சோதிடப் புரட்டு                                                                                                

                                                                                                        திருப்படையல்

என்னைப் பத்து மாதம் வயிறு சுமந்து பெற்று முகம் தெரியாத வயதில் மறைந்து விட்ட தாயார் சோலையர் வள்ளியம்மை என்னைச் சான்றோனாக்கிய தந்தையார் தில்லையர் வேலுப்பிள்ளை என்னை அன்பு பாராட்டி வளர்த்தெடுத்த தமையனார் தில்லையம்பலம் மச்சாள் சிவபாக்கியம் தமக்கையார் சிவபாக்கியம் மைத்துனர் சிவகுரு கந்தவனம் ஆகியோரது காலடி மலர்களுக்கு இந்த நூல் திருப்படையல்!

                                                                                                                                             முன்னுரை

'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' - இது நக்கீரன் நெறி.

கடவுளோடு மோதினார் நக்கீரன் என்பது பழைய கதை.

இன்று -

கடவுளை அல்ல - கணியத்தோடு (சோதிடம்) மோதுகிறார் நக்கீரன்.

நக்கீரன் கணியத்துக்கு எதிராக வைக்கும் சான்றுகள் எம்மை அசைக்கின்றன.

அறிவியல் கொண்டு கணியத்தை (சோதிடம்) அவர் ஓங்கி அடிக்கின்றார்.

நேற்றுவரை பிறர் நிகழ்த்திய மேலோட்டமான ஆய்வுகள் போல் இல்லாமல் கணியத்தை நெருப்பின் நாக்குகளால் எரித்துச் சாம்பலாக்குகிறார்.

வானியல் உண்மைகளை வாரிப் பொழியும் நூல்.

சோதிட சாத்திரத்தை எழுதியவர்களுக்கு இன்றைய வானியல் பற்றிய அறிவோ - ஆராய்ச்சியோ இருக்கவில்லை. அதற்கான வாய்ப்பும் நவீன கருவிகளும் அவர்களிடம் இருக்கவில்லை. 'ஞானக் கண்' ஒன்று மட்டுமே இருந்தது'

என்று கூறும் நக்கீரன்,

'வெப்ப மண்டல நாள்காட்டி, பஞ்சாங்கம் போன்றவை கணிப்பதற்குப் பயன்படுகிறது. அதன் அடிப்படையில் சோதிடர்கள் பயன்படுத்தும் வெப்பமண்டல இராசிச் சக்கரம் (Tropical Zodiac) முற்றிலும் பிழையானது. அது 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வானில் காணப்பட்ட நட்சத்திரங்கள் - மற்றும் கோள்களது இருக்கையையே காட்டுகிறது. இதுபற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சாமிநாதய்யரை மேற்கோள் காட்டி எழுதியிருப்பதை அப்படியே கீழே தருகிறேன்'

எனச் சொல்லவிட்டு, பாரதியார் கருத்தை எடுத்து வைக்கிறார்.

'அயனவிசுகளின் சலனத்தை (இயக்கத்தை) அறியாமலோ அறிந்திருந்தும் கவனியாமலோ ஸம்வத்சரத்தின் பரிமாணத்தை 20 நிமிஷம் ஜாஸ்தியாக (அதிகமாக) கணித்து விட்டபடியால், அயன விசு காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20½ நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழுநாள் பிந்திவிடும்.

மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாய் விட்டபடியால் புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப்போய் நியமங்கள் பிரத்தியஷத்துக்கு விரோதமாகியிருக்கின்றன.' (பாரதியார் கட்டுரைகள் - பக்கம் 210-211)

மேற் கூறப்பட்டுள்ள கணியம் பற்றிய ஆய்வில் ஒரு சிறு திருத்தம் செய்கிறார் நக்கீரன்.

'சாமிநாதய்யர் குறிப்பிட்ட கால வித்தியாசம் சரி, ஆனால் 80 ஆண்டுகள் என்று எழுதியிருப்பது தவறு. அது 72 ஆண்டுகள் என்று இருக்க வேண்டும்.

'புவியின் மையப் பகுதியில் ஞாயிறு மற்றும் நிலா இரண்டினாலும் ஏற்படும் எதிர் எதிர் ஈர்ப்புக் காரணமாக புவி அச்சின் சுழற்சியை தள்ளாடச் செய்து மேற்கு நோக்கி (ஞாயிறு பாதையில்) பின் தள்ளுகிறது (Precession of the equinoxes) என்பதைக் கண்டு பிடித்துச் சொல்லியவர். இதுவே அயனாம்சம் என அழைக்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு 50.291 ஆர்க் நொடிகள் (50.291 arc seconds) வீதம் 72 ஆண்டுகளில் 1 பாகை வேறுபாடு ஏற்படுகிறது.

பிழையான வானியல் கணிப்பின் அடிப்படையில் சரியான கணியம் (சோதிடம்) எப்படிப் பிறக்கும்? என்பதுதான் நக்கீரனின் கேள்வி.

அணியத்தை அவர் பல முனைகளிலிருந்து கடுமையாகச் சாடுகிறார்.

'இராசிகளை ஆண்-பெண் எனப் பாகுபடுத்தி வசியப் பொருத்தம் பார்ப்பது அறிவீனம். இராசிகளை ஆண் பெண் என்று எப்படிப் பிரித்தார்கள்? மேடம் தொடங்கி மீனம் ஈறாக வரும் பன்னிரண்டு இராசிகளில் ஒற்றைப்பட வரும் இராசிகள் ஆண் இராசிகள் என்றும் இரட்டைப்பட வரும் இராசிகள் பெண் இராசிகள் என்றும் சோதிடர்கள் பிரித்திருக்கின்றார்கள். இப்படி ஒற்றை இரட்டை பார்த்துப் பிரிப்பது எந்தவித விதிக்கட்டுப்பாடும் (யசடிவைசயசல) இன்றிச் செய்யப்பட்டதாகும். எல்லாம் கண் பார்வை தெரியாதவன் மனைவியை அடித்த அல்லது இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடிய கதைதான்!

கணியத்தை - கணியர்களை நக்கீரன் கசக்கிப் பிழிகிறார்.

நிறையப் படித்து நக்கீரன் செய்த ஆய்வும் - நிறுவல்களும் நிமிர்ந்தே நிற்கின்றன.

எதிர்காலத்தில் கணியத்தை (சோதிடத்தை) எவரேனும் இத்தனை ஆழமாக ஆய்வு செய்வார்கள் என்பது அய்யமே.

பெரும் முயற்சி, கடும் உழைப்பு, அரிய பணி.

சோதிடப் புரட்டு, கணியம் மக்களுக்கு இழைக்கும் தீங்கினை உரத்துச் சொல்கிறது.

கணியத்தை நக்கீரன் பொய் என்று சொல்வதால் யாரும் சினம் அடைய வேண்டியதில்லை - ஏனென்றால் பொய்யை நீங்கள் கணியம் என்று சொல்வதால் அவர் சினம் அடைந்திருக்கிறார்.

நான் நக்கீரன் பக்கமே!

அவர் படைப்பு -

அறியாமைக்குத் தீயிடும் அனல் பிழம்பு.
சீர்திருத்தப் புயலின் சீற்றம்.
உண்மையின் குரல்.
தமிழினத்தை எல்லாவகையிலும் மீட்டெடுக்கப் பொங்கிப் பாயும் அவர் தமிழுக்குத் தலை வணங்குகின்றேன்.

காசி ஆனந்தன்
சென்னை,
தமிழ்நாடு
தை 29, 2006
 

அணிந்துரை
 

ரொறன்ரோ நகரில் வெளிவரும் 'முழக்கம்' வார ஏட்டில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாகச் சோதிடப் புரட்டு எனும் தலைப்பில் தொடர்ச்சியாக நக்கீரன் எழுதிய 71 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

நாம் இன்று 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்கின்றோம். நாம் வாழும் எல்லையற்ற அண்டம் அதன் தோற்றத்திலிருந்து எவ்வளவோ மாற்றம் அடைந்துவிட்டது. இன்றும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றது. இன்றைய புதுமைகள் நாளைய பழமைகளாகலாம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' காலத்தின் தேவை. அறிவியலும் தொழில்நுட்பமும் அன்றாடம் வியத்தகுவண்ணம் வளர்கின்றன. அறிவியலாளர்களின் இடையறாத முயற்சியால், புதிய புதிய கண்டுபிடிப்புகளும், பதிய புதிய கோட்பாடுகளும் மனிதனையும், இவ்வுலகத்தையும் மாற்றம் அடையச் செய்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் உலகம் எவ்வளவோ சுருங்கிவிட்டது. உலகம், இயற்கை பற்றிய கற்பனைகள், நம்பிக்கைகள், மாயைகள் மெல்ல மெல்ல விடைபெறுகின்றன.

பூமி சார்பான அதற்குக் கிட்டிய சூரியன், சந்திரன், மற்றும் கோள்கள் போன்ற வானுடலிகள் (heavenly bodies) வகிக்கும் நிலைகள், எவ்வாறு பூமியின் காலநிலைகள் போன்ற மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவதானித்த சோதிடன், ஒருபடி மேலே போய், வானில் வானுடலிகள் வகிக்கும் நிலைகள், மனிதனின் வாழ்வியலை நிர்ணயிக்கின்றன என்று நம்பி சோதிடத்தை உருவாக்கினான். அந்தவகையில் அன்று தனக்குத் தெரிந்த சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய மெய்வானுடலிகளும் அவன் கற்பனை செய்த இராகு, கேது ஆகிய நிழல் உடலிகளும் தெய்வீகத்தன்மை கொண்டு அருள் பாலிக்கும் வல்லமை வாய்ந்தன என்று கூறி மக்களை நம்பச் செய்து ஏமாற்றி வந்தான், ஏமாற்றி வருகின்றான்.

சோதிடர்களின் இவ் ஏமாற்று வித்தைகளைத்தான் சோதிடப் புரட்டு எனக் கூறி நக்கீரன் இந்நூலுக்கு சோதிடப் புரட்டு என்ற பெயரை வைத்துள்ளார். அது மிகப் பொருத்தமான பெயர் என்றே நான் கருதுகிறேன்.

சோதிடம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று பிள்ளை பிறக்கும் நேரத்தில வானிலுள்ள கிரகங்களின் நிலைகளைக் கணித்தல். மற்றையது கிரகங்களின் லைகளை அடிப்படையாகக் கொண்டு பலன்களைக் கூறுதல்.

இந்நூலில் ஆங்காங்கே கோதிடர்களின் கணிப்பின் அடிப்படையே பிழையென்று ஆசிரியர் எடுத்துக் கூறுகின்றார். சோதிடர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வானியல் விஞ்ஞானம் அதன் தொடக்கத்திலிருந்த பொழுது, வானியலாளர்கள் இவ் அண்டத்தின் மையம் பூமி என்றும், அது அசையாப் பொருள் என்றும், அதைச் சுற்றி வானிலுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன என்றும் கருதித்தான் அன்று கிரக நிலைகளைக் கணித்தார்கள். ஆனால் அக் கருதுகோள் பிழையென்பதைப் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிக்கலஸ் கோபெர்னிக்கஸ் எனும் போலந்து நாட்டைச் சேர்ந்த வானியலாளர் (கத்தோலிக்க குருவாகவும் இருந்தவர்) முதன்முறையாக சூரியமையக் கொள்கையை முன்மொழிந்தார் என இந்நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இதைச் சோதிடர்கள் இன்னும் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. விளங்க முயற்சிக்கிறார்களுமில்லை. விளங்கித் தங்கள் கணிப்பு முறையில் மாற்றங்களைச் செய்யவும் முனைகிறார்களில்லை. இவர்களுடைய கணிப்பின் படி கிரக மற்றும் இராசி நிலைகள் சோதிடக் குறிப்பேட்டிற்றானேயல்லாமல் வானில் அல்ல என்ற உண்மையை ஆசிரியர் இந்நூலில் நிறுவியுள்ளார்.

சோதிடப் பலன்களைப் பொறுத்தவரையில், அவற்றை என்ன அடிப்படையில், பிறந்த நேரத்துக் கிரக நிலைகளுடன் தொடர்பு படுத்தலாம் என்றும், ஒருவருக்கான சோதிட பலன்கள், சோதிடர்களைப் பொறுத்து ஏன் மாறுகின்றன என்றும், கூறிய பலன்கள் ஒருவருக்கு வாழ்நாளில் அப்படியே ஏற்படுகின்றனவா என்றும் நூலாசிரியர் வினாவுகின்றார்.

சோதிடர்கள் கூறும் பலன்கள் குருட்டு வாக்கில் அல்லாது மற்றப்படி பிழைத்துப் போகின்றன என்பதை பல்வேறு உண்மைச் சம்பவங்களைக் கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். தொடக்க காலங்களில் இந்துக் கோயில் குருமாரே சோதிடமும் சொன்னார்கள். அந்தவகையில் குருமார்கள் சொன்னவற்றை தேவவாக்கென மக்கள் பயபக்தியோடு நம்பினார்கள். எனவே இந்துக்களின் சமயாசாரமாகவும் கலாசார அம்சங்களில் ஒன்றாகவும் சோதிடம் இடம் பெற்றுவிட்டதென்று ஆசிரியர் கூறுகின்றார். மேலும் பயம் காரணமாகவே மக்கள் சோதிடத்தையும் சோதிடர்களையும் நாடுகிறார்கள் என்றும் கூறுகின்றார்.

கோள்களுக்கும் அதாவது கிரகங்களுக்கும், பிறக்கும் பிள்ளைக்கும் உள்ள முடிச்சு என்ன என்று கேட்டு சோதிடம் பகுத்தறிவற்ற மூடத்தனம் என்று பரிகசிக்கின்றார். இந்நூலை எழுந்த மானத்தில் ஆசிரியர் எழுதவில்லை. அவர் பல வானியல் விஞ்ஞான நூல்களையும் ஏன் பல சோதிட நூல்களையும் படித்து உசாவி ஆய்வு செய்துதான் இந்நூலை எழுதியுள்ளார். அதற்கான சான்றுகள் நூல் எங்கினும் காணக் கூடியதாக இருக்கின்றன.

பகுத்தறிவைப் பரப்பிய திராவிட இயக்க முன்னோடிகளான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களது ஆக்கங்களை இளம் பிராயத்தில் படித்ததன் காரணமாகத்தான் அறிவியல் மனப்போக்கு (scientific temper) இவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.

இந்நூலில் சோதிடத்தை மட்டுமல்ல, மூடநம்பிக்கையின் காரணமாகவும் பயபக்தி காரணமாகவும் எம் மக்களிடையே பரவலாக இடம் பிடித்துள்ள மனிதக் கடவுளர், அவதார புருடர்கள், அற்புதங்கள், எண் சாத்திரம், வாஸ்து சாத்திரம், மாந்திரீகம், பில்லி சூனியம், பேய் பிசாசு ஆகியவற்றை மறைந்த பகுத்தறிவாளர் ஏபிரகாம் கோவூர் ஊடாக மறுத்துள்ளார்.

இந்நூல் புலம்பெயர் எமது இளந்தலைமுறையினரின் நலன்கருதி ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுப் பதிக்கப்படுவது நன்று. இந்நூல் மூடநம்பிக்கைகள் அற்ற, அறிவியல் சார்ந்த, பகுத்தறிவு படைத்த தமிழ்ச் சுமுதாயத்தைக் கட்டியெழுப்ப நினைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும்.

இ.வே. செல்வரத்தினம்
முன்னாள் கல்வி அதிகாரி (இலங்கை)
ரொறன்ரோ
தை 21, 2006

வாழ்த்துரை

நிலவைத் தெய்வமாக வணங்கிய காலமுண்டு. இன்று செவ்வாய், புதன், நிலா என்று ஒவ்வொன்றையும் மனிதன் அலசி ஆராய்ந்து நிலவிலே கால் பதித்து கல்லைத் தோண்டி எடுத்து வந்தாகிவிட்டது. இருந்தாலும் நம்மில் பலர் செய்வாய் தோசம், சனி தோசம் போன்றவற்றை நம்புவர்களாகவும் குருப் பெயர்ச்சி எப்போது என்று கணக்கிடுபவர்களாவும் வாழ்கின்றார்கள். வாழ்ந்தால்கூடப் பருவாயில்லையே! தங்கள் வாழ்வையும் உற்றார் உறவினர்கள் வாழ்வையும் பாழடித்தும் செல்வம், மகிழ்ச்சியை வீணடித்தும் துன்பப்படுகின்றனர்!

வானியல் என்பது அறிவு சார்ந்தது – அண்டம் எப்படி, எப்போது தோன்றியது அது எப்படி இயங்குகிறது என்பதைத் திருத்தமாக ஆராய்கிறது. சோதிடம் என்பது முழுக்க முழுக்க ஏமாற்றுவித்தை! ஏமாளிகளிடம் பணம் பறிக்கச் சிறந்த தொழில் சோதிட சாத்திரமாகும். இதைத் தந்தை பெரியார் அவர்கள் 1938 லேயே சோதிட ஆராய்ச்சி என்று நூலை எழுதிக் குறைந்த விலைக்குக் கொடுத்து அதன் பொய்மையைப் பரப்பினார். தந்தை பெரியார் என்றாலே முகஞ் சுழிக்கும் வைதீகர்களே சோதிடத்தை நம்பாமல் அதனைக் கண்டித்திருக்கிறார்கள். பாரதியார், இராசாசி, காமராசர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள்.

அய்யா நக்கீரன் அவர்கள் இந்தச் சோதிடத்தை அக்குவேறு ஆணிவோறாகப் பிரித்து ஆழ்ந்து அலசியுள்ளார்.

ஒவ்வொன்றும் நன்கு ஆராயப்பட்டு விளக்கமாக எழுதப்பட்டுள்ளன. எழுபத்திரண்டு அத்தியாயங்களில் இவ்வாறு அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல்கள் வேறு ஏதாவது இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. தமிழில் கட்டாயம் இல்லை.

மேம்போக்காகக் கூறாமல் அனைத்தையும் காரண காரியங்களுடன் எடுத்துக் காட்டிக் பல இடங்களில் அரிய மேற்கோள்கள் காட்டி அனைவருக்கும் புரியும்படி எழுதியுள்ளார். இதிலே ஒன்றும் மாயமோ மந்திரமோ இல்லை எல்லாம் தந்திரம்தான் என்பதை திறந்த மனத்தோடு படிப்பவர்கள் நன்கு விளங்கிக் கொள்வார்கள். எல்லாம் சரிங்க, ஆனால் மனதிற்குள்ளே ஒரு பயம் இருக்கிறதே என்பவர்கள் இதைப் படித்தால் அந்தப் பயம் ஒரு மடமை என்பதை உணர்வார்கள். சோதிடம் ஒரு புரட்டு, அதற்குச் செலவு செய்யும் பொருள் வீண் என்பதை இதைவிட ஆதாரத்துடன் சொல்ல முடியாது! சோதிடத்துக்கு வீணாகும் செலவை எவ்வளவோ நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சோதிடத்தில் கொண்டுள்ள மோகத்தையும் அதற்காகச் செலவழிக்கும் வீண் செலவையும் ஒழிக்க இந்த நூல் கட்டாயம் உதவும். அவரவர்கள் இதனை வாங்கிப் படிப்பதுடன் நின்றுவிடாமல் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பாய்க் கொடுக்க வேண்டிய நூல் இது ஆகும்.

இதில் உள்ள செய்திகள் போன்று இனி ஒருவரால் இவ்வளவு ஆழமாகத் தொகுக்க முடியாது என்று நான் நம்புகிறேன். ஆகவே இந்த நூல் ஆங்கிலத்திலும் மற்ற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்க ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டி அய்யா நக்கீரன் அவர்கட்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். சோதிடம் ஒழிந்த வாழ்வே நல்வாழ்வாகும்!

அன்பன்

மருத்துவர் சோம. இலக்குவன்
சிகாகோ
அமெரிக்கா
மாசி 26, 2006



நூலாசிரியர்

 

திரு. நக்கீரன் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் பிறந்தவர். அவரது இயற் பெயர் தங்கவேலு. தந்தையார் பெயர் வேலுப்பிள்ளை.

நக்கீரன் தனது தொடக்கக் கல்வியை கொழும்புத்துறை மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை சுண்டிக்குளி பரி.யோவான் கல்லூரியிலும் படித்து முடித்தார்.

1951 ஆம் ஆண்டு அரச சேவையில் எழுத்தராகச் சேர்ந்தார். 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து தமிழ் அரச ஊழியர்களது இருக்கை நெருக்கடிக்கு ஆளானாது. சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்க பொது எழுதுவினைஞர் சங்கம் (General Clerical Service Union) தமிழ் ஊழியர்களைக் கை கழுவி விட்ட நிலையில் அவர்களது உரிமைகளுக்குப் போராட திரு. க. சிவானந்தசுந்தரம் அவர்கள் தலைமையில் 1959 ஆம் ஆண்டு அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் (AES) தொடக்கப்பட்டது. திரு. நக்கீரன் அதன் தொடக்க உறுப்பினராகவும், செயல்குழு உறுப்பினராகவும் சங்கத்தின் வெளியீடான எழுச்சி திங்கள் ஏட்டின் ஆசிரியராகவும் பின்னர் பொதுச் செயலாளராகவும் (1964 - 66) பணியாற்றினார்.

1962 இல் தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்ட இவர் தீவிர தமிழ்ப்பற்றாளரும் பகுத்தறிவாளரும் ஆவார்.

1966 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகரசபையில் கணக்காளராக நியமனம் பெற்றார். இரண்டு ஆண்டு காலம் பதில் ஆணையாளராகவும் கடமை ஆற்றினார். இந்தக் கால கட்டத்திலேயே 13 இலக்கம் உருபாய் செலவில் யாழ்ப்பாண சந்தை (Model Market)  கட்டும் பணி தொடங்கப்பட்டது. 1968 இல் புலமைப் பரிசு பெற்று பர்மிங்கம் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் படித்து ACCA (UK)  இறுதிக் கணக்கியல் தேர்வு எழுதிப் பட்டம் பெற்றார்.


நக்கீரனின் ஆக்கங்கள் அய்ம்பதுகளில் இருந்து சுதந்திரன் கிழமை ஏட்டில் தொடர்ந்து வெளிவந்தன. அதில் 'எமது வரலாறு' என்ற நீண்ட தொடர் கட்டுரை (1964 - 1965) இன்னொருவர் பெயரில் வெளிவந்தது. சுதந்திரன் பதிப்பகத்தின் இன்னொரு திங்கள் வெளியீடான சுடர் ஏட்டின் ஆசிரியராகவும் (1978 - 1980) பணியாற்றினார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தோடும் அரசியல் தலைவர்களோடும் மிக நெருக்கமான ஈடுபாடு வைத்திருந்த இவர் 1980 இல் நைசீரியா, பவுச்சி மாநில கணக்காய்வுத் திணைக்களத்தில் முதன்மைக் கணக்காய்வாளாராகச் சேர்ந்தார். பின்னர் 1987 இல் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் A.A. Jamal Associates (Chartered Accountants)  நிறுவனத்தில் பணி புரிந்தார். அதே நேரம் CGA  (Canada) தேர்வுக்குப் படித்து 1991 ஆம் ஆண்டு கணக்கியலில் பட்டம் பெற்றார்.

உலகத் தமிழர் இயக்கத்தின் துணைத் தலைவராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். கனடிய தமிழர் சங்கங்களின் பேரவையின் (FACT) தலைவராகவும் பல ஆண்டு பணி ஆற்றினார்.

உலகத்தமிழர் ஏட்டில் தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் கிழமை தோறும் அவர் எழுதி வந்த அரசியல் பலகை, சங்கப் பலகை இரண்டும் அவரை ஒரு சிறந்த அரசியல் ஆய்வாளராகவும், இலக்கியவாதியாகவும் இனம் காட்டியது.

கடந்த 10 ஆண்டு காலாமாக முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றும் இவர் இங்கு வெளியாகும் முழக்கம், நம்நாடு, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி போன்ற இதழ்களில் பல நூறு அரசியல், வரலாறு, இலக்கியம், பகுத்தறிவு மற்றும் திறனாய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை நக்கீரன், கீரன், திருமகள், இந்திரஜித் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். இதில் ஒல்காப் புகழ் தொல்காப்பியம், கிய+பா பயணக்கட்டுரை, சோதிடப் புரட்டு, சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள், சுனாமியும் சுவாமியும், மாமியார் வீட்டில் மூன்று சாமியார்கள், தமிழிசை (முழக்கம்) சங்கம் வழர்த்த தமிழ், கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம இராசசிங்கன் (ஈழநாடு) திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு (ஈழமுரசு) ஆகிய தொடர் கட்டுரைகள் படிப்போர் பலரது பாராட்டைப் பெற்றன. நம்நாடு ஏட்டில் வெளிவந்த நான்தாண்டா ஆத்தாளு என்ற குறு நாவல் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படைப்பாகும்.

ஆங்கில மொழியில் தனது இயற் பெயரில் எழுதிய சூடான அரசியல் கட்டுரைகள் Tamil Canadian, Tamil Nation, Tamil Sangam, TIS  போன்ற இணைய தளங்களில் வெளிவந்துள்ளன.

இதற்குமுன்னர் இவர் எழுதிய தமிழர் திருமணம் என்ற நூல் வெளிவந்திருந்தாலும் சோதிடப் புரட்டு மட்டுமே ஒரு முழுமையான ஆய்வு நூலாக வெளிவருகிறது.


நக்கீரனது ஆக்கங்களை
http:/www.nakkeran.com  இணையதளத்தில் படிக்கலாம்.

 



நூல் குறிப்பு


 

நூலின் பெயர்           -          சோதிடப் புரட்டு   

வெளியீடு              -             பெரியார் திராவிடர் கழகம்
                                                                           27, இரண்டாவது தளம்
                                                                           கனகராய மலையப்பன் தெரு
                                                                           இராசா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028
நூலாசிரியர்                             -               நக்கீரன்
மொழி                                         -               தமிழ்
பதிப்பாண்டு                            -               யூன் 2006
பதிப்பு முதற் பதிப்பு          -               தாள்  Natural sheet 16 kg
நூலளவு              -               டெம்மி 1/8
எழுத்து               -                11 புள்ளி
பக்கம்                -                600
அட்டைக்கட்டு         -               கெட்டி அட்டைக்கட்டு
அட்டை வடிவமைப்பு
மற்றும் கணனியாக்கம் -    அசுரன் ஊடகம், திண்டுக்கல்
அச்சகம்              -     கிரியேட்டிவ் கிராபிக்ஸ்
வெளியீடு             -     பெரியார் திராவிடர் கழகம> 27, இரண்டாவது தளம்> கனகராய மலையப்பன் தெரு
                                                                இராசா அண்ணாமலைபுரம், சென்னை -600 028
நூல் கிடைக்கும் இடம்  -    பெரியார் படிப்பகம், மேட்டுர் அணை -636 - 401
                                                          -    பெரியார் பதிப்பகம், காந்திபுரம், கோவை - 641 - 044

விலை                -  உரூபா 250.00


என்னுரை
 

சோதிடப் புரட்டு என்ற தலைப்பில் எழுதிய முதல் கட்டுரையை முழக்கம் கிழமை ஏட்டில் வெளிவந்த பொழுது அதனை அடுத்த நான்கு அல்லது அய்ந்து கிழமைகளில் முடித்து விடலாம் என்றே நான் முதலில் நினைத்தேன். அது 70 கிழமைகள் வளரும் என்பதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

சிறு பருவதில் ஏனையோர்களைப் போலவே நான் மிகவும் சமய நம்பிக்கை உடையவனாகவே இருந்தேன். கோயிலுக்குத் தவறாது போவேன். கோயில் மணி அடிப்பது, தண்டேசுவரர் தூக்குவது, கோயில் பூந்தோட்டத்துக்குத் தண்ணீர் இறைப்பது போன்ற தொண்டுகள் செய்வதில் முன்னுக்கு நிற்பேன். நல்லூர் கொடி ஏறினால் பல நாள்கள் நடந்தே சென்று முருகனைக் கும்பிட்டுத் திரும்புவேன். கச்சான் கடலை வாங்க வீட்டில் தரும் 25 சதத்தில் வடிவான கடவுள் படங்களை வாங்கி வருவேன்.

ஊர்க் கோயில் அருச்சராக இருந்த (1948 - 50 ) வைரவநாதக் குருக்களிடம் சமற்கிருதமும் படித்தேன். ஆனால் அது நீடிக்கவில்லை.

க.பொ.த. (சாதாரண) தேர்வு (1950) எழுதுவதற்குப் போகு முன்னர் காலை கோயிலுக்குச் சென்று, கிணற்றில் அள்ளிக் குளித்து முட்டுக்காய்த் தேங்காய் அடித்துப் பிள்ளையாரைக் கும்பிட்டேன். தேங்காய் சரி பாதியாக உடைந்தால் அது தேர்வில் வெற்றிக்கு அறிகுறி! கோணல் மாணலாக உடைந்தால் தோல்விக்குக் கட்டியம்! அப்படியொரு நம்பிக்கை இருந்தது.

நான் கல்லில் உடைத்த தேங்காய் கோணல் மாணலாகவே உடைந்தது. அது கெட்ட 'சகுனம்” என்று நினைத்துக் கொண்டேன். என்னுடன் அதே தேர்வை அதே நாளில் எழுத இருந்த உறவினர் ஒருவர் அடித்த தேங்காய் நல்ல வண்ணமாகச் சரிபாதியாக உடைந்தது. அதன் பொருள் அவருக்குத் தேர்வில் வெற்றி என்பதாகும்!

தேர்வு முடிவுகள் வந்த பொழுது பரி. யோவான் கல்லூரி அறிவித்தல் பலகையில் அடியேன் பெயர் உட்பட 3 மாணவரது பெயரே வெற்றி என்றிருந்தது. எஞ்சிய 117 மாணவரும் தோல்வி! அதில் தேங்காய் சரி பாதியாக உடைத்தவரும் ஒருவர் ஆவார்! கல்லூரி முதல்வர் J.T  அருளானந்தம் அவர்களுக்கு அந்தப் பெறுபேறுப் பட்டியலை நம்ப முடியவில்லை. எங்கோ தவறு நடந்துவிட்டதாக நினைத்தார்.

கடவுளுக்கு நான் கையூட்டுக் கொடுத்த கடைசித் தேங்காய் அதுவே ஆகும். அதன் பின் இன்றுவரை ஒரு பகுத்தறிவாளனாகவே இருந்து வருகிறேன்.

திருமணத்தின் பொழுது 'சாதகம்” பார்க்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்டேன். இரண்டு மாலை, நாலு பேச்சாளர், பத்துத் திருக்குறளுடன் திருமண விழா இனிது நிறைவேறியது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் திருமண விழாவுக்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

சிறு வயதில் எனது மூளையில் பேய் பிசாசு, பில்லி சூனியம், கொள்ளிவால் பிசாசு, கூடுவிட்டுக் கூடு பாயும் விக்கிரமாதித்தன் கதை, வேதாளம் முருக்க மரத்தில் ஏறிய கதை முதலியவையே திணிக்கப்பட்டன. கால் நிலத்தில் படாது அலையும் பேய்கள், புளியமரத்தில் வாசம் செய்யும் முனி, வேப்ப மரத்து வைரவர், சுடலையில் அரிசிப் பொரி பொறுக்கும் குறளி, இரத்தினம் கக்கும் ஆறுதலை நாகபாம்பு போன்ற கதைகள் எனக்குச் சொல்லப்பட்டன. ஊர்க் கோயில் புறத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற பாலை மரத்தடியில் பெரிய புதையல் இருப்தாகவும் சொல்லப்பட்டது!

பள்ளியில் படிக்கும் போதே ஆறு பாகம் கொண்ட பாரதக் கதையை இரவல் வாங்கிப் படித்து முடித்தேன். இராமாயணம் (உரைநடை) வீட்டில் இருந்தது. அதில் இராம - இராவண போரை வருணிக்கும் காண்டத்தை மீண்டும் மீண்டும் படிப்பேன். அந்த அகவையில் இராமன் எனது மனக் கட்டிலில் “கடவுள் அவதார” மாகவும் இராவணன் 'அரக்க' னாகவும் அமர்ந்து கொண்டனர்.

பிற்காலத்தில் மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து வாலியைக் கொன்ற இராமன் எனக்கு ஒரு கோழையாகத் தென்பட்டான். அவ்வாறே சூர்ப்பனகையின் முலையையும் மூக்கையும் இராமன் தம்பி இலக்குவன் அரிந்து அவளை மூளி ஆக்கியது எனக்கு அநாகரிகமாகப் பட்டது.

கல்லூரியில் படிக்கும் பொழுதே பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் இவர்களது திராவிட - பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப் பட்டேன். அன்று வெளிவந்த திராவிடநாடு, மன்றம், முரசொலி, திராவிடன், காஞ்சி, ர்ழஅநடயனெஇ தென்றல் முதலிய ஏடுகளையும் பெரியார், அண்ணா, கலைஞர், நாவலர், கண்ணதாசன் முதலியோர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தவறாது படித்தேன். இவற்றில் அண்ணா எழுதிய கம்பரசம், தீ பரவட்டும், ஏ தாழ்ந்த தமிழகமே! சொர்க்கவாசல், தம்பிக்கு போன்ற நூல்கள் எனது மனதில் பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்து பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின.

அண்ணா கதை வசனம் எழுதி வெளிவந்த வேலைக்காரி, (1948) கலைஞரின் பராசக்தி (1952) நடிகவேள் எம்.ஆர். இராதா நடித்த இரத்தக்கண்ணீர் (1954) ஆகிய திரைப் படங்கள் ஒவ்வொன்றையும் 12 முறைக்கு மேலாகப் பார்த்திருப்பேன்.

திருக்குறள், சங்க இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தன. ஒழுக்கத்தை வலியுறுத்தும் திருக்குறள் என் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த பெரிதும் உதவியது. சங்க இலக்கியங்கள் போற்றிய காதலும் வீரமும் கல்வியும் பொருளும் பெருமிதமும் என்னைத் தமிழர் நாகரிகம் பற்றிப் பெருமைப்பட வைத்தன.

காலப் போக்கில் கடவுள், கோயில், குளம், சோதிடம், கைரேகை, அட்டமி நவமி, இராகு காலம், பேய் பூதம், பில்லி சூனியம் போன்றவற்றில் எனக்கு இருந்த நம்பிக்கை அற்றுப் போயிற்று! புராணங்கள், இதிகாசங்கள் இன்றைய கல்கி, சாண்டில்யன் எழுதிய வரலாற்றுப் புதினங்கள் போன்றவை என்று கண்டு கொண்டேன்.

சோதிடப் புரட்டை எழுதத் தொடங்கிய பின்னரே ஒரு வில்லங்கமான பாடத்தை கையில் எடுத்துக் கொண்டதை உணர்ந்தேன். எனவே முதல் வேலையாக சோதிடம், வானியல் பற்றிய பல தமிழ் ஆங்கில நூல்களை விலைக்கு வாங்கிப் படித்தேன். இணைய தளத்தில் சோதிடம், வானியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை அச்செடுத்து ஒரு மாணவன் தேர்வுக்குப் படிப்பது போல் படித்தேன். சொல்லப் போனால் நூல்களிலும் பார்க்க இணைய தளமே எனக்குப் பேரளவு கைகொடுத்தது. வானியல் பற்றிய இணைய தளங்களின் எண்ணிக்கையைப் (565,000) பார்த்து மலைத்துப் போனேன்.

பள்ளியில் படிக்கும் மாணவருக்காகப் புகைப்படங்களோடும் வரைபடங்களோடும் எழுதப்பட்ட வானியல் பாடங்களைப் படித்து விளங்கிக் கொள்வது எளிதாக இருந்தன.

சோதிடத்தில் பயன்படுத்தப்படும் இலக்கினம், தெசை, இராசி, வீடு, பாவம், கோசாரம், உச்ச நீச்சம், பார்வைகள், சந்திர பலன், சூரிய - சந்திர ஓரைகள், பஞ்சவித  நிலைகள் முதலியவற்றைத் திருத்தமாக விளங்கிக் கொள்ளப் பல மாதங்கள் எடுத்தன.

சோதிட சாத்திரம் தொடர்பான அய்யங்களை மின்னஞ்சல் மூலம் பல சோதிடர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

இதனால், தொடக்கத்தில் குழப்பமாக இருந்த சோதிடம் - வானியல் இரண்டையும் பின்னர் நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது.

இணைய தளத்தில் பிறந்த ஆண்டு, நாள், நேரம், இடம் (குறுக்குக் கோடு, நேர்க்கோடு ) இவற்றைக் கொடுத்தால் அய்ந்து வினாடியில் சோதிட மென்பொருள் சாதகம் (நவாம்சம் உட்பட) கணித்துக் கொடுத்துவிடும்.

பிறந்த ஆண்டை மாற்றினால் சில கோள்களின் நிலை மாறுவதைப் பார்த்தேன். பிறந்த நேரத்தை கூட்டிக் குறைத்தால் வரிசையாகத் தோன்றி மறையும் பிறப்பு இலக்கினம், பிறப்பு இராசி, பிறப்பு நட்சத்திரம் மாறுவதைக் கவனித்தேன். ஏன் அவ்வாறு மாறுகின்றன என்பதை இந்த நூலைப் படிக்கும் பொழுது தெரிந்து கொள்வீர்கள்.

திறந்த மனத்தோடுதான் சோதிடத்தைப் படித்தேன். படித்து முடித்த பின்னர் அதில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் முற்றாகப் போய்விட்டது.

சோதிடம் சரி, சோதிடர்கள்தான் பிழையாகக் கணித்துச் சொல்கிறார்கள்? இது பலர் என்னிடம் கேட்கும் கேள்வி ஆகும்.

எனது விடை 'சோதிடம் கட்டி எழுப்பப்பட்டுள்ள அடித்தளமே தவறானது என்பதாகும். பல கோடி கல் தொலைவில் உள்ள கோள்கள், பத்து, நூறு, ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இராசிகள், நட்சத்திரங்கள் புவியில் பிறக்கும் குழந்தையைப் பாதிக்க வழியே இல்லை! அப்படியிருக்க அதன் அடிப்படையில் எந்தப் பெரிய கெட்டிக்காரச் சோதிடனும் எவ்வளவு நுட்பமாகக் கணித்துப் பலன் சொன்னாலும் அது பிழையாகவே இருக்கும்! சோதிடம், இல்லாத ஊருக்குப் போகிற வழி சொன்னவன் கதையாகும்.

நாம் வாழும் புவி ஞாயிறு குடும்பத்தின் நடுவில் இருக்கிறது, அசையாமல் இருக்கும் புவியை ஞாயிறு உட்பட ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற அடிப்படையிலேயே சோதிட சாத்திரம் எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே சாதகம் கணிக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவன்று. புவியும் ஏனைய கோள்களுமே ஞாயிறைச் சுற்றி வருகின்றன. மேலும் நாம் வாழும் புவிக் கோள் சோதிட சாத்திரத்தில் முற்றாக விடுபட்டுப் போய்விட்டது.

சோதிடப் புரட்டு முழகத்திலும் தமிழ்நாதம் இணையதளத்திலும் வெளிவந்து கொண்டிருந்த வேளை
அதற்குப் பெரிய ஆதரவு படிப்போரிடம் இருந்து கிடைத்தது. அது, இத் தொடரை எழுதி முடிக்கத் தூண்டுகோலாக அமைந்தது.

கட்டுரைகள் ஒவ்வொன்றையும் எழுதப் பல நாள்களைச் செலவழித்துள்ளேன்.

சோதிடப் புரட்டை நூல் வடிவில் கொண்டுவர முடிவு செய்த பொழுது நான் முன்பு எழுதியவற்றைப் பட்டறிவின் அடிப்படையில் பல முறை மீள் பார்வை செய்து செப்பனிட்டேன். அவ்வாறு செய்யவும் பல திங்கள்கள் எடுத்தன.

இந்த நூலில் சில வடமொழிச் சொற்களை விலக்க முடியாத காரணத்தால் சேர்த்துள்ளேன். சோதிடம் தமிழரது சாத்திரம் அல்ல. இது வடமொழிக்கும் வேத கால ஆரியருக்கும் உரியது. எனவே அதனை முற்றிலும் தனித் தமிழில் எழுத முடியவில்லை. முடிந்த மட்டும் எழுத முயற்சித்துள்ளேன்.

சோதிடம் பற்றி எழுதும் பொழுது குழப்பம் ஏற்படாது இருக்க விண்மீனை நட்சத்திரம் என்றும், ஓரையை இராசி என்றும், கோள்களைக் கிரகங்கள் என்றும் ஞாயிறைச் சூரியன் என்றும், நிலாவைச் சந்திரன் என்றும், முழுநிலா அல்லது உவவுமதியைப் பவுர்ணமி என்றும், குற்றத்தைத் தோசம் என்றும் எழுதியுள்ளேன்.

ஆனால், வானியல் பற்றி எழுதும் பொழுது முடிந்தளவு தூய தமிழில் எழுதியுள்ளேன். வருடம், தினம் போன்ற சொற்களை நீக்கி ஆண்டு, நாள் எனக் குறித்துள்ளேன். மேலும் ஜோதிடம், ராசி, நஷ்ஷத்திரம், மேஷம், ரிஷபம் போன்ற வடமொழிச் சொற்களைத் தமிழ் ஒலிப்படுத்தி உள்ளேன்.

கிரேக்க ஆங்கிலப் பெயர்ச் சொற்களின் உச்சரிப்புச் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டொரு கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளேன். மேலும் பிறர் கூற்றை மேற்கோள் காட்டும் பொழுது அவர்களது கொடுந்தமிழை மாற்றாது அப்படியே கையாண்டுள்ளேன்.

எனது நண்பர் திரு. சண்முகம் குகதாசன் கையெழுத்துப் படியைப் ஒப்பு நோக்கிப் பார்த்துப் பல வடசொற்களை நீக்கித் தனித் தமிழில் எழுத உதவினார். இலக்கணப் பிழைகள் களைவதற்கும் கை கொடுத்தார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூலுக்கு ஒரு முன்னுரை தேவைப்பட்ட போது என் கண் முன் நின்றவர் தமிழீழ அரசவைப் பாவலர் காசி ஆனந்தன் ஆவார். அவர் அன்னை தமிழை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் பாவலர்! அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

இந்த நூலை எழுதியதன் தலையாய நோக்கம் தமிழ் மக்களை முடைநாற்றம் வீசும் மூட நம்பிக்கைச் சேற்றில் இருந்து மீட்டு அவர்களைப் பகுத்தறிவு மணம் கமழும் மாளிகையில் குடியிருத்துவதே ஆகும்!

குறிப்பாகத் திருமண காலத்தில் சாதகம் பார்க்கும் பழக்கத்தைத் தமிழ்மக்கள் முற்றாகக் கைவிட வேண்டும் என்பது எனது பெரு விருப்பாகும்.

அடித்தளம் பிழையாக உள்ள ஒரு போலிச் சாத்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் சாதகத்தை வைத்துத் திருமணப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலாகும். உலகில் 13 இலக்க வகை விலங்குகள் உண்டென்கிறார்கள். ஆனால் மாந்தனுக்கே ஆறாவது அறிவான பகுத்தறிவு இருக்கிறது. இருந்தும் பலர் அதனைப் பயன்படுத்த மறுக்கின்றனர்.

கல்வி, அழகு, செல்வம், குணம், நடை, குடி ஆகிய பொருத்தங்கள் ஆண் -பெண் இருபாலாருக்கும் இடையில் அமைந்திருந்தும் கிரகப் பொருத்தம் நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்று கூறி அந்தத் திருமண இணைப்பு புறந்தள்ளப்படுகிறது. இது பெரிய கொடுமையாகும்.
அதே வேளை பிழையான சோதிடத்தின் அடிப்படையில் மனப் பொருத்தம் இல்லாத ஆண் - பெண் இணைக்கப்படுகின்றனர்.

பன்னிரண்டு பொருத்தத்தில் 11 பொருத்தம் சரி வந்து செய்த திருமணம் முறிந்து போய்விட்டதாக ஒரு சோதிடர் எழுதியுள்ளார். இது கூடக் குற்றமில்லை. சோதிடர்களின் பிள்ளைகளே திருமணம் முடித்த சில ஆண்டுகளில் கைம்பெண்ணாகி உள்ளனர். இது சாதகம் பார்ப்பதில் எந்தப் பொருளும் இல்லை என்பதற்கு நல்ல சான்றாகும்.

எனக்குத் தெரியச் சாதகப் பொருத்தம் இல்லை என்பதை மீறித் திருமணம் செய்து கொண்டோர் குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதே சமயம் பொருத்தம் பார்த்துச் செய்து வைத்த திருமணங்கள் சில மணப்பிரிவில் அல்லது மணமுறிவில் முடிந்துள்ளன!

திருமணம் வெற்றி பெறுவது திருமணம் செய்து கொள்ளும் மணமகன் - மணமகள் இருவரது கைகளிலேயே பேரளவு தங்கி உள்ளது. அவர்களது தாய் தந்தை உற்றார் உறவினர் பங்கு சிற்றளவே இருக்கும்.

மேலைநாடுகளில் சோதிடம் பார்ப்போர் இருக்கின்றனர். ஆனால், அது பொழுது போக்குக்காகப் பார்க்கப்படுபவை ஆகும். அவர்கள் தங்கள் ளுரn ளபைn யை (பிறப்பின் பொழுது சூரியன் நின்ற இராசி) அறிந்து கொள்வதோடு சோதிடம் பற்றிய அவர்களது ஆர்வம் நின்று விடுகிறது. திருமணம் செய்யமுன்னர் சோதிடரிடம் சாதகங்களைக் கொடுத்துப் பொருத்தம் பார்க்கும் வழக்கம் மேலை நாடுகளில் இல்லை.

ஏன் தமிழ்க் கிறித்தவரிடமும் சாதகம் கணிக்கும் வழக்கமோ சாதகப் பொருத்தம் பார்க்கும் பழக்கமோ இல்லை.
சாதகம் பார்க்கும் வழக்கம் இந்துத் தமிழர்களிடம் மட்டுமே காணப்படுகிறது. என்ன காரணம்?

சோதிடம் இந்து சமயத்தின் ஒரு கூறாக உருவான சாத்திரமாகவும் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால்வேதத்தைப் பொருள் அடிப்படையில் ஆறு அங்கங்களாக (வேதாங்கம்) வகுத்து அதில் கர்மகாண்டத்தில் சொல்லப்படும் கருமங்களின் அநுட்டானத்துக்குரிய காலத்தைத் நிருணயம் செய்யும் முறைக்கு ஜோதிஷம் (சோதிடமும் கணிதமும்) எனப் பெயரிட்டுள்ளனர். எஞ்சிய அங்கங்கள் சிஷை (உச்சரிப்பு) வியாகரணம் ( இலக்கணம்) சந்தஸ் (சீர்) நிருத்தம் (பொருள்) கல்பம் (கிரிகை) என்பனவாகும்.

சோதிடத்தைச் சூரியன் முதலான 18 இருடிகள் இயற்றியதாக அய்தீகம். அதனை எல்லோரும் எளிதில் புரியுமாறு சுருக்கி எழுதியவர் வராகமிருகர் ஆவார்.
இவ்வாறு சோதிடம் வேதத்தோடு முடிச்சுப் போடப்பட்டு, இந்து மதத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருப்பதாலேயே இந்தச் சோதிட நம்பிக்கை இந்துக்களிடம் மட்டும் காணப்படுகிறது.
எனவே, சோதிடம் போன்ற மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்றால் இந்துக்களது கோயில், குளம், தேர், தீர்த்தம், சொர்க்கம், நரகம், சிறுதெய்வ வழிபாடுகள் போன்றவற்றில் உள்ள மிகு நம்பிக்கையை ஒழிக்க வேண்டும். எது போலென்றால் நுளம்பை முற்றாக ஒழிக்க அது உற்பத்தியாகும் இடங்களை ஒழிப்பது போன்று!

எனவே, சமயம் பற்றிய எனது கருத்துக்களைப் படித்து விட்டுச் சீறாமல் சினக்காமல் நான் சொல்வதில் மெய்ப்பொருள் இருக்கிறதா இல்லையா என்பதை ஆற அமரச் சிந்துத்துப் பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

சிங்கள - பவுத்தர்கள் சோதிடம், நாடி பார்ப்பதில்லையா? எனக் கேட்கலாம். பார்க்கிறார்கள். சிங்களவர் பவுத்தர்களாக மதம் மாறு முன்னர் வைதீக மதத்தவராக இருந்தமையே அதற்கு ஏதுவாகும். புத்தர் சோதிடத்தை மிருக சாத்திரம் (யுniஅயட ளஉநைnஉந) என எள்ளி நகையாடியுள்ளார் என்பது மனங்கொள்ளத்தக்கது.

அரிது அரிது மானிடப் பிறவி அரிது என்று தமிழ்மகள் அவ்வையார் சொன்னது முற்றிலும் உண்மை ஆகும். இந்தப் பிறவியைத் துன்பம் என்று எண்ணாது, உடம்பை இழிவென்று தள்ளாது, வாழ்க்கையை முழுமையாகவும், பயனுள்ளதாகவும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். துன்பத்தைக் குறைத்து இன்பத்தைப் பெருக்க நல்வழியில் இடைவிடாது முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும் எனப் புலவோர் சொன்னது பொய்மொழி இல்லை!

தமிழருக்கு இறையாண்மை படைத்த அரசு ஒன்று இல்லாததால் மாணவர்களது கற்கை நெறி குமுகாய அறிவியல் அடிப்படையில் வகுக்கப்படவில்லை. இப்பொழுதுள்ள கற்கை நெறி தொழிலை இலக்காகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது. வையத்தில் வாழ்வாங்கு வாழும் வழி என்ன என்பதைப் பள்ளிக்கூடத்தில் யாரும் பாடமாகச் சொல்லிக் கொடுப்பதில்லை. இதனால் நீர்வழிப் படூஉம் புணை போலப் பலரது வாழ்க்கை அமைந்து விடுகிறது.

எப்படி உடல் நோய் தீர மருந்து உண்ண வேண்டுமோ அதே போல் மூடநம்பிக்கை போன்ற குமுகாய நோய்கள் தீரப் பகுத்தறிவு என்ற மருந்தை உட் கொள்ள வேண்டும். ஏனைய இனங்களோடு ஒப்பிடும் போது அறிவியல் தளத்தில் தமிழர் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இது காரணமாகவே அறிவியலின் இன்றியமையாத் தேவையை இந்த நூல் நெடுகிலும் வற்புறுத்தி எழுதியுள்ளேன்.

ஒவ்வொரு நாளும் வீட்டைக் கூட்டிக் குப்பைகளை அகற்றித் துப்பரவு செய்கிறோம். தண்ணீரில் குளித்து உடல் அழுக்கைப் போக்கிப் புறத் தூய்மைப் பேணிக் கொள்கிறோம். மனதில் உள்ள சாத்திரக் குப்பைகளையும் சமய அழுக்கையும் அகற்றி அகத் தூய்மை பேண நாம் ஏன் பின் நிற்க வேண்டும்?

திருவள்ளுவர் ஆக்கிய திருக்குறள் ஒரு முழுமையான வாழ்வு நூல் ஆகும். தமிழர்கள் அதனைத் தங்கள் வாழ்க்கைக் கையேடாகவும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் கொள்தல் வேண்டும். பகுத்தறிவோடு வாழத் திருக்குறள் உறுதியாக உதவும்.

திருக்குறள் வழி வாழ முடியும் வாழலாம் என்பதற்கு நானும் எனது மனைவி பிள்ளைகளும் பேரளவு சான்றாக இருக்கிறோம்! நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பொன்மொழிக்கு அமையவும் வாழ்கிறோம்.

வாழ்க்கையில் ஏற்படும் பல சிக்கல்களை அவிழ்ப்பதற்கு வேண்டிய வழிமுறைகளையும் நுணுக்கங்களையும் வள்ளுவர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்.
நல்ல எண்ணம், நல்ல சிந்தனை, நல்லறிவு, நல்வினை, நற்காட்சி, நயம்பட உரைத்தல், பகுத்துண்டு வாழ்தல், இசைபட இருத்தல் உங்கள் வாழ்வின் குறிக்கோளாக இருக்கட்டும்! அன்பு, அருள், அறன் உங்கள் வழிபாடாக இருக்கட்டும்!

இந்த நூலைப் படித்து விட்டு அதற்கு அணிந்துரை எழுதிய நண்பர் திரு. இலங்கையனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போலவே அவரும் ஒரு அப்பழுக்கற்ற பகுத்தறிவாளர் ஆவார்.

இந்த இடத்தில் சோதிடப் புரட்டுத் தொடரை முழக்கத்தில் ஒன்றரை ஆண்டு காலமாக எனது அன்புக்குரிய முழக்கம் ஆசிரியர் திருமுருகவேந்தன் (திரு) மற்றும் முழக்கம் பொறுப்பாசிரியர் வானதி (அன்பரசி) இருவருக்கும் எனது உளம் கனிந்த நன்றி. எனது எண்ணத்துக்கும் எழுத்துக்கும் முழக்கம் வடிகாலாக இருந்து வருகிறது.

சோதிடப் புரட்டை வெளியிட்டதால் முழக்கம் இரண்டொரு விளம்பரங்களை இழந்ததும் உண்டு.

வயலில் நல்ல விளைச்சலை விரும்பும் கமக்காரன் மண்ணை ஆழ உழுது, உயர வரம்பு கட்டி, எருவிட்டு, நல்ல விதை நெல் தேடி விதைத்து, களை பிடுங்கி, உரிய காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். குமுகாயமும் அப்படியே ஆகும். நல்ல பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்து, மூடநம்பிக்கை என்ற களை பிடுங்கி, அறிவைப் பெருக்கினால் மட்டுமே தனி மாந்த வாழ்வு சிறக்கும். தனி மாந்த வாழ்வு சிறந்தால் குமுகாயம் முன்னேறும். இந்தப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுவரும் பகுத்தறிவு இணையர் திரு - அன்பரசி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

முழக்கம் போலவே தமிழ்நாதம் இணையதளத்தில் சோதிடப் புரட்டைத் தொடர்ந்து நல்ல முறையில் வெளியிட்ட தம்பி கரனுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
ஒருவரது வாழ்க்கையின் வெற்றிக்குப் பின்னால் அவரது மனைவி இருப்பதாகச் சொல்வர். எனது வாழ்க்கையைப் பொறுத்தளவில் இந்தப் பொன்மொழி நூறு விழுக்காடு உண்மை ஆகும்.

எனது எழுத்துப் பணி யாவற்றுக்கும் கை கொடுக்கும் எனது துணைவியாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைக் கருத்தோடு கவனித்துக் கொள்ளும் அம்மம்மா (மாமி) எனக்கு வேண்டிய மருந்து முதல் விருந்து வரை குறிப்பறிந்து கவனித்துக் கொள்ளும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முடிவாகச் சாதி சமயமற்ற சங்க காலமே (முற் பகுதி) தமிழரது பொற்காலம் என்பது தமிழறிஞர் கருத்தாகும். அந்தப் பொற்காலம் நாளை மலர இருக்கும் தமிழீழத்தில் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதே என் ஆசை. என் ஆசை விரைவில் நனவாகும் என நம்புகிறேன்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

நக்கீரன்




உள்ளுறை


புரட்டு             தலைப்பு                                             பக்கம்


1         அறிவியலும் சோதிடமும்
2         மண்ணைக் கவ்விய சோதிடர்கள்!
3         சோதிடம் போலி அறிவியல்
4         இராகு கேது கோள்கள் அழகான கற்பனை!
5         தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் சோதிடர்கள்!
6         புதன் கோள் அலியாம்! எப்படிக் கண்டு பிடித்தார்கள்?
7        இரண்டு சோதிட முறைகளும் சரியாக இருக்க முடியாது!
8         கோள்களில் 'பாவ”ப் பட்ட சனி!
9         சூரியன் சனி ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாம்!
10     சோதிட நம்பிக்கைக்குக் காரணம் பயம்!
11     படிப்போ பட்டமோ இல்லாத சோதிடர்!
12     சோதிடம் தனை இகழ்!
13     சோதிடர்களே! சில எண்கள் செய்த பாவம்தான் என்ன?
14     புவியின் முதல் விஞ்ஞானி யார்?
15     ஆரியர் தேவர்! திராவிடர் இராட்சதர்!
16     சோதிடருக்குப் பதில் மருத்துவரை நாடுங்கள்!
17     குழந்தை ஆணா? பெண்ணா? என்பது கோள்களில் இல்லை!
18     இது உனக்குப் பிறந்த குழந்தை அல்ல!
19     சோதிடம் இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடும் குருடன் கதை!
20     திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்
21     அய்ந்தில் நாலு பங்கு சாதகங்கள் பிழையாகக் கணிக்கப்பட்டுள்ளன!
22     காதலுக்குப் பாடை கட்டிக் கொல்ல நினைக்கும் தந்தை!
23     சோதிடருக்கே எமனாகப் போய்விட்ட சோதிடம்!
24     “அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை" என்பது ஈசனுடைய விதி!
25     பண்டைய மனிதனுக்குக் கண்டதெல்லாம் கடவுள்கள்!
26     மழை பெய்விப்பதற்குப் பிராணிகளுக்குத் திருமணம்!
27     விண்ணைப் பற்றிய அச்சமே சோதிடம்!
28     இராசிகள் வெறும் கற்பனை உருவங்களே!
29     சோதிடப் புரட்டுப் போல் தெய்வீகமும் புரட்டுத்தான்!
30     அறிவியல் வளர்ச்சிக்குக் கிரேக்கத்தின் பங்களிப்பு
31     புகழ் பெற்ற கிரேக்க வானியலாளர்கள்
32     சந்திர சூரிய கிரகணங்கள்
33     சோதிடர்களின் ஆசான் தொலமி
34     கோபெர்னிக்கன் புரட்சி (ஊழிநசniஉரn சுநஎழடரவழைn)
35     வியைமட்டுமல்ல மனித மனதையும் அசையவைத்த மனிதர்
36     ஜோசியத்தால் கெட்டேன்!
37     இறந்து போனவரை உயிரோடு இருக்கின்றார் என்ற சோதிடர்!
38     'இயற்கையின் மூலவிதியை' கண்டுபிடித்த கெப்லர்
39     விண்ணை 'ஞானக்' கண்ணால் பார்த்த கலிலியோ!
40     திருச்சபையால் உயிருடன் எரிக்கப்பட்ட புறூனோ!
41     ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டன்
42     இந்திய வானியல் வரலாறு
43     புகழ் பெற்ற வானியலாளர் ஆரியபட்டர்
44     இந்திய காலக் கணிப்புகள்
45     சங்க கால வானியல்
46     எரிமீன் வீழ்ந்தது கண்டு கலங்கிய புலவர்
47     ஓரைகளும் விண்மீன் கூட்டங்களும்
48     கோள்களுக்கும் பிறக்கும் குழந்தைக்கும் உள்ள முடிச்சு எது?
49     இந்தியாவின் கிளி சோதிடர்கள்!
50     சோதிடர்களை ஏமாற்றும் கிரகங்கள்!
51     ராஜிவ் காந்தி பதவிக்கு வாறது நிச்சயம்!
52     மூக்குடைபட்ட சோதிடர்கள்!
53     செவ்வாய் சிவப்பு எனவே அது யுத்தகாரன்?
54     இப்படி இருந்தால் ஏன் இப்படியெல்லாம் அமைகிறது?
55     தமிழ் நாட்டின் அடுத்த “முதல்வர்” ரஜினி
56     பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தைகள்!
57     சோதிடம் என்பது வெறும் குப்பை!
58     சோதிடத்தால் தீமையே அன்றி எந்த நன்மையும் இல்லை!
59     ஒரே நேரத்தில் பிறந்த இருவரது குணாம்சங்கள் ஒரே மாதிரியாக இல்லை!
60     மரணப் படுக்கையில் சோதிடம்
61     கோள் நிலை ஒரே மாதிரி இல்லை!
62     அவதாரங்களை அம்பலப்படுத்திய டாக்டர் ஏப்ரகாம் கோவூர்
63     சோதிடமும் கைரேகையும் சமுதாயத்திற்குச் சாபக்கேடு!
64     ஏமாளிகளின் தலையில் மிளகாய் அரைக்கும் சோதிடர்கள்!
65     பிறப்புக்கும் பெயருக்கும் எண்ணுக்கும் தொடர்பே இல்லை!
66     ஆன்மீகமும் அறிவியலும்!
67     மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியாது!
68     எங்களது எதிர்காலம் எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது
69     பிள்ளையே இல்லாதவருக்குப் பிள்ளைகளால் சிக்கல்!
70     எனை நாடி வந்த கோள் என் செயும்!
71     சோதிடம் என்பது மூடத்தனம்! அறிவியல் உங்கள் மூலதனம்!

பதிப்பாளர் உரை

இயற்கையின் இயக்கத்தை அறியாத மனிதனின் அச்சமும்  அறியாமையும் கடவுள் உண்டாகக் காரணமானதைப் போவே, அறிவு வளர்ச்சி பெற்ற மனிதனின் பேராசையும் சோம்பலும் சோதிடம், கைரேக, எண்கணிதம்,  வாஸ்து எனப் பலவும் உண்டாகக் காரணமாயிற்று. அவற்றிலும் சோதிடம் கணித்துக் கூறிய வகையில் கோள்களின் நிலை, சூரிய சந்திர கிரகணங்கள் போன்றவை ஏற்படுதல் போன்றவை சரியாக இருப்பதைச் சுட்டி, இதுவும் ஒரு அறிவியல் தான் என நிறுவி, எளிதில் ஒருவரை நம்பவைக்கும் வாய்ப்பும் சோதிடத்துக்கே உண்டு.

1950 களின் பிற்பகுதியில்  இந்திய அரசு அமைத்த 'தேசிய ஆண்டுக் கணக்கு சீர்திருத்தக் குழு' வின் அறிக்கையில் பேராசிரியர் கோரக பிரசாத் "இரவில் விளக்கில்லாமல் சைக்கிள் ஓட்டுவர்" காவலரிடம் பிடிபடுவதைத் தவிர்க்க ஒவ்வொரு தெருமுனையிலும் எச்சரிகையாக கீழெ இறங்கிச் செல்வதை ஒத்ததுதான் இந்தப் பஞ்சாகக்காரர்கள் அனைவரின் நடவடிக்கைகளும்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டதைப் போலத்தான், தனது சிக்கலைத் தீர்க்க வழிவகை தெரியாமல் குழப்பத்தோடு குறிப்பைத் தூக்கிக் கொண்டு தன்னிடம் வருபவர்களிடம் சோதிடிர்கள் எச்சரிகை மிகுந்த நழுவல் சொற்களால் கூறும் எதிர்வுகூறும் திறமையால்தான் இன்னமும் சோதிடத்தைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது.

மனித சமுதாயத்தின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு பொது நலப் பணியாற்ற முனவந்த புத்தர் முதலான பல்வேறு முற்போக்கு சிந்தனையாளர்களாலும் சோதிடம் போன்ற குருட்டு நம்பிக்கைகளும்  குறுக்குவழி முயற்சிகளும் கண்டிக்கப்பட்டே வந்துள்ளன. சோதிடத்தின் பொய்மைகளை அம்பலப்படுத்தியும் பல்வேறு நால்களும் வெளிவந்துள்ளன.

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே பெரியார் தானும் தன்னை ஒத்த சிந்தனை உள்ளவர்களும் சோதிடம் பற்றி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து "சோதிட ஆராய்ச்சி" என்ற நூலை வெளியிட்டுள்ளார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் முப்பதாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றிய  பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன் எழுதிய 'சோதிடம்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. அதன் பின்னரும் சோதிடம் பற்றித் தமிழில் பல்வேற நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அந்நூல்கள் எல்லாம் பெரும்பாலும் சோதிடத்தைத் தர்க்க முறையிலே எதிர்த்தன. அல்லது நடைமுறையில் சோதிட எதிர்வுகூறல்களில் நடக்காதவற்றை எடுத்துக் காட்டியும் ஒரே பொருள் குறித்து அல்லது ஒரே இராசிக்கு எழுதப்பட்ட முரண்பட்ட பலன்களை எடுத்துக் காட்டியுமே சோதிடத்தை மறுத்துள்ளன.

சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட் நெப்தியூன், புளுட்டோ, யூரேனஸ் போன்ற கோள்கள் சோதிடத்தில் இல்லை. கோளாக சோதிடம் குறிப்பிடும் சூரியன் ஒரு கோளே அல்ல,  அதுவொரு விண்மீன். சந்திரன் கோள் அல்ல துணைக்கோள் தான் - பூமி என்ற கோளே சோதிடத்தில் இல்லை என்றளவிலேயே விவாதிக்கப்பட்டன.

பல்வேறு பஞ்சாங்கங்களில் காணப்படும் வேறபாடுகளையம் நிலவில் மனிதன் இறங்கியதையும் செவ்வாய் போன்ற கோள்கள் குறித்த ஆய்வுகளையும் பூமி சுழற்சியில் ஏற்படும் சிறு தள்ளாட்டத்தால் ஏற்படும் அயனாம்ச வேறுபாடுகளையும் மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் இந்நூலில் வானியல், வானியல் ஆய்வுகளில் ஈடுபட்ட அறிவியலாளர்கள், அவர்களது கண்டுபிடிப்புகள், சோதிடப் பஞ்சாங்க முறை வரலாறு போன்றவற்றைத் தெளிவாக நிரல்பட விளக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நூலில் சோதிடத்தின் பல்வேறு கூறுகளான நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள், கோள்கள், அவற்றின் நிலைகள்,  இராசி வீடுகள், ஜன்மலக்கினம், ஜன்மராசி, கிரகப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், கணப்பொருத்தம் எனப் பட்டியலிடப்படும் பல்வேறு பொருத்தங்கள், செவ்வாய் தோசம் போன்றவற்றைக் குறித்து விரிவாக விளக்கி உள்ளதோடு, சோதிடத்தோடு தொடர்புடைய நொஸ்டர்டாம் குறிப்புகள், எண்கணிதம் போன்றவற்றையும் குழந்தை பிறப்பு, ஆண் பெண் குழந்தை பிறப்பில் குரோமோசோமின் பங்கு,  புவிமையக் கோட்பாட்டின் பிழை போன்றவை குறித்தும் எழுதியுள்ளார்.

சோதிடத்தின் எல்லாக் கூறுகளை விளக்குவதோடு நிற்காமல், அவற்றை நடைமுறை நிகழ்வுகளைக் காட்டி மறுத்துள்ளதோடு அதில் உள்ள பிழைகளையும் விளக்கி உள்ளார்.

சோதிடத்தின் அனைததுக் கூறுகளையும் அதன் சல்லிவேர், ஆணிவேர் வரை சென்று, அதன் பொய்மைகளை அம்பலப்படுத்த நூலாசிரியர் மேற்கொண்டுள்ள மலைக்க வைக்கும் பேருழைப்பும், தளராத முயற்சியும் அறிவியல், மனிதநேயப் பற்றுள்ள அனைவராலும் நன்றியுடன் போற்றிப் பாராட்டத்தக்கதாகும்.

2003, 2004 ஆண்டுகளில் எழுதப்பட்ட இவ்வரிய கட்டுரைத் தொகுப்பை இணையதளத்தில் கண்டு அதைப் பதிவிறக்கம் செய்து இரு தொகுப்புகளாக நமக்களித்த தாராபுரம் தோழர்கள் சபரி, குமார் ஆகியோரே இவ்வெளியீட்டுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தவர்கள்.

ஆவல் பொங்க கட்டுரைத் தொகுப்புகளைப் படித்து முடித்தவுடன் நாம் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக பதிப்பித்து வெளியிட விரும்பி, நாலாசிரியரிடம் தொடர்பு கொண்டவுடன் அவரும் மனமுவந்து இசைவளித்தார்.

கட்டுரையின் பல்வேறு இடங்களில் பாரதியின் மேற்கோள்களே பெரிதும் விரவியுள்ளமை (பொருள் பொருத்தத்துடன் இருப்பினும்) கனடாவில் வாழும் நூலாசிரியருக்கு, பாரதிதாசன், குத்தூசி குருசாமி போன்றோரின் முழுப்படைப்புகளும் பாரதி குறித்து வெளிவந்து கொண்டுள்ள பல்வகை திறனாய்வுகளும் கிடைக்காமை கூடக் காரணமாக இருக்கலாம்.

தமிழில்,  சோதிடம் குறித்து முழு ஆய்வு நூலான "சோதிடப் புரட்டு" என்ற இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் பூரிப்படைகிறோம். பெருமை கொள்கிறோம்.

மிகக் குறுகிய காலத்தில்  மெய்ப்புப் பார்த்து, பிழைகளைத் திருத்திக் கொடுத்த மேட்டூர் மே.கா. கிட்டு, மேலட்டையை வடிவமைத்த செம்பட்டி இராசா, கணினியாக்கம் செய்த திண்டுக்கல் அசுரன் ஊடகம் தாமரைக்கண்ணன் ஆகிய தோழர்களுக்கும் அச்சிட்டுக் கொடுத்த கிரியேட்டிவ் கிராபிக்ஸ் கணேசன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் திராவிடர் கழகம்


 

சோதிடப் புரட்டு

(1)


அறிவியலும் சோதிடமும்


அறிவியல், வானியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்றவை இன்று மக்களது வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி அமைத்துள்ளன. ஆண்டாண்டு காலமாக வேதவாக்காக நம்பி வந்த மதநம்பிக்கைகளை ஆட்டம் காண வைத்துள்ளன.

ஒரு காலத்தில ஞாயிறு, நிலா, கோள்கள், விண்மீன்கள் (நட்சத்திரங்கள்), கிரகணம், அண்டவெளி, இடி, மின்னல், காற்று, புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை, கடல்கொந்தளிப்பு ஆகிய இயற்கை நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றைக் கண்டு ஆதி மனிதன் பயந்து நடுங்கினான். அவற்றைத் திருப்திப்படுத்த பொங்கல், படையல், உயிர்ப்பலி கொடுத்து வழிபட்டான். காலப்போக்கில் இந்த அச்சம் தரும் இயற்கையை ஆட்டுவிக்க சகல வல்லமை படைத்த உலகியற்றியான் (கருத்தா) ஒருவன் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து அதற்குக் கடவுள், இறைவன், தெய்வம், தேவன், பிரம்மம் எனப் பலவாறு பெயரிட்டான்.

மனிதன் பேசத் தெரிந்த பின்னரே கடவுள்ப் பெயர்களைக் கண்டு பிடித்திருக்க வேண்டும்! இன்னும் நன்றாகப் பேசத் தெரிந்த பின்னரே தத்துவம் என்ற பெயரில் கடவுள் பற்றிய கற்பனைக் கதைகளை உருவாக்கி இருக்க வேண்டும்.

கடவுளின் சினத்தைத் தணிக்கவும் அருளைப் பெறவும் தூபதீப நிவேதனங்கள், ஆடல் பாடல், மேள தாளம், தேர் திருவிழா, சரிகை கிரிகை எனச் சடங்குகளை மனிதன் உருவாக்கினான்.

கடவுளர் இருக்க இடம் வேண்டாமா? கோயில், குளம், கோபுரங்கள் ஆகியவற்றைக் கட்டினான். அதில் அம்பு, வில், வேல், வாள், கத்தி, சூலம், கதை, சக்கரம், தண்டு ஆகியவற்றைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்த தன் முன்னோர்கள் உருவில் சிலைகளை வடித்து வைத்தான். தான் செய்வது போன்று அந்தச் சிலைகளைக் குளிப்பாட்டி, ஆடை உடுத்தி, ஆபரணம் பூட்டி, படையல் செய்தான். தனக்கு மனைவி மக்கள் இருப்பது போலத் தெய்வங்களுக்கும் மனைவி மக்களைக் கற்பித்துத் திருமணவிழாக்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வேட்டைத் திருவிழாக்கள் ஆகியவற்றை நடத்தினான்.

சார்ல்ஸ் டார்வின்

வேட்டையாடிப் பிழைக்கவும் உழுது பயிரிட்டு வாழவும் விரும்பாத ஒரு சோம்பேறிக் கூட்டம், தங்களை வானத்தில் இருக்கும் கடவுளருக்கும் நிலத்தில் வாழும் மனிதர்களுக்கும் இடையிலான தரகர்கள் என்றும், கடவுளை வசப்படுத்தி, விரும்பியதை விரும்பியவாறு பெற்றுத் தரத் தங்களிடம் மந்திரம் தந்திரம் யந்திரம் போன்ற ஆற்றல் இருப்பதாகச் சொன்ன பூசாரிகள, குருமார்கள் அதற்கான சடங்குகளை நடத்தி வைத்தார்கள்.

நாளடைவில் சரிகை கிரிகை, பூசை, பிரார்த்தனை, பக்தி, முக்தி என விரிந்து கடவுள் என்ற கற்பனைச் சொல்லினைச் சுற்றி உலக மதங்களும் சிக்கலான தத்துவங்களும் தோன்றின.
இன்று மனிதன் பல் கலைகளையும் கற்று முன்னேறி, இயற்கையின் மர்மங்களைத் தெரிந்து கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தவும் அடக்கி ஆளவும் கற்றுக் கொண்டு விட்டான். ஆன பொழுதும் பரம்பரைப் பழக்கத்தால் இந்தப் பொருளற்ற நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கற்றோரும் கல்லாதோரும் ஒரு சேரத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வினின் (Charles Darwin – 1809-1882) படிமலர்ச்சிக் கருதுகோள் (Theory of Evolution) நீர்வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப்படவில்லை என்பதை நிறுவியது. குரங்கில் இருந்து மனிதன் மேலும் நாம் காணும் உயிரினங்களின் உருவம் தொடக்க காலத்தில் இருந்தே வரவில்லை. அவை ஒரு கல (single cell) உயிரியிற் தொடங்கி இடையறாத மாற்றம், படிமுறை வளர்ச்சி, மலர்ச்சி, இனப் பெருக்கம், இடப் பெருக்கம், இயற்கைத் தேர்வு (Natural Selection) நிலத்தின் தன்மை, சூழல் முதலியவற்றுக்கு ஏற்ப வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்தல் காரணமாக உருமாற்றம் அடைந்து வந்துள்ளன.

இன்று நாம் காணும், மரம், செடி, கொடிகள் கடலில் இருந்து கரையில் விழுந்த சிறு சாதாளையின் படிமலர்ச்சி ஆகும்.
மனிதனை எடுத்துக் கொண்டால் அவன் “முழுசாகக் கடவுளால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமையால் ஒன்று கூடி உண்டான உயிரணுக்களின் படிமலர்ச்சியே (பரிமாண வளர்ச்சியே) மனிதன். அதாவது பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாய் மனிதன் தோன்றினான்” என டார்வின் படிமலர்ச்சிக் கோட்பாடுமூலம்நிறுவினார்.

மனிதன் ஊர்வன நிலையைக் கடந்து நாலு காலால் நடக்கும் குரங்கு நிலை எய்திப் பின்னர் வளைந்த முதுகை நேர் நிமிர்த்தி நாலு கால்களில் இரண்டைக் கைகளாகப் பயன்படுத்தி மீதி இரண்டு காலால் நடக்கக் கற்றுக் கொண்டு மரக் கொப்புகளுக்குப் பதில் குடிசை கட்டி சிற்சில கருவிகளைச் செய்து வாழப் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்தது என டார்வின் விளக்கினார்.

உலகத்தையும் அதிலுள்ள உயிர்களையும் கடவுள் படைத்தார், அரைகுறையாக அல்ல ஒவ்வொன்றையும் முழுதாகவே படைத்தார், அதே போல் ஆறறிவு படைத்த ஆணையும் பெண்ணையும் கடவுளே படைத்தார் என்றும் மதங்களும் மதவாதிகளும் சொல்லி வந்த படைப்புக் கோட்பாட்டை டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு தகர்த்து எறிந்தது.

டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு உயிரினங்கள் தம் நிலை பேற்றுக்காகப் போராடுகின்றன, இறுதியில் தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப்பிழைக்கின்றன (The Struggle for Existence of the Fittest)  எனக்கூறியது.

டார்வின் பல ஆண்டுகள் நாடுநாடாகச் சென்று ஆய்வு செய்து எழுதிய உயிரினங்களின் மூலம் (The Origin of Species) என்ற நூல் 1859 இல் வெளிவந்தபோது, மனித வரலாற்றில் அதுவரை காலமும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டன. உயிரினங்களின் மூலம் முதல் பதிப்பு முழுதும் (1,250 படிகள்) ஒரே நாளில் விற்று முடிந்தன. .உலகம் கண்டிராத ஒரு சிந்தனைப்புரட்சியை 230 பக்கங்கள் கொண்ட அந்த நூல் ஏற்படுத்தியது. அதற்கு முன்னர் 1842 ஆம் ஆண்டு இயற்கைத் தெரிவுக் கோட்பாடு (Theory of Natural Selection) என்ற சிறு நூலை எழுதிவெளியிட்டார். டார்வின் படிமலர்ச்சி பற்றி மொத்தம் 18 நூல்கள் எழுதினார்.

டார்வின் 1874 ஆம் ஆண்டு மனிதன் குரங்கிலிருந்து படிமலர்ச்சி பெற்றவன் (Man is the Developed Monkey) எனப் பல சான்றுகள் மூலமாக எடுத்துக்காட்டினார்.

                          என்னைக் காதலிக்கிறாயா?

டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு மதவாதிகள் மத்தியில், குறிப்பாகச் செல்வாக்குப் படைத்த கிறித்தவ மதவாதிகள் மத்தியில், திகைப்பையும் வியப்பையும் அச்சத்தையும் உருவாக்கியது. பரமண்டலம் பற்றியும் சொர்க்கத்தைப்பற்றியும் நரகத்தைப்பற்றியும் பேசியும் எழுதியும் வந்த மத குருமார்க்குச் சொல்லி மாளாத சினம் ஏற்பட்டது. டார்வினும் அவர் எழுதிய நூலும் பலத்த கண்டனத்துக்கும் எதிர்புக்கும் உள்ளாகியது. மதவாதிகள் படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்தார்கள். ‘அண்டம், அதில் அடங்கிய உலகம் அனைத்தும் கடவுளால் படைப்கப்பட்டவை அதனை மறுப்பவர்கள் சாத்தானின் அவதாரங்கள்’ என ஆயர் வில்பபோர்ஸ்
(Bishop Wilburforce) கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

உயிரினங்களின் மூலம் என்ற நூல் நூல் வெளிவந்த ஆறு மாதத்துக்குள் (யூன் 30, 1860) நடந்த சொற்போரில் ஆயர் வில்பபோர்ஸ் பின்வருமாறு பேசினார்-

“மதிப்புக்குரிய மகாசனங்களே! பரம பிதாவின் பெயரால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன், சாத்தானின் அவதாரமான சார்ல்ஸ் டார்வின் நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என்று கொஞ்சமும் நாக் கூசாமால் கூறியிருக்கிறான். நீங்களே சொல்லுங்கள்? உங்களைக் கால்மேலும் தோள்மேலும் போட்டுச் சீராட்டி வளர்த்த உங்களுடைய பாட்டன்மார்களும் முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் இத்தனை இலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னும் எந்தவித படிமலர்ச்சி கொள்ளாமல் அப்படியே இருக்கின்றான்? ஏன் அவனுக்கு இன்னும் ஒரு கொம்போ, ஒரு இறக்கையோ, ஒரு வாலோ அல்லது வேறு எதுவுமே உண்டாகவில்லை? குரங்கின் படிமலர்ச்சி மனிதன் என்றால் மனிதனின் படிமலர்ச்சி என்ன? இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நம்மைப் படைத்த ஆண்டவனை ஏளனம் செய்வது எத்தனை பெரிய பாவம் என்பதை நீங்கள் உணரவில்லையா?”

இவ்வாறு சொல்லாடல் செய்கின்ற மதவாதிகள் ஒன்றை மறந்து விடுகின்றார்கள். உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் கடவுளைப் படைத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது. அவர் யாராலும் படைக்கப்படவில்லை என்றால் இயற்கையின் செயல்களில் காரணம் (ஏது) இன்றி விளைவு (காரியம்) இல்லை என்பதால் கடவுளும் படைக்கப்பட்டவரே என ஒப்புக் கொள்ள வேண்டி நேரிடும்.

இந்துகளைப் பொறுத்தளவில் டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு ஒன்றும் புதியதல்ல, அதனை மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார் என்றார்கள். மாணிக்கவாசகர் அப்படி என்னதான் சொன்னார்?

புல் ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரம் ஆகிப்
பல் மிருகம் ஆகிப் பறவையாய் பாம்பு ஆகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
………(சிவபுராணம்)

என மாணிக்கவாசகர் பாடிய சிவபுராணத்தை மேற்கோள் காட்டுகின்றார்கள். ஆனால் இந்தப் பாடலில் படிமலர்ச்சி சொல்லப்படவில்லை. ஏற்கனவே படைக்கப்பட்ட உயிரினங்கள் மாறி மாறிப் பல பிறப்புப் பிறந்து இளைத்ததையே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.

விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் முதல் அய்ந்து அவதாரங்களான மீன் (மச்சம்), ஆமை (கூர்மம்), பன்றி (வராகம்), வாமனம் (குள்ளன்), பாதி மனிதன் பாதி மிருகம் (நரசிங்கம்) படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் காட்டுகிறது என்பது திரிபுவாதம் ஆகும்.

எது எப்படி இருப்பினும் இன்று படிமலர்ச்சிக் கோட்பாடு நிறுவியது போல் குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக அண்டம்பற்றி அரிஸ்தோட்டல் (Aristotle), பிளாட்டோ (Plato), தொலமி (Ptolemy) முதலியோர் எழுதி வைத்த கோட்பாடுகளை கோபெர்னிக்கஸ், கெப்லர், கலிலியோ கலிலி, அய்சக் நியூட்டன் போன்ற வானியலாளர்கள் தலைகீழாக மாற்றி அமைத்தார்கள்! குறிப்பாக கோபெர்னிக்கஸ் அண்டத்தின் மையத்தில் இருந்த புவியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஞாயிறை வைத்தபோது கிறித்துவ மதத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டது. கிறித்தவ மதகுருமார்கள் பதைத்துப் போனார்கள்! ஓடி ஒளிய இடமின்றித் தவித்துப் போனார்கள்!

இயற்பியலாளர் அல்பேட் அயின்ஸ்தீனின் (Albert Einstein) பொது சார்புக் கோட்பாடு (General Theory of Relativity) இயற்பியலில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. அண்டத்தில் ஆகக்கூடிய வேகம் ஒளியின் வேகத்தை விஞ்ச முடியாது, பருப்பொருளும் ஆற்றலும் மதிப்பில் ஒப்பானவை, ஒன்று மற்றொன்றாக மாறக் கூடியவை என்ற அவரது கண்டுபிடிப்புக்கள் இயற்பியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி இயற்கையின் முடிச்சுக்களை அவிழ்க்க உதவியது.

அறிவியல் கண்டு பிடித்த நீராவி, மின்னாற்றல், அணுசக்தி தொழில்த்துறையில் தலை கீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அச்சுயந்திரத்தின் கண்டு பிடிப்பு (கிபி 1450) கல்வி ஒளி பரந்துபட்ட அடித்தட்டுப் பொது மக்களையும் சென்றடைய வழி வகுத்தது.

மிதிவண்டிகள், ஊர்திகள், தொடர்வண்டிகள், கப்பல்கள், ஆகாய விமானங்கள் போக்குவரத்தை துரிதப்படுத்தியுள்ளது. தீராத நோய்கள் எனக் கருதப்பட்ட நீரிழிவு, எலும்புருக்கி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்த மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை நோய் (plague) அம்மை, இளம்பிள்ளை வாதம், குக்கல், தொண்டை அழற்சி (Diphtheria) போன்ற நோய்களுக்குத் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு அவை முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன.

புதியவகை நெல், கோதுமை உணவு உற்பத்தியை அதிகரித்துள்ளது. இவற்றால் மனிதனது பொதுமேனி அகவை உயர்ந்துள்ளது. பொதுமேனி வருவாய் அதிகரித்துள்ளது.

வானொலி, திரைப்படம், தொலைபேசி, தொலைநகல், தொலைக்காட்சி, கணினி, விண்கலங்கள் தகவல் புரட்சியைத் தோற்றுவித்துள்ளன.

அறிவியல் கண்டு பிடித்த ஏவுகணைகள், விண் ஒடங்கள், இராட்சத தொலைநோக்கிகள் இயலுலகின் (அண்டத்தின்) புதிர்களை அவிழ்க்கவும் மனிதனை நிலாவில் இறக்கவும் வழி வகுத்துள்ளன.

எவ்வளவுதான் ‘அந்தக்காலம்’ பற்றி வாய் சப்பிக் கொண்டாலும் மனித வரலாற்றின் பொற்காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மையாகும்.

ஆனால் தமிழர்கள் ஒருபுறம் அறிவியல் கண்டு பிடித்தவற்றை அனுபவத்திக் கொண்டு மறுபுறம் சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போய்க் கிடக்கின்றார்கள். பல கோடி கற்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களைப் பார்த்து நடுங்குகின்றார்கள். அவற்றால் தோசம் ஏற்படுகிறது என்று பயந்து தோசம் நீங்கச் சாந்தி செய்கின்றார்கள்.

தமிழர்கள் நாள் கோள், நட்சத்திரம் பார்க்காமல் எந்த நல்ல நிகழ்வையும் தொடங்குவதில்லை. பிறந்த பிள்ளைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்றாலும் பஞ்சாங்கத்தைப் பாராமல், எண்சாத்திரம் பார்க்காமல் செய்வதில்லை. அறிவியல் கண்டு பிடித்த மகிழுந்துவை வாங்கினால் முதல் வேலையாக கோயிலுக்குச் சென்று அருச்சனை செய்து அதற்குத் தேங்காய் உடைத்துத் திருட்டி கழிக்கின்றார்கள். அதைக் கண்டு பிடித்த அறிவியலாளர்களையோ, அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களையோ ஒரு கணமாவது நன்றியோடு அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். படிப்பறிவில்லாத சோதிடரிடம் ஆண் - பெண் இருவரது சாதகங்களைக் காட்டிப் பொருத்தம் பார்க்காமல் தமிழர்கள் வீட்டில் திருமணம் நடை பெறுவதில்லை. பல்கலைக் கழகத்தில் படித்த அறிவியல் பட்டதாரிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பொருத்தம் பார்த்துச் செய்த திருமணங்கள் தோல்வியில் முடிந்ததைக் கண்டும் கேட்டும் படிப்பினை படிக்காது செக்குமாட்டைப் போல் உரலைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்.

“தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே உட்காருகின்றார்கள், ஈரத்திலேயே நடக்கின்றார்கள், ஈரத்திலேயே படுக்கின்றார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்” என மகாகவி பாரதியார் மனம் நொந்து கூறிய வார்த்தைகள் நூறு ஆண்டுகள் கழித்தும் சரியாகவே இருக்கின்றன!

தமிழ் மக்களுடைய மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமையையும் சோதிடம் போன்ற மூடநம்பிக்கையையும் களைந்து, பகுத்தறிவு ஒளியை ஏற்றி, மரத்தின் கோணலைச் செப்பம் செய்யும் எற்று நூல் போல மனத்தின் கோணலைச் செம்மைப்படுத்துவதே இந்த நூலின் குறிக்கோளாகும்.

எல்லாவற்றுக்கும் மனிதனது மனமே காரணியாகும். மனமது செம்மையானல் மந்திரம் தேவையில்லை.

உள்ளத்தில் உண்மயொளி உண்டாயின்
வாக்கினில் ஒளி உண்டாகும்

என்பது மகாகவி பாரதியாரின் பொய்யா மொழி.

சோதிடம் போன்ற மூடநம்பிக்கையின் ஊற்றாக இந்திய துணைக் கண்டமே விளங்குகிறது. மேற்குலக நாடுகள் போல் அல்லாது அங்கு மத நம்பிக்கையும் சோதிட நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

இந்தியாவில் நடந்த (2002) முத்தரப்புக் கிரிக்கெட் போட்டியின் போது சோதிட சாத்திரிகள் கடைவிரித்தார்கள்.

உலகக் கிண்ணத்துக்கான துடுப்பாட்டப் (Cricket) போட்டியில் இந்த முறை இந்தியாதான் வெற்றிவாகை சூடும் என எதிர்வுகூறல் (ஆரூடம்) சொன்ன அத்தனை பிரபல சோதிடர்களும் மண்ணைக் கவ்வினார்கள். செய்தியாளர்கள் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல சோதிடர் நொஸ்ரடாமைக் (ழேளவசயனயஅரள) கூட விட்டு வைக்கவில்லை. அவர் சூசகமாக உலகக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றும் எனக் கணித்துள்ளார் என்று 'கரடி" விட்டார்கள். அந்தச் செய்திக்குக் கொடுத்த தலைப்பு 'கோப்பை இந்திய அணிக்கு, நொஸ்ரடாம் கணிப்பு' என்பதாகும்.

'ஒரு இளவரசர் (கொல்கத்தா இளவரசர் கங்குலி) ஆபிரிக்காவில் நடக்கும் ஒரு போரில் (உலகக் கிண்ணப் போட்டி) ஓர் இளையவரோடு (சச்சின் அல்லது சேவக்) இணைந்து அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைவார்.'

யார் இந்த நொஸ்ரடாம்? நியூட்டனை, மார்க்கோனியை, எடிசனை, அயின்ஸ்தீனைத் தெரியாதோர் கூட இந்த நொஸ்ரடாமை அறிந்து வைத்திருக்கின்றனர்.

நொஸ்ரடாம் (1503-1566) யூத இனத்தவர். தென் பிரான்ஸ் நாட்டின் Saint Remi  என்ற மாகாணத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் Michel de Nostredame  என்பதாகும். அதனை இலத்தீன் மொழியில் Nostradamus என மாற்றி வைத்துக் கொண்டார்.


 

சோதிடப் புரட்டு

(2)
மண்ணைக் கவ்விய சோதிடர்கள்

Inquisition என்ற சமய தண்டனைக்குப் பயந்து கத்தோலிக்க மதத்துக்கு நொஸ்ரடாமின் குடும்பம் மாறியது. சிறு பிராயத்திலேயே தனது பாட்டனாரிடம் இருந்து கணக்கியல், வானியல், சோதிடம் ஆகிய பாடங்களைக் கேட்டறிந்து கொண்டார். பின்னர் மருத்துவராகப் படித்துப் பட்டம் பெற்று 1525 இல் தொழில் செய்யத் தொடங்கினார். அப்போது தென் பிரான்சில் இடம் பெற்ற கொள்ளை நோய்க்கு (plague) ஆளான பிணியாளிகளுக்கு மருத்துவம் செய்தார். புதுமையான முறையில் மருத்துவம் செய்து பலரைக் குணப்படுத்தியதால் அவர் ஒரு கைதேர்ந்த மருத்துவர் எனப் போற்றப்பட்டார். இதன் விளைவாக அவரது பெயர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனது.

நொஸ்ரடாம் தனது எதிர்வுகூறலை நான்கு வரிகள் கொண்ட கவிதை வடிவில் (Quatrains) எதுகை மோனையோடு எழுதினார். அப்படிப் பத்து நூறு கவிதைகளை எழுதினார். அதற்கு அவர் வைத்த பெயர் Centuries. இந்தச் சொல்லுக்குப் பொருள் நூற்றாண்டு அல்ல. வெறுமனே நூறு கவிதைகள் என்பது பொருள் ஆகும்.

அவர் கையாண்ட நடை பூடகமாக (மறைபொருளாக) இருந்தது. வேண்டும் என்றே இலத்தீன், கிரேக்க, இத்தாலி மொழிச் சொற்களைப் புகுத்தி எழுதினார். படிப்பவர்களை மயங்க வைக்குமாறு சொற்களையும் சொற்களின் எழுத்துக்களையும் மாற்றியும் எழுதினார். தன்னை ஒரு சூனியக்காரன் அல்லது மந்திரவாதி என்று மற்றவர்கள் கணிக்கக் கூடாதென்பதற்காகவே அப்படிச் செய்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த நூலில் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகம் முடியும் வரை நடைபெறப் போகிற நிகழ்ச்சிகளை எதிர்வுகூறல் கூறினார். உலகம் கிபி 3797 ஆம் ஆண்டு முடிவடைந்து விடும் என்பது அவரது எதிர்வுகூறல் ஆகும்!

எல்லாவற்றையும் பூடகமாக எழுதி வைத்ததால் அவருக்குப் பின் வந்தவர்கள் அவற்றைத் தங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப திரித்தும் வளைத்தும் பொருள் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக  Hisler  என்ற சொல்லைப் பின்வந்தவர்கள் Hitler எனப் பொருள் கொண்டார்கள். டீடயஉம என்ற சொல் முசோலினியைக் குறிப்பதாகப் பொருள் கொண்டார்கள். இப்படி நொஸ்ரடாம் எழுதியவற்றைத் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கசக்கி, திரித்து, வளைத்துப் பொருள் கொண்டார்கள்.

செப்தெம்பர் 11 (2001) ஆம் நாள் நியூயோர்க் நகரில் உள்ள வணிகக் கோபுரங்கள் தாக்கி அழிக்கப்பட்டதல்லவா? அதுபற்றி நொஸ்ரடாம் ஆரூடம் கூறியிருக்கிறாரா? என்பதை அறிய எல்லோரும் அவர் எழுதிய Centuries  நூலைப் புரட்டினார்கள். என்ன வியப்பு? அதில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது,

Century 6, Quatrain 97

Two steel birds will fall from the sky on the Metropolis
The sky will burn at forty-five degrees latitude
Fire approaches the great new city
Immediately a huge, scattered flame leaps up
Within months, rivers will flow with blood
The undead will roam earth for little time. 
                   1654

இரண்டு எஃகுப் பறவைகள் வானத்தில் இருந்து தலைநகர் மீது விழும்
வானம் நாற்பத்தைந்து பாகை குறுக்குக் கோட்டில் எரியும்
தீ அந்தப் பெருநகரத்தை அண்மிக்கும்
உடனே சிதறுண்ட பெரிய தீச் சுவாலை மேலே பாய்ந்தெழும்
சில மாதங்களுக்குள் ஆறுகளில் குருதி ஓடும்
மடியாத மாந்தர் சொற்ப காலம் உலகில் அலைந்து திரிவார்கள்.

மூக்கில் விரலை வைக்கிறீர்களா? நொஸ்ரடாம் எவ்வளவு பெரிய சோதிட சிகாமணி, சோதிட ஞானி, சோதிட விற்பன்னர் என மலைக்கிறீர்களா? செப்தெம்பர் 11யை எவ்வளவு துல்லியமாக எதிர்வுகூறல் சொல்லியிருக்கின்றார் என்று திகைக்கிறீர்களா?
கொஞ்சம் பொறுங்கள், இது ஓர் இடைச் செருக்கல். யாரோ ஒரு குறும்புக்காரன் தொடர் வலையத்தில் இதனை எழுதி வைத்து விட்டான். நொஸ்ரடாம் எழுதிய எதிர்வுகூறல்களில் காணப்பட்ட வரிகளைத் திருடி இந்தப் பாடலைப் புனைந்துவிட்டான். நொஸ்ரடாம் இரண்டு எஃகுப் பறவைகளைப்பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. அது முற்று முழுதான கற்பனையோடு கூடிய இடைச் செருக்கல் ஆகும்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நொஸ்ரடாமின் எதிர்வுகூறல்கள் நான்கு வரிகொண்ட கவிதை. இதில் ஆறு வரிகள் காணப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் இது எழுதப்பட்டது 1654 ஆம் ஆண்டு என்ற குறிப்பு வேறு போடப்பட்டுள்ளது. ஆனால் நொஸ்ரடாம் 1566 இல் இறந்து போனார்!

இன்றும் இந்த ஆசாமியின் பெயரை வைத்துப் பலர் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவரைப்பற்றி எழுதுகிற நூல்கள் உலகம் முழுதும் இலட்சக்கணக்கில் விற்பனையாகின்றன.

உலகக் கிண்ணப் போட்டி பற்றி பிரபல உள்ளுர் சோதிடர் ஒருவர் முந்திரிக் கொட்டைபோல எல்லோரையும் முந்திக் கொண்டு ஒரு வேறுபட்ட முடிவைச் சொன்னார்.

இறுதி ஆட்டத்தில் ஸ்ரீலங்காவும் கென்யாவும் மோதிக் கொள்ளும் என்றும் அதில் கென்யா அணி வெற்றி பெறும் என்றும் கிரகங்களது நிலையைத் துல்லியமாகக் கணித்து எதிர்வுகூறல் சொல்லியிருந்தார்.

இந்தச் செய்தியை வேலை மெனக்கிட்டு இங்குள்ள தமிழ்த் தொலைக்காட்சியில் உலகக் கிண்ணப் போட்டிகள் பற்றி ஆய்வு செய்த ஓர் ஆய்வாளர் குறிப்பிட்டார். நகைச் சுவைக்காகச் சொன்னாரோ தெரியவில்லை ஆனால் யார் அந்தப் பிரபல சோதிடர் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை.

இந்திய அணி இந்தமுறை உலகக் கோப்பைக்குப் புறப்படும் முன்னரே முழு நாடும் யாகம், பூசை, கோமம், சாந்தி, அருச்சனை, சிறப்பு அபிசேகங்கள் என்று அமளிப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்காகச் சிற்றூர் முதல் பேரூர் வரை வேற்றுமையின்றி கோயில்களில் சிறப்புப் பூசைகள் இடம்பெற்றன. நூற்றியெட்டுக் குடங்களில் பாலாபிசேகம் எல்லாம் வல்ல பிள்ளையாருக்குச் செய்யப்பட்டது. சிலர் திருப்பதியில் மொட்டை போடுவதாக நேர்த்தி வைத்தார்கள். இவற்றால் கோயில்களுக்கு நல்ல வருமானம். அருச்சகர்கள் காட்டிலும் நல்ல மழை!

'இன்னின்ன காரணங்களால் இந்தியாவுக்குத்தான் வெற்றி' என்று எல்லாச் சோதிடர்களும் கணிப்புச் சொல்லிக் கொண்டிருந்தனர். 'சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியில் சனி ஓரை நடக்கிறது.... எனவே முதலில் துடுப்பெடுத்து ஆடும் அணி வெற்றி பெறும்......' இப்படியும் ஓர் எதிர்வுகூறல் சொல்லப்பட்டது.

ஒரு சோதிடர் துடுப்பாட்டம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு நேர் எதிரில் குரு பகவான் (வியாழன்) படத்தை வைத்துப் பூசை செய்து கொண்டிருந்தார். இந்திய அணிக்குக் குருபகவான் அருளாசி வழங்குவார் என்று அவர் நம்பியதே அதற்குக் காரணம் ஆகும். போட்டி முடியும்வரை குரு பகவான் படத்துக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இடையில் யாரையும் குறுக்கே நடக்கக்கூட அவர் அனுமதிக்கவில்லை. காரணம் குருபகவானது சக்தி தடைபட்டுப் போமாம்!

ஆனால் இந்தியா-அவுஸ்திரேலியா இரண்டுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று சோதிடர்கள் கிரக நிலைகளை வைத்துத் துல்லியமாகக் கண்pத்துச் சொன்ன எதிர்வுகூறல் பிழைத்து விட்டது! யாகங்கள், பூசைகள், அருச்சனைகள், அபிசேகங்கள் ஆகியவற்றால் கிரகங்களையோ கடவுளரையோ விலைக்கு வாங்கச் சோதிடர்களாலும் பக்தர்களாலும் முடியவில்லை!

துடுப்பாட்டம் போன்ற விளையாட்டில் திறமையான அணி வெற்றிபெறும் என்பது பொது விதி ஆகும். பத்தில் ஒன்பது முறை திறமையான அணியே வெல்லும் வாய்ப்பு உண்டு. பத்தில் ஒருமுறை புறநடையாகத் திறமையான அணி தோற்கக் கூடும்.

இந்திய - அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கே வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஏனெனில் அது ஆடிய முன்னைய ஆட்டங்கள் அத்தனையிலும் வெற்றி பெற்றிருந்தது. அதாவது தொடர்ந்து 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. இறுதி ஆட்டத்தில் அது தோற்றிருந்தால் அது புறநடையாக இருந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக நமீபா இந்த முறைதான் முதன் முதலில் உலகக் கிண்ணத்துக்கான போட்டியில் கலந்து கொண்டது. அது ஆடிய எல்லா ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியது. அதற்கு முக்கிய ஏது திறமை மற்றும் பட்டறிவு இன்மை ஆகும். அதன் தோல்வியை எந்தக் குருபகவானாலும் மாற்றிவிட முடியாது.

இன்னொரு சோதிடர் அமெரிக்க - இராக் சண்டை தொடங்கி இரண்டாம் நாள் சண்டை நின்றுவிடும் என்று கணித்துச் சொன்னார். வழக்கம்போல் அதுவும் பிழைத்து விட்டது. இதை எழுதும்போது (மார்ச்சு 2003) 15 நாள்களாகப் போர் தொடர்கிறது.

சென்னையில் வசிக்கும் ஆர்.கே. பகவதிராஜ் என்ற வாஸ்து நிபுணர் ‘தெலிப்பதி’ அதிர்வுகளைக் கொண்டு துடுப்பாட்டம் உட்பட யாருடைய வெற்றி தோல்வியையும் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று ஒரு புதுக் கரடியை அவிட்டு விட்டிருக்கின்றார்.



சோதிடப் புரட்டு

(3)

சோதிடம் போலி அறிவியல்

சோதிடர், ஒருவன் பிறந்த நேரத்தில் இப் புவியைச் சுற்றிக் கிழக்கும் மேற்குமாக மேலும் கீழுமாக வான வீதியில் படர்ந்துள்ள 12 விண்மீன் (இராசி) மண்டலங்கள், 12 இராசி வீடுகள் மற்றும் வான வீதியில் வலம் வரும் 9 கோள்கள் (கிரகங்கள்) 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பலன் சொல்கின்றார்.

ஆனால் வாஸ்து நிபுணர் ஒரு மனிதனின் நன்மை தின்மை, நலம் நலமின்மை, உயர்வு தாழ்வு, செல்வம் வறுமை எல்லாவற்றையும் அவன் குடியிருக்கும் வீட்டின் அமைப்பு, வாசல், திசை முடிவு கட்டுகிறது என்கின்றார்.

'ஒரு மனிதனின் நன்மை தீமையை அவர் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து அமைப்பு நிர்ணயிக்கிறது என்பது விஞ்ஞான ப+ர்வ உண்மையாகும். குழந்தைச் செல்வம் இல்லாமல் போவது, மனநிலை பாதித்த ஆணோ, பெண்ணோ இருப்பது, தீராத நோய் பீடித்திருப்பது, திருமணத் தடைகள் உருவாகுவது, படிப்பு மந்தநிலை என்று இன்னும் பல்வேறு தீமைகள் வாஸ்து குறை பாடுள்ள வீட்டினால் ஏற்படும். அதற்கு அந்த வீட்டின் குறைகளைச் சரி செய்வது மிக முக்கியம்.

அதேபோல் ஆண்டவன் உறையும் கோயில்களுக்கும் வாஸ்து குறைகள் இருந்தால் அந்தக் கோயில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சிறப்புப் பெறாத நிலையில்தான் இருக்கும்.

வாஸ்து குறையுள்ள இடங்களில் அமர்ந்து செய்யும் தொழில்களும் நட்டத்தில் தான் முடியும். சினிமாப் பட அலுவலகத்திற்கும் இது பொருந்தும். தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி), ஸ்டண்ட் ய+னியன், அபராஜித் பட நிறுவனம், நடன இயக்குனர் லலிதாமணி, டைரக்டர் டி.பி. கஜேந்திரன் போன்ற பல்வேறு பிரபல திரையுலகினரின் வீடு, அலுவலகம் சரியான வாஸ்து முறையில் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். பட அதிபர்கள் பி.எல். தேனப்பன், டைரக்டர் டி. ராஜேந்தர் போன்றவர்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறேன்.

இது தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாட்டில் உள்ளவர்களும் ஆலோசனை பெற்றுள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற மாநிலங்களுக்கும் நேரில் சென்று வாஸ்து கணித்துத் தந்திருக்கிறேன்.

இதுவரை வாஸ்து பற்றி 3 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். இந்தப் புத்தகங்களை அண்ணா பல்கலைக் கழகத்தில் கட்டடக் கலைப் பாட நூல் திட்டத்தில் சேர்ப்பதற்கான ஆராய்ச்சியில் உள்ளது. விரைவில் ஆங்கிலத்திலும் வாஸ்து புத்தகம் வெளிவர இருக்கிறது.

இது தவிர தெலிபதி (Telepathy) முறையில் அதிர்வுகளைக் கொண்டு வெற்றி, தோல்வியைக் கணிக்கும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறேன். அவுஸ்திரேலியா, இந்தியா மோதிய கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா ஜெயிக்கும் என்று முதல் நாளே கணக்கிட்டுப் பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் கூறினேன். அதன்படியே அமைந்த போது அந்தப் பத்திரிகை ஆசிரியர் என்னை அழைத்துப் பாராட்டினார்."

'ஆண்டவன் உறையும் கோயில்களுக்கும் வாஸ்து குறைகள் இருந்தால் அந்தக் கோயில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சிறப்புப் பெறாத நிலையில்தான் இருக்கும்' என்று இந்த வாஸ்து சோதிடர் சொல்வது உண்மையானால் எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த ஆண்டவன் எழுந்தருளி இருக்கும் கோயிலின் வாஸ்து சரியில்லை என்றால் அந்தக் ஆண்டவனுக்கே "சக்தி" (power) இருக்காது!

நாத்திகர்கள் யாரென்று கேட்டால் இப்படிக் கடவுளரைச் சுத்தமாக மட்டம் தட்டுவோரையே நான் நாத்திகர்கள் என்று சொல்வேன்!

வாஸ்து தோதிடரின் கூற்றுப்படி கனடாவில் கோயிலாக மாறிய பண்டகசாலைகளிலும், பழைய சாராயக் குதங்களிலும் எழுந்தருளி இருக்கும் கடவுளருக்கு எந்த ஆற்றலும் இருக்க வாய்ப்பே இல்லை!

இது தெரியாமல் வீணாக அடியார்கள் இந்தக் கோவில்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கடவுளர்க்கு ஆற்றல் இருக்கிறதென நம்பி அருச்சனை, ஆராதனை, அபிசேகம், தேர், திருவிழா செய்து தங்கள் பணத்தையும் நேரத்தையும் பாழ் செய்கின்றார்கள்!

மேலும் 'ஒரு மனிதனது நன்மை தீமையை அவன் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து அமைப்பு நிர்ணயிக்கிறது என்பது விஞ்ஞான பூர்வ உண்மை யாகும்" என்று கூறுவதன் நோக்கம் தனது வாஸ்து சோதிடத்தை மக்கள் மத்தியில் சந்தைப் படுத்தவே ஆகும். இப்போதெல்லாம் வேதம், உபநிடதம், பகவத் கீதை போன்றவற்றில் இன்றைய அறிவியல் உண்மைகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன என்று பேசுவதும் எழுதுவதும் ஒரு வழக்காக (fashion) மாறிவிட்டது. அறிவியல் சோதிடம் (Scientific Astrology) என்ற சொற்றொடர் சர்வ சாதாரணமாகச் சோதிடர்களால் பயன்படுத்தப் படுகிறது!

'அயோக்கியர்களுக்கு நாட்டுப்பற்றுத்தான் கடைசிப் புகலிடம்' ("Patriotism is the last refuge of a scoundrel") என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது போலச் சோதிடப் புரட்டர்களுக்கும் அறிவியல்தான் கடைசிப் புகலிடமாக இருக்கிறது!

பாவம் சோதிடர், அவருக்கு 'விஞ்ஞான பூர்வ உண்மை' என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்கிறது. அறிவியலை இரண்டாகப் பிரிக்கலாம்.

வேதியியல், இயற்பியல், உயிரியல், மூலக்கூறு உயிரியல் (Molecular biology) கணிதம் போன்ற துறைகளை ஆராயும் இயற்கை அறிவியல் ஒன்று. இது வல்லின அறிவியல் (Hard Scciences) என அழைக்கப்படும். இது கடந்த 200 ஆண்டுகளுக்குள் செம்மைப்படுத்தப் பட்டதாகும்.

மற்றது மானுடவியல், படிமலர்ச்சி உயிரியல் (evolutionary biology) சமூகவியல், தொல்பொருளியல், மெய்யியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற மனித சமூகத் துறைகளைப் பற்றி ஆராயும் சமூக அறிவியல். இது மெல்லின அறிவியல் (Soft Sciences) என்று பெயர் பெறும்.

ஆய்வுகளால் மெய்ப்பிக்கப் படக்கூடிய ஆய்வு முறையைச் சமூகவியலுக்குப் பொருத்தும் போது அது சமூக அறிவியல் (Social Sciences) என்ற தகுதியைப் பெறுகிறது.

வல்லின அறிவியல் என்பது அறிவியலாளர்கள் தனியாகவும் கூட்டாகவும் நீண்ட காலம் ஒரு பொருளையோ நிகழ்வையோ கூர்ந்து அவதானித்து முறைப்படி ஆய்வு செய்து நம்பத்தகுந்த, முரண்படாத, விதிக்கட்டுப்பாடுள்ள ஒரு கோட்பாட்டை (வாநழசல) அல்லது விதியைப் பெரும்பாலும் கணித அடிப்படையில் உருவாக்குவதாகும். கூர்ந்து அவதானித்தல் என்பது ஒரு பொருளையோ அல்லது நிகழ்ச்சியையோ விருப்பு வெறுப்பின்றித் திறந்த மனத்தோடு ஆழ்ந்து பார்த்து ஏதுக்களின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுப்பதாகும். அப்படியான அறிவியல் முறைமை அய்ந்து படிகளைக் கொண்டதாகும்.

1) ஒரு நிகழ்வை அல்லது நிகழ்வுகளை கூர்ந்து அவதானித்துப் பெறப்படும் தரவுகளைத் திருத்தத்தோடும் (accuracy) மெய்மையோடும் (objectivity)  ஏரண அடிப்படையோடும் (logical) வரைப்படுத்தல்.

2) ஒரு நிகழ்வை விளக்குவதற்கு ஒரு புனைகோளை (hypothesis) உருவாக்குதல்.

3) இயற்பியலில் புனைகோள் கணித அடிப்படையில் அமைக்கப்படும்.

4) எடுகோளைப் பயன்படுத்தி நிகழ்வை எதிர்வுகூறல் செய்தல்.

5) எதிர்வுகூறலைச் சுதந்திரமான தனித்தனி சோதனை மூலம் சரிபிழை பார்த்தல்.

மெல்லின அறிவியல் அவ்வாறு இல்லை. நூற்றுக்கு நூறு விழுக்காடு சரியாக இருக்காது. ஆய்வுகூடங்களில் அல்லாது பெரும்பாலும் மனிதனது பட்டறிவு, மனவுணர்ச்சி இவற்றின் அடிப்படையிலேயே மெல்லியல் அறிவியல் கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு ளுபைஅரனெ குசநரன அவர்களது உளவியல் பகுப்பாய்வுகளைக் குறிப்பிடலாம். டார்வினின் படிமலர்ச்சி கோட்பாடு கூட மெல்லின அறிவியலைச் சார்ந்ததுதான்.

சோதிடம் இந்த இரண்டு வகை அறிவியல் எதிலும் சேராது. சோதிடத்துக்கு ஆய்வு கூடம் கிடையாது. கருவிகள் கிடையாது. அது வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் விதிக்கட்டுப்பாடின்றி (Arbitrary)  அனுமானிக்கப்பட்ட முடிவுகளை அடிப்படையக் கொண்ட போலி அறிவியல் (pseudo - science) ஆகும்.

ஒரு எடை கூடிய குண்டையும் எடை குறைந்த குண்டையும் (cannon ball) ஒரு கோபுரத்தில் நின்று கொண்டு கீழே போட்டால் அவை இரண்டும் ஒரே வேகத்தில் கீழ் நோக்கி வீழ்ந்து ஒரே நேரத்தில் தரையைத் தொடும் என்பது ஒரு அறிவியல் உண்மை. இதனை முதன் முதலில் எண்பித்துக் காட்டியவர் கலிலியோ கலிலி (Galileo Gallei) என்ற வானியலாளர். இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். புகழ்பெற்ற பிசா சாய்ந்த கோபுரத்தில் (Leaning Tower  of Pisa) ஏறி நின்று இந்த ஆய்வைச் செய்தார் என்று கூறுகின்றார்கள்.

புவி ஈர்ப்பு விசை (force of gravity) பொருள்களை அவற்றின் எடை எதுவாக இருந்தாலும் ஒரே வேகத்தோடுதான் கீழ்நோக்கி இழுக்கிறது. இதற்குப் புறநடை கிடையாது. கலிலியோ செய்து காட்டிய ஆய்வை நானும் நீங்களும் செய்தாலும் அதே முடிவைப் பெறமுடியும். அதற்காகச் சாய்ந்த கோபுரத்திலோ அல்லது சிஎன் கோபுரத்திலோ (CN Tower) ஏற வேண்டியதில்லை. வீட்டில் ஒரு தோடம்பழத்தையும் ஒரு எலுமிச்சம் பழத்தையும் வைத்தே அதனை உறுதிப் படுத்தலாம்.

நீண்ட காலமாக அம்மை நோய் கடவுளின் கோபத்தால் ஏற்படுகிறது என்றுதான் மக்கள் நம்பி வந்தார்கள். அம்மை நோய் என்ற பெயர் காரணப் பெயர் ஆகும். 'அம்மாளாச்சி' யின் சினத்தால் அது ஏற்படுகிறது என்று தமிழர்கள் நம்பியதால் அந்த நோய்க்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போக்க அவர்கள் கண்டு பிடித்த மருந்து பூசாரியைக் கொண்டு வேப்பிலை அடிப்பது, அம்மன் கோயில்களில் குளிர்த்தி செய்வது, பொங்கல் பொங்கிப் படைப்பது முதலியவையாகும்.

ஆனால் எட்வேட் ஜெனர் (Edward Jenner) என்ற மருத்துவர் அந்த நோய் ‘Variolation’ என்ற ஒருவகை வைறசினால் (Virus) ஏற்படுகிறது என்பதைக் கண்டு பிடித்தார். அது மட்டுமல்ல, அதே வைறசின் வீரியத்தைக் குறைத்து அதனை ஊசி மூலம் செலுத்தினால் மனிதர்களுக்கு அந்த நோய் வராமல் தடுக்கலாம் என்ற அறிவியல் உண்மையையும் கண்டு பிடித்தார்.

சோதிடர் பகவதிராஜ் வாஸ்து சாத்திரம் 'விஞ்ஞான பூர்வ உண்மை' என்பதைக் கண்டறிய எந்த ஆய்வு கூடத்தில் எப்போது ஆய்வு நடத்தினார்? எத்தனை ஆண்டுகள் நடத்தினார்? அதன் பெறு பேறுகள் என்ன?

இந்தச் சோதிடர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, எங்கோ ஒரு குடிசையில் இருந்து கொண்டு படியாத பாமரமக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றார் என்பதில்லை. அப்படி இருந்தால் 'பாவம் மனிதர் பிழைத்துப் போகட்டும்' என்று விட்டு விடலாம்!

ஆனால் இன்று தமிழ்நாட்டில் கிரக சோதிடர்கள், வாஸ்து சோதிடர்கள் கணித்துக் கூறுவதை வைத்துத்தான் ஆட்சியே நடக்கிறது!

இராணி மேரி கல்லூரி சென்னையில் உள்ள பழம்பெரும் கல்லூரி. அன்றைய சென்னை மாகாண ஆங்கில அரசினால் பெண்களுக்கு மட்டுமே தொடக்கப்பட்ட கல்லூரி ஆகும். மொத்தம் 123 ஆண்டு பழமை வாய்ந்தது. மேட்டுக்குடி அல்லது பணம் படைத்த பெற்றோர்களது பிள்ளைகள் படிக்கும் கல்லூரி அல்ல, சாதாரண வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி.

ஆனால் அந்தப் பழம் பெரும் கல்லூரிக்கு வாஸ்து சோதிடர்களால் ஆபத்து வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டத் திட்டமிட்டுள்ளது.

தலைமைச் செயலகம் கட்ட வேறு இடம் இல்லையா? இருக்கிறது. முதலில் பழைய மாமல்லபுரத்தை அண்டிய இடத்திலேயே தலைமைச் செயலகம் கட்டுவதாக இருந்தது. பின்னர்தான் கடற்கரை அருகில் உள்ள இராணி மேரி கல்லூரி தெரிவானது.

முன்னைய முடிவில் ஏன் திடீர் மாற்றம்? நெருக்கடி நிறைந்த சென்னை நகரை விட்டு விட்டு புறநகர்ப் பகுதியில் தலைமைச் செயலகத்தைக் கட்டுவதுதானே? அதுதானே அறிவு நாணயமான செயல்? அதை விடுத்து ஏன் முதலமைச்சர் ஜெயலலிதா இராணி மேரி கல்லூரியை இடித்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கின்றார்?



சோதிடப் புரட்டு

(4)

இராகு கேது கோள்கள் அழகான கற்பனை!


முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்கு வாஸ்து சோதிடர்களின் அறிவுரையே ஏது ஆகும்.

'கோட்டை உங்களுக்கு இராசியில்லை, கோட்டைக்குப் போகிற வழியில் அண்ணா சமாதியும் எம்ஜிஆர் சமாதியும் இருக்கின்றன, அவை நல்ல சகுனங்கள் அல்ல, முழிவளத்துக்கு ஆகாதவை, இராணி மேரி கல்லூரி இருக்கும் இடத்தில் வாஸ்து சாத்திரப்படி இன்னொரு தலைமையகத்தைக் கட்டி அங்கு குடியேறுங்கள்' என்று வாஸ்து சோதிடர்கள் கூற மூடநம்பிக்கைகளில் ஊறிப்போன ஜெயலலிதா மாமல்லபுரம் பக்கமாக தலைமையகத்தைக் கட்டும் தனது முன்னைய முடிவைக் கைவிட்டு இராணி மேரி கல்லூரியை இடித்து அங்கு தலைமையகம் கட்ட முடிவு செய்தார்.

ஜெயலலிதா கோட்டைக்குப் போவதென்றாலும் இராகு காலம் யமகண்டம் பார்த்துத்தான் கிளம்புகிறார்.

இராகு காலம் யமகண்டம் இரண்டும் ஒவ்வொரு நாளும் இடம்பெறுவதால் இராகு காலம் யமகண்டம் முடிந்தபின்னர் அல்லது தொடங்கு முன்னர் முதலமைச்சர் கோட்டைக்குப் போகின்றார்!

இங்குள்ள கோயில் ஒன்று வானொலியில் கிழமை தோறும் சமய நிகழ்ச்சி நடத்துகிறது. அதில் பேசிய ஒருவர் 'இராகு காலத்தில் அம்பாளுக்கு அருச்சனை செய்தால் அதற்கு மற்றைய காலத்தைவிட அதிக பலன் உண்டு' என்று பரப்புரை செய்தார்.
உண்மை என்னவென்றால் சனி தோசம் இருக்கிறது, வியாழ தோசம் இருக்கிறது, செவ்வாய் தோசம் இருக்கிறது, நாக தோசம் இருக்கிறது அவற்றை நீக்க வேண்டுமென்றால் அருச்சனை செய்ய வேண்டும் சாந்தி செய்ய வேண்டும் என்று இந்து மதம் சொல்வது பாமர மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்கவே ஆகும்!

ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதால் அவர் நேரம் பிந்திக் கோட்டைக்குப் போகலாம். ஆனால் தமிழக அரச ஊழியர்கள் அப்படிக் காலம் தாழ்த்திப் போக முடியாது. போனால் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படலாம். அல்லது சம்பளத்தில் வெட்டு விழலாம். எனவே அப்படிப்பட்டோர் இராகு காலம் யமகண்டம் போன்ற சோதிடப் புரட்டுகளை நம்பினாலும் கடைப்பிடிக்க முடியாது!


இராகு காலம் பார்த்தால் விமானம் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் என்னாவது? நல்ல காலம் விமானம் மற்றும் போக்குவரத்துச் சேவை நடத்துபவர்களுக்கு இராகு காலத்தில் நம்பிக்கை இல்லை!

முற் காலத்தில் வானூர்தி இருக்கவில்லை. பேருந்துகள் இருக்கவில்லை. இன்று போல் நாடு விட்டு நாடோ, கண்டம் விட்டுக் கண்டமோ செலவு (பயணம்) செய்வதில்லை. ஆக மிஞ்சினால் அடுத்த ஊருக்கு மாட்டு வண்டியில் அல்லது குதிரை வண்டியில் போய் வந்தார்கள்.
அவர்களது வாழ்க்கை முறையும் வேறாக இருந்தது. குறைந்த தேவைகள். குறைந்த நேர உழைப்பு. இதனால் நேரம் மிச்சம் இருந்தது. கமக்காரர்கள் ஆண்டில் அய்ந்தோ ஆறோ மாதங்கள் உழுது, எருவிட்டு, விதைத்து, களை பிடுங்கி, அறுவடை செய்து, சூடு மிதித்து நெல்லை வீடு சேர்த்த பின்னர் அடுத்த பருவ மழைக் காலம் வரும் மட்டும் வீட்டில் ஓய்வாக இருந்தார்கள். எனவே அவர்களுக்கு இராகு காலம் யமகண்டம், அட்டமி நவமி பார்க்க நேரமிருந்தது.
அதனாலேயே 'அட்டமியில் தொட்டதெல்லாம் நாசம்' என்ற பழமொழியே பிறந்தது.

சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் நாளுக்கும் கோளுக்கும் எதிராக அவரளவில் புரட்சி செய்திருக்கின்றார்.

மதுரையை ஆண்ட பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி என்ற கூன்பாண்டியன் முன்னர் சைவ சமயத்தவனாக இருந்து பின்னர் சமண சமயத்தைத் தழுவியவன். அவன் துணைவி மங்கையற்கரசியார் சிவநெறியைப் பின்பற்றினார். பாண்டியனைச் சமண சமயத்தின் பிடியில் இருந்து விடுவிக்க எண்ணிய மங்கையற்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரது உதவியை நாடினார்கள். பாண்டிநாட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

அந்த அழைப்பை ஏற்று திருஞானசம்பந்தர் பாண்டிநாடு செல்லப் புறப்பட்டார். அப்பொழுது அவரோடு உடன் இருந்த அப்பர் 'சம்பந்தப்பிரானே! சமணர் சாமானியர்கள் அல்லர். இளமையில் நான் அவர்கள் பிடியில் சிக்கித் தவித்து மீண்டவன். அவர்கள் மந்திர தந்திரங்களை நான் அறிவேன். நீங்கள் போக வேண்டாம் நான் போகிறேன்' என்றார்.

ஆனால் சம்பந்தர் அதற்கு இணங்காமல் 'நானே பாண்டிநாடு சென்று மன்னனை மீண்டும் சைவனாக்கி மீளுவேன்' என்று உரைத்தார்.
'இன்று நாளும் கோளும் கூடச் சரி இல்லை. ஆகவே மதுரைப் பயணம் வேண்டாம்' என்று நாவுக்கரசர் மீண்டும் தடை சொன்னார்.
அதைக் கேட்ட சம்பந்தர் 'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாடியருளினார்.

'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே'

'என் சிந்தையில் சிவன் குடிகொண்டிருக்கும்பொழுது ஒன்பது கோள்களும் என்னை ஏதும் செய்ய முடியாது. கவலையில்லாமல் எனக்கு விடை தாருங்கள்' என்று கூறி விடைபெற்றுச் சம்பந்தர் பாண்டி நாட்டை நோக்கி செலவு மேற்கொண்டார்.

ஒன்பது கோள்களும் என்னை ஏதும் செய்யாது என்று சம்பந்தர் அடித்துச் சொன்னதை இன்றைய சைவசமயத்தவர் பின்பற்றுவதாக இல்லை. ஒருவேளை 'என் சிந்தையில் சிவன் குடிகொண்டிருக்கிறான்' என்று சம்பந்தர் சொன்னதுபோல் அவர்களால் துணிந்து சொல்ல முடியாது இருக்கிறது போலும்!

இரண்டு பாம்பு என்பது இராகு கேது கோள்களைப் குறிப்பன. உண்மையில் அவை வியாழன், சனி போல் கோள்கள் அல்ல. வெறுமனே சோதிடர்களின் அழகான கற்பனை. வேத கால சோதிடத்தில் இராகு கேது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பிற்காலத்தில்தான் அவை சேர்க்கப்பட்டன. இருந்தும் இந்தக் கற்பனைக் கோள்களுக்குப் படித்தவர்கள் படியாதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் பயந்து சாகின்றார்கள். இராகு கேது


ஜெயலலிதாவின் அரசவை (ஆஸ்தான) சோதிடர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது பெயர் உன்னி கிருஷ்ணன் பணிக்கர். அவரது சொந்த ஊர் தென் கேரளாவில் உள்ள மல்லபுரம். பொதுவாகக் கேரளம் ‘மலையாள’ மந்திரவாதிகளுக்குப் பெயர் போன மாநிலம். இவர் 'அஷ்டமங்களாய பிரஸ்னம்' என்ற சோதிடக் கலையில் வல்லுனராம். 'ஒரு மனிதரது பேச்சு, உடை, நடை, பாவனை' போன்றவற்றை வைத்துப் பலன் சொல்கின்றார்.

'அம்மாவுக்குப் பச்சை நிறம்தான் இராசி' (பொருத்தம்) என்று இந்தச் சோதிடர் சொன்னதால் இப் பொழுது ஜெயலலிதா எங்கே போனாலும் பச்சைச் சேலையையே உடுக்கிறார். அவர் போகிற இடமெல்லாம் பச்சை நிறத்தில் பதாதைகள். பச்சை நிறத்தில் அலங்கார வளைவுகள். பச்சை நிறத்தில் விரிப்புக்கள் என எங்கே பார்த்தாலும் ஒரே பச்சை நிறம்தான். அதிமுக இணைய தளத்திற்கும் பச்சை நிறம் தீட்டியுள்ளார்கள்.

உன்னி கிருஷ்ணன் பணிக்கர்தான் குருவாயூர் அப்பனுக்கு யானை ஒன்றைத் தானம் கொடுக்குமாறு ஜெயலலிதாவுக்கு அறிவுரை வழங்கியவர். ஜெயலலிதாவும் அப்படியே ஒரு யானைக் குட்டி ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குருவாயூர்க் கோயிலுக்குத் தனது உயிர்த் தோழி சசிகலாவோடு சென்று தானம் கொடுத்தார்.

இப்போதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிச் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் அவர் தனது தோழி சசிகலாவுடன் இன்ன கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார், இன்ன சாந்தி செய்தார், இன்ன அபிசேகம் செய்தார், இன்ன யாகம் செய்தார், இன்ன தட்சணை கொடுத்தார் என்பதாகவே இருக்கின்றன. இது பற்றிப் பின்னர் எழுதுவேன்.

சோதிடர் பகவதிராஜ்pதான் ஜெயலலிதாவின் வாஸ்து சோதிடரா என்பது தெரியவில்லை. ஆனால் அவருக்குப் பெரிய இடத்துத் தொடர்புகள் இருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அண்மையில் அவரது 52 ஆவது பிறந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளையொட்டி கே.கே. நகர் மல்டி வினாயகர் கோயிலில் சிறப்புச் பூசை செய்யப்பட்டது.

எழுத்தாளர் வலம்புரி ஜான், அவைத் தலைவர் காளிமுத்து, அவரது மனைவி மனோகரி, அவரது உறவினர்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் பகவதிராஜிக்கு நேரில் சென்று வாழ்த்துக் கூறினார்கள்.

இவர்களில் ஒருவர் மட்டும் எனக்குப் பழக்கம் ஆனவர். அவர் சொற்சித்தர் வலம்புரி ஜான் ஆவார். தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய கவிஞர் காசி ஆனந்தன் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஒரு மணி நேரம் அருமையாகப் பேசினார். கவிஞர் காசி. ஆனந்தன் பாரதி, பாரதிதாசனுக்கு ஒப்பான ஒரு கவிஞன் என்று வானளாவப் புகழ்ந்தார். அவர் பேசி முடித்ததும் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம் என்பது போல் இருந்தது. அவ்வளவு இனிமையோடும் நகைச்சுவையோடும் பேசினார்.

சொல்லாண்மை மட்டும் அல்லாது அவரிடம் எழுத்தாண்மையும் இருக்கிறது. எழுபது புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கின்றார். இவற்றில் கவிதைகள் (13) சிறுகதைகள் (7) நாவல்கள் (8) கட்டுரைகள் (44) அடங்கும். அவர் எழுதிய பிரார்த்தனைப் பூக்கள் என்ற முதல் நூல் கனடாவிலும் வெளியிடப் பட்டது.

அண்மையில் வலம்புரி ஜான் தன் கைப்பட, தனது கடிதத் தலைப்பில் ஜெயலலிதாவிற்கு ஒரு மடல் வரைந்திருந்தார். அதில் 'கோள்நிலை காரணமாகவும் சூழ்நிலை காரணமாகவும் நான் அம்மாவை விட்டுப் பிரிய நேரிட்டது. என்னை மன்னித்து மீண்டும் உங்களோடு என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது.




சோதிடப் புரட்டு

(5)

தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் சோதிடர்கள்!
 

மனிதர்களுக்கு உடல்நலக் குறைவு, தொழிலைத் தொடங்கும் போது அல்லது செய்கிற தொழிலில் பின்னடைவு ஏற்படும் போது கோள்கள், நட்சத்திரங்கள் பற்றிய நினைப்பு வருகிறது. 'கிரகம் சரியில்லை, எதற்கும் குறிப்பைச் சாத்திரியாரிடம் காட்டுவோம்' என சாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சோதிடர்களிடம் ஓடுகிறார்கள்.

திருமணத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பொருத்தம் பார்க்காமல் திருமணம் இல்லை என்ற மூட நம்பிக்கை ஒரு நோய் போல் தமிழ்ச் சமூகத்தில் ஆழப் புரையோடிப் போய்விட்டது.

மெத்தப் படித்த அதே நேரம் கிறித்தவரான வலம்புரி ஜான் 'கோள் நிலை காரணமாகவும் சூழ்நிலை காரணமாகவும் நான் அம்மாவை விட்டுப் பிரிய நேரிட்டது...' என்று எழுதும் பொழுது மற்றவர்களை நோவதில் பயனில்லை.

வலம்புரி ஜான் நமது எம்ஜிஆர் நாளேட்டின் ஆசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவர். ஒரு நாள் முதலமைச்சர் எம்ஜிஆரை சந்திக்க கோட்டைக்கு தானியங்கி வண்டியில் போனார். 'எப்படி வந்தீர்கள்?" என்று கேட்டதற்கு "தானியங்கி வண்டி" என்று பதில் வந்தது. எம்ஜிஆர் அதைக் கேட்டுவிட்டு நமது எம்ஜிஆர் பற்றி அவரோடு உரையாடினார்.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்திருந்த வலம்புரி ஜானுக்கு ஒரு 'அதிசயம்' காத்திருந்தது. அலுவலக வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி வண்டி. 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உத்தியோக நாளேட்டின் ஆசிரியர் ஓட்டோவில் பயணம் செய்வது அழகாக இருக்காது' என்று எம்ஜிஆர் நினைத்த காரணத்தால் புதிய வண்டியொன்றை வாங்கி அவருக்குக் கொடுத்தார். எம்ஜிஆர் ஒருவரே அப்படிச் செய்யக் கூடியவர். மற்றவர்களுக்கு பணம் இருந்தாலும் மனம் வராது.

கனடாவிற்கு வந்த காலத்தில் வலம்புரி ஜான் சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அதன் மூலம் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் தேமதுரத் தமிழ் ஓசையையும் தமிழ் மணத்தையும் தமிழர் இல்லங்கள் தோறும் தவழவிட்டார். ஏறத்தாழ 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடந்த அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு அறிவுப்பிழைப்பாளர் பத்தாம்பசலியான வாஸ்து சாஸ்திரி பகவதிராஜியின் பிறந்தநாள் விழாவில் ஏன் கலந்து கொண்டார் என்பது புரியவில்லை. எல்லாம் அந்கக் கோள்களின் 'கோளாறு' காரணமாக இருக்கலாம்!

சோதிடர் சாதகத்தைப் பார்த்து சாதககாரருக்குக் கிரக தோசம் இருக்கிறது என்கின்றார். வாஸ்து சாத்திரி அவனது வீட்டைப் பார்த்து அதன் அமைப்பில் தோசம் இருக்கிறது என்கின்றார்.

அப்படியென்றால் கிரகங்கள் நட்பாக இருந்து வீட்டின் அமைப்புப் பகையாக (நீசமாக) இருந்தால் அந்த மனிதனது 'தலைவிதி'யை எது தீர்மானிக்கிறது? அல்லது மறுபக்கமாகக் கிரகங்கள் கேடாக இருந்து வீட்டின் இராசி நன்மையாக இருந்தால் அந்த மனிதரது தலைவிதியை எது தீர்மானிக்கிறது? சோதிடர் நம்பும் கிரகங்களா அல்லது வாஸ்து சோதிடர் நம்பும் வாஸ்து வீடா?

அமெரிக்காவில், கனடாவில் விண்ணை முட்டும் கட்டடங்கள், தொழிற்கூடங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றைக் கட்டி வைத்திருக்கின்றார்கள். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலி எடுக்கும். இவையெல்லாம் வாஸ்து சாத்திரப்படி கட்டப் பட்டவையா?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற்றுள்ள Microsoft  நிறுவனர் Bill Gates தனது தொழிற் கூடத்தையும் வீட்டையும் வாஸ்து சாத்திரம் பார்த்தா கட்டி இருக்கிறார்? அதுதான் அவரது வெற்றியின் இரகசியமா? அவரது சொத்தின் பெறுமதி 5,300 கோடி அ. டொலர்! அவரது வீட்டைக் கட்டச் செலவான தொகை 93 மில்லியன் அ. டொலர்!

வாஸ்து சாத்திரம் பார்க்கும் இந்தியாவில் வறுமையும் நோயும் கொடி கட்டிப் பறக்கும் போது மேற்குலக நாடுகளில் செல்வமும் செழிப்பும் கொழிக்கிறதே! அது எப்படி?

ஓர் இந்தியனின் பொதுமேனி அகவை அளவு (Average life-span) 55 மட்டுந்தான். மேற்கு நாடுகளில் இது 80 ஆக இருக்கிறது.

ஓர் இந்தியனது பொதுமேனி (பொதுமேனி) ஆண்டு வருவாய் 550 அ.டொலர் மட்டுமே. மேற்கு நாட்டுக்காரனின் பொதுமேனி வருவாய் 24,000 அ.டொலர் ஆகும்!

உலகில் தொழுநோய், எலும்புருக்கி நோய்,    எயிட்ஸ் (Aids) நோய் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் தொகை இந்தியாவிலேயே மிக அதிகமாக் காணப்படுகின்றது!

                                                                                                        இராசி மண்டலங்கள் (Constellations)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அப்படியென்றால் வான மண்டலத்தில் உலா வரும் கோள்களும் விண்மீன்களும் தங்களுக்குள் பேசிப் பறைந்து தங்களைக் கும்பிடும் இந்தியருக்கு இரண்டகம் செய்கின்றனவா?

இங்குள்ள கோயில் குருக்கள் ஒருவர் வானொலி ஒலிபரப்பில் 'இப்போதெல்லாம் சோதிடம் பொய் என்று சிலர் கூறுகின்றார்கள். ஆனால் ஒருவர் பிறந்த காலத்தையும் நேரத்தையும் துல்லியமாகத் தெரிந்து கொண்டு அதன்படி சாதகத்தைக் கணித்தால் சோதிடம் நூற்றுக்கு நூறு உண்மை' என்று அடித்துச் சொன்னார்.

கோயில்களில் அருச்சகத் தொழில் பிராமணர்களது ஏகபோக உரிமையாக இருக்கிறது. இதை அவர்கள் பிறந்த நேரமும் கோள்களும் தீர்மானிக்கிறதா? அல்லது இந்து சமயத்தில் காணப்படும் வருண பேதமும் சாதியமைப்பும் தீர்மானிக்கிறதா?

பிறந்த காலத்தையும் நேரத்தையும் துல்லியமாகத் தெரிந்து கொண்டு அதன்படி சாதகத்தைக் கணித்தால் சோதிடம் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் என்று சொல்வது சரியானால், அந்தக் காலத்தையும் நேரத்தையும் துல்லியமாகக் கணிக்கச் சோதிடர்களுக்குத் தெரிந்திருந்ததா? அதற்கான கருவிகள் இருந்ததா? குருக்கள் கையில் கட்டியிருக்கிற மணிக்கூடு வெள்ளையன் கண்டு பிடித்தது, வேதகால இருடிகளும் முனிவர்களும் கண்டு பிடித்ததல்ல. வெள்ளைக்காரன் மணிக்கூட்டைக் கண்டு பிடித்த பின்பே எங்களுக்கு நேரத்தை மணி, மணித்துளி, விநாடி எனத் துல்லியமாகக் கணிக்கத் தெரிந்தது.

அதற்கு முன்னர் பகல் என்றால் அடியளந்தும், இரவென்றால் விடிவெள்ளி போன்ற வானத்து விண்மீன்களைப் பார்த்தும் அண்ணளவாக நேரத்தைக் கணித்தார்கள்.

மேலும் ஒரு குழந்தை பிறந்த சரியான நேரம் எது? அந்தக் குழந்தை கருவில் உருவான நேரமா? பிறக்கும்போது தலை அல்லது கால் புவியில் தொட்ட நேரமா? தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நேரமா? குழந்தை முதல் மூச்சுவிட்ட நேரமா? குழந்தையின் முதல் 'குவா குவா' அழுகைச் சத்தம் கேட்ட நேரமா? இதில் எந்த நேரம் சரியான நேரம்?

ஒரு மருத்துவமனையில் இரண்டு மூன்று மணித்துளி வேறுபாட்டில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் சாதக பலன் ஒன்றாக இருக்க வேண்டும். அவர்களது கல்வி, செல்வம், தொழில், உடல் நலம் போன்றவை ஒரே மாதிரி இருக்க வேண்டும். அவர்களது திருமணம், இறப்புப் போன்றவை ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும். அப்படி எங்கேயாவது நடக்கிறதா? அது சாத்தியமா?

சோதிடர்கள் சாதக ‘பலனை’ பின் வருவனவற்றை அடிப்படையாக வைத்தே கணிக்கிறார்கள்.

(அ) இராசிச் சக்கரத்தின் (Zodiac) இருபுறமும் மொத்தம் 18 பாகையில் காணப்படும் 12 இராசிகள்.
(ஆ) இராசிச் சக்கரத்தைப் பிரிப்பதால் வரும் 12 இராசி வீடுகள்.
(இ) இராசிச் சக்கரத்தை வலம் வரும் 9 கோள்கள்.
(ஈ) இராசிச் சக்கரத்தின் பின்புலத்தில் காணப்படும் 27 நட்சத்திரங்கள்.


பன்னிரண்டு இராசி மண்டலங்களும் (விண்மீன் கூட்டங்கள்) இராசிச் சக்கரத்தின் (இராசி வட்டத்தின்) இருபுறமும் (8 பாகை எல்லைக்குள்) காணப்படும் நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்று செயற்கையாக இணைத்துப் பெறப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களாகும்.

பன்னிரண்டு வீடுகளும் (Houses) 360 பாகை கொண்ட கற்பனையான இராசிச் சக்கரத்தைச் செயற்கையாக 12 ஆல் பிரிப்பதால் பெறப்படுகிறது. பன்னிரண்டு என்பது மனிதன் திங்களின் அல்லது ஞாயிறின் இயக்கத்தை வைத்துப் பெறப்பட்ட எண்ணாகும்.

இந்த இராசிகளுக்குரிய சின்னங்களுக்கும் இராசிச் சக்கரத்தில் காணப்படும் இராசி மண்டலங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இராசிச் சக்கரமும் ஞாயிறு செல்லுமாப்போல் தோன்றும் ஒரு கற்பனை வட்டமே!

ஆதி மனிதன் விண்ணில் ஞாயிறு செல்லும் பாதையை (இராசி வட்டத்தை) அண்ணாந்து பார்த்த போது சில விண்மீன் தொகுதிகள் அல்லது கூட்டங்கள் அவனது கண்களுக்கு மேடம் (ஆடு) இடபம் (எருது) மிதுனம் (ஆண் பெண் உருவம்) கடகம் (நண்டு) சிம்மம் (சிங்கம்) கன்னி (பெண்) துலாம் (தராசு) விருச்சிகம் (நட்டுவக்காலி) தனுசு (வில்) மகரம் (கடற்குதிரை) கும்பம் (குடம்) மீனம் (இரட்டைமீன்) போன்று காட்சியளித்தன. எனவே இராசி என்பது வான வீதியில் மனிதன் தன் ஊனக் கண்ணால் பார்த்த விண்மீன் தொகுதிகளுக்கு அவன் கொடுத்த கற்பனை உருவமாகும். கிரேக்கமொழியில் Zodiac என்ற சொல்லுக்கு விலங்குகள் என்பது பொருளாகும்.

இதனால்தான் இந்தியர்களது கண்ணுக்கு இடபமாகவும் விருச்சிகமாகவும் (நட்டுவக்காலி) தோன்றிய இராசிகள் சீனர்களது கண்ணுக்கு முறையே எலியாகவும் பாம்பாகவும் தோன்றியிருக்கிறது!

இராசிகள் எவ்வாறு நட்சத்திரங்களின் கூட்டமோ அவ்வாறே 27 நட்சத்திரங்களும் ஒன்று தொடக்கம் நூறு வரையிலான எண்ணிக்கை கொண்ட நட்சத்திரக் கூட்டமே.

இந்த நட்சத்திர மண்டலங்கள் சில தனி நட்சத்திரங்கன் ஆகும். எடுத்துக்காட்டாக சித்திரை, சுவாதி, ஆதிரை நட்சத்திரங்கள் தனித் தனியானவை. அவை முறையே முத்து (pearl)  நீலக்கல் (sapphire) துளசிமணி (bead) போன்ற சாயல் உடையன. பெரும்பாலான விண்மீன்கள் 3,4,5,6 எண்ணிக்கையுடைய நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்றுடன் விதிக்கட்டுப்பாடின்றி (arbitrary) தொடுப்பதன் மூலம் உருவாக்கப் பட்டவையாகும். கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் என்பதால் அது 6 விண்மீன்கள் கொண்டவை என்பது சொல்லாமலே விளங்கும். சதய நட்சத்திரம் மட்டும் 100 விண்மீன்கள் கொண்டது. இருபத்தேழு நட்சத்திர மண்டலத்திலும் மொத்தம் 192 விண்மீன்கள் மட்டுமேஇருக்கின்றன.

                                           கார்த்திகை விண்மீன்



உண்மையில் இந்த விண்மீன் தொகுதிகள் (நட்சத்திர மண்டலங்கள்) பல்லாயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கின்றன. சில விண்மீன்கள் கண்ணுக்கு அருகருகே காணப்பட்டாலும் அவற்றுக்கு இடையில் பல்லாயிரம் ஒளி ஆண்டு இடைவெளி இருக்கின்றது.

தொலைவு காரணமாக இந்த விண்மீன் கூட்டங்கள் அசையாதது போல் காணப்பட்டாலும் உண்மையில் அவை எமது ஞாயிறு விண்மீன் போல ஓடிக்கொண்டே இருக்கின்றன!

ஞாயிறு விண்மீனைச் சுற்றிவரும் கோள்கள் சில கோடி மைல்கள் தொலைவிலேயே சுற்றி வருகின்றன. அதனால் அவற்றின் அசைவு கண்ணுக்குத் தெரிகிறது.

இதன் காரணமாகவே சோதிடம் விண்மீன்கள் அசைவதில்லை என்றும் கோள்கள் அசைகின்றன என்றும் கூறுகிறது.

சோதிடம் இந்த விண்மீன் கூட்டங்களை அடையாளம் காண்பதற்கு அவற்றுக்குச் செயற்கையாக ஓர் உருவம் கற்பித்ததைப் பெரிய பிழையென்று சொல்ல முடியாவிட்டாலும் அவற்றுக்கு அந்த உருவத்தின் அடிப்படையில் குணாம்சங்களைக் கற்பித்துப் பலன் சொல்வது பெரிய பிழையாகும்.

எடுத்துக் காட்டாக சிம்ம இராசிக்காரர் சிங்கத்துக்கு உள்ள மூர்க்க குணங்களையும், விருச்சிக இராசிக்காரர் நட்டுவக்காலிக்குரிய கொட்டும் குணங்களையும் கொண்டிருப்பர் என்று சொல்வது அறிவீனமாகும்.

இராசி வட்டத்தில் (Zodiac) 27 நட்சத்திர மண்டலங்கள் மட்டுந்தான் இருக்கின்றதா? இல்லை என்கின்றார்கள் வானியலாளர்கள். அவர்கள் கணக்குப்படி நட்சத்திர மண்டலங்களின் எண்ணிக்கை 88 ஆகும். அப்படி என்றால் 27 நட்சத்திர மண்டலங்களை மட்டும் வைத்துப் பலன் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்? எப்படி அறிவு நாணயமாக இருக்கும்?

அது மட்டுமல்ல, எமக்குத் தெரிந்த அண்டத்தில் (Known Universe) ஏறத்தாழ 36,000 கோடி பால்மண்டலங்கள் (Galaxies) இருக்கின்றன எனவும் ஓவ்வொரு பால் மண்டலத்திலும் 10,000 - 20,000 கோடி விண்மீன்கள் (Stars)   காணப்படுகின்றன எனவும் வானியலாளர்கள் சொல்கின்றார்கள்! மனிதனது ஊனக் கண்களுக்கு 6,000 நட்சத்திரங்கள் மட்டுமே தெரிகின்றன!

எமது ஞாயிறு குடும்பம் இருக்கும் பால்மண்டலம் பால்வழி அல்லது பால் வீதி (Milky Way) என அழைக்கப்படுகிறது.

இந்தப் பால்மண்டலம் அதன் மையத்தை அச்சு ஆகக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது. ஞாயிறும் அதன் கோள்களும் இந்தப் பால்மண்டலத்தை ஏறத்தாழ மணிக்கு 864,000 கிமீ வேகத்தில் சுற்றிவருகிறது! இவ்வாறு ஒருமுறை சுற்றிவர 22 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

இந்த அண்டம் நீளம், அகலம், உயரம் என்னும் மூன்று அளவுகளும் காலம் எனப்படும் ஓர் அளவும் ஆக மொத்தம் நான்கு அளவீடுகள் (Four dimentional Space - Time) கொண்டதாகும்.

இவ் அண்டம் எல்லை அல்லது முடிவு அற்றது என்றே நியூட்டன் உட்படப் பெரும்பாலான அறிவியலாளர்கள் எண்ணினர். பேரறிஞர் அயின்ஸ்தீன் இவ் அண்டத்தில் நேர்க்கோடு என்பதே கிடையாது எல்லாம் வட்டங்களே என்கின்றார்.

இவ்வண்டத்துக்கு எல்லை இருக்கிறது என்று ஏன் கருத முடியாது? அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற பயங்கரக் கேள்விக்கு விடை கூற வேண்டி வந்துவிடும்!

இவ்வண்டத்தின் ஆரம் 35,000,000,000, ஒளி ஆண்டுகள் (336 கோடி கோடி கிமீ) ஆகும். ஆரத்தின் நீளத்தை வைத்துக் கொண்டு அண்டத்தின் விட்டம், சற்றளவு, புறப்பரப்பு ஆகியவற்றை நீங்களே கணக்கிடலாம்.

அண்டத்தின் வடிவம் ஒரு இட்லி வடிவத்தில் இருக்கிறதாம், அதாவது நடுவில் பருத்தும் விளிம்பில் சற்று மெலிந்தும் காணப்படுகிறது.

சோதிட சாத்திரம் ஒன்பது கோள்களில் (நவக்கிரகங்களில்) ஒன்றான ஞாயிறைக் (சூரியனை) கோள்கள் பட்டியலில் சேர்த்திருப்பது சரியல்ல. ஞாயிறு கோளல்ல - அது சுய ஒளி படைத்த ஒரு விண்மீன் ஆகும். திங்கள் (சந்திரன்) கோளல்ல - அது புவியைச் சுற்றிவரும் ஒரு துணைக் கோள் ஆகும். இல்லை அது கோள்தான் என்று வாதிட்டால் வியாழனைச் சுற்றிவரும் 45 துணைக் கோள்களையும் சனியைச் சுற்றி வரும் 31 துணைக் கோள்களையும் சோதிடக் கணிப்பில் சேர்க்க வேண்டும். அதுவே முறை, அதுவே வாய்மை ஆகும். பின் ஏன் சோதிடர்கள் அவற்றைச் சேர்க்கவில்லை?

ஒன்பது கோள்களில் இராகுவும் கேதுவும் கற்பனை அல்லது நிழல் கோள்கள் எனப் பார்த்தோம். அந்தக் கோள்கள் மற்றக் கோள்களைப் போல் ஞாயிறைச் சுற்றி வராமல் நேர் எதிர்த்திசையில் எதிர் நீச்சல் போடுவதாகச் சொல்கின்றனர். இது வெறும் கற்பனையே. இந்தக் கற்பனைக் கோள்களை வைத்துச் சாதகத்தைக் கணித்து அதன் அடிப்படையில் 'பலன்' சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை! அண்மைக் காலத்தில் வானியலாளர்கள் கண்டு பிடித்த நெப்தியூன், புளுட்டோ, யூரேனஸ் போன்ற கோள்களையும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை.

உண்மையில் மனிதனைப் பாதிக்கும் கோள் ஏதாவது உண்டென்றால் அது அவன் பிறந்த இந்தப் புவியாகத்தான் இருக்க வேண்டும்.

மனிதனது வாழ்க்கையை அவன் பிறந்த மண்ணும் அவனைச் சுற்றியுள்ள சூழலும் பாதிக்கின்றன. அவன் மூச்சுவிடும் காற்று, அவன் குடிக்கும் தண்ணீர், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் உறைவிடம், தட்ப வெட்பம் அவனை வெகுவாகப் பாதிக்கின்றன.

ஆனால் சோதிடம் இந்தப் புவியை அறவே கைவிட்டு விட்டது. என்ன காரணம்?

(அ) புவி உருண்டை வடிவமாக இருப்பது,
(ஆ) புவி தனது அச்சில் 23½ பாகை சரிந்திருப்பது, மற்றும்
(இ) புவி தனது அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை ஞாயிறையும் சுற்றிவருவது,
(ஈ) புவி செவ்வாய், புதன் போல் ஒரு கோள்.

மேற் கூறிய வானியல் உண்மைகள் சோதிடர்களுக்குத் தெரியாமல் இருந்ததே கோள்களின் பட்டியலில் புவி சேர்க்கப் படாததற்குக் காரணமாகும்.

புவி உருண்டை என்பது சோதிடர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதாலேயே புவியை இரண்யாட்சகன் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய்க் கடலில் ஒளித்து வைத்தான் என்ற புராணக் கதையை புராணிகர்கள் எழுதி வைத்தனர். கடலைப் பாயாகச் சுருட்டினான் என்றால் எதன் மீது நின்று சுருட்டினான்? புவியை எப்படிக் கடலில் ஒளிக்க முடியும்? கடல் புவியில்தானே இருக்கின்றது!

தட்டையான புவியை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு நிற்கின்றான் என்று எழுதி வைத்தார்கள். அந்த ஆதிசேடனை யார் அல்லது எது தாங்கிக் கொண்டு நிற்கின்றது என்பதைப்பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை!

புவி ஞாயிற்றைச் சுற்றி வருவது மட்டுமல்ல அது 23½ பாகை அதன் அச்சில் ஒரு பக்கம் சாய்ந்து (Ecliptic) இருப்பதோடு அதன் வடதுருவம் எப்போதும் ஞாயிறை நோக்கியே இருக்கும். இவை காரணமாகவே  பருவங்கள் ஏற்படுகின்றன.

மேற்காட்டிய காரணங்களால் சோதிடம் அடிப்படையிலேயே பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளது தெரியும். மேலும் சோதிடம் சரி, சோதிடர்களே கணிப்பில் பிழைவிடுகின்றார்கள் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை.

இன்று உலகில் இரண்டு விதமான சோதிட முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று மேற்குலக சோதிடம் மற்றது இந்திய சோதிடம் ஆகும். சீனர்களுக்குத் தனியான சோதிட முறை இருக்கிறது. அவ்வாறே இனத்துக்கு இனம் நாட்டுக்கு நாடு வௌவேறு சோதிட முறைமைகள் இருக்கின்றன.

மேற்குலக சோதிட முறை வெப்ப இராசிவட்டம் (Tropical Zodiac) என்றும் இந்திய சோதிட முறை விண்மீன் இராசிவட்டம் (Sidereal Zodiac) என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்த இரண்டு சோதிட முறைகளும் காலத்தைக் கணிப்பதிலும் கோள்களைத் தெரிவு செய்வதிலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இதனால் சோதிடர்கள் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றனர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை உடுமண்டலம் (நட்சத்திரக் கூட்டங்கள்) அவற்றின் பின்புலத்தில் ஞாயிறு உட்புகுந்து வெளிவரும் (உண்மையில் ஞாயிறு உட்புகுவது இல்லை. புவிதான் உட்புகுந்து வெளிவருகிறது) காலம், அது எடுக்கும் நாள்களின் எண்ணிக்கை, அது கடக்கும் பாகையின் அளவு, மேற்குலக (வெப்பமண்டல) சோதிடக் கணிப்பில் ஞாயிறு உட்புகுந்து வெளிவரும் காலம், இறுதியாக இந்திய (நட்சத்திர) சோதிடக் கணிப்பில் ஞாயிறு உட்புகுந்து வெளிவர எடுக்கும் காலம் தரப்பட்டுள்ளது.

                                                                                   உடுமண்டலங்களில் (Constellations) ஞாயிறு புகுந்து/வெளியேறும் கால அளவு

உடுமண்டலம

ானியல்

நாள்கள

பாகை

மேற்குலக சோதிடம

இந்திய சோதிடம

மேடம

ஏப்பிரில 19 -     மே 13

25

24.66

மார்ச்ச 21 –
ஏப்பிரில் 20

ஏப்பிரில 14 -     மே 14

இடபம

மே 14 –     யூன் 19

37

36.49

ஏப்பிரில் 21 -      மே 21

மே  15 –  யூன் 14

மிதுனம்

 

யூன்   20 –    யூலை 20

31

20.58

மே  22 –         யூன் 21

யூன் 15 –       யூலை  15

கடகம

 யூலை  21  – ஆகஸ்ட் 9

20

19.73

 யூன்   22 –        யூலை 22

 யூலை 16  – ஆகஸ்ட் 16

சிம்மம

ஆகஸ்ட் 10 – செப்தெம்பர்  15

37

36.49

யூலை 23  –ஆகஸ்ட்  22

ஆகஸ்ட்  17 – செப்தெம்பர் 16

கன்னி

செப்தெம்பர்  16 – ஒக்தோபர்  30

45

44.38

ஆகஸ்ட்  23 – செப்தெம்பர் 23

செப்தெம்பர்  17 -ஒக்தோபர்     16

துலாம

ஒக்தோபர   31 – நொவெம்பர்22

23

22.69

செம்தெம்பர் 24 – ஒக்தோபர் 23

ஒக்தோபர்    17 – நொவெம்பர் 15

விருச்சிகம

நொவெம்பர்   23 –

நொவெம்பர் 29

7

6.9

ஒக்தோபர்24 – நொவெம்பர் 22

நொவெம்பர் 16 – டிசெம்பர் 15

பாம்பாட்டி

நொவெம்பர் 30 – டிசெம்பர்   17

18

17.75

கணக்கில் எடுப்பதில்லை

கணக்கில எடுப்பதில்லை

னுசு

டிசெம்பர் 18 - சனவரி  18

32

31.56

நொவெம்பர்23 – டிசெம்பர் 21

டிசெம்பர் 16  - சனவரி 13

மகரம

சனவரி  19 – பெப்ரவரி 15

28

27.62

டிசெம்பர் 22 - சனவரி  20

சனவரி 14 – பெப்ரவரி 12

கும்பம

பெப்ரவரி 16 – மார்ச்சு  11

24

23.67

சனவரி  21 – பெப்ரவரி 19

பெப்ரவரி 13 – மார்ச்சு 12

மீனம

மார்ச்சு 12  – ஏப்பிரில் 18

38

37.48

பெப்ரவரி 20 – மார்ச்சு  20

மார்ச்சு 13  – ஏப்பிரில் 13

 

இந்த இராசிவட்டத்தில் ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட செயற்கையான இராசிகளுக்கும் (Signs) உண்மையான பால்மண்டலங்களுக்கும் (Constellations)  தொடர்பே இல்லை என்பதைத் துலாம்பரமாகக் காடடுகிறது! இராசிச் சக்கரத்தின் பாதையில் உளள 17.75 பாகை கொணட பாமபாடடி (Ophiuchus) உடுமணடலததைச சோதிடம கணககில எடுபபதை முறறாக விடடு விடடது. இநத உடுமணடலததை ஞாயிறின பினபுலததில நொவமபர் 30 - டிசெமபர் 17 வரை வானததில பார்ககலாம.


மேறகுலக - இநதிய சோதிடர்கள வானததில ஒரு கோளை வைபபதறகும வானியலாளர்கள அதே கோளை வைபபதறகும வேறுபாடு உளளது. மேலே காடடிய அடடவணைபபடி ஒகதோபர் 24 இல வானியல அடிபபடையில சூரியன கனனி இராசியிலும, மேறகுலக சோதிடததில விருசசிக இராசியிலும இநதிய சோதிடததில துலா இராசியிலும காணபபடுகிறது!
 

மேலும மேறகுலக சோதிடக கணிபபுககும இநதியச சோதிட கணிபபுககும 24 நாளகள வேறுபாடு (அயனாமச வேறுபாடு) இருககிறது. இநதிய சோதிடககணிபபுககும உணமையாக ஞாயிறு (புவி) புகுநது வெளிவருமகாலக கணிபபுககும இடையில 1 - 7 நாள வேறுபாடு காணபபடுகிறது.

ஒவவொரு 2 மணிததியாலததுககு ஒரு இராசியாக அடிவானததில 12 இராசிகளும தோனறி மறைவதால இநதிய சோதிடக கணிபபின படி எழுதபபடும சாதகஙகள 100 விழுககாடு பிழையான இராசிகள பிழையான நடசததிரஙகளைக காடடும எனபது வெளளிடமலை. கோளகளைப பொறுததளவில அவறறின இருககை பிழைபபதறகும வாயபு இருககிறது. ஒரு நாளில கோளகள ஒவவொனறும கடககும தொலைவையும ஒவவொரு நடசததிரபாதததைக கடகக எடுககும காலததையும கீழ கணட அடடவணை காடடுகிறது.                                                                                                             

கோளகளின ஓடடம

 

 

கோள்கள்

ஒரு நாளில் கடக்கும் தொலை

ஒவ்வொரு நட்சத்திர பாதத்தைக் கடக்க எடுக்கும் காலம்
 

பாகை

கலை

விகலை

மாதம்

நாள்

நாழி

வினாடி

சூரியன்

0

59

8

-

3

22

55

சந்திரன்

13

10

35

-

-

13

32

அங்ககாரன்

0

31

26

-

5

-

-

புதன்

4

5

33

-

3

20

-

வியாழன்

0

5

59

1

10

33

20

வெள்ளி

1

36

8

-

3

20

-

சனி

0

2

0

3

11

23

20

இராகு

0

3

11

2

-

-

-

கேது

0

3

11

2

-

-

-


சோதிடர்கள பிறககும நேரததில 2 மணிததுளி வேறு படடாலே சாதகம பிழைததுவிடும எனகிறார்கள. அபபடி எனறால 1-7 நாளகள பிழைககும பொழுது சாதகம எழுதும கடதாசிககே பெறுமதி இலலாமல போயவிடும! சோதிடம எவவளவு புரடடு எனபதறகு இது வலுவான சானறாகும.



 

                                                                                                      1979 ஆம் ஆண்டு உடுமண்டலங்களில் தரவு

Constellation

Border in 1979
 

Length

Date of Sun's entry in 1979

Duration of Sun's stay in days

Total area in square degrees

Capricornus

29,21:46 Capricorn

27,49'57"

Jan 20

27.44

414

Aquarius

27,11:43 Aquarius

24,27'42"

Feb 16

24.06

980

Pisces

21,39:25 Pisces

36,44'25"

Mar 12

37.51

889

Aries

28,23:50 Aries

24,43'51"

Apl 19

25.48

441

Taurus

23,07:41 Taurus

36,43'26"

May 14

38.31

797

Gemini

29,51:07 Gemini

27,50'56"

Jun 21

29.20

514

Cancer

27,42:03 Cancer

20,03'04"

Jul 21

20.96

506

Leo

17,45:07 Leo

35,48'50"

Aug 11

37.05

947

Virgo

23,33:57 Virgo

43,57'40"

Sept 17

44.51

1294

Libra

07,31:37 Scorpio

22,54'24"

Oct 31

23.10

538

Scorpius

00,26:01 Sagittarius

06,55'19"

Nov 23

6.52

497

Ophiuchus

07,21:20 Sagittarius

18,36'01"

Nov 30

18.31

948

Sagittarius

25,57:21 Sagittarius

33,24'25'

Dec 18

32.55

867

 



சோதிடப் புரட்டு

(6)

புதன் கோள் அலியாம்! எப்படிக் கண்டு பிடித்தார்கள்?

வானியலுக்கும் சோதிட சாத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சோதிட சாத்திரத்தின் படிமுறை வளர்ச்சியே வானியலாகும்.

சோதிடம், வானமண்டலத்தில் காணப்படும் கோள்கள், ராசிகள்,  இராசி வீடுகள், நட்சத்திர மண்டலங்கள் போன்றவற்றுக்கும் புவியில் பிறந்த மனிதனுக்கும் 'முடிச்சு' ப் போட்டுக் கொண்டிருக்க அறிவியல் அண்டத்தில் காணப்படும் (புவி நீங்கலாக) திடப்பொருள் - ஆற்றல், பங்கீடு, ஆக்க அமைப்பு, யற்பொருள் நிலை, அசைவுகள், ஓட்டங்கள் மற்றும் படிமுறை வளர்ச்சி ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து கணித்துக் கொடுத்தது.
(The science which investigates all the matter - energy in the universe: its distribution, composition, physical states, movements, and evolution.)

இரண்டு நாள்களுக்கு முன் புதன் கோள் (Mercury)  புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் நேர்க் கோட்டில் வந்தது. அப்பொழுது சூரிய கிரகணம் ஏற்பட்டது. ஆனால் ஞாயிறோடு ஒப்பிடும் பொழுது புதன் கோள் மிகவும் சிறியது - அதன் விட்டம் 4,800 கிமீ மட்டுமே. எனவே ஞாயிறுக்கும் புவிக்கும் இடையில் நிலா நேர்க் கோட்டில் வருவதால் ஏற்படும் சூரிய கிரகணம் போல் இது இருக்கவில்லை. புதன் கோள் ஒரு பொட்டுப்போல் ஞாயிறு மீது காணப்பட்டது. புதன் ஞாயிறைக் கடந்து அதன் பின்புறம் செல்ல எடுத்த நேரம் ஏறத்தாழ 5 மணித்தியாலம் ஆகும்.

புதன் ஞாயிறுக்கு மிக அண்மையில் உள்ள ஒரு சிறிய கோளாகும். அதன் சுற்றுப் பாதை ஞாயிறில் இருந்து 58 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. அது ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம் 88 நாள் மட்டுமே. அது சுற்றும் பாதை புவி சுற்றி வரும் பாதையின் தளத்திற்கு 7 பாகை சாய் கோணத்தில் உள்ளது. இப்படிச் சாய்ந்திருப்பதால் ஞாயிறின் பாதையைப் புதன் கோள் கடந்து செல்வதைக் காண்பது மிகவும் அரிதாக இருக்கும். மொத்தம் ஒரு நூற்றாண்டில் இப்படியான கிரகணம் சீரற்ற இடைவெளியில் 13 முறையே இடம் பெறுகிறது. அடுத்த சூரிய (புதன் ) கிரகணம் நொவம்பர் 8, 2006 இல் இடம் பெறும்.

இப்படி இராசிவட்டத்தில் (ஞாயிறு செல்லுமாப் போல் தெரியும் வீதி) உள்ள இராசி வீடுகளைக் கோள்கள் கடந்து செல்வதைப் பெயர்ச்சி
(Transit) என அழைக்கின்றார்கள். இந்தப் பெயர்ச்சி, கோள்கள் ஞாயிறைச் சுற்றிவரும் வேகத்தைப் பொறுத்தது ஆகும்.

இப்படியான கடவுகளையும் அதனால் ஏற்படும் கிரகணங்களையும் வானியலாளர் தங்களது ஆய்வுக்குப் பயன்படுத்தும் போது சோதிடர்கள் நாட்டில் கெட்டது நடக்கப்போவதாகச் சொல்லிப் பாமரமக்களைப் பயமுறுத்துகின்றார்கள். தோசம் நீங்கக் கோயில் குளங்களுக்குச் சென்று கோள்களுக்கு அருச்சனை, அபிசேகம் மற்றும் சாந்தி செய்யுமாறு தூண்டுகின்றார்கள். குறிப்பாகப் பாப கிரகங்கள் என நம்பப்படும் சனி, செவ்வாய், சூரியன், இராகு, கேது ஆகியவற்றின் பெயர்ச்சியின் போது தோசம் உண்டாவதாகச் சொல்லி மக்களை ஏய்க்கின்றார்கள்.

சந்திர-சூரிய கிரகணங்கள் இராகு கேது என்ற இரண்டு பாம்புகள் அவற்றைக் கவ்வுவதால் ஏற்படுகிறது என்று சோதிடர்கள் சொல்கின்றார்கள். கிரகணம் முடிந்த பின்னரே குளித்து முழுகிச் சமைக்கத் தொடங்க வேண்டும் அல்லாவிட்டால் உணவில் நஞ்சு கலந்து விடும் என்று பாமரமக்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். கிரகணம் பற்றிய அறியாமை காரணமாக எழுகின்ற வீண் அச்சமே இதற்குக் காரணமாகும்.

இந்தச் சூரிய கிரகணம் பற்றி இம் முறையும் எதிர்கூறல் (ஆரூடம்) சொல்லச் சோதிடர்கள் பின் நிற்கவில்லை. அது அவர்களது வயிற்றுப் பிழைப்பாயிற்றே!

'புதன் கோள் நல்ல குடும்ப வாழ்வுக்கு ஏற்றதல்ல. காரணம் அது ஆற்றல் இல்லாத கோள். உண்மையில் அது கோள்களில் அலி ஆகும். புதன் கோள் மாற்றம் பெரும்பாலும் சண்டை சச்சரவை ஏற்படுத்தும். முடிவுகள் எடுப்பதையும் அது தடுத்து விடும். அதுதான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்ட மூலம் பற்றி நாடாளுமன்றம் ஒரு முடிவை எடுக்க முடியாமல் போய்விட்டது' இப்படிச் சொல்பவர் லால் பகதூர் சாஸ்திரி வித்தியா பீடத்தைச் சேர்ந்த சோதிடர் மாபிரேம் உஷா! இராக் போர் விரைவில் முடிந்ததற்கும் (?) புதனின் 'செல்வாக்கே' காரணமாம்.

சோதிட நூல்கள் அனைத்துக் கோள்களின் பலத்தை வரிசைப்படுத்தும் பொழுது புதன் கோளை இறுயில் வைத்திருக்கின்றன.

                                                                                                                                                                                                                                                                                                                                       ஞாயிறைக் கடக்கும் புதன்

1. கேது

2. இராகு

3. ஞாயிறு

4. திங்கள் (சந்திரன்)

5. வெள்ளி (சுக்கிரன்)

6. வியாழன் (குரு)

7. சனி

8. செவ்வாய் (அங்காரகன்)

9. புதன்

மேலும் புதனுக்குச் சந்திரன் சத்துரு - செவ்வாய்க்குப் புதன் சத்துரு. தோல் சம்பந்தமான நோய் புதன் கோளினால் ஏற்படுமாம். ஏனைய கோள்களினால் ஏற்படும் நோய்கள் பின்வருமாறு:

ஞாயிறு - எலும்பு தொடர்பான நோய்

சந்திரன் - குருதி தொடர்பான நோய்

செவ்வாய் - மூளை தொடர்பான நோய்

வியாழன் - தசை, மாமிசம் தொடர்பான நோய்

சனி - நரம்பு தொடர்பான நோய்

வெள்ளி - விந்து (சுக்கிலம்) கருமுட்டை (சுரோணிதம்) தொடர்பான நோய்

இராகு கேது - உடல், குடல் தொடர்பான நோய்

இவற்றை எல்லாம் யார் யார் எப்படி எப்பொழுது ஆய்ந்து கண்டு பிடித்தனர் என்பது தெரியவில்லை. பாரத்தைப் பராசரர் போன்ற முற்கால முனிவர்கள் தலையில் ஏற்றி விட்டுச் சோதிடர்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள். யாராக இருந்தாலும் எந்த அடிப்படையும் இல்லாது, எந்த விதிக்கட்டும்பாடும் இன்றி மனம்போன போக்கில் கோள்களின் குணாம்சங்களைச் சித்தரித்து இருக்கின்றார்கள்.

வேடிக்கை என்னவென்றால் இரண்டு சோதிடர்கள் ஒரு சாதகத்தைப் பார்த்து ஒரே மாதிரியான பலன்களை ஒரே குரலில் சொல்வதில்லை. ஆளுக்கு ஆள் மாற்றி மாற்றிச் சொல்கின்றார்கள்.

இந்தத் தொடரைப் படித்து விட்டுப் பலர் நான் எழுதுவதைப் போற்றியும் சிலர் தூற்றியும் எழுதியுள்ளனர். நேற்றும் என்னைக் கண்ட ஒரு நீண்ட நாள் நண்பர் 'சோதிடர்களை மட்டும் அல்ல, தங்களைச் சாமிகள் என்று சொல்லிக்கொண்டு கனடாவிற்கு வந்து சோதிடம், காண்டம், அருள்வாக்கு, பக்தி என ஏமாற்றிப் பணம் பறித்துக் கொண்டு போகிறவர்களைப் பற்றியும் எழுதுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.

இன்னொருவர் சாதகப் பொருத்தம் பார்ப்பதால் திருமணப் பேச்சுத் தடைப்பட்டு பெண்களும் ஆண்களும் திருமணம் இல்லாமல் இருக்கும் கையறு நிலையைக் கவிதையாக வடித்து அனுப்பியுள்ளார். 'இதனை அறியா மடையர் இங்கே குறிப்புப் பார்த்து நிற்கின்றார்' எனச் சினத்தோடு கவிதையை முடித்திருக்கின்றார்.

பெயர் குறிப்பிடாத ஒருவர் மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பி வைத்த மடலில் எழுதியிருப்பதாவது-

சோதிடப் புரட்டு கட்டுரைகளை எழுதி வரும் அன்பருக்கு,

கனம் பொருந்திய ஆசிரியருக்குக்கூடாக எழுதுவது,

தாங்கள் கூறிய கருத்துகளை வைத்துப் பார்க்கும்பொழுது எனக்குப் புலப்படுவது என்னவென்றால், சோதிடமானது எப்படி எவற்றையெல்லாம் வைத்துக் கணிக்கப்படுகிறது என்பதைத் துளிகூட அறியவில்லை என்பதாகும்.

நானும் ஒரு காலத்தில் தங்கள் கருத்தையே கொண்டிருந்தேன். ஆனால் கடந்த முப்பது வருடகாலமாக ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளேன்.

பிழைப்புக்காகச் சோதிடம் பார்க்கும் சிலரை வைத்துச் சோதிடத்தை எடை போடுவது தவறாகும். அத்துடன் சோதிடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் அதைப் பற்றி விவாதிப்பது தவறு. இது கம்யூனிசத்தைப் பற்றித் தெரியாதவர்கள் அகராதியில் கம்யூனிசத்தை பற்றிய அரை குறையான விளக்கத்தை பார்த்து இது தான் கம்யூனிசம் என்று கூறுவது போன்றது.

இந்த உதாரணம் ஏன் என்றால், கம்யூனிச சித்தாந்தம் எவ்வளவுக்கு விஞ்ஞான பூர்வமான ஒன்றோ அந்தளவுக்குச் சோதிடமும் விஞ்ஞான பூர்வமானதே. இதைச் சமயவாதிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் கடவுளுடன் பின்னிப் பிணைத்திருக்கின்றார்கள். சமண மதத்தை ஒரு முறை ஆராய்ச்சி செய்தால் பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றி நன்கு புரியும்.

அடுத்து, சோதிடத்திற்கு ஆய்வு கூடம் இல்லை என்று கூற முடியாது. நாசா மற்றும் அமெரிக்க கடற்படையின்
Astronomy  ஆய்வகங்கள்தான் ஒரு விநாடிதானும் பிழையில்லாது ஆய்வுகள் செய்து 'தி எபமெரிஸ்' (The Ephemeris) என்னும் புத்தகத்தில் 1900 - 2050 ஆண்டுகளுக்குரிய கிரக நிலைகளைக் கணித்து வெளியிட்டுள்ளன. அவற்றாலும் மற்றும் செர்மனியிலுள்ள ஆய்வுகூடம் கணித்து வெளியிடும் தரவுகளையும் வைத்தே எத்தனையோ ஆண்டுகளாகப் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு வருகிறது.

புவியில் பிறந்தவர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மூலகங்களால்
(Elements) ஆக்கப்பட்டவர்களேயாவர். புவியானது இந்தப் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசைகளுக்கு உட்படுத்தப் பட்டதாகும். அதாவது புவியும் ஏனைய கிரகங்களும் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அசைவும் ஏற்கனவே 'புறோகிறாம்' செய்யபட்டுள்ளது.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மூலகத்தின் சக்தியுள்ளது. ஒருவர் புவியில் பிறக்கும்போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களின் கதிர்களும் அப் பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறது.

இது அந்தப் பிள்ளை புவியில் வந்து அழும் நேரம் நடக்கிறது. அப்போது ஒவ்வொரு கிரகங்களும் புவியில் அந்தப் பிள்ளை பிறந்த இடத்திலிருந்து அவ்வக் கிரகங்கள் இருந்த தூரங்கள், கோணங்கள் முதலியவற்றைப் பொறுத்தே அவ்வக் கிரகங்களின் மூலகங்களின் அளவு அந்தப் பிள்ளையின் உடலில் செலுத்தப்படும். அதைப் பொறுத்தே அப் பிள்ளையின் புத்தி மற்றும் உடற்கூற்று விடயங்கள் ஏற்படுகின்றன.

பின்பு அதே கிரகங்கள் சுழற்சியில் செல்லும்போது மாறுபடும் தூரங்கள், கோணங்களைப் பொறுத்து அவ்வக் கிரகங்களினால் பிறக்கும் போது கிடைத்த மூலகங்களுக்கும் அது சம்பந்தப்பட்ட கிரகங்களுக்குமிடையில் ஓர் ஈர்ப்பு விசையானது ஆயுள் முழுவதும் வந்து கொண்டேயிருக்கும். இது விஞ்ஞான பூர்வமானதாகும்.

சோதிடர்கள் சொல்லும் எதிர்கூறல்கள் பிழைக்கும் போது பழியைப் 'பிழைப்புக்காக' சோதிடம்பார்க்கும் எனது விளக்கம் சில நேரம் காணாமல் இருக்கலாம். ஆனால் நான் 30 வருடங்கள் இதை ஆராய்ந்துள்ளேன். இன்னும் தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.

தற்போது எழுதப்படும் பஞ்சாங்கங்களில் உள்ள பிழைகளையே நான் கண்டு பிடிக்கக் கூடியதாக இருக்கிறது. மருத்துவ உலகில் இறங்கிப் பார்த்தால் அமாவாசை, பறுவம் போன்ற நாட்களில் எவ்வளவு பேர் சந்திர சூரியனின் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுகிறார்கள் என்பது தெளிவாகும். கிரகணங்கள் நடக்கும் காலங்களில் தோட்டப் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆட்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்தால் தாங்களே அவைகளைப் பற்றிக் கட்டுரை எழுத முற்படுவீர்கள். தற்போது நேரமில்லாதபடியால் பின்பு இது பற்றி விவாதிக்கிறேன்.

நான் முன்பொரு காலத்தில் செய்ததுபோல வெளியில் இருந்து இப்படியான அருமையான விஞ்ஞானத்தை விமர்சிப்பது இலகுவானது. ஆனால் உள்ளுக்குள் சென்றால் உண்மை விளங்கும். நன்றி!' அவருக்கு நான் எழுதிய விடை பின்வருமாறு:

பெயரில்லாத சோதிட ஆராய்ச்சியாளருக்கு!

வணக்கம். சோதிடத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதைத் திருப்பி உங்களைப் பார்த்தும் மிக எளிதாக என்னால் சொல்ல முடியும்.

கோள்களின் தாக்கம் பற்றி ஆராய்ச்சி செய்த நீங்கள் சோதிடத்தின் ஏனைய தூண்களான 12 இராசி வீடுகள், 12 இராசிகள், 27 விண்மீன்கள் மூன்றையும் ஏன் விட்டுவிட்;டீர்கள்?

'கம்யூனிச சித்தாந்தம் எவ்வளவுக்கு விஞ்ஞான பூர்வமான ஒன்றோ அந்தளவுக்கு சோதிடமும் ஒரு விஞ்ஞான பூர்வமானதே' என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவுடமைச் (கம்யூனிச) சித்தாந்தத்தைச் சமூக அறிவியல் என்று சொல்லலாமே யொழிய அதனை வேதியியல், இயற்பியல் போன்ற இயற்கை அறிவியலோடு (physical sciences) சேர்க்க முடியாது.

கார்ல் மார்க்ஸ (Karl Marx) வகுத்த பொதுவுடமைத் தத்துவத்தின் படி பொதுவுடமை உச்சகட்ட வளர்ச்சியை அடைந்த பின்னர் அதன் அடிப்படையில் இயங்கும் அரசு தானாக உலர்ந்து போய்விடும்
(withering of the state) சொல்லப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. அது நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல சோவியத் நாட்டில் பொதுவுடமைத் தத்துவமே செத்தொழிந்து விட்டது! அந்த நாடே சிதறுண்டு போய்விட்டது!

சோதிடர்கள் சொல்லும் எதிர்கூறல்கள் பிழைக்கும் போது பழியைப் 'பிழைப்புக்காக' சோதிடம் பார்க்கும் சோதிடர்களின் தலையில் போட்டுவிட்டு மற்றவர்கள் தப்பிக் கொள்கின்றார்கள். அதில் நீங்களும் ஒருவர் ஆவீர்!

சோதிடர்கள் கடற்பெருக்கு
(tides) சந்திரனால் ஏற்படுகிறது எனச் சொல்கின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதம் பின்வருமாறு:

1) சந்திரன் கடற்பெருக்கை உருவாக்குகிறது -  (சரி).

2) வெள்ளப் பெருக்குச் சந்திரன் புவியின் தண்ணீரை இழுப்பதால் ஏற்படுகிறது -    (பேரளவு சரி ஆனால் முழுதும் சரியல்ல).

3) எனவே சந்திரன் (மனித) மூளையைப் பாதிக்கிறது.

கடற்பெருக்கு எதனால் ஏற்படுகிறது என்ற சரியான விளக்கம் தெரியாத ஒருவருக்கு இந்த வாதம் சரியாகத் தோன்றும்.

சந்திரனால் கடற்பெருக்கு ஏற்படுவதற்கு அதன் பொருண்மை மற்றும் புவியிலிருந்து அதன் தொலைவு முக்கிய காரணிகளாகும். அது மட்டும் அல்ல, புவியின் அகலத்தையும் அது பொறுத்தது. உண்மையில் ஒரு நாளில் இரண்டு வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அது சந்திரன் புவியை இழுப்பதால் ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது.

சந்திரனின் அகலம், சந்திரன் - புவி இரண்டுக்கும் இடையிலான தொலை இவற்றோடு மனிதனின் அகலம் தொலை இரண்டையும் ஒப்பிட்டால் முன்னையது மிக மிக அதிகமானது. இதனை உள்வாங்குவது வில்லங்கம் என்றாலும் கணக்கியல் அடிப்படையில் மிகவும் சரியானது.

அறிவியல் கவனித்தல், கணித்தல், ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் சோதித்தல் முறைகளைக் கொண்டது. சோதிடம் அப்படியல்ல. வானியல் ஒரு அறிவியல் என்பதால் சரியாக எதிர் கூறல் கூறமுடியும். சோதிடம் சொல்லும் எதிர்கூறல் நடக்கலாம் நடக்காமலும் விடலாம் என்று ஒற்றை இரட்டை பிடிப்பது போன்றது. உண்மையில் சோதிடம் பற்றி எதுவுமே தெரியாத சாதாரண மனிதனாலும் அப்படி ஒற்றை இரட்டை பிடிக்க முடியும்!

மூலகங்களைப் (Elements) பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். சோதிட சாத்திரம் அண்டம் நெருப்பு (அக்கினி) நிலம் (பூமி அல்லது பிருதுவி) காற்று (வாயு) நீர் (ஜலம்) வான் (ஆகாயம்) ஆகிய 5 மூலகங்களால் மட்டும் ஆனது என்கிறது. அப்படிச் சொல்லிவிட்டு அவற்றை இராசிகளுக்கு ஒதுக்கும் போது வான் (ஆகாயம்) ஒதுக்கப்படுவதில்லை. அதற்கான ஏது சொல்லப்படவில்லை. சில சோதிடர்கள் வானை மட்டும் தனுசு இராசிக்கு ஒதுக்குகின்றார்கள். மேடம் தொடங்கி மீனம வரையிலான 12 இராசிகளுக்கும் கீழ்க்கண்டவாறு மூலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேடம், சிம்மம், தனுசு    -     நெருப்பு

இடபம், கன்னி, மகரம்      -
  நிலம்

மிதுன்ம், துலாம், கும்பம் - காற்று

கடகம், விருச்சிகம், மீனம்    - நீர்

அதாவது 1,5,9 இலக்க இராசிகளுக்கு நெருப்பு, 2,6,10 இலக்க இராசிகளுக்கு நிலம், 3,7,11 இலக்க இராசிகளுக்கு காற்று. இன்னும் விளக்கமாகச் சொன்னால் மேட இராசிக்கு நெருப்பு, இடப இராசிக்கு நிலம், மிதுன இராசிக்குக் காற்று, கடக இராசிக்கு நீர் என்ற வரிசையில் ஒதுக்கப்பட்டு மீண்டும் எஞ்சிய இராசிகளுக்கு அதே வரிசையில் மூலகங்கள் ஒதுக்கப்படுகிறது.

இராசிகளைப் போலவே இராகு, கேது நீங்கலாக எஞ்சிய 7 கோள்களுக்கும் மனம் போன போக்கில் மூலகங்கள் ஒதுக்கப்படுகிறது.

அங்காரகன்       - நிலம்

சந்திரன்                - நீர்

சுக்கிரன்                - நீர்

புதன்                    -   காற்று

குரு        -   நெருப்பு

சூரியன்           -     நெருப்பு

சனி                      -  வான்

இப்படி மனம் போன போக்கில் மூலகங்களை இராசிகளுக்கும் கோள்களுக்கும் ஒதுக்கிவிட்டு அந்த இராசிகளுக்கும் கோள்களுக்கும் அந்த மூலங்களின் குணங்கள் மாடேற்றப்படுகின்றன.

கிரேக்க தத்துவவாதியான அரிஸ்தோட்டல் (கிமு 384-322) ஆகாயத்தையும் (ether) சேர்த்து அண்டம் அய்ந்து மூலகங்களால் ஆனது என நினைத்தார். அண்டம் கோள் வடிவானது என நினைத்தார். மேலும் அவர் புவி சூரிய குடும்பத்தின் நடுவில் இருப்பதாக நினைத்தார். வௌ;வேறு நிறையுள்ள பொருட்கள் வௌ;வேறு வேகத்தில் புவியின் தரையில் விழும் என்றார். மூளை என்ற உறுப்பு குருதியைக் குளிரச் செய்கிறது என நம்பினார். உணர்வுகளின் மையம் உள்ளம் என்றார். ஆயிரத்து அய்ந்நூறு ஆண்டுகள் நீடித்த இந்த நம்பிக்கைகள் இன்று பிழை என எண்பிக்கப் பட்டுவிட்டன.

உண்மையில் புவியில் 100 கும் அதிகமான மூலங்கள் இருக்கின்றன. அண்டமும் இதே மூலங்களினால் ஆனவைதான்.

நீர், மூலம் அல்ல. அது 2 நீரக அணுக்களும் ( 2 Hydrogen Atoms) ஒரு உயிரக அணுவும் (1 Oxygen Atom) சேர்ந்த அணுக்கூறுத் (Molecule) திரள் (compound) ஆகும்.

சோதிடம் 12 இராசிகள், 12 இராசி வீடுகள், 9 கோள்கள், 27 நட்சத்திரங்கள் இவற்றின் அடித்தளத்திலேயே கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நவக்கிரகங்களின் ஆட்சிவீடு, உச்சவீடு, நீச்ச வீடு, பகை வீடு, சம வீடு, நட்பு வீடு மற்றும் ஆரோகணம் அவரோகணம், அஸ்தங்கதோசங்கள், பார்வைகள், கோணங்கள் ஆகியவையும் கணிப்பில் எடுக்கப்படுகின்றன. இதை நீங்கள் மறுக்கிறீர்களா? கோள்களும் இராசிகளும் ஆண், பெண், அலி, நிலம், நீர் நெருப்பு, காற்று, வான், என்று பகுக்கப்பட்டு அவற்றுக்கு அந்தந்தப் பொருள்களின் குணங்களை மாடேற்றுவது அறிவியல் நாணயமா? இவற்றை விட வேறு அடிப்படை சோதிடத்துக்கு இருக்கிறதா?

விண்ணில் சோதிடம் கூறும் 12 வீடுகள் இல்லை. அது சோதிடரின் சாதகத்தில்தான் இருக்கிறது. பன்னிரண்டு இராசிகளும் செயற்கையாக மனிதன் நட்சத்திரங்களை மனம் போன போக்கில் (random) விதிக்கட்டுப்பாடின்றிச் (arbitrary) சேர்த்து உருவாக்கியதாகும்.

நாசா வானுயிரியல் நிறுவனத்தில்
(Astrobiology Institute of NASA)  ஆய்வு நடைபெறுவது உண்மைதான். சோதிடத்துக்கும் வானியலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வது இந்த அமைப்பின் குறிக்கோளாகும். சூரிய-சந்திர கிரகணங்கள் இடம்பெறுவதையும் வால்வெள்ளிகள் தோன்றுவதையும் முன்கூட்டியே கணக்கிட்டு நீங்கள் குறிப்பிடும் (The Ephemeris) என்ற நூலை வெளியிடுகிறது. ஆனால், அதே நாசா அட்டமி நவமி, இராகு காலம், யமகண்டம் பார்த்தா விண்ணில் கலங்களை ஏவுகிறது? விண்வெளிச் செலவுகளை (பயணங்களை) மேற்கொள்கிறது? தோசம் என்று சொல்லி நாசா சாந்தி ஏதாவது செய்கிறதா? பிராமணர்களை வைத்து யாகம் நடத்துகிறதா? சாதகம் பார்த்தா வெள்ளைக்காரன் திருமணம் செய்து கொள்கிறான்? நிலாவில் மனிதனை இறக்கிய நாசா இப்போது செவ்வாய்க் கோளில் மனிதனை இறக்க முயற்சி செய்கிறது. அதற்கு முன்னோடியாக செவ்வாய்த் தரையின் எந்தப் பகுதி மனிதன் பத்திரமாக இறங்குவதற்கு ஏற்றது என்பதை ஆராய்கிறது. இவ்வாறெல்லாம் நாங்கள் ஏதாவது செய்கிறோமா?

'ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மூலகத்தின் சக்தியுள்ளது. ஒருவர் புவியில் பிறக்கும் போது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களின் கதிர்களும் அப் பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறது.

இது அந்தப் பிள்ளை புவியில் வந்து அழும் நேரம் நடக்கிறது....அவ்வக் கிரகங்கள் இருந்த தூரங்கள், கோணங்கள் முதலியவற்றைப் பொறுத்தே அவ்வக் கிரகங்களின் மூலகங்களின் அளவு அந்தப் பிள்ளையின் உடலில் செலுத்தப்படும். அதை பொறுத்தே அப் பிள்ளையின் புத்தி மற்றும் உடற்கூற்று விடயங்கள் ஏற்படுகின்றன' என்று கூறுகிறீர்கள்.

உங்கள் கூற்று இந்தக் கோள்கள் பற்றி மட்டுமல்ல சோதிடம் கணக்கில் எடுக்கும் நட்சத்திர மண்டலங்களது தொலைவு பற்றிய ஞானம் கூட உங்களுக்குத் துளியும் இல்லை என்பதைக் காட்டுகிறது. 'ஒருவர் புவியில் பிறக்கும்போது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களின் கதிர்களும் அப் பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறது' என்பது நடைமுறைச் சாத்தியம் அற்ற நிகழ்ச்சி ஆகும். காரணம் கிரகங்கள், விண்மீன் ஆகியவற்றில் இருந்து ஒளி வேகத்தில் ( ஒரு விநாடி 186,000 கல் அல்லது 300,000 கிமீ ) வரும் கதிர் புவியை உடனடியாக வந்து சேருவதில்லை. நேரம் கழித்தே வருகிறது.

புவி               -           சந்திரன்     1.25 விநாடி
புவி               -          ஞாயிறு      8.3 மணித்துளி
ஞாயிறு           -          வியாழன் 41.0 மணித்துளி
ஞாயிறு           -          சனி               85.0 மணித்துளி
ஞாயிறு                            -           புளுட்டோ 5.5 மணி

ஞாயிறு           -     Alpha  Centauri     விண்மீன்                                                                          4.24      ஒளி ஆண்டு
ஞாயிறு           -     மிதுன இராசி (Gemini)  Pollux  விண்மீன்                33.70     ஒளி ஆண்டு
ஞாயிறு           -     மிதுன இராசி (Gemini)  Castor விண்மீன                                             51.6        ஒளி ஆண்டு
ஞாயிறு           -     இடப இராசி (Taurus) Alllderbaran    விண்மீன                                 65.20      ஒளி ஆண்டு
ஞாயிறு           -     சிம்ம இராசி  (Leo) Regulus    விண்மீன                                              77.6         ஒளி ஆண்டு

ஞாயிறு           -     கன்னி இராசி     (Virgo)  spica  விண்மீன                                          263          ஒளி ஆண்டு
ஞாயிறு                    -   இடப இராசி (Taurus) Plleidas விண்மீன                                             385             ஒளி ஆண்டு
ஞாயிறு                  -       விருச்சிக இராசி (Scorpius) Antares    விண்மீன                             604          ஒளி ஆண்டு
ஞாயிறு                -        மிருகசீரிடம் (Orion)  Rigel     விண்மீன                                               777        ஒளி ஆண்டு

             ஞாயிறில்  இருந்து இராசிகளின் தொலைவு

 

இராசி

Sign

Star

ஒளி ஆண்டுகள்

ஞாயிறு

மிதுனம்

Gemini  

Pollux

33.7

ஞாயிறு

மிதுனம்

Gemini  

Castor

51.6

ஞாயிறு

இடபம்

Taurus

Aldbaran

65.2

ஞாயிறு

சிம்மம்

Leo

Regulus

77.6

ஞாயிறு

கன்னி

Virgo

Spica

263

ஞாயிறு

 

இடபம்

Taurus

Pleiades

385

ஞாயிறு

 

விருச்சிகம்

Scorpius

Antares

604

ஞாயிறு

 

மிருகசீரிடம்

Orion

Rigel

777


ரு குழந்தை பிறந்த நேரத்தைச் சரியாகக் கணிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஞாயிறின் கதிர்கள் புவியை வந்து சேர எடுக்கும் 8 மணித்துளியையும் புவி நேரத்தோடு கூட்ட வேண்டும்!

ஒரு கதைக்கு நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அதனை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? நீPங்கள் எந்தக் கருவிகளைக் கொண்டு கோள்களின் கதிர்கள் பிறக்கிற பிள்ளை அழும் பொழுது உடலில் பாய்ச்சப்படுவதைக் கண்டு பிடித்தீர்கள்? அதைக் காட்ட முடியுமா? ஒரு குழந்தை அழும்போது தான் கோள்களின் கதிர்கள் அப்பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறதா? அது அந்தப் பிள்ளை கருவில் உற்பத்தியாகும் நேரத்தில் இல்லையா? கால் அல்லது தலை நிலத்தில் (இந்தக் காலத்தில் கட்டிலில்) படும் நேரத்தில் இல்லையா? முதன் முதலாகக் குழந்தை மூச்சுவிடும் நேரத்தில் இல்லையா? உங்கள் கண்டு பிடிப்பை ஏனைய சோதிடர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? மேலும் நீங்கள் குறிப்பிடும் கோள்களின் பட்டியலில் யூறேனஸ், புளுட்டோ, நெப்தியூன் அடக்கமா? இல்லை என்றால் ஏன்?

நீங்கள் பிள்ளை அழும் நேரந்தான் அந்தப் பிள்ளை பிறந்த நேரம் என்கிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்வதைப் பெரும்பாலான சோதிடர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். சிலர் குழந்தை பிறக்;கிற நேரம் அந்தக் குழந்தையின் கால் அல்லது தலை புவியில் படும் நேரம் என்கின்றார்கள். இன்னும் சிலர் பிள்ளை பிறந்த நேரம் தொப்புள்க் கொடி அறுத்த நேரம் என்கின்றார்கள்.

இவ்வாறு பிறந்த நேரம் எது என்பதிலேயே சோதிடர்கள் ஆளுக்க ஆள் மாறுபடுகின்றார்கள்!

சரி போகட்டும். கோள்களினால் மனிதன் பாதிக்கப்படலாம் என்று வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் இன்ன இன்ன கிரகங்களினால் இன்ன இன்ன பாதிப்பு ஏற்படும் என்று எந்த அறிவாளி கண்டு பிடித்தான்? எப்படி எப்போது கண்டு பிடித்தான்? நாம் வாழும் புவி, கோள்கள் ஒரே மூலங்களினால் ஆக்கப்பட்டவை என்பது உண்மைதான். திங்களும் ஞாயிறும் உயிரினங்களைப் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அவை ஒரேமாதிரித்தான் உயிரினங்களைப் பாதிக்கிறது. சோதிடம் சொல்வது போல் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து வௌ;வேறு விதமாகப் பாதிப்பதில்லை.

மேலும் சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது கெட்ட கோள்கள் என்றும் சூரியன், செவ்வாய், வியாழன் ஆண் என்றும் சந்திரன், சுக்கிரன் பெண் என்றும் புதன், சனி அலி என்றும், வியாழன், வெள்ளி சுவ கோள்கள் என்றும் சூரியன், சனி, செவ்வாய், இராகு கேது பாப கோள்கள் என்றும் எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறது?

அமாவாசை முழுநிலவு (பவுர்ணமி) நாட்களில் மருத்துவ மனையில் அதிகளவில் குழந்தைகள் பிறக்கிறது என்பதை ஆய்வு செய்தபோது அது பிழையான முடிவு என்பது தெரிய வந்துள்ளது. அதுபோலவே மனநிலை பாதித்தவர்கள் அந்த நாள்களில் அதிகளவு பாதிக்கப்படுகின்றார்கள் என்பதிலும் உண்மையில்லை. வீதி விபத்துக்கள் கூடுதலாக நடக்கிறது என்பதிலும் உண்மையில்லை. இவையெல்லாம் பாட்டிக் கதைகள்!

இன்று மருத்துவர்கள் பிறப்பை ஊசி மருந்து கொடுத்து தள்ளிப் போடுகின்றார்கள் அல்லது முன்னுக்குக் கொண்டு வருகின்றார்கள். அதனால் மேட இராசியில் பிறக்க வேண்டிய குழந்தை ஒன்றில் மீன இராசியில் அல்லது இடப இராசியில் பிறந்தால் அதற்கேற்ப கோள்களின் பலன்கள் உடனே மாறிவிடுமா? சில குழந்தைகள் பிறக்கும் போதே உடல் ஊனமாகப் பிறக்கின்றன. அது எப்படி? எதனால் ஏற்பட்டது?

ஒரு குழந்தையின் உடல் நலம் மன நலம் இரண்டுக்கும் அதன் தாய் தந்தையரது மரபணுக்கள்
(genes) ஏது என்பதே அறிவியலாளர்களது முடிவாகும். அப்படி அல்ல கோள்கள்தான் ஏது என்று சாதிப்பது மடமையாகும். ஒரு குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது இருவருமே எச்ஐவி (HIV) நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அந்த நோய் இருப்பது 90 விழுக்காடு சாத்தியமே. அது போலவே நீரிழிவு நோய் உள்ள தாய் அல்லது தந்தை அல்லது இருவருக்கும் பிறக்கும் குழந்தைக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் 50 விழுக்காட்;டுக்கு மேல் இருக்கிறது. அப்படியென்றால் இந்த நோய்கள் தாய் தந்தையர் மூலம் ஏற்படுகிறதா? அல்லது கோள்களின் கோளாறினால் ஏற்படுகிறதா?

இந்தப் புவிதான் மனிதனைப் பாதிக்கும் பெரிய கோள் ஆகும். பின் ஏன் சோதிடர்கள் புவியை விட்டு விட்டார்கள்? ஈர்ப்பு விசை, கோள்களின் அசைவு இவை வானியலாளர் கண்டு பிடித்த உண்மைகளேயன்றிச் சோதிடர்கள் கண்டு பிடித்தவை அல்ல. உலகம் தட்டை வடிவமானது, அது அசைவதில்லை, அதனைச் சுற்றித்தான் ஞாயிறும் ஏனைய கோள்களும் சுற்றுகின்றன என்ற அடித்தளத்தின் மீதுதான் சோதிடம் எழுப்பப்பட்டுள்ளது!

ஒன்பது கோள்களில் அய்ந்துதான் உண்மையான கோள்கள். இராகு கேது கற்பனை அல்லது நிழல்க் கோள்கள், திங்கள் துணைக் கோள், ஞாயிறு ஒரு விண்மீன். ஓப்புக் கொள்கின்றீர்களா?

உலகில் ஆராய்ச்சி செய்வதற்கு சோதிட சாத்திரம்தான் உங்களுக்கு அகப்பட்டதா? தமிழர்களின் ஆய்வுகள் இப்படியான கவ்வைக்கு உதவாத ஆராய்ச்சியில் செலவிடப்படுவதால் அல்லவா நீராவியில் புட்டு இடியப்பம் அவிப்பதோடு தமிழர்களது கண்டுபிடிப்புக்கள் நின்று விட்டன! உங்களுக்காக நான் உண்மையிலேயே கழிவிரக்கப்படுகிறேன். உங்கள் பொன்னான வாழ்க்கையில் 30 ஆண்டுகளைச் சோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி மண்ணாக்கி விட்டீர்கள்!'



சோதிடப் புரட்டு

(7)

இரண்டு சோதிட முறைகளும் சரியாக இருக்க முடியாது!

 

ஒருவரது சாதக பலன்கள் 12 இராசி வீடுகள், 12 இராசிகள், 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் இவற்றை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது என்பதைப் பார்த்தோம்.

இந்த ஒன்பது கோள்களைப் பொறுத்தளவில் வெப்பமண்டலச் சோதிடமும் இந்திய சோதிடமும் ஒத்துப் போவதில்லை.

வெப்ப மண்டல சோதிடத்துக்கும் இந்திய சோதிடத்துக்கும் ஏழு கோள்களே (விண்மீனான ஞாயிறு மற்றும் புவியின் துணைக் கோளான திங்கள் இரண்டையும் கோள்களாக எடுத்துக் கொண்டு) பொதுவாக இருக்கின்றன. அவையாவன:

        ஞாயிறு
        புதன்
        வெள்ளி
        சந்திரன்
        செவ்வாய்
        வியாழன்
         சனி

இவற்றைவிட வெப்பமண்டல சோதிடம் பின்வரும் கோள்களையும் சேர்த்துக் கோள்களின் எண்ணிக்கையைப் பத்தாக உயர்த்திக் கொண்டுள்ளது.

        யூறேனஸ்
        நெப்தியூன்
        புளுட்டோ

இந்திய சோதிடம் இராகு கேது என்ற நிழல் அல்லது கற்பனைக் கோள்களைச் சேர்த்து ஒன்பது கோள்களாக (நவ கோள்கள்) உயர்த்திக் கொண்டுள்ளது.

கெட்ட கோள்கள் எனக் கருதப்படும் இராகுவும் கேதுவும் வெப்பமண்டல சோதிடத்தில் இடம் பெறவில்லை. அதே நேரம் யூரேனஸ் (1871), நெப்தியூன் (1846) மற்றும் புளுட்டோ (1930) ஆகிய கோள்கள் இந்திய சோதிடத்தில் இடம்பெறவில்லை. இதற்குக்குக் காரணம் இந்த மூன்று கோள்களும் அண்மைக் காலத்தில் வானியலாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டதே.

மேலும் வெப்ப மண்டல சோதிடம், இந்திய சோதிடம் கணக்கில் எடுக்கும் 27 நட்சத்திர மண்டலங்களில் ஒன்றையாவது கணக்கில் எடுக்கவில்லை!

எனவே இந்த இரண்டு சோதிட முறைகளும் கோள்களைப் பொறுத்தளவில் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன. வெப்பமண்டல சோதிடம் 10 கோள்களின் அடிப்படையில் பலன் சொல்ல இந்திய சோதிடம் 9 கோள்களின் அடிப்படையில் பலன் சொல்கிறது.

வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டு சோதிட முறைகளையும் பின்பற்றித் தொழில் நடத்தும் சோதிடர்கள் தத் தம் சோதிடப் பலன்கள் சரியாக இருப்பதாகச் சொல்கின்றார்கள்! ஆனால் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இரண்டும் சரியாக இருக்க முடியாது. கூடியபட்சம் இரண்டில் ஒன்றுதான் சரியாக (?) இருக்க முடியும்.

இரண்டையும் இரண்டையும் கூட்டினால் கூட்டுத்தொகை நாலாகத்தான் இருக்க முடியும். இரண்டும் இரண்டும் அய்ந்து என்றோ இரண்டும் இரண்டும் மூன்று என்றோ சொல்வது தவறாகவே இருக்க முடியும்!

இப்போது நாங்கள் இருக்கும் ஞாயிறு குடும்பத்தைச் (Solar System) சேர்ந்த ஞாயிறு என்ற விண்மீன், புதன், வெள்ளி, புவி, திங்கள் என்ற துணைக்கோள், செவ்வாய், வியாழன், சனி, யூரேனியஸ், நெப்தியூன், புளோட்டோ கோள்கள் பற்றி வானியல் தரும் தரவுகளைப் பார்ப்போம்.

எமது ஞாயிறு எமது பால் வழி மண்டலத்தின் (
Milky Way Galaxy)  ஒரு ஓரத்தில் இருக்கிறது. எமக்குத் தெரிந்த அண்டத்தில் (Known Universe) ஏறத்தாழ 36,000 கோடி பால்மண்டலங்கள் (Milky Way Galaxies) இருக்கிறது எனவும் ஓவ்வொரு பால் மண்டலத்துக்குள்ளும் 10,000–20,000 கோடி உடுக்கள் (stars) காணப்படுகின்றன எனவும் மேலே பார்த்தோம். ஞாயிறு குடும்பம்

எல்லாக் கோள்களும் கடிகார முள்ளுக்கு எதிர்திசையில் (counter clock-wise) ஞாயிறைச் சுற்றி
(Orbit) வருகின்றன. அவ்வாறே வெள்ளி, புளுட்டோ ஆகிய இரண்டு கோள்கள் நீங்கலாக ஏனைய கோள்கள் தங்கள் அச்சில் எதிர்த்திசையில் சுழன்று (rotate) கொண்டிருக்கின்றன. இதனால் ஞாயிறு கிழக்கில் உதித்து மேற்கே மறைவது போல் எங்கள் கண்ணுக்குப் படுகிறது. வெள்ளி புளுட்டோ ஆகிய கோள்கள் மட்டும் கடிகார முள்ளின் திசையில் சுழக்கின்றன. இதனால் இந்த இரண்டு கோள்களையும் இங்கிருந்து பார்த்தால் அவை மேற்கில் உதித்து கிழக்கில் மறைவது போல் தெரியும்.

ஞாயிறும் அவ்வாறே தன்னைத்தானே எதிர்திசையில் சுற்றுகிறது. சுற்ற எடுக்கும் நாள் 25 (நடுக்கோட்டில்) ஆகும். ஆனால் அது வாயு நட்சத்திரம் என்பதால் கோள்கள் போல இறுக்கமாகச் சுற்றுவதில்லை. இந்தத் தரவுகள் வேதகால முனிவர்களுக்குத் தெரியாதவை.

ஞாயிறு
(Sun)

கிரேக்கர் ஞாயிறை Helios என்றும், உரோமர்கள் Sol  என்றும் அழைத்தனர். ஒரு நீரகக் குண்டு வெடித்தால் என்ன விளைவு ஏற்படுமோ அதே போன்ற நிலை ஒவ்வொருவிநாடியும் ஞாயிறில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஞாயிறு என்ற விண்மீன் புவிக் கோளத்தில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. ஓப்பீட்டளவில் அது புவிக்கு மிக அருகில் உள்ளது. ஞாயிறு வியாழனின் விட்டத்தை விட 10 மடங்கு நீளமானது. புவியின் விட்டத்தை விட 109 மடங்கு நீளமானது. புவியைப் போல 13,000 இலட்சம் புவிகளை ஞாயிறுக்குள் அடக்கலாம்.

ஞாயிறு குடும்பம் (Solar system) 9 கோள்களையும், குறுங்கோள்கள் (Meteoroids) சிறு கோள்கள், வால்மீன்கள் (Comets) உள்ளிட்ட ஏராளமான விண்வெளி உடலிகளை உள்ளடக்கியது. ஞாயிறுதான் - ஞாயிறு குடும்பத்தின் நடுவில் உள்ளது. ஞாயிறின் ஈர்ப்பு விசையினாலேயே
(force of gravity) புவி 940 மில்லியன் கிமீ நீளமான தனது சுற்றுப் பாதையில் (orbit) ஒரு விநாடிக்கு 20.79 கிமீ வேகத்தில் ஞாயிறை வலம் வந்து கொண்டிருக்கிறது. கோள்கள் அனைத்தும் ஞாயிறைச் சுற்றுவது போலவே ஒட்டு மொத்த ஞாயிறு குடும்பமும் பால் மண்டலத்தைச் சுற்றி உலா வருகிறது.

ஞாயிறு திடப்பொருள் அல்ல. அது ஒரு வாயுக்கோளம். அண்டத்தில் பொருட்கள் திரண்டு ஞாயிறு குடும்பங்கள் தோன்றுகின்றன. போதுமான அடர்த்தி (
desnsity) இருந்தால் மாத்திரமே அந்தக் கோளிடத்தில் அணுக்கள் இணைந்து கீலியம் அணு உருவாகும். அப்போது வெளியாகும் ஆற்றலே ஒளியாக மாறிப் புவியை வந்தடைகிறது. ஞாயிறில் 73.46 விழுக்காடு நீரகம், 24.85 விழுக்காடு கீலியம் வாயு உள்ளன. அதன் நடுவே இவ்வாயுக்களின் அடர்த்தி பாதரசத்தை விட அதிகமாக இருக்கிறது. ஞாயிறின் நிறையீர்ப்பு விசைதான் அந்த வாயுக்கோளம் வட்ட வடிவில் நம் கண்ணில் தெரிய வைக்கிறது.

ஞாயிறின் வெப்பம் எமக்கு நேரடியாக வருவதில்லை. மறைமுகமாகவே வருகிறது. ஞாயிறின் கதிர் வீச்சுக்கள் விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செலவு செய்கின்றன. இந்தக் கதிர்கள் புவியில் உள்ள ஒரு பொருளின் மீது படும்போது அவை அதன் மூலக்கூறுகளை உந்துகின்றன. அப்போது மூலக்கூறுகளின் வேகம் கூடி வெப்பம் வெளிப்படுகின்றன.

சனி, வியாழன் ஆகிய கோள்களும் ஞாயிறு போல வாயுக் கோள்களே! எனினும் போதிய நிறைத்திணிவு அடையாததால் ஞாயிறு போல அவற்றால் சுயமான ஒளி, வெப்பம் இரண்டையும் ஏற்படுத்த முடியாமல் குளிர்ந்து விட்டன. ஞாயிறு தோன்றி 476 கோடி ஆண்டு ஆகிறது. அது இன்னும் 500 கோடி ஆண்டு நமக்கெல்லாம் ஆற்றலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டத்தில் ஞாயிறு குடுப்பத்தை ஒத்த குடும்பம் எங்காவது இருக்கிறதா என்று வானியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றார்கள். அப்படியான குடும்பங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளார்கள்.

ஞாயிறு விண்மீன் (
Sun Star)

விட்டம்                 - 1, 391, 000 கிமீ (864,325 கல்)

திணிவு (mass)                    - 1.99 x 10x30 கிலோ புவியோடு ஒப்பிடும் போது 333,000 மடங்கு. இது ஞாயிறு குடும்பத்தின் பொருண்மையில் 99.8 விழுக்காடு!

செறிவு (density)                        -  1.99

ஞாயிறு ஒளி புவியை வந்து அடைய எடுக்கும் நேரம் - 8.3 மணித்துளி

வளி மண்டலம்       - 73.46 விழுக்காடு நீரகம், 24.85 விழுக்காடு கீலியம்

தன்னைத் தானே சுற்றும் காலம்          - 25.6 நாள் (நடுக்கோடு) 36 நாள் (துருவம்)

தன்னைத் தானே சுற்றும் வேகம்          - விநாடிக்கு 119.57 கிமீ (மணிக்கு 7174 கிமீ)

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு   - 149,600.000 கிமீ (93 மில்லியன் கல்)

பால் வெளி மையத்தில் இருந்து தொலைவு - 25,000 ஒளி ஆண்டு

பால் வெளியைச் சுற்றிவர எடுக்கும் காலம்  - 225 மில்லியன் ஆண்டு

பால் வெளியைச் சுற்றும் வேகம்           - விநாடிக்கு 217 கிமீ (135 கல்)

வெப்பம் (மேற்பரப்பு)                                                          -  9,900 பாகை பாரன்கைட் (Fahrenheit) (5500 பாகை செல்சியஸ் (Celcius)

வெப்பம் (உள் நடுப்பகுதி)                                              - 10 -22.5 மில்லியன் பாகை பாரன்கைட் (15,000மு)

உங்கள் எடை                                        - புவியில் 200 கிலோ என்றால் ஞாயிறில் 5,600 கிலோ

புதன் (Mercury)

புதன் கோள் புவியோடு ஒப்பிடும்போது அய்ந்தில் இரண்டு பங்காகும். இது கோள்களில் இரண்டாவது சிறிய கோளாகும். இதில் காற்று மண்டலம் இல்லாததால் உயிரினங்கள் வாழும் வாய்ப்பு இல்லை.

விட்டம்                 - 4,878 கிமீ (3,031 கல்)

மேற்பரப்பு                  - மூலகம் (சிலிகேட்) கொண்ட தூசிப் படைகளால் மூடப்பட்டுள்ளது. சமவெளிகள், குழிகள் கொண்டது.

திணிவு (mass)                            -    3.30

செறிவு (density)                  -  5.427

வளிமண்டலம்           - மெல்லிய கீலியம் (95 விழுக்காடு) போர்வை மற்றும் நீரகம்.

வெப்பம்                                          - ஞாயிறு ஒளிபடும் பக்கம் 950 பாகை பாரன்கைட் (510 பாகை செல்சியஸ்) இருளில் இருக்கும் பக்கம் -346 பாகை பாரன்கைட் (-210 பாகை செல்சியஸ்)

ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம்          - 87.96 புவி நாள்

தன்னைத்தானே சுற்றும் காலம்                - 58.67 புவி நாள்

தன்னைத்தானே சுற்றும் வேகம்               - விநாடிக்கு 47.89 கிமீ

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு       - 77.30 மில்லியன் கிமீ (48.21 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு     - 57.97 மில்லியன் கிமீ (36.12 மில்லியன் கல்)

உங்கள் எடை - புவியில் 200 கிலோ என்றால் புதனில் 75.6 கிலோ)

துணைக் கோள் - 0

வளையங்கள் - 0

வளையங்கள் - 0

வெள்ளி (Venus)

வெள்ளிக் கோளின் அளவை வைத்து அது புவியின் இரட்டை என்று அழைக்கப்படுகின்றது. அது மட்டுமே இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையாகும். மற்றப்படி இந்தக் கோள் 864 பாரன்கைட் வெப்பம் உடையது. இதன் பெயர் உரோமரது காதல் தெய்வத்தின் பெயராகும். இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்பதால் காலையில் விடிவெள்ளி என்றும் மாலையில் மாலை வெள்ளி என்றும் அழைக்கப்படுகின்றது. இது புவியில் இருந்து பார்க்கும்பொழுது வானத்தில் மிகத் துல்லியமாக ஒளிரும் கோள் ஆகும்.

விட்டம்           - 12,102 கிமி (7,515 கல்)

மேற்பரப்பு         - கற்கள், மலைகள், சமவெளி, உருகிய பாறைக் குழம்பு (டயஎய)

வளிமண்டலம்     - கரிமலவாயு (95 விழுக்காடு)

திணிவு (mass)                - 4.87
செறிவு
(density)            - 5.204

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்      - 243 புவி நாள்

தன்னைத்தானே சுற்றும் வேகம்           - மணிக்கு 6.52 கிமீ

ஞாயிறை சுற்றி வர எடுக்கும் காலம்       - 224.70 புவி நாள்

ஞாயிறைச் சுற்றும் வேகம்                - விநாடிக்கு 35.03 கிமீ

வெப்பம்                                - 850 பாகை பாரன்கைட் (450 பாகை செல்சியஸ்)

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு - 40.00 மில்லியன் கிமீ (24.90 மில்லியன் கல்) ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு - 108.20 மில்லியன் கிமீ (67.23 மில்லியன் கல்)

உங்கள் எடை                           - புவியில் 200 கிலோ என்றால் வெள்ளியில் 181.4 கிலோ

புவி (Earth)

ஞாயிறு மண்டலத்தில் உள்ள கோள்களில் வியாழன், சனி, செவ்வாய், யுறேனஸ் ஆகியவற்றைவிடச் சிறியது. புதன், வெள்ளி, நெப்தியூன், புளுட்டோவை விடப் பெரியது. புவி ஞாயிறுக்கு அண்மையில் இருக்கும் காலம் சனவரி 2 ஆம் நாள் (147.1 மில்லியன் கிமி அல்லது 94.8 மில்லியன் கல்) ஆகும். தொலைவில் இருக்கும் நாள் யூலை 2 (152.6 மில்லியன் கிமி அல்லது 94.82 மில்லியன் கல்) ஆகும். புவி ஈர்ப்பு விசையில் இருந்து ஒரு பொருள் விடுபட வேண்டும் என்றால் அது விநாடிக்கு 11.10 கிமீ வேகத்தில் மேலெழுந்து பாய வேண்டும்.

விட்டம்                   - 12,756 கிமி (7,921 கல்)

மேற்பரப்பு                 - தண்ணீர் (70 விழுக்காடு), காற்று, இறுக்கமான தரை.

வளிமண்டலம்             - வெடியம் (Nitrogen) 78 விழுக்காடு, உயிர்வாயு 21 விழுக்காடு.

திணிவு (mass)                                  -
5.57 g/cm³ (6 x1024  kg.)  தண்ணீரை விட 5.6 மடங்கு அதிகமானது

செறிவு (density)                    - 5.52
தன்னைத்தானே சுற்றும் காலம் - 23 மணி, 56 மணித்துளி, 4.091 விநாடி (86,164,091 விநாடி -Sidereal day)

புவி தன்னைத்தானே சுற்ற எடுக்கும் பொதுமேனி காலம் - 24 மணித்தியாலம் (Mean solar Day)

தன்னைத்தானே சுற்றும் வேகம் - விநாடிக்கு .46 கிமீ (.29 கல்) மணித்தியாலத்துக்கு 1670 கிமீ (1,040 கல்)

ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம் - 365 நாள், 5 மணி, .48 மணித்துளி, 46 விநாடி (365.242374 -Tropical Year)

- 365 நாள், 6 மணி 9 மணித்துளி, 9.5 விநாடி (365.256363 -Sidereal Year) ( 365.3564 Mean Sideyear Year)

ஞாயிறைச் சுற்றும் வேகம் - விநாடிக்கு 29.79 கிமீ (18.49 கல்) மணித்தியாலத்துக்கு 107,000 கிமீ (67,000)

ஞாயிறில் இருந்து சihசரி தொலைவு - 149.60 மில்லியன் கிமீ (92.90 மில்லியன் கல்)

அச்சின் சாய்வு - 23.45 பாகை

துணைக் கோள் - 1


திங்கள்
(Moon)

விட்டம்                 - 3476 கிமீ.

ஈர்ப்பு விசை            - புவியைவிட ஆறில் ஒரு பங்கு.

திணிவு (mass)                      - 7.35

செறிவு (density)                     - 3.34

புவியைச் சுற்றி வர எடுக்கும் காலம் - 27.32 புவி நாள்

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் - 27.32 புவி நாள்

தன்னைத்தானே சுற்றும் வேகம் - விநாடிக்கு 16.655 கிமீ

புவியைச் சுற்றி வரும் வேகம் - விநாடிக்கு 1.022 கிமீ

புவியில் இருந்து தொலைவு - 384,467 கிமீ

ஆகக் கூடிய தரை வெப்பம் - 123 செல்சியஸ்

ஆகக் குறைந்த தரை வெப்பம் - -233 செல்சியஸ்

நிலவில் உங்கள் எடை - புவியில் 200 கிலோ என்றால் திங்களில் 33.2 கிகி (1ஃ6 பங்கு)

செவ்வாய் (Mars)

செவ்வாய் கோள் சிவப்பாக இருப்பதால் அதற்குச் செவ்வாய் என்ற பெயர் இடப்பட்டது. தொலைக் கோள்களின் சுற்றுப் பாதை கிரேக்கத்தில் ஆயசள போர்க் கடவுளாவார். அந்தப் பெயரையே இந்தக் கோளுக்கும் வைத்து விட்டார்கள். அதன் நிறம் சிவப்பாக இருப்பதற்கு இரும்பு உயிரகம் (சைழn ழஒனைந (சரளவ) நிறைந்த தூசித் தரை காரணமாகும். இந்தக் கோள் ஞாயிறில் இருந்து பார்க்கும் போழுது புவிக்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கிறது.

விட்டம்                - 6,794 கி.மீ (4,219 கல்). புவியைவிட நாலில் ஒன்று

மேற் தரை             - செங்குத்தான பள்ளத்தாக்கு, எரிமலை, பனித் துருவங்கள்,
பனிக்கரிமலவாயு
திணிவு (mass)                         -  6.42
செறிவு (density)                - 3.94

வளிமண்டலம் - கரிமலவாயு 95.32 விழுக்காடு, நீரகம் 2.7 விழுக்காடு

வெப்பம் - -305 பாரன்கைட் (-187 செல்சியஸ்)

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் - 24 மணி, 38 மணித்துளி, 23 விநாடி

தன்னைத் தானே சுற்றும் வேகம் - விநாடிக்கு 24.13 கிமீ

ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம் - 687 புவி நாள்

புவியில் இருந்து பொதுமேனித் தொலைவு - 56.00 மில்லியன் கிமீ (35.00 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு - 227.94 மில்லியன் கி.மீ (141.55 கல்)

உங்கள் எடை - புவியில் 200 கிலோ என்றால் செவ்வாயில் 75.4

துணைக்கோள்கள் - 2

வியாழன்
(Jupiter)

வியாழன் ஞாயிறு மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய கோளாகும். புவியின் விட்டத்தைவிட 11 மடங்கு நீளமானது. அதன் காரணமாக உரோமரது முதன்மைக் கடவுளின் பெயர்
(Jupiter) இதற்குச் சூட்டப்பட்டது. கிரேக்கர் இதற்கு Zeus என்ற கடவுளின் பெயரைச் சூட்டினார்கள். சுமார் 1,300 புவிகளை இதற்குள் அடக்கலாம்! தொலைநோக்கி மூலம் பார்க்கும் பொழுது வியாழன் மிக அழகாக இருக்கும். நீலம், ஊதா, மஞ்சள், செம்மஞ்சள் (Orange) நிறத் திட்டுக்கள் காணப்படுகின்றன.

விட்டம்              - 142,984 கிமீ (88,612 கல்)

திணிவு               - 1.897 x 1027 kg. புவியைவிட 317.83 மடங்கு அதிகமானது

செறிவு (density)             - 1.33

ஈர்ப்பு விசை          - 2.4

மேற்பரப்பு            - வெப்ப வாயு மற்றும் நீர்மம்
(Hot gas and liquid)

வளிமண்டலம்        - சுழன்றடிக்கும் முகில் கூட்டங்கள், அமோனியா, நீரகம் (hydrogen) 90 விழுக்காடு கீலியம்
(helium) 10 விழுக்காடு

வெப்பம்              -      -234 பாரன்கைட் (-148 செல்சியஸ்)

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்       - 9 மணி 55 மணித்துளி

தன்னைத்தானே சுற்றும் வேகம்            - விநாடிக்கு 12.6 கிமீ ( மணிக்கு 43,500 கிமீ)

ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம்      - 11.86 புவி ஆண்டு (4,333 புவி நாள் )

யாயிறைச் சுற்றும் வேகம்                -  விநாடிக்கு 13.06 கிமீ

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு   - 588.50 மில்லியன் கிமீ (367.04 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு - 778.33 மில்லியன் கிமீ (483.63 மில்லியன் கல்) ஞாயிறில் இருந்து புவியின் தொலைவை விட 5.2 மடங்கு தொலைவு

உங்கள் எடை                            - புவியில் 200 கிலோ என்றால் வியாழனில் 506.6 கிகி

துணைக் கோள்கள்                       - 35

வளையம்                               - 1


சனி
(Saturn)

சனிக் கோள் உரோமரின் வேளாண்மைத் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. சனிக் கோளே பண்டைக் கால மக்களுக்குத் தெரிந்திருந்த கடைசித் தொலைக் கோளாகும். வியாழனுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கோளும் இதுவே. ஏனைய கோள்களைப் போலவே சனிக் கோள் ஓர் அழகான கோள். சோதிட சாத்திரம் சொல்வது போல் அதன் நிறம் கறுப்பு அல்ல. அதன் நிறம் கறுப்பு என்பதோ, அதன் வாகனம் காக்கை என்பதோ வெறும் மூடநம்பிக்கை. இந்தக் கோளைச் சுற்றிலும் வளையங்கள் காணப்படுகின்றன. இந்த வளையங்களை முதன் முதலில் கலிலியோ கலிலி (Galileo Galilei, 1564-1642) என்ற வானியலாளரே தனது சிறிய தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார்.

ஞாயிறிடம் இருந்து இந்தக் கோள் பெறும் ஒளியும் வெப்பமும் மிகக் குறைவாகும்.

விட்டம்               - 120,660 கிமி (74,978 கல்)

மேற்பரப்பு             - வாயு மற்றும் நீர்மம் ( புயள யனெ டஙைரனை)

ஈர்ப்பு விசை          - 1.16 (புவி 1)

திணிவு (mass)                      - 5.68

செறிவு (density)                  - 6.87

வளிமண்டலம்        - நீரகம் (hydrogen) 88 விழுக்காடு கீலியம் (helium) 11 விழுக்காடு

வெப்பம்              - -288 பாரன்கைட் (-178 செல்சியஸ்)

அச்சின் சாய்வு        - 26.73 பாகை

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் - 10 மணி 40 மணித்துளி, 0 விநாடி (0.436 புவி நாள்)

தன்னைத்தானே சுற்றும் வேகம                - விநாடிக்கு 9.87 கிமீ (மணிக்கு 35,500 கிமீ)

ஞாயிறைச் சுற்நி வர எடுக்கும் காலம் - 29.46 புவி ஆண்டு

ஞாயிறைச் சுற்றும் வேகம்          - விநாடிக்கு 9.64 கிமீ

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு – 1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு - 1,426.64 மில்லியன் கிமீ (886.12 மில்லியன் கல்)

உங்கள் எடை                          - புவியில் 200 கிலோ என்றால் சனியில் 212.8 கிகி

துணைக் கோள்கள்                      - 31

வளையம்                              - 1,000 (?)



கீழ்க்கண்ட அட்டவணை ஒரே பார்வையில் புவி உட்பட 9 கோள் பற்றிய தரவுகளைத் தருகிறது.

 

கோள்

 

விட்டம்

 

ஞாயிறு  கோள் தொலைவு

 

சுழல் காலம்

 

சுற்றுக் காலம்

 

துணைக் கோள்

 

 

அடர்த்தி

 

 திணிவு

 

 

வெப்பம்

 

அச்சின் சாய்வு

ஞாயிறை

சுற்றும்

வேகம்

 

கிமீ

கல்

மில் கிமீ

 

 

 

நீர்-1

புவி-1

செல்சி

பாகை

கிமீ

புதன்

4,878

3,029

57,910

58.67 நாள்

87.96 நாள்

0

5.43

0.06

467/-210

0

47.89

வெள்ளி

12,102

7,515

108,200

243 நாள்

224.70 நாள்

0

5.25

0.82

450

177.4

35.03

புவி

12,756

7,921

149,600

23.56 மணி

365.24 நாள்

1

5.52

1.00

-89/58

23.45

29.79

நிலா

3,476

2,159

384,467*

27.32**

27.32**

0

0.60

0.012

123/-233

7.00

31.022***

செவ்வாய்

6,794

4,219

227,940

24.6 மணி

687 நாள்

2

3.93

0.11

-187

23.98

24.13

வியாழன்

142,984

88,793

778,330

9.8 மணி

11.9 ஆண்டு

35

1.33

317.83

-148

3.08

13.06

சனி

120,536

74,852

1,426,940

10.665 மணி

29.46 ஆண்டு

31

0.71

95.2

-178

26.73

9.64

யுறேனியஸ்

51,118

31,744

2,870,990

17.24 மணி

84 ஆண்டு

5

1.24

14.53

-210

97.92

6.81

நெப்தியூன்

49,528

30,756

4,497,070

16.1 மணி

165 ஆண்டு

8

1.67

17.14

-210

28.8

5.43

*புவி-நிலா தொலைவு (கிமீ)

**புவியைச் சுற்றும் காலம்

*** புவியைச் சுற்றும் வேகம்
 



சோதிடப் புரட்டு

(8)

கோள்களில் 'பாவ' ப் பட்ட சனி!

முன்னர் ஞாயிறு குடும்பத்தைச் சார்ந்த கோள்கள் பற்றி வானியல் தரும் தரவுகளைத் தந்திருந்தேன்.

இப்படியான தரவுகள் அண்மைக் காலத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் பெறப்பட்டவையாகும். முன்னர் போலல்லாது இன்று அறிவியல் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

மனிதன் வெறுமனே தனது ஊனக் கண்களால் பார்த்த கோள்களை முதன் முதலில் தொலைநோக்கியின் உதவியோடு பார்த்த வானியலாளர் கலிலியோ கலிலி ஆவார்.

தொலைநோக்கி மூலம் கலிலியோ கண்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது. இன்று கோள்கள் மற்றும் விண்மீன்களைக் கலிலியோவின் தொலைநோக்கியை விடப் பல ஆயிரம் மடங்கு வலு வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் வானியலாளர்கள் அளந்து கொண்டிருக்கின்றார்கள்.

நமது ஞாயிறு குடும்பம் மட்டுமல்ல அண்டத்தில் பல இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஏனைய ஞாயிறு குடும்பங்கள், பால்மண்டலங்கள் போன்றவற்றையும் வானியலாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அரிஸ்தோட்டல் (கிமு 384 - 322) தொலமி (கிபி 90-170)
போன்ற வானியலாளர்களது அண்டங்கள் பற்றிய தரவுகள் பல இன்று மறுக்கப்பட்டு விட்டன. எடுத்துக்காட்டாக இந்த இருவரும் உலகத்தைச் சுற்றியே ஞாயிறு உட்பட ஏனைய கோள்கள் வலம் வருகின்றன எனச் சொன்னார்கள். கண்ணால் பார்க்க முடியாத தொலைவில் வலம் வந்த யூறேனஸ், நெப்தியூன், புளுட்டோ அவர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்படாததால் அவை பற்றி அவர்களுக்கு அடியோடு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அது அவர்கள் குற்றமில்லை, இன்றைய அறிவும் கருவிகளும் அன்றிருக்கவில்லை.

அரிஸ்தோட்டல் மற்றும் தொலமி எழுதி வைத்ததை உலகம் ஏறத்தாழ ஆயிரத்து எழுநூறு ஆண்டு காலமாக நம்பி வந்தது. மேற்குலக நாட்டு அறிவியலாளர்கள் அவற்றை வேதமாகக் கொண்டிருந்தார்கள்.

அரிஸ்தோட்டல் இந்தப் புவி உருண்டை வடிவானது என்று ஓரளவு நம்பினார். ஆனால் புவி வெங்காயத்தை மூடியிருக்கும் தோல்போல் பல உருண்டைகளை உள்ளடக்கியது என்று நினைத்தார். மேலும் புவி நாற்பெரும் பூதங்களினால் ஆனது எனவும் முகில் மண்டலத்திற்கு அப்பால் உள்ள தூய வானவெளி எதர் (நவாநச) என்னும் பூதத்தினால் நிரப்பப்பட்டுள்ளது எனவும் கூறினார். அரிஸ்தோட்டலைப் பின்பற்றித் தொலமி என்பவரும் அண்டத்தின் மையம் புவி என்றும், ஞாயிறு, சனி, வியாழன் ஆகிய கோள்கள் புவியைச் சுற்றி வருகின்றன என்றும் சொன்னார்.

இந்த ஊகங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்து, சூரிய மண்டலத்தின் நடுவில் ஞாயிறு இருக்கிறதென்றும், அதனைச் சுற்றிப் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஏழு கோள்களும் வலம் வருகின்றன என்றும் சான்றுகளோடு விளக்கி
வானுடலிகளின் சுழற்சிகள்
(The Revolutions of Heavenly Bodies) என்ற நூலை நிக்கலஸ் கோபெனிக்கஸ் (Nicholas Copernicus) என்ற வானியலாளர் முதன் முறையாக எழுதினார். இவர் போலந்து நாட்டில் 1473 பெப்ரவரி 19 ஆம் நாள் பிறந்தவர்.

இன்று வானியல் பற்றிய அறிவு நாளும் பொழுதும் வளர்ந்த வண்ணம் உள்ளது. நிலாவில் மனிதனை இறக்கி ஒரு புதிய வரலாறு படைத்த வானியலாளர்கள் செவ்வாய் போன்ற பிற கோள்களில் விண்வெளிக் கப்பல்களை இறக்கி அவற்றின் இயல்புகளை ஆராய்கின்றார்கள்.

விண்ணை நோக்கிக் கலிலியோ தனது தொலைநோக்கியைத் திருப்பியதன் பின்பே அண்டத்தைப் பற்றிய வானியல் துறையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது.

வானியலில் அதே போன்ற ஒரு திருப்