Nrhjplg; Gul;L Ehy; ntspaPl;Ltpoh jkpo;ehL

 

ஆகஸ்த்து 05, 2006

கனடா


திரு.கொளத்தூர் மணி

தலைவர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்நாடு.

அன்புள்ள மணி அவர்கட்கு


வணக்கம். நீங்கள் வான்வழி அஞ்சலில் அனுப்பி வைத்த நூல்கள் கிடைத்தன. சோதிடப் புரட்டு படி ஒன்றை முழக்கம் ஆசிரியர் பார்த்துவிட்டு என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் உவ்விடம்தான் நிற்கிறார். அவரோடு பேச வேண்டும் என்றால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

416 623 7195

முழக்கம் செய்தி ஏட்டில் சோதிடப் புரட்டு தொடராக வந்தது நீங்கள் அறிந்ததே. முழக்கம் ஆசிரியர் சரி அவரது துணைவியார் அன்பரசி சரி இருவரும் தீவிர பகுத்தறிவாதிகள். முழக்கம் ஒன்றே இப்படியான கருத்துக்களைப் பரப்புவதற்கு மேடை அமைத்துக் கொடுக்கிறது. அதனால்தான் எனது எழுத்துக்கு முழக்கம் ஒரு வடிகால் அமைத்துக் கொடுக்கிறது என என் உரையில் எழுதியுள்ளேன்.

நூலை கொஞ்சம் கலவரத்தோடுதான் பிரித்துப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. ஆனால் எனது மனதில் வைத்திருந்த சோதிடப் புரட்டைப் பார்க்க முடியவில்லை. அது உங்கள் பிழையல்ல. வண்ணப்படங்கள் காலை வாரிவிட்டன. வண்ணப்படமாக இருந்தால்தான் இராசி சக்கரம், இராசி மண்டலங்களை துல்லியமாக பார்த்து அறிந்து கொள்ளலாம். சிடியில் அனுப்பியதும் தரம் பத்தாது என்று திரு. தாமரைக்கண்ணன் சொல்லி விட்டார்.

நூலை இப்படியே வெளியிடுங்கள். அடுத்த பதிப்பில் வண்ணப்படங்களை சேர்க்கலாமோ என்பது பற்றி யோசிப்போம். உவ்விடம் உள்ள இன்னொரு அச்சகமும் நான் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய படங்கள் தரக்குறைவாக இருப்பதாகவும் அதனை சிடியில் அனுப்புமாறு கேட்டார்கள். பாமினி எழுத்துருவை மாற்ற அவர்கள் வில்லங்கப்பட்டார்கள். பின் தாங்களாகவே விலகிக் கொண்டார்கள். திரு. காசி ஆனந்தன் ஒழுங்கு செய்த அச்சகம்.

எனக்கு 300 படிகள் அனுப்பி வைக்கவும்.

கவிஞர் காசி ஆனந்தன், திரு.பழ நெடுமாறன் இருவருக்கும் ஒரு படி கொடுக்கவும்.

நூலைப் படித்து விட்டு எனது துணைவியார் எழுத்து வாசிப்பதற்கு இலேசாக இருப்பதாகச் சொன்னார். நூலில் ஏதாவது பிழை இருந்தால் அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ளலாம்.

முழக்கத்தில் இந்தத் தொடர் வந்த பின்னர் பலமுறை வாசித்து செப்பம் செய்தேன். பல நூல்களில் இருந்து கோள்கள் வி;ண்மீன்கள் போன்றவற்றைப் பற்றிய தரவுகளை திரட்டியதால் பல சமயம் அவை ஒன்றுக்கு ஒன்று சிறிது வேற்றுமைபடும். அதனை முடியு மட்டும் சரி பார்த்தேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த நூலை எழுதவும் பின்னர் செப்பனிடவும் இரண்டு ஆண்டு காலம் எடுத்தது.

சென்னையில் சிறப்பான முறையில் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன். வெளிநாடுகளில் (மலேசியா, அவுஸ்திரேலியா.)

கோடை காலம் முடிவடைய இருப்பதால் விரைந்து நூல்களை அனுப்பவும்.

இங்கே விரல் விட்டு எண்ணக்கூடிய பகுத்தறிவுவாதிகளே இருக்கிறார்கள். ஆனால் நான் கோயிலில்லை குளமில்லை என்று எழுதுவதால் என்னுடன் பக்தர்கள் யாரும் சண்டைக்கு வருவதில்லை!

அடுத்த பதிப்பிற்கு யாராவது பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவரது மதிப்புரை எடுத்துப் போட்டால் நல்லது.

திரு.சுப வீரபாண்டியனிடம் மதிப்புரை கேட்டேன். இந்த கிழமை அடுத்த கிழமை என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனார். விட்டு விட்டேன்.

திரு. திருமாவளவன் இங்கேதான் நிற்கிறார். ஒரு நாட்டிய அரங்கேற்றத்துக்கு வந்தவர் இன்னொரு நிகழ்ச்சி (தமிழர் நாள்) யிலும் கலந்து கொள்கிறார்.

அவர் ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைத்தது எனக்கு உடன்பாடில்லை. இருந்தும் அவர் ஈழ விடுதலையை மனமார ஆதரிப்பவர். அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து கொடுத்தேன்.

புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும்.

கவிஞர் அறிவுமதியிடம் நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.


மிக்க அன்புடன்


நக்கீரன்


 
திரு. தாரைக்கண்ணன்

வணக்கம். எனது சிடி கிடைத்ததும் படங்கள் தரமாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். தரமாக இல்லாவிட்டால் விட்டுவிடவும். எனது இணைய தளத்தைத் திறந்து பார்த்தால்தான் எந்தப்படம் என்ன தலைப்போடு வர வேண்டும் என்பது தெரியும். வேறு இரண்டொரு படங்களும் தவறுதலாக அனுப்பிவிட்டேன்.

எனது முகவரி

ஏ.வுhயபெயஎநடர
56 டுவைவடநள சுழயன
ளுஉயசடிழசழரபா
ழுn.ஆ1டீ 5ஊ5
ஊயுNனுயு

நூலில் ஒரு படியை அனுப்பி வைக்கவும். அது எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க விருப்பமுடையவனாக இருக்கிறேன்.

நக்கீரன்


திரு நக்கீரன் அய்யா அவர்களுக்கு,

தாமரைக்கண்ணன் எழுதுவது.

நான் ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பிய இடங்களில் தமி;;ழ் எழுத்துருக்கள் இல்லாததால் அரைகுறை ஆங்கிலத்தில் செய்திகளைத் தெரிவித்திருந்தேன். இப்போது தான் தமிழில் அனுப்பும் வசதி கிடைத்தது.

சோதிடப்புரட்டு நூல் திட்டமிட்டபடி 25.06.06 அன்று மேட்டூரில் வெளியிடப்பட்டது. திரைப்பட இயக்குநர்சீமான் வெளியிட பாவலர் அறிவுமதி பெற்றுக்கொண்டார்.


நூலில் இடம்பெற வேண்டிய படங்களின் சுநளழடரவழைn குறைவாக இருந்ததால் வண்ணத்தில் அச்சிடாமல் அந்தந்த இடங்களில் கருப்பு வெள்ளைப் படங்களாகவே அச்சிட்டுள்ளோம்.

1500 பிரதிகள் அச்சிட்டோம். 100 புத்தகங்களை மட்டும் வெளியிட்டோம். ஏஞ்சிய 1400 பிரதிகள் பைண்டிங் பிரிவில் உள்ளன.

தாங்கள் வண்ணப்படங்கள் இருந்தால் நல்லது என கூறினீர்களாம். வண்ணப்படங்களை அவற்றுக்குரிய இடத்திலேயே வண்ணத்திலேயே அச்சிடவேண்டுமெனில் மிகப்பெரும் பொருட்செலவாகும். மேலும் படங்களும் அதற்கேற்ற தரத்தில் இல்லை. எனவே கருப்பு வெள்ளையிலேயே அச்சிட்டு வெளியிட்டோம். தாங்கள் விரும்பியதால் வண்ணப்படங்களைத் தனியே அச்சிட்டு அப்படங்களுக்குக் கீழே தலைப்புகளையும் கொடுத்து நூலின் கடைசிப்பக்கங்களாக வைத்துவிட முடிவு செய்து 1400 பிரதிகளை வைத்துள்ளோம். இப்படி கடைசிப்பக்கங்களாக வண்ணத்தில் அச்சிட அதிக செலவு இல்லை. சுமார் 15000 ரூபாய் கூடுதலாகும்.

ஆனால் அப்படங்கள் எடுக்கப்பட்டவை அல்ல. பதிவிறக்கம் செய்யப்பட்டவை என தாங்கள் எழுதியிருந்தீர்கள். பொதுவாக பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள் பல் வண்ண அச்சுக்கு ஏற்ற தரத்தில் இருப்பதில்லை. நீங்கள் அனுப்பியுள்ள குறுந்தகட்டில் உள்ள படங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டவை தான் என்றால் அவற்றை வண்ணத்தில் அச்சிடுவது சரியாக இருக்காது. குறுந்தகடு வந்தபி;ன் ஆய்ந்து பார்க்கிறோம். தேவையான சுநளழடரவழைn இல்லையென்றால் வண்ணத்தில் புதிதாக அச்சிடாமல் பைண்டிங் பணியை உடனே முடித்து விடலாமா? நீங்கள் சொல்வதைப் பொறுத்து இறுதிமுடிவெடுக்கிறோம்.

உங்களது இல்ல முகவரி இருந்தால் நூலை உங்களுக்கு அனுப்பிவைப்போம். ஏற்கனவே நீங்கள் அனுப்பிய முகவரியை மணி அண்ணன் தவறவிட்டுவி;ட்டாராம். எனவே அவருக்குதங்கள் முகவரியைத் தெரிவிக்கவும். அவரது கைப்பேசி எண்கள் 094433.59666.09994368688. பெரியார் படிப்பக எண் : 04298.244162

இத்துடன் நூல் வெளியீட்டுவிழாப் படங்களை இணைத்துள்ளேன்.