாதது
பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. இதை
த.தே.கூ. இந்திய அமெரிக்க
அரசுகளுக்கு வலியுறுத்த
வேண்டுமே அன்றி இந்த அழுத்தங்களுக்கு
பயந்து தமிழ்த்தேசத்தின்ஒட்டுமொத்த அரசியல்
எதிர்காலத்தை மீள முடியா பாழுக்குள் தள்ளக்கூடாது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல்
தீர்வுதொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு
பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும்குறிப்பாகச்
சொல்லுவதாயின் மாகாண சபையை த.தே.கூ கைப்பற்றும்
தருவாய் என்பது எமது நீண்டஅரசியல் பயணத்தின் அவல
முடிவாக அமைந்து விடும். அத்தகைய நிகழ்வு
ஈற்றில்முற்றுமுழுதானஅரசியல்
முள்ளிவாய்க்காலாகவும் அமைந்துவிடும். இது
நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக்கடமைத.தே.கூ.
விடமே இன்று உள்ளது.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்
கொண்டிருப்பதாகச்சொல்லப்படும் இந்தத் தறுவாயில்
மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு
பொருத்தமற்றது
எனவும் தேவையற்றதெனவும் த.தே.கூ
நிலைப்பாடெடுக்கவும் அதை பேச்சுவார்த்தை
மேசையிலும்
சர்வதேசத்திடமும் வலியுறுத்தவும்
தேவையான நியாயப்பாடு த.தே.கூ. இடம் உள்ளது.
அதேபோல்இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின்
ஆணையைப் பெற்றுத்தான்
த.தே.கூ. தமிழ் மக்களின்அபிலாஷைகளை அரசுக்கும்
உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை.
அரசாங்கம் இதனை மீறி தேர்தல்களை
நடாத்துமாயின்தேர்தலில் த. தே. கூ நேரடியாகப்
பங்கெடுக்கக் கூடாது. மாறாக தமிழ்த் தேசிய
விரோதசக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண
சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறுமாற்று
உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில்
த. தே. கூ.மக்களோடு
கலந்தாலோசிக்க வேண்டும்.
தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் அரசியல் விடுதலை
இயக்கமாக
செயற்பட வேண்டும் என்ற நோக்கில்
ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள்
த.தே. கூ வைக் கருதுகின்றார்கள். இந்தக்
குறிக்கோளின் அடிப்படையில் த. தே. கூ
தொடர்ந்துசெயற்படும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ்
மக்கள் தொடர்ந்து வந்த சகல தேர்தல்களிலும் த.தே.
கூ. க்கு தமது ஆணையை வழங்கி வருகிறார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தருணத்தில்
இந்தவிண்ணப்பத்தை எமது தேசத்தின் ஆன்ம வெளிப்பாடாக
உங்களிடத்து முன்வைக்கின்றோம்.இலட்சக் கணக்கில்
மரணித்த எம்மக்களினது எதிர்பார்ப்பும் இதுவே.
தொடர்ச்சியானஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் எமது
மக்களின் அவாவும் இதுவே. ஒரு கௌரவமான நீடித்து
நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றைஅடைய சரியான
முடிவை மக்களின்
அபிலாசைகளுக்கமைவாக எடுப்பீர்கள் என்ற
நம்பிக்கையில்நிறைவு செய்கின்றோம்.
நன்றி.
1)அதி வணக்கத்துக்குரிய கலாநிதி. இராயப்பு
ஜோசப்மன்னார் கத்தோலிக்கப் பேராயர்.
2)
கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைவர்
துர்க்காதேவிதேவஸ்த்தானம் தெல்லிப்பளை
3)
நிறுவுனர் சிவபூமி அறக்கட்டளை யாழ்ப்பாணம்
4)
செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் ஜனாதிபதி
சட்டத்தரணி
யாழ்ப்பாணம்.
5)
வைத்திய கலாநிதி சு. ரவிராஜ்
சத்திரசிகிச்சை
நிபுணர் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
தலைவர் யாழ் மருத்துவ சங்கம்.
6)
பேராசிரியர். க. கந்தசாமி விஞ்ஞான பீடாதிபதி
யாழ்
பல்கலைக்கழகம்.
7)
பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன்
கணிதபுள்ளி
விபரவியற்றுறைப் பேராசிரியர்
8)
தலைவர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.
9)
பேராசிரியர். ப. புஸ்பரட்ணம் தலைவர்வரலாற்றுத்துறை
யாழ் பல்கலைக்கழகம்.
10)தி. இராஜன் மட்டக்களப்பு மாவட்ட சிவில்
சமூகஆர்வலர்கள்
கூட்டமைப்பு
11)
கலாநிதி. ஆ. ச.
சூசை
புவியியற்றுறை யாழ்பல்கலைக்கழகம்
12)
நல்லைக் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ
சோமசுந்தரபரமாச்சாரிய சுவாமிகள்
யாழ்ப்பாணம்
13)
அதி வணக்கத்துக்குரிய கலாநிதி. எஸ்
ஜெபநேசன்முன்னாள் தென்னிந்தியத் திருச்சபைப்
பேராயர்.
14)
பேராசிரியர். சி.க. சிற்றம்பலம்
ஓய்வு
நிலைத்தகைசால் வரலாற்றுப் பேராசிரியர்
15)
முன்னாள்
பீடாதிபதி பட்டப்பின் படிப்புகளுக்கானபீடம் யாழ்
பல்கலைக்கழகம்.
16)
பேராசிரியர்.இ. குமாரவடிவேல் சிரேஷ்ட
பௌதிகவியல்பேராசிரியர்
17)
முன்னாள் பதில் துணைவேந்தர் யாழ் பல்கலைக்கழகம்.
18)
பேராசிரியர். வி.பி. சிவநாதன் தலைவர்பொருளியற்றுறை
யாழ் பல்கலைக்
கழகம்.
19)
தலைவர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்.
20)
க.
சூரியகுமரன்
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்சம்மேளனப்
பிரதிநிதிவடமராட்சி வடக்கு க. தொ. கூ. சங்க சமாசப்
பிரதிநிதி
21)
வணபிதா. கி. ஜெயக்குமார் பங்குத்
தந்தைஊர்காவற்றுறை யாழ்ப்பாணம்
22)
எஸ். அரசரட்ணம் முன்னாள் வங்கியாளர்
அம்பாறைத்தமிழர் மகா சபை
23)
க. ச. இரத்தினவேல் சிரேஷ்ட சட்டத்தரணிகொழும்பு.
நிறைவேற்றுப் பணிப்பாளர்
24)
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்.
25)
வைத்திய கலாநிதி. (திருமதி). சி.
உதயகுமார் பொதுவைத்திய நிபுணர் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
26)
வைத்திய கலாநிதி. சி. சிவன்சுதன் பொது
வைத்தியநிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
27)
அ. பஞ்சலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர்
யாழ்ப்பாணம்இந்துக் கல்லூரி கொக்குவில் இந்துக்
கல்லூரி
28)
திருமதி. நாச்சியார் செல்வநாயகம் சிரேஷ்ட
விரிவுரையாளர் இந்து நாகரிகத்துறையாழ்
பல்கலைக்கழகம்.
29)
வைத்திய கலாநிதி. சி. குமாரவேள் போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
30)
அ. இராசகுமாரன் விரிவுரையாளர் ஆங்கில மொழிப்போதனை
நிலையம் செயலாளர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்
சங்கம்.
31)
வைத்திய கலாநிதி. செ. கண்ணதாசன்
சிரேஷ்டவிரிவுரையாளர் நோயியற்றுறைத் துறைமருத்துவ
பீடம்
யாழ் பல்கலைக்கழகம்
32)
நா. இன்பநாயகம் தலைவர் கிராமிய உழைப்பாளர் சங்கம்
33)
வைத்திய
கலாநிதி. ச. பகீரதன் போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
34)
வைத்திய கலாநிதி. ஏ. கமலநாதன் போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
35)
வே. அரசரட்ணம் முன்னாள் கூட்டுறவு உதவி
ஆணையாளர்அம்பாறைத் தமிழர் மகா சபை
36)
பொ. தியாகராஜா முன்னாள் தலைவர் பரந்தன் இரசாயனப்
பொருட்கள் கூட்டுத்தாபனம்.
37)
கலாநிதி. து. குணராஜசிங்கம் சிரேஷ்டவிரிவுரையாளர்
உடற்றொழியல்துறை மருத்துவ பீடம்
யாழ்பல்கலைக்கழகம்
38)
வைத்திய கலாநிதி. சு. பிரேமகிருஷ்ணா உணர்வழியியல்
வைத்திய நிபுணர் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.
39)
வைத்திய கலாநிதி. பூ. லக்ஷமன் இருதய நோய் சிகிச்சை
நிபுணர் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.
40)
வணபிதா. இ.இரவிச்சந்திரன் இயக்குநர் யாழ்மறைமாவட்ட
இளைஞர் ஆணைக்குழு யாழ்ப்பாணம்
41)
கா. சந்திரலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர்
அம்பாறைத்
தமிழர் மகா சபை
42)
சி. அ. ஜோதிலிங்கம் சட்டத்தரணி அரசியல்
ஆய்வாளர்
பாடசாலை ஆசிரியர்
43)
வி. புவிதரன் சிரேஷ்ட சட்டத்தரணி கொழும்பு.
44)
பி. நி.தம்பு சிரேஷ்ட சட்டத்தரணி கொழும்பு.
45)
திரு. கு. குருபரன் விரிவுரையாளர் சட்டத்துறையாழ்
பல்கலைக்கழகம் சட்டத்தரணி
46)
வைத்திய கலாநிதி. கே. இளங்கோஞானியர்
போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.
47)
வைத்திய கலாநிதி. க.
சுரேஷ்குமார் பெண்ணியல் மற்றும் மகப்பேற்று
சிகிச்சைநிபுணர்போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
48)
வைத்திய கலாநிதி. ஞா. ஹைரின் ஆர்க் போதனா
வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
49)
வைத்திய கலாநிதி. ப. நந்தகுமார் சுகாதார
வைத்தியஅதிகாரி தெல்லிப்பளை
50)
வைத்திய கலாநிதி. சு. மோகனகுமார் போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
51)
ஜே. தோ. சிம்சன் ஆசிரியர் மன்னார்.
52)
து.
இராமகிருஷ்ணன் முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்
அம்பாறைத் தமிழர் மகா சபை
53)
சு. தவபாலசிங்கம் தலைவர் பல்கலைக்கழக
மாணவர்ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.
54)
எஸ். கிருபாகரன் தலைவர் கலைப்பீட மாணவர்ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்.
55)
எஸ். சிவசொரூபன் தலைவர் வணிக பீட மாணவர்ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்.
56)
ஏ. பிரசன்னா தலைவர் விஞ்ஞான பீட மாணவர்ஒன்றியம்
யாழ்
பல்கலைக்கழகம்.
57)
செ. ஜனகன் தலைவர் மருத்துவ பீட மாணவர்ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்.
58)
அ. றொ. மதியழகு தலைவர் மாதகல்
கடற்றொழிலாளர்கூட்டுறவுச் சங்கம்
59)
திருமதி. ஆ. மரியம்மா ஜெயமணி மாதகல் மேற்கு மகளிர்
அபிவிருத்திச் சங்கம்
60)
க. செல்வரட்ணம் தலைவர் பண்டத்தரிப்பு
ப.நோ.கூசங்கம்
61)
கி. பவளகேசன் மட்டக்களப்பு மாவட்ட
கல்விஅபிவிருத்தி அமைப்பு
62)
வணபிதா. எஸ். ஜெயபாலன் குரூஸ் பங்குத்
தந்தை
வங்காலை மன்னார்.
63)
வைத்திய கலாநிதி. எஸ். சிவதாசன் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
64)
திருமதி. ம. தயாளினி மட்டக்களப்பு மாவட்ட பெண்கள்
அபிவிருத்தி அமைப்பு
65)
வைத்திய கலாநிதி. அ. யோ. தனேந்திரன்
போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்
66)
எஸ். ஜெயசேகரம் வணிக சங்கத் தலைவர் யாழ்ப்பாணம்
67)
வணபிதா. எஸ். எம். பி.
ஆனந்தகுமார் செயலாளர்
யாழ் மறைமாவட்ட குருக்கள்மார் ஒன்றியம்.
68)
வைத்திய கலாநிதி. ம. வாசுதேவன் போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
69)
கி. சேயோன் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்
தன்னார்வலர்கள் அமைப்பு
70)
ஜி.ரஞ்சித்குமார் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்
அபிவிருத்தி அமைப்பு
71)
ச. அ. பிலிப் மோய் ஆசிரியர் யாழ்ப்பாணம்
72)
த. நிஷாந்தன் மட்டக்களப்பு மாவட்ட
விவசாய
அபிவிருத்தி அமைப்பு
73)
அ. சிற்றம்பலம் தலைவர் மாதகல் விவசாய சம்மேளனம்
74)
க. சவுந்தரநாயகம் தலைவர்
தூய அந்தோனியப்பர்
கடற்றொழிலாளர் சங்கம்
75)
க. அருமைதுரை தலைவர்
தூய லூர்துமேரிகடற்றொழிலாளர்
சங்கம்
76)
ஆர்.ஜோன்பிள்ளை நானாட்டான்
77)
வணபிதா. அ. அகஸ்ரின் பங்குத் தந்தை சக்கோட்டை
யாழ்ப்பாணம்
78)
. அகஸ்ரின் புஸ்பராஜ் பங்குத்
தந்தை
நானாட்டான் மன்னார்
79)
வணபிதா. எல். ஞானாதிக்கம் பங்குத்
தந்தை
வஞ்சியன்குளம்
80)
க. சுகாஷ் சட்டத்தரணி யாழ்ப்பாணம்
81)
தி. அர்ச்சுனா சட்டத்தரணி யாழ்ப்பாணம்
82)
அ. சந்தியாப்பிள்ளை நீதி சமாதானப் பகுதி
யாழ்
மறைமாவட்ட கத்தோலிக்கப் பொதுநிலையினர் கழகம்.
83)
மாணவர்ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.
84)
அ. றொ. மதியழகு தலைவர் மாதகல்
கடற்றொழிலாளர்கூட்டுறவுச் சங்கம்
85)
திருமதி. ஆ. மரியம்மா ஜெயமணி மாதகல் மேற்கு மகளிர்
அபிவிருத்திச் சங்கம்
86)
க. செல்வரட்ணம் தலைவர் பண்டத்தரிப்பு
ப.நோ.கூசங்கம்
87)
கி. பவளகேசன் மட்டக்களப்பு மாவட்ட
கல்வி அபிவிருத்தி அமைப்பு
88)
வணபிதா. எஸ். ஜெயபாலன் குரூஸ் பங்குத்
தந்தை வங்காலை மன்னார்.
89)
வைத்திய கலாநிதி. எஸ். சிவதாசன் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
90)
திருமதி. ம. தயாளினி மட்டக்களப்பு மாவட்ட பெண்கள்
அபிவிருத்தி அமைப்பு
91)
வைத்திய கலாநிதி. அ. யோ. தனேந்திரன்
போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
92)
எஸ். ஜெயசேகரம் வணிக சங்கத் தலைவர் யாழ்ப்பாணம்
93)
வணபிதா. எஸ். எம். பி. ஆனந்தகுமார் செயலாளர்யாழ்
மறைமாவட்ட குருக்கள்மார் ஒன்றியம்.
94)
வைத்திய கலாநிதி. ம. வாசுதேவன் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
95)
கி. சேயோன் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்
தன்னார்வலர்கள் அமைப்பு
96)
ஜி.ரஞ்சித்குமார் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்
அபிவிருத்தி அமைப்பு
97)
ச. அ. பிலிப் மோய் ஆசிரியர் யாழ்ப்பாணம்
98)
த. நிஷாந்தன் மட்டக்களப்பு மாவட்ட
விவசாய அபிவிருத்தி அமைப்பு
99)
அ. சிற்றம்பலம் தலைவர் மாதகல் விவசாய சம்மேளனம்
100)
க. சவுந்தரநாயகம் தலைவர்தூய
அந்தோனியப்பர் கடற்றொழிலாளர் சங்கம்
101)
க. அருமைதுரை தலைவர் தூய லூர்துமேரி கடற்றொழிலாளர்
சங்கம்
102)
ஆர்.ஜோன்பிள்ளை நானாட்டான்
103)
வணபிதா. அ. அகஸ்ரின் பங்குத் தந்தை சக்கோட்டை
யாழ்ப்பாணம்
104)
வணபிதா. அகஸ்ரின் புஸ்பராஜ் பங்குத்
தந்தை நானாட்டான் மன்னார்
105)
வணபிதா. எல். ஞானாதிக்கம் பங்குத்
தந்தை வஞ்சியன்குளம்
106)
க. சுகாஷ் சட்டத்தரணி யாழ்ப்பாணம்.
107)
தி. அர்ச்சுனா சட்டத்தரணி யாழ்ப்பாணம்.
108)
அ. சந்தியாப்பிள்ளை நீதி சமாதானப் பகுதி
யாழ் மறைமாவட்ட கத்தோலிக்கப் பொதுநிலையினர் கழகம்.