OPEN COMPETITION RESULTS !
Mon Jun 23, 2014 6:36 am (PDT) . Posted by:
"somasundaram .ilangovan"
http://www.viduthalai.in/page-8/82424.html

வாருங்கள், திராவிடர் மாணவச் செல்வங்களே!

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற் கான தரவரிசைப் பட்டியலை, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில், 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று 132 மாணவர்கள்
சாதனை படைத்திருக்கின் றார்கள் என்பது மட்டுமல்ல;

அந்த 132 இல், பார்ப்பனர் உள்ளிட்ட 7 மாணவர் கள் தவிர்த்து, ஏனைய 125 மாணவர் களும், கல்வி மறுக்கப்பட்ட சூத்திர, பஞ் சம சமுதாயத்தவர் அதாவது, பிற்படுத்
தப்பட்ட வகுப்பினர் 90; மிகவும் பிற் படுத்தப்பட்டவர் 26, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இஸ்லாமியர் 6, தாழ்த்தப் பட்ட வகுப்பினர் 5 என எண்ணும் போது,
இந்த உயர்வுக்கான வரலாற்றுக் காரணத்தை பெருமையோடும், பெரு மிதத்தோடும் அசைபோட சொல்கிறது, திராவிடர் மாணவச் செல்வங்களே.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தா லும், கல்வியைக் கொடுக்காதே என சொன்ன மனுசாஸ்திரத்தின் அடிவேரை வீழ்த்தும் பணியை சிறப்பாக செய் துள்ள திராவிடர்
மாணவச் செல்வங் களே!

உங்களுக்கும், உங்கள் பெற்றோருக் கும், இட ஒதுக்கீடு தருவதால், தகுதி திறமை போய்விடும் என இன்னமும் கூறும் பார்ப்பனக் கூட்டத்திற்குச் சவுக் கடி
கொடுக்கும் வண்ணம், சிறப்பான மதிப்பெண்ணை பெற்றுள்ள திராவிடர் மாணவச் செல்வங்களே!

சற்று இதற்கான வரலாற்றுப் போராட் டங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால், சமஸ்கிருதம் படித் திருக்கவேண்டும் என்ற நிலைமை, தமிழகத்திலே, பார்ப்பனர்களுக்காக உருவாக்கப்பட்டு, நடைமுறையில் இருந்ததே, அதனை, தந்தை பெரி யாரும், நீதிக்கட்சியின் அன்றைய முதல் வர் பனகல் அரசரும் ரத்து செய்யாமல் இருந்திருந்தால், இன்றைக்கு, நீங்கள், மருத்துவர் ஆகவேண்டும் என்பது கனவாகக்கூட இருந்திருக்காதே, செல் வங்களே!

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, 1928 முதல் நிலவி வந்த வகுப்புவாரி உரிமை 1950 இல் பார்ப்பனர்களால், உச்சநீதிமன்றத் தில் தடை
பெற்றபோது, நமது அறிவு ஆசான் பெரியார் மட்டும் போராடாதி ருந்தால், இன்று கல்வியில் ஏது இட ஒதுக்கீடு செல்வங்களே?

தமிழகத்தில் ராஜாஜி முதல்வராக இருந்து, சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்பதற்காக பள்ளிக்கூடங்களை மூடியது மட்டுமல்லாமல், அப்பன் தொழிலை மகன்
செய்யவேண்டும் என்று கூறி, குலக்கல்வித்திட்டத்தை கொண்டு வந்தாரே, அந்தத் திட்டத்தை பெரியார் எதிர்த்து, குலக்கல்வித் திட்டத் தையும் அதோடு சேர்த்து,
ராஜாஜியை யும் முதல்வர் பதவியிலிருந்து விரட்டி னாரே.

அவ்வாறு பெரியார் போராடாமல் இருந்திருந்தால், பெருந்தலைவர் காமராசர் முதல்வராகும் வாய்ப்புகூட இல்லாமல் போயிருக்குமே; கல்விப் புரட்சி
ஏற்பட்டிருக்காதே; உங்கள் பெற்றோர் இந்த அளவுகூட படிக்கும் வாய்ப்பு இல்லாமல் ஆகியிருக்குமே என்பதை சற்று நினைத்துப் பாருங்கள் திராவிடர் மாணவச் செல்வங்களே.

எப்போதெல்லாம், நமக்கான வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை முழு மூச்சோடு எதிர்க்கும் பார்ப்பனக் கூட்டம், தான் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்கும்
அந்தக் கூட்டம், இன்றைக்கு நீங்கள் பெற்றி ருக்கும் மதிப்பெண்ணைக் கண்டு, வாயி லும், வயிற்றிலும் அடித்துக் கொள்வ தைப் பாருங்கள் செல்வங்களே!

நீங்களும் பார்ப்பனர்களைப்போல, அல்ல, அவர்களையும் விஞ்சி மதிப் பெண் பெறும்போது, அதனை ஏற்க மனமில்லாமல் தினமணி வைத்திய நாதன்கள் புலம்புவது ஏன்? என்பதற் கான விடை தெரிந்து கொள்ளுங்கள் செல்வங்களே!

அவாள் சொன்ன தகுதி, திறமை பித்தலாட்ட பேச்செல்லாம், உங்களால், தவிடு பொடியாகிவிட்டதால் வந்த வயிற்றெரிச்சல் என்பதைப் புரிந்து கொள் ளுங்கள்
திராவிடர் மாணவச் செல்வங்களே!

இந்த ஆண்டு, நீங்கள் பெற்ற மதிப் பெண்போல, தொடர்ந்து சில ஆண்டு களாகவே, மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்த நம் திராவிடர் சமுதாய மாணவர்கள்,
சிறப்பான மதிப்பெண் ணைப் பெற்று, பார்ப்பனர்களைப் பின்னுக்குத் தள்ளிவருகின்றனர்.

2008 இல் இதே போன்று மருத்துவக் கல்லூரிக்கான அனுமதிக்குப் போட்டி யிட்ட முதல் 200 தரவரிசைப் பெற்ற மாணவர்களில் உயர்ஜாதியினர் 15 பேர்தான், மீதம் 185
மாணவர்களும், நம் திராவிடர் சமுதாயம்தான், என்பதை மும்பையில் இயங்கும் டாடா சமூகவி யல் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அது மட்டுமல்ல; இட ஒதுக்கீட்டில் அனுமதி பெற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள், இறுதித்தேர்வில், பொதுப்போட்டியில் உள்ளே வந்த பார்ப்பன மாணவர்களை விட கூடுதலான மதிப்பெண்ணை பெற் றுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நம் திராவிடர் மாணவச் செல்வங்களே!

நீங்கள் மட்டும் அவர்களுக்கு சளைத்தவர்களா? இந்த 2014 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி அனுமதிக்கான தர வரிசைப் பட்டியலில், முதல் 200 இடங்களில்,
பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதி யினர்க்கு வெறும் 9 இடங்களைத் தானே நீங்கள் தந்துள்ளீர்கள்.

மீதம் உள்ள 191 இடங்களையும் நீங்கள் கைப்பற்றி உள்ளீர்கள் என்பது திராவிடர் இயக்கத்திற்கும், பெரியாரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் என்பதை
நினைவில் கொள்ளுங்கள் நம் திராவிடர் மாணவச் செல்வங்களே!

இன்றைக்கு, மருத்துவக் கல்லூரியில் நிரப்பபட வேண்டிய மொத்த இடங்கள் 2172. இதில் பொதுப்போட்டிக்கான இடங் கள் 673. மீதம் உள்ள இடங்கள், தமிழ் நாட்டில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில், பிற்படுத்தப் பட்டோருக்கு 26.5%, மிகவும் பிற் படுத்தப்பட்டோருக்கு 20%, பிற்படுத்தப் பட்டோர்
இஸ்லாமியருக்கு 3.5%, தாழ்த் தப்பட்டோருக்கு 18, அதில் அருந்ததி யருக்கு 3.5%, பழங்குடியினர்க்கு 1% என 69 விழுக்காடு அளிக்கப்படுகிறதே.

இந்த 69 விழுக்காட்டிற்கு பார்ப்பனர்கள் தடை உத்தரவை பெற்றபோது, போரா டியதோடு, சட்டமுன் வரைவையும் தந்து, அரசியல் அமைப்பின் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கும் வரலாற்றுச் சாதனையைச் செய்து, நம் உரிமையைக் காப்பாற்றியது தந்தை பெரியார் இயக் கம்; அதன் இன்றைய தலைவர் வீரமணி என்ற வரலாற்றை மறக்காதீர் கள், திராவிடர் மாணவர் செல்வங்களே!

நீங்கள் இன்று மருத்துவக் கல்லூரி யில் சேர்ந்து, சிறப்பான மருத்துவராக வருவீர்கள் என்பதில் அய்யமில்லை; அவ்வாறு மருத்துவராக வெளிவரும் வேளையில், நம்
பெரியார் இயக்கத் தையும் அதன் போராட்டங்கள் நமக்கு எத்தகைய சிறப்பை தந்துள்ளது என்பதை மட்டும் மறக்காமல் இருங்கள் மாணவர் செல்வங்களே!

பெரியாரை தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு தெரிந்து கொள்வது, பெரி யாருக்காக அல்ல, உங்களின் சுயமரி யாதையும், அறிவும் சிறப்பு கொள்வதற் காக, என்பதை மனதில் இருத்தி, பெரியாரை தெரிந்து கொள்ளுங்கள்.

பெரியார் இயக்கத்தின் பணியை புரிந்து கொள்ளுங்கள்; அது பெரியார் இயக்கத்தின் நன்மைக்காக அல்ல, நம் வாழ்வு சிறக்க, பல கருப்பு மெழுகு வத்திகள் ஒளி
தந்தார்கள் என்பதற்காக புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் இன்று பெற்றிருக்கும் இந்த மகத்தான மதிப்பெண் சாதனை என்பது, உங்களது திறமைக்கும், முயற்சிக்கும் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; தள்ளாத வயதிலும்,
தளராத உறுதியுடன் உங்களை தன் தோள்மீது உயர்த்திப் பிடித்த அந்த மகத்தான மனித நேயர் தந்தை பெரியாரும், அவர் தம் இயக்கமும் என்பதை நெஞ்சில் நிறுத்தி
உலகுக்கு உரக்கச் சொல்ல வாருங்கள் எம் திராவிடர் மாணவச் செல்வங்களே!

திராவிடர் சமுதாயம் இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறது, அருமை திராவிடர் மாணவச் செல்வங்களே!

ஏனெனில், திராவிடர் இயக்கமும், தந்தை பெரியார் எனும் மகத்தான சமூக மருத்துவரின் இயக்கம்தானே!

*- குடந்தை கருணா -*
  

பெரியார் ஒருவர்தான் பெரியார்
நக்கீரன்
 

பெரியார் ஒருவர்தான் பெரியார்

அவர் போல் பிறர் யார் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி

தமிழர் புகழ்நாட்டி வாழ்ந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்

மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்

நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்

கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை

கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை

மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை

யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

(கவிஞர் காசி ஆனந்தன்)

பெரியாரின் அருமை பெருமை தெரிய வேண்டும் என்றால் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த 'பிரபாவதி' படத்தில் இடம்பெற்ற காட்சி போதுமானது. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.
படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.
'ஏண்டா என்னை மிதிச்சே?' கோபத்தோடு கேட்பான் அசுரன்.
'இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்' என்பார் கலைவாணர்.
'பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி' என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.
'நீ சூத்திரன். பிரமாவின் தொடையில் இருந்து பிறந்தவன். நான் பிராமணன். பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவன். உனது சுயதர்மம் ஏனைய மூன்று வர்ணத்தாருக்கும் அடிமை வேலை செய்வது.
ஒரு சாதியான் மற்றொரு சாதியானுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும், அது நன்மையைப் பயக்காது. தன் தொழிலைக் செய்யாவிடினும் அவ்வளவாகக் குற்றமில்லை. ஆனால் பிறசாதியார் தொழிலை செய்யவே கூடாது.' (பகவத் கீதை அத்தியாயம் 3, பாடல் 35)
ஏமாற்றப்பட்ட தமிழன் வர்ண தர்மம் ஆண்டவன் கட்டளை, அழித்தெழுத முடியாத விதி என நம்பினான்.

சிந்திப்பது எங்களுக்கு எளிதாக இருக்கிறது!
நாங்கள் தலையில் இருந்து பிறந்தவர்கள்!
அவனை ஓங்கி உதைத்தான்!
இவன் சொன்னான் உதைப்பது எங்களுக்கு எளிதாக இருக்கிறது!
நாங்கள் காலில் இருந்து பிறந்தவர்கள்!

என்று கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்குப்போல் அன்றைய தமிழனால் செய்ய முடியவில்லை.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் கீதையை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் இராசகோபாலச்சாரியார் 1956இல் தமிழ் நாட்டில் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிக் கூடங்களில் அவனவனும் தனது குலத்துக்குரிய தொழிலைச் செய்யவதற்கு வேண்டிய கல்வி கற்பிக்கப்பட வேண்டும். சிரைக்கிறவன் பிள்ளை சிரைக்க வேண்டும். வெளுக்கிறவன் பிள்ளை வெளுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆரிய தர்மத்தை நிலைநாட்ட பார்ப்பனியம் எடுத்த கடைசி முயற்சி இராசகோபாலச்சாரியாரின் குலக் கல்வித் திட்டமாகும்.

இந்த வர்ணதர்மத்தை மகாகவி பாரதியார் பொறுக்கி எடுத்த சுடு சொற்களால் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும்
பார்ப்பாருக்கு இன்னொரு நீதி என்று
சாத்திரம் சொல்லுமேயானால் அது
சாத்திரம் அல்ல சதியெனக் கண்டோம்.              (பாரதியார் கவிதைகள்)

பெரியாரை சுயமரியாதைப் பாதைக்கு இட்டுச் சென்றதே பார்ப்பனர்கள் இந்த குலத்துக்கொரு நீதியை சமையல் கட்டுவரை கொண்டு சென்றதே.
1923இல் தந்தை பெரியார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். சேரமாதேவி என்ற ஊரில் வ.வே.சு. ஐயர் குருகுலம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி ஒரு குருகுலத்தை நடத்தி வந்தது. அந்தக் குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு வேறாகவும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு வேறாகவும் தனித் தனியாகப் பந்தி போடப்பட்டது.

அந்தக் காலம் பார்ப்பனர்களுடைய செல்வாக்கு அங்கிங்கு இன்னாதபடி எங்கும் கொடி கட்டிப் பறந்த காலம். கல்வி அவர்களது ஏகபோக உரிமையாக இருந்த காலம். நீதியரசர்கள் தொடங்கி சாதாரண அலுவலக எழுத்தர்வரை பிராமணர்களே பதவிக் கதிரைகளில் அமர்ந்து கோலோச்சிய காலம்.

தனிப் பந்தி உணவு பரிமாறும் முறையை பெரியார் எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பு வெற்றி அளிக்கவில்லை. பார்ப்பனர்கள் சாத்திரங்களைக் மேற்கோள் காட்டி தனிப் பந்தியை நிறுத்த மறுத்தனர்.

வேறு வழியில்லாமல் 1925 இல் பெரியார் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை உதறி எறிந்துவிட்டு அதிலிருந்து வெளியேறினார்.

பெரியாரின் வெளியேற்றம் அவரது வாழ்க்கைப் பாதையை மட்டுமல்ல தமிழினத்தின் தலைவிதியையும் மாற்றி அமைத்தது.

காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். பார்ப்பனீயத்தின் முகத் திரையைக் கிழித்து மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டிருந்த நச்சுக் கருத்துக்களை, மூடநம்பிக்கைகளை, புராண இதிகாச புளுகு மூட்டைகளை, புரட்டுக் கதைகளை அக்குவேறு ஆணி வேறாகப் பிடுங்கி எறிந்தார்.

'கடவுளை மற மனிதனை நினை' என்பது பெரியாரின் முழக்கமாகும்.

1937 ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதே ஆண்டு கட்டாய இந்தி பள்ளிக்கூடங்களில் திணிக்கப்பட்டது. கட்டாய இந்தியை எதிர்த்து தமிழகம் எரிமலையாக வெடித்தது. துப்பாக்கிகள் பேசியதில் இரண்டு தமிழர்களது உயிர் பறிக்கப்பட்டது. பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது உருவப் படத்தை நாற்காலியில் வைத்து நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

தனது கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல குடியரசு, புரட்சி, விடுதலை, உண்மை போன்ற ஏடுகளை ஆரம்பித்து அவற்றின் வாயிலாக பகுத்தறிவு பரப்புரை செய்தார்.

'பகுத்தறிவு' ஏட்டை ஆரம்பித்தபோது பெரியார் அதன் கொள்கைபற்றி பின் கண்டவாறு பிரகடனம் செய்தார்.

'பகுத்தறிவு ஏடு வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்துக்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும் ஆற்றலையுமே துணையாகக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்.'

1935 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட 'விடுதலை' இன்று மட்டும் சாதி ஒழிப்பில், இன நலத்தில், மொழி மீட்சியில், வகுப்புரிமையில், பண்பாட்டுப் புரட்சியில், பகுத்தறிவுப் பரப்புரையில், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பில் தமிழர் நலங்காக்கும் அரணாய், ஆயுதமாய், மாமருந்தாய் திகழ்கிறது!

தான் தொடக்கிய ஏடுகளுக்குத் தனித் தம்pழில் பெயர் சூட்டியதன் மூலம் தனித் தமிழ் இயக்க எழுச்சிக்கு பெரியாரே வழிகாட்டினார். தமிழிசையின் தந்தையும் அவர்தான்.

பெரியார் விதைத்த வித்துக்களில் ஒன்றேனும் சோடை போனது கிடையாது. அவர் விதைத்த விதைகள் இன்று ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரோடி கனிதரும் கற்பகச் சோலைகளாகக் காட்சி தருகின்றன.

பெரியார் பார்ப்பனரல்லாதார்க்கு கல்வி வேண்டும் என்றார். பார்ப்பனரல்லாதார்க்கு அரச அலுவலகங்களில் இடம் வேண்டும் என்றார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார். ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றார். பெண்களுக்கு மணவிலக்கு உரிமை வேண்டும் என்றார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார். விதவைக்கு மறுமணம் வேண்டும் என்றார்.

இந்து மதத்தில் கறைபடிந்துபோன தேவதாசி முறை ஒழிய வேண்டும் என்றார். சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். சாதி அடிப்படையில் யாரும் இழிதொழில் செய்யக் கூடாது என்றார்.

தேவதாசி முறை தமிழீழத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் பல நூற்றாண்டு காலம் இருந்திருக்கிறது. சுந்தரர் திருமணம் செய்து கொண்ட பரவை நாச்சியார் இந்த சாதியைச் சேர்ந்தவர்தான்.

தேவதாசி முறை சுலபத்தில் ஒழிக்கப்படவில்லை. அதற்குப் பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

'தோழர்களே! இந்நாட்டில் தேவதாசி முறை ஒழிக்கப்படது என்றால் எவரால்? எங்களால்தான். எங்கள் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது அது ஒழிக்கப்பட்டது. தேவடியாள் என்று ஒரு சாதியா? இவர்கள் எல்லாம் யார்? நமது அக்காள் தங்கையர்களாக இருந்தவர்கள்தானே! இப்படிப் பல சாதியிலிருந்தும் ஆண்டவன் பேரால் பொட்டுக்கட்டி விட்டனர். தாசித் தொழில் பழகித் தேவடியாள் ஆனார்கள்.

இந்தத் தேவதாசித் தடைச் சட்டம் சட்ட சபையில் வந்தபோது வைதீகர்கள் எல்லாம் எதிர்த்தனர். சத்தியமூர்த்தி ஐயர் 'இது கடவுள் காரியம் இதில் கை வைப்பதா?' என்றார். அதற்கு டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் எழுந்து 'அந்தக் காரியத்தை நாங்கள் ஏதோ இத்தனை நாள் பார்த்து வந்தோம். இனி அப் புண்ணிய காரியத்தை உங்கள் இனத்தார்களே பார்த்துக் கொள்ளுங்களேன்!' என்று கூறினார். பிறகுதான் அவர் வாயடைத்து நினறார் (விடுதலை - 31.08.1959)

இதில் வேடிக்கை என்னவென்றால் பார்ப்பனர்களும் வைதீகர்கள் மட்டுமல்ல தேவடியாள்கள் என்பவர்களும் கூட்டம் போட்டு பெரியாரை வன்மையாகக் கண்டித்தார்கள். 'எங்கள் பிழைப்புப் போய் விட்டால் நாங்கள் என்ன செய்வது' என்றார்கள்.

இந்த அடிமை மனப் போக்கு இன்றும் தமிழரிடையே நிலவுகிறது. தமது மூளைக்குப் போட்ட விலங்குபற்றி மெத்தவும் சுய மகிழ்ச்சி அடைகிறவர்கள் இருக்கிறார்கள்.
'பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி' என்று கூறித் தலையைக் காட்டினானே அந்த அசுரன்? அவன்; போல பல சூடு சொரணை அற்ற அசுரர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

இவை ஒவ்வொன்றிலும் பெரியார் வெற்றி கண்டார். 'சூத்திரர்' 'சூத்திரச்சி' என்று உயர்சாதிப் பார்ப்பனர்களால் இழிவாக அழைக்கப்பட்ட மக்கள் இன்று நீதியரசர்களாய், அமைச்சர்களால், துணை வேந்தர்களாய், பேராசிரியர்களாய், மருத்துவர்களாய் உலா வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமை பெரியார் ஒருவரையே சேரும்.

1967 ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். அப்போது 'திமுக ஆட்சியை பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன்' என்று சொன்னார். சொன்னதோடு நிற்காமல் அமைச்சர்களை அழைத்துச் சென்று பெரியாரிடம் வாழ்த்தும் பெற்றார்.

பெரியாரையும் அவரது கொள்கைகளையும் செரிக்க முடியாதவர்கள் அவரை ஒரு அதி தீவிரவாதியாக, நாத்தீகனாகப் பார்க்கிறார்கள். ஆனால் தமிழினத்தை பீடித்துள்ள பெருநோய்க்கு தலையிடி மாத்திரை சரிப்பட்டு வராது ஊசிதான் வழி என்பது பெரியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அதனால்தான் பெரியார் பிள்ளையார் சிலைகளை தெருவில் போட்டு உடைத்தார். அறிஞர் அண்ணாவால் கூட அதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 'நாங்கள் பிள்ளையாரையும்உடைக்க மாட்டோம்! பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்!' என்றார்.

பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு கல்லு கடவுள் என்ற மூடத்தனத்திற்கு எதிரான ஒரு குறியீட்டு எதிர்ப்பு. ஆங்கிலத்தில் அதனை symbolic protest என்று சொல்லுவார்கள்.

பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு ஒரு நாளில் முடிந்து விட்டது. ஆனால் இன்று இந்த மத பக்தர்களே பிள்ளையார் சிலையை விநாயக சதுர்த்தியன்று கத்தி, கோடரி, வாள்களால் கண்ட துண்டமாக வெட்டிக் கடலில் கரைக்கிறார்கள். இந்த வெறித்தனமான முட்டாள்தனத்தைப் பார்த்து மனம் உடைந்துபோன கே.சி. அனந்த கிருஷ்ணன், கோவையிலிருந்து 'தினமலர்' ஏட்டுக்கு 'பிள்ளையார் உடைப்பு வேண்டாமே!' என்ற தலைப்பில் ஒரு மடல் வரைந்துள்ளார்.

'நான் 73 வயதான மிகவும் ஆசாரமான பிராமணன். நல்ல ஆஸ்திகன். மும்;பையைப் பின்பற்றி நமது தமிழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி மும்பை மாடலில் வெறித்தனமாக நடக்கிறது.

சாஸ்திரங்களுக்கு விரோதமாக விநாயகரைச் சாக்கடை ஓரங்களிலும், சந்துகளிலும் ஆகம விதிகளில் கூறப்பட்ட எல்லா விதிகளையும் மீறி அசுத்தமான இடங்களில் சிலை அமைக்கிறோம்.

இதில் புரளும் பணம் லட்சம் மற்றும் கோடிகளில் மது அருந்தி மாமிசமும் சாப்பிட்டு, ஆவேசத்துடன் ஆடுகின்றனர். இதனால் நிரந்தரமாக உள்ள சிறிய கோயில்கள் மற்றும் அரச மரத்தடி விநாயகர்கள் அனாதையாகி விட்டனர். விநாயகர் சிலை ஊர்வலங்களும், விசர்ஜன விழாவும், விநாயகர் உருவச் சிலைகளைக் காலாலும், கையாலும் ஏறி மிதித்து கழிகளாலும் அடித்து உடைக்கும் அநாகரிகங்களும் அரங்கேறுகின்றன. தேவையா இந்த அசிங்கம்?

மேலும், கொழுக்கட்டை சுண்டல் செய்து படைத்து அதை ஏழை எளியோர்க்கெல்லாம் பிரசாதமாகக் கொடுக்கலாமே! ஈ.வெ.ரா.,வை விடக் கேவலமாக (அவர் 50ம் ஆண்டுகளில் களிமண் பிள்ளையாரை ஒருநாள்தான் உடைத்தார்) நாம் பிள்ளையார் உடைப்பு விழா (போலீஸ் பந்தோபஸ்துடன்) நடக்கிறது. இந்து முன்னணித் தலைவர் ராஜகோபாலன் மனம் வைத்தால் உடனே இதைச் சரி செய்யலாம். வேண்டாம் இந்த ஓட்டு வேட்டை அரசியல்!'

திரு. அனந்த கிருஷ்ணன் சொல்வது போல் இந்து மதத்தில் காணப்படும் மூட பக்தியே நாத்தீகர்களை உருவாக்க உதவுகிறது!
பெரியார் பற்றிக் குறிப்பிட்ட திரு.வி.க. 'பெரியார் இந்நாட்டின் முடிசூடா மன்னர்' என்றார்.

பேரறிஞர் அண்ணா சொன்னார் 'பெரியார் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறிய வேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த கசலகலா வல்லுனர்களும், வெறும் சாமியாடிகளைக் கூடக் கண்டித்துப் பேசச் சக்தியற்றுக் கிடந்த காலை, பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திவே வீசி. நச்சுமரங்களை வேரொடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதையும் உணர வேண்டும். தமிழகத்தின் தன்மானத்திற்கே வித்தூன்றிய தலைவர்.

பெரியார் தமிழினத்தின் இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றிய முழு நிலா! திசை காட்டும் கலங்கரை விளக்கு! மூடத்தனத்தை சுட்டெரித்த எழு ஞாயிறு! தமிழரின் மீளாத் துயில் நீக்கி அவர்களின் தலை விதியை மாற்றி எழுதிய பகுத்தறிவுப் பகலவன். (முழக்கம் - செப்தெம்பர் 19, 2003) 

சீரங்கம் போகாமல் இருப்போமா?

மின்சாரம்

புதுத் திருப்பம் கண்ட திருப்பத்தூருக்குப் பிறகு

தோழர்களே! தோழர்களே!

நாம் சீரங்கத்தில் சந்திக்க இருக்கிறோம் (8.11.2010).

சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? என்று அன்று பாடப்பட்டது. அதன் பொருள் - பிஜேபி, சங்பரிவார் போல கடப்பாரை, மண் வெட்டியை எடுத்துக் கொண்டு உடைத்துத் தூள் தூளாக்குவதல்ல.

ரெங்கநாதன் - நடராஜன் என்ற உருவங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆரிய ஆதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்பை சுக்கல் நூறாக உடைப்பது என்பதுதான்.

இந்த அரங்கநாதனும், நடராஜனும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து காப்பாற்றப்படுவதற்காக பல ஊர்களுக்குத் தூக்கிக் கொண்டு அலைந்தார்கள் - பக்த சிரோன்மணிகள் என்பதெல்லாம் படு தமாஷ்!

அந்த வகையில் இதே திருவரங்கம் கோயில் 50 ஆண்டுகளாக மூடிக்கிடந்தன. காலைத் தூக்கி ஆடும் சிதம்பரம் நடராஜனே 37 ஆண்டுகள், பத்து மாதங்கள், இருபது நாள்கள் அப்ஸ்காண்ட் ஆனான். மதுரை மீனாட்சி கோயிலும் அரை நூற்றாண்டு காலம் மூடிக்கிடந்தது.

அடேயப்பா, இந்தக் கோயில்களின் மூர்த்திகளைப் பற்றி இந்தப் பார்ப்பனப் பண்டாரங்கள் எப்படியெல்லாம் கீர்த்தி பாடி வைத்திருக்கின்றன.

எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த விக்ரகங்களுக்குள் ஏற்றிப் போற்றி வைத்திருக்கின்றன.

வைணவர் புரியாகிய அந்த திருவரங்கம் கழகத்தின் பாசறையாக இருந்து வந்திருக்கிறது. வீறு நடைபோட்டு இயக்கப் பணியாற்றிட எத்தனையோ கருஞ்சட்டைச் சிங்கங்கள் கர்ச்சனை செய்து வந்துள்ளன.

பற்பல மாநாடுகள் - பேரணிகள் - தந்தை பெரியார் அவர்களை அழைத்து ஊர்வலங்கள் - ஒன்றல்ல - இரண்டல்ல. அரங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் கம்பீரமாக சிலை வடிவத்தில் வீற்றிருக்கிறார்.

நீ - யார்! ஆரியப் பார்ப்பனர்களின் கலாச்சாரச் சின்னம்! மூடநம்பிக்கைகளை மொத்தமாகக் குத்தனை எடுத்தவன் நீ! நான் யார் தெரியுமா? அடித்தட்டு மக்களை கரை ஏற்ற வந்தவன்.

மூடக்கிருமிகளை முற்றிலும் அழிக்கவந்த சமூக நல மருத்துவன்! ஆரியக் கலாச்சாரத்தின் ஆணிவேர் வரை சென்று அழித்து முடிக்க வந்த அழிவு வேலைக்காரன் நான் என்று ரெங்கநாதனைப் பார்த்து சொல்வதைப்போல அய்யாவின் சிலை அங்கு. நவம்பர் 8இல் திராவிடர் எழுச்சி மாநாடு திருவரங்கத்தில்.

அன்று தந்தை பெரியார் அவர்களுக்குத் தமிழர்கள் போட்டி போட்டுக் கொண்டு அன்பளிப்புகளைக் குவித் தனர். எடைக்கு எடை எத்தனை எத்தனை வகையான பொருள்களை எல்லாம் வாரி வழங்கினர்! இறைவனுக்குத் தான் துலாபாரம் என்ற நிலையைத் துடைத்தெறிந்து இறைவன் ஏதடா? என்ற பகுத்தறிவு வினா எழுப்பிய ஈரோட்டு இறைவனுக்குத்தான் தமிழ் நாட்டு மக்கள் இத்தனை இத்தனை வகையான அன்பளிப்புகள்.

எடைக்கு எடை வெள்ளி ரூபாய் (தஞ்சை, 6.11.1957), எடைக்கு எடை நவதானியம் (லால்குடி, 24.9.1963), கார் டயர் - ட்யூப்புகள் (கள்ளப்பெரம்பூர், 2.11.1963), எடைக்கு எடை மிளகாய் (பெருவளப்பூர், 10.6.1964), எடைக்கு எடை எண்ணெய் (இடைப்பாடி, 11.9.1964), எடைக்கு எடை மஞ்சள் (ஈரோடு, 3.10.1964), துவரம்பருப்புத் துலாபாரம் (திருச்செங்கோடு, 17.10.1964), எடைக்கு எடை காய்கறி (திருவள்ளூர், 21.10.1964), எடைக்கு மேல் ஒன்றரை மடங்கு படுக்கை விரிப்புகள் (பெட் ஷீட்டுகள்) (கரூர், 25.10.1964), எடைக்கு எடை திராட்சைப் பழம் (பெங்களூர், 15.11.1964), எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள் (பெங்களூர், 6.11.1964), எடைக்கு எடை அரிசி (திருவாரூர், 1.12.1964), பால் துலாபாரம் (திருச்சி, 10.12.1964), எடைக்கு எடை இரண்டு காசுகள் (வ.ஆ., திருப்பத்தூர், 13.12.1964), எடைக்கு எடை சர்க்கரை (திருக்கழுக்குன்றம், 14.12.1964), பெட்ரோல் துலாபாரம் (குளித்தலை, 10.1.1965), எடைக்கு எடை காப்பிக் கொட்டை (சிதம்பரம், 16.1.1965), எடைக்கு எடை பிஸ்கட்டுகள் (பண்ருட்டி, 18.1.1965), எடைக்கு எடை மணிலா எண்ணெய் (அரகண்டநல்லூர், 19.1.1965), எடைக்கு எடை கைத்தறி நூல் (குடியாத்தம், 21.1.1965), எடைக்கு எடை நெல் (செங்கம், 22.1.1965), எடைக்கு எடை நெல் (அனந்தபுரம், 23.1.1965), எடைக்கு எடை இரு மடங்கு வாழைக்காய் (வள்ளியூர், 1.5.1965), எடைக்கு எடை பருப்பு மற்றும் உப்பு (தூத்துக்குடி, 2.5.1965), எடைக்கு எடை சர்க்கரை (அலங்காநல்லூர், 16.2.1970), எடைக்கு எடை நெல், வெங்காயம், உப்பு (பெண்ணாடம், 21.9.1970), நெல் துலாபாரம் (இலந்தங்குடி, 8.7.1972).

இவை அன்னியில் டயர் வண்டி (லால்குடி), கறவைப் பசு (தஞ்சை).

புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய், துவரை, கொத்துக்கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கிடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயறு, கோதுமை, அரிசி, கழகக் கொடிபோட்ட முக்கால் பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச்சோளம், எருமை மாடு, செங்கல் ஆயிரம், விறகு 5 எடை என்று கொடுக்கப்பட்டது உண்டு.

ஒரு கடவுள் மறுப்பாளருக்கு மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்து, தம் அன்பு வெள்ளத்தால் மூழ்கடித்தது - தந்தை பெரியார் என்ற மாசற்ற மாபெரும் புரட்சியாளருக்கு மட்டும்தான்.

சில இடங்களில் கோயிலில் பயன்படுத்தும் அதே சப்பரத்தில் - தேர்களில் கூட தந்தை பெரியாரை அமர வைத்து வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதுண்டு.

தெய்வச் சிலையை தெப்பத்தில் வைத்து அழைத்துச் சென்றதுபோல, தெய்வத்தை சில்லு சில்லாக உடைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கும் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டதுண்டு.

அந்தப் புரட்சியாளர் மறைவுக்குப் பிறகும், அந்தப் புரட்சிச் சுடர் எந்த சூறாவளியானாலும் அணைந்து விடக் கூடாது என்ற எண்ணம் திராவிட மக்கள் நெஞ்சில் நின்றது.

அன்னை மணியம்மையாரும், அவர்களுக்குப் பிறகு ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும், அணையா விளக்காக அய்யா கொள்கைகளை ஏந்திச் சென்றனர். பணிகள் தொடர்கின்றன!

தமிழ் மக்களும் அய்யாவிடம் காட்டிய அதே அன்பை - ஆதரவை அய்யாவின் சீடர்களுக்கும் காட்டி வருகின்றனர் - காரணம் அய்யா பணி தொடரப்பட வேண்டும் என்பதற்காகவே!

அதனுடைய பிரதிபலிப்புதான் தஞ்சையிலே தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம், புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி, ஒவ்வொரு ஊரிலும் இரு மடங்கு எடை அளவுக்கு ரூபாய் நாணயங்கள்.

நவம்பர் 8இல் திருவரங்கத்தில் நடைபெறும் திராவிடர் எழுச்சி மாநாட்டிலும் தமிழர் தலைவருக்கு விதவிதமான பொருள்களை எடைக்கு எடை அளித்து மகிழ இருக்கிறார்கள்.

திருப்பத்தூர் பொதுக்குழுவில் லால்குடி மாவட்டக் கழக செயலாளர் ஆல்பர்ட் அவர்கள் அந்தப் பட்டியலைத் தெரிவித்தபோது உற்சாகத்தால் தோழர்கள் பலத்த கரஒலி எழுப்பினர் (என்ன பண்டக சாலையா வைக்கப் போகிறீர்கள்? என்று குறுக்கிட்டுக் கேட்டார் கழகத் தலைவர் - ஒரே சிரிப்பொலி).

திருவரங்கத்தில் நேற்று (25.10.2010) நடைபெற்ற மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்; தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் (கரூர் மாவட்ட மற்றும் லால்குடி மாவட்ட கழகத் தலைவர் தே.வால்டர்), புள்ளம்பாடி ஒன்றியம் சார்பில் வெங்காயம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சார்பில் பொன்னி அரிசி, முசிறி ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தேங்காய், தொட்டியம் ஒன்றியக் கழகம் சார்பில் வாழைக்காய், துறையூர் ஒன்றிய தி.க., ப.க., சார்பில் வேர்க்கடலை, உப்பிலியாபுரம் ஒன்றிய தி.க., ப.க., சார்பில் எலுமிச்சம் பழம், லால்குடி ஒன்றிய கழகம் சார்பில் பரங்கிக்காய், பூசணிக்காய், திருவரங்கம் எஸ்.கே.பி. குடும்பத்தின் சார்பில் பொன்னி அரிசி, மாவட்ட இளைஞரணி சார்பில் 78 பொருள்கள் என்று பட்டியல் விரிந்து கொண்டே போகிறது.

கழகத் தோழர்களும், பொதுமக்களும் திராவிடர் கழகத்தின் மீதும், அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் மீதும் வைத்திருக்கும் பற்று, மதிப்பு, எதிர்பார்ப்பு எத்தகையது என்பதற்கான எடுத்துக் காட்டுகள் இவை.

இதில் எந்த ஒரு பொருளும் கடுகத்தனை அளவுக்குக் கூட தனிப்பட்ட முறையில் தலைவரைச் சேரப்போவ தில்லை; எல்லாம் இயக்கத்திற்கும், கல்வி நிறுவனங் களுக்கும்தான்.

ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு வகையில் களைகட்டி வருகிறது.

திருவரங்கம் வேறொரு பரிமானத்தில் பளிச்சிடுகிறது.

தில்லை போகாமல் இருப்பேனா - தில்லை நடராஜனைத் தரிசிக்காமல் இருப்பேனா என்று சொன்னது அந்தக் காலம். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த பக்தனின் உள்ளம் அது.

திருவரங்கம் போகாமல் இருப்போமோ - திராவிடர் எழுச்சி மாநாட்டைக் காணாது இருப்போமா என்பது இன்றைய எழுச்சிச் சகாப்தத்தின் இன்னொரு முகம்.

சீரங்கம் வைணவத்தின் கோட்டையல்ல. கருஞ் சட்டைப் பாசறையின் பாடி வீடு என்பதைக் காட்ட கருஞ்சட்டைப் பட்டாளமே புறப்படு! புறப்படு!பெரியார் தமிழ் மொழி, தமிழ் இன எதிரியா ?

- முனைவர் பா.இறையரசன்


 

முல்லைப் பெரியாறு என்பதைக் கேரளர்கள் முல்லா பெரியார் என எழுதித் தமிழர்களிடமிருந்து வேறுபடுத்த முற்படுவர். தமிழர்கள் இதுவரை தந்தை பெரியார் என அழைத்த தலைவரை இன்று வந்தேறி என்றும் தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் இரண்டகர் (துரோகி) அதனால் அவர் பெரியார் இல்லை, சிறியார் என்றும் எழுதி வருகின்றனர். திராவிடத் தேசியம் பேசியும், தமிழைத் தாக்கியும் பெரியார் பேசியவை தமிழ்த் தேசியத்தை வளரவிடாமல் தடுத்து விட்டது என்பது அவர்களது குற்றச்சாட்டு. பெரியார் தமிழ் மொழிக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராகத் திராவிடத் தேசியம், திராவிடக் கழகம், திராவிடக் கட்சிகள் ஆகியவற்றை வளர்த்திருந்தால் அவரது செயல்பாடுகள் தவறானவையே.

பெரியாரது கொள்கைகளிலும் செயல்பாடுகளிலும் தவறு எனக் கண்டதைத் திறனாய்வு செய்ய கூடாது, குறை சொல்லக் கூடாது என்பதும் தவறு. தம்முடைய கருத்துகளில் தவறோ குற்றமோ இருப்பின் அதைத் தவறு, குற்றம் என்று காணக் கூடிய பகுத்தறிவும் திறமையும் மிக்கவர்கள் பிற்காலத்தில் தோன்றுவதை வரவேற்பதாகக் கூறியுள்ளார் பெரியார். எனவே பெரியாரின் கருத்துகளில் குறை இருப்பின் கூறுவது தவறில்லை.

பெரியார் தமிழ் மொழி இலக்கண இலக்கியம் முறைப்படிப் படித்தவர் இல்லை. அவர் பகுத்தறிவு, தன்மானம், கடவுள் மறுப்பு ஆகிய நோக்கில் சிந்தித்த நாத்திகர். அவரது பார்வையில் மொழி என்பது ஒரு கருவி. எனவே மொழியைத் தாக்கியோ, தூக்கி எறிந்தோ அவர் பேசியவற்றை நாம் ஏற்க வேண்டியது இல்லை. மொழி பற்றிய தமிழரின் முடநம்பிக்கையையும் செயலின்மையையும் சாடுவதற்கு அவர் கடினமான தாக்குதல் சொற்களைக் கையாண்டார். அது மதத்தையும், கடவுளையும், மக்களை முடநம்பிக்கையில் ஆழ்த்திய பார்ப்பனர்களையும் எதிர்த்து வீசிய கடுநடை வடிவம்ஆகும். மிக மிகுதியான அறியாமையிலும் மூடப் பழக்க வழக்கங்களிலும் மூழ்கிக் கிடந்த படிக்காத எளிய ஏழை மக்களைத் திருத்த, மிகக் கடுமையாகவும் அழுத்தமாகவும் சொற்களைப் பயன்படுத்தினார்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னால் தான் உயர்ந்த சாதி என்பதால் பார்ப்பன சாதிச்சிறுவன் தாழ்ந்த சாதிப் பெரியவர்களை மூத்தவர்களைக் கூட . வாடா .போடா.. என்றுதான் பேசுவான்; மற்ற சாதிக்காரர்களை . வாபோ. என்றுதான் பேசுவான்; மற்றவர்கள் அவர்களை அழைக்கும்போது சிறுவனாக இருந்தாலும், தன்னைவிட குறைந்த படிப்பு பதவியில் இருந்தாலும் ஏன் உணவகத்தில் பரிமாறுபவனையும் சாமி என்றுதான் சொல்லவேண்டும். இதை விட இழிவான கொடுமைகள் இருந்தன. அத்தகைய கொடுமைகளைப் போக்கி நம்மை மானம் மரியாதையோடு வாழச் செய்தவர் பெரியார்.

பார்ப்பனர்களின் கொடிய வருணாசிரமத் தீமைகளுக்காக அவர்களைச் சாடினாரே தவிர எந்தவகையிலும் அவர்களைத் தாழ்த்தவில்லை. எந்தச் சாதியாக இருந்தாலும் பார்ப்பனர்களாக இருந்தாலும் சிறுவர்களாக இருந்தாலும் வாங்க என்று மரியாதையோடுதான் பேசுவார். பாம்பைக் கண்டால் கூட விட்டுவிடு; பார்ப்பானைக் கண்டால் அடி! என்பது தொடக்கக் காலத்தில் அவர்களது நச்சுக் கருத்துகளுக்காக அவர் பேசிய கடும் பேச்சே! பார்ப்பனர்களை அடிப்பதையோ இழிவுபடுத்தியதையோ அவர் என்றும் ஏற்றதில்லை. திருவையாற்றில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்தினார்; தெருவிலோ குளக்கரைகளிலோ பாதுகாப்பற்றிருக்கும் எந்தப் பிள்ளையார் சிலைகளையும் அவர் உடைக்கச் சொல்லவில்லை.

தமிழ் மொழியின் எதிரியா?

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றார்; பெரியபுராணத்தையும் திருக்குறளையும் குறை கூறினார்; ஆங்கில மொழியைப் படி என்றார்; வீட்டு வேலைக்காரியிடமும் ஆங்கிலம் பேசு என்றார் - இத்தகைய குற்றச்சாட்டுகள் வெகுநாளாய்ப் பெரியார் மேல் கூறப்படுகின்றன.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறுவது தமிழை உயர்வு செய்வதே; மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலேயே பேசப்பட்ட மொழி என்று பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு ஒருவர் பேசினார். அடுத்து பேசிய பெரியார் இதெல்லாம் ஏமாற்று. நான் உண்மையிலேயே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றுதான் சொன்னேன் என்றார். இதனால் அவரது உண்மைத் தன்மையும் பொய்யாக போலியாக நடிக்காத பேசாத மாற்றி ஏமாற்றி பேசாத தன்மையும் வெளிப்படுகின்றன.

எங்கள் கல்லூரியில் (தஞ்சை பூண்டி புட்பம் கல்லூரியில்) பெரியார் வந்திருக்கிறாரே என்று விழா தொடங்கும் போது கடவுள் வாழ்த்துப் பாடும் மரபை மாற்றித் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினர். அப்போது தம் உடலில் சிறுநீரகத்துடன் பொருத்தியிருந்த சிறுநீர் வாளியுடன் எழுந்து நின்ற பெரியார், பேசும் போது, மூட நம்பிக்கையை எதிர்ப்பவன் நான் என்பதால் எனக்காகக் கடவுள் வாழ்த்துப் பாட வில்லை என்று நினைக்கிறேன்; மொழி வாழ்த்தும் ஒரு மூட நம்பிக்கைதான் என்றார்.

மொழி வாழ்த்து ஒரு மூடநம்பிக்கையாகத்தான் இருக்கிறது என்பதும் உண்மைதானே! தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று வாய் கிழியக் கத்துகிறான் தமிழன்; தமிழ் வளர்ச்சிக்கு உரியவற்றைப் புறந்தள்ளுகிறான். ஆனால் கன்னடன், மலையாளி தம் மொழி வாழ்க என்று கத்துவதில்லை; வளர்ச்சிக்கு வேண்டியவற்றைச் செய்கின்றனர். நாம் தமிழ்ப் பள்ளிகள் தமிழ் வழிக்கல்வி ஆகியவற்றைத் தொடக்கடப்பள்ளி அளவிலே கூட மூடிக் கொண்டு வருகிறோம்; மறுபக்கம் 100 கோடியில் தமிழ்த் தாய் சிலை! அச்சிலைக்கு பார்ப்பனனை வைத்து சமற்கிருதத்தில் பூசை நடத்தினாலும் வியப்பதற்கில்லை.

பெரியார் தமிழ் இலக்கியங்களைச் சாடினார்; கம்பராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்றார் எனில் அதற்குக் காரணம் அவை மூட நம்பிக்கையைப் பரப்புகின்றன என்பதைவிட தமிழர்களுக்கு எதிரானவை என்பதாலேயே அவற்றை எதிர்த்தார். அதனால்தான் இராவண லீலா நடத்தி இராவணன் பொம்மையைக் கொளுத்தும் வடநாட்டார் தில்லியில் பெரியார் மையத்தை இடித்தனர்.

பெரிய புராணம், இராமாயணம் பாரதம் ஆகியவற்றில் உள்ள குறைகளை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கூட எடுத்து எழுதியுள்ளனர். எனவே மூடநம்பிக்கை, ஒழுக்கக் கேடு முதலிய இழிவுகள் இப்புராணங்களில் இருப்பதை சமயத்துறை சார்ந்தவர்களே அசிங்கமாக நினைத்து ஒதுக்கிவிட்டனர். திருக்குறளில் உள்ள பெண்ணியம், ஊழ்வினை பற்றிய சில கருத்துகளைத் திறனாய்வாளர்கள் குறை கூறியுள்ளனர். திருக்குறளைக் குறை கூறினாலும், அதிலுள்ள பெரும்பான்மை உயரிய கருத்துகளைப் போற்றித் திருக்குறள் மாநாடு (1948) நடத்தியவர் பெரியார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக எழுத்துச் சீர்திருத்தம் வேண்டும் என்று கூறியதுடன் அதனைத் தம் விடுதலை இதழில் செயற்படுத்தியவர். தமிழில் அறிவியல் தொழில் நுட்பக் கருத்துகள் வர வேண்டும் என்று இடைவிடாது கூறியவர். பெரியாரின் நண்பர் கோ. து. நாயுடு (ஜி. டி. நாயுடு) அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தமிழகத்துக்குக் கொடுத்தவர்.

இந்தியை எதிர்த்து மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பாவாணர் ஆகியோர் போராடினர். அவர்களுக்குத் துணையாக நின்று பின் அப்போராட்டத்தினை ஏற்று நடத்தியவர் பெரியார். மறைமலையடிகளும், பாவாணரும் ஆங்கிலம், சமற்கிருதம் ஆகியவற்றை எதிர்க்கவில்லை. அவற்றைக் கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள்.

பெரியார் அறிவியல் நுட்பங்கள் தமிழில் வர ஆங்கிலக் கல்வி தேவை என்பதைக் கூறியுள்ளார். மேலும் வாழ்வியலில் ஆங்கிலம் உள்ளதால் தாழ் நிலையில் கிடக்கும் தமிழர்கள் ஆங்கிலம் பேசினால்தான் மதிக்கப் படுவார்கள் என்பதைக் கூறும் வகையில் வேலைக்காரியுடனும் ஆங்கிலத்தில் பேசு என்றார். இன்றைக்குப் பள்ளிக் கூடங்களில் வீட்டில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்கின்றனர்.

இன்று தமிழ்நாட்டில் பெரிய தனியார் நிறுவன அலுவலகங்களில், பேரங்காடிகளில், பெரிய உணவகங்களில், ஏன் முடி வெட்டும் கடைகளில் கூட உரிமையாளரோ மேலாளரோ தமிழராக இருந்தாலும் வேலையாட்கள் வடநாட்டாராக இருப்பதால் ஆங்கிலத்தில்தான் நம்முடன் பேசுகின்றனர். பெரியார் சமயத்துறையில் உள்ள மூடநம்பிக்கைகளைக் களைய முற்பட்டதைப் போல, இந்திய அரசமைப்பில் இந்தியைத் திணித்ததை எதிர்த்தது போல, வாழ்வியலில் உள்ள ஆங்கிலமே உயரிய வாழ்வு என்னும் மூடநம்பிக்கையைக் களையவும் முற்பட்டிருக்க வேண்டும். இதனைச் செய்யாதது பெரியாரின் குறையே.

சமற்கிருதத்தில் மந்திரம் கூறித் திருமணம் செய்யும் முறையைத் தூக்கியெறிந்து சுய மரியாதைத் திருமணம் என ஏற்படுத்தித் தமிழ்த் திருமணங்கள் நடக்க வழி செய்தார் பெரியார். அதனால்தான் மேடைத் தமிழ் வளர்ந்தது. பெரியார் நம் மொழி தமிழ் மொழி என்று கூறியவர். அவர் தமிழின் எதிரி இல்லை; மொழி பற்றி பழப் பெருமை பேசுவதையும், இழிவான (ஆபாச) புராணக் கதைகளையும்தான் எதிர்த்தார். ஆயினும் தமிழில் வழிபாடு, தமிழிசை, தமிழ் வழிக் கல்வி, தமிழில் அறிவியல் நூல்கள் ஆகியவற்றுக்காகப் பெரிதும் போராடினார்.

தமிழ் நாட்டுக்கு எதிரியா?

தாம் கன்னடர் என்பதால் பெரியார் தமிழ் இன எதிரியாக இருந்தார் என்று குறை கூறுகின்றனர். பெரியார் பிறந்த சாதி என்பதால் அவ்வாறு கூறப்படுகின்றார். அவர் என்றுமே தன்னைக் கன்னடன் என்றோ கன்னட மொழி பேச வேண்டும் என்றோ கூறியவர் இல்லை. அவர் கன்னட நாட்டுக்காக உழைத்தவரும் இல்லை. தமிழராகத்தான் வாழ்ந்தார். சாகும் வரை தமிழ் படித்தார்; எளிய தமிழில் மேடையில் பேசினார்; தமிழ் மக்களுக்காகத், தமிழ் நாட்டுக்காகத், தமிழர் முன்னேற்றத்திற்காக உழைத்தார். தமிழ்நாட்டு நலம்தான் பேசினார்.

காமராசர் முதலமைச்சரான போது, இதுவரை தெலுங்கனும் பிறரும் ஆண்டனர்; இப்போதுதான் பச்சைத் தமிழன் ஆட்சி வந்துள்ளது என்றார்.தமிழ்ப் பேராசிரியர்களை விட சமற்கிருதப் பேராசிரியர்களுக்கு அதிக ஊதியம் என்ற நிலை பற்றி அறிந்து சம ஊதியம் வழங்க வேண்டும் என்று (1920) போராடி வெற்றி பெற்றார்.

தமிழர்களுக்கு மட்டுமில்லாது தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர், கன்னடர், யாராக இருந்தாலும் நம்மொழி தமிழ்தான் என்று கூறினார். மொழிவழி மாநிலம் வந்ததால் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும் 1955- வாக்கில் ஒருங்கிணைந்த பழைய சென்னை மாநிலத்தை விட்டுப் பிரிந்து சென்றனர். அதனால், திராவிட நாடு, திராவிடத் தேசியம், தட்சிண பாரதம் என்பன அடிபட்டுப் போயின. எனவே, பெரியார் தம் விடுதலை இதழின் முதல்பக்கத்தில் முழக்கமாக இருந்த திராவிட நாடு திராவிடருக்கே என்பதைத் தமிழ் நாடு தமிழருக்கே என்று மாற்றினார்.

ஈரோட்டில் பெரியாரின் குடியரசு இதழைத் தொடங்கி வைத்தவர் தவத்திரு ஞானியாரடிகள் ஆவார். நாத்திகரான பெரியாரும் ஆத்திகரான ஞானியாரடிகளும் தமிழகம் முழுவதும் தமிழ் மொழி இனநலம் பற்றி ஒரே மேடைகளில் முழங்கினர். ஞானியாரடிகளின் 60 ஆம் அகவை (வயது) நிறைவு விழாவின் போது கரந்தையில் பெரியார் ஞானியாரடிகளின் காலில் விழுந்து வணங்கியதால், எல்லோரும் விழுந்து வணங்கினர்; தமிழன் எவன் காலிலோ விழுவதற்கு இன்னொரு தமிழன் காலில் விழட்டும் என்றாராம்.

பிறப்பால் சாதி கூறி மக்களைப் பிரிக்கும் வருணாசிரம முறையை எதிர்க்கும் பெரியாரை வேண்டுமென்றே பார்ப்பன இதழ்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று சாதிப் பெயரைச் சேர்த்து எழுதின. இப்போது அவரைக் கன்னடத்து நாயக்கர் என்று குறிப்பதும் அத்தகையதே. தெலுங்குப் பார்ப்பனர் ஆகிய அ.மாதவையா தமிழ்க்கல்வி வேண்டும் என்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேசி வாதிட்டு முடித்தபோது உயிர் நீத்தார். பெரியார் தம் வாழ்நாளின் இறுதிவரைத் தமிழகத் தமிழர்களுக்காகத்தான் வாழ்ந்தார்.

தமிழ் இனத்துக்கு இரண்டகமா?

எப்பொருள் எத்தன்மையாயினும்
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றார் வள்ளுவர். பெரியாரே ஆயினும் காந்தியடிகள், விவேகானந்தர், பாரதியார் என்று எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்களது கருத்துக்கள் திறனாய்வுக்கு உட்பட்டவையே! பெரியாருடைய எல்லாக் கருத்துக்களையும் எல்லாக் காலத்திலும் ஏற்க முடியாது.

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காத இறைப்பற்றாளர்கள் அவருடைய சீர்திருத்தக் கருத்துகளை ஏற்றார்கள். தமிழ் நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள் 5% தான்; மீதி 95% கடவுள் பற்றாளர்களில் 90 விழுக்காட்டினராவது பெரியாரை மதிப்பவர்கள்! ஞானியார் அடிகள், மறைமலை அடிகளில் இருந்து அண்மைக்காலத்தில் வாழ்ந்த குன்றக்குடி அடிகளார் வரை ஏன், இன்றைய மதத் தலைவர்கள் வரை அனைவரும் பெரியாரை மதிப்பவர்களே! அதைப்போல இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் பிற இன ஆதிக்க எதிர்ப்பாளர்களும் இந்தி (ய) அரசு வல்லாண்மை எதிர்ப்பாளர்களும் பெரியார் பாசறையில் உருவானவர்களே!

பார்ப்பனர்களின் சாதி மேலாதிக்கத்தையும் தீண்டாமை வெறியையும் எதிர்த்த அவர், பார்ப்பனர்களையோ மற்ற சாதியினரையோ மதிப்புக் குறைவாக நடத்தியதில்லை. அதனால்தான் இராசாசி, கல்கி முதலிய பார்ப்பனர்கள்கூட அவரை மதித்தனர்; பெரியார் மறைந்த போது, ஆனந்த விகடன் அவர்படத்தை அட்டையில் வெளியிட்டது.

பெரியாரின் கடவுள் மறுப்பைப் பலர் ஏற்காதது போலப் பெண்ணியம் பற்றிய கருத்துக்களை முற்போக்குப் பெண்ணிய வாதிகளே ஏற்பதில்லை; அல்லது பின்பற்றுவதில்லை. எந்தக் கருத்தில் மாறுபட்டாலும் பெரியார் செய்த மக்கள் தொண்டை சமுதாயப் புரட்சியை நாம் மறுக்க முடியாது. சாதியக் கொடுமைகள் நீங்கவும் கலப்பு மணம் கைம்பெண் மணம், தமிழ்முறைத் திருமணம் பெருகவும் பெண்கல்வி மிகவும், பெண்கள் சமத்துவம் பெறவும், ஏன் , ஆண்களே கூட சாதி மதம்,பதவி, பணம் , நிறம் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்டிருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கிச் சமத்துவம் பெறவும் செய்தவர் பெரியார். பெரியாரின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் தீண்டாமை ஒழிப்பால் முன்னேறியவர்களும் கல்வி அறிவும் பதவிகளும் பெற்றவர்கள் தமிழ் மொழிக்கோ தம் சமுதாயத்துக்கோ கூட ஒன்றும் செய்யாமல், பெரியார் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று இழிவாகப் பேசுகிறார்கள்.

அக்காலத்தில் உணவகங்களிலும், பள்ளிகளிலும், பள்ளி கல்லூரி விடுதிகளிலும் பார்ப்பனர்களுக்குத் தனிப் பந்தி, மற்ற சாதிக்காரர்களுக்கு தனிப் பந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி அல்லது வெளியில். தண்ணீர் குவளைகளில் தர மாட்டார்கள்; கையில் ஊற்றுவார்கள். சட்டை போடவோ செருப்பு அணியவோ கூட உரிமை இல்லாமல் பெரும்பான்மை மக்கள் வாழ்ந்ததை மாற்றியவர் பெரியார். அவர்கள் பிராமணன் என்றால் மற்றவர்கள் சூத்திரர் (இழிந்தவர்) எனக் குறிக்கும். எனவே, பிராமணாள் ஓட்டல் என்று எழுதியிருந்த பலகைகளை அவர் கருப்பு மை பூசி அழித்தார். பெரியாரின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் சட்டமாக்கப்பெற்று பிற்படுத்தப்பட்டவர்களையும் தாழ்த்தப்பெற்றவர்களையும் முன்னேற்றியது; வி.பி.சிங் முதன்மை அமைச்சராக இருந்த காலத்தில் (1990 ஆகத்து) இந்திய அளவில் சட்டமாக்கப் பெற்றது.

தேவிகுளம், பீர்மேடு பற்றிப் பெரியார் கவலைப்படவில்லை; குளமாவது மேடாவது; எல்லாம் இந்தியாவுக்குள்தானே இருக்கு என்றார் அப்போது முதலமைச்சராக இருந்த காமராசர். இந்திய இனம் என்று நினைத்தது காமராசரின் தவறு; திராவிட இனம் என்று நினைத்தது பெரியாரின் தவறு தேவிகுளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், பெங்களூர், மூணாறு முதலியவற்றை விட்டுக்கொடுப்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு என்று பெரியாருக்கும் காமராசருக்கும் புலப்படாதது பெருங்குறையே!

மொழி வழிப் பிரிந்தாலும் இனவழிக் கூட்டாட்சி என்ற திராவிடக் கனவு இக்குறைக்குக் காரணம் என்பர். இது தவறு . வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றாலும் தென்னாட்டுப் பார்ப்பனரும் வடநாட்டுப் பணியா (வணிகர்) கும்பலும் முழு விடுதலை பெற விட மாட்டார்கள் என்று மராட்டிய கோவிந்தராவ் புலே, அம்பேத்கார், பெரியார் முதலியோர் கருதினர்.; 1955- வாக்கில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபோது பெரியார், தட்சிணப் பிரதேசம் எனப்பிரிந்தால் வடநாட்டு பணியா (வணிகர்) தென்னாட்டுப் பார்ப்பனர் ஆகியோர் ஆதிக்கசெலுத்துவர் ; மேலும் மலையாளிகளும் தெலுங்கருமே பெரிய பதவிகளில் இருப்பர்; தமிழர்கள் கூலிகளாகத்தான் இருப்பர் - என்றார். பெரியார் தமிழ் நாட்டுக்கோ தமிழ் இனத்துக்கோ எந்த இரண்டகமும் செய்தவர் இல்லை. கன்னடர் தெலுங்கர் , மலையாளிகள் என்று அவர்களுடைய மொழி இன நலத்துக்காகப் பாடுபட்டவர் இல்லை.

பெரியார் தமிழ் ஈழவிடுதலைக்குப் பாடுபடவில்லை என்று குறை கூறுவர். நானே அடிமை, ஈழவிடுதலைக்கு எப்படி உதவமுடியும்? என்றார். தமிழீழப் போராளிகளுக்கு உதவிய எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி பின்வாங்கினர்; அதற்குக் கரணியம் இந்திய அரசியல் (பார்ப்பன- பனியா) சட்டத்துக்கு உட்பட்டாக (அடிமையாக இருக்க) வேண்டிய நிலையே! கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டதும், பிந்தைய ஆட்சிக்காலத்தில் அஞ்சிப் பழியேற்றதும் நடந்த உண்மை. இப்போதும் இஅ விடுதலை, கச்சத்தீவு மீட்பு, மீனவர் காப்பு என செயலலிதா தீர்மானங்கள் நிறைவேற்ற முடிந்ததே தவிர தமிழக மீனவர்களைக் கூடக் காக்கமுடியவில்லை.

மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தும், பொதுத்தொண்டில் யாவற்றையும் இழந்து, அரசியலால் தமக்குப் பணம் வந்தபோதும் எளிமையாய் கருமியிலும் கருமியாய் தமக்குரிய வசதிகளைத் துறந்து வாழ்ந்து பெரியார் கொள்கை பரப்புவதற்காகச் சேர்த்த சொத்துக்கள் தமிழ் நாட்டில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் தொழில் செய்து கோடிகோடியாகப் பணம் பண்ணுகிற பிற இனத்தவர்கள் தத்தம் மாநிலத்துக்குக் கொண்டு போவது போலக் கொண்டு போகவில்லை. தமிழ் இனத்தவர் சிலரே கூட தமிழ் மொழிக்கோ தாம் பிறந்த தமிழ் மண்ணுக்கோ , தாழ்ந்து கிடக்கும் தம் சொந்தங்களுக்கோ கூட பயன்படுத்தாமல் வெளி மாநிலத்துக்கு வெளி நாட்டுக்கு சுவிசு வங்கிக்குக் கொண்டு போவது போல் பெரியார் கொண்டு போகவில்லை!

பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையும் சாதி மறுப்பும் பகுத்தறிவும் பரப்பிய நாத்திகர். அவருக்குச் சாதி, மதம், கடவுள் போல் மொழியும் ஒரு பொருட்டால்ல. ஆயினும் கடவுள் பெயரைச் சொல்லி சமற்கிருதத்தை உயர்த்தித் தமிழ் மொழியைத் தாழ்த்துவதையும், பார்ப்பனரை உயர்த்தி மற்ற மக்களைத் தாழ்த்துவதையும் எதிர்த்தார். அவர் தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடையே நிலவிய மத மூட நம்பிக்கைகளையும் சாதிச் சழக்குகளையும் தீண்டாமைக் கொடுமையையும் பெண்ணடிமையையும் போக்கப் போராடிய புரட்சியாளர். திராவிடம் பற்றிய கருத்துகளையும் தமிழ்மொழி பற்றிய கருத்துகளையும் நாம் ஏற்கவில்லை என்றாலும் அவருடைய சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும் அவற்றை நிலைநாட்ட அவர் உழைத்த பெரும் பணியையும் நாம் போற்றி மதிப்போம்!

( தமிழரங்கம் - காலாண்டு ஆய்விதழ், சனவரி, 2014)


 

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது!

ஞாயிறு, 18 செப்டம்பர் 2011 16:12

இந்தப் பழமொழியைக் கேள்விப்பட்டு இருக்கலாம்; இது யாருக்கு பொருந்து கிறதோ, இல்லையோ கண்டிப் பாக பூணூல் தினமலருக்கு நூற்றுக் நூறு பொருந்தும்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: நமது விழி திறந்த வித்தகர், மான உணர்வை மறந்து, துறந்து, அடிமைகளாகி, காலம் காலமாக கால்நடைகளை விடக் கேவலமாக வாழ்ந்த திராவிடர் மக்களாகிய நமக்கு மானமும், அறிவும் போதித்த நம் அறிவுப் பேராசான் பெரியா ரின் 133ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

டவுட் தனபாலு: யாரு... தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை... இங்கிலீஷ் படிக்க லைன்னா நாசமாகப் போயிடு வோம்னு திட்டிட்டே இருந் தாரே... அவரோட பிறந்த நாள் தானே... கொண்டாடுங்க, கொண்டாடுங்க...!
- தினமலர் 18.9.2011

தந்தை பெரியார் பிறந்த நாள், தமிழ் நாட்டைக் கடந்து, உலகம் முழுமையும் கொண்டா டப்படும் நிலையைக் கண்டு தினமலர் பூணூலுக்கு எய்ட்ஸ் கண்டு விட்டதாகத் தெரிகிறது.

அக்கப்போராக எழுதுவது தந்தை பெரியாரைக் கொச் சைப் படுத்துவது, திராவிடர் கழகத் தலைவரைச் சீண்டிப் பார்ப்பது - இவற்றைச் செய்யா விட்டால் அவாளுக்குத் தூக் கமே வராது போல் தெரிகிறது.

பெரியார் தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்று சொன் னது, தமிழை இழிவுபடுத்த அல்ல.

பார்ப்பனீயப் புராணக் குப் பைகளைக் காட்டி இவைதான் தமிழ் என்று காட்டியபோது கண்டித்தார். தமிழில் முற் போக்கு இலக்கியங்கள் வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதா சன் கூட சமயமென்னும் சூலை யில் தமிழ்நாட்டில் வளராது என்று பாடினார்.

அந்தப் பொருளில்தான் தந்தை பெரியார் கூறினார். தந்தை பெரியார் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு ஆக்கபூர்வ மானது.

தமிழ் எழுத்துச் சீர்திருத் தத்தைதானே அறிமுகப்படுத் தினார். அதனைத்தானே தின மலர் என்னும் திரிநூல் ஏடும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.

திருக்குறள் மாநாட்டைக் கூட்டியவரும் அவரே! உன் மதம் என்ன என்று கேட்டால், திருக்குறளான் என்று சொல்லு என்று சொன்னவர் அவரே! சங்கராச்சாரியார் போல தமிழ் நீச்ச பாஷை - சூத்திரப் பாஷை என்றா பெரியார் சொன்னார்? கோயிலுக்குள் தமிழ் வழிபாட்டு மொழியாக்கத் தமிழுக்குத் தகுதியில்லை என்று ஜெயேந்திர சங்கராச் சாரியாரும், சோவும் இதுவரை சொல்லிக் கொண்டு இருக் கிறார்களே. நீதிமன்றம் வரை சென்றவர்கள் பார்ப்பனர்கள் தானே! தீக்குறளை சென்றோ தோம் என்று ஆண்டாளின் பாட்டுக்குத் துய திருக்குற ளைப் படிக்கமாட்டோம் என்று ஆண்டாள் பாடியதாகச் சொன்ன ஆசாமி செத்துப் போன சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சரஸ்வதிதானே! குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள் என்பதை அறியாத அமா வாசை இருட்டா அவர்? அவ ருக்கா தெரியாது - எல்லாம் தெரிந்தவர் பெரியவாள் என்று சொல்லுவார்களேயானால் அதன் பொருள் என்ன?

தெரிந்திருந்தும் திருக்கு றளை மட்டம் தட்ட வேண்டும் என்பதுதானே அவாளின் ஜெகத் குருவின் புத்தி! இங்கிலீஷ் படிக்கச் சொல்லிவிட்டாராம் பெரியார். அதில் என்ன குற்றம் கண்டுபிடித்து விட்டது இந்தக் கொலம்பஸ்? மிலேச்ச பாஷை என்று சொல் லிக் கொண்டே இங்கிலீஷ் படித்துவிட்டு, நாலணா வேலைக்குச் செல்லும் பார்ப்பனர் களுக்கு பெரியார் இங்கிலீஷ் படிக்கச் சொன்னது ஆபத்துதானே - அந்த ஆத்திரமோ! ஹிட்லர் வெற்றி பெறுவார் என்று நினைத்து ஜெர்மன் மொழி படித்தவர்களாயிற்றே இந்தப் பார்ப்பனர்கள்.

தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதிய தினமலர் தமிழையும், தமிழரையும், தமிழகத் தலைவர் களையும் கொச்சைப் படுத்து வது என்பதில் மிகத் தீவிரமாக வெறி பிடித்து அலைவதாகத் தெரிகிறது.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காதே! ஆம் என்க!

Read more: http://www.viduthalai.in/home/viduthalai/women/18063-2011-09-18-10-50-13.html#ixzz3THLncP9q