புரட்டாதி 28, 2011

ரொறன்ரோ

சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்

நாகரிகம் அடைந்த காலம்தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.

'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' எனத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.

தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன.

'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.

நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்.

முக்கியமாக பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள்.

தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன.

கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், ராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கள் ஆகின.

முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது.

சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வட மொழிப்பெயர்களை நீக்கி தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப்பெற்றது.

குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.

சுவாமி வேதாசலம் அவர்;கள் மறைமலை அடிகள் (சுவாமி-அடிகள், வேதம் - மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன்- பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி-கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருட்டிணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன் எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களை சங்க காலப் புலவர்கள் மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.

மிக அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரைத் தொல்காப்பியன் என மாற்றினார்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, கனிஷ்ட, சிரேஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.

தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ், ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள், உறுதி, உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என மாற்றப்பட்டு விட்டது.

தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவர் தமிழனாகி விடமுடியாது. தமிழ்நாட்டில் பிறப்பதால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது. தமிழ் வாழையடிவாழையாக  (Heritage) வருவதனால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது.  தமிழ் மீது காதல் வேண்டும். தமிழ் மீது பற்றுவேண்டும்.  தமிழ் மீது தாகம் வேண்டும். அவ்வாறு இருப்பவனே தமிழன்.

அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கம் மட்டும் அல்ல, தலைவர்கள்,  புகழ் பெற்றவர்கள், குடும்பத்தில் முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அருகி வருகிறது. பேரன், பேத்தி என்று சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தானே!

இந்தப் பெயர்கள் தமிழ் அல்லாதன மட்டுமல்ல, அவை பொருளற்றதாகவும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக கஜன், டிலஷ்சனா, டிலக்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, சுரேஷ், சுரேஷி, வர்ஷன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும். தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும். தன்மானத்தையும் இனமானத்தையும் இழப்பதாகும்.

ஒரு யூதனை அல்லது ஒர் ஆங்கிலேயனை அவனது பெயரை வைத்துக் கொண்டே கண்டு பிடிக்கலாம். தமிழர்களை அப்படிக் கண்டு பிடிக்க முடியாது.

பெற்றோர்கள் தமிழ் அல்லாத பெயர்களை வைப்பதற்கு அவர்களுக்கு தமிழின் தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரியாததே காரணமாகும்.

தற்காலத் தமிழர்கள் சோதிடம், எண்ணியல் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி பல்வேறு மொழிகளில் பொருளே இல்லாமலோ, தெரியாமலோ பெயரிட்டுக் கொள்கின்றனர். இன்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சொல்லும்  சோதிடர்கள், எண் சோதிடர்கள் மேல் மக்களுக்கு கூடி வரும் நம்பிக்கைக்கு இதில் பெரும் பங்கு உண்டு. இன்னும் சிலருக்கு தங்கள் பெயர்களில் கிரந்த ஒலிகள் வரவேண்டும் என்ற தீராத மயக்கம் இருக்கிறது.

தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தமிழ் எது வடமொழி எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாகப் பஞ்சாங்கத்தைப் பார்த்து அல்லது அருச்சகர் சொல்வதைக் கேட்டு நடப்பதாலும் இந்தக் கேடு நடக்கிறது. புதிதாக முளைத்துள்ள எண்சாத்திரம் இன்னொரு காரணம் ஆகும்.

நிரோஜன் நிரோஜி என்றால் முறையே மானம் அற்றவன் மானம் அற்றவள் என்று பொருள். அது தெரியாமல் அந்தப் பெயர்களைப் பெற்றோர்கள் வைக்கிறார்கள்.

தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட,ண ற,ண,ன,ர,ல,ழ,ள என்ற வரிசை எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள்.

தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலைமகள், கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், தமிழ்ச்செல்வி, பூங்கோதை, பூமகள், மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன், போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.

தமிழ் இலக்கணப் படி  ஆண்களின் பெயர்கள்  “அன்”  "அர்” விகுதியிலோ, “அம்” விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கம்பன், வள்ளுவன்,  இளங்கோவன், திருமாவளவன், தொல்காப்பியன். பெண்களின் பெயர்கள் "இ" விகுதியிலோ, "ஐ" "அள்" விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கண்ணகி, வாணி, குந்தவை, கோதை, கலைமகள், திருமகள், நாமகள். 

அப்படி முடிந்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தனித் தமிழ்ப் பெயர்ப் பட்டியல் (Pure Thamil Names) ஒன்று கீழே கொடுக்கப்  பட்டிருக்கிறது. இதனை உங்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் கொடுத்துத் தனித் தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட ஊக்குவியுங்கள்.

ஏற்கனவே அறிவித்தபடி 2008-2013 ஆண்டு காலப் பகுதியில் தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இரண்டாயிரம் வெள்ளி ($2,000) பரிசு அடுத்த ஆண்டு பொங்கல் நன்னாளில் (தை 14, 2014) வழங்கப்படும்.

இந்தப் பரிசுத் தொகை தமிழீழம், இலங்கை, கனடா உட்பட புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதி பெற்றால் குடவோலை முறையில் பரிசுக்குரிய பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.

கழகத்தின் முடிவே இறுதியானது.

நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்
நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!

நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்குச் சூட்டுங்கள் Mp3 பாடல்


njhlHGfSf;F: njh.Ng. vz; (416) 281 1165> (416) 332 3343> (416) 264 8591

For more names please browse

http://thamilbabynames.blogspot.com/2010/02/blog-post_4825.html

http://blog.ravidreams.net/2007/03/tamil-baby-names/

http://peyar.yemkay.com –  தமிழ்ப் பெயர் தரவுத்தளம்.

http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.html

http://babynames.looktamil.com/show/pure-tamil-girl-names

Please Download Bamini font at URL http://www.jagatheswara.com/tamil.php to read text


 

                           ngz; Foe;ijfspd; ngaHfs;

 

 

mq;faw;fz;zp

mQ;riy

 

xsit

Xtpak;

 

jhkiur;nry;tp

jhak;kh

 

kUjty;yp

ky;ypif

mq;fit

mt;it  

Xtpah

jpUkfs;

jpUkq;if

kyH

kyHkfs;

mt;itahH          

mk;ikahH  

fay;tpop

fz;kzp 

fz;zfp

jpUkyH 

jpUnkhop

kyHkq;if

kyHf;nfhb

mk;ikr;rp

murp     

fiyr;nry;tp

fiykfs;

fiykjp

jpUg;ghit

jpUr;nry;tp

kyHr;nry;tp

kyHkfs;

murpahH

mupit

fiyaurp

fiythzp

jpUtUs;

jpUthl;b

jpy;iy

kyHtpop

kiyaurp 

kiykfs;

mUtp

mUs;eq;if

fiytpop

fay;tpop

njd;wy;

Njd;nkhop 

kiwr;nry;tp

khrhj;jpahH

mUs;kq;if

mUs;nkhop

faw;fz;zp

faw;fz;zp

Jsrp

eq;if   

khjtp 

khNjtp

mUsk;ik

mUsurp

faw;nfhb 

fdpnkhop 

fhe;js;

ed;Kj;J

ed;nkhop

khd;tpop          

Nkfiy

mUl;nry;tp  

my;yp

fhHFoyp

ehr;rpahH

ehfk;ik

Kj;jurp

Kj;jkpo;

my;ypaurp

fhtpup

fpsp

ehkfs;

ehturp 

Kj;jofp 

Kj;JNtzp

miykfs;  

mofk;ik

fpspnkhop

Fapyp

epiwkjp

epykfs;      

Ky;iy

Ky;iythzp

mofk;kh

mofurp

Fapypdp

Fuit

epyh

epyhturp

ahourp

ahopdp

mofp 

mwptofp

Fkup

Fe;jtp

epyhtofp

gJik

aho;eq;if

tQ;rp

mwpT

mwpturp

Fe;jit 

Fykfs;

gtsk;

ghkfs;  

ghbdp

tQ;rpf;nfhb

tbturp

md;gurp

md;gofp 

Fyg;ghit

Foyp   

Fwkfs;

ghturp 

ghit

tbtofp      

tbT

md;G

md;Gr;nry;tp

FwpQ;rp 

FwpQ;rpkyH

ghujp

ghupkfs;

tbTf;furp

tz;lhHFoyp 

md;df;fpsp

md;dk;

nfhw;wit

nfhw;witr;nry;tp

Gfopdp   

G+q;Foyp

tz;zkjp

ts;sp

mdpr;rk;

Mz;lhs;

Nfhij

Nfhg;ngUe;Njtp

G+q;nfhb

G+q;Nfhij    

ts;spak;ik

tsHkjp

Ml;lej;jp 

Mlyurp

Nfhkfs;

Nfhykjp

Nfhksk;

G+jehr;rpahH

G+k;ghit

thzp

thd;kfs;

Mlyofp    

Mlw;nry;tp

Nfhksty;yp

Nfhykapy;

G+kfs;

G+kzp

thd;kjp

thdjp

,ir

,irr;nry;tp

RlH

RlHf;nfhb

G+kyH

G+khiy   

thdtd;khNjtp

thdpyh

,iraurp

,iraofp

,irthzp

Rlnuhsp
RlHtpop

G+turp

G+tpop

tpz;zpyh

ntz;zpyh 

,sepyh

,skjp

nrq;fkyk;

nre;jkpo;

G+it

ngz;zurp

ntz;kjp

ntw;wpr;nry;tp 

,stofp

,sturp

nre;jkpopdp

nre;jhkiu

Nguofp

nghw;nfhb

ntw;wpaurp

Ntzp 

,sNtzp

,sNtdpy;   

nre;jpdp

nrk;gUj;jp

nghw;Nfhij

nghw;nry;tp

Nty;tpop

itfiw

,d;gty;yp

,dpats;

nrz;gfk;

nry;yk;

nghw;ghit

nghd;eif

itif

,dpahs;

<or;nry;tp

nry;yf;fpsp

nry;tp

nghd;kfs;

nghd;kzp

 

<oeq;if

<oepyh

nrt;te;jp

Nrud;khNjtp

nghd;kyH

nghd;dk;kh

 

cik

cikak;ik  

Nry;tpop

#lhkzp

nghd;dp

kq;if

 

cikaurp

cikahs;

Nrhod;khNjtp

jq;fk;

kq;ifaHf;furp  

kjp

 

cyfk;ik

vopyurp

jq;fk;kh

jkpo;kfs;

kjpaofp

kz;Nlhjup

 

vopdp

vopy; 

jkpo;thzp

jkpo;r;nry;tp

kztofp

kzp

 

vopy;epyh

vopy;kq;if

jkpourp 

jkpoofp

kzpNkfiy

kzpnkhop

 

vopyp

vopy;tpop

jkpopir

jkpopdp

kzpak;ik

kufjk;

 

Vopir 

Vopirr;nry;tp

jkpo;eq;if
 jhkiu

kufjty;yp

 

Vopirty;yp

     

 

 

 

 

 

 

 

 

                                                    Mz; Foe;ijfspd; ngaHfs;

 

 

mz;zh

mz;zhj;Jiu

 

,dpad;

,dpatd;

 

jzpifNtyd;

jkpo;f;Fkud;

 

nghd;dptstd;

nghd;idad;

mjpakhd;

mg;gH

<otd;

<othzd;

vopyd;     

jkpo;r;Nrud;   

jkpo;kzp

kfpo;ed;

kjp

ma;ad;

muq;fz;zy;

vopyurd;

Xtpad;        

 

jkpo;khwd; 

jhkiuf;fz;zd; 

kjpaofd;

kjpthzd;

murd;         

muR

fz;zd;

fz;zg;gd;

jpy;iyr;nry;td;

jpU      

kztofd;

kzthsd;

muprpy;fpohd;

muprpy;fpohH     

fz;izad;

fz;zjhrd; fzpad;

jpUkhwd;

jpUKUfd;

kzp

kzpNrfud;

mUik       

mUs;

fkyf;fz;zd; 

fjputd; 

jpU%yH

jpU%yd;

kzpkhwd;  

kzpKj;J

mUs;Fkud;  

mUsurd;

fiyf;Nfh

fiyr;nry;tk;

jpUturd;

jpUts;StH

kzpnkhopad;

kzpad;

mUsuR  

mUl;Fkud;

fiyr;nry;td;

fiyg;Gyp   

jpUts;Std;

jpUr;nry;tk;

kzptz;zd;

kzpaurd;

mUl;nry;tH

mUl;nry;td;

fiykjp

fiykzp 

jpUf;Fkud;    

jpy;iy

kyHkd;dd;

kyutd;

mUz;   

mUz;nkhop

fiythzd;

fiyNte;jd;

jpy;iyf;$j;jd;

jpy;iyr;rptd;

kUjd;

kUjdhH          

mUzd; 

mUs;vopyd;

fhup  
fhupf;fz;zd;

jpy;iyr;nry;td;

jpy;iyak;gyk;

kUjghz;bad;      

kUjKj;J

mUs;nkhop 

mUik       

fhupfpohH

fhHtz;dd;

jpy;iytpy;yhsd;

JiuKUfd;

kiwkiy 

kiwkiyahd;

mUs; 

mUsk;gyk;    

fps;sp 

fps;sptstd;

Jhatd;

njd;dd;

kd;dHkd;dd;

kd;dd;

mUsuR    

moF

fPud;       

fPudhH

njd;durd;      

njd;duR   

khq;Fbf;fpohH

khq;FbkUjd;

mofd; 

mofg;gd;

Ffd;

Fl;Ltd;   

Njtd;

njhz;ilkhd;

khrhj;jd;  

khrhj;jdhH

mofg;gH

mofurd;

Fapyd;

Fzhsd;  

njhy;fhg;gpaH

njhy;fhg;gpad;

khe;juQ;Nruy;

khzpf;fk;

mofuR 

mofpaek;gp

Fkzd; 

Fkud;     

ef;fPuH

ef;fPud;

khkzp

khky;yd;

mwthzd;

mwthzd;

FkuNts;

FkhuNty;

er;rpdhHf;fpdpaH

er;rpdhHf;fpdpad;

kh%yd;

kh%ydhH

mwthop

mwNte;jd;

Fapyd;

$j;jgpuhd;   

elturd;  

ee;jd;

khatd;

khNahd;

mwptd;  

mwptuR

$j;juR

$j;jurd; 

ek;gp  

ek;gpA+uhd;

khupKj;J

khytd;

mwptofd;

mwpthsp

$j;jd;   

$j;jdhH

eyq;fps;sp

ey;yKj;J

khwd; 

khwdhH 

mwpthsd;      

$lyurd;   

nfhw;wtd;

ew;fps;sp

khwd;tOjp

mwpT

Nfhg;ngUQ;Nruy;

ed;dd;

Kf;fz;zd;

mwpTf;furd;

Nfhkfd;     

ed;khwd;

Kfpy;tz;zd;

mwpTf;fuR

Nfhtyd;

ed;dd;

Kfpyd;

mwpTr;nry;td;

NfhNte;jd;

ed;dp

Kj;jurd;

mwpTilek;gp

Nfhitf;fpohH

ehfehjH

Kj;J

mwpTkjp

NfhT+H

ehfehjd;

Kj;Jf;Fkud;

mwpTkzp

NfhT+HfpohH

ehfdhH

Kj;JNty;

mwpnthsp

rq;fpyp

ehNte;jd;

Kj;jkpo;

md;gofd;

rhj;jd;

ehturd;

Kj;jurd;

md;guR

rhj;jdhH

ehtuR

Kj;jofd;

md;gurd;

rpyk;gurd;

ehtyd;

Kj;joF 

md;G

rptd;

ehTf;furd;

Kj;Jf;fUg;gd;

md;Gr;nry;td; 

rptdbahd;

ehTf;furH      

Kj;Jf;Fkud; 

md;Gkjp   

rpw;wk;gyk;

ehTf;fuR

Kbaurd;

md;Gkzp

rpd;dj;jk;gp

ehNte;jd;

KbNte;jd;

md;Gnkhop

RlNuhd;

epytd;

KUfg;gd;

Mirj;jk;gp

nrq;ifahopahd;

epyturd;

KUfd;

Ml;ldj;jp

nrq;Fl;Ltd;

epytd;

KUfNty;

Mlyurd; 

nre;jkpo;

ePythzd;

KUfNts;

MlyuR

nre;jkpod;

ePyd;

KUF

Ma;

nre;jhkiu

nebatd;

KUifad;

M&ud;

nre;jpy;

nebNahd;

KUfNty;

MT+Hf;fpohH

nre;jpy;Fkud;

neLQ;Nruyhjd;

KUfNts;

Mo;thH    

nre;Jhud;

neLq;fz;zd;

%Nte;jd;

Mw;wyuR 

nre;jpy;Nrud;

neLq;fps;sp

%yq;fpohH

MWKfk;

nre;JhHKUfd;

neLq;Nfh

Nkfehjd;

MidKfd;

nre;jpy;ehjd;

neLkhy;

NkhrpfPudhH

,irkzp

nre;jpy;Ntyd;

neLkhwd;

Nkhrpnfhw;wdhH

,irthzd;

nre;jpyurd;

neLkhd;

NkhrpahH

,ilf;fhld;

nrk;gpad;

neLkhdQ;rp

NkhRfPud;

,ilf;fhlH

nrk;gpad;nry;td;

neLkhytd;

ahourd;

,katuk;gd;   

nrk;kzd;

neLQ;nropad;

aho;ghb

,uhtzd;

nrk;kiy

neLQ;Nruyhjd;

aho;g;ghzd;

,Uq;Nfh

nrk;gupjp

gJkdhH

aho;thzd;

,Uk;nghiw

nry;yg;gd;

gr;irag;gd;

tbNty;

,Uq;NfhNts;

nry;iyah

guzH

tbNtyd;

,yf;fpag;gpj;jd;

nry;tk;

guzd;

tbNtw;furd;

,Uk;nghiw 

nry;td;

gupjp 

tbNty;KUfd;

,yf;fpad;

nry;tkzp

gupjpthzd;

tz;zepytd;

,yq;ifaHf;Nfhd;

nry;tf;fLq;Nfh

gy;ytd;   

tzq;fhKb

,yq;ifad;

nry;tf;Nfhd;

godp

ty;ytd; 

,oQ;Nruy;

nry;iyah

godpag;gd;

ty;yuR     

,sQ;;Nruyhjd;

nrt;Nts;

godpNty;

tOjp

,sq;fz;zH

nropad;

gdk;ghudhH

ts;sy;

,sq;fz;zd;

Nrf;fpohH

ghz;bad;

ts;spkzhsd;

,sq;fPud;

Nre;jd;

ghzd;

ts;StH

,sq;fPudhH

Nre;jd;fPudhH

ghujp

ts;Std;

,sq;Fkud;

Nre;jd;G+jdhH

ghujpjhrd; 

tstH;Nfhd;

,sq;Nfh

,sq;Nfhtd;

Nrukhd; 

Nruy;

ghujpahH

ghup

tstd;   

td;dp

,sq;NfhNts;

,sQ;nropad;

Nrud;  Nruல்

,Uk;nghiw

ghtuR

ghthzH  

td;dpad;

thzd;  

,sQ;Nrl;nrd;dp

Nruyd; 

ghthzd;

Nruyd; 

,sQ;Nruyhjd;

Nruyhjd;

ghNte;jd;

thkzd;

,se;jpUkhwd;

NrNahd;

Gfo;

thdkhkiy

,se;jpiuad;

Nrhod;

GfNoe;jp

tpy;ytd;

,se;NjtdhH

jq;fNty;

GJikg;gpj;jd;

tpy;ytd;Nfhij

,sehfdhH

jq;fNtyd;

Gypf;Nfh

ntw;wp

,sk;gupjp

jq;fNtY

ghbdpahH

ntw;wpf;Fkud;

,sk;ghujp

jzp;Nrud;

G+jg;ghz;bad;

ntw;wpr;nry;td;

,sk;ghup

jzpifKUfd;

G+jd;NjtdhH

ntw;wpaurd;

,sk;G+jdhH

jzpifNtyd;

G+q;Fd;wd;

ntw;wpaofd;

,sk;G+uzH

jkpo;

G+q;ftp

ntw;wpNte;jd;

,sk;G+uzd;

jkpo;f;Fbkfd;

G+tz;zd;

ntw;wpNty;

,sk;tOjp

jkpo;r;nry;td;

g+turd;;

Ntq;if

,skhwd; 

jkpo;r;nropad;

ngUq;fz;zH

Nte;jd;

,sKUF

jkpo;r;Nruy;

ngUe;NjtdhH  

Nte;jdhH

,sKUfd;

jkpo;r;Nrud;

ngUq;fLq;Nfh  

NtNahd;

,sikg;gpj;jd;

jkpo;ehld;

ngUQ;Nruy;

Nty;khwd;

,sQ;rpj;jpudhH

jkpo;g;gpj;jd;

ngUQ;rhj;jdhH

Nty;KUfd;

,sQ;nropad;

jkpo;kzp

ngUQ;rpj;jpudhH

Nty;KUF

,sQ;Nruy;

jkpo;khwd;

ngUe;NjtdhH

Ntyd;   

,sQ;Nruyhjd;

jkpo;Kb

ngUew;fps;sp

Ntytd;

,se;jpiuad;

jkpo;tz;zd; 

ngUkhs;

NtYg;gps;is

,stofd;

jkpo;thzd;   

ngUtOjp 

Nts;

,sturd;

jkpo;Nte;jd;

Ngfd; 

NtoNte;jd;

,stuR

jkpoz;zy;

Nguurd;

itfiw

,iwad;

jkpog;gd;

NguuR

ituKj;J

,iwtd; 

jkpourd;

NguhrpupaH

 

,dpad;

jkpouR

Nguhrpupad;

 

,d;gk;

jkpotd;

Nguwpthsd;

 

,d;gd; 

jkpoNts;

nghUed;

 

 

jkpod;

jkpod;gd;

nghw;Nfh

பொழிலன்

 

 

jkpopdpad;

nghd;kzpahH

 

 

jkpNoe;jy;

nghd;Kb

 

 

jkpNoe;jp

nghd;KbahH   

 
 

jkpNoe;jp

nghd;dpapd;nry;td; 

 
       

 


 

 

தமிழ்மக்கட் பெயர்க் கையேடு

http://web.archive.org/web/20071213202034/www.nithiththurai.com/name/index.html  

மது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.

வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.

நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இருந்தன.

பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.

எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.

அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க.

(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.

(2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.

(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.

(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம் என்பது எருமை எனப்பொருள்படும்.

(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.

பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத் தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத் தவறிவிடுகின்றனர்.

தமிழ்                வடமொழி

கருங்குழலி          கிருஸ்ணவேணி
காரரசி              கிருஸ்ணராணி
காரரசன்            கிருஸ்ணராசா
பொன்னடியான்      கனகதாஸ்

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ.கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்.

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ் சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ.கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா.

ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி.

பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச் சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப் பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும்.

CHRIS SILVERWOOD - (SILVER- வெள்ளி. WOOD- மரம்)
இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97.

TIGER WOOD - (TIGER - புலி. WOOD - மரம்)
அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997.

LIANE WINTER - (WINTER - குளிர்காலம்)
செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.்

DR. LE. DE. FOREST - (FOREST - காடு)
FILL எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923

ALEXANDER GRAHAM BELL - (BELL - மணி)
தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876.

COLT - (COLT - ஆண்குதிரைக்குட்டி)
ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837.

ADAM SMITH - (SMITH - கொற்றொழிலாளி)
பழம் பெரும் பொருளியலறிஞர்.

GARY BECKER - (BECK - மலையருவி)
1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.

SIR RICHARD STONE - (STONE - கல்)
1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்.

FREDERICK NORTH - (NORTH - வடக்கு)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805.

SIR ROBERT BROWNRIG - (BROWN - மண்நிறம்)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820

STERN SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்)
இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997.
ROBIN COOK - (ROBIN - ஒருவகைப் பறவை.)

(COOK - சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997.

DR. LIAM FOX - (FOX - நரி)
இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997.

மேலும் சில பெயர்கள் :-
ONION, SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDER

பொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும் இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும்.

தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும் எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப் பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம்.

சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை ஆக்கியுள்ளோம்.

முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும் அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ், பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம்.

பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற் பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம்.

மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" - மக்கட்பெயர் 46,000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25,000 பெண்பாற் பெயர்களையும் 21,000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்ள முன்மொழி, பின்மொழிகளைக்கொண்டு பொருள் பொதிந்தனவும் வழுவற்றனவும் ஒலிநயமுடையனவுமான அனைத்துப் பெயர்களையும் நாம் ஆக்கவில்லை. ஆகவே, அவ்வாறு செய்யவல்லார் முன்மொழி பின்மொழிகளைப் பொருந்தியவாறு இணைத்து மேலும் பல பெயர்களை ஆக்கிக் கொள்வாரென நம்புகின்றோம்.

தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும்.

இப்பெயர்கள் மக்கள் வழக்கில் வருகின்ற பொழுதே எமது இவ் வருஞ்செயல் பயன்விளைப்பதாகுமென நம்புகிறோம். 'குற்றம் களைந்து குணம் நாடிக் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதற்கிணங்க இவ் வேட்டின்பால் வழுக்கள் காணப்படுமாயின் அவற்றைப் பொறுத்தருள வேண்டுவதோடு எமக்குச் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறோம்.

- தமிழ் வளர்ச்சிக் கழகம் -[23 - 06 - 1997]

 


 

தில்லைக்குமரன்

 

புலிகளின் ஆட்சியில்தான் தனித்தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட்டது.

 

 

கிளிநொச்சியில் இயங்கிய அங்காடிகளுக்கும் உணவகங்களுக்கும் அருமையான தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டன.

 

 

ஆனால் வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தனித்தமிழ் போற்றப்படவில்லை.

 

 

குழந்தைகளுக்கு தாறுமாறாகப் பெயர் வைத்துள்ளார்கள். டில்ஷன், டில்ஷி, லக்க்ஷி, நிரோஜன், நிரோஜி, ஆசா, கோசா, யுரேனியா என்ற பெயர்கள் மலிந்து கிடந்தன.

 

ஜ,ஸ்,ஷ், போன்ற சொற்கள் வரும் பெயர்களை வலிந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இடுவது கொஞ்சக்காலமாக செல்வாக்குப் பெற்றுவருகிறது.

 

 

நிரோஜன் என்றால் உரோசம் அற்றவன் என்று பொருள்.  நிரோஜி உரோசம் அற்றவள். சியாமளா என்றால் கருப்பாயி என்று  பொருள். கேசவன் என்றால் மயிராண்டி என்று பொருள்.

 

 

முஸ்லிம்கள் தெரிந்தெடுத்த அராபுச் சொற்களையே தங்கள் பிள்ளைகளுக்குப் பெயராகக் சூட்டுகிறார்கள். இதனால்தான் மொகமது என்ற சொல் உலகத்தில் அதிகளவு பயன்பாட்டில் உள்ள பெயர்ச் சொல்லாக விளங்குகிறது.

இந்தக் கையேட்டின் சுருக்க பதிப்பை வெளிக் கொணர்ந்தால் நல்லது. அதில் ஒரு நூறு ஆண், பெண் பெயர்கள் இருந்தால் போதும். எனது இணைய தளத்தில் இப்படியான பெயர்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். பார்க்க:  http://nakkeran.com/Purethamilnamesweb2004.htm

 

 

தமிழ்ப்படைப்பாளிகள் கழகம் ஆண்டுதோறும் தனித்தமிழ்ப் பெயர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறது. இதே போல் மொன்றியலைத் தளமாகக் கொண்ட சிலம்பம் அமைப்பும் பொங்கள் நன்நாளில் பரிசும் சான்றிதழும் கொடுத்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. தங்களைத் தூய சைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூடத்  தங்கள் பிள்ளைகளுக்கு நாயன்மார்கள் பெயர்களை வைப்பதில்லை. பிராமணர்கள் வைப்பதில்லை என்பது தெரிந்ததே.

 

 

சைவம் இன்றேல் தமிழ் இல்லை, தமிழ் இன்றேல் சைவம் இல்லை என்று மார்தட்டும் சைவர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளுக்கு நாயன்மார்கள் பெயர்களை வைப்பதில்லை என்பது விளங்கவில்லை. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தமிழர்கள் இடையே முருகன், வள்ளி என்று பெயர்களை முருக பக்தர்கள் கூட வைப்பதில்ல்லை. காரணம் 'தாழ்த்தப்பட்ட மக்கள்' இந்தப் பெயர்களை சூடியிருந்ததே!

 

 

சில நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு வைத்திருக்கும் பட்டியலில் உள்ள பெயர்களையே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. நெதலாந்து ஒரு எடுத்துக்காட்டு.

 

 

தமிழ்நாடு அரசு அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவரலாம். ஆனால் அதில் முதலில் மாட்டுப்படுவது முத்தமிழ் வித்தகர் அறிஞர் எனப் போற்றப்படும் கருணாநிதியின்  குடும்பம் ஆக இருக்கும் என்பதால் அப்படியான சட்டம் இயற்றப்படுவதற்கு  வாய்ப்பே இல்லை.  

 

 

மொழிதான் தமிழனது அடையாளம் என்று சொல்லிச் சொல்லி தொண்டை வரண்டுவிட்டது. கேட்பார் யாரும் இல்லை. கடையை விரித்தேன் கொள்வார் இல்லை என்று அலுத்துப் போன  வள்ளலார் போல் அல்லாது தொடர்ந்து முயற்சிப்போம்.

 

 

 

 

மிக்க அன்புடன்

 

 

 

 

நக்கீரன்

 


 

 தாய்மொழியில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

 

மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும்.  தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும். 

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?

இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.

இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?

இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது.  ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன.  எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது.  அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது.  ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 

நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார்.  இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும். 

அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?

அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.  நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை.  ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். 

சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா?  தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார்.  அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார். 

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்? 

இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது  பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம். 

அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.  சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும்.  கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன? 

சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள்.  நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா? 

அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?

நீங்கள் ‘ஞானப்பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞானப்பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள்.  அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது.  உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை?  ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள்.  இது தாழ்வு மனப்பான்மை தானே! 

‘ஞானப்பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா? 

அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார்,  அவ்வையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்? 

உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும். 

பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள்.  ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா?  சிரிப்பு வருகிறது அல்லவா?  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது!  அவருடைய பெயர் ‘Tiger Woods’.  அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே!  பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்!  எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும். 

‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம்.  அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா?  ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா?  ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா?  ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா! 

சரி!  என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்!  ஆனால் எங்கு தேடுவது?

 ஏன் கவலைப்படுகிறீர்கள்?  முனைவர் பா. வளன் அரசு (நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை),  புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம்.  இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன.  பல இணையத் தளங்கள் இருக்கின்றன.  http://www.tamilkalanjiyam.com, http://www.peyar.in, http://wapedia.mobi/ta, http://thamizppeyarkal.blogspot.com, http://tamilsaral.com/news%3Fid%3D3857.do, http://www.sillampum.com/, http://pagalavan.in/archives/328 எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம். 

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?

இல்லை.  குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம். 

வணிக நிறுவனங்களுக்குமா? 

ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா? 

வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?

 ஒன்றும் கவலையில்லை.  தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா?  ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா?  ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா?  ‘நாயர்’ கடைகள் இல்லையா? 

திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்?  இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?

தமிழில் படம் எடுக்கிறார்கள்.  கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது.  படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள்.  ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும்.  நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை. 

தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?

அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை.  எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள்.  அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள்.  ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது.  அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள்.  பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன? 

அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா?  தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா? 

அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும்.  நாம் தமிழர் அல்லவா!  எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.  

தமிழ்ப் பெற்றோர்கள் ஏன் தாறுமாறாகத் தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள்? 

(1)    ஷ், ஸ்,  இல் முடிகிற பெயர்களை வைப்பது நாகரிகம் (fashion) என நினைப்பது.

(2)    பஞ்சாங்கத்தைப் பார்த்து குழந்தையின் நட்சத்திரத்துக்கு அமைய பெயர் வைப்பது. பஞ்சாங்கம் இல்லாதவர்கள்

கோயில் அய்யரிடம் கேட்கிறார்கள். அவர் பஞ்சாங்கத்தைப் பார்த்து சு, லி, அ  போன்ற  எழுத்தை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்குமாறு சொல்லுகிறார். 

இதனால் பெற்றோர் பொருள் இல்லாத அல்லது பொருள் புரியாத, வடமொழிச் சொற்களைத் தங்கள் குழுந்தைகளுக்கு இடுகிறார்கள். 

எடுத்துக்காட்டாக சுரேஷ், கணேஷ், சந்தோஷ், நாகேஷ், நிரோஷன், நிரோஷி, ஆசா, கோசா, யுரேனியா, லாவண்யா இப்படியான வடமொழிப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள். 

‘ல’ கரம் தமிழ்ச் சொற்களின் முன் வராது என்பது இலக்கண விதி. அப்படியிருந்தும் லவன், லாவண்யா என்ற பெயர்களை வைத்துத் தொலைக்கிறார்கள்.
 

தமிழ், தமிழன், தமிழிச்சி என்ற அடையாளத்தை அழிப்பதற்கு இதைவிடச் சிறந்த வழி கிடையாது. 

 

நக்கீரன் 

 


உறுதி எடுத்துக் கொள்வோம்

தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை.  (இலக்குவனார் திருவள்ளுவன்)

  • தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து   எழுதவோ மாட்டேன்.

  • தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுவேன். தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்வேன்.

  • வணக்கத்தையும் வாழ்த்தையும் தமிழிலேயே சொல்வேன்.

  • தமிழ் வழிக் கல்விக்கு என்னால் இயன்ற கருத்துப் பரப்பலையும் உதவியையும் ஆற்றுவேன்.

  • எல்லாத் துறைகளிலும் தமிழ் தலைமையிடம் பெறவும் தமிழர் முதன்மையிடம் பெறவும் இயன்றவரை உதவுவேன்.

  • பெயரின் தலைப்பெழுத்தையும் தமிழிலேயே குறிப்பிடுவேன்.

  • தமிழிலேயே கையொப்பமும் சுருக்கொப்பமும் இடுவேன்.

  • தமிழ்அறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களையும் போற்றுவேன்.

  • தமிழ்மொழி பிற மொழிகளுக்கு இணையான சம வாய்ப்பைப் பெற உதவுவேன்.

  • தமிழர் பிற இனத்தவர்க்கு இணையான சம உரிமை பெற உழைப்பேன். 

(தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்)