நமது பயன்பாட்டில் தமிழ்

(1)

ச.செந்தில்வேலன்.

அண்மையில் என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

மதிய உணவுவேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான். அதற்கு உறவினரோ, "சோறுன்னு சொல்லாதே. சாதம்னு சொல்லு!" என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.

"சாதம்" என்பது தூய தமிழ்ச் சொல் கிடையாது என்பது தான் வியப்புக்குக் காரணம்.

"சோறு" என்பதே தூய தமிழ்ச் சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?

ஆனால், நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக் குறைவான சொல?

சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச் சொல்?

துப்புரவு தான் தூய தமிழ்ச் சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவது, துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ்ச் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.

ஆசிர்வாதம் - வாழ்த்து

வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே. அந்த இடத்தில், "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.

இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)

வடசொல்       -   தமிழ்ச்சொல்

அகங்காரம்     -   செருக்கு
அகதி          -   ஆதரவற்றவர்
அகிம்சை      -    ஊறு செய்யாமை
அங்கத்தினர்    -   உறுப்பினர்
அங்கீகாரம்     -   ஒப்புதல்
அசுத்தம்       -   துப்புரவின்மை
அதிகாரி       -   உயர் அலுவலர்
அநீதி         -   முறையற்றது
அபயம்       -    அடைக்கலம்
அபிவிருத்தி   -   பெருவளர்ச்சி
அபிஷேகம்    -   திருமுழுக்கு
அபிப்பிராயம்  -   உட்கருத்து

திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ் (drive) பண்ணி என தமிழ் பேசுபவர்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் எழுத, பேச முனைவோருக்கு இந்தத் தொடர் பயனளிக்கும் என்றே நம்புகிறேன்.

"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!" என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".

சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற... உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவருக்கு பட்டறிவு அதிகம்," என்பது தான்.

"பட்டறிவு" என்ற தமிழ்ச் சொல்லின் வடசொல்லே "அனுபவம்".

நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளுக்குப் பயன்படுத்துகிறோம்.

வட இந்தியப் பெயர்களில், "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச் சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.

("ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!)

வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்க முடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.

காரியம்            - செயல்
காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.
காரியாலயம்       - செயலகம்.
காரியதரிசி        - செயலர், செயலாளர்.

இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?

இலட்சணம் - அழகு

உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணுக்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணுக்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.

மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனுக்கு அழகு!" என்று எழுதலாம்.

அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்

இன்று பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.

அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே...

வடசொல்            - தமிழ்ச்சொல்

அனுக்கிரகம்          - அருள் செய்தல்
ஆராதனை            - வழிபாடு
உற்சவம்             - விழா
கும்பாபிஷேகம்       - குடமுழுக்கு
கோத்திரம்            - குடி
சந்தியாவந்தனம்      - வேளை வழிபாடு
சரணம்               - அடைக்கலம்
சிவமதம்             - சிவநெறி
பஜனை              - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம்             - திருப்பொருள்
பிரகாரம்             - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம்  - வலம் வருதல்
பிரார்த்தனை         - நேர்த்திக்கடன்
மந்திரம்             - மறைமொழி
மார்க்கம்           - நெறி, வழி
விக்கிரகம்          - திருவுருவம்
யாத்திரை          - திருச்செலவு
க்ஷேத்திரங்கள்     - திருப்பதிகள்

இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!

பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்புக்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும், அதன் அர்த்தங்களையும் மனப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?

அபூர்வம், அவசரம், அவகாசம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்..? அடுத்தக் கட்டுரையில் அலசுவோம்!


நமது பயன்பாட்டில் தமிழ்

(2)

இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளில் இருப்பது போன்ற எழுத்துக்கள் தமிழ் மொழியில் இல்லையே என்று நமக்கு ஓர் ஐயம் (சந்தேகம் - வடசொல்) வருவதுண்டு.

எப்படி நீங்கள் pa, pha, ba, bha போன்ற உச்சரிப்புகளுக்கு ஒரே எழுத்து 'ப'வை பயன்படுத்துகிறீங்கள்? என்ற கேள்வியை நம்மிடம் நண்பர்கள் கேட்பதுண்டு. நாமும் இந்தக் கேள்வியை ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பதுண்டு.

உண்மையில் தூய தமிழ்ச் சொற்களுக்கு இந்த pa,pha,ba,bha என்ற வேறுபாடு தேவைப்படுவதாகத் தோன்றவில்லை.

அபூர்வம், அவகாசம், அவசரம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல் எதுவுமே இல்லை.

அபூர்வம் - அருமை

அபூர்வம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அருமை. ஆனால், மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தால் 'அபூர்வம்' என்றும், நன்றாக இருந்தால் 'அருமை' என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது.

அவசரம் - விரைவு

ஆபத்து (துன்பம்) இருக்கும் சூழலுக்கு 'அவசரம்' என்ற சொல்லும் (வேகம்) துரிதம் என்ற பயன்பாட்டுக்கு 'விரைவு' என்றச் சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. விரைவுப்பேருந்துகளில் 'அவசர கால வழி' (Emergency Exit) என்று எழுதியிருப்பதைக் காணலாம். இன்று, இதை மாற்றி எழுதினால் நமக்குப் புரியாது என்பதும் இருக்கிறது!

சிகிச்சை - மருத்துவமுறை

'சிகிச்சை' என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் தான் 'மருத்துவ முறை' என்று தெரிந்த பிறகு 'இந்த மருத்துவமனையில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்', என்ற விளம்பரத்தை நாம் எப்படி நோக்குவோம்?

திருப்தி - உள நிறைவு, மன நிறைவு

"WORD POWER MADE EASY" என்ற ஆங்கிலப் புத்தகத்தில், ஒவ்வொரு சொல்லும் எப்படி உருவானது என்று அழகாக விளக்கி இருப்பார் ஆசிரியர் நார்மன் லீவிஸ்.

எ.கா. : Calligraphy : Beautiful Writing - Calli - (beautiful), Graphy - (Writing)

Telegraphy: Distance Writing - Tele - (distance), Graphy - (Writing )

Biography : Life writing - Bio - (Life), Graphy - ( Writing )

இது போல நமது பயன்பாட்டில் உள்ள சொற்களைப் பிரித்து உரைக்க சொன்னால் நம்மால் முடியுமா?

'திருப்தி' என்ற வடசொல்லை 'உள நிறைவு' என்ற தமிழ்ச்சொல்லால் குறிப்பிடும் போது மிக எளிதாக (சாதாரண) விளக்கமுடியுமே!!

நமது பயன்பாட்டில் உள்ள பிற வடசொற்களும் அதற்கான தமிழ்ச்சொற்களும் கீழே...

வடசொல் - தமிழ்ச்சொல்

அபூர்வம்            - அருமை
அவகாசம்           - ஓய்வு
அவசரம்            - விரைவு
அவசியம்           - தேவை
அவயவம்           - உறுப்பு
ஆகாயம்            - வானம்
ஆபத்து             - துன்பம்
ஆன்மா              - உயிர்
இராகம்              - பண்
இரத்தம்             - குருதி
இலக்கம்             - எண்
உபத்திரவம்      - வேதனை
ஐக்கியம்             - ஒற்றுமை
கஷ்டம              - தொல்லை
கல்யாணம்       - திருமணம்
கிரயம்              - விலை
குதூகலம்       - எக்களிப்பு
கோஷ்டி        - குழாம்
சக்தி               - ஆற்றல்
சகஜம்              - வழக்கம்
சக்கரவர்த்தி     - பேரரசன்
சந்தேகம்           - ஐயம்
சபதம்              - சூள்
சந்தோஷம்     - மகிழ்ச்சி
சமீபம்             - அண்மை
சச்சிதானந்தம்      - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி                 - வழித்தோன்றல்
சிகிச்சை               - மருத்துவமுறை
சந்தர்ப்பம்             - வாய்ப்பு
சம்பிரதாயம்         - தொன்மரபு
சாபம்                 - கெடுமொழி
சாதாரண          - எளிதான
சாட்சி                 - சான்று
சிங்காசனம்        - அரியணை
சிநேகம்               - நட்பு
சீதோஷ்ணம்   - தட்பவெப்பம்
சுதந்திரம்          - விடுதலை
சுயராஜ்யம்        - தன்னாட்சி
சுபாவம்          - இயல்பு
சேவ                 - தொண்டு
சேஷ்டை         - குறும்பு
சௌகரியம்   - வசதி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தாகம்                - வேட்கை
தேதி                 - நாள்
திருப்தி               - உள நிறைவு
நஷ்டம              - இழப்பு
நிபுணர்              - வல்லுநர்
நியாயஸ்தலம   - வழக்கு மன்றம்
நீதி                     - நன்னெறி
பகிரங்கம்        - வெளிப்படை
பரிகாசம்         - நகையாடல்
பத்தினி          - கற்பணங்கு
பத்திரிக்கை      - இதழ்
பரீட்சை             - தேர்வு
பந்துக்கள்        - உறவினர்கள்
பாரம்               - சுமை
பாஷை             - மொழி
பிரசாரம்            - பரப்புவேலை, பரப்புரை
பூர்வம்              - முந்திய
மரணம்             - சாவு, இறப்பு
மாமிசம்            - இறைச்சி
மிருகம்             - விலங்கு
முகூர்த்தம்         - நல்வேளை
மோசம            - கேடு
யந்திரம்            - பொறி
யாகம்             - வேள்வி
யுத்தம்             - போர்
ரகசியம்        - மறைபொருள், குட்டு, பூடகம்
ருசி                - சுவை
லாபம்              - மிகை ஊதியம்
வருஷம்            - ஆண்டு
வாகனம்            - ஊர்தி
வாதம்              - சொற்போர், சொல்லாடல்
வாந்தி பேதி     - கக்கல் கழிச்சல்
வாலிபர்         - இளைஞர்
விஷயம்        - பொருள், செய்தி
விபத்து         - துன்ப நிகழ்ச்சி
விவாகம்        - திருமணம்
வீரம்                - மறம்
வேகம்              - விரைவு
ஜனங்கள்        - மக்கள்
ஜயம்               - வெற்றி
ஜாக்கிரதையாக  - விழிப்பாக
ஜென்மம்            - பிறவி
ஸ்தாபனம்      - நிலையம், அமைப்பு

இந்த தமிழ்ச்சொற்களை முழுதாக பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த முடியாவிட்டலும், சிறிது முயற்சி செய்தாலும் நல்லது தானே!

வீட்டில் கொண்டாடப்படுவது பண்டிகையா? விழாவா?

பசும் பால், பசுப் பால் - இதன் வேறுபாடு என்ன?

வடசொல் மட்டுமல்ல போர்த்துகீசிய, அரபிய சொற்களும் நமது பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியுமா?

அடுத்தக் கட்டுரையில் காண்போம்.

முந்தைய அத்தியாயம் : நமது பயன்பாட்டில் தமிழ் - 1


நமது பயன்பாட்டில் தமிழ்

(3)

சில வருடங்களுக்கு முன் வந்த "என்ன அழகு, எத்தனை அழகு.." என்ற (நடிகர் விஜய் நடித்த) பாடல் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

இதில் "எத்தனை" அழகு என்று வரி சரியானதா? பல (எத்தனை) விதமான அழகை வர்ணிக்கிறார் என்றால் பரவாயில்லை. அதுவே, அழகை ("எத்தனை" என்று) அளக்கிறார் என்றால் தவறு தானே!!

நம் மளிகைக்கடைக்கு, தேங்காய் கேட்டு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். அவரிடம், "எத்தனை தேங்காய் வேண்டும்" என்று கேட்போமா? அல்லது "எவ்வளவு தேங்காய் வேண்டும்" என்று கேட்போமா?

எனக்கும் இது போன்ற சந்தேகங்கள் அடிக்கடி வரத்தான் செய்கிறது. இதனை பள்ளிப் பருவத்திலேயே படித்திருந்தாலும், மற்றுமொரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே. நான் படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

எத்தனை   - எண்ணிக்கை
எவ்வளவு  - அளவுகோல

சோறு தின்னறதா? உண்பதா?

அருந்துதல்          -    மிகச் சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து அருந்துதல்)
உண்ணல்             -   பசி தீர உட்கொள்ளல்
உறிஞ்சுதல         -   வாயை குவித்து நீரியற் பண்டங்களை இழுத்துக் கொள்ளுதல்
குடித்தல              -   சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல். ஆக மது அருந்தினான் என்பதே சரியானது!
தின்னல்               -   சுவைக்காக ஓரளவு தின்னுதல் (முறுக்கு
)

வான் நோக்க

தூவானம்                - காற்றினால் சிதறப்படும் மழைத் திவலை
தூரல், சாரல்          - சிறுதுளி மழை
மழை                       - பெருந்துளியாகப் பெய்வத

எப்படீங்க சொல்றீங்க?

சொல்லுதல்           -      சுருக்கமாகச் சொல்லுதல்
பேசுதல்                    -      நெடுநேரம் உரையாடுதல்
கூறுதல                   -     கூறுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல்              -      பலரறியச் சொல்லுதல்
கொஞ்சுதல்           -     செல்லமாகச் சொல்லுதல்
பிதற்றுதல்            -     பித்தனைப் போல சொல்லுதல்
ஓதுதல்                  -     காதில் மெல்லச் சொல்லுதல்
செப்புதல்         -     விடை சொல்லுதல்
மொழிதல்      -     திருத்தமாகச் சொல்லுதல்
இயம்புதல்       -      இனிமையாகச் சொல்லுதல்
வற்புறுத்தல்       -   அழுத்தமாகச் சொல்லுதல

எங்கே கொண்டாடறீங்க?

பண்டிகை      -       வீட்டில் கொண்டாடப்படுவது
விழா               -       வெளியிடத்தில் கொண்டாடப்படுவத

*********************************************************************

குழாம்          -       சிறு கூட்டம்
கூட்டம்            -       பலர் முறையாகக் கூடியிருப்பது
கும்பல்         -       முறையின்றைக்  கூடுவது

*********************************************************************

பசுப் பால்       -       பசுவினது பால்
பசும் பால       -      பசுமையான பால்

*********************************************************************

இதற்கு முந்தைய கட்டுரைகளில் நமது புழக்கத்தில் உள்ள வடசொற்களைப் பார்த்தோம். இதில் பிற நாட்டு சொற்களையும் பார்ப்போம்.

அலமாரி, ஜன்னல் (காற்று வழி), சாவி ( திறவுகோல்) போன்றவை போர்த்துகீசிய சொற்கள்.

அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே..

அந்தஸ்த்                          -    நிலைமை
அலாதி                             -     தனி
ஆஜர்                                -    வருகை
இஸ்திரிப் பெட்டி         -     துணி மடிப்புக் கருவி
இனாம                           -     நன் கொடை
கறார் விலை                -   ஒரே விலை
கஜானா                           -   கருவூலம்
கம்மி                               -     குறைவு
காலி                               -     நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல்                  -     போக்கிரி
கிஸ்தி                          -      வரி
கைதி                           -      சிறையாளி
சரகம                           -      எல்லை (சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார்                      -      அரசு
சந்தா                           -       கட்டணம்
சவால்                       -        அறைகூவல்
சாமான்                     -        பண்டம்
சிபாரிசு                      -      பரிந்துரை
சிப்பந்தி                    -       வேலையாள்
சுமார்                        -     ஏறக்குறைய,அண்ணளவாக
ஜமீன்                       -       நிலம்
ஜமீன்தார்                -       நிலக்கிழார்
ஜாஸ்தி                   -       மிகுதி
ஜோடி                     -        இணை

தயார், அசல், பாக்கி போன்றவற்றுள் நல்ல தமிழ்ச்சொல் எது?

300 ரூபாயை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? முந்நூறு என்றா?

அடுத்தக் கட்டுரையில் காண்போம்!

நமது பயன்பாட்டில் தமிழ் - 2


தொழில்நுட்பத் துறை இளைஞர்களுக்கு கூட இணையதளங்களில் பல்வேறு வலைப்பதிவுகள் மூலமாக தமிழிலேயே எழுதும் ஆர்வம் மிகுதியாகியிருப்பது மகிழ்வுக்குரியது.

ஆனால், நம்மால் ஐயமில்லாமல் எழுத முடிகிறதா?

"ல,ழ,ள", "ண,ந,ன", "ர,ற" போன்ற எழுத்துக்களை பயன்படுத்துவதை எடுத்துக்கொள்வோம்.

300 ரூபாயை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? அல்லது முந்நூறு என்றா?

முன்னூறு - முன்னே வரும் நூறையும், முந்நூறு - மூன்று நூறையும் குறிப்பிடுகிறது.

அதே போல "முன்னாள் (முன் ஒரு நாள் ) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் "முந்நாள் (மூன்று நாள்) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளதே!

*******************************************************

பெரும்பாலானோர்க்கு எண்களைக் குறிப்பிடுவதில் ஐயம் வரத்தான் செய்கிறது.

எண்பது - 80
என்பது - என்று சொல்வது

எண்ணை - Number
எண்ணெய் - தேங்காய் எண்ணெய் ( வெண்ணெய் என்று குறிப்பிடுவது சரியா? )

************************************************************

தர னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி கீழே தெரிந்து கொள்வோம்...

அன்னாள்  - அவள்
அந்நாள்   - அந்த நாள்

இன்னார்  - இத்தகையர் (இன்னார் இனியார் என்று எழுதுவோமே)
இந்நார்    - இந்த நார் ( இந்நார் இனியார் என்று எழுதினால் எப்படி இருக்கும்?)

************************************************************

மிழக அரசியலில் "சுவரொட்டிகளுக்கு" ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. சுவரொட்டிகளில், நம் கண்ணில் படுவனவற்றுள் "இவண் - செயலாளர் " என்பனவும் ஒன்று. சில சமயம் தவறாக "இவன் - கொ.ப.செ" என்று அச்சிடுவதும் நடக்கத்தான் செய்கிறது.

இவன், இவண் என்ன வேறுபாடு?

இவன்  - இங்கே இருப்பவனை குறிப்பிடுவது
இவண் - இங்ஙணம் (மாற்றி எழுதினால் என்ன ஆகும்?)

ஈந்தாள்  - கொடுத்தாள்
ஈன்றால் - பெற்றெடுத்தாள்

உண்ணல் - புசித்தல்
உன்னல்  - நினைத்தல்

ஊன்   - மாமிசம்
ஊண்  - உணவு

கன்னி - குமரி
கண்ணி - கண்ணை உடையவள்

கான் - காடு
காண் - பார்

தின் - சாப்பிடு
திண் - வலிமை

தன் - தனது
தண் - குளிர்ச்சி

மனம் - உள்ளம்
மணம் - வாசனை

இது போன்ற னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி பள்ளிப் பருவத்திலேயே படித்திருந்தாலும், இன்னும் ஒரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே!

************************************************************

"என்னடா ரெடி ஆயிட்டியா?" என்று கேட்பது பழகிப்போன ஒன்று. ரெடியை தமிழாக்கம் செய்யும்போது "தயார்" என்று எழுதுவது வழக்கம். ஆனால் "தயார்" தூய தமிழ்ச்சொல் கிடையாது.

தயார் என்பது "ஆயத்தம்" என்ற தமிழ்ச்சொல்லில் பிறமொழிச்சொல் தான்.

இங்கே தயாரிப்பு, தயாரித்தல், தயாரிப்பாளர் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களா?

இதர அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்...

அசல்    - மூலப்பொருள்
பாக்கி    - நிலுவை
ஜாக்கிரதை - கவனம்
தபால்      - அஞ்சல்
பஞ்சாயத்   - ஐவர் குழு
பட்டுவாடா - பகிர்ந்தளித்தல்
படுதா     - திரைச்சீலை
பந்தோபஸ்து - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்கு    - சிவிகை
பஜாரி       - வாயாடி
பதில்       - மறுமொழி
பாத்        - சோறு
பகாளாபாத் - தயிர்சோறு
பூரா       - முழுதும்
பேஷ்      - மிக நன்று
மஹால்   - அரண்மனை
மாகாணம் - மாநிலம்
மாஜி     - முன்னைய
முகாம்   - தங்குமிடம்
முலாம்  - மேற்பூச்சு
மைதானம் - திடல்
ரத்து      - விலக்கு
லாயக்கு   - தகுதி
வகையறா - முதலான
வாரிசு    - உரியவர்
ஷோக்    - பகட்டு

************************************************************

ணையதள பயனர்கள் அனைவருக்கும் விக்கிப்பீடியாவைத் தெரியாமல் இருக்காது. அனைத்து வகையான தகவல்களையும் தருவதால் இதற்குக் கட்டற்ற களஞ்சியம் என்று பெயரிட்டுள்ளார்கள்.

விக்கிப்பீடியாவில் அனைத்து மொழிகளிலும் கட்டுரைகள் வெளியிடப்படுவதும் நமக்குத் தெரிந்ததே!

இதில் தமிழில் எத்தனை கட்டுரைகள் வந்துள்ளன என்று பார்த்தால் நமக்குக் கிடைப்பது அதிர்ச்சியே. இதுவரை தமிழில் 18000 கட்டுரைகள் மட்டுமே வெளியாகியுள்ளன.

மற்ற நாட்டு மொழிகளில் எத்தனை கட்டுரைகள் வெளியாகியுள்ளன என்று பார்த்தால் கிடைப்பவை இதோ...

ஆங்கிலம்    - 29 லட்சத்துக்கும் அதிகம்
பிரென்ச      - 8 லட்சத்துக்கும் அதிகம்
செருமன்     - 9  லட்சத்துக்கும் அதிகம்.
சுவோமி ( பின்னிஷ் ) - 2 லட்சத்துக்கும் அதிகம்
தெலுங்கு - 40 ஆயிரம்

ஆங்கிலம், பிரென்சு, செருமன் போன்ற மொழிகள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுவது நமக்குத் தெரிந்ததே. ஆனால் பின்னிஷ் மொழியில் பேசுவோர் எண்ணிக்கை 50 லட்சம் பேர் தான். அதாவது சென்னை நகர மக்கள்தொகையை விடக் குறைவு.

பின்னிஷ் மொழி 700 ஆண்டுகள் வரலாறு கொண்டவையே! ஆனால் தமிழ்மொழி? தமிழ் மொழி இலக்கணம் பற்றிய நூலான தொல்காப்பியத்தை இயற்றியது 2000 ஆண்டுகட்கு முன்பு!

50 லட்சம் பேர் பேசும் "சுவோமி" மொழியில் 2 லட்சம் கட்டுரைகள் உள்ளன என்றால் 7 கோடிப்பேர் பேசும் தமிழ் மொழியில் எத்தனை கட்டுரைகள் இருக்க வேண்டும்?

பல துறைகள் பற்றியும் பதிவுகளை எழுத தொடங்கியிருக்கும் நாமும், இது போல களஞ்சியங்களுக்குக் கட்டுரைகளை எழுதலாமே! நம்மைத் தடுக்கும் காரணங்கள் எவை?

தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயமும், ஐயமுமே காரணம். ஐயத்தைப் போக்க நமக்கு வேண்டியது ஒரு நல்ல இலக்கண நூல்! அனைவரது வீட்டிலும் "WREN & MARTIN - GRAMMAR" நூல் இருக்கும் போது தமிழ் இலக்கணம் பற்றிய நூல் இல்லை என்றால் நன்றாகவா இருக்கும்?

மிழில் எழுதும் போது நமக்கு ஏற்படும் ஐயங்களில் குறிப்பிடத்தக்கவை "ர, ற" வேறுபாடு.

தந்தைக்கு மகன் மீது மிகுந்த "அக்கரை" என்று எழுதுவது சரியா? அல்லது "அக்கறைச்" சீமை அழகினிலே என்று எழுதுவது தான் சரியா?

அக்கரை என்றால் - அந்தக் கரை
அக்கறை என்றால் - கவனம்

இது போல இதர "ர, ற" வேறுபாடுகள் கீழே..

அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்

அரை - மாவாக்கு
அறை - வீட்டுப்பகுதி

ஆர - நிறைய
ஆற - சூடு குறைய

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா

உரை - சொல்
உறை - அஞ்சல் உறை

எரி - தீ
எறி - வீசு

கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - நிறம்

கரை - கடற்கரை
கறை - மாசு

கோருதல் - விரும்புதல்
கோறல் - கொல்லுதல்

சிரை - மயிரை நீக்கு
சிறை - சிறைச்சாலை

சொரிதல்- பொழிதல்
சொறிதல்- நகத்தால் தேய்த்தல்

பரந்த - பரவிய
பறந்த - பறந்துவிட்ட

பரவை - கடல்
பறவை - பட்சி

பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை

பெரு - பெரிய
பெறு - அடை

பொரித்தல் - வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பெரும்பாலானோர்க்கு இந்த வேறுபாடுகள் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குப் பயனளித்தால் நல்லது தானே!

************************************************************

ரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்...

இலாகா - துறை
உஷார் - விழித்திரு
உருமால் - தலைப்பாகை
கசாபு - இறைச்சி
குஷி - மகிழ்ச்சி
சபாஷ் - பலே, சிறப்பு
சொக்கா - உடை
ஜமக்காளம் - விறிப்பு
ஜல்தி - விரைவு
ஜவ்வாது - வாசனைப்பொருள்
ஜிமிக்கி - தொங்கட்டான்
ஜில்லா - மாவட்டம்
தகரார் - சண்டை
தமாஷ் - நகைச்சுவை
தர்பார் - அரசவை
தாலுகா- வட்டம்
பக்கா - நிறைவு
பஜார் - கடைவீதி
பைல்வான் - பலசாலி..

சோம்பேரி, சோம்பேறி.. எது சரி? "ல, ழ, ள" வேறுபாடுகள் அடுத்த கட்டுரையில்..!


 

நமது பயன்பாட்டில் தமிழ் 5

தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணிக்கை பெருகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே!

தமிழார்வமும், தம் கருத்துக்களை எளிதாக நண்பர்களுக்குப் பகிர உதவும் தொழில்நுட்பமும், பதிவுகள் பாராட்டப்படும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் மேலும் அதிகமானோரைப் பதிவுலகத்திற்கு வரவழைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், நம்மால் ஐயமில்லாமல் எழுத முடிகிறதா?

"ல,ழ,ள", "ண,ந,ன", "ர,ற" போன்ற எழுத்துக்களை பயன்படுத்துவதை எடுத்துக்கொள்வோம்.

300 ரூபாயை எப்படி குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? அல்லது முந்நூறு என்றா?

முன்னூறு - முன்னே வரும் நூறையும், முந்நூறு - மூன்று நூறையும் குறிப்பிடுகிறது.

அதே போல "முன்னாள் (முன் ஒரு நாள் ) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் "முந்நாள் (மூன்று நாள்) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளதே!

பெரும்பாலானோர்க்கு எண்களைக் குறிப்பிடுவதில் ஐயம் வரத்தான் செய்கிறது.

எண்பது - 80
என்பது - என்று சொல்வது

எண்ணை - Number
எண்ணெய் - தேங்காய் எண்ணெய் ( வெண்ணெய் என்று குறிப்பிடுவது சரியா? )

இதர னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி கீழே தெரிந்து கொள்வோம்...

அன்னாள் - அவள்
அந்நாள்  - அந்த நாள்

இன்னார் - இத்தகையர் ( இன்னார் இனியார் என்று எழுதுவோமே)
இந்நார் - இந்த நார் ( இந்நார் இனியார் என்று எழுதினால் எப்படி இருக்கும்?)

தமிழக அரசியலில் "சுவரொட்டிகளுக்கு" ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. சுவரொட்டிகளில், நம் கண்ணில் படுவனவற்றுள் "இவண் - செயலாளர் " என்பனவும் ஒன்று. சில சமயம் தவறாக "இவன் - கொ.ப.செ" என்று அச்சிடுவதும் நடக்கத்தான் செய்கிறது.

இவன், இவண் என்ன வேறுபாடு?

இவன்    - இங்கே இருப்பவனை குறிப்பிடுவது
இவண்   - இங்ஙணம் ( மாற்றி எழுதினால் என்ன ஆகும்?)

ஈந்தாள  - கொடுத்தாள்
ஈன்றால் - பெற்றெடுத்தாள்

உண்ணல் - புசித்தல்
உன்னல்  - நினைத்தல்

ஊன்     - மாமிசம்
ஊண்    - உணவு

கன்னி   -  குமரி
கண்ணி  - கண்ணை உடையவள்

கான்    - காடு
காண்   - பார்

தின்    - சாப்பிடு
திண்   - வலிமை

தன்    - தனது
தண்   - குளிர்ச்சி

மனம்  - உள்ளம்
மணம் - வாசனை

இது போன்ற னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி பள்ளிப்பருவத்திலேயே படித்திருந்தாலும், இன்னும் ஒரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே!

"என்னடா ரெடி ஆயிட்டியா?" என்று கேட்பது பழகிப்போன ஒன்று. ரெடியை தமிழாக்கம் செய்யும்போது "தயார்" என்று எழுதுவது வழக்கம். ஆனால் "தயார்" தூய தமிழ்ச்சொல் கிடையாது.

தயார் என்பது "ஆயத்தம்" என்ற தமிழ்ச்சொல்லில் பிறமொழிச்சொல் தான்.
இங்கே தயாரிப்பு, தயாரித்தல், தயாரிப்பாளர் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களா?

இதர அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான் தமிழ்ச்சொற்களும்

அசல்         - மூலப்பொருள்
பாக்கி         - நிலுவை
ஜாக்கிரதை    - கவனம்
தபால்        - அஞ்சல்
பஞ்சாயத்     - ஐவர் குழு
பட்டுவாடா    - பகிர்ந்தளித்தல்
படுதா        - திரச்சீலை
பந்தோபஸ்து  - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்க  ு - சிவிகை
பஜாரி        - வாயாடி
பதில்        - மறுமொழி
பாத         - சோறு
பகாளாபாத்   - தயிர்சோறு
பூரா         - முழுதும்
பேஷ்        - மிக நன்று
மஹால்      - அரண்மனை
மாகாணம்    - மாநிலம்
மாஜி        - முன்னைய
முகாம்       - தங்குமிடம்
முலாம்      - மேற்பூச்சு
மைதானம்   - திடல்
ரத்து        - விலக்கு
லாயக்கு     - தகுதி
வகையறா   - முதலான
வாரிசு       - உரியவர்
ஷோக்       - பகட்டு

சொரிவதற்கும் சொறிவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பொரித்தல், பொறித்தல் - என்ன வேறுபாடு?


எமது பயன்பாட்டில் தமிழ் - 6

இணையதள பயனர்கள் அனைவருக்கும் விக்கிப்பீடியாவைத் தெரியாமல் இருக்காது. அனைத்து வகையான தகவல்களையும் தருவதால் இதற்குக் கட்டற்ற களஞ்சியம் என்று பெயரிட்டுள்ளார்கள்.

விக்கிப்பீடியாவில் அனைத்து மொழிகளிலும் கட்டுரைகள் வெளியிடப்படுவதும் நமக்குத் தெரிந்ததே!

இதில் தமிழில் எத்தனை கட்டுரைகள் வந்துள்ளன என்று பார்த்தால் நமக்குக் கிடைப்பது அதிர்ச்சியே! இதுவரை தமிழில் 18000 கட்டுரைகள் மட்டுமே வெளியாகி உள்ளன.

மற்ற நாட்டு மொழிகளில் எத்தனை கட்டுரைகள் வெளியாகியுள்ளன என்று பார்த்தால் கிடைப்பவை இதோ...

ஆங்கிலம்    - 29 லட்சத்திற்கும் அதிகம்
பிரென்சு     - 8 லட்சத்திற்கும் அதிகம்
செருமன்    - 9 லட்சத்திற்கும் அதிகம்.
சுவோமி
( பின்னிஷ்)         - 2 லட்சத்திற்கும் அதிகம்
தெலுங்கு    - 40 ஆயிரம்

ஆங்கிலம், பிரென்சு, செருமன் போன்ற மொழிகள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுவது நமக்குத் தெரிந்ததே. ஆனால் பின்னிஷ் மொழியில் பேசுவோர் எண்ணிக்கை 50 லட்சம் பேர் தான். அதாவது சென்னை நகர மக்கள்தொகையை விடக் குறைவு.

பின்னிஷ் மொழி 700 ஆண்டுகள் வரலாறு கொண்டவையே! ஆனால் தமிழ்மொழி? தமிழ் மொழி இலக்கணம் பற்றிய நூலான தொல்காப்பியத்தை இயற்றியது 2000 ஆண்டுகட்கு முன்பு!

50 லட்சம் பேர் பேசும் "சுவோமி" மொழியில் 2 லட்சம் கட்டுரைகள் உள்ளன என்றால் 7 கோடிப்பேர் பேசும் தமிழ் மொழியில் எத்தனை கட்டுரைகள் இருக்க வேண்டும்?

பல துறைகள் பற்றியும் பதிவுகளை எழுத ஆரம்பித்திருக்கும் நாமும், இது போல களஞ்சியங்களுக்குக் கட்டுரைகளை எழுதலாமே! நம்மைத் தடுக்கும் காரணங்கள் எவை?

தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயமும், ஐயமுமே காரணம். ஐயத்தைப் போக்க நமக்கு வேண்டியது ஒரு நல்ல இலக்கண நூல்! அனைவரது வீட்டிலும் "WREN & MARTIN - GRAMMAR" நூல் இருக்கும் போது தமிழ் இலக்கணம் பற்றிய நூல் இல்லை என்றால் நன்றாகவா இருக்கும்?

தமிழில் எழுதும் போது நமக்கு ஏற்படும் ஐயங்களில் குறிப்பிடத்தக்கவை "ர,ற" வேறுபாடு.

தந்தைக்கு மகன் மீது மிகுந்த "அக்கரை" என்று எழுதுவது சரியா? அல்லது "அக்கறைச்" சீமை அழகினிலே என்று எழுதுவது தான் சரியா?

அக்கரை என்றால் - அந்தக் கரை
அக்கறை என்றால் - கவனம்

இது போல இதர "ர, ற" வேறுபாடுகள் கீழே..

அரம்    - ஒரு கருவி
அறம்   - தருமம்

அரை    - மாவாக்கு
அறை   - வீட்டுப்பகுதி

ஆர            - நிறைய
ஆற          - சூடு குறைய

இரங்கு  - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா

உரை   - சொல்
உறை  - அஞ்சல் உறை

எரி    - தீ
எறி   - வீசு

கரி    - அடுப்புக்கரி
கறி   - காய்கறி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - நிறம்

கரை  - கடற்கரை
கறை - மாசு

கோருதல் - விரும்புதல்
கோறல்   - கொல்லுதல்

சிரை - மயிரை நீக்கு
சிறை - சிறைச்சாலை

சொரிதல்   - பொழிதல்
சொறிதல்   - நகத்தால் தேய்த்தல்

பரந்த     - பரவிய
பறந்த   - பறந்துவிட்ட

பரவை  - கடல்
பறவை  - பட்சி

பாரை     - கடப்பாரை
பாறை     - கற்பாறை

பெரு      - பெரிய
பெற       - அடை

பொரித்தல் - வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பெரும்பாலானோர்க்கு இந்த வேறுபாடுகள் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குப் பயனளித்தால் நல்லது தானே!

அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்..

இலாகா        - துறை
உஷார்         - விழித்திரு
உருமால்       - தலைப்பாகை
கசாபு          - இறைச்சி
குஷி          - மகிழ்ச்சி
சபாஷ்         - பலே, சிறப்பு
சொக்கா       - உடை
ஜமக்காளம்    - விரிப்பு
ஜல்தி         - விரைவு
ஜவ்வாது      - வாசனைப்பொருள்
ஜிமிக்கி       - தொங்கட்டான்
ஜில்லா        - மாவட்டம்
தகரார்        - சண்டை
தமாஷ்       - நகைச்சுவை
தர்பார்        - அரசவை
தாலுகா      - வட்டம்
பக்கா        - நிறைவு
பஜார்        - கடைவீதி
பைல்வான்   - பலசாலி

"ல, ழ, ள" வேறுபாடுகள் அடுத்த பதிவில்


எமது பயன்பாட்டில் தமிழ

ச.செந்தில்வேலன்

7

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" அல்லது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எது சரியான வாக்கியம்?

கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்றுப் பாடலில் வரும் வரி தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்". இதில் "கேளிர்" என்பதற்கு என்ன பொருள்? "கேளுங்கள்" என்றா பொருள்? "கேளிர்" என்பதற்கு உறவினர் என்றே பொருள். ஆனால் நாம் கேளுங்கள் என்று பொருள்படும்படி யாதும் ஊரே யாவரும் "கேளீர்" என்று எழுதிவருவது வியப்பிற்குரியது.

கூகுள் தேடுதளத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற வரியை தேடினால் நாலாயிரத்திற்கும் அதிகமான விடைகள் கிடைத்தது வியப்பளித்தது!

கணவனுக்கு "கேள்வன்" என்னும் சொல் சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

ன் மகன், எனது மகன் - எது சரி?

நமது பயன்பாட்டில் எனது மகன், எனது தந்தை என்று எழுதுவது வழக்கம். அப்படி எழுதுவது சரியா? என் மகன், என் தந்தை என்று எழுதுவது தான் சரியானது. வீடு, வாகனம், நகை என்று அஃறினைப் பொருள்களையே "எனது" என்று குறிக்க வேண்டும்.

"ஆகிய, முதலிய" எப்படி பயன்படுத்துவது?

வரையறை தெரிந்து எண்ணி முடிக்கத்தக்கவற்றுக்கே "ஆகிய" சேர்க்க வேண்டும். அ இ உ எ ஒ "ஆகிய" ஐந்தும் குற்றெழுத்துகள் எனலாம். உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர் முதலிய நகரங்கள் கோவை அருகே உள்ளன எனலாம்.

சுவரில், சுவற்றில் எது சரி?

"Post"ல் ஒட்டுவதால் "Poster" ஆனாது. இங்கே சுவரில் ஒட்டுவதால் சுவரொட்டி ஆனது. இங்கே 'சுவற்றில்' ஒட்டாதீர் என்று எழுதுவதைக் காண்கிறோம். இது தவறு. சுவறு - வற்று, காய்ந்து போ என்று அர்த்தம் ஆகவே, சுவரில் ஒட்டாதீர் என்று எழுத வேண்டும்.

சீயக்காய் - சிகைக்காய் எது சரி?

எண்ணெய் தேய்த்துத் தலை குளிக்கும் போது "சிகைக்காய்" தேவைப்படும்.

இது போல நமது பயன்பாட்டில் உள்ள பிழையான சொற்களும் திருத்தங்களும் கீழே..

பிழை                                 திருத்தம்

அரிவாமனை                 - அரிவாள்மனை
அருகாமை                     - அருகில்
அருணாக்கொடி             - அரைநாண்கொடி
ஆலையம்                         - ஆலயம்
இளனி                             - இளநீர்
உத்திரவு                         - உத்தரவு
எகனை மொகனை         - எதுகை மோனை
கண்றாவி                         - கண்ணராவி
கம்மாய்                             - கண்வாய்
காத்தாடி                         - காற்றாடி
கோர்வை                     - கோவை
சக்களத்தி                         - சகக்களத்தி
சமயல்                             - சமையல்
சின்னாபின்னம்             - சின்னபின்னம்
சுவற்றில்                         - சுவரில்
சேதி                                 - செய்தி
நஞ்சை                             - நன்செய்
புஞ்சை                             - புன்செய்
பண்டகசாலை             - பண்டசாலை
புட்டு                             - பிட்டு
மனக்கெட்டு             - வினைக்கெட்டு
முழித்தான்                 - விழித்தான்
முகர்தல்                     - மோத்தல்
முழுங்கு                     - விழுங்கு
ரொம்ப                     - நிரம்ப
ரொப்பு                     - நிரப்பு
வாய்ப்பாடு                 - வாய்பாடு
வெத்தலை             - வெற்றிலை
வெய்யில்             - வெயில்
வெள்ளாமை         - வேளாண்மை

முந்தய கட்டுரைகளில் வடசொற்கள், அரபி, பாரசீகம் போன்ற மொழிச்சொற்கள் தமிழில் பயன்படுத்துவதைப் பார்த்தோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களைக் குறிப்பிடாமல் விடலாமா? குறிப்பாக தொழில்நுட்பம் தொடர்பாகப் பேசும்போது நாம் பயன்படுத்துவது ஆங்கில சொற்களையே! முழுவதும் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது கடினமானாலும் தெரிந்து கொள்வது நல்லது தானே!

தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகள், கட்டுரைகள் எழுதும் போது ஆங்கிலச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன என்ற ஐயம் வருவதுண்டு. இதற்கான சொற்கள் கீழே தரப்பட்டுளன. இந்தச் சொற்களை பயன்படுத்தும் போது கூடவே ஆங்கில சொற்களையும் குறிப்பிடவும். கட்டுரையைப் படிப்பவர்களுக்குப் புரியாமல் போனால் தமிழில் எழுதும் நோக்கம் நிறைவடையாது.

தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆங்கில சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே...

Start                 - தொடக்கம்
Abort                 - முறித்தல்
Absolute         - தனி
Address         - முகவரி
Access           - அணுகு
Accessory     - துணை உறுப்பு
Accumulator - திரட்டி
Accuracy         - துல்லியம்
Action                 - செயல்
Active                 - நடப்பு
Activity                 - செயல்பாடு
Adaptor             - பொருத்தி
Add-on             - கூட்டு உறுப்பு
Adder                 - கூட்டி
Address             - முகவரி
AI - Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
Algorithm                 - நெறிமுறை
Allocate                 - ஒதுக்கீடு
Amplifier                 - பெருக்கி
Analyst                 - ஆய்வாளர்
Animation             - அசைவூட்டம்
Aperture card         - செருகு அட்டை
Append                 - பின்சேர்
Application             - பயன்பாடு
Approximation         - தோராயம்
Archive                 - ஆவணக்காப்பகம்
Aspect Ratio         - வடிவ விகிதம்
Assembly             - தொகுப்பு
Audio                     - ஒலி
Audio Cassette     - ஒலிப்பேழை
Audit                         - தணிக்கை
Authorisation             - நல்குரிமை
Automatic                     - தன்னியக்கம்
Automatic Teller Machine - தன்னியக்க காசளிப்பு எந்திரம்.
Auxiliary                     - துணை
Availability                 - கிடைத்தல்
Average                     - சராசரி

திருமண அழைப்பிதழில் "திருவளர்ச்செல்வி" என்று அச்சிடவேண்டுமா? அல்லது "திருவளர்செல்வி" என்று அச்சிடவேண்டுமா?
அலைகடல், அலைக்கடல் என்ன வேறுபாடு?

அடுத்த அத்தியாயத்தில்...!


 நமது பயன்பாட்டில் தமிழ் - 7

 

- ச.செந்தில்வேலன்

நம் பேருந்துகளில் "புகைப் பிடிக்காதீர்" என்று எழுதியிருப்பார்கள்.

அதைச் சில குறும்பர்கள் "பு"வை அழித்து, "கைப் பிடிக்காதீர்" ஆக்கியிருப்பார்கள். அவர்கள் "பிறர் கையைப் பிடிக்காதீர்" என்று பொருளை மாற்றுவதற்காக அப்படி செய்வதுண்டு!

ஆனால் "கை பிடி" என்பதற்கும் "கைப் பிடி" என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

"கை பிடி" என்றால் கையைப் பிடி என்றும், "கைப் பிடி" என்றால் பேருந்தில் வரும் கைப்பிடியையும் உணர்த்தும்.

******

அலைகடல் என்பதற்கும் அலைக்கடல் என்பதற்கும் வேறுபாடு உள்ளதாம். "அலைகடல்" என்றால் அலைகின்ற கடலையும் "அலைக்கடல்" என்றால் அலையை உடைய கடல் என்றும் பொருள்படும்.

*****

நம் திருமண அழைப்பிதழ்களில் திருவளர்ச்செல்வி என்று அச்சிடுவதைக் காண முடியும். இது தவறு. செல்வம் சிறக்கும் செல்வியாக என்றென்றும் இருக்கவேண்டும் என்றால் திருவளர்செல்வி என்றே எழுத வேண்டும்.

*****

நான் ஒரு வலைப்பதிவோ அல்லது கட்டுரையோ எழுதும் பொழுது, எனக்கு வரும் ஐயங்களில் சந்திக்குத் தான் முதலிடம். (இந்தக் கட்டுரையில் எத்தனை பிழை உள்ளதோ?). படிக்கும் பொழுது தமிழில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், எழுதும் போது பிழை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

நாம் சொல்ல வரும் கருத்தைச் சரியாக எழுத நமக்கு சந்தியைப் பற்றிய அறிவு மிகவும் தேவை. ஆகவே ஓர் இலக்கண நூல் நம் கையில் இருப்பதும் தமிழில் எழுத மிகவும் உதவும்.

*****

எத்தனை - எத்துணை என்ன வேறுபாடு?

எண்ணிக்கையைக் குறிக்கும் இடத்தில் "எத்தனை" என்ற சொல்லையும், எண்ணிக்கையில்லாத அளவு, குணம், நிறம், போன்றவற்றைக் குறிக்கும் போது "எத்துணைப் பெரியது", "எத்துணைச் சிவப்பு" என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.

*****

அன்று - அல்ல பயன்படுத்துவது எப்படி?

அஃது உண்மை அன்று
அவை உண்மை அல்ல

இவற்றில் அன்று என்பதை ஒருமைக்கும் அல்ல என்பதை பன்மைக்கும் பயன்படுத்துவது முறையாகும்.

*****

கீழே இணைத்துள்ளது நான் கூகுள் வேவைப் பற்றி எழுதிய கட்டுரையில் ஒரு பத்தி..

"நாம் சாட் செய்யும் போது டைப் செய்து வருகிறோம் என்றால் "typing.... " என்று ஒரு கமெண்ட் கீழே காணப்படும்.. நாம் என்ன டைப் செய்கிறோம் என்பது எதிரில் இருப்பரும் பார்த்தால்..? மிக விரைவாக சாட் செய்யாலாம் தானே? ( நாம் டைப் செய்வதை பார்க்க முடியாமல் செய்யவும் வசதி உள்ளதாம்!!)"

இதில், சாட் (chat), டைப் (type), கமெண்ட் (Comment) என்று ஆங்கில சொற்களைத் தமிழில் எழுதியிருப்பேன். அந்த சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன என்று தெரியாதது தான் காரணம். இது போல ஐயங்களைத் தீர்க்க நமது பயன்பாட்டில் உள்ள சில சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆங்கிலச் சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே...

Backspace              - பின் நகர்வு
Backup                   - காப்பு
Bar Code               - பட்டைக் குறிமுறை
Boot                      - தொடங்குதல்
Bottleneck             - இடர்
Bug                           - பிழை
Bypass                     - புறவழி
Calibration                 - அளவீடு செய்தல்
Capacity                    - கொள்திறன்.
Cancel                      - நீக்கு
Cartridge                  - பெட்டகம்
Certification             - சான்றளிப்பு
Channel                   - தடம்
Character                - உரு
Charge                    - மின்னூட்டம்
Chat                            - உரையாடு
Check out                - சரிபார்த்து அனுப்பு, சரி பார்
Chip                            - சில்லு
Chop                          - நீக்கு
Clip Board                 - பிடிப்புப் பலகை
Clone                        - நகலி
Coding                     - குறிமுறையாக்கம்
Coherence                 - ஓரியல்பு
Collector                    - திரட்டி
Concatenate             - தொகு
Command                - கட்டளை
Communication         - தொடர்பு
Compile                    - தொகு
Condition                  - நிபந்தனை
Configure                 - உருவாக்கு
Contrast                  - வேறுபாடு
Copy                       - நகல்
Counter                  - எண்ணி
Crash                      - முறிவு
Credit Card             - கடனட்டை
Cursor                       - சுட்டி
Customize               - தனிப்பயனாக்கு
Cut and Paste         - வெட்டி ஒட்டு
Cycle                          - சுழற்சி.
Data                          - தரவு

அவை, அவைகள் என்ன வேறுபாடு?

நமது பயன்பாட்டில் உள்ள பிற தொழில்நுட்பம் சார்ந்த கலைச்சொற்கள் அடுத்த அத்தியாயத்தில்...


நமது பயன்பாட்டில் தமிழ் - 6

 

தனித்தமிழ் இயக்கம் 1916-இல் மறைமலை அடிகளால் தொடங்கப்பெற்றது. அவர் தம் பெயர் சுவாமி வேதாசலம் என்பதை மறைமலை அடிகள் (சுவாமி-அடிகள், வேதம் -

மறை, அசலம் - மலை) என மாற்றிக்கொண்டார். தாம் நடத்திவந்த "ஞானசாகரம்" என்ற தம் இதழின் பெயரை "அறிவுக்கடல்" என மாற்றியதுடன் தம் இல்லத்தின் பெயராகிய

"சன்மார்க்க நிலையம்' என்பதைப் "பொதுநிலைக் கழகம்" என்றும் மாற்றினார். பிற மொழிச் சொற்களை அகற்றி எப்போதும் தூய தமிழ்ச் சொற்களையே பேசினார்.

மறைமலை அடிகளாருடன் கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றிய சூரியநாராயண சாஸ்திரியார் தம் பெயரைத் தனிதமிழாக்கிப் பரிதிமாற் கலைஞர் (சூரியன்- பரிதி,

நாராயணன் - மால், சாஸ்திரி-கலைஞர்) என்ற புனைபெயராகப் பயன்படுத்தினார். பிராமணர் அல்லாதார் இயக்கமும் அதிலிருந்து வளர்ந்த திராவிட இயக்கமும் நல்ல

தமிழையும் நல்ல தமிழ்ப் பெயர்களையும் பரப்பின. திராவிட இயக்கத் தலைவர்கள் தம் வடமொழிப் பெயர்களை நல்ல தமிழில் மாற்றிக் கொண்டனர். இராமையா அன்பழகன்

எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருட்டிணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் தங்கள் பெயர்களை

மாற்றிக் கொண்டனர்.

திராவிட இயக்கத்தின் வீழ்ச்சியால் தமிழின் வளர்ச்சியில் தேக்கமும் தேய்வும் நலிவும் ஏற்பட்டன. தமிழ்வழிக்கல்வி குறைந்தது; ஆங்கிலமே வாழ்வு என்றாகியது. பள்ளிகளில்

கல்லூரிகளில் பல்கலைக் கழகங்களில் அலுவலகங்களில் கடைகளில் விளம்பரப் பலகைகளில் என ஆங்கிலம் எங்கும் நீக்கமற நிறைந்தது. குழந்தைகளின் பெயர்கள்

பெரிதும் வடமொழியிலேயே வைக்கத்தொடங்கினர்.திரைப்படங்களின் பெயர்கள் முழுதும் ஆங்கில மயமாயின. தமிழக அரசு திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டினால்

வரிவிலக்கு என அறிவித்ததால் இப்போது நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டிவருகின்றனர். அதேபோல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்

சூட்டினால் தங்கக் கணையாழி (மோதிரம்) வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால், ஏழை எளியவர்களின் வீட்டுக்குழந்தைகள் ஓரளவு தமிழ்ப்பெயர்களைப் பெறுகின்றன.

மிக அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தமது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரைத் தொல்காப்பியன் என மாற்றினார்.தமிழன் தன் மொழியை இழக்காமல் வாழ, தன் அடையாளத்தை இழக்காமல் வாழத் தூய தமிழ்ப்பெயர்களைப் பெறவேண்டும்.

---- தஞ்சை இறையரசன்