யூலை 06, 2012

ஊடக அறிக்கை

தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த  9  சிங்களப் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை வரவேற்கிறோம்!

மிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த 9 சிறீலங்கா சிங்கள விமானப் படையினர்  மத்திய அமைச்சகம் அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது என்ற செய்தியை வரவேற்கிறோம். 

உண்மையில் சிறீலங்கா விமானப்படையினருக்கு இந்தியா எந்தவொரு இடத்திலும் பயிற்சி வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும். இந்த 9 விமானப்படையினர் திருப்பி அனுப்பப் படவேண்டும்.

சிறீலங்கா விமானப் படை வன்னியில் விமான ஓடுபாதைத் தளத்தை கட்டியுள்ளது. இதற்காக அரச காணி மட்டுமல்ல தனியார் காணியையும் விமானப்படை அடாத்தாகக்  கைப்பற்றியுள்ளது.

விமானப் படை மட்டுமல்ல  இராணுவம் மற்றும் கடற்படை பாரிய முகாம்களையும் குடியிருப்புக்களையும் உல்லாச உணவு விடுதிகளையும்  தமிழர்களது மரபுவழி நிலத்தில் கட்டி வருகின்றன.  இதற்கும் அரச காணி மட்டுமல்ல தனியாருக்குச் சொந்தமான காணியும் அபகரிக்கப்பட்டுள்ளது.

தமிழரது தாயக நிலத்தை வலோத்காரமாக அபகரித்துள்ள இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆங்காங்கு பவுத்த விகாரைகள், பவுத்த தூபிகள்,  புத்தர் சிலைகள்,  போர் நினைவிடங்கள் போன்றவற்றை கட்டி வருகிறது. இதன் மூலம் தமிழர்களது பண்பாடு சிதைக்கப்படுகிறது.

மாதகல் என்ற ஊரில் பாரிய பவுத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. இங்கு சங்கமித்தை வெள்ளரசு மரக் கிளையோடு வந்து இறங்கினார் என்ற அய்தீகத்தின் அடிப்படையில் இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது.

மாதகல் உட்பட வலிகாமம் வடக்கில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்களை இராணுவம்  1990 ஆம் ஆண்டில் துரத்தி அடித்துவிட்டு அந்தப் நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 44,559 பேர் (12,249 குடும்பங்கள்) தொடர்ந்தும் ஏதிலிகளாக வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  இவர்களில் பெரும்பாலானோர் 53 நலன்புரி நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8,000  ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு இராணுவம் நெருக்கடி கொடுக்கிறது.   தற்போது அந்தப் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துள்ள  இராணுவம்  மற்றும் கடற்படை  இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது.

ஒன்பது  சிங்கள  விமானப்படையினருக்கு  இந்தியா பயிற்சி அளித்ததை கடுமையாகக் கண்டித்து அறிக்கை விட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  எதிர்ப்புத் தெரிவித்து  முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏனைய கட்சித் தலைவர்களையும் தமிழ் உணர்வாளர்களையும் பாராட்டுகிறோம்.  எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அமைச்சர் வாசனுக்கும் எமது பாராட்டுதல்கள்.

இந்தியா தொடர்ந்து தமிழ்மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது நடந்து கொள்வதற்குக் காரணம் தமிழர்களை விட சிங்களவர்களை அது நேசிப்பதே ஆகும்.

இந்திய அரசு தமிழ்மக்கள் சார்பானது என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அது உண்மை அல்ல.  இந்திய அரசு தொடர்ந்து ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்கள அரசுக்குத் துணை போகிறது.  தமிழர்களது நிலங்கள் அபகரிக்கப்படுவதையிட்டு இந்தியா மவுனம் சாதிக்கிறது. தமிழர்கள் வாழ்ந்த காணிகளில் சிங்கள அரசு சிங்கள இராணுவத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து வருகிறது. சிறீமுறிகண்டியில் மட்டும் 4,000  ஏக்கரில் இராணுவ குடியிருப்புக்கள் கட்டப்பட்டு வருகின்றன.  அந்தக் காணிகளுக்குச் சொந்தமான 7,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களில்  கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக எந்த அடிப்படை வசதிகளுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்!

 

தொடர்பு:  தொலை பேசி 416 281 1165, 416 877 8409,  905 944 1611

 


May 10, 2012

 Press Release

 Thamils   demand a referendum on an independent state of Thamil Eelam 

It is  unfortunate that  the leader of Opposition in the Lok Sabha Sushma Swaraj  erroneously thinks that  demand for a separate ‘Thamil Eelam' by some political parties in Tamil Nadu is unjustified, even though the Tamil National Alliance (TNA) — the main political force of the Thamils in the island nation — favoured a genuine political solution within a united Sri Lanka.  

Her statement  only reveals her lack of  knowledge, if not naivety  about the political history of Sri Lanka since independence. A historic and ground breaking resolution  called Vaddukkoddai resolution  was adopted at the  TULF  convention held on May 14th calling for the restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Thamil Nation in this Country."  

This was after the TULF abandoned  the demand for a federal state within a united Sri Lanka because of  the failure of  attempts by the various Thamil political parties to win their rights, by co-operating with the governments, by parliamentary and extra-parliamentary agitations, by entering into pacts and understandings with successive Prime Ministers, in order to achieve the bare minimum of political rights consistent with the self-respect of the Thamil people have proved to be futile.

At the  1977  parliamentary elections the TULF sought a mandate from the Thamil people based on the Vaddukkoddai resolution. It won 17 seats out of 21 seats it contested and obtained a majority of the vote in the North-eastern provinces. Both the Vaddukkoddai resolution and the 1977  election mandate remain valid today. 

The reason for the TNA settling down for a genuine political settlement  based on internal self-determination within a united Sri Lanka is not because anyone has repudiated the call for and independent Thamil Eelam, it is simply because of the existence of the draconian and punitive 6th Amendment that prohibits advocacy of the establishment of a separate State. Here is an extract of the relevant Amendment.

Prohibition against violation of territorial integrity of Sri Lanka. 157A.

(1) No person shall, directly or indirectly, in or outside Sri Lanka, support, espouse, promote, finance, encourage or advocate the establishment of a separate State within the territory of Sri Lanka.

(2) No political party or other association or organization shall have as one of its aims or objects the establishment of a separate State within the territory of Sri Lanka.

(3) Any person who acts in contravention of the provisions of paragraph (1) shall, on conviction by the Court of Appeal, after trial on indictment and according to such procedure as may be prescribed by law, -

(a) be subject to civic disability for such period not exceeding seven years as may be determined by such Court :

(b) forfeit his movable and immovable property other than such property as is determined by an order of such Court as being necessary for the sustenance of such person and his family

The AIADMK and DMK are justified in withdrawing their nominees because the original itinerary of the parliamentary delegation was full of breakfast meetings than visiting war victims. 

There are over 300,000 Internally Displaced Persons (IDPs) and Sushma Swaraj  team only met a  fraction of them. It did not meet the Government Agent of Jaffna, an important government functionary equivalent to a Collector in Thamil Nadu. Since then the Government Agent  has been transferred against her wish  merely because she failed to  play  ball with the Sinhalese military Governor of  the North. 

Sushma Swaraj told journalists on April 24th (Tuesday) that at the meeting with President Mahinda Rajapaksa,  she discussed devolution of powers to provinces as envisaged in the 13th Amendment she  urged that the Government to hold negotiations with the Thamil National Alliance (TNA) to resolve the grievances of Thamils. But, the government remains intransigent and defiant.

Before  Swaraj plane landed in New Delhi she  was in for a surprise.  According to the Colombo based Island newspaper President Rajapaksa lost no time to repudiate Sushma Swaraj's  claim that he did not give  or asked for any assurances  by  Sushma  Swaraj on the 13th amendment.  It may be recalled when S.M. Krishna visited Colombo last January,  he was also treated in the same cavalier  fashion. President Mahinda Rajapaksa told a group of foreign journalists that he never gave any assurance to   S.M. Krishna  regarding the 13th Amendment. To date,  S.M.Krishna remains dumb and mute and has not explained  the contradiction  between him and Mahinda Rajapaksa. It is gullibility on the part of Sushma Swaraj to accept  what ever assurance Mahinda Rajapaksa gave or not  after he has already repudiated  Foreign Minister S.M. Krishna earlier.   

To sum up, Sushma Swaraj should not  hastily conclude after a flying visit to Sri Lanka  that the Thamil people  have no wish for an independent Thamil Eelam. They do passionately, but there is no political space in  a totally militarized, Sinhalised and Buddhistised  polity to espouse the cause of Eelam. The  Thamil people lost  their kingdom (Jaffna Kingdom) to  foreign colonial conquerors in the battle field.  

The bitter truth is the government continues to act as if the Thamils are second class citizens in the land of their birth.  The government denies the reality that the sovereign states of Thamil and Sinhala kingdoms were  brought together by the British. This status was given in a golden platter by the British to the Sinhalese. This artificial merger has not removed the demarcation lines and strenuous efforts are being made in a campaign of suppression, marginalisation and systematic extermination to uphold the Sinhala sovereignty in the island nation. 

In the ever changing world order, how long can this hegemonic concept of one nation of people suppressing an equally and historically powerful another nation of people can continue. Unlike the olden days, external compulsions make the misconceived sovereignty status of a misbehaving country miserably fail. Sri Lanka too must realise its limitations and find ways to mitigate its stance to play accommodative politics. 

For the information of Sushma Swaraj and the BJP, not only Thamil Nadu leaders have called for a  UN supervised referendum, but also the Thamil Diaspora organizations have appealed to the UN to hold referendum on Thamil Eelam as was the case  in  the following countries: 

1991 - Croatia, Macedonia, Ukraine, and Georgia.

1992  - Bosnia

1993  - Eritrea

 1994  - Moldova

 1999  -  East Timor

2006   -  Monte Negro  and South Odessa

 2014   - New Caledonia (To be held)

 2015   - Bougainville (To be held) 

The Thamil people  are asking  for a similar referendum to determine their political destiny freely and fairly  because co-existence  with the majority Sinhalese since independence have become an impossibility.  

Despite the cajoling and mollycoddling of India, Mahinda Rajapaksa remains  adamant and defiant in his resolve not to implement the 13th Amendment. He has told many times over that he will not devolve police and land powers no matter what pressure is brought on him. And ironically  the 13th Amendment is no solution to the festering national question. The Thamil leadership has rejected the 13th Amendment in 1987. 

It is time India's ruling party and the opposition BJP come to terms with the nature of an ethno-centric racist Sri Lankan state which  is desperate to impose Sinhala - Buddhist hegemony over the Thamil people. The Thamils have become inmates of an open air prison in the Northeast denied of all their basic freedoms. 

-30-


 

 

எப்ரில் 13, 2012

ஊடக அறிக்கை

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பது தமிழ் அறிஞர்கள் எடுத்த முடிவு அது கலைஞர் கருணாநிதியின் முடிவல்ல

வரலாற்றைத் திரிக்கும்  முதல்வர் ஜெயலலிதா  

தமிழக அரசின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா இன்று  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசுகையில் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் தமிழ்புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த நாள், பொங்கல் நாள் என சனவரி 28, 2008 சட்ட சபையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாற்றிப் பழையபடி சித்திரை முதல்நாள்தான் தமிழரின் புத்தாண்டு எனக் கடந்த ஒகஸ்து 23, 2011 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்குரிய காரணங்களைக் குறிப்பிட்டார்.  

சனவரி 28, 2008 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனை ஆதரித்து அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்.   

முதல்வர் ஜெயலலிதா மட்டும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. "நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவள்சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தை தமிழ் என்ற போர்வையில் களங்கம் செய்வது தவறுஇது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந் நடைமுறையைத் தடைசெய்வேன்" என்று முழக்கமிட்டார். இப்போது அதனை செய்தும் காட்டிவிட்டார்.  

முதல்வர் ஜெயலலிதா ஒரு இந்துத்துவ அடிப்படைவாதி.  அண்ணாவின் பெயர் கட்சிப் பெயரிலும் அண்ணாவின் படத்தைக் கட்சிக் கொடியிலும் போட அவருக்கு அருகதை இல்லை. அப்படிச் செய்வது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பாகும். 

தமிழரின் புத்தாண்டு தை முதல்நாள் என்று கலைஞர் கருணாநிதி மாற்றிவிட்டார் என ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறார். அது தவறான குற்றச்சாட்டாகும்.  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று மாற்றப்பட்டதற்கு நீண்ட வரலாறு உண்டு.    

பிரபவ தொடங்கி அட்சய என்ற  60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

 திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல் நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும்   அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள். இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி..பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் .மு. வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி..பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2043.

 1971 இல் கலைஞர் கருணாநிதி ஆட்சி  திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாள்குறிப்பிலும்  1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டது.  1981 முதல் எம்ஜிஆர் ஆட்சி அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றுமாறு ஆணை பிறப்பித்தது.

 புத்தாண்டை முன்னிட்டுத் தனக்கு இசைவான தமிழ் அறிஞர்களைக் கொண்டு கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை  நடத்திய தமிழ் அறிஞர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த அறிஞர்கள் யார் யார் என்பது தெரியவில்லை. நிச்சயமாக துக்ளக் இராமசாமி சோ அதில் ஒருவர் ஆவர்.  அவர்தான் முதல்வர் ஜெயலலிதாவின் இராஜகுரு!

தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சுயவிளம்பரத்துக்காக இயற்றப்பட்டது என்றும் இதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று ஜெயலலிதா சொல்கிறார்.  

அப்படிப் பார்க்கப்போனால் தந்தை பெரியாரும், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்,  தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்முத்தமிழ்க் காவலர் முனைவர் கி..பெ. விசுவநாதம்  ஆகியோர்   உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்களா

முதல்வர் ஜெயலலிதா பேசும் போது "சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஒரு ஆண்டு ஆகும். சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது.  சூரியன் முதல் இராசியான மேட இராசிக்குள் நுழைவதில் இருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும்."  

முதல்வர் சொல்வது போல ஞாயிறு நடுக்கோட்டுக்கு நேராகப் பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது என்பது சரியென்றால் சித்திரை ஆண்டுப் பிறப்பு மார்ச்சு 21/ 22 இல் பிறக்க வேண்டும். சித்திரை 14 இல் அல்ல.  வானியல் அடிப்படையில் மார்ச்சு மாதம் 21/22 அன்றுதான் ஞாயிறு புவியின் நடுக்கோட்டைக் கடக்கிறது. அன்று புவியின் எப்பாகத்திலும் பகல் 12 மணி நேரமும் இரவு 12 மணி நேரமும் அதாவது பகலிரவு சமமாக இருக்கும்.  இதனை ஆங்கிலத்தில் Equinoxes  என்று அழைப்பர். அதுவே வேனில் காலத்தின் தொடக்க மாகும்!   

எனவே ஞாயிறு "பூமத்திய ரேகையை  ஏப்ரில் 14 இல் கடக்கிறது" என்பது தவறு!  ஏப்ரில் 14 இல் ஞாயிறு நடுக்கோட்டுக்கு வடக்கே நாளொன்றுக்கு ஒரு பாகை என அதன் சுற்றுப் பாதையில் 24 பாகை நகர்ந்துவிடுகிறது.  இந்தத் தவறுக்குக் காரணம் புவிக்கும் - ஞாயிறுக்கும் - புவிக்கும் நட்சத்திரத்துக்கும்  இடையில் காணப்படும் காலக் கணிப்பில் ஏற்படும் அயனாம்ச  வேறுபாடாகும்.  புவி தனது அச்சில் 71.5 ஆண்டில் 1 பாகை மேற்கு நோக்கி நகருகிறது.  இதனை இந்திய காலக் கணிப்பு கணக்கில் எடுப்பதில்லை. எனவே புண்ணிய காலங்கள் எல்லாம் 24 நாள்கள் பிந்தி வருகின்றன.  புவி நடுக்கோட்டைக் கடக்கும் போது மேட இராசியில் இல்லாது மீன இராசி 7.00 பாகையில் காணப்படுகிறது.  

மாறி வரும் பருவங்களுக்கும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புவி தனது அச்சில் அதன் ஓடு பாதைக்கு 23.45  பாகை ஒருக்களித்துக்  காணப்படுவதே  பருவமாற்றங்களுக்குக்  காரணமாகும். 

"சித்திரையே வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா" என்று சொல்லும் மரபு கிடையாது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வதுதான் வாழையடி வாழையாக வந்து கொண்டிருக்கிறது. 

சங்க இலக்கியத்தில் தை மாதத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு சித்திரை மாதத்துக்குக் கொடுக்கப்படவில்லை. வானியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு தனது தென்திசைச் (தட்சணாயனம்) செலவை முடித்துக் கொண்டு வடதிசைச் செலவைத் (உத்தராயணம்) தொடங்குகிறது. அதாவது தனு இராசியை விட்டு விலகி மகர இராசியல் ஞாயிறு புகுகிறது.  தமிழர்களுடைய புத்தாண்டு ஞாயிறின் செலவுத் தொடக்கத்தில் இருக்க வேண்டுமா? அல்லது நடுவில் இருக்க வேண்டுமா?

தமிழ்க் கடல் என வருணிக்கப்படும் மறைமலை அடிளார், தமிழ்த் தன்றல் வி.கலியாணசுந்தரனார் நாவலர் சோமசுந்தரபாரதியார், முத்தமிழ்க் காவலர் முனைவர் கி..பெ. விசுவநாதம்,  பரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்களை விடத் தனக்குத் தமிழ் இலக்கிய வரலாறு தெரியும் என முதல்வர் ஜெயலலிதா நினைப்பது பேதமை.  

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நர்ச்சினார்க்கினியர்  மூலம்  தெரிகிறது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.  

பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லைதமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத்  தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ளமாட்டான்இந்த அறுபது ஆண்டுகளை  கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளைப் புராணிகர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.  

நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளேபிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்என்று தமிழ்க் கலை களஞ்சியமானஅபிதான சிந்தாமணிகூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும்பிரபவஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத மூடநம்பிக்கை  ஆகும்.

 தொல்பொருள் ஆய்வாளர்  அய்ராவதம் மகாதேவன் சென்ற ஆண்டு நடந்த ஒரு வானியல் கருத்தரங்கில் பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்கத் தவறினால் பிற்காலத்தில் அயனப் பிறப்பு நாள்கள் தலை கீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும் என எச்சரித்தார்.

 எனவே இந்தக் குளறுபடிகளை நீக்க வேண்டும் என்றால் தமிழ் ஆண்டுக் கணிப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அத்திருத்தம் சமய சார்பற்ற முறையில் அமைய வேண்டும். அதற்குத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு முறையைப் பொங்கல் திருநாளில் தொடங்குவதே சாலவும் பொருத்தமாக இருக்கும்.

ஆக பற்சக்கர வடிவத்தில்  வடமொழியல் அருவருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது. திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க உதவுகிறது.

 ·        * 60 ஆண்டு சுழற்சி வராது.

·        * தொடர்ச்சியாக ஆண்டுகளைக்  கணக்கிடலாம்.

·        * தமிழர்கள்  வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்படும்.

·        * தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பொய்யில் புலவர் திருவள்ளுவருக்கு தலைசிறந்த நினைவாக அமையும்.

·        * தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச்சிறப்படையும்.

 

ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆதலால் தைப்பொங்கல் நாளான  தைத்திங்கள் முதல் நாள் - திருவள்ளுவர் பிறந்த  நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டாகும்!

-30-

 

 


ஏப்பிரில் 02, 2012

ஊடக அறிக்கை

 அமைச்சர் ராவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவைப் புறக்கணியுங்கள்! 

கம்பன் விழாவினர் ஜெனிவாவில் அய்.நா மனித உரிமை அவையில்  சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க  அரபு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடிப் பரப்புரை செய்த அமைச்சர்   ரவூப் ஹக்கீம் அவர்களை விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு அழைத்திருப்பதை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வன்மையாகக்  கண்டிக்கிறது.  

அவரை அழைத்த கம்பதாசர்களுக்கு குறிப்பாக கம்பவாரி ஜெயராஜ் அவர்களுக்கு சூடு, சொரணை இல்லாமல் இருக்கலாம் ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல.

 போரில் தமிழர்கள் கொல்லப்படவில்லை, தமிழிச்சிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படவில்லை, கிழக்கில் உதயம், வடக்கில் வசந்தம், தமிழர்கள் பத்துவித கறியோடு பால்சோறு சாப்பிட்டு, பாலும் பழமும் அருந்திபன்னீரில் கொப்பளித்து பஞ்சணை மெத்தையில் படுத்து உறங்குகிறார்கள்,   சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறார்கள், இன்பமே ஒழிய துன்பம் இல்லை எல்லோரும் சிங்கள இராணுவ ஆட்சியில் மாலோகமாக வாழ்கிறார்கள் என்று சிறிலங்கா செய்யும் பரப்புரைக்கு  கம்பன் கழகமும் கம்பதாசர்களும் துணை போகிறார்கள்.  

கம்பர் எழுதிய இராமாயணம் ஆகும் நூலா ஆகாத நூலா என்பது பற்றி நடந்த விவாதங்களில் கம்பர் கல்வியில் பெரும் புலவர் அவர் எழுதிய காப்பியம் இலக்கிய நயம் படைத்தது எனினும்  மொத்தத்தில் அந்தக் காப்பியம்  மரத்தின் பின் ஒளித்திருந்து அம்புவிட்டு வாலியைக் கொன்ற இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிப்பதையும் இலங்கையை ஆண்ட மறத்தமிழன் அய்யிரண்டு திசைமுகத்தும்  தன்புகழை வைத்த வீணைக் கொடியோன் இராவணனை  இரக்கமில்லாத அரக்கன் எனத் தூற்றுவதையும்  தன்மானத் தமிழர்கள்  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.    

வால்மீகி இராமாயணம்   “சீதையைப் பிரிந்த சோகத்தால் மது, மாமிசம் அருந்துவதை விட்டுவிட்டார். வானப்பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்குகளையே சாயங்காலத்தில் புசிக்கிறார்என இராமனை ஒரு குடிகாரனாகச் சித்திரிக்கிறது.   

மேலும்  கம்பரது இராமகாதையில்  காணப்படும் காமரசம் ததும்பும்  பாடல்கள் அதன் தெய்வீகத்தைக் கேள்விக் குறியாக்குகிறது. அதன் காரணமாகவே கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களைத் தீக்கிரையாக்க வேண்டுமென அறிஞர் அண்ணா வாதிட்டார். தெய்வமாக் கதையில் காமரசம்  வேண்டுமா என்று கேட்டார்.  

ஜெனிவாவில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பேரணி, உண்ணாநோன்பு, நடைபயணம் என ஆர்ப்பரித்து எழுந்தார்கள். 

அதே தீர்மானத்தை  சிங்கள ஆட்சியாளர்களோடு கைகோர்த்து எதிர்த்துப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவது முழுத் தமிழினத்தையும் அவமதிப்பதாகும். 

எனவே தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கம்பதாசர்களால் நடத்தப்படும் இந்தக் கம்பன் விழாவைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள்  அனைவரையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

 

 

-30-.

 


Rajapaksa's Agenda is to Turn Ceylon into a Monolithic Sinhala-Buddhist State

by Tamil Creative Writers' Association, Toronto, March 15, 2012

It is now clear Mahinda Rajapaksa simply has no stomach to offer any rights to the Thamils by way of true reconciliation. There is no Thamil National question now. Thamils who dare to raise their voice in protest are branded as traitors to the Motherland or LTTE rump or separatist terrorists. His agenda is to transform the state into a monolith Sinhala - Buddhist state where national minorities have to live at the mercy of the dominant race and religion. And the armed forces will be used as an instrument to impose Sinhala - Buddhist hegemony over the Thamils and perpetuate political power of the ruling dynasty.

Press Release

The Hindu newspaper ( March 15, 2012) carried a news item titled "UNHRC resolution: Govt. to keep in mind implications" by its correspondent Vinay Kumar. Unfortunately, the Hon, Minister quoted in the article got some of his facts wrong or he has been misinformed. We wish to put the record straight.

Tamil Creative Writers Association logoThree years after the war, the Government of Sri Lanka (GoSL) has done practically nothing towards reconciliation or win the confidence of the Thamil people. A total of 282,360 internally displaced people are awaiting re-settlement in Vanni and 26,281 (7,273 families) in Valigamam North in Jaffna peninsula. A further 7,000 IDPs are kept in Menik Farm since May, 2009. The reason for not re-settling the IDPs is due to army occupation of private and state lands declared as High Security Zones (HSZs) and used to build army bases, cantonments and luxury quarters.

Statement by Hon. Minister

Stressing that it was a result of India's assistance programme and constructive engagement with the Sri Lankan government that a modicum of normality was beginning to return to the Tamil areas in Sri Lanka, he said there had been progress given the withdrawal of emergency regulations by the government there and the conduct of elections to local bodies in the Northern Province.

REALITY

Contrary to the claim by the Hon. Minister that emergency regulations have been withdrawn, the government has introduced simultaneously new set of laws under Prevention of Terrorism Act (PTA) to replace the draconian laws that gave sweeping powers to Sri Lanka Police and Military forces to arrest and detain people without any charges indefinitely. The military camps set up in civilian areas in the districts of Mullaitivu, Kilinochchi and Jaffna will continue to be there even in the aftermath of the withdrawal of emergency. The president issued four proclamations dated August 29 to incorporate new regulations under the PTA, which provides for extended detention without trial. Another proclamation allows the continuation of the ban on the LTTE, and the continued detention of Thamil youth as “LTTE suspects” in the so-called rehabilitation camps. The government ended the state of emergency not out of a new-found concern for democracy, but to blunt international criticism of its war crimes and abuses of democratic rights prior to the 18th session of the UN Human Rights Council that began on Monday in Geneva.

Statement by Hon. Minister

The Minister said India had emphasised to Sri Lanka the importance of a “genuine process of reconciliation” to address the grievances of the Tamil community. Pointing to his visit to Sri Lanka in January, he said Colombo had assured India of its commitment in pursuing a political process through a broader dialogue with all parties, including the Tamil National Alliance, leading to the full implementation of the 13 Amendment to the Constitution so as to achieve meaningful devolution of powers and genuine national reconciliation.

REALITY

The Hon Minister is not telling the truth. On January 17 Foreign Minister S.M. Krishna stated that in a discussion held that day, President Mahinda Rajapaksa had assured him the government was committed to the 13 th amendment plus approach. He said he had discussed this with President Rajapaksa just that morning, Krishna elaborated. “The president assured me that he stands by his commitment in pursuing the 13th Amendment plus approach, the full implementation of the 13th Amendment to the Sri Lankan Constitution, and building on it, so as to achieve meaningful devolution of powers." he stressed. By his side stood Sri Lankan counterpart, G.L. Peiris, who remained stoically silent on the subject. The only time he alluded to it was when he endorsed the Indian minister’s assertion that there was no fixed timeframe for the president’s pledge to be fulfilled. Unfortunately, on January 29 President Mahinda Rajapaksa denied that he ever told Hon. Minister Krishna, he would go beyond the 13th Amendment to the Constitution as a solution to the ethnic problem. Responding to a question at a breakfast meeting with heads of print and electronic media at Temple Trees whether he had promised India to go beyond the 13th Amendment, the President said: "Oh, No! How can I make promises like that? I have referred the issue to Parliament. I have nominated government representatives to the PSC. But unfortunately, neither the UNP nor the JVP has nominated theirs. (http://ceylon-ananda.blogspot.com/2012/01/by-ravi-ladduwahetty-president-mahinda.html)

Economic Development Minister Basil Rajapaksa has said that only (Thamil) politicians in the Northern and Eastern Provinces demand land and Police powers, not the people in the North and East provinces. The people wanted land to cultivate and carry out their livelihoods and protection from terrorism and abductions. The Government would provide these necessities of the people. However, he pointed out that the Government DID NOT have any intention to devolve land and Police powers to the provinces. Mahinda Rajapaksa is toying with the idea of amending the constitution to take away land and Police powers from the provincial councils. The 13th Amendment is based on the Indo-Ceylon agreement signed between the Prime Minister of India and President Jayewardene of Sri Lanka. Sadly, the Indian government has shown complete indifference when the government demerged the Northern and Eastern province in breach of the Indo-Ceylon agreement. (http://www.satp.org/satporgtp/countries/shrilanka/timeline/index.html)

Statement by Hon. Minister

“We will remain engaged with them through this process and in the spirit of partnership, encourage them to take forward the dialogue with the elected representatives of the Sri Lankan Tamils.”

REALITY

Unfortunately, Mahinda Rajapaksa has called off the talks sine dine with the TNA insisting that MR. Sampanthan sends the names of MPs who will participate in the Parliamentary Select Committee which has not been constituted yet. Obviously, Hon. Minister has deliberately gave the House wrong information or impression that talks are taking place between the GoSL and the TNA. Government Spokesperson and Media Minister Keheliya Rambukwella said that the Government's stance was that the proposed PSC has to decide on the political solution to the ethnic issue. He said there was no logical reason to continue with talks with the TNA since matters discussed with the TNA would also have to be discussed and decided at the PSC. (http://www.satp.org/satporgtp/countries/shrilanka/timeline/index.html)

In short the Indian government is hell bent to amend the draft text of the Resolution sponsored by the US to keep the UNHCR out of the process. India wants to remove any shred of a mention of international monitoring, even if it is to be achieved through technical assistance provided by the Office of the Hugh Commissioner for Human Rights. Indian delegation in Geneva is engaged in intense negotiations with both the US and Sri Lankan governments involved. It should be observed that US resolution has already been watered-down to accommodate concerns expressed by some countries. Mahinda Rajapaksa has given the run around for the last 3 years and during the war he promised to come with a home grown solution to resolve the ethnic conflict. He now says in tongue in cheek that there are no majority and minority communities in Sri Lanka, the country belongs to all. It is like saying in an ocean there are no big fishes or small fishes all can co-exist peacefully. But, in reality the big fish will swallow the small fish to survive.

Mahinda Rajapakse is refusing to implement the powers over land and Police devolved to the provincial governments in 1987. He is toying with the idea of amending the constitution to take away those powers from the provincial councils. The 13th Amendment is based on the Indo-Ceylon agreement signed between the Prime Minister of India and President Jayewardene of Sri Lanka. Sadly the Indian government has shown complete indifference when the government demerged the Northern and Eastern province in breach of the Indo-Ceylon agreement.

It is now clear Mahinda Rajapaksa simply has no stomach to offer any rights to the Thamils by way of true reconciliation. There is no Thamil National question now. Thamils who dare to raise their voice in protest are branded as traitors to the Motherland or LTTE rump or separatist terrorists. His agenda is to transform the state into a monolith Sinhala - Buddhist state where national minorities have to live at the mercy of the dominant race and religion. And the armed forces will be used as an instrument to impose Sinhala - Buddhist hegemony over the Thamils and perpetuate political power of the ruling dynasty.

Thamil Nadu political leaders should not be deceived by the smooth talking Minister of External Affairs S.M. Krishna who still appears to have a soft corner for Sri Lanka despite being at the receiving end of insults and innundoes by the Sri Lankan political extremists and chauvinists.