----- Original Message -----

From: raja cholan

To: thanga

Sent: Friday, January 29, 2010 4:48 PM

Subject: Re: There was no informed or conscious boycott. To claim otherwise is midsummer madness

 

சோழன் யாரென்று தெரியவில்லை.  வயது போனவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்றால் பல நாடுகளில் >அரசியல்வாதிகளில் பாதிப்பேர் காணாமல் போய்விடுவார்கள். மன் மோகன் சிங் வயது 76. அத்வானி வயது 82. கருணாநிதி 86.

If karunanidhi retired and seeman was in power we would have had tamil eelam by now.
Small correction, I am not against older gentlemen in politics, I am against older gentlemen who are against tamil eelam being in tamil politics.!
Older gentlemen for tamil eelam would always be supported by tamils of all ages.
 

2010/1/29 thanga <athangav@sympatico.ca>
 

 

தமிழீழம் தனிநாடு என்பது தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களித்தபடியால்தான் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது.  தேர்தலைப்  புறக்கணித்திருந்தால் அது தெரிந்திருக்காது. மேலும் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் வட - கிழக்கில் மகிந்த இராசபக்சேதான்  வென்றிருப்பார். வென்றிருந்தால் தானே முழு இலங்கைக்கும் சனாதிபதி என்று மார் தட்டியிருப்பார்.

 

2005 இல் விடுதலைப் புலிகள் தேர்தலை உத்தியோகப்பற்றற்ற முறையில் புறக்கணித்ததை வைத்து 2010 இலும் அதே புறக்கணிப்பைச் செய்யச் சொல்வது முட்டாள்தனம். அப்போதிருந்த களநிலை வேறு. இப்போதுள்ள கள நிலை வேறு.

 

இந்தத் தேர்தலை தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பது

கஜேந்திரனின் கற்பனை. வாக்கு அளிக்காதவர்கள் எல்லாம் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்று கொள்ளலாமா? அப்படியென்றால் நடக்கிற ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 30 விழுக்காட்டு மக்கள் தேர்தலைப் புறக்கணித்ர்கள் என்று சொல்வதும் சரியாக இருக்கும்.

கஜேந்திரன் கனவுலகில் இருந்து பூமிக்கு வரவேண்டும். மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் அறிக்கை விட்டார். கஜேந்திரன் அப்படிச் செய்தாரா? பின் எதற்காக மக்கள் தேர்தலைப் புறக்கணித்துவிட்டார்கள் என்று தானே தனது முதுகில் தட்டிக் கொள்ளலாம?  

 

சரி உண்மை நிலை என்ன?  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் தொகை 630,548 ஆகும். .
இவர்களில் 26.66 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளார்கள். காரணம் என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் 630,548 வாக்காளர்கள் இருக்கவில்லை. அப்படித்தான் உதயன் ஆசிரியர் வித்தியாதரன் சொன்னார். அங்குள்ள மொத்த மக்கள் கையே 5 இலட்சம் மட்டுமே தேறும். காரணம் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட வாக்காளர் பட்டியல் 1982க்குப் பின்னர்  திருத்தப்படவில்லை. ஆயிரக்கணக்கான  புலம்பெயர்ந்த மக்களது பெயர்கள் அந்த பட்டியலில் இருக்கிறது.  கிளிநொச்சித்  தொகுதியை  எடுத்துக் கொண்டால் அங்குள்ள வாக்காளர் தொகை 90,841 ஆகும். ஆனால் 5708 க்காளர்களே (6.28விழுக்காடு) வாக்களித்துள்ளார்கள். இதற்குக் காரணம் இடப்பெயர்வு. அங்குள்ள மக்களில் பல ஆயிரம் நெடுந்தீவு, அனலை தீவு,  யாழ்ப்பாணக்  குடாநாடு என இடம்பெயர்ந்துள்ளார்கள். பலர் போரினால் இறந்து போனார்கள். 

 

ஆட்சிமாற்றம் வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆம் என வாக்களித்தவர் கஜேந்திரன். அப்படியென்றால் பொன்சேகாவுக்குப் போடாமல் ஆட்சிமாற்றத்தை எப்படிக் கொண்டுவருவது?

 

தமிழீழம் தனி நாடடென்பது மக்கள் வாக்களித்தபடியால்தான் நிரூபணமானது. தேர்தலைப் புறக்கணித்தல்ல?
 

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கவில்லை. மாறாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்றே அறிக்கை விட்டார்கள். கஜேந்திரனுக்கு இது கூடத் தெரியவில்லையா?

 

ஆட்சிமாற்றம் வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆம் என வாக்களித்தவர் கஜேந்திரன். அப்படியென்றால் பொன்சேகாவுக்குப் போடாமல் ஆட்சிமாற்றத்தை எப்படிக் கொண்டுவருவது?

 

எனவே  இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் "தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று முடிவு கட்டி அறிக்கை விடுவது  கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

 

சோழன் யாரென்று தெரியவில்லை.  வயது போனவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்றால் பல நாடுகளில் அரசியல்வாதிகளில் பாதிப்பேர் காணாமல் போய்விடுவார்கள். மன் மோகன் சிங் வயது 76. அத்வானி வயது 82. கருணாநிதி 86.

 

அது சரி வெளிநாட்டில் வாழும் ஜெயானந்தமூர்த்தியால்  எப்படி கட்சி நடத்த முடியும்? எப்போதும் வாய்வீரம் பேசும் கஜேந்திரனும்

அங்கு தேர்தல் நடக்க இலண்டனில் குடும்பத்தாரோடு   காலத்தைக் கழித்த கஜேந்திரகுமாரும்  தலைமைக்குத் தகுதியானவர்களா?

 

 

நக்கீரன்


 


 

இலங்கை வரைபடத்தில் தமிழீழத்தையும் ஸ்ரீலங்காவையும் தனித் தனியாகக் காட்டிய தேர்தல் முடிவுகள்!

நக்கீரன்
 

பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாடியவர் பாரதியார்.

சிறிலங்காவில் பேயாட்சிதான் நடக்கிறது. அந்தப் பேயாட்சியின் தலைவர் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அதே நேரம் தமிழீழத்தில் அவர் படுதோல்வியைத் தழுவியுள்ளார்.

ஆறாவது ஆட்சித்தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த நொவெம்பர் மாதம் 23 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசெம்பர் 17 ஆகும். தேர்தல் நடந்த நாள் சனவரி 26, 2010 ஆகும்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க கால அவகாசம் இருந்தும் தேர்தல் ஒன்றைச் சந்திக்க அவர் விரும்பியதற்குத் தக்க காரணம் இருந்தது. விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதை கிழமைக் கணக்கில் வெடிகொளுத்திக் கொண்டாடிய மகிந்த இராசபச்சே அந்தத் தேர்தல் வெற்றியை வாக்குகளாக அறுவடை செய்ய ஆசைப்பட்டார்.

முற்கூட்டி நடத்தப்பட்ட ஆட்சித்தலைவர் தேர்தலுக்கு வேறு காரணங்களும் இருந்தன. வடக்கு மாகாணம் நீங்கலாக ஏனைய மாகாணங்களுக்கு நடந்த தேர்தல்களில் ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றது. வெற்றி விழுக்காடு 60 விழுக்காட்டுக்கு மேல் இருந்தது. இன்னொரு காரணம் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களது “ஆணையை” யும் அவர் பெற விரும்பினார்.

தேர்தல் அறிவிப்பு வெளியிட்டபோது அவருக்கு எதிராகக் களத்தில் இரணில் விக்கிரமசிங்கி ஒருவர் மட்டுமே காணப்பட்டார். இரணில் விக்கிரமசிங்கா 2001 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நீங்கலாக அவர் சந்தித்த ஏனைய தேர்தல் அனைத்திலும் தோற்றிருக்கிறார்.

2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 88 இருக்கைகளைக் கைப்பற்றிய இரணில் விக்கிரமசிங்கியின் அய்க்கிய தேசியக் கட்சி அதில் 12 தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உட்பட 30 .உறுப்பினர்களை ஆளும் கட்சியிடம் பறிகொடுத்தது.

எனவே மகிந்த இராசபக்சே “நோஞ்சான்” ஆன இரணில் விக்கிரமசிங்கியோடு மோதி எளிதில் அவரைப் புறங்கண்டு விடலாம் எனக் கணக்குப் போட்டார்.

இராணுவதளபதி சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் குதிப்பார் என மகிந்த இராசபக்சே எதிர்பார்க்கவில்லை.

2005 ஆம் ஆண்டுத் தோதலில் 180,796 அதிகப்படி வாக்குகளால் வெற்றிபெற்ற மகிந்த இராசபக்சே இம்முறை 1,842,749 அதிகப்படி வாக்குகளால் வென்றுள்ளார். முறையே 2005 மற்றும் 2010 ஆண்டுத் தேர்தல் முடிவுகளைக் கீழ்க்கண்ட அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
 

 

ஆட்சித்தலைவர் தேர்தல் 2010
மாவட்டம் மகிந்த இராசபக்சே  

 

 

 

விழுக்காடு

சரத் பொன்சேகா விழுக்காடு வாக்களித்த-வர்கள் விழுக்காடு
யாழ்ப்பாணம் 44154  

24.75

113877 63.84 25.66
வன்னி 28748  

27.31

70367 66.86 40.33
மட்டக்களப்பு 55663  

26.27

146057 68.93 64.83
அம்பாரை 146912  

47.92

153105 49.94  

73.54

திருகாணமலை 146912  

 

43.04

87661 54.09  

 

68.22

   

422389

  571067    
நுவரேலியா 151604  

43.77

180604 52.14  

14.77

 


இந்தத் தேர்தலில் மகிந்த இராசபக்சேயை நவீன துட்ட கைமுனு என்று பார்த்த சிங்கள வாக்காளர்கள் அவருக்கு அமோக ஆதரவளித்துள்ளார்கள்.

மகிந்த இராசபக்சே சிங்கள பவுத்தர்கள் மற்றும் சிங்கள கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் வென்றுள்ளார்.

பன்னிரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை ரூபா 10,000 ஆல் அதிகரிக்கப் போவதாக சரத் பொன்சேகா கொடுத்த வாக்குறுதியை நம்பவில்லை. அதனால் அஞ்சல் மூல வாக்குகளில் 68 விழுக்காடு மகிந்த இராசபக்சேக்கு விழுந்தன.

வட – கிழக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, அம்பாரை ( டிகமுகல்ல) மட்டக்களப்பு என அய்ந்து தேர்தல் மாவட்டங்கள். இருக்கின்றன. இந்த அய்ந்து மாவட்டங்களிலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருக்கிறார். அத்தோடு மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் நுவரேலியா மாவட்டத்திலும் சரத் பொன்சேகா வெற்றிவாகை சூடியிருக்கிறா. சரத் பொன்சேகா மற்றும் மகிந்த இராசபக்சே இருவருக்கும் இந்த மாவட்டங்களில் கிடைத்த வாக்குகள் பின்வருமாறு.



சிறிலங்கா ஆட்சித் தலைவர் தேர்தல்2005-2010

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

நொவெம்பர் 17 2005

 

        சனவரி 26 2010
வேட்பாளர் மகிந்த இராசபக்சே  இரணில்

விக்கிரமசிங்கி

மகிந்த இராசபக்சே  சரத் பொன்சேகா;
கட்சி அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி அய்க்கிய தேசியக் கட்சி அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொது வேட்பாளர் 
சொந்த மாவட்டம் njd; khfhzk; Nky; khfhzk; njd; khfhzk; njd; khfhzk
Pகிடைத்த வாக்குகள் ; 4>887>152 4>706>366 5>972>882  

4>147>638

Pவிழுக்காடு 50.29 48.43 57.85  

40.17

 

 

மேலதிக வாக்குகள்; 180>796 1>842>749


தமிழ்மக்கள் போலவே முஸ்லிம்கள் சரத் பொன்சேகாவுக்கே தமது ஆதரவை வழங்கியுள்ளனர். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட சம்மாந்துறையில் சரத் பொன்சேகாவுக்கு 55.9 விழுக்காடும் இராசபக்சேக்கு 44.42 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன. அதே போல் பொத்துவில் தேர்தல் தொகுதியில் சரத் பொன்சேகாவுக்கு 59.89 விழுக்காடும் மகிந்த இராசபக்சேக்கு 37.4 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன. திருகோணமலை மாவட்டம் மூதூர் தொகுதியில் சரத் பொன்சேகா 59 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். இராசபக்சேக்கு 38 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன..

போர் வெற்றிக்குப் பின்னர் இலங்கைத் தீவில் இன அடிப்படையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்பது கிடையாது எல்லோரும் ஸ்ரீலங்கா குடிமக்களே என்று சிங்கள – பவுத்த வெறியரான மகிந்த இராசபக்சே சொன்னதைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இரசிக்கவில்லை என்பதே அவரது படுதோல்விக்குக் காரணமாகும்.

 

Summary of the 26 January 2010 Sri Lankan presidential election results

 

Candidate Party Votes %
Mahinda Rajapaksa United People's Freedom Alliance 6,015,934 57.88%
Sarath Fonseka New Democratic Front 4,173,185 40.15%
Mohomad Cassim Mohomad Ismail Democratic United National Front 39,226 0.38%
Achala Ashoka Suraweera Jathika Sangwardhena Peramuna 26,266 0.25%
Channa Janaka Sugathsiri Gamage United Democratic Front 23,290 0.22%
W.V. Mahiman Ranjith Independent 18,747 0.18%
Panagoda Don Prince Soloman Anura Liyanage Sri Lanka Labour Party 14,220 0.14%
Sarath Manamendra Nawa Sihala Urumaya 9,684 0.09%
M.K. Sivajilingam Independent 9,662 0.09%
Ukkubanda Wijekoon Independent 9,381 0.09%
Lal Perera Our National Front 9,353 0.09%
Siritunga Jayasuriya United Socialist Party 8,352 0.08%
Vickramabahu Karunaratna Left Front 7,055 0.07%
Idroos Mohomad Ilyas Independent 6,131 0.06%
Wije Dias Socialist Equality Party 4,195 0.04%
Sanath Pinnaduwa National Alliance 3,523 0.03%
Mohamed Musthaffa Independent 3,134 0.03%
Battaramulle Seelarathana Thero Jana Setha Peramuna 2,770 0.03%
Senaratna de Silva Patriotic National Front 2,620 0.03%
Aruna de Zoyza Ruhunu Janatha Party 2,618 0.03%
Upali Sarath Kongahage United National Alternative Front 2,260 0.02%
Muthu Bandara Theminimulla Okkoma Vesiyo – Okkoma Rajavaru Sanvidhanaya 2,007 0.02%
Total 10,393,613  
Registered Voters 14,088,500  
Total Votes cast 10,495,451 (74.50%)
Invalid Votes 101,838
Valid Votes cast


பதவி, பட்டம், மிதிவண்டி, கழிவறை போன்றவற்றுக்கு சிங்கள – பவுத்த வெறியரான மகிந்தா இராசபக்சேக்கு தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தும் கூட்டி வைத்தும் மொத்தமாகவும் சில்லறையாவும் விற்று வயிறு வளர்க்கும் டக்லஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், கருணா, பிள்ளையான் போன்றோருக்கு தமிழ்மக்கள் செம பாடம் புகட்டியுள்ளார்கள். இந்தக் காக்கைவன்னியர்கள் முகத்தில் கரிபூசிக் காறித் துப்பியுள்ளார்கள்.

தனது துரோகத்தை மூடி மறைக்க யாழ்ப்பாண மக்கள் வரலாற்றுத் தவறு செய்து விட்டார்கள் என்று பிபிசி தமிழோசைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்து டக்லஸ் தேவானந்தா அழுது புலம்பியுள்ளார்.

இலங்கை முழவதிலும் மகிந்த இராசபக்சே 16 தேர்தல் மாவட்டங்களிலும் சரத் பொன்சேகா 6 தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். சென்ற தேர்தலில் மகிந்த இராசபக்சே, இரணில் விக்கிரமசிங்கி இருவரும் தலா 11 தேர்தல் மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார்கள்.

சரத் பொன்சேகா தனது சொந்தத் தொகுதியான அம்பலாங்கொடையில் படு தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு 19,191 வாக்குகளும் ளே (35.98 விழுக்காடு) மகிந்த இராசபக்சேக்கு 33,488 (62.79 விழுக்காடு) வாக்குகளும் கிடைத்தன.

நுவரேலியா தேர்தல் தொகுதியில் பொன்சேகா 30,000 அதிகப்படியான வாக்குகளால் கைப்பற்றியது ஆறுமுகம் தொண்டமானின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு விழுந்த செம அடியாகவே பார்க்க வேண்டும். மத்திய மாகாணத்தை கடந்த தேர்தலில் இரணில் விக்கிரமசிங்கி 250,000 அதிகப்படியான வாக்குகளால் வென்றிருந்தார்.

இதேபோல் மங்கள சமரவீர (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – மகாஜன) தனது சொந்தத் தொகுதியான மாத்தறையில் (27,102 – 43.97 விழுக்காடு) மகிந்த இராபச்சேயிடம் ( 33,945 – 55.07 விழுக்காடு) தோல்வி அடைந்தார்.

மகிந்த இராசபக்சேயின் வெற்றியின் இரகசியம் அவரிடம் இருந்த போர் வெற்றி என்ற துரப்புச் சீட்டுத்தான். அந்த ஒற்றைத் துருப்பை வைத்துக் கொண்டே அவர் சிங்கள - பவுத்த மக்களது வாக்குகளை அள்ளிக் கொண்டார்.

தமிழ்மக்கள் மீது சிங்கள – பவத்த மக்கள் கொண்டுள்ள வெறுப்புக்காரணமாகவே மகிந்த இராசபக்சேயின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், குடும்ப ஆட்சி, 109 அமைச்சர்களைக் கொண்ட யானையளவு அமைச்சரவை, வீண்விரயம், ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக சுதந்திர மலினம், மனிதவுரிமை மீறல்கள், அடக்குமறை, ஆணவம், காடைத்தனம், விலைவாசி போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை!

மேலும் ஆறு ஆண்டுகளுக்கு மகிந்த இராசபக்சே என்ற சிங்கள – பவுத்த வெறியரது கைகளில் சிக்கியுள்ள தமிழினத்தின் எதிர்காலம் என்ன?

முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மகிந்த இராசபக்சே வட – கிழக்கில் தனது பிடியை மேலும் இறுக்கும் திருப்பணியில் இறங்குவார். இவ்வளவு காலமும் வட – கிழக்கை சிங்கள மயப்படுத்தவும் இராணுவ மயப்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அப்பால் இப்போது பவுத்த மயப்படுத்தவும் மகிந்த இராசபக்சே தயாராகிவிட்டார்.

ஏ9 பாதையில் 13 சின்னதும் பெரியதுமான பவுத்த விகாரைகள், நினைவு தூபிகள் தமிழ்மக்களுக்குச் சொந்தமான மண்ணில் எழுப்பப்பட்டுள்ளன. இனி அரசமரம் இருக்கும் இடம் எல்லாம் புத்தர் கொலு இருக்கப் போகிறார்.

இந்தத் தேர்தலில் மகிந்த இராசபக்சே வெற்றி பெறுவதையே இந்தியா விரும்பியது. மாறாக மேற்குலக நாடுகள் இரணில் விக்கிரமசிங்கி ஆதரித்த சரத் பொன்சேகா வெற்றி பெறுவதையே விரும்பின. ஆனால் மேற்குலக நாடுகளும் நலன்கள் என்று வரும்போது தங்களது சொந்த வணிக - பூகோள அரசியல் நலன்களையே பாதுகாத்துக் கொள்ளவே விரும்பும் என்பதில் அய்யம் இல்லை. ஏற்கனவே போர்க்குற்றங்கள, மனிதவுரிமை மீறல்கள் பற்றிச் சலசலத்த அமெரிக்கா இப்போது இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அவற்றை அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளது.

மகிந்த இராசபக்சேயின் காட்டாட்சியில் தமிழ்த் தேசியத்தக்கும் சிங்கள – பவுத்த தேசியத்துக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடையப் போகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

தங்களது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நெஞ்சில் வலியோடு ஏதிலிகளாக வாழும் எமது மக்கள் அவர்களது சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தப் படவேண்டும். சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும் போராளிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

தாயகத்தில் உள்ள தமிழ்மக்களது அரசியல் தலைமையை – தமிழர் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தி – எமது விடுதலையை வென்றெடுக்கப் புலமபெயர் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும். தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள தமிழீழ தனியரசை மீள்கட்டியெழுப்பி மீள் உருவாக்கம் செய்யும் வரை நாம் ஓயப்போவதில்லை.





 




தேர்தலில் சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை நிராகரித்துள்ளனர் - என்.சரவணன்


6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.

யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில் மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே மேலதிகமாக பெற்றுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார் சரத் பொன்சேகா 69 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த தொல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய 3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நவரெலிய மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார். கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும் மகிந்த தொல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத் பொன்சேகா வென்றுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின் படி தமிழர்களின் வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள் வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான, வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின் கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.

சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம். கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில் மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5 மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும் தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணமாகவே இருந்தது.

ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில் பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை "தேசிய" அரசியல் நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின் அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும், அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.

ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.

போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின் அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.

வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல் கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


 



 

 

 

இராசபக்சேயின் கொடிய ஆட்சியை எங்கள் வாக்கு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி வீழத்துங்கள்!

 

சிறிலங்காவில் நடைபெறும் ஆட்சித்தலைவர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே எஞ்சியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தத் தேர்தல் ஒற்றைக் குதிரை ஓட்டமாக இருந்தது. இப்போது போட்டி கடுமையாக இருக்கிறது. வெற்றி தோல்வி தமிழ்மக்களது வாக்குகளில் தங்கியிருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

 

நாம் முன்னர் கூறியது போல ஆட்சிமாற்றம் தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை நாங்கள் நூறு விழுக்காடு ஆதரிக்கிறோம்.

 

மகிந்த இராசபக்சேயின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படி முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்றால் சரத் பொன்சேகாவுக்கு அளிப்பதன் மூலமே அது சாத்தியமாகும்.

 

முன் எப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தங்களுக்குள் மோதிக் கொண்டுள்ளது. இதனை நாம் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான ஆயுதம் எம்மிடம் உள்ள வாக்குச் சீட்டாகும்.

 

இந்தத் தேர்தல் சிங்கள தேசத்தில் நடைபெறும் தேர்தல்.  யார் ஆட்சிக்கு வரவேண்டும் என சிங்களவாகள் முடிவு செய்யட்டும் என்று ஒதுங்கியிருக்க முடியாது. தேர்தலில் வெற்றி பெற்று வருகிற ஆட்சித்தலைவரின் அதிகாரம் வவுனியாவுக்கு இப்பால் நின்றுவிடாது. திருகோணமலை மட்டக்களப்பு எல்லைகளோடும் நின்று விடாது. எனவே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்வது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. அது போலவே சிவாஜிலிங்கத்தின் தனி ஆர்வத்தனத்துக்கும் இடம் இல்லை. அவருக்குப் போடுகிற ஒவ்வொது வாக்கும் மகிந்த இராபக்சே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவே உதவும்.

 

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள - பவுத்த வெறியரான மகிந்த இராசபக்சே ஆட்சியில் தமிழ்மக்கள் வரலாறு காணாத உயிரழிவையும் உடைமை அழிவையும் சந்தித்துள்ளார்கள். போரின் இறுதிக் காலத்தில் குண்டடி பட்டும் செல்லடி பட்டும் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள். போர் விதிகளை மீறி நச்சு வாயுக் குண்டுகள் வீசப்பட்டன. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.  மருத்துவமனைகள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன.

 

 உலக மக்களின் கண்களைக் குருடாக்கி, காதுகளை செவிடாக்கி 2007 - 2009 மே மாதம் 19 ஆம் நாள் வரையிலும் 50,000 க்கும் மேலான மக்களை சிங்கள அரசு குருதி வெள்ளத்தில் கொன்று குவித்தது.

 

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற இரும்புத்திரைக்குப் பின்னால் தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த பகுதிகளுக்கும் அவர்களை அடைத்து வைக்கப்பட்டுள்ள சித்திரவதை முகாம்களுக்கும் உள்ளுர் - வெளியூர்  செய்தியாளர்கள் செல்வதற்கு  சிங்கள அரசு தடை விதித்துள்ளது.

 

மகிந்த இராசபக்சே குடியரசுத் தலைவராக இல்லாமல் வெறிபிடித்த கொடிய அரசின் தலைவராக ஆணவத்தோடு வலம் வருகிறார்.   ஏன் என்றால் சிறைவாசம்,   இம் என்றால் வனவாசம் என்பதே சட்டமாக இருக்கிறது. .

 

வதை முகாம்கள்

 

மகிந்த இராசபச்சே அரசு உயிருக்கு அஞ்சி தஞ்சம் அடைந்த  3 இலட்சத்திற்கும் மேலான தமிழ்மக்களைச்  சிறைப்பிடித்து கொலைவதை முகாம்களில் அடைத்து வைத்தது.

 

இன்று கூட 135,000 - 150,000 ஆயிரம் அளவிலான எமது உறவுகள்  வதை முகாம்களில் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். முகாம்களில் இருந்து மீள் குடியமர்த்துகிறோம் என்று கூட்டிச் சென்றவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். கூரைக்கு அய்ந்து தகரங்களும் ரூபா 25,000 மட்டும் கொடுக்ப்பட்டுள்ளன. சட்டத்துக்கு முரணாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்த ஏழை மக்களைப் பார்க்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிந்த இராசபச்சே அரசு அனுமதி மறுத்துள்ளது.

 

ஊடகவியலாளர்கள் கொலை

 

சிங்கள அரசின் தமிழின அழித்தொழிப்புக்கு (Genocide) கொலைவெறிக்கு 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களில் சிங்கள செய்தியாளர்கள் மூவரும், முஸ்லிம் செய்தியாளர் ஒருவரும் அடங்குவர்.  பிபிசி செய்தியாளர்கள் தருமரத்தினம் சிவராம் (தராக்கி)  மட்டக்களப்பு ஜி. நடேசன், ‘சன்டே லீடர்’ இதழின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா, ‘உதயம்’ இதழின் செய்தியாளர் செல்வராசா இரவிவர்மன், ‘ஈழநாடு’ நாளிதழின் ஆசிரியர் சின்னத் தம்பி சிவமகராசன், ‘யாழ் தினக்குரல்’ ஆசிரியர் சுப்ரமணியம் இராமச்சந்திரன  போன்றவர்களின் பட்டியல் தொடர்கிறது. 29 செய்தியாளர்கள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள்.

 

‘அவுட்ரீச்’ இதழின் ஆசிரியர் ஜெயப் பிரகாஷ் சிற்றம்பலம் திசநாயகம் அமைதிக்காலத்தில் அரசைக் விமர்ச்சித்து இரண்டு கட்டுரை எழுதியதற்கு ஒரு சிங்கள நீதிபதியால் 20 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  பல திசைகளில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அவர் பிணையில் விடப்பட்டுள்ளார். 'சுடரொளி'  நாளிதழின் ஆசிரியா நடேசபிள்ளை வித்தியாதரன் வெள்ளைவானில் வந்தவர்களிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். இன்னும் பலர் அரசு ஏவிய குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.

 

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை


மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம், நடராசா ரவிராஜ், கிட்டினன் சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. யோசேப் பரராசசிங்கத்தைக் கொலைக்கு கருணாவின் கையாட்களே காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. நேற்றுக்கூட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுக்கு நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.

 

திருகோணமலையில் 5 மாணவர் படுகொலை

 

திருகோணமலையில் சனவரி 02, 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 5 தமிழ்மாணவர்களது கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்களைச் சுட்டவர்கள் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை என சாட்சியங்கள் இருந்தும் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போல் ஓகஸ்ட் 4, 2006 இல் மூதூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  பட்டினிக்கு எதிரான தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17  தமிழர்கள் (ஒருவர் முஸ்லிம்) படு கொல செய்யப்பட்ட  வழக்கில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.  இந்தக் கொலையை சிங்கள இராணுவமே செய்தது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்

 

யாழ்ப்பாணப்  பல்கலைக் கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் இந்தக் கிழமை நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் இரவு நேரத்தில் பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் வீசப்பட்டிருக்கிறது. .

 

வட - கிழக்கில் சிங்களக் குடியேற்றம்

 

வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைக் குடியேற்றி அந்த மாகாணங்களில் தமிழர்களை சிறுபான்மை ஆக்கும் முயற்சியில் சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழர்களது காணிகள் வலோத்காரமாகப் பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

 

வடக்கிலும் - கிழக்கிலும் ஆளுநராகவும் அரச அதிபர்களாகவும் ஓய்வு பெற்ற சிங்கள படைத்தளபதிகளே நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல் சிங்​க​ளவர்​கள் தொழில் முனை​வர்​க​ளாக,  தொழி​லா​ளி​க​ளாக, அதி​கா​ரி​க​ளாக, அரசு ஊழி​யர்​க​ளாக, வணிகர்களாக, முதலீட்டாளர்களாக குடி​ய​மர்த்​தப்​ப​டு​கின்​ற​னர். இவர்​க​ளில் பெரும்​பா​லா​ன​வர்​க​ளுக்கு ஏதா​வது ஒரு வழி​யில் அரசு மூலமே பணம் வழங்கப்படுகிறது.

 

போருக்​குப் பிறகு பொரு​ளா​தார வளர்ச்​சிக்​கான திட்​டங்​களை மேற்​கொள்​ளும் சாக்​கில் புதிய தொழில் முக​வர்​க​ளும் தொழி​லா​ளர்​க​ளும் குடி​ய​மர்த்​தப்​ப​டு​கின்றனர்.  கிழக்கு மாகா​ணத்​தில் வெளிமாகாண சிங்​க​ளவர்களே  தொழிற்​சா​லை​க​ளில் தொழி​லா​ளர்​க​ளா​க​வும் சுற்​று​லாத் தலங்​க​ளில் ஊழி​யர்​க​ளா​க​வும் பணி​யில் சேர்க்​கப்​ப​டு​கின்​ற​னர். 

 

குச்சவெளியில் சிங்களவர்களுக்கு கோட்டல் கட்டக் காணிகள்

 

திருகோணமலையில் இருந்து 7 கிமீ தொலைவிலுள்ள  குச்சவெளி கடற்கரையோரத்தில் இருக்கும்  தமிழருக்கு சொந்த மான காணிகளை பயன்படுத்தாத காணிகள் என்ற வரையறைக்குள் உட்படுத்தி  400  - 500 வரையான காணிகளை அரசாங்கம் கைப்படுத்தி அதில் கோட்டல் கட்டுவதற்கு 50 சிங்களவர்களுக்கு சுற்றுலா அமைச்சு கொடுத்துள்ளது. இந்தக் காணப் பங்கீடு பற்றி மாகாண அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை.

 

சம்பூரில் அனல் மின் நிலையம்

 

வட - கிழக்கில் புதிய தொழிற்​சா​லை​க​ளுக்கு சிங்கள அரசு கொழும்பி​லி​ருந்​த​ப​டியே அனு​மதி வழங்குகிறது.   திருகோணமலை, சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கை இந்த வாரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இந்தியாவின் தேசிய நிலக்கரி மின் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இணைந்து இந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தை  500 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவுகின்றன.   இந்த மின் நிலையம் 500 மில்லியன் டொலர் செலவில் ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பூர் அனல் மின்நிலையம் அமையும் பகுதியானது சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கிய
10,000 ஏக்கர் வளமான நிலப்பரப்பாகும்.

 

செப்டெம்பர் 2006 இல் யுத்தத்தினால் சம்பூர் பிரதேசத்தை ஒட்டிய 30 ஊர்களில் வாழ்ந்த 1632  குடும்பங்கள் வாகரையை நோக்கி விரட்டப்பட்டதால் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு உகந்த இடமாகச் சம்பூரை சிங்கள அரசு தெரிவு செய்தது. இக்கிராமங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள்  தெருவோரங்களில் ஏதிலிகளாக வாழ்கிறார்கள்.  மூதூர் கிழக்கிலுள்ள சம்பூர், சேனையூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை, சூடைக்குடா, கூனித்தீவு, பாட்டாளிபுரம் ஆகியவை மொத்தம் 675 ச.கி.மீ (260.5 ச.மைல் பரப்பளது கொண்ட உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்புக்கும் அனல்மின் நிலைய இடத் தெரிவிற்கும் பலத்த தொடர்பு உண்டென்பது சொல்லாமதே வளங்கும். .

நேற்று வரை தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள் இந்த அனல்மின் நிலையம் வெளியே கக்கும் நிலக்கரித் துகள்களாலும் நச்சு வாயுக்களாலும் பாதிப்படைவார்கள்.

 

அரசியல் தீர்வுக்கு அரோகரா

 

பிரிக்கப்படாத ஒரு ஒருங்கிணைந்த ஒற்றையாட்சி முறையே இலங்கையில் இருக்கும். 13 + ஆவது சட்ட திருத்தத்தின் கீழேயே அதிகாரப் பரவலாக்கல் கொண்டுவரப்படும். ஆனால் காவல்துறை அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட மாட்டர்து. வட - கிழக்கு இப்போதுமட்டுமல்ல எப்போதம் இல்லை என்று திட்டவட்டமாக மகிந்தா இராசபச்சே அறிவித்துள்ளார். இதனால் மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் இணைப்பாட்சி என்றுமே பிரிக்க முடியாத வடக்கும் - கிழக்கும் என்று வாய் வீரம் பேசிய டக்லஸ தேவானந்தாவுக்கு இராசபக்சே பட்டை நாமம் போட்டுள்ளார்!

 

புத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும்

 

கிழக்கைப் போலவே வடக்கிலும் முழத்துக்கொரு புத்த விகாரையும் புத்த சிலைகளும் சிங்கள இராணுவத்தால் நிறுவப்பட்டு வருகின்றன. இதனால் தமிழர்களின் பண்பாடுகள் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்றன என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் கண்டித்துள்ளார்.   யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 50,000 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள்

 

அவசரகாலச் சட்ட விதிகள்

 

போர் முடிந்த பின்னரும் அவசரகால விதிகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் பூசா தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் ஆண்டுக்கணக்காக விசாரணை எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பதினைந்து அகவையில் பிடிபட்ட ஒரு இளைஞர் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருந்த 140 தமிழ் மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த நொவெம்பர் மாதம் பேரதேனியா பல்கலைக் கழகத்தில் காணாமல் போன இராசையா துவாரகா என்ற மாணவி பூசா தடுப்பு முகாமில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

தேசியத் தலைவர் பிரபாகரனின் தாய் தந்தையர்

 

எண்பது அகவையைக் கடந்த தேசியத் தலைவர் பிரபாகரனது தாய் தந்தையர் இருவரையும் இதயமே இல்லாத மகிந்த இராசபக்சே கைது செய்து பனாகொட இராணுவ முகாமில் அடைத்து வைத்தார்.  தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை கடந்த 7 ஆம் நாள் இறந்துவிட்டார் என அரசு அறிவித்தது. அவரது சாவு இயற்கைச் சாவு என்று இராணுவம் அறிவித்தாலும் தனிமை, உளவியல் தாக்கம்,  தக்க மருத்துவம் இல்லாத காரணங்களாலேயே அவர் இறந்திருக்கிறார்.

 

இராசபக்சேயின் ஊழல் அரசு

 

மகிந்த இராபச்சேயின் அமைச்சரவையில்  51 அமைச்சர்கள், 39 அமைச்சரவை அல்லாத அமைச்சர்கள், 19 துணை  அமைச்சர்கள் மொத்தம் 109 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.  காலையில் கட்சி தாவின நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாலையில் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இது ஒரு உலக சாதனையாகும். இதேபோல் மகிந்த இராசபக்சேயின் நெருங்கிய 368 உறவினர்களுக்கு வரிப்பணத்தில்  பதவி, பட்டம் கொடுக்கப்பட்டுள்ளன.   கோத்தபாய இராசபக்சே பாதுகாப்புச் செயலாளராக இருந்தாலும் அவுர் பாதுகாப்பு அமைச்சர் போலவே நடந்து கொள்கிறார்.  பொதுப் பணத்தில் சம்பளம் பெறும் அவா தேர்தல் பரப்புரையில் தாராளமாக ஈடுபடுகிறார். 

 

அனைத்து இனத்தவருக்கும் நீதி வழங்குவோம்,  மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவோம், நிறைவேற்று அதிகாரம் படைத்த ஆட்சித்தலைவர் பதவியை ஒழிப்போம்,  ஊழலற்ற நல்லாட்சி வழங்குவோம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறிப் பதவிக்கு வந்த இராசபக்சே இவற்றில்  ஒன்றைக்கூடச் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள்  சாடுகின்றன்.

 

எனவே தமிழ்மக்களுக்கு மகிந்த இராசபச்சேயின் கணக்கைத் தீர்க்க ஆட்சித்தலைவர் தேர்தல் அரிய வாய்ப்பை அளித்துள்ளது.  வைரத்தை வைரத்தால் வெட்டுவது போல அழித்தவனை வைத்தே அழிக்கச் செய்தவனை அழிப்பதற்கான உத்தியாகவே இந்தத் தேர்தலை நாம்  பயன்படுத்த வேண்டும்.

 

இனப்பேரழிவை நிகழ்த்தியவனுக்கு சொத்துகளை சூறையாடியவனுக்கு இனத்தை பிளவுபடுத்தி பிரித்தாள நினைப்பவனுக்கு தமிழினத்தின் பொது எதிரியை காலத்தின்  கட்டாயம் கருதி  தோற்கடித்து தமிழ்மக்கள்  வரலாற்றுக் கடமையை  நிறைவேற்ற வேண்டும். .

தேர்தலை புறக்கணித்து தம்மை அழிக்கச் சொன்னவனை நிரந்தரமாக தம்மை அடிமைப்படுத்த அனுமதிப்பதை விடவும் கிடைத்துள்ள வாய்ப்பை சாணக்கியத்தோடும் மதிநுட்பத்தோடும் சரியாகப்  பயன்படுத்தி தம்மை அடிமைப்படுத்த நினைத்தவனை அழிக்கும் புது வியூகம் இது.

 

எதிர்வரும் சனவரி 26 ஆம் நாள் அன்று ஒரு சர்வாதிகார ஆட்சியை,  ஊழல் ஆட்சியை, கொடுங்கோல் ஆட்சியை,  குடும்ப ஆட்சியை, வெள்ளை வான் கலாச்சார ஆட்சியை, தமிழர்களைக் கொன்றொழித்து அவர்களது குருதி குடித்து வெடிகொளுத்திக் கொண்டாடிய  கொடிய ஆட்சியை உங்கள் கையில் இருக்கும் வாக்கு என்ற ஆயுதத்தைப் துணிச்சலோடு பயன்படுத்தி தமிழ் மக்கள் வீழ்த்த வேண்டும் என அன்போடு மீண்டும்  கேட்டுக்கொள்கிறோம்.  

 

The government`s record of investigating allegations of war crimes by both government forces and the Tamil Tigers during the final months of the conflict has been no better. Human Rights Watch and others reported the Sri Lankan army`s repeated indiscriminate shelling of civilians, including packed hospitals, and the blocking of humanitarian assistance to the trapped and desperate population in the war zone. One reason the government locked nearly 300,000 civilians fleeing the fighting in closed camps apparently was to keep their stories from coming out.

 

சிங்கள அரசின் தமிழின அழித்தொழிப்பு (Genocide) கொலைவெறிக்கு 34 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். (இவர்களில் சிங்கள செய்தியாளர்கள் மூவரும், முஸ்லிம் செய்தியாளர் ஒருவரும் ஆவார்.)

 

பல செய்தியாளர்கள், சிங்கள அரசால் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்கள் உயிருடன் உள்ளார்களா? என்பது தெரிய வில்லை.

 

எண்ணற்ற செய்தியாளர்கள், சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளில் தலை மறைவாகி உள்ளார்கள்.

 

சிங்கள அரசால் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட ‘சன்டே லீடர்’ இதழின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா, ‘உதயம்’ இதழின் செய்தியாளர் செல்வராசா ரவிவர்மன், ‘ஈழநாடு’ நாளிதழின் ஆசிரி யர் சின்னத் தம்பி, சிவமகராசன், ‘யாழ் தினக்குரல்’ ஆசிரியர் சுப்ரமணியம் இராமச்சந்திரன், பி.பி.சி. வானொலியின் தமிழ்ச் சேவைப் பிரிவு செய்தியாளர் தர்மரத்தினம் சிவராமன் போன்றவர்களின் பட்டியல் தொடர்கிறது.

 

குற்றச்சாட்டும், விசாரணையுமின்றி எண்ணற்ற செய்தியாளர்களை சிங்கள அரசு, கொடுஞ்சிறையில் அடைத்துள்ளது. ‘சுடர் ஒளி’ இதழின் ஆசிரியர் வித்யா தரன் அவர்கள், வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டார். உலகச் செய்தியாளர்களின் எதிர்ப்பு காரணமாக சிறைப்படுத்தப்பட் டுள்ளதாக பின்னாளில் சிங்கள அரசு ஒப்புக் கொண்டது. ‘அவுட்ரீச்’ இதழின் ஆசிரியரும், ‘சன்டே லீடர்’ இதழைப் போல் புகழ்பெற்ற ‘சன்டே டைம்ஸ்’ இதழின் செய்தியாளருமான திரு.ஜெயப் பிரகாஷ் சிற்றம்பல திசநாயகம் அவர் களுக்கு 20 ஆண்டு கொடுஞ்சிறை தண்டனை அளித்து சிங்கள அரசு வாட்டி வதைக்கிறது.

 

போர்என்றபெயரால் ஓராண்டு காலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களை சிங்கள அரசு கொன்று குவித்த கால கட்டத்திலும், தமிழின அழித் தொழிப்பு (Genocide) நடத்தப் பட்ட இடத்திலும், மூன்றரை லட்சம் தமிழ் மக்களை கொலை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கிற பகுதிகளிலும், உள்ளூர் செய்தியாளர்களையும், உலகச் செய்தியாளர்களையும், சிங்களக் கொலைவெறி அரசு இன்று வரை அனுமதிக்கவில்லை.

 

2007ஆம் ஆண்டில் சிங்கள அரசால் தீவிரப்படுத்தப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைக்க, போர் என்ற பெயரால் ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தப் பகுதிகளில் இரும்புத்திரை விரித்து, செய்தி யாளர்களுக்கு சிங்கள அரசு தடை விதித்தது.

 

இதன் காரணமாக, உலக மக்களின் கண்களை குருடாக்கி, காதுகளை செவிடாக்கி, 2008ஆம் ஆண்டின் இறுதியிலும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் வரையிலும் ஒரு லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களை கேட்ப தற்கே நாதியில்லாமல் சிங்கள அரசு குருதி வெள்ளத்தில் கொன் றழித்தது. உயிருக்கு அஞ்சி சின்னா பின்னமாகச் சிதறிய மூன்று லட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழ் மக்களை சிறைப்பிடித்து, கொலை வதை முகாம்களில் நடைபிணங்களாக கிடத்தி வைத்துள்ளது. இவர்களுக்கு சொந்த நாட்டில் கல்லறைகூட இல்லை. இறுதி அடக்கம் செய்து கொள்வதற்கும் வழி இல்லை.

 

உள்ளூர் செய்தியாளர்களை பச்சைப் படுகொலை செய்யும் சிங்கள அரசு, உலகச் செய்தியாளர் களை விரட்டி அடிப்பதுடன் நிற்காமல், தமிழினப் படுகொலைக்கு உடந்தையான செய்தியாளர்களை கைக்கூலிகளாக்கிக் கொண்டு, உலக மகா கொலைவெறியன் கோயபல்சை மிஞ்சும் வகையில் பொய்யை பரப்புகிறது.

 

காற்று நுழைய முடியாத இடத்திலும், ஊடுருவி, உண்மையை உலகக் கண்களுக்கு பறைசாற்றும் ஊடகச் செய்தியாளர்களை அனுமதித்தால், கடந்த ஓராண்டில் மட்டும் கொன்று குவிக்கப்பட்ட லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களின் பிண வாடையும், முகாம்கள் என்ற பெயரால் தொடர்ந்து கொண்டிருக்கும், சிங்கள அரசின் கொடூரக் கொலைகளும், சித்ரவதைகளும் உலகுக்கு வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பதாலேயே சிங்கள அரசு, செய்தி யாளர்களுக்கு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி உண்மை களை எழுதும் செய்தியாளர்களை பச்சைப் படுகொலை செய்து வருகிறது.
 

இவ்வளவுக்குப் பிறகும் அஞ்சாத உலகச் செய்தியாளர்கள் சிலர், சிங்களக் கொலை வெறி அரசின் தமிழின அழித் தொழிப்பு படுகொலையை உலகுக்கு பறைசாற்றி வருகிறார்கள்.

 

இதன் பின்னணியில் தமிழகச் செய்தியாளர் கு.முத்துக்கும ரன் அவர்கள் தீக்குளித்து தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சிங்கள அரசின் தமிழின அழித் தொழிப்பு படுகொலையின் பின்னணியில் தொடரும் செய்தியாளர்கள் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் இனப்படுகொலைக்கு எதிராக தமிழ் ஊடகச் செய்தி யாளர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, தமிழ் ஊடகச் செய்தி யாளர்களின் வரலாற்றுக் கடமையுமாகும்.

 

ஆகவேதான் தமிழ் ஊடக செய்தியாளர்கள் சங்கம், ஊடகச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாட்டை ஒருங்கிணைக்கிறது.

 

ஊடகச் செய்தியாளர்களே உயிர்த்தெழுவோம்! இனப் படுகொலையும், ஊடகச் செய்தியாளர்கள் படுகொலையும் எங்கெங்கு நிகழ்ந்தாலும், அங்கெல்லாம் முன்னின்று உயிர்ம நேயத்தைக் காப்போம். ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்கிற தமிழர்களின் உயிர்மநேயப் பண்பாட்டை பறை சாற்றுவோம்.

 

 

செ.எழில் அரசு

 


 

 

Stating that major opposition political parties including UNP and Janatha Vimukthi Peramuna (JVP) came on a common platform for the first time in Sri Lanka to restore democracy, he said "he (Fonseka) and his supporting parties will also ensure setting up of an independent Election Commission, independent Police Commission and also an independent Public Service Commission in Sri Lanka", he added.

 

Jayawardana said his party supported to choose a common candidate in order to protect the 'fundamental rights' of the Sri Lankan people and also to protect the rights of the Lankan media.

 

Jayawardana also alleged that the present Rajapaksa government failed on all fronts including to control the law and order problem, price rise and unemployment problem.

 

On the condition of Tamils displaced by war, he alleged that the refugee camps in Lanka were built illegally and people lodged there were not getting proper food and medicine.

TRC directive, the Treasury has lost approximately Rs. 22.5 million in taxes.

 

யாரைப் பார்த்தாலும் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயரைத்தான் பார்த்துப் பேசுகிறார்கள். தமிழ்மக்களில் கத்தோலிக்கரது விழுக்காடு 10 விழுக்காட்டுக்கும் குறைவானதே. எஞ்சியவர்களின் முஸ்லிம்கள் 5 விழுக்காடு இந்துக்கள் 85 விழக்காடு. ஆனால் இந்து மடாதிபதி நல்லூர் ஆதீனத்தை யாரும் சென்று பார்ப்பதில்லை. அவருக்கும் அரசியலில் அக்கறை இல்லை. இந்த உலகத்தைப்பற்றி அக்கறை இல்லை. சித்தம் சிவன்பால் என்று இருக்கிறார். இதனால்தான் இந்து மதம் தேய்ந்து வருகிறது. இந்துக்கள் என்று சொல்பவர்கள் இது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நால்வருக்குக் கொலை மிரட்டல்!

 



யாழ் பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேருக்கு கொலை மிரட்டல்

 

நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் யாழ் பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் வீசப்பட்டிருந்ததாக பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நால்வரும் கடந்த காலங்களில் பொங்குதமிழ் நிகழ்வுகளில் முன்னின்று செயற்பட்டவர்கள் என்றும் கடந்த இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிச் சென்றிருந்த இவர்கள் மீண்டும் யாழ்பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இவர்கள் கடந்த காலங்களை போன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்றும். அவர்களது செயற்பாடுகள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யுத்தம் முடிந்து விட்டாலும் தமது துப்பாக்கிக் குழல்கள் இன்னமும் ஓயவில்லை என்றும் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தத் துண்டுப் பிரசுரத்தின் கீழ் நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பில் பெயர் பொறிக்கப்பட்டள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நாட்டைக்காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு கடந்த காலத்தில் யாழ் குடாநாட்டில் பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததும் அந்த அமைப்பினால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொது மக்களும் மாணவர்களும் பின்னர் இராணுவப் புலனாய்வுத்துறை மற்றும் ஈபிடிபி யினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடை பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.
 

எண்​ணிக்கை குறைந்​தும் சிங்​க​ளர் எண்​ணிக்கை அதி​க​ரித்​தும் வரு​கி​றது.​

 

​ சிங்​க​ளர்​கள் தொழில் முனை​வர்​க​ளாக,​​ தொழி​லா​ளி​க​ளாக,​​ அதி​கா​ரி​க​ளாக,​​ அரசு ஊழி​யர்​க​ளாக,​​ வியா​பா​ரி​க​ளாக,​​ புது​வாழ்வு பெறக் குடி​யே​று​ப​வர்​க​ளாக குடி​ய​மர்த்​தப்​ப​டு​கின்​ற​னர்.​ இவர்​க​ளில் பெரும்​பா​லா​ன​வர்​க​ளுக்கு ஏதா​வது ஒரு வழி​யில் அரசு மூலமே பணம் விநி​யோ​கிக்​கப்​ப​டு​கி​றது.​ எனவே புதிய இட​மா​யிற்றே என்று அவர்​கள் குடி​யே​றத் தயக்​கமே காட்​டு​வ​தில்லை.​ தமி​ழர்​கள் நிலைமை அப்​ப​டி​யில்லை.​

 

போருக்​குப் பிறகு பொரு​ளா​தார வளர்ச்​சிக்​கான திட்​டங்​களை மேற்​கொள்​ளும் சாக்​கில் புதிய தொழில் முக​வர்​க​ளும் தொழி​லா​ளர்​க​ளும் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வ​தாக தமிழ் தேசிய கூட்​ட​ணி​யைச் சேர்ந்த நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் துரை​ரத்ன சிங்​கம் தெரி​விக்​கி​றார்.​

 

கிழக்கு மாகா​ணத்​தைச் சேராத சிங்​க​ளர்​களே தொழிற்​சா​லை​க​ளில் தொழி​லா​ளர்​க​ளா​க​வும் சுற்​று​லாத் தலங்​க​ளில் ஊழி​யர்​க​ளா​க​வும் பணி​யில் சேர்க்​கப்​ப​டு​கின்​ற​னர் என்று கிழக்கு மாகாண நிர்​வா​கத்​தில் உள்ள,​​ பெயர் குறிப்​பிட விரும்​பாத அரசு அதி​காரி தெரி​விக்​கி​றார்.​

 

புதிய தொழிற்​சா​லை​க​ளுக்கு மத்​திய அரசு கொழும்பி​லி​ருந்​த​ப​டியே அனு​மதி தரு​கி​றது,​​ இதர நிர்​வாக நடை​மு​றை​க​ளுக்கு உள்​ளாட்சி மன்​றங்​கள் அச்​சம் கார​ண​மா​கவே ஒப்​பு​தல் தந்​து​வி​டு​கின்​றன என்​கி​றார் துரை ரத்​ன​சிங்​கம்.​

 

அதி​பர் தேர்​தலை தமிழ் தேசிய கூட்​டணி புறக்​க​ணிக்​க​வில்லை.​ கிழக்​குப் பகு​தியி​லி​ருந்து தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட அனைத்து நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளுமே இந்​தக் கூட்​ட​ணி​யைச் சேர்ந்​த​வர்​கள்​தான் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

 

இப்​போ​துள்ள அர​சி​யல் கட்​ட​மைப்​புக்​குள்​தான் செயல்​பட வேண்​டி​யி​ருக்​கி​றது.​ தேர்​த​லைப் புறக்​க​ணிப்​ப​தால் எந்​தப் பல​னும் ஏற்​ப​டப்​போ​வ​தில்லை.​ இரு வேட்​பா​ளர்​க​ளில் பொன்​சே​காவை ஆத​ரிக்​கி​றோம்;​ ""தமி​ழர்​க​ளின் கோரிக்​கை​க​ளைக் கவ​னிக்​கி​றேன்'' என்​றா​வது அவர் வாக்​கு​றுதி அளித்​தி​ருக்​கி​றார் என்​கி​றார் துரை ரத்​ன​சிங்​கம்.​

 

​தேர்த​லில் பங்​கேற்​க​லாம்,​​ பொன் சேகாவை ஆத​ரிக்​க​லாம் என்ற தமி​ழர் விடு​தலை கூட்​டணி முடிவை வாக்​கா​ளர்​க​ளில் பெரும்​பா​லா​ன​வர்​கள் ஏற்​க​வில்லை.​

 

தமி​ழர்​கள் யாருக்கு வாக்​க​ளிக்க வேண்​டும் என்று கூறும் உரி​மையே இந்​தக் கூட்​ட​ணிக்​குக் கிடை​யாது;​ போரி​னால் பாதிக்​கப்​பட்ட தமி​ழர்​கள் துய​ரில் ஆழ்ந்​து​கி​டந்​த​போது அவர்​க​ளு​டைய மறு​வாழ்​வுக்​கென கூட்​டணி எம்.பி.க்கள் எதை​யும் செய்​ய​வில்லை,​​ அக​தி​க​ளாக நாங்​கள் அடைக்​கப்​பட்​டி​ருந்த முகாம்​க​ளுக்​குக் கூட வர​வில்லை என்​கி​றார் தனி​யார் நிறு​வ​னம் ஒன்​றில் மேலா​ள​ரா​கப் பணி புரி​யும் கோணேஸ்​வ​ரன்.

 

கோணேஸ்​வ​ர​னின் உற​வி​னர்​கள் முத்​தூர் என்ற ஊரைச் சேர்ந்​த​வர்​கள்.​ போருக்​குப்​பி​றகு இலங்கை அரசு அவர்​களை அந்த ஊரில் மீண்​டும் குடி​யேற அனு​ம​திக்​க​வில்லை.​ அதே நிலை​மை​தான் சம்​பூ​ரைச் சேர்ந்​த​வர்​க​ளுக்​கும்.​ அவர்​கள் தங்​க​ளு​டைய ஊருக்கு இனி திரும்ப முடி​யாது என்ற முடி​வுக்கு வந்​து​விட்​ட​னர்.​ அந்​தப் பகுதி மிகுந்த உயர் பாது​காப்பு தேவைப்​ப​டும் ராணு​வப் பகு​தி​யாக 2007-ல் அறி​விக்​கப்​பட்​டு​விட்​டது.

 

எங்​க​ளு​டைய தொகு​தி​க​ளில் உள்ள தமிழ் அக​தி​கள் முகாம்​க​ளுக்​குக்​கூட நாங்​கள் செல்​லக்​கூ​டாது என்று அதி​பர் மகிந்த ராபட்ச தடுத்​து​விட்​டார். இந்த நிலை​யில் தமி​ழர்​கள் எங்​க​ளைக் குறை கூறு​வ​தில் அர்த்​தமே இல்லை என்று வருத்​தப்​பட்​டார் துரை ரத்​ன​சிங்​கம்.

 

திரி​கோ​ண​ம​லை​யில் அற்​பு​த​மான துறை​மு​கம் இருக்​கி​றது, கடற்​படை தளம் இருக்​கி​றது. இந்​திய எண்​ணெய் நிறு​வ​னத்​தின் மிகப்​பெ​ரிய சேமிப்பு கிடங்கு இருக்​கி​றது. கிழக்​குப் பகுதி முழு​வ​தற்​குமே ரொட்டி சப்ளை செய்​யும் ஆலை இருக்​கி​றது. ஆனால் உள்​ளூர் இளை​ஞர்​க​ளுக்கு அதி​லும் குறிப்​பா​கத் தமிழ் இளை​ஞர்​க​ளுக்கு வேலையே இல்லை. அத்​தி​யா​வ​சி​யப் பண்​டங்​க​ளின் விலையோ பணக்​கா​ரர்​கள்​கூட எண்​ணிச் செல​வ​ழிக்​கும் நிலை​யில் இருக்​கி​றது.

 

திரி​கோ​ண​ம​லை​யில் உள்ள பெரும்​பா​லா​ன​வர்​கள் அரசு ஊழி​யர்​க​ளாக இருந்​தும் அரசு தரும் சம்​ப​ளத்​தில் குடித்​த​னம் நடத்த முடி​யா​மல் திண​று​கின்​ற​னர்.​ எனவே பொன்​சே​காவை ஆத​ரிக்க அவர்​கள் ஆர்​வ​மாக இருக்​கின்​ற​னர்.

 

கிரா​மப்​பு​றங்​க​ளில் சிங்​க​ளர்​க​ளின் ஆத​ரவு ராபட்​ச​வுக்​குத்​தான்.​ தம​யந்தி என்ற சிங்​க​ளப் பெண்​ணின் குடும்​பத்​தார் திரி​கோ​ண​ம​லையை விட்டு உயி​ரைக் காத்​துக்​கொள்ள 25 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் ஓடி​னர். அவர்​கள் இப்​போது போருக்​குப் பிறகு மீண்​டும் ஊர் திரும்​பி​யுள்​ள​னர். அவர்​கள் தங்​க​ளு​டைய வாக்​கு​கள் ராபட்​ச​வுக்​குத்​தான் என்​கின்​ற​னர்.

மட்டக்களப்பு,ஜன.20: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள், சிங்களர்கள்தான் அதிகம். இவ்விரு வகுப்பாருமே ராஜபட்ச அரசின் நிர்வாகத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே அதிபர் தேர்தலில் புதிய வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவையே ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

இப்​போது விடு​த​லைப் புலி​கள் இயக்​கத்தை முற்​றாக அழித்​து​விட்​ட​தால் தமி​ழர்​க​ளுக்கு என்று தனிப்​பட்ட முறை​யில் எலி வளை​கூட இல்​லா​த​ப​டிக்கு எல்லா இட​மும் சிங்​க​ளர்​க​ளின் ஆதிக்​கத்​தி​லும் கண்​கா​ணிப்​பி​லும் கொண்டு வரப்​பட்​டு​விட்​டது.​ இதற்​காக புதிய புதிய தொழில் திட்​டங்​க​ளுக்கு இலங்கை அரசு கொழும்பி​லி​ருந்தே அனு​மதி அளிக்​கி​றது.​ அதற்​குத் தேவைப்​ப​டும் நிலங்​களை அளிப்​பது,​​ திட்​டங்​க​ளுக்கு ஒப்​பு​தல் தரு​வது போன்​ற​வற்றை உள்​ளாட்சி அமைப்​பு​கள் உட​னுக்​கு​டன் செய்து முடிக்​கின்​றன.

 

 பொன்சேகா புதிய துடைப்பம், நன்றாக செயலாற்றுவார் என்று நம்புகிறோம் என்கிறார் தனியார் நிறுவன மேலாளர் யோகராஜா.

 

 ராஜபட்சவைப் போல பொன்சேகாவுக்கென்று தனி அரசியல் கட்சி ஏதும் கிடையாது; எனவே அவர் காப்பாற்ற வேண்டிய ஆதரவாளர்கள் கூட்டம் ஏதுமில்லை. எல்லா பிரச்னைகளையும் புதிய கோணத்தில் பார்த்து தீர்க்க முயற்சிப்பார் என்று நம்புகிறோம் என்றார் யோகராஜா.

 

 போரில் விடுதலைப் புலிகளை வென்ற பிறகு செய்வதாகக் கூறியவற்றில் ஒன்றைக்கூட ராஜபட்ச அரசு செய்யவில்லை என்று தமிழர்கள் பட்டியலிடுகின்றனர்.

 

 அனைத்து இனத்தவருக்கும் நீதி வழங்குவோம், மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவோம், உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் வழங்குவோம், ஊழலற்ற நல்ல ஆட்சி வழங்குவோம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறியதில் ஒன்றைக்கூடச் செய்யவில்லை என்று அவர்கள் சாடுகின்றனர்.

 

 கிழக்குப் பகுதியைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு திட்டங்களை அமல் செய்வதாக ராஜபட்ச அரசு கூறியது. சாலைகளைப் போட்டார்கள். ஆனால் அந்தப் பணியின் துணை ஒப்பந்தத்தைக்கூட தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ கொடுக்காமல் அனைத்தையும் சிங்கள ஒப்பந்ததாரர்களைக் கொண்டே செய்து முடித்தார்கள். அதில் வேலைவாய்ப்பைக்கூட அளிக்கவில்லை என்கிறார் உள்ளூர்க்காரர் ஒருவர்.

 

 மத்திய அரசு அங்கீகரித்த ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் உள்ளூர்க்காரர்கள் ஒருவரும் இல்லை, அத்துடன் சாலை போடும் பணிகளில் அவர்களில் யாருக்குமே அனுபவம் இல்லை என்று அதற்கு விளக்கம் தருகிறார் மூத்த அதிகாரி ஒருவர்.

 

 வாய்ப்பே தராவிட்டால் அனுபவம் எப்படி கிடைக்கும் என்று தமிழர்களும் முஸ்லிம்களும் கேட்கின்றனர்.

 

 மாகாண அரசிடம் பணம் இல்லை: கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையனிடம் உள்ள நிதி வசதி மாகாண அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கத்தான் போதுமானதாக இருக்கிறது; வளர்ச்சித் திட்டங்களை அதிபர் ராஜபட்சவின் சகோதரர் பாசில் ராஜபட்ச, அவருடைய பிரதிநிதி சுசாந்தபுஞ்சிநிலமே ஆகியோரின் சிறப்பு பணிக்குழு மூலம்தான் நிறைவேற்றுகின்றனர் என்று தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

 

 ராஜபட்சவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரும் தேசிய சமரசத்துக்கான அமைச்சரும் மட்டக்களப்பு பகுதிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான கர்னல் கருணாவை இலங்கை அரசு ஆதரிக்கிறது. அவர் மூலம் தங்களுடைய செல்வாக்கை வளர்த்துக்கொள்ள ராஜபட்ச விரும்புகிறார். ஆனால் அவரோ உள்ளூர் மக்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை என்கின்றனர் மக்கள்.

 

 இப்பகுதி முஸ்லிம்கள் பெரும்பாலும் வியாபாரிகள்; கணிசமானவர்கள் மோட்டார் வாகன ஓட்டிகள். கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசியால் அவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் திண்டாடுகின்றனர்.

 

 132 பேர் அமைச்சர்கள்: இலங்கையில் ராஜபட்ச தலைமையிலான அரசில் 132 பேர் அமைச்சர்கள், துணை அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்களால் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் செலவாகிறது.

 

100 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் மத்திய அரசில் 48 அமைச்சர்கள்தான் இருக்கின்றனர். 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கைக்கு 132 பேர் அமைச்சர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் பொன்சேகா. உலகிலேயே 90% ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருக்கும் ஒரே நாடு இலங்கைதான் என்றும் அவர் வேதனை பொங்க சுட்டிக்காட்டுகிறார்.

 

132 அமைச்சர்களுக்காக ஆண்டுதோறும் 400 கோடி செலவிடப்படுகிறது. 90 லட்சம் ஏழைகளுக்காக மொத்தமே 1000 கோடி ரூபாய்தான் செலவிடப்படுகிறது என்று ஒப்பிடுகிறார் பொன்சேகா.

 

 ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மீதும் 65 ரூபாய் வரியாக விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தாலே விலைவாசி வேகமாக இறங்கிவிடும் என்கிறார் பொன்சேகா.

 

கருத்துக்கள்

 

இந்திய தேர்தல் முடிவுகள் வெளி வரும் முன்பாகவே அனைவரையும் அழித்து போரை முடிவுக்கு கொண்டு வந்தான் ஒரு கொலைகாரன். அந்தோ பரிதாபம்! அந்த கொலைகாரனுக்கும் அதே தேர்தல்தான் தகுந்த பாடம் கற்பிக்கப் போகிறது. செய்த பாவம் துரத்துகிறது. பிள்ளை குட்டிகளுடன் எப்படி தமிழர்கள் ஒவ்வொரு இடமாக அலைந்தார்களோ அதே போல இந்த கொலைகாரனும் பிள்ளை குட்டிகளுடன் மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு செல்லும் காலம் வந்து விட்டது.

By நவீன் சென்னை
1/21/2010 8:13:00 AM

போன வருடம் ஜன. 26 அன்று நாம் குடியரசு தினம் கொண்டாடிய வேளையில் ஈழத்தில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். இது புலிகள் கல்மடுக்குள அணையை தகர்த்து அதிக எண்ணிக்கையில் ராணுவத்தினர் இறந்த ஆத்திரத்தில் கொலை செய்தார்கள். அதை தூங்கு மூஞ்சி பிரணாப் முகர்ஜியும் போய் பார்த்தார். அந்தோ பரிதாபம்! இந்த வருடம் ஜன. 26 அன்று ஒரு கொலைகாரன் நாட்டை விட்டு ஓடப் போகிறான். தமிழர்கள், சிங்களர்கள் இரு தரப்பிலும் அதிக பேர் செத்தார்கள். ஆனால் போரில் உண்மையில் தோற்றது யார்?

 


 

திரு. ஸரான்

 

வணக்கம். சிறிலங்கா ஆட்சித் தலைவர் தேர்தலுக்கு  இன்னும் எண்ணி 17 நாள்களே இருக்கின்றன. சரியாகவோ பிழையாகவோ (என்னைப் பொறுத்தளவில மிகச் சரியாக) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த இராசபக்சே மீண்டும் ஆட்சித்தலைவராக வருவதற்கு எதிராக முடிவு எடுத்துள்ளது.  அதன் மறுபக்கமாக சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

 

மகிந்த இராசபச்சே மீண்டும் பதவிக்கு வந்தால் வடக்கு இராணுவ மயப்படுத்துவதற்கும் வடக்கும் - கிழக்கும் சிங்கள மயப்படுவதற்கும்  நிறைய வாய்ப்புண்டு. ஏற்கனவே ஆங்காங்கு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது.

 

நேற்றைய கனடிய தமிழ் வானொலி அரசியல் களத்தில் ஆட்சித் தலைவர் தேர்தல்  பற்றி மேலோட்டமாகவே பேசப்பட்டது. விரிவாகப் பேசப்படவில்லை. இந்த இருட்டடிப்பு  திட்டமிடப்பட்டுச் செய்ததாகவே நான் நினைக்கிறேன்.

 

இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நினைக்கிறேன். அதனை  உறுதிப்படுத்த புலம் பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளை அழைத்து சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு கேட்க வேண்டும்.

 

கடந்த யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளுர் ஆட்சித் தேர்தலில் மக்கள் த.கே.கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பரப்புரையை  வெற்றிகரமாக சிரிஆர் மற்றும் ரிவியை செய்தது.

நாங்கள் 17 இலட்ச ரூபாயை திரட்டிக் கொடுத்தோம்.

 

அதை விட வீச்சோடு இந்தத் தேர்தலில்  சிரிஆர் மற்றும் ரிவியை பரப்புரை செய்ய வேண்டும். வரலாறு எங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அதனைப் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும்.

 

இதற்கான ஓழுங்கைச் செய்ய முடியுமா? நன்றி.

 

மிக்க அன்புடன்

 

நக்கீரன்

 


இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல்

1) இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என எடுத்துள்ள முடிவு பற்றியும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை வேடம் பற்றியும் எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது.

நான் முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு பகிரங்க மடல் எழுதியிருந்தேன். அதை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். தவிர்க்க முடியாத காரணத்தினால் அடிக்கடி என்னால் கருத்துக்களை வெளிக்கொணர முடியவில்லை. காரணம் தற்போதைய சூழ்நிலையில் மறைவிட வாழ்க்கையும் இக்கட்டான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் தாயகத்தில் ஒரு பகுதியில் இருந்து கொண்டே செயற்பட வேண்டி உள்ளது.

நான் மாத்திரமின்றி என்னைப்போன்ற பலர் இவ்வாறான நிலையில் மறைந்திருந்தும் மக்களோடு மக்களாக இருந்தும் செயற்பட வேண்டியுள்ளது. எமது விடுதலை என்ற வேட்கை இன்னும் எம்மை விட்டு அகல வில்லை. வீழ்ந்துவிட்டோம் ஆனால் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கின்றோம்.

இனி விடயத்திற்கு வருவோம். எதிர்வரும் இலங்கையின் ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு மக்களுக்கு திருப்தி கரமாக இருக்கின்றதோ இல்லையோ ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வசதிக்கும் தமது சொந்த தேவைக்கும் ஏற்ற வகையில் முடிவுகளை எடுத்துள்ளனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தங்களது சொந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டே செயற்பட்டுள்ளனர். அந்த இருவர் பற்றி பின்னர் பார்ப்போம்.

முதலில் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐயா சம்பந்தன் அவர்களின் வழிகாட்டலில் அவரின் பின்னால் சென்றுள்ளனர். சம்பந்தன் ஐயா ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் அதற்காக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார். மகிந்தவின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டுமென கூறுகின்றார். ஆனால் அது உண்மைதான் இத்தனை கொடுமைகளைச் செய்த மகிந்தவின் ஆட்சியை இல்லாமல் செய்வதே நல்லது. ஆனால் அவர் சரத்பொன்சேகா நல்லவர் மாதிரியும் அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என நம்புகின்றாரா? அவர் துணிந்து நின்று மகிந்தவின் ஆட்சியை கலைக்க வேண்டுமென கூறும் அளவிற்கு அவருக்கு தனித்துவமான துணிவு கிடையாது. அவர் வாய் வீரம் பேசினாலும் உள்ளுர பயந்தவர். நான் வன்னியில் வைத்து அவரைச் சந்தித்தபோதும் அவருடன் கதைத்தபோதும் இன்னும் சில எம்.பிக்களின் கதைகளை வைத்தும் அவரின் பல பக்கங்களை அறிந்து கொண்டவன். இது எமக்கு எல்லோருக்கும் அப்போதே தெரிந்திருந்தது.

பதில் - நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. முன்னாள் போராளி என நினைக்கிறேன். ஆனால் இப்போது விரக்தி காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்கோ எல்லோர் மீதும் சேறு பூசுகிறீர்கள். உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். எண்பிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை அடுக்கிறீர்கள். நீங்கள் ஒருவரே உத்தமர், சத்தியவான் என்று நினைக்கிறீர்கள். மகிந்த இராசபக்சேயின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என சம்பந்தர் கூறுகிறார் அது உண்மைதான் என்கிறீர்கள். அப்படியென்றால் சரத் பொன்சேகாவுக்கு வாக்குப் போடாமல் அது சாத்தியமாகுமா? ஆட்சிமாற்றமும் வேண்டும் சரத் பொன்சேகாவும் வேண்டாம் என்பதில் உள்ள முரண்பாட்டை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள். அதாவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றவன் கதைமாதிரி.

(2) எனவே மகிந்தவை எதிர்ப்பது என்பது அவரால் மாத்திரம் எடுத்த முடிவு அல்ல. அவருக்கு பின்னால் சில சக்திகள் உள்ளன. பொன்சேக்கா ஐனாதிபதியாக வரவேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இதற்கு இந்தியாவும் எதிர்ப்பல்ல. எனவே இந்த வெளிநாடுகளின் துணையுடன்தான் அவர் இந்த முடிவுக்கு வந்தார். இவருடன் சுரேஸ் பிறேமச்சந்திரன் மாவை ஐயா ஆகியோருக்கும் தொடர்புள்ளது. இவர்கள் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்தனர். இதற்காக பல கோடி ரூபா டொலர்களும் கைமாறியுள்ளது. இந்த விசயம் புரியாமல் ஏதோ சம்பந்தன் ஐயா மக்களுக்காக சரத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என நம்பி அவரின் பின்னால் சில எம்.பி;க்கள் சென்றுள்ளனர்.

பதில் - இதெல்லாம் உமது கற்பனை அல்லது பிரேமை. முன்பு சம்பந்தர் இந்தியாவின் கைப்பொம்மை என்றீர்கள் இப்போது அவர் அமெரிக்காவின் கைப் பொம்மை என்றும் சொல்கிறீர்கள். நான் அறிந்தவரை இந்தியா தனது பொருண்மிய - பூகோள நலன்காரணமாக இராசபக்சே தேர்தலில் வெற்றி பெற்று வருவதை விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. எனவே சம்பந்தரின் முடிவு அவர் மற்றவர்கள் குற்றம்சாட்டுவது போல் இந்தியாவின் கைப்பொம்மையாக இருக்க முடியாது. இந்த முடிவுக்குக் காரணம் "இதற்காக பல கோடி ரூபா டொலர்களும் கைமாறியுள்ளது" என எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள். இதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும். கோடி ரூபா டொலர் அல்ல ஒரு ரூபா டொலர் கைமாறியதாக உங்களால் எண்பிக்க முடியுமா? யார் கொடுத்தார்கள்? எந்த வைப்பகம் மூலம் கொடுக்கப்பட்டது? என்பதை அருள் கூர்ந்து சொல்ல முடியுமா? இப்படியான அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

(3) இதில் தங்கேஸ்வரி, அரியநேந்திரன், கனகசபை போன்ற எம்.பிக்களுக்கு அரசியல் தெரியாது. இவர்கள் தற்செயலாக கருணாவின் செல்வாக்குடன் வந்தவர்கள். தற்போதும் அவருக்கு நன்றிக் கடனாக உள்ளனர். இதை வெளிப்படையாகவே கனகசபை ஐயா கூறியுள்ளார். இவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது என்றால் சம்பந்தரின் பின்னால் சென்றே ஆகவேண்டும். இதுதான் இவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர். இவர்களுக்கு எங்கே மக்களை பற்றிய சிந்தனை உள்ளது.

பதில் - அப்படியே இருக்கட்டும். அரசியல் தெரிந்தவர்கள் யார் யார் என்பதை சொல்லமுடியுமா?

(4) சிறில் அண்ணை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர். இதனால் சம்பந்தரின் விசுவாசி அவரின் பின்னால் செல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது என்ற பயமும் இவருக்கு உண்டு. இவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் எம்.பியாக முன்பு பல தடவைகள் சந்தித்துள்ளேன். சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி வாழ பழகிக் கொண்டவர். எப்படியாவது வாழ்ந்து கொள்வார். ஆனந்தன் எம்.பியும் இவரைப்போன்றவர்தான்.

பதில் - இப்படி எதற்கெடுத்தாலும் உள்நோக்கம் கண்டு பிடித்து அவதூறு சொல்வது அழகல்ல. அது உங்கள் விரக்தியை தீர்க்கமட்டுமே உதவும்.

(5) இனி இந்த தேர்தலில் இரண்டு பேரையும் ஆதரிக்கக் கூடாது என்று கூறியவர்கள் என்ன காரணத்திற்காக அப்படி முடிவெடுத்தார்கள் என்றும் பார்க்க வேண்டும். இந்த முடிவை எடுத்தவர்கள் மட்டும் சளைத்தவர்களா.

இதில் சிறிகாந்தா மற்றும் கிசோர் போன்றோர் ராஐபக்சவின் செல்லப்பிள்ளைகள். அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புபவர்கள். எனவேதான் ஆட்சி மாற்றம் பற்றி பேசாமல் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என கூறியுள்ளனர். இவ்வாறு கூறினால் கட்சி எடுத்த முடிவுக்கும் தலை சாய்த்துவிட்டு ராஐசக்சவையும் சமாளித்துச் செல்லலாம். அல்லது இருவரையும் ஆதரிப்பதில்லை என கூறிவிட்டு ராஐபக்சவை மறைமுகமாக ஆதரிக்க திட்டமிட்டிருக்கலாம். இதன் சூத்திரம் அவர்களுக்கும் இறைவனுக்கும் தான் தெரியும்.

பதில் - நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். சிறிகாந்தா பட்டிக்குள் இருக்க மறுக்கும் கறுப்பு ஆடு என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.

(6) சிறிகாந்தா பெரும் தொகை பணத்தை ராஐபக்சவிடம் பெற்றுவிட்டே சிவாஐpலிங்கத்தை தேர்தலில் இறக்கியதாகவும் ஒரு நண்பர் எனக்கு சொன்னார். இதிலும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.

பதில் - இது கதைதான். நீங்களே சொல்லி விட்டீர்கள்.

(7) இனி இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்கக் கூடாது என விரும்பும் கNஐந்திரன், செல்வன் அடைக்கலநாதன், பத்மினி சிதம்பரநாதன், சிவாஐpலிங்கம் ஆகியோர் பற்றி பார்க்க வேண்டும். இவர்கள் அனைவரும் நீண்டகாலம் வெளிநாடுகளில் இருந்தவர்கள். அங்கு பல கூட்டங்களிலும் பேசியிருந்தவர்கள். இவர்களுக்கு இங்கு வந்தால் பெரும் ஆபத்தும் காத்திருந்தது. எனினும் வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது இவர்கள் எதுபற்றியும் வாய் திறக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின் எல்லாமே முடிவடைந்துவிட்டது என்று நினைத்துக் கொண்ட பத்மினி அக்கா முதன்முதலாக இங்கு வந்து சேர்ந்தார். பின் அவர் ஐனாதிபதி ராஐபக்சவை நேரடியாகச் சந்தித்து கை குலுக்கிக் கொண்டார். அவரின் கையைக் குலுக்குவதற்கு அவரால் எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. அரசியலில் நீண்ட அனுபவமோ போராட்டத்தில் எந்தவித பற்றோ பக்குவமோ இல்லாத இவரை அரசியலுக்குக் கொண்டுவந்ததே நாம் விட்ட தவறுதான். இவரை தேர்தலுக்கு வேட்பாளராக போட்டபோதே எமக்கு சந்தேகம் இருந்தது. அப்போது நாங்கள் சிலர் இது பற்றி பொறுப்பாளர்களுடன் விவாதித்திருந்தோம். இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல சலுகைகள் வழங்கப்பட்டன. மிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அதனால் பெரியளவில் எமது போராட்டத்திற்கோ சமுகத்திற்கோ நன்மை கிடைக்கவில்லை. ஆனால் அவரின் குடும்பத்திற்கே நன்மை கிடைத்தது.

இவர் ஐனாதிபதியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்கு வந்ததும் அவருக்கு ஆதரவாகவே செயற்பட வெண்டியிருந்தால் இரு வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

பதில் - உடன்பாடு செய்து கொண்டார் என்பது நீங்கள் வீசும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு.

(8) சிவாஐpலிங்கம், செல்வன் அடைக்கலநாதன், கஜேந்திரன் ஆகியோரும் பசில் ராஐபக்சே மூலம் ஐனாதிபதியுடன் கதைத்து ஒப்பந்தம் செய்தே இங்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாங்கள் நாட்டுக்குச் சென்றால் எங்களை கொன்றுவிடுவார்கள் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்று வீராப்பு பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இங்கு வந்ததும் நடந்தது என்ன? எந்தவித விசாரிப்போ விசாரணைகளோ தொல்லைகளோ இல்லாமல் வரவேற்புக் கிடைத்தது. செல்வன் அடைக்கலநாதனை விசாரணை செய்தது கூட சிறிகாந்தாவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடாகமாகத்தான் உள்ளது.

இவர்கள் எக்காரணம் கொண்டும் ஆட்சி மாற்றம் வேண்டுமென கேட்கமாட்டார்கள். அதற்காக செயற்படவும் மாட்டார்கள். அப்படி ஏதும் செய்தால் அல்லது கதைத்தால் இவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக பசில் உள்ளே போட்டுவிடுவார். இதனால் தங்களையும் காப்பாற்றி தங்கள் கதிரையையும் காப்பாற்றிக் கொள்வதென்றால் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என அறிவிப்பது பின்னர் பசில் ஊடாக ஐனாதிபதிக்கு விசயத்தை விளங்கப்படுத்தி அவருக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவது என்ற திட்டமே இவர்களிடம் உள்ளது.

பதில் - பதில் - உடன்பாடுகள் செய்து கொண்டார் என்பது நீங்கள் வீசும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. மற்றவர்களைத் தூற்றுவதே உங்கள் முழு நேர வேலையாக இருக்கிறது.

(9) இவர்கள் நாங்கள் பலமாக இருந்தபோது எமது பக்கமும் தற்போது சிங்கள பேரினவாதத்தின் பக்கமுமாக இருப்பதைப் பார்க்கும்போது தமிழ் மக்களின் தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பதில் - கவலையை விடுங்கள். மக்கள் முடிவெடுக்கட்டும்.

(10) சிங்கள நாட்டின் ஐனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம் வெற்றி பெறுவதற்காக எமது தயவையே நாடுவார்கள். வெற்றி பெற்ற பின்பு எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். இதுதான் வரலாறு இதற்காக நாம் எமது இனத்தை விற்க முடியுமா? தமிழினத்தின் இரத்தத்தில் தோய்ந்த சரத் பொன்சேக்காவின் கரத்தை பலப்படுத்துமாறு இவர்கள் எந்த முகத்துடன் தமிழ் மக்களிடம் செல்ல உள்ளனர்.

பதில் - எத்தனை காலத்துக்குப் பழைய காலத்திலேயே நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்? ஒரு மக்களாட்சி முறைமை - அது எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் - மக்கள் தங்கள் துருப்புச் சீட்டான வாக்குரிமையை பயன்படுத்த வேணடும். இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சித்தலைவரின் அதிகாரம் வவுனியாவோடு நின்றுவிடாது. நின்றால் அந்தத் தேர்தலைப் பற்றி நாம் கவலைப்படாது இருக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

(11) கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென கூறியிருந்தார். அவர் தனது கட்சி எடுத்த முடியிலேயே நின்று கொண்டார். அவரைப் பொறுத்த வரையில் கொள்கையுடன் செயற்பட்டார் என்றே கூறவேண்டும். ஏனெனில் அவர் ஏனையவர்களைப் போல் எந்த பக்கத்திற்கும் அடிபணிய வேண்டிய தேவை இல்லை.

பதில் - மெத்த நல்லது.

(12) அடுத்து சிறையில் அடைபட்டிருக்கும் கனகரெத்திம் ஐயா. இவர் தேசியத்தில் ஊறிப்போன ஒருவர். அவர் இன்று நேற்று அல்ல நான் கட்ட காலத்தில் இருந்தே போராட்டத்திற்கென தன்னை அர்ப்பணித்தவர். முள்ளிவாய்கால்வரை தனது மக்களோடு மக்களாக இருந்து தற்போது அதற்காக சிறையில் அடைபட்டுள்ளார். அவர் நினைத்திருந்தால் சண்டை தொடங்கியவுடன் தனது குடும்பத்துடன் வெளியேறி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்தது கிடையாது. இறுதிவரை அந்த மண்ணிலேயே இருந்தவர். இவரைப்போல் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நடந்தது கிடையாது.

பதில் - சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுவதற்கு மகிந்த இராசபச்சே தான் காரணம். ஆட்சியை மாற்றினால்தான் அவரைச் சிறை மீட்கலாம்.

(13) அடுத்து தற்போதும் வெளிநாட்டில் தங்கியுள்ள nஐயானந்தமூர்த்தி அண்ணையை எடுத்துக் கொண்டால் அவர் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் எதிர்த்திருந்தார். அவரைப்பொறுத்த வரையில் அவர் ராஐபச்சாவிடமோ பொன்சகாவிடமோ மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இரண்டு பேரையும் அவர் ஆதரிக்கவில்லை. இவரும் எமது இலட்சியப் போராட்டத்திற்காகவும் தேசியத்திற்காகவும் நிறையவே அர்ப்பணிப்புகளைச் செய்தவர். இதனால் இன்று இங்கு வரமுடியாத நிலையில் உள்ளவர். இன்னும் இவரைப் பற்றிச் கூறுவதனால் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவு படும் அபாயம் ஏற்பட்ட போது அதை மிகவும் சாதுரியமாக எதிர்கொண்டு முறியடித்தவர். மட்டக்களப்பு எம்.பிக்கள் கருணாவின் பக்கம் இருந்தபோது அதை உடைத்துக் கொண்டு வெளியேறியவர். அன்றிலிருந்து இன்று வரை தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு வரும் ஒருவர்.

பதில் - நீங்கள் சொல்வது எனக்கும் உடன்பாடுதான்.

(14) எனவே இந்த நிலையில் தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐனாதிபதி தேர்தலுக்கு எடுத்துள்ள முடிவு என்பது அவரவர் வாழ்வுக்காகவும் சுயநலத்திற்காகவுமே என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

2005 ஆம் ஆண்டு ஐனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் எடுத்த முடிவை பிழை என கூறும் சம்பந்தன் ஐயா போன்றோருக்கு தமிழ் மக்கள் இனியும் வாக்களிப்பார்களா என்பதை அடுத்து வரும் பொதுத் தேர்தல்தான் பதில் கூறவேண்டும.

பதில் - அப்போது வி.புலிகள் தங்கள் படை பலத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு சரியாக இருந்திருக்கலாம். இப்போது திரும்பிப்பார்த்தால் அது பிழையாகப் படுகிறது. காரணம் களத்தில் ஏற்பட்ட பின்னடைவுதான். இதைத்தான் சம்பந்தர் சொன்னார்.

முடிவாக கடந்த காலத்தை பட்டறிவின் அடிப்படையில் மீள் ஆய்வு செய்து அது தரும் பாடங்பளைப் படித்துக்கொண்டு செல்லும் பாதையில் நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் பயணிப்போம். நன்றி


நன்றி


நக்கீரன்



 


 

சிங்கள - பவுத்த இனவாதி இராசபக்சேயை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும்

ஆட்சித்தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு கிழமையே எஞ்சியிருக்கின்றன.

ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டும் சூடான பரப்புரையை முடுக்கி விட்டுள்ன. இராசபக்சேயைப் பொறுத்தளவில் அவர் அரசின் ஆள், நிதி, ஊடகம் போனற வளங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி வருகிறார்.

சமுர்த்தி ஊழியர்கள் இராபச்சேயின் பரப்புரையில் வெளிப்படையாகக் கலந்து கொள்கிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் காலை மாலை இரவு என இராசபக்சே புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சித்தலைவர் தேர்தல் நடந்திருந்தால் மகிந்த இராசபக்சே மிக எளிதாக வெற்றிவாகை சூடியிருப்பார். போட்டி ஒருதலைக் குதிரை ஒட்டமாக இருந்திருக்கும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை வாக்குகளாக மாற்றி அதனை அறுவடை செய்யலாம் என  மகிந்தா இராசபக்சே கணக்குப் போட்டார்.     விடுதலைப் புலிகளைப்  போரில் அழித்தொழித்த காரணத்தால் இராசபக்சே சிங்கள மக்களிடம் ஒரு நவீன துட்ட கைமுனு எனக் காட்சி தருகிறார். அரச சார்பு ஊடகங்களும் அரசு கட்டுப்பாடு ஊடகங்களும் இராசபக்சேயை அப்படித்தான் வருணிக்கின்றன. அவர்தான் நாட்டின் அரசன் என்றுகூட சில ஊடகங்கள் புகழாரம் சூட்டி மகிழ்கின்றன

ஆனால் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவின் அரசியல் நுழைவு மகிந் இராசபக்சேயின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் குதிப்பார் என்பதை இராசபக்சே கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதனால் இராசபக்சே போட்ட திட்டம் கட்டிய கோட்டை தவிடுபொடி ஆகலாம் என்ற நிலமை தென்னிலங்கையில் தோன்றியுள்ளது.

இந்தச் சந்தடி சாக்கில் கட்சித் தாவல்களுக்கும் பஞ்சமில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் மூத்த தலைவர்கள் செல்லச்சாமி, யோசராசன், சச்சிதானந்தன் இராசபச்சேயை ஆதரிக்கும் தொண்டமானை விட்டு சரத்பொன்சேகா முகாமுக்குப் பாய்ந்துவிட்டார்கள்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகலா பிரபாகரனும் பொன்சேகா பக்கம் தாவிவிட்டார்.. ஆனால் பதவிக்கு ஆபத்தென்பதால் கட்சிமாறவில்லை! சும்மா சொல்லக்கூடாது. அவர் பிழைக்கத் தெரிந்த புத்திசாலித்தனமான அரசியல்வாதி.

மே மாதம் முதல் பனாகொட இராணுவ முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தையார் (அகவை 86) அங்கேயே சாவடைந்துவிட்டார். பலத்த போராட்டத்தின் பின் அவரது பூதவுடல் வல்வெட்டித்துறைக்குக் கொண்டு சென்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் எரிக்கப்பட்ட தீருவில் மயானத்தில் உரிய மரியாதையோடு தகனம் செய்யப்பட்டுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரது துணைவியார் பார்வதி விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

ஆனால் அவர்களோடு கைது செய்யப்பட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுகிறார். எழுநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தங்களை விடுவிக்குமாறு உண்ணாநோன்பில் குதித்துள்ள அவர்களது போராட்டம் தொடர்கிறது.

North Eastern Monthly என்ற செய்தி ஏட்டின் ஆசிரியர் J.S. திசநாயகம் அமைதிக் காலத்தில் எழுதிய இரண்டு கட்டுரைக்கு ஒரு சிங்கள நீதிபதியால் இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது அவரைப் பிணையில் விட இராசபச்சேயின் கொடுங்கோல் அரசு இசைந்துள்ளது.

மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம், நடராசா ரவிராஜ், கிட்டினன் சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

இதேபோல் மகிந்த இராசபக்சே அரசின் தமிழின அழித்தொழிப்பபின் (Genocide) ஒரு கூறாகக் சிவராம் உட்பட 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த 34 இல் 30 பேர் தமிழர்கள் ஆவர். மேலும் 29 தமிழ் - சிங்கள ஊடகவியலாளர்கள் கொடிய சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியுள்ளார்கள்.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஒரு இராசதந்திரமான முடிவு என எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும் அய்க்கிய தேசியக் கட்சித் தலைவர் இரணில் விக்கிரமசிங்கா இருவரோடும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பத்துப் பொருள்பற்றி உடன்பாடு காணப்பட்டுள்ளது.

பொது நிருவாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்தல், துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல், இடம்பெயர்ந்த மக்களை மீள ்குடியேற்றுதல் மற்றும் மறு வாழ்வளித்தல், சிங்களப் படையினரால் வல்வளைப்புக்கு ஆட்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான சான்றில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவித்தல் போன்றவற்றில் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் மறுவாழ்வளித்தல், மக்களை அவர்களது சொந்த வீடுகளில் மீள்குடியேற்றுதல் முக்கியமானவை ஆகும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்பில் சிங்கள அரசியல் தலைமைகளோடு எழுதப்பட்ட உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. இந்த உடன்பாட்டுக்கும் அதே கதி ஏற்படலாம். இருந்தும் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது.

ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு அளிப்பதாக சிவாஜிலிங்கம் சொல்கிறார். ஆனால் அந்த ஆட்சி மாற்றம் இராசபக்சேயைத் தோற்கடித்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை விளங்கிக் கொள்ள மறுக்கிறார். இராசபக்சேயைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் பொன்சேகாவை தமிழ்மக்கள் ஆதரித்தால்தான் முடியும். இந்தத் தருக்க நுணுக்கம் (logic) சிவாஜிலிங்கத்துக்கு ஏன் புரியவில்லை என்பது புதிராக இருக்கிறது. நல்ல தேசியப் பற்றாளரான அவர் ஏன் கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவருக்கோ அல்லது விக்கிரமபாகு கருணரத்தினாவுக்கோ மக்கள் போடும் வாக்குகள் வீணான வாக்குகள் ஆகும்.

எதிர்பார்த்தது போலவே சம்பந்தன் - பொன்சேகா எழுதிக் கொண்ட இந்த உடன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது, பிரிக்கப்பட்ட கிழக்கை மீண்டும் இணைக்க பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார் என மொனறாக்கலில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மகிந்த இராசபக்சே அலறியிருக்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பவுத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போது இராசபக்சே மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

இனவெறியின் மொத்த வடிவான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பிரபாகரன் மீண்டும் உயிர் பெற்று வருவார் எனப் புலம்பி இருக்கிறார்.

சிங்கள - பவுத்த இனவெறியர்கள் இவ்வாறான இனவாதத்தைக் கக்குவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. சரத் பொன்சேகா இந்த உடன்பாட்டின் மூலம் சிங்களவர்களை தமிழர்களுக்கு விலை பேசி மொத்தமாக விற்றுவிட்டார் என்ற வழக்கமான குற்றச் சாட்டும் மிக விரைவில் அவர் மீ:து வீசப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

யாழ்ப்பாணம் சென்ற இராசபக்சே இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு என்பதைச் சொல்லவில்லை. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்ற புளித்துப்போன பேச்சைத்தான் பேசியிருக்கிறார்.

ஈழம், தமிழீழம் என்ற சொற்களைக் கொண்டுள்ள தமிழர்களுடைய அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும் (ஈழ மக்