பொங்கல் புத்தாண்டு விழா தமிழர்களின் பண்பாட்டுக் கோலம்!

நக்கீரன், தலைவர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

பொங்கல் விழா இன்று முன்னையை காலங்களை விடப் பரவலாகத் தமிழ் மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் மீதுள்ள பற்றும் தமிழின உணர்வும் தமிழ்மக்களிடம் மேலோங்கிக் காணப்படுவதே.

பொங்கல் விழாவோடு தை முதல் நாளை தமிழ்ப் புத்hண்டின் தொடக்கம் -  திருவள்ளுவர் பிறந்த நாள் - எனச் சேர்த்துக் கொண்டாடப்படுவது மறைமலை அடிகளார்; காலத்தில் இருந்து; நடைமுறைப்படுத்தப் பட்ட வழக்கமாகும். கடந்த ஆண்டு தமிழக அரசு அதற்குச் சட்ட வடிவம் கொடுத்துள்ளது.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக அனைத்துத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என நடைமுறைப்படுத்திட அதற்கான சட்டத்தை தமிழக அரசு கடந்த 1.2.2008 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாள், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகத் தமிழ் மக்கள் சிறப்பாகவும், இனிப்பாகவும் சர்க்கரைப் பொங்கலுடன் கொண்டாடுகிறார்கள்.

பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள், இனி தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சர்க்கரைப் பொங்கல் அடம் செய்வதற்குத் தேவையான பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிப் பருப்பு 100 கிராம், ஏலக்காய் 20 கிராம், முந்திரி, திராட்சை, ஆகிய பொருட்கள் வாழ்த்துடன் கூடிய ஒரு தனிப்பையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளின் மூலம் எல்லாக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

‘பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி வண்ண வண்ணக் கோலங்கள் இட்டு;, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட மழலையர், மாணவர், மங்கையர், மகிழ்ச்சியில் தோய்ந்து, புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும் சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் எனும் அவ்வகை நிகழ்ச்சிகள் நினைவை விட்டு அகலா வண்ணம் நீக்கமற நிறைந்திடட்டும்!

தமிழ்ப் புத்தாண்டு நாளைத் தமிழர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் இடங்களில் எல்லாம் விழாவெடுத்துக் கொண்டாட வேண்டும் எனத் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாளில், சென்னையில் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டு மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சங்கமம் நிகழ்ச்சி போன்று, நமது தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்புகளையும் பண்பாட்டின் மேன்மையையும் பறைசாற்றும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை மாநிலமெங்கும் உள்ள மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள், பட்டிதொட்டிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடி மகிழ வேண்டும்’ என முதல்வர் கலைஞர் தமது விழைவினைத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் தமிழர்க்கே உரித்தான தனித்துவமான விழாவாகும். நாங்கள் சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் விழாவே சமயம் சாராத பகுத்தறிவுக்கு ஒத்த பெரு விழாவாக, கழனி திருத்தி, எருவிட்டு, வரம்பு கட்டி, உழுது, விதைவிதைத்து நெல் மணிக் கதிர்களை அறுவடைசெய்ய உதவியாக இருந்த ஞாயிறுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக உழவர் பெருமக்களால் கொண்டாடப் பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அந்த விழாவும் உழவர்களுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும்; மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் கொண்டாடப்படும். .

நாங்கள் புலம்பெயர்ந்து வேறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும் பொங்கல் போன்ற பெரு விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் எங்களது மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை நாம் பேணிக் காப்பாற்ற முடியும். இப்படியான விழாக்களை நாம் கொண்டாட மறந்தால், அவற்றை நாம் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் அபாயம் இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள். அது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இந்தப் பொங்கல் விழாவே திருவள்ளுவரின் பிறந்த நாளாகவும், தமிழ்ப் புத்தாண்டாகவும், திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாளாகவும் தமிழ்நாடு உட்பட உலகளாவிய அளவில் கொண்டாடப் பட்டு வருகிறது.

இந்த ஆண்டுப் பொங்கல் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் பொழுது எமது தாயக மக்களுக்கு எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. எமது உறவுகள் சிங்களத்தின் பெரும் எடுப்பிலான படையெடுப்புக்கு ஆளாகி உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி நோய்க்கு மருந்தின்றி மர நிழல்களிலும் பதுங்கு குழிகளிலும் மழையில் நனைந்து வெள்ளத்தில் மூழ்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை அன்னை இந்த ஆண்டு எமது மக்களை நிரம்பவே சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கிவிட்டது.

இரக்கமற்ற சிங்களத்தின் கொடுங்கோல் ஆட்சியில் எதிரி விமானங்கள் வீசும் குண்டுமழையில் படுகாயமுற்று கால் கைகளை இழந்து கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கிறார்கள்.

பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டில் எமது தாயக உறவுகளின் இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள், அல்லல்கள், அவலங்கள், அனர்த்தங்கள் தொலைந்து அவர்களது வாழ்வில் இன்பம் பொங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களைப் பிடித்த பீடுகள் அனைத்தும் மறைந்தொழியும் என நம்புகிறோம்.

இந்தப் பொங்கல் விழாவின் இன்னொரு சிறப்பும் முக்கியத்துவமும் யாதென்றால் இந்த நாளை தமிழின விடியலுக்காக தங்கள் இன்னுயிரை ஈகை செய்த வி. புலிகள் தளபதி கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்)வின் நினைவு நாளாகவும் உலகம் முழுதும் நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு தளபதி கிட்டுவும் அவரது தோழர்களான மேஜர் வேலன், கேணல் குட்டிஸ்ரீ, கடற்புலி கப்டன் றோசான், கடற்புலி கப்டன் அமுதன், கடற்புலி லெப். நல்லவன், கடற்புலி கப்டன் குணசீலன், கடற்புலி கப்டன் நாயகன் ஆகியோர் மறைந்த 16 ஆவது நினைவு ஆண்டாகும்.


தமிழீழத்தில் குண்டுமாரிக்கும் செல் அடிக்கும் பயந்து பதுங்கு குழிகளுக்குள் உண்ண உணவின்றி, உடுக்கத் துணியின்றி இருக்க இடமின்றி மருந்தின்றி அல்லல்படும் எமது தாயக மக்களுக்கும் அந்நிய சிங்களப் படையின் வல்வளைப்பினால் விழுங்கப்பட்டிருக்கும் எங்கள் தாயக மண்ணை மீட்கத் தங்கள் உயிரைப் பணயமாக வைத்து தமிழீழ புலம் அனைத்தும் குறிப்பாக வன்னிப் போர்க் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் வி.புலிப் போராளிகளுக்கும் சிங்களப் படைகளுக்கு எதிராக போர்முனைகளில் தமிழீழ தேசியப் படையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் தளபதிகளுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தானைத் தலைவர், தமிழீழ தேசத்தின் தலைவர், வி. புலிப்படையின் படைத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எங்களது இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடந்த 6 ஆண்டுகளாக (2005 நீங்கலாக) தமிழர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் காப்பைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசக் கூடாது என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் பேசியது.

அடுத்து உங்கள் உறவு முறைகளை தமிழில் கூறுங்கள். டடி, மமி எங்களுக்கு வேண்டாம். அப்பா அம்மா என்று அழகு தமிழில் அழையுங்கள். அங்கிள் ஆன்ரி வேண்டாம். மாமா மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள். திருநாவுக்கரசர் இறைவனை ‘அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ’ என்று பாடியிருப்பது மனங்கொள்ளத்தக்கது.

உங்கள் பிள்ளைகளுக்குச் சொற்சுவையும் பொருட்சுவையும் ஓசைநயமும் நிறைந்த தனித் தமிழ்ப் பெயர்களை வையுங்கள். இப்படிச் செய்வது நீங்கள் அன்னைத் தமிழுக்குச் செய்யக்கூடிய குறைந்தளவு கடமையாகும். ஆசா, கோசா, யூரேனியா, நிரோஜன், நிரோஜினி, நிஷாந்தன், அபிஷா, டில்ஷன், டில்ஷி, அஸ்வின், அஸ்வினி எனப் பொருள் இல்லாத அல்லது முறைகேடான பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். நிரோஜன் என்றால் ரோசமற்றவன் எனப் பொருள். நிரோஜினி என்றால் ரோசமற்றவள் என்று பொருள். அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள்.

பெற்றோர்களுக்குத் தமிழ் எது வடமொழி எது என்ற குழப்பம் இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. பெயர்களில் ஜ,ஸ,ஷ,ஹ, ஸ்ரீP போன்ற கிரந்த எழுத்துக்கள் இருந்தால் அவை வடமொழிப் பெயர்களாகவே இருக்கும். மேலும் தமிழில் சொற்களுக்கு முன்வராத ட, ர, ல, ங, ண, ழ, ள, ற, ன எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தமிழ்ச் சொற்களாக இருக்க முடியாது.

தமிழில் அழகான, இனிமையான, பொருள் நிறைந்த பெயர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. அரசி, அருளரசி, அன்பரசி, தமிழரசி, கலையரசி, கலைமகள், திருமகள், நிலமகள், நாமகள், பூ+மகள், வள்ளி, கோதை, நிலா, அரசன், மாறன், அழகன், முருகன், கண்ணன் எனச் சின்னக் குழந்தைகளுக்கு நல்ல நல்ல வண்ணப் பெயர்கள் இருக்கின்றன.

உங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைத் தமிழில் செய்யுங்கள். கடவுளர்க்கு மொழிச் சிக்கல் இல்லை. அவர்களுக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும். “அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலாம் எமைச் சொற்தமிழில் பாடுக” என சிவபெருமானே சுந்தரரைக் கேட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியுள்ளார்.

திருமணங்களைத் தமிழில் செய்து கொள்ளுங்கள். தமிழர்களது திருமணங்களில் விளங்காத வடமொழிக் கூச்சல் வேண்டாம். அம்மி வேண்டாம். வடநாட்டு அருந்ததி வேண்டாம். தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தை அணுகினால் நாங்கள் எந்தத் தட்சணையும் வாங்காமல் திருக்குறள் மந்திரம் ஓதி தமிழ்முறைத் திருமணங்களை எளிய முறையில் நடத்தி வைப்போம்.

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள்.

இந்தப் புத்தாண்டில் தமிழீழம் தனியொரு நாடாக மலரும் அங்கு வாழும் எம் உறவுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்தப் புத்தாண்டில் உலகளாவிய தமிழ்மக்களது வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பொங்கட்டும். இடர் நீங்கி இனிமை பெருகட்டும் தமிழீழ அரசு மலரட்டும் என வாழ்த்துகிறோம். (2009)


தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்
நக்கீரன்

நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வௌ;வேறு இன மக்கள் வௌ;வேறு நாள்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.

பண்டைய காலத்தில் பபிலோனியர். உரோமர் போன்றோர் மார்ச்சு 23 யைப் புத்தாண்டாகக் கொண்டாடினார்கள். காரணம் அது இளவேனிலின் வருகையையும் அதனால் ஏற்படும் புது நம்பிக்கையையும் குறித்தது.

பல பண்பாடுகளில் அறுவடை நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. பொங்கல் அப்படியான ஒரு அறுவடை நாள் கொண்டாட்டமாகும்.

இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் மொகமது நபி மெக்காவில் இருந்து மெடீனாவிற்கு ஓடிய நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே பவுத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது.

கிறித்துவ நாள்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டும் ஒழுங்குபடுத்தியும் வந்துள்ளது.

உரோம சக்கரவர்த்தி யூலியஸ் சீசர் அவர்கள் கிமு 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன நாள்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாள்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ குருமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாள்காட்டியில் உள்ள நாள்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். கிமு 45ஆம் ஆண்டில் நாள்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாள்களைக் கொண்டிருந்தது. அவர் கணித்த நாள்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாள்களைக் கொண்ட நாள்காட்டியை கிமு 4236 இல் கண்டு பிடித்ததார்கள். அதனைப் பின்பற்றியே யூலியன் நாள்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாள்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year)  ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாள்களோடு கூட்டப்பட்டது.

உண்மையில் ஒரு ஆண்டு 365 நாள்கள், 5 மணித்தியாலங்கள், 49 மணித்துளிகள், 12 வினாடிகள் (365.2424) கொண்டது ஆகும். இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 120 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வேறுபாடு ஏற்பட்டது. எனவே 1582 இல் 13 ஆவது போப் கிறகோறியன் (Pope Gregorian X111) வானியலாளர்கள் Lilius,  Clavius kw;Wk; Chaconius உதவியுடன் அதைச் சரிசெய்தார். அதன்படி 10 நாள்கள் (1582 - 325)/120 =10) குறைக்கப்பட்டது. 1582 ஒக்தோபர் 4 ஆம் நாளை அடுத்து ஒக்தோபர் 15 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் 1700, 1800, 1900 ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000 இல் கூட்டப்படவில்லை.

தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் (14 ஆம் நூற்றாண்டு) தமிழர்கள் ஆவணி தொடங்கி ஆடி முடியும் வரை உள்ள காலத்தை ஒரு ஆண்டாகக் கணித்தார்கள் என்கிறார். இதனால் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். எப்போது ஆண்டுத் தொடக்கம் சித்திரைக்கு மாறியது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழா சித்திரை மாதம் முழுநிலா அன்று கொண்டாடப்பட்டது.

பிற்காலச் சோழர் ஆட்சியில் ஞாயிறு தென்திசையில் இருந்து (தட்சிணாயனத்திலிருந்து) வடதிசைக்கு (உத்தராயனத்திற்கு) திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் நாளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விசு தக்ஷிண அயனம், அய்ப்பசி விசு உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம் கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

மரபு மாறக் கூடியது. பண்பாடு மாற்றம் அடையக் கூடியது. சங்க காலத் தமிழர்களிடம் கள் அருந்தும் பழக்கம் இருந்தது. திருமண விழாவில் இறைச்சிச் சோறு சாப்பிடும் பழக்கம் இருந்தது. தலைவன் இருக்கும் போது தலைவன் காமக்கிழத்தியை வைத்திருக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் பவுத்த, சமண மதங்களின் செல்வாக்கால் இந்த மரபுகள் மாற்றம் அடைந்தன. வள்ளுவர் காலத்தில் கள் உண்ணல் கடியப்பட்டு கள்ளாமை போற்றப்பட்டது. கொலை கடியப்பட்டு கொல்லாமை போற்றப்பட்டது. வரைவின் மகளிர் உறவு கடியப்பட்டது. பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள் என வள்ளுவர் கண்டிக்கிறார்.

புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் சுற்றிவருகிறது. இது எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. 360 பாகை கொண்ட ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்குள் தை முதல்நாள் புகுகிறது. அந்த நாளே தை மாதப் பிறப்பாகும். வட நூலோர் அதனை மகரசங்கராந்தி என அழைத்தனர். பொங்கல் திருநாள் தை முதல் நாள் கொண்டாடப் படுகிறது. சித்திரை முதல்நாள் ஞாயிறு மீன இராசியில் பட்டு மேட இராசிக்குள் உட்புகும் நாளும் வானியல் அடிப்படையில் ஆனதுதான்.
ஞாயிறைப் புவி சுற்றிவரும்போது அதன் அச்சு எப்போதும் வலது பக்கமாக 23½ பாகை சாய்ந்திருக்கும். இதனால் ஞாயிற்றின் கோணம் ஆண்டு முழுதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறிக் கொண்டே இருக்கும்
(The earth's axis always remains pointing in the same direction as it revolves around the sun. As a result, the solar angle varies at a given place through out the year). . இதுவே பருவங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகும். வட கோளத்தில் கோடை என்றால் தென் கோளத்தில் பனிக் காலமாக இருக்கும். தென் கோளத்தல் கோடை காலம் என்றால் வட கோளத்தில் பனிக் காலமாக இருக்கும். பருவங்களுக்கும் கோள்களுக்கும் இராசிகளுக்கும் தொடர்பில்லை.

புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அச்சில் ஏற்படும் தளம்பலாலும் அதன் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் (நிரைகோடு) ஆண்டொன்றுக்கு 50.2388475 வினாடிகள் (20 நாடி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.6 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (கிட்டத்தட்ட ஒரு நாள்) ஆகக் கூடிவிடும். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 1730 ஆண்டுகளாக அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு மார்ச்சு 21 ஆம் நாள் கொண்டாடப் பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான திகதியில் கொண்டாடப்படுகின்றன.

தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4) கொண்ட நாள்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாள்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாள்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி (மார்கழி, தை) பின்பனி (மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 மணித்துளி (நிமிடங்கள்) ஆகும்.

'உவவுமதி' (முழுமதி) நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன.

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த, இறந்த ஆண்டு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும், இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது.

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை ஆகும். இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)
60 ஆண்டுச் சக்கரம் சுழற்சி முறையில் வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60 ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை.

ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)

வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக் குறிப்பிட்டு மாதம், தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது வழக்கம். இந்தமுறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலாக இருக்கிறது.
இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.

அறுபது ஆண்டுகள் பற்றிய ஒரு புராணக் கதை இருக்கிறது. நாரதன் பெண் ஆசை கொண்டு கிருஷ்ணனிடம் வந்து நீ நிறையக் கோபிகளை வைத்திருக்கிறாயே எனக்கு ஒரு கோபியைக் கொடு என்று கேட்டானாம். நான் எந்த வீட்டில் இல்லையோ அங்கு உன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள் என்றானாம். நாரதன் எல்லா கோபிகைகளின் வீடுகளுக்கும் சென்று பார்த்து எல்லா வீட்டிலும் கிருஷ்ணன் இருக்கக் கண்டான். திரும்பி அவனிடமே வந்து தன் இச்சையைத் தெரிவித்தானாம். கிருஷ்ணனும் நாரதனும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். அவைதான் பிரபவ முதல் அக்ஷய வரையான ஆண்டுகள்.

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான "சுக்கில" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், அய்ம்பத்து அய்ந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இந்தியாவில் வௌ;வேறு நிலப்பரப்பை ஆண்ட மன்னர்கள் தங்கள் பெயரில் தொடர் ஆண்டுகளை அறிமுகப் படுத்தினார்கள். கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.

விக்கிரம ஆண்டு - விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளில் இருந்து கணிக்கப்படுகிறது. கிபி 2000 ஆம் ஆண்டு 2058 விக்கிரம ஆண்டுக்கு சமமாகும். விக்கிரம ஆண்டுக் கணிப்பு வட இந்தியாவிலும் குஜராத்திலும் புழக்கத்தில் உள்ளது.

சக ஆண்டு - இது சாலிவாகனன் அரச கட்டில் ஏறிய ஆண்டாகும். கிபி 2000 ஆம் ஆண்டு 1923 சக ஆண்டுக்குச் சமமாகும். சக ஆண்டுக் கணிப்பு தென்னிந்தியாவில் பின்பற்றப்படுகிறது. கிபி 500 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சமற்கிருதத்தில் எழுதிய வானியல் நூல்கள் பெரும்பாலும் சக ஆண்டையே குறிப்பிடுகின்றன. இந்திய அரச நாள்காட்டியும் சக ஆண்டையே பின்பற்றுகிறது.

தமிழர்களைப் பொறுத்தளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடர் ஆண்டை அவர்கள் உருவாக்கவில்லை. கல்வெட்டுக்களில் மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி தொடங்கிய ஆண்டில் இருந்து காலத்தைக் கணித்தார்கள். இந்தக் குறைபாடு வள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியதின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

காலத்தைக் கணிப்பதில் காணப்பட்ட குழப்பத்தை நீக்க தமிழ் அறிஞர்கள தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர்; தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்து மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

1) திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது
2) அதையே தமிழ் ஆண்டு என்று கொள்வது
3) திருவள்ளுவர் காலம் கி.மு. 31

இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள் என அறிவித்தனர். பன்னிரண்டு மாதங்களுக்கும்; கிழமையின் ஏழு நாள்களுக்கும் தூய தமிழ்ச் சொற்க்கள் சூட்டப்பட்டது. அவை பின் வருமாறு

கிழமை - ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி. (புதன்,மற்றும் சனி தமிழ் சொல் இல்லை என்பதால் நீக்கப்பட்டது.)

மாதங்கள் - சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, தலை, துளி, சிலை.

ஆங்கில ஆண்டுடன் 31யைக் கூட்டினால் வள்ளுவராண்டு வரும். இப்போது ஆங்கில ஆண்டு 2009. எனவே வள்ளுவராண்டு 2040 (2009 சக 31) ஆகும். எனவே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தைப் பொங்கல் திருநாளான தை முதல் நாள் தொடங்கி மார்கழிக் கடைசியில் முடிவுறுகிறது. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் அரச நாள்குறிப்பிலும், 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலங்களிலும் நடை முறைப்படுத்தி வருகிறது. 2008 இல் திருவள்ளுவர் தொடர் ஆண்டு சட்டமாக இயற்றப்பட்டது. தமிழ்நாட்டில் தைப் பொங்கல் திருநாளும் திருவள்ளுவர் நினைவாக அதற்கு மறு நாளும் அரசு விடுமுறை நாள்களாகும்.

தமிழனுக்குத் தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் மானம் இவைபற்றிப் போதிய உணர்வு இல்லாமல் இருப்பதுதான் அவன் தாழ்வுக்கு முக்கிய காரணம் என்பதைக் கண்டறிந்த மறைமலை அடிகளாரும் பெரியாரும் அண்ணாவும் தொடக்கி வைத்த பண்பாட்டுப் புரட்சியின் குறியீடுதான் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா ஆகும்.

பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த நாள் தமிழ் மறை ஆகியன உலகத் தமிழரால் போற்றிக் கொண்டாடடப்பட வேண்டும். அதன் மூலம் தமிழர் நலவாழ்வு, வளவாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடியும்.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''
என்பது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது. அதனை நாம் போற்றிக் கொண்டாடுவோம்.