ஓகஸ்ட் 04, 2009 

தமிழ்மக்களது  வாழ்வுரிமையைப் பறித்தவர்களை உயிராய் வளர்த்த எமது தாயக் கனவைக் கலைத்தவர்களை நாம் தோற்கடிக்க வேண்டாமா?

யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைக்கான தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன.

இயல்பு வாழ்க்கையே இல்லாத நிலையில் தமிழ் . மக்கள் மீது துப்பாக்கி முனையில் இந்தத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதற்கு முகம் கொடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழ்மக்களுக்கு இருக்கிறது.

குருசேத்திரக் களத்தில் அய்ந்து வீடேனும் தாருங்கள் என்று பாண்டவர்கள் கேட்ட போது அதனைக் கொடுக்க மறுத்த நூற்றுவர்  அவர்களோடு மோதிக் கொண்டதுபோல தமிழர்களது அடிப்படை உரிமைக்குப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்த உரிமைகளை மறுக்கும் சிங்கள - பவுத்த பேரினவாதக் கட்சியான அய்க்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும் இடையில் - தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் - இடையில் இத் தேர்தல் நடைபெறுகிறது.

இபிடிபி கட்சி மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தைக் கைவிட்டு,   தன்மானத்தை இழந்து, வெட்கம் துக்கம் இரண்டையும் துறந்து ஒரு சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

வன்னியில் கொல்லப்பட்ட எம் உறவுகள் கொட்டிய குருதி, விட்ட கண்ணீர் டக்லஸ் தேவானந்தாவின் கைகளில் படிந்துள்ளது!

பேரினவாதியான மகிந்தா இராசபக்சே தமிழ்மக்களது தாயகம்,  தேசியம், தன்னாட்சி உரிமையைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவரது ஆட்சியில் 30,000 தமிழ்மக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். மொத்தம் 300,000 மக்கள் முட்கம்பி  வேலிக்குள்ளே சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் போதிய உணவு, குடிநீர், மருந்து. உறைவிடம், கல்வி வசதிகள் இன்றி தரையே பாயாகவும் வானமே கூரையாகவும் வெய்யிலில் வெந்து  மழையில் நனைந்து அல்லல் படுகிறார்கள்.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் சிறை வைக்கப்பட்டுள்ளார். அய்ந்து மருத்துவர்கள் கைசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி அரச அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல அரச ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண மக்கள் 40,000 சிங்களப் படையினரது இரும்புப் பிடிக்குள் சிக்கி கடந்த 14 ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள். யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைசாலையாகக் காட்சி அளிக்கிறது.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள்,  ஊரடங்குச் சட்டம்,  சோதனைச் சாவடிகளில் சோதனை  நடவடிக்கைகள், மீன்பிடித் தொழில் மீதான கட்டுப்பாடுகள்,  உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடிக்கின்றன. 

தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் தாக்கப்படுகிறார்கள். வவுனியாவில் அவர்களுக்குக் கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.

எனவே தமிழ்மக்களது  வாழ்வுரிமையைப் பறித்தவர்களை, எமது உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்தவர்களை, உயிராய் வளர்த்த எமது தாயகக் கனவைக் கலைத்தவர்களை நாம் இத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டாமா? 

அதற்கான பொன்னான வாய்ப்பு தமிழ்மக்களுக்குக் கிடைத்துள்ளது.  மிரட்டலுக்கு  அஞ்சாது, அடக்குமுறைக்கு அடிபணியாது,  சலுகைகளுக்கு மயங்கிவிடாது  எமது உறவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.  தேர்தல் முடிவைப் புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலக நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.   

-30-

 


 

யூலை 29, 2009 

அன்பான வேண்டுகோள்!  

யாழ்ப்பாணம் மற்றும்  வவுனியா மாநகரசபைத்  தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்  தேர்தல் நிதி தாரீர்! 

யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை இரண்டுக்கும் நடைபெறும்  தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்ற வேண்டுகோளை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் யூலை 02 இல் விடுத்திருந்தது தெரிந்ததே.  நாம் எதிர்பார்த்தது போலவே தமிழ்மக்கள் மீது கொடிய போரைத் தொடுத்து முள்ளிவாய்க்காலில் ஒரு இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் இபிடிபி கட்சியும் அரச வளங்களை முறைகேடாகப் பயன்படுத்தி இந்தத் தேர்தலில் எதைக் கொடுத்தும் எதைக் காட்டியும் வென்றுவிட வேண்டும் என்ற வெறியோடு தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.   வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

வவுனியாவில் இபிடிபி ஆயுதக்குழு  மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.  ஒரு   சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்க்கான வாய்ப்பு மிகக் குறைவாகக் காணப்பட்டாலும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றிவாகை சூட வைப்பதன் மூலமே   தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமை  ஆகிய அரசியல் வேட்கைகளை  உலக நாடுகளுக்கு எண்பித்துக் காட்டலாம்.  மகிந்தா இராசபக்சே  அரசியல் களத்தில் பெற நினைக்கும்  வெற்றியைக் கனவாக்கலாம்.  இவற்றைச் செய்யும் பொறுப்பு பேரளவு  புலம்பெயர்  தமிழர்களது கைகளிலேயே  உள்ளது. வெறும் வாய்ச்சொல் அருளுவதோடு நின்று விடாது புலம்பெயர் தமிழர்கள் பொருளுதவியும்  செய்யவேண்டும்.  இதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம்.  

உங்கள் அன்பளிப்பைப் பணமாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு 06-08-2009 முன்னதாக அனுப்பி வைக்கவும்.  அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

        TCWA,
        56 Littles Road

        Scarborough, ON. M1B 5C5

 

அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

 

        TD Canada Trust

         Branch No. 1033

        Account No.0663 – 5214579


மேலும்  கீழக்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுள் உங்கள் பெயர் தொ.பே. கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுளட உங்கள் பெயர் தொ.பே. எண், தொகை ஆகிறயவற்றைக் குறித்து பணத்தைக் கையளிக்கவும்.  

 

        1) Babu Catering and Take Out, 4800 Sheppard Avenue East #201 Scarborough

        2) Uthayas Super Market, 5010 Steels Ave. West # 14 Etobicoke (Kipling and Steels)

        3) Vijaya’s Silk, 27 Dundas Street East, Mississauga.

        4) SP Importers, 2853 Lawrence Ave E in Scarborough.

காலம் போதாமல் இருப்பதால் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு உங்கள் உற்றார் உறவினர் மூலம் வரவு வைக்கலாம்.  அல்லது  எண் 36, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் முகவரியில்  உள்ள  அவர்களது தலைமை அலுவலகத்தில் கையளிக்க  ஏற்பாடு செய்யலாம்.  

S. X. Kulanayagam
N.I.C No. 452661659V
Account No. 1097586
 

Bank of Ceylon, Hospital Road Branch

 


 

யூலை 29, 2009
 

அன்பான வேண்டுகோள்!  

யாழ்ப்பாணம் மற்றும்  வவுனியா மாநகரசபைத்  தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்  தேர்தல் நிதி தாரீர்! 

யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை இரண்டுக்கும் நடைபெறும்  தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்ற வேண்டுகோளை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்  யூலை 02 இல் விடுத்திருந்தது தெரிந்ததே.  நாம் எதிர்பார்த்தது போலவே தமிழ்மக்கள் மீது கொடிய போரைத் தொடுத்து முள்ளிவாய்க்காலில் ஒரு இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் இபிடிபி கட்சியும் அரச வளங்களை முறைகேடாகப் பயன்படுத்தி இந்தத் தேர்தலில் எதைக் கொடுத்தும் எதைக் காட்டியும் வென்றுவிட வேண்டும் என்ற வெறியோடு தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.   வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். வவுனியாவில் இபிடிபி ஆயுதக்குழு  இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.  ஒரு   சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்க்கான வாய்ப்பு மிகக் குறைவாகக் காணப்பட்டாலும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றிவாகை சூட வைப்பதன் மூலமே   தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமை  ஆகிய அரசியல் வேட்கைகளை  உலக நாடுகளுக்கு எண்பித்துக் காட்டலாம்.  மகிந்தா இராசபக்சே  அரசியல் களத்தில் பெற நினைக்கும்  வெற்றியைக் கனவாக்கலாம்.  இவற்றைச் செய்யும் பொறுப்பு பேரளவு  புலம்பெயர்  தமிழர்களது கைகளிலேயே  உள்ளது. வெறும் வாய்ச்சொல் அருளுவதோடு நின்று விடாது புலம்பெயர் தமிழர்கள் பொருளுதவியும்  செய்யவேண்டும்.  இதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம்.  

உங்கள் அன்பளிப்பைப் பணமாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு 06-08-2009 முன்னதாக அனுப்பி வைக்கவும்.  அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

TCWA,
56 Littles Road,

Scarborough, ON. M1B 5C5

 

அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

 

TD Canada Trust

Branch No. 1033

Account No.0663 – 5214579


மேலும்  கீழக்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுள் உங்கள் பெயர் தொ.பே. கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுளட உங்கள் பெயர் தொ.பே. எண், தொகை ஆகிறயவற்றைக் குறித்து பணத்தைக் கையளிக்கவும்.  

 

1) Babu Catering and Take Out, 4800 Sheppard Avenue East #201 Scarborough

2) Uthayas Super Market, 5010 Steels Ave. West # 14 Etobicoke (Kipling and Steels)

3) Vijaya’s Silk, 27 Dundas Street East, Mississauga.

4) SP Importers, 2853 Lawrence Ave E in Scarborough.

காலம் போதாமல் இருப்பதால் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு உங்கள் உற்றார் உறவினர் மூலம் வரவு வைக்கலாம். 

S. X. Kulanayagam
N.I.C No. 452661659V
Account No. 1097586
Bank of Ceylon, Hospital Road Branch 

அல்லது  எண் 36, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் முகவரியில்  உள்ள  அவர்களது தலைமை அலுவலகத்தில் கையளிக்க  ஏற்பாடு செய்யலாம்.

 


 

 

யூலை 02, 2009


செய்தியறிக்கை

 

யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்னிப் பெரு நிலப்பரப்பில் பாரிய படையெடுப்பு நடத்தி வரலாறு காணாத இனப் படுகொலையையும் அழிவுகளையும் நடத்தியதோடு அதனைக் கொண்டாடு முகமாக கொழும்பில் வெடிகொளுத்தி இராணுவ அணிவகுப்பை நடத்தி மகிழ்ந்த மகிந்த இராசபக்சே அவசர அவசரமாக யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை இரண்டுக்கும் தேர்தலை அறிவித்துள்ளார். ஓகஸ்ட் 8 ஆம் நாள் இடம்பெறும் இந்தத் தேர்தலின் மூலம் தனது அரசு உலக அரங்கில் மக்களாட்சியை மதித்து நடக்கும் அரசு என்றும் தமிழ்மக்களை வி.புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து வடக்கில் இயல்பு நிலையைக் கொண்டுவந்து விட்டோம் என்றும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதே அவரது குறிக்கோளாகும்.

 

போரினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை. வவுனியாவில் 280,000 மேலான மக்கள் 25 நாசி  முகாம்களில் போதிய உணவு, மருந்து, தண்ணீர் இல்லாது ஆடு மாடுகள் போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறே யாழ்ப்பாணத்தில் 12 முகாம்களில் 11,064 பேரும் திருகோணமலையில் 2 முகாம்களில் 6,642 பேரும் மன்னாரில் 3 முகாம்களில் 845 பேரும் ஆண்டுக் கணக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

யாழ்ப்பாணம் 40,000 சிங்களப் படைகளினால் வல்வளைப்புக்கு உள்ளாக்கப்பட்டு  ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மக்களது நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள், கமக்காரர்கள் போன்றோரது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.

 

போர் முடிந்தாலும் இலங்கை முழுதும் தமிழர்கள் தொடர்ந்து கேட்டுக் கேள்வியின்றிக் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். வன்னிமண்ணில் கடைசிவரை இருந்து மக்களுக்கு மருத்துவம் செய்த மூன்று தமிழ் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

 

வன்னியில் மக்களோடு மக்களாக இருந்த  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சேயின் உத்தரவின்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

வெளிநாடுகளில் இருந்து  ஸ்ரீலங்கா செல்லும் புலம்பெயர் தமிழர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு 4 வது மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிலர் காணாமல் போகிறார்கள்.

 

ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிங்களப் பகுதிகளில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

 

மொத்தத்தில் தமிழர்கள் மிகவும் கேவலமான முறையில் திமிர் பிடித்த சிங்கள- பவுத்த  பேரினவாத அரசினால் நடத்தப்படுகிறார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன.

 

இந்த அழகில் மகிந்த இராசபக்சேயின் சுதந்திரக் கட்சி கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டமைப்பில் பிறவி எடுத்ததன் பயனே சிங்களவர்கள் வீசும் அமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை சுவைத்துக்கொண்டு அவர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால்  செய்வதே என நடந்து கொள்ளும்  டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சியும் இடம் பெற்றுள்ளது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என முழக்கம் இட்ட தேவானந்தா இப்போது தேர்தலில் நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்றமாதிரி தனது சுய அடையாளத்தைக் கைவிட்டு கடைந்தெடுத்த ஒரு சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சியோடு வெட்கமோ துக்கமோ இன்றி தேர்தல் கூட்டு வைத்துள்ளார்.

 

தனிமனித கட்சி நடத்தும் ஆனந்தசங்கரியாரும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இவர் தேவானந்தாவுக்கு சற்றும் இளைக்காதவாறு மகிந்த இராசபக்சேக்கு சாமரம் வீசுபவர். வி.புலிகளுக்கு எதிரான போருக்கும் தமிழ் மக்கள் மீது மகிந்த இராசபக்சே நடத்திய இனப் படுகொலைக்கும் அதனால் ஏற்பட்ட அவலத்துக்கும்  பச்சைக் கொடி காட்டியவர்.

 

சந்தடி சாக்கடியில் மகிந்த இராசபக்சேயின்  அரசு போலவே போர் வெற்றியை வெடிகொளுத்திக் கொண்டாடிய அய்க்கிய தேசியக் கட்சியும் தமிழர்கள் மடையர்கள் என்ற எண்ணத்தில் தேர்தலில் குதித்துள்ளது.

 

இந்தப் பின்னணியில்தான் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை வாழ் தமி;ழ் வாக்காளர்களுக்கு தமிழினத்தின் விடுதலை வேட்கையை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஒரு சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லாது  சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி முனையில் தேர்தல் நடைபெற்றாலும் அடக்குமுறைக்கு அடிபணியாது தன்மானத்தை விலைபேசாது துணிச்சலோடு தமிழின எதிரிகளை இத் தேர்தலில் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும். குறிப்பாக மகிந்த இராசபக்சேயின் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடித்து தமிழின எதிரிகளுக்கு தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும்.

 

தமிழரின் அடிப்படை கோரிக்கைகளான தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமைக்குப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு ஒருமனதாக வாக்களித்து அவர்களை  வெற்றி அடையச் செய்யுமாறு தமிழ் வாக்காளப் பெருமக்களை அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறோம்.

 

புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டு தன்மானம் இழக்காது  அரசியல் சோரம் போகாது  போராடும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு   வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு தங்கள் உற்றார் உறவினரைக் கேட்குமாறு வேண்டுகிறோம்.

 

பச்சை சிங்கள – பவுத்த இனவாதம் பேசும்  மகிந்த இராசபச்சேயின் கோர முகத்தை அனைத்துலக மட்டத்தில்  கிழித்துக் காட்டி எமது ஒற்றுமையை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை நழுவ விடாது தக்கமுறையில் பயன்படுத்துமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். 

-30-